நான் வீட்டில் நுழையும் போது பாப்பா டைகரிடம் " நீங்கள் எல்லாருமே என் குழந்தைகள்" ன்னு சொல்லிட்டு இருந்தா. நா நேரா தங்கமனிட்ட போய் டைகருக்கு என்னாச்சுன்னு கேட்டேன். வீடே கொஞ்சம் பரபரன்னு இருந்துச்சு. "டைகருக்கு ஒன்னும் ஆகல. நீங்க போய் பாப்பா தலை சைஸ்க்கு ஒரு கிரீடம், ஒரு வேல் ரெண்டும் எங்கேர்ந்தாவது புடிச்சுட்டு வாங்க. எனக்கு கையும் ஓடலை காலும் ஓடலை.சீக்கிரம் போங்க" என்னாச்சு....சரி பாப்பா ஏதாவது ஜெயசந்திரன் கோல்டு ஹவுசுக்கு மாடல் ஆகப்போவுது போலயிருக்கு. நாம கொடுத்த வேலய செய்வும்ன்னு வெளியே வந்துட்டேன்.
பாப்பா அப்பவும் டைகர்கூட அதையே பேசிட்டுஇருந்தா. வாசலுக்கு வந்தா அப்பா, அம்மா மற்றும் உறவினர்கள் எல்லாரும் வந்து தப தபன்னு நுழைறாங்க. அப்புரம்தான் தெரிஞ்சுது. ஸ்கூல் குடியரசு தினத்துக்கு விழாவில் பாப்பாதான் பாரதமாதாவாம். இன்னிக்கு சாயந்திரம் விழா. அட்ரா சக்கை. எனக்கும் பரபரப்பு தொத்திகிச்சு. தங்கமனிகிட்ட 'கான்செப்ட்' என்னன்னு கேட்டேன். " எனக்கு நெறய வேல இருக்கு. சொன்னத செய்ங்க"ன்னு பதில் வந்தது. என் கஷ்டத்த பாத்து அபியோட பெரியம்மா பொண்ணு சொன்னா" பாப்பாவ ஸ்டேஜ்ல ஒரு ஸ்டூல் போட்டு நிருத்தி காந்தி, நேரு, பாரதி, காமராஜர்,சரோஜினி நாயுடு இப்டி பல தலைவர்கள் வேஷம் போட்ட பையன்களும் பொண்ணுகளும் சுத்தி சுத்தி வருவாங்களாம். கடைசியா பாப்பா எல்லாரையும் பாத்து "நீங்கள் எல்லாரும் என் குழந்தைகள்" என்ற டயலாக் சொல்லனுமாம்" என்றது. ஓ அதுதான் பாப்பா டைகரிடம் இதை சொல்லிட்டுருந்தாளோ.
அதுக்குள்ள பாப்பாவுக்கு மேக்கப் ஸ்டாட் ஆயிருச்சு. நமக்கு கொடுத்த வேலைய நாம பாப்போம்ன்னு வெளியே வந்தேன். டைகர் என்னய பாத்து "நீங்கள் எல்லாம் என் குழந்தைகள்"ன்னுச்சு. அடிப்பாவி டயலாக் மனப்பாடம் செய்யிறேன் டயலாக் மனப்பாடம் செய்யிறேன்னு சொல்லி நாய பேச வச்சுட்டாளேன்னு நெனச்சுகிட்டு கிரீடம், வேல் வாங்க கெளம்பிட்டேன். ஒரு வழியா வேல் மட்டும் மோப் குச்சியில் முனைல அட்டயால் வேல் மாதிரி செஞ்சு அதில ஜிகினா பேப்பர் ஒட்டி குடுத்தார் பூக்கடை சவுந்திரம்.
எடுத்துகிட்டு வூட்டுக்கு ஓடினா பாப்பா ரெடி, தங்கமனி ரெடி, எல்லாரும் ரெடி, டைகர் கூடரெடி எக்ஸப்டு நானு. நா எப்படியும் கொண்டுவரமாட்டன்ற நம்பிக்கைல தங்கமனி நெக்லெஸ்ஸ தலகீழ பாப்பா தலைல கட்டி நிமிந்து நிக்க ஈர்க்க குச்சிவச்சி கட்டி ஆனா நல்லாதான் இருந்துச்சி. "பாப்பா அப்பாகிட்ட மேக்கப்ப காட்டு"ன்னு யாரோ கூட்டத்துல சொல்ல பாப்பா வேலை கையில புடுச்சிகிட்டு லொடுக்கு பாண்டி மாதிரி நிக்குது. எங்க டயலாக்க சொல்லுன்னு நா சொல்ல "ஃஹீங்க ஃஹெல்லாம் ஹென் ஃஹொழந்தங்க" ன்னு ஏகப்பட்ட ஃ வருது. வாய் பொளந்தே வச்சிருக்கு. (லிப்ஸ்டிக் அழிஞ்சிடக்கூடாதாமா!!) பாப்பாவ பாத்தா எனக்கே பாவமா இருக்கு. அதுக்குள்ள 3 ஆட்டோ வந்து நிக்குது. சகுணம் பாக்குறாங்க அம்மா. திருஷ்டி பொட்டு வக்கிறாங்க. பாப்பா மேல பட்டும் படாமலும் மெலிசான காசி துண்ட போத்தி தங்கமனி தூக்கிகிட்டு முதல் ஆட்டோல ஏறிக்க, பைலட் மாதிரி நா என் வண்டில ஹாரன் அடிச்சிகிட்டே(வேலையும் நாதான் கைல வச்சிகனும்) போகனும்னு ஆர்டர் தங்கமனிகிட்டேயிருந்து.
நானும் கொஞ்சம் கூட வெக்கமில்லாம உழைப்பாளி ரஜினி மாதிரி... போய் ஸ்கூல்ல சேந்தாச்சு. செம கூட்டம். த்ங்கமனி, பாப்பால்லாம் ஸ்டேஜ்க்கு பின் பக்கம் மேக்கப்ரூம்க்கு போயாச்சு. நமக்கெல்லாம் அங்கு சீந்தி பாக்க ஆள் இல்லை. சரின்னு வந்து ஸ்டேஜுக்கு முன்னாடி ஒக்காந்துட்டேன். பக்கத்து சீட்ல ராமனாதன். பக்கத்து வீட்டுகாரர். அவர் பையனும் நாடகத்துல நடிக்கிறானாம். 17 பக்க வசனம் பேசுவதாக சொன்னார். அவன் 4 வது படிக்கிறான். 17 பக்கம் பேசலாம். "என்னங்க உங்க பொண்ணுக்கு 1 வரி டயலாக்தனாமே"ன்னு நக்கல் வேறு.
நிகழ்சி ஆரம்பம் ஆனது. கொஞ்ச நேரத்துலேயே ராமனாதன் பையன் நடிக்கும் நாடகம்"திருவிளையாடல்" ஆரமிச்சுது. அவரு பரவசத்துல உச்ச்த்துல இருந்தார். "சார் எங்க சார் உங்க பையன காணும்"ன்னு கேட்டேன். "அதோ அதோ"ன்னார். எனக்கு எங்கன்னே தெரியல. "அவனுக்கு என்னமா பொருந்தியிருக்கு பாருங்க சார் அந்த பிள்ளையார் வேஷம்" அப்டீன்னார். அப்பதான் தெரிஞ்சுது யானை மண்டைக்குள்ள இருக்குறது அவன் மண்டைன்னு. பொருந்தியிருகில்ல...பெருந்தொந்தியிருக்கு அவனுக்குன்னு நெனச்சுகிட்டு அவனின் 17 பக்க டயலாக்குகாக காத்திருந்தேன். "அப்பா பழம் எனக்குத்தான்" அப்டீன்னு சொன்னவுடனே அடி விசில் கிழிச்சுட்டார். நாடகம் முடியும் வரை அவன் வேறு எதுவும் பேசலை. அவரிடம் நா எதுவும் கேக்கலை. அவர் கைல இருந்த நோட்டை எங்கிட்ட கொடுத்துட்டு பையனை தேடி ஓடிட்டார். நா மெதுவா நோட்டை பிரித்து பார்த்தேன். "அப்பா பழம் எனக்குத்தான்" "அப்பா பழம் எனக்குத்தான்" அப்டீன்னு 17 பக்கத்துக்கு எழுதியிருந்துச்சு.
க்ளைமாக்ஸ் வந்துச்சு. காந்தி, நேரு, காமராஜர், சரோஜினிநாயுடு, பாரதி, சுபாஸ் சந்திர போஸ், எல்லாரும் ரெடி. எனக்கு படபடங்குது. ஸ்டேஜ்கிட்ட போயி மேல ஏறி சைடுல தங்கமனிகிட்ட நின்னுட்டேன்.(அடிபாவி நீ மட்டும் பட்டு புடவை, நா மட்டும் சாதாரண டிரஸ்ஸா?) ஒரு ஸ்டூல் போட்டு பின்னாடி பெரிய கொடி நட்டு பாப்பாவ தூக்கி நிப்பாட்டி கைல வேல கொடுத்துட்டாங்க. சுத்தி வர தலைவர் எல்லாரும் ரெடி. திரை விலக்கப்பட்டது. "ரகுபதி ராகவ ராஜாராம்" காந்தி பாட எல்லாரும் அதையே திரும்ப பாட முதல் சுத்து நல்லபடியா முடிஞ்சுது. தங்கமனி தாலிய கண்னுல ஒத்திக்க, "நானா பாரதமாதா, பாப்பாதான"ன்னு சொல்ல அந்த அவசரத்திலும் ஒரு முறைப்பை மாத்திரம் வாங்கிகிட்டு கவனிக்கலானேன். ஆனா பாப்பா லிப்ஸ்டிக் காரணத்தால் வாயை பொளந்தபடியே இருந்தாள்.
ரெண்டாவது சுத்தும் நல்லபடி முடிஞ்சுது. 3 வது சுத்து ஆரம்பம். பாப்பாவுக்கு அந்த ஜிகினா டிரஸ் ஒத்துக்கல போலயிருக்கு. முதுகுல அரிச்சுது போல. வலது கையில இருந்த வேலை இடது கைக்கு மாத்துனா. வலது கைய லாவகமா மடிச்சு...அப்போ இடதுகை வேலின் பின்பக்கம் பின்னோக்கி போக காந்ந்திதாத்தா கம்போட இடிக்க தாத்தா பின்னாடி வந்த பாரதி மேல விழ கூடவந்த சரோஜினி நாயுடுவும் தடுமாற இதுல யார் ஸ்டூல ஒதச்சாங்கன்னு தெரியல பாரத மாதா பொதக்கடீர்ன்னு குப்புரவுழுந்துட்டாங்க.(இத்தன கலேபரத்திலும் லிப்ஸ்டிக்க காப்பாத்த பாப்பா வாயை மூடலை). முதல்ல பாய்ந்தது வேற யாரு. தங்கமனிதான். பெத்த பாசம்னா சும்மாவா!! ஆனா பாப்பாவ முதல்ல தூக்கினது நாதான். பாப்பா தலைலேர்ந்து விழுந்த கிரீடத்த தங்கமனி எடுக்க நா நின்ன இடம் அப்போது மைக்குக்கு நேரா. உடனே பாப்பா "ஃஹீங்க ஃஹெல்லாம் ஹென் ஃஹொழந்தங்க" ன்னு டயலாக் விட்டா மைக்ல. (உன் கடமையுணர்ச்சிக்கு ஒரு எல்லையே இல்லியா).
கீழ எறக்கிவுட்டோன்ன புடுச்சிகிட்டா காந்திய பாத்து '' பாரதி கொரங்கு ஏண்டா என்னய தள்ளிவுட்ட..ஊவும்..ஊம்..."ன்னு அழுகை வேற. ஆஹா காந்திய பாத்து பாரதிங்கறாளே, கீழ வுழுந்ததுல எக்கு தப்பா அடி கிடி பட்டுடுச்சோன்னு நெனச்சுகிட்டு " பாப்பா அது பாரதியில்ல காந்தி"ன்னேன். "நா இப்ப என்ன பாரதமாதாவா, அதுதான் முடிஞ்சுடுச்சே. அவன் காந்தி வேஷம் போட்ட பாரதிப்பா. அவன் பேரு பாரதி" அப்ப நாதான் லூசா!!!!
ஏகப்பட்ட ஆணி! புதுசா பதிவு போட நேரமில்லை, ஆனா பின்னூட்டம் வராம கை நடுக்கம் ஜாஸ்தியா போச்சு...ஹி ஹி அதான் இந்த மீள்பதிவு கயமை:-))
ReplyDeleteசூப்பர் மீள்பதிவு :)
ReplyDelete/அப்பா பழம் எனக்குத்தான்" அப்டீன்னு 17 பக்கத்துக்கு எழுதியிருந்துச்ச/
ReplyDeletegrrrrrrrrr. ithellaam tooooomuchh
/அப்ப நாதான் லூசா!!!!/
ReplyDeleteபின்ன இல்லியா :)
இம்சை இம்சை இம்சை
ReplyDeleteஇம்சை இம்சை இம்சை
இம்சை இம்சை இம்சை
இம்சை இம்சை இம்சை
இம்சை இம்சை இம்சை
இம்சை இம்சை இம்சை
இம்சை இம்சை இம்சை
இம்சை இம்சை இம்சை
இம்சை இம்சை இம்சை
இம்சை இம்சை இம்சை
இம்சை இம்சை இம்சை
இம்சை இம்சை இம்சை
இம்சை இம்சை இம்சை
இம்சை இம்சை இம்சை
இம்சை இம்சை இம்சை
இம்சை இம்சை இம்சை
// அய்யனார் said...
ReplyDelete/அப்ப நாதான் லூசா!!!!/
பின்ன இல்லியா :)
ais sollithaar..avar sonna sariyathaan irrukumnu veliye pesikitanga.nesamava?
:))))))))))))
ReplyDeleteநல்லா இருந்துச்சு தல...!
இன்னும் கொஞ்சம் சைடு தட்டி இருந்தா அட்டகாசமான நகைச்சுவை சிறுகதை!
////////////////////////
ReplyDeleteஉடனே பாப்பா "ஃஹீங்க ஃஹெல்லாம் ஹென் ஃஹொழந்தங்க" ன்னு டயலாக் விட்டா மைக்ல. (உன் கடமையுணர்ச்சிக்கு ஒரு எல்லையே இல்லியா).
////////////////////////
உங்க பொண்ணாச்சே . . . .
நன்றாக சிரித்தேன்.
அண்ணாச்சி.. இப்டித்தான் பாப்பா மானத்தை வாங்குவிங்களா? இருங்க வந்து போட்டுக்குடுக்கிறேன்!!
ReplyDelete/அப்ப நாதான் லூசா!!!!/
ReplyDeleteஇதுல சந்தேகம் வேற!! ம்ஹூம்!
HAHAHA HAHAHAHAHAH
ReplyDeleteGOOD LAUGH
:) Nice one :)
ReplyDeleteசூப்பர் காமெடி. நல்லா இருந்தது. நம்ப வலைக்கும் வந்துட்டு போங்க
ReplyDeleteஅண்ணா,
ReplyDeleteஎப்படி இருக்கீங்க!! பாப்பாக்கள் எல்லாம் சுகமா? ஊருக்கு போய் இருந்தேன். அதனால உடனே வரமுடியல!!
காலம் தாழ்த்திய வாழ்த்துக்கள்!!
சூப்பர் மீள்பதிவு ;)
ReplyDelete//ஃஹீங்க ஃஹெல்லாம் ஹென் ஃஹொழந்தங்க"//
சூப்பர் காமெடி. நல்லா இருந்தது.
அபி அப்பா, 8 போட வாங்க... உங்களை அழைத்திருக்கிறேன்.
ReplyDeletehttp://tcsprasan.blogspot.com/2007/06/8.html
வணக்கம் அபி அப்பா , நான் உங்கள் ரசிகன் .:-)
ReplyDeleteசூப்பர்.. .. என் ப்ளாகிற்கு வாரீர்...ஆதரவு தாரீர்..
ReplyDelete\\"ஃஹீங்க ஃஹெல்லாம் ஹென் ஃஹொழந்தங்க" ன்னு டயலாக் விட்டா மைக்ல. (உன் கடமையுணர்ச்சிக்கு ஒரு எல்லையே இல்லியா)\\
ReplyDeleteபின்னி பெடல் எடுக்கிறிங்களே தல..
இப்படிக்கு
அபி அப்பா ரசிகன்..