பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

February 7, 2007

டோண்டு மாமா எங்கிட்ட மோதாத!!!!

அபிகுட்டிக்கு ரெண்டு நாள் லீவு உட்டாச்சு. யாரோ மணல்மேடு சங்கர்னு சுதந்திர போராட்ட தியாகியாம். மாணிக்கவாசகம் என்ற ஆங்கிலேய போலீஸ் அதிகாரி அநியாயத்துக்கு சுட்டு கொன்னுட்டாராம். மயிலாடுதுறையே அல்லோகலப் படுது. ஸ்கூலுக்கெல்லாம் லீவு வுட்டாச்சு.

அப்பாப்பா போரடிக்குது, ஏதாவது செய்யிப்பான்னுச்சு. அப்போ நா ரொம்ப பிசியா இருந்தேன். தலைநகரம் படத்தோட 'நாய் சேகர்...நாய் சேகர்...நாய் சேகர்' வேஷம் போட்டிகிட்டு இருந்தேன். காரணம் எனக்கு வந்த மெசேஜ்.

தமிழ்மனத்தில் நொந்து போன டோண்டு மாமா தப்பிச்சு மாயவரம் பக்கமா வந்துகிட்டு இருக்காராம். இன்னிக்கு அவர போட்டு தள்ளிட்டா நம்ம புதுசா தொறந்துருக்குற கடைக்கு நல்ல அறிமுகம் கிடைக்கும் நாளு பேர் வந்துட்டு போவாங்க. கல்லா நொம்பும்.அதுக்கு நாய் சேகர் வேஷம்தான் சரி. ஏன்னா நம்ம ஒரிஜினல் கெட்டப்ப பாத்தா even டோண்டு மாமா கூட பயப்பட மாட்டார்ன்னு எனக்கு தெரியும்.

மேக்கப் முடிஞ்சுது. அபி சொன்னா "ஐ டமாஷா இருக்குப்பா. அந்த லிப்ஸ்டிக்கயும் போட்டுக்க" ன்னுது.

"அப்பா எங்கப்பா போற நானும் வருவேன்"-அபி

"நா முக்கியமா ஒரு ஆள போட்டுதள்ள போறேம்மா, நீ வர வேணாம்மா"ன்னேன்.

கேக்குமா அந்த எம்டன். புடிவாதம் தாங்கல. "சரி வா. ஆனா மாறு வேஷத்துல தான் வரணும்"

"அததான் நானும் சொல்றேன். எனக்கு கைபுள்ள அங்குளோட லேட்டஸ்ட் கெட்டப் சாமுராய் தான்"

அடுத்த அரை மணியில் நாங்க ரெடி. அப்போ ஒரு மெசேஜ் வந்துச்சு. மணிகூண்டுகிட்ட வந்துட்டார் டோண்டு மாமான்னு.

"தங்காலபிட்டா, இந்த நிமிஷத்துலேர்ந்து நா 'நாய்சேகர்' நீ குட்டிநாய்சேகரி' சரியா? "ன்னு சொல்லிட்டு குட்டிநாய்சேகரிய தூக்கிகிட்டு பாய்ஞ்சு கெலம்பிட்டேன் மணிகூண்டு நோக்கி.

வழியெல்லாம் நானும் பாத்துகிட்டே வற்றேன். தமிழ்மனம் பார்ட்டிங்க கருப்பா ஒருத்தர், மெதந்துகிட்டு ஒருத்தர், முட்டைஊர்காரரு,அதிஷ்டமானவரு,சுருட்டு பிடிச்சிகிட்டு (அவரு இப்போ சிகரட்ட உட்டுட்டாராமா)ஒருத்தர், பெனாத்திகிட்டு ஒருத்தர் ஒவ்வொரு முட்டுசந்துக்கும் உருட்டுகட்டையோட நிக்கிறாங்க.

நாதாறி பய எனக்கு மட்டும்தான் மெசேஜ் கொடுத்தா சொல்லிட்டு ஏகப்பட்ட பார்ட்டிக்கு கொடுத்துட்டான்.

"குட்டிநாய்சேகரி, ரெடியா? அவர பாத்ததும் நா மொதல்ல அவர அட்டாக் பண்ணுவேன். நா சொல்ற வர நீ கோட்ட தாண்ட கூடாது ஆமா"ன்னு சொன்னேன்.

வாயில இருந்து வெரல எடுத்துட்டு " சரி நாயி"ன்னா.

"என்னடா பாப்பா, அப்பாவ நாய்ங்கற?"ன்னேன்.

"ஷாட்டா கூப்புட்டன்பா" ன்னா. சரி வுடுன்னு கடமைக்கு திரும்பினேன்.

அதொ பாத்துட்டேன் டோண்டு மாமாவ. பார்ரா... அவரும் மாறு வேஷத்துல வந்து இருக்கார். என்ன ஜோரா, "எல்லே ராம்" வர்ணிச்சத போல சொக்கு புள்ள கடைல கும்மோண கொழுந்து வெத்தல போட்டுட்டு இருக்கார். நேரா அவர் எதுக்க போய் நின்னேன். மனுஷன் ஆடிபூட்டார்.

நம்ம சாமுராய் நாய்சேகரிய(என்னா அழகா இருக்கா சாமுராய் கெட்டப்புல... வூட்டுக்கு போன உடனெ சுத்தி கீழே போடனும், தூக்கி தூக்கி கை வலிக்குது) பக்கத்துல இருந்த தார் டின் மேல உக்காத்தி வச்சுட்டு கீழே ஒரு கோடு கிழிச்சுட்டேன்.

கச்சேரி ஆரம்பமாச்சி. டோண்டு மேல பாஞ்சிட்டேன்.

வயித்துல ஒரு குத்து. ஊரின் டேங்கு அவுட்டு. பன்ச் மேல பன்ச் முகமெல்லாம் ரத்தகளரியாப் போச்சு.

நடுப்புர சவுண்டு குடுக்குறென் நாய்சேகரிய பாத்து ''நீயெல்லாம் ஒரு பொண்ணா ... எவ்வளவு எவ்வளவுதான் அப்பா தாங்குவேன். வந்து ஹெல்ப் பண்ண கூடாது...சின்னபுள்ளதனமா இருக்கு"

"அப்பா நா இப்போ உன் பொண்ணு இல்ல, குட்டிநாய்சேகரி"ன்னுது.

"இதல்லாம் நல்லா ஞாபகம் வச்சிக்க...கோட்ட அழிச்சிட்டு வந்து குதி"ன்னு கத்தினேன்.

நம்ம சாமுராய் தார் டின் மேல ஏறி டோண்டு மாமா மேல தாவி(காதை கடித்து துப்பும் நோக்கமோ?) "எப்ப மாமா வந்தீங்க, வுட்டுடலாம் பாவம் ஊரின் டேங்கெல்லாம் ஒடஞ்சி போச்சி"ன்னு குசலம் விசாரிக்க ஆரம்பிச்சிட்டா. அகராதி புடிச்சவ. ஒரே ஒரு சாக்லெட் அவகிட்டேயிருந்து திருடி தின்னதுக்காக இப்புடி பல்டி அடிச்சுட்டாளே!!!!

"என்ன மாமா எங்கூருக்கு அல்லாரும் வந்திக்கீங்க. ஓடி புடிச்சு மேச்சு இருக்கா மாயோரத்துல. வழில கருப்புமாமா, மெதக்குற மாமா,அதிஷ்ட மாமா, சுருட்டு மாமா அல்லாரும் ஒழிஞ்சுட்டு இருந்தாங்க. நா பாத்தனே" ன்னு சொன்னா.

டோண்டு மாமா அபிபாப்பாவ(இனிமே நாய்சேகரி இல்ல. முடியல வுட்டுடுவோம்) கீழே விட்டுட்டு ஓட தயாராய்டார்.

அப்ப சர்ர்ன்னு போலீஸ் ஜீப் வந்துச்சு. இன்ஸ் பெரகாஸ்ராஜ் வந்து எரங்கி " டோண்டு யூ ஆர் அன்டர் அரஸ்டு. ஆள் மாறாட்ட கேஸ்" என்றார்.

நா எவ்வளவோ கேட்டேன் அவருகிட்ட."சார் என்னய அரஸ்ட்டு பண்ணுங்க சார். இன்னேரம் எங்க வூட்டு தங்கமணிக்கு இந்த கூத்தெல்லாம் தெரிஞ்சிருக்கும். என்னய அரஸ்ட் பண்ணி காப்பாத்துங்க சார்"அவரு கேக்குறதா இல்ல.

கோவமா ஆயிட்டேன்."செனங்கொண்ட சிங்கத்த செறயில அடச்சா செல்லயே செதறடிச்சிடும் தெர்தா"ன்னு கர்சிச்சேன்.

டோண்டு ஜீப்புகுள்ளயிருந்து"சார் அது என் டயலாக்"ன்னார்.

நடந்த கூத்தெல்லாம் கேள்விப்பட்டு 'சிதம்பரம் அப்பாசாமி நாவ்யா' மாதிரி அபிஅம்மா அழுதுகிட்டே ஓடி வந்தாங்க. வந்த வேகத்துக்கு இன்ஸ் பெரகாஸ்ராஜ் கிட்ட "சார் எப்டியாவது என் புருஷன .....(அழுகை...)"

"இல்லம்மா ஒம் புருசன அரஸ்ட் பண்ணலம்மா"ன்னு சொன்னார்.

"அய்யய்யோ...என் தலயில இடிய போடாதிங்க சார்...ஒரு 15 நாளாவது ஸ்டேசன்ல வைங்க சார்."

ஹும்... அந்த மன்னார்குடி பொண்ண கட்டியிருக்கலாமோ....

ஜீப் கிளம்ப போச்சு.

"இன்ஸ்பெக்டர் ஸ்டாப் த ஜீப். நா அவன்கிட்ட ஒரு கேள்வி கேக்கனும்"ன்னார்.

"சரி அபிஅப்பா, நாதான் மாறுவேஷத்துல இருக்கன்ல...எப்டி கண்டுபுடிச்ச"ன்னார்.

நா "இப்புடீதான்"ன்னு சொன்னேன்.

42 comments:

 1. உங்களுக்கு இவ்வளவு கலக்கலா காமெடி வரும்னு சொல்லவே இல்லையே ? எல்லா இடங்களையும் ரசிச்சேன்..

  :)))))))))))))) ( மண்ணார்குடி பொண்ணு மேட்டர் / 15 நாளாவது உள்ள வைக்கனும்ற மேட்டர் / காதை கடிக்கிற மேட்டர் எல்லாம் சூப்பர் )

  செந்தழல் ரவி (பீட்டா சொதப்பல்)

  ReplyDelete
 2. இந்த பதிவு யார் மனதையும் புண்படுத்தும் நோக்கமல்ல. யார் மனமாவது கஷ்டப்பட்டால் உடன் தெரிவிக்கவும். சரி செய்யப்படும்.

  ReplyDelete
 3. வாங்க வாங்க செந்தழலாரே, முதல் பின்னூட்டமே முத்தான பின்னூட்டமாக அமைந்துவிட்டது. மிக்க நன்றி.

  ReplyDelete
 4. அபி அப்பா,
  கலக்கல் நடையிலே எழுதியிருக்கீங்க, கன்டினுயு பன்னுங்க.
  எலே தம்பி இத படிச்சியா( அடச்சீ டெலிபோன் பன்னியில்ல சொல்லசொன்னீங்க? )
  லியோ சுரேஷ்

  ReplyDelete
 5. அருமை அருமை அருமை ... மனம் புண் பட வாய்புகள் குறைவு ஏன்னா தமிழ் மனத்தில எல்லாரும் ரொம்ப நல்லவங்க .... மத்தவங்கள டம்மி ஆக்கிட்டீங்ன்னு வருத்தப்படப்போராங்க

  ReplyDelete
 6. //அபி அப்பா,
  கலக்கல் நடையிலே எழுதியிருக்கீங்க, கன்டினுயு பன்னுங்க.//

  அன்பு லியோ, நன்றி. இனிமே நல்லா எழுத முயற்சி செய்யுறேன்.

  ReplyDelete
 7. //அருமை அருமை அருமை ... மனம் புண் பட வாய்புகள் குறைவு ஏன்னா தமிழ் மனத்தில எல்லாரும் ரொம்ப நல்லவங்க .... மத்தவங்கள டம்மி ஆக்கிட்டீங்ன்னு வருத்தப்படப்போராங்க //

  வாங்க, பரசுராம். வருகைக்கு நன்றி. உங்கள் கவிதைகள் அருமை. காதல் மேல் அப்படியென்ன வெறுப்பு?

  ReplyDelete
 8. நல்ல சுவை மிகுந்த உரைநடை

  :)))))))))))

  சென்ஷி

  ReplyDelete
 9. புரிஞ்சுக்க முடியாத ஒன்னு மேல மனுசனுக்கு வெறுப்பு வரது நியாயம் தானே ...

  கடவுளை புரியா நாத்திகன்
  மனைவியை புரியா கணவன்
  கணவனை புரியா மனைவி
  காதலை புரியா இந்த இளைஞன்

  இவங்க எல்லாருக்கும் ஒரு வித வெறுப்பு இருக்கும்ல

  ReplyDelete
 10. //நல்ல சுவை மிகுந்த உரைநடை

  :)))))))))))//

  நன்றி திரு.சென்ஷி.

  ReplyDelete
 11. //இவங்க எல்லாருக்கும் ஒரு வித வெறுப்பு இருக்கும்ல//

  என்னத்த சொல்ல, டேக் இட் ஈசியா எடுத்துகோங்க...இப்ப டோண்டு மாமா இல்ல?

  ReplyDelete
 12. //மாணிக்கவாசகம் என்ற ஆங்கிலேய போலீஸ் அதிகாரி
  //

  மாணிக்கவாசகம்னு ஆங்கிலேய போலீஸ் அதிகாரியா???!!!

  அப்புறம் அபி அப்பா சூப்பரா கலக்கியிருக்கீங்க. சொல்லப் போனா குட்டிதான் ரொம்ப சூப்பர். நல்லா அவங்களுக்கு சுத்தி போடுங்க :)))

  அத்தை ரொம்ப கேட்டேனு சொல்லுங்க :))))

  ReplyDelete
 13. //மாணிக்கவாசகம் என்ற ஆங்கிலேய போலீஸ் அதிகாரி//

  ஆமாம் அந்த டி.எஸ்.பி பேர் மாணிக்கவாசகம்தான். இந்த நிகழ்ச்சி நேற்று நடந்தது.

  //அத்தை ரொம்ப கேட்டேனு சொல்லுங்க :)))) //

  கண்டிப்பாக சொல்கிறேன். சன் டி.வி "இம்சை அரசிகள்" தொடர் விளம்பரத்தை பாத்துட்டு அபி "நம்ம இம்சை ஆன்டி இப்புடிதான் இருப்பாங்களா?" ன்னு கேட்டா. நா" இவிங்கள விட 4,5 வயசு கம்மியா இருப்பாய்ங்க"ன்னு சொன்னேன். அவ சுட்டி காமிச்சு கேட்டது மனோரமாவ.

  ReplyDelete
 14. நல்ல காமெடி!

  பாவம்யா குமுற குமுற அடிக்கறீங்களே,
  இந்த வாரம் டோண்டு வாரமா?
  அநியாத்துக்கு இழுத்து வச்சி இஸ்திரி போடறீங்களே!

  ReplyDelete
 15. //இழுத்து வச்சி இஸ்திரி போடறீங்களே! //
  வாங்க தம்பி, இழுத்துவச்சி இஸ்திரி--நல்லயிருக்கே...

  ReplyDelete
 16. "வீ த பிப்புள்"ன் ஷ்டார் வாரத்தை திட்டமிட்டு களவாடிய களவானி மாமா டோண்டுவின் சாமர்த்தியம் உங்க யாருக்காவது வருமா?

  ஆமா வீ த பீப்புள் என்னா எய்தனாருன்னு யாருன்னா படிச்சீங்களா அம்பிகளா?

  ReplyDelete
 17. //ஆமா வீ த பீப்புள் என்னா எய்தனாருன்னு யாருன்னா படிச்சீங்களா அம்பிகளா?//

  வாய்யா வா.. நா படிக்கலை. நீனு??

  ReplyDelete
 18. அப்பாவி 6முகம்February 7, 2007 at 7:49 PM

  //இந்த பதிவு யார் மனதையும் புண்படுத்தும் நோக்கமல்ல. யார் மனமாவது கஷ்டப்பட்டால் உடன் தெரிவிக்கவும். சரி செய்யப்படும்.//

  மக்கர் பன்னா சரி பண்ணலாம்...மனசு கஷ்டப்பட்டா எப்டி சரி பண்ணுவீங்க. அவர் மனசுல என்னன்னா ஸ்பேர் பார்ட்ஸ் இருக்குன்னு உங்குளுக்கு எப்பிடி தெரியும்.

  அப்பாவி 123456முகம்
  # 66666666

  இத உன்மையான 6முகம் தான் இட்டான் என்பதற்கு புளிய கரச்சி கொதிக்கர தக்காளி சாஸில் ஊத்தினால் ரசம். இது தான் புளிக்குட்டி சோதனை. இது வேற யாரோட பதிவில பின்னூட்டமா சேமிக்கப்பட்டாலும் சேமிக்கப்படலாம்

  ReplyDelete
 19. //
  வாய்யா வா.. நா படிக்கலை. நீனு??//

  நா கும்மி பதிவு மட்டும் தான் படிப்பேன் ஸ்டாரு பதிவு படிக்கற அளவுக்கு எனக்கு மூலை கெடயாது

  ReplyDelete
 20. //அப்பாவி 123456முகம்
  # 66666666//

  இது என்ன மாமா மாதிரி ISO நம்பர்

  ReplyDelete
 21. டோண்டு தற்கொலைப்படைFebruary 7, 2007 at 8:28 PM

  யோவ் நீயுமா எங்க தலைவர எதுத்து யுத்தம் செய்யிற?

  ReplyDelete
 22. டோண்டு தற்கொலைப்படைFebruary 7, 2007 at 8:29 PM

  யோவ் நீயுமா எங்க தலைவர எதுத்து யுத்தம் செய்யிற?

  ReplyDelete
 23. மாவீரன் டோண்டு ரசிகர் மன்றம், மடிப்பாக்கம் கிளைFebruary 7, 2007 at 8:35 PM

  இப்ப ஆட்டையில சேர்ந்த ஆளெல்லாம் எங்க தலைவர தொவச்சி தொங்க விடறாங்களே!

  அப்படி என்னய்யா தப்பு பண்ணாரு எங்க தல?

  ஏதோ ஆத்திர அவசரத்துக்கு பின்னாடி ஊட்ட, ரெண்டு மூணு கமெண்ட் போட நாலஞ்சி ஐடி வெச்சிகிட்டது தப்பா?

  இல்ல தப்பான்னு கேக்குறேன்?

  ReplyDelete
 24. //டோண்டு மாமா எங்கிட்ட மோதாத!!!!//

  ஆட்டையில மிங்கிள் ஆகிட்டீங்க சரி.. அதுக்காக இப்படியா? :-D நடக்கட்டும் நடக்கட்டும்..

  ReplyDelete
 25. அருமையான காமெடி தலைவா

  சிரிச்சி சிரிச்சி வயிறு எல்லாம் வலிக்குது...உங்களுக்கு காமெடி சும்மா சூப்பரா வருது...இதை இப்படியே தொடருங்க..

  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 26. \\உடனெ சுத்தி கீழே போடனும், தூக்கி தூக்கி கை வலிக்குது) \\

  உடனே நல்லா சுத்தி போடுங்க அவளுக்கு வந்த திருஷ்டியை.

  ReplyDelete
 27. முரளிமனோகரின் பின்னூட்டத்தில் இருந்தவை இந்த வரிகள் தான்.

  "தோழர் வந்தார். "ஏய், அந்த ஆள் அமெரிக்கன். உன் உழைப்பை சுரண்டுகிறான். இனிமேல் அவனுக்கு நீ செருப்பு தைக்ககூடாது என்றார். தொழிலாளி விழிக்கிறான். "ஐயா அந்த ஆள் நான் கேட்ட கூலி கொடுத்தான். நான் தைக்க வில்லை என்றால் அந்த சப்பை மூக்கு தொழிலாளி தைத்துகொடுப்பான். நானும் புள்ளைகுட்டி காரனய்யா" என்றான்".

  அடிமைபுத்தியுள்ள இந்தியர்களை திருத்தவே முடியாது என்று தனது சக தோழர் ராஜாவிடம் அசுரத்தனமாக புலம்பினார் இந்தத் தோழர். பிறகு தாங்கள் வேலை செய்யும் --- நிறுவனத்துக்கு சென்றனர் அவர்கள்.

  அதானே, அவங்களும் பிழைக்கணும் இல்லே.

  முரளி மனோஹர்

  (மேலே கோடுபோட்ட இடத்தில் ஒரு கம்பனியின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது. பதிவர்கள் வேலை செய்யும் கம்பனியின் தகவலை நான் வெளியிட முடியாது என்பதால் அனுமதிக்கவில்லை.இதை தவிர அந்த பின்னூட்டத்தில் வேறு எதுவும் இல்லை-selvan)

  அப்படின்னு செல்வன் சொல்லி இருப்பதைப் பார்த்தால் என்ன தோன்றுகிறது? அந்த டோண்டு வேறு யாரோ வேலை பார்க்கும் முகவரியை எழுதி இருக்கிறான். அதனைத்தான் செல்வன் திருத்தி இருக்க வேண்டும்!

  ReplyDelete
 28. ////டோண்டு மாமா எங்கிட்ட மோதாத!!!!//

  ஆட்டையில மிங்கிள் ஆகிட்டீங்க சரி.. அதுக்காக இப்படியா? :-D நடக்கட்டும் நடக்கட்டும்..//

  வாங்க வாங்க சேதுக்கரசி,சரி அவரு எப்ப எங்கிட்ட மோதுனாரு. மொதல்ல என்னய அவருக்கு தெரியுமா? என்ன கொடும சரவணன்!!!

  ReplyDelete
 29. //அருமையான காமெடி தலைவா

  சிரிச்சி சிரிச்சி வயிறு எல்லாம் வலிக்குது...உங்களுக்கு காமெடி சும்மா சூப்பரா வருது...இதை இப்படியே தொடருங்க..//

  வாங்க கோபி, வாழ்த்துக்கு நன்றி. பாப்பாவுக்கு சுத்தி போட்டாச்சு.

  ReplyDelete
 30. இத்தனைபேர் வழிய வழிய காறித் துப்பியும் திருந்தாத ஜென்மத்திற்கு இனியும் எத்தனை பேர் எழுதினாலும் மண்டையில் ஏறாது.

  அடுத்து அடடா என்ற பெயரில் அவருக்கு ஆதரவாக கருத்துகள் எழுதி தனக்குத்தானே பின்னூட்டமும் போட்டுக் கொள்ளட்டும்!

  சூப்பர் பதிவு.

  ReplyDelete
 31. //அடுத்து அடடா என்ற பெயரில் அவருக்கு ஆதரவாக கருத்துகள் எழுதி தனக்குத்தானே பின்னூட்டமும் போட்டுக் கொள்ளட்டும்!

  சூப்பர் பதிவு. //

  வாங்க கருப்புஅங்குள், வருகைக்கு நன்றி.

  ReplyDelete
 32. // கண்டிப்பாக சொல்கிறேன். சன் டி.வி "இம்சை அரசிகள்" தொடர் விளம்பரத்தை பாத்துட்டு அபி "நம்ம இம்சை ஆன்டி இப்புடிதான் இருப்பாங்களா?" ன்னு கேட்டா. நா" இவிங்கள விட 4,5 வயசு கம்மியா இருப்பாய்ங்க"ன்னு சொன்னேன். அவ சுட்டி காமிச்சு கேட்டது மனோரமாவ.
  //

  இதெல்லாம் நெம்ப ஓவரு.

  ஏதோ என் மருமகளோட அப்பாவாச்சேனு ஓட்டாம விட்டா ரொம்ப பேசறீங்க.

  ஹி... ஹி...

  அப்ப உங்களுக்கு அப்புறம் 20 வருஷம் கழிச்சு பிறந்த எனக்கே இந்த நிலமைனா உங்க நெலமய நெனச்சு பாருங்ணோவ் :)))))))

  ReplyDelete
 33. //இதெல்லாம் நெம்ப ஓவரு.

  ஏதோ என் மருமகளோட அப்பாவாச்சேனு ஓட்டாம விட்டா ரொம்ப பேசறீங்க.

  ஹி... ஹி...//

  பத்தீங்களா, அவசரப்பட்டு கோவிச்சிட்டியலே அரசி, அப்போ டி.வி ல ஓடிக்கிட்டு இருந்த படம் மாலையிட்ட மங்கை. அப்போ அவிங்களுக்கு வயசு 20 தான்.(நல்லாதான் சமாளிக்கிறனோ!!!)


  //அப்ப உங்களுக்கு அப்புறம் 20 வருஷம் கழிச்சு பிறந்த எனக்கே இந்த நிலமைனா உங்க நெலமய நெனச்சு பாருங்ணோவ் :)))))))//

  வாய குடுத்து வாங்கிகட்டிகிட்டேனோ?? ஜாக்கிரதயா இருக்கனும் சாமியோவ்.

  ReplyDelete
 34. // சன் டி.வி "இம்சை அரசிகள்" தொடர் விளம்பரத்தை பாத்துட்டு அபி "நம்ம இம்சை ஆன்டி இப்புடிதான் இருப்பாங்களா?" ன்னு கேட்டா
  //

  இப்படிதான் மொதல்ல சொன்னிங்க.

  யார்கிட்ட கதை விடறீங்க???

  ReplyDelete
 35. //சன் டி.வி "இம்சை அரசிகள்" தொடர் விளம்பரத்தை பாத்துட்டு அபி "நம்ம இம்சை ஆன்டி இப்புடிதான் இருப்பாங்களா?" ன்னு கேட்டா//

  சன் டி.வி "இம்சை அரசிகள்" தொடர் விளம்பரத்தை பாத்துட்டு,சாப்டுட்டு 1 மணி நேரம் பிறகு திரும்பவும் T.V பாக்கும்போது அபி "நம்ம இம்சை ஆன்டி இப்புடிதான் இருப்பாங்களா?" ன்னு கேட்டா

  இப்ப ஓக்கே. சில வார்த்த வுட்டு போச்சு. பிளாக்கர் மிஸ்டேக். என்னுது இல்ல.

  ReplyDelete
 36. பொழச்சு போங்க...

  அபிக்காக மன்னிச்சு விடறேன் :)))

  ReplyDelete
 37. abi appa.. superaa kalakirukeenga....

  ivvalavu ranakalathulaiyum ungalukku oru kilikiluppu thevaipaduthu aah...

  ReplyDelete
 38. //அவரு எப்ப எங்கிட்ட மோதுனாரு. மொதல்ல என்னய அவருக்கு தெரியுமா?//

  மொக்கைப் பதிவுன்னு தான் தெரிஞ்சு போச்சே, அப்புறம் என்ன இப்படிச் சின்னப்புள்ளதனமா கேள்வி கேட்டுக்கிட்டு.. ஆனா வந்ததும் வராததுமா மொக்கைப் பதிவு போட்டு, அதுவும் வலைப்பூக்களில் இந்த வாரம் டோண்டு வாரம்னு தெரிஞ்சு "ஹாட் டாப்பிக்கில்" போட்டு அதுக்கு + ரேட்டிங்கும் வாங்கியிருக்கீங்களே.. அதைச் சொல்லணும் :-)

  ReplyDelete
 39. //அபிக்காக மன்னிச்சு விடறேன் :)))//

  பொழச்சன்டா சாமி!!!!!!!!!!

  ReplyDelete
 40. //abi appa.. superaa kalakirukeenga....

  ivvalavu ranakalathulaiyum ungalukku oru kilikiluppu thevaipaduthu aah...//

  ஆமா, தல இல்லாமயா??

  ReplyDelete
 41. //மொக்கைப் பதிவுன்னு தான் தெரிஞ்சு போச்சே, அப்புறம் என்ன இப்படிச் சின்னப்புள்ளதனமா கேள்வி கேட்டுக்கிட்டு.. ஆனா வந்ததும் வராததுமா மொக்கைப் பதிவு போட்டு, அதுவும் வலைப்பூக்களில் இந்த வாரம் டோண்டு வாரம்னு தெரிஞ்சு "ஹாட் டாப்பிக்கில்" போட்டு அதுக்கு + ரேட்டிங்கும் வாங்கியிருக்கீங்களே.. அதைச் சொல்லணும் :-)//

  நா கத்துகுட்டீங்கோ!!!!

  ReplyDelete
 42. //வாங்க கருப்புஅங்குள், வருகைக்கு நன்றி.//

  ஜாக்கிரதை , அவருக்கு குழந்தைகள் மீது "பிரியம்" ஜாஸ்தி .

  கரு.மூர்த்தி

  ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))