பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

July 22, 2009

பிடித்த பத்து ஹோட்டல்கள்! பாகம்#1 (சைவம்)

வேற வழியில்லை. நானும் பத்து போட்டாச்சு. பிடிச்ச பத்து. பொதுவா எனக்கு பிடிக்காததுன்னு பத்து விஷயங்கள் எல்லாம் கிடையாது. ஏதோ ஒன்னு ரெண்டு தான் இருக்கும். அதனால பிடிச்ச பத்து விஷயத்தையே எழுதிடுறேன்.அதாவது பிடிச்ச ஹோட்டல்கள் பத்தி தான். சைவம் அஞ்சு. அசைவம் அஞ்சு.



1. ஸ்ரீ லெஷ்மி விலாஸ் பசும்பால் காபி கிளப்!

குப்பகோணம் கும்பேஸ்வரர் கோவில் அருகே தஞ்சை மெயின் ரோட்டில் இருக்கு. பஞ்சாமி அய்யர் ஹோட்டல்னு சொல்லுவாங்க. அவங்க கிட்ட பசுமாடுகள் நிறைய இருக்கு. அந்த பாலில் தான் பில்டர் காபி போடுவாங்க். பித்தளை ஈயம் பூசப்பட்ட சின்ன சின்ன டபராவில் தான் கொஞ்சமா இருக்கும் காபி.அருமையா இருகும். 2 சாப்பிட்டா தான் எனக்கு திருப்தி ஆகும்.
அங்கே அடை, அவியல் ஸ்பெஷல். உரைப்படை தான். அதுக்கு தொட்டுக்க அவியல், ஒரு ஆடுதொடா இலையில் வச்சு கொஞ்சம் நாட்டு சர்க்கரை, சின்ன உருண்டை வெண்ணெய். அந்த வெண்ணெய் உருண்டையை தூக்கி சூடா இருக்கும் தலையிலே போட்டுட்டா அது பாட்டுகு உருகிகிட்டே இருகும். நாம பாட்டுக்கு சிக்சர் அடிக்கலாம்.


2. "கணபதி அய்யர் காபி கிளப்"
. மயிலாடுதுறைல இருந்து செம்பனார் கோவில் போய் அங்க ஆக்கூர் போகும் முனையில் ஒரு வீடு. முற்றத்தின் மீது கூறை போட்டிருக்கும். அங்கயும் டேபிள் சேர், பின்னே 4 தாழ்வாரம், 1 கூடம் எல்லாத்திலயும் டேபிள் இருக்கும். டிபன் தாமரை இலையிலே. போய் உட்காந்த வுடனே தண்ணீர் வைத்து விட்டு இலையில் வட்டமாக பொதினா துகையல், கொத்தமல்லி சட்னி, தக்காளி கெட்டி சட்னி, பொடி அதுக்கு எண்ணெய் சின்ன ஊசி பாட்டில்ல ரப்பர் மூடி போட்டு, இந்த முஸ்தீபு எல்லாம் முடிந்த பின்ன தான் சூடா வரும் இட்லி. மூணு மூணா தான் வைப்பாங்க. அத்தனையே இடம் இருகும் அந்த இலையில். பின்னே அதன் தலையில் செல்லமாக சாம்பார் ஊத்துவார்.


மதிய சாப்பாடு கூட நல்லா இருக்குமாம்.நான் சாப்பிட்டதில்லை. மாலை 4 மணி முதல் அல்வா, பஜ்ஜி அல்லது போண்டா, அல்லது கதம்ப பக்கோடா என்று கிடைகும். அதுக்கு வாழை ஏடுதான், தாமரை இல்லை இல்லை. பஜ்ஜி ஒன்லி வாழைக்காய் பஜ்ஜி தான். அல்வா தலையிலே கொஞ்சம் முட்டகாராபூந்தி தூவி இருப்பார். இரவு மொடக்கத்தான் கீரை அடையோ, ஏதாவது ஒரு கீரை அடையோ ஸ்பெஷல். அதை நான் சாப்பிட்டதில்லை.


3.ஸ்ரீ சிவகாமி காபி ஓட்டல்



சிதம்பரம் நடராஜா கோவிலின் தெற்கு சன்னதில இருக்கு இந்த ஹோட்டல். இங்க சிதம்பரம் கொத்சு ரொம்ப பேமஸ். ஆனா கொத்சு பத்தி தெரியாதவங்க இங்க போய் படிக்கவும். இட்லி ,கட்டை தோசைக்கு நல்ல காம்பினேஷன்.ஆனா தனியா தான் காசு கொடுத்து வாங்கனும். இப்ப 1 கப் 5 ரூபாய்.கோவில்ல சம்பா சாதம் கிடைத்தா அதுக்கும் இந்த கொத்சு அருமையான காம்பினேஷன். அதே போல சிதம்பரத்தில் "வேலு மிலிட்டரி உணவகம்" கொத்சு அருமையா இருக்கும்.

4. மயிலாடுதுறை மாயூரநாதர் கீழவீதி மெஸ்
இதுக்கு பேர் எல்லாம் இல்லை. ஒரு அய்யர்மாமாவும் மாமியும் நடத்துறாங்க. அது ஒரு வீடுதான். பெரிய ஓட்டு வீடு. ரெண்டு பேரும் வயசானவங்க. உள்ளே தரையில் தடுக்கில் அமர்ந்து தான் சாப்பாடு. மதிய சாப்பாடு மாத்திரமே. நுனி வாழை இலை நல்லா கழுவி இருக்கும். மாமா தான் பரிமாறுவார். (வேஷ்ட்டி மடித்து கட்டியிருக்க மாட்டார்) இலை வைத்து அதன் ஒரு ஓரத்தில் தண்ணி வைத்து விட்டு அடுத்த மூலையில் கிடார்ங்கா ஊறுகாய் வைப்பார்.



அதிலிருந்து எண்ணெய் வழிந்து வரும். கொஞ்சம் கசப்பாகவும் அருமையாகவும் இருக்கும். அடுத்து தயிர் பச்சடி. ஒரு கூட்டு, ஒரு வறுவல், சின்ன மைசூர்பாகு எல்லாம் அப்பளம் எல்லாம் வந்த பிறகு அருமையா சுட சுட பொன்னி சாப்பாடு. இங்க ஸ்பெஷலே மனதக்காளி வத்த குழம்பு தான். சும்மா பேஸ்ட் மாதிரி இருக்கு. ஒரு ஸ்பூன் தான் போடுவார். இன்னும் கேட்டா சாப்பிட்டுட்டு வாங்கிக்கன்னு சொல்லிடுவார். அந்த ஒரு ஸ்பூன் போதும் நாம் குவித்து வைதிருக்கும் சாதத்துக்கு போதுமானதாக இருக்கும். அடுத்து கெட்டி தயிர், தவிர ஒரு கிண்ணத்தில் அவல் பாயசம், ஒரு கிண்ணத்தில் தாளித்துவிட்ட மோர்.


இங்க ஒரு விஷேஷம் என்னன்னா சாம்பார், ரசம், வத்தகுழம்பு தவிர தினமும் எக்ஸ்ட்ரா குழம்பு தினம் வேறுபடும். உருண்டை பொறிச்ச குழம்பு, வாழைப்பூ கோலா உருண்டை குருமா இப்படியாக.


பின்னே சாப்பிட்டு முடித்ததும் நாமதான் இலை எடுக்கனும். அடுத்டு பீடா கிடையாது. கல்யாண வீட்டில் தாம்பூள தட்டில் கொடுப்பது போல கொடுப்பாரு. அதிலேயே ஒரு வாழைப்பழம் இருக்கும்.
ஒரு ட்ரடிஷனல் கல்யான சாப்பாடு சாப்பிட்ட திருப்தி இருக்கும். மேலே இருக்கும் உருண்டை குழம்பு எங்க ரூம்ல 3 நாள் முன்ன செஞ்சப்ப எடுத்த போட்டோவாக்கும்.

5. ஐயப்பன் ஹோட்டல்

மயிலாடுதுறை கச்சேரி ரோட்டில் இருக்கு இது. ராஜேந்திரன் முதலியார் ஓனர். ஒரு கூறை ஹோட்டலா ஆரம்பிச்சாங்க நான் சின்னவனா இருக்கும் போது. இப்போது நல்ல ஹோட்ட்லா ஆகிடுச்சு. கூட்டம் அதிகமா இருகும். இங்கு புரோட்டா அருமையா இருக்கும். எனக்கு தெரிஞ்சு மதிய சாப்பாடு இல்லை. அப்பவும் டிபன் தான். இப்ப எப்படின்னு தெரியலை.

மசால் வடை அருமையா இருக்கும். கிட்ட தட்ட பேரளம் ரயில்வே கேட்டை தாண்டி திருவாருர் ரூட்க்கு போகும் இடத்தில் கேட் அருகே ஒரு அய்யர் கடை அங்க மசால் வடை பேமஸ். இட்ட தட்ட அய்யப்பன் வடையும் இருக்கும். தவிர தயிர் வடை மேலே இருக்கு முட்டகாராபூந்தி ஊறி இருகும். அதிலே ஸ்பூனை விட்டா வெண்ணையிலே போவது போல போகும்.

இப்படியாக முதல் பாகத்தில் சைவம் முடிஞ்சுது. கிரகணம் முடியட்டும் என் 250 வது பதிவாக 2ம் பாகம் அசைவ ஹோட்டல் போடுறேன்.

July 19, 2009

அபியின் அன்றாட வாழ்க்கை!!!!!

காலை 5 மணிக்கு அபிஅம்மாவின் செல் சினுங்குது. அவளுக்கு எழும்ப மனம் இல்லை. ஆனா நட்ராஜ் விடுவதா இல்லை. அக்கா அக்கான்னு எழுப்பறான். அரக்க பறக்க எழுகிறாள். ஓடி போய் ஹால் லைட் போடுறா. முதலில் தெரு கதவை திறக்கிறா.

ஓடிப்போய் காம்பவுண்ட் சுவறில் இருக்கும் பால் ஜாடியை எடுத்து வந்து வைக்குறா. நட்ராஜ் முதுகிலே தொத்திக்கிறான்.

இரண்டு கேட்டையும் திறந்து பசும் சாணி எடுக்குறா. வாசல்ல இரவே வைத்திருந்த பிளாஸ்டிக் வாளியிலே அதை கரைத்து தெருவில் போட்டு கோலம் போட்டு வெள்கம்ன்னு எழுதறா. பின்னே முதுகில் தொங்கும் தம்பியை கீழே பிடுங்கி போட்டு விட்டு இரவே அயன் செய்த தன் யூனிபார்ம் கூட டாய்லெட் உள்ளே போகிறாள்.



நட்ராஜ் கதவை தட்டி கிட்டே அழுவறான். யூனிபார்ம் உடன் வந்த அபி தம்பியை இடுப்பில் தூக்கிகிட்டு கிச்சன் போறா. தஞ்சாவூர் பில்டர் காபி தயாராகுது. தம்பிக்கு மாத்திரம் வெறும் பால் தான் தரா. அவன் அதை குடிச்ச பின்னே வந்து அம்மாவை எழுப்பறா!



அம்மா எழுந்த பின்னே நட்ராஜ் அவங்க கண்ட்ரோல் லிமிட்க்கு போகிறான். இவ ஓடி போய் இரவு சமையல் செய்த பாத்திரம் கழுவறா! பின்ன அவங்க அம்மா வந்து தலை சீவி சடை போட படுது.



ஆச்சு காலை எட்டு. எட்டு ஆனதும் நட்டு அபியின் புத்தக மூட்டை கொண்டு வந்து வெளியே வைக்கிறான். அக்கா கேட்டுடன் பூட்டிய சைக்கிளை தன் மூத்திர ஜட்டியால் துடைக்கிறான்.



அதற்குள் அபிக்கு ஸ்னேக்ஸ் ரெடி, சாப்பாடு ரெடி, அவ டெய்லி புக்கில் அம்மாவின் கையெழுத்துக்காக வேயிட்டிங்.



அம்மா கையெழுத்து போடலை.



"அம்மா அடுத்த தடவை நான் இன்னும் மார்க் வாங்கி காட்டுறேன், இல்லாட்டி என் உண்டியல் பணம் எல்லாம் நீங்களே எடுத்துகுங்க"



கையெழுத்து ஆகுது. அபி திரும்ப ஒரு தடவை சைக்கிளை துடைத்து விட்டு அந்த லேடி பேர்டு முன் பக்க கூடையில் புத்தக பை வச்சு கிட்டு அம்மணமா இருக்கும் தன் தம்பிய கேரியர்ல உட்கார வச்சுகிட்டு (வெட்கமே இல்லாம) ஒரு ரவுண்டு நகரை!



பின்னே அம்மாவும் அபியும் நட்டுவை பிடிச்சு இழுத்து போட கிளம்புகிறாள்.



மாலை 4 மணிக்கு வர்ரா. வந்த உடனே ஒரு குட்டி தூக்கம். இவன் விட மாட்டான். "அய்க்கிள் அய்க்கிள்"ன்னு தொந்ததரவு செய்வான்.அதாவது சைக்கிள்ல போகனுமாம்.



உடனே எழுந்து நார்மல் டிரஸ்க்கு மாறி முகம் கழுவி சைக்கிள்ல தம்பிய வச்சு அரை மணி நேரம். பின்னே வீட்டுக்கு வந்து மதிய பாத்திரம் ஏல்லாம் சுத்தம் செஞ்சுட்டு ஹார்பிக் எடுத்து போய் 3 டாய்லெட் பாத்ரூம் சுத்தம் செய்வா.



அத்தோட அவ வேலை முடிஞ்சுதா? இல்லை. அப்பதான் அவளுக்கு 1 மணி நேரம் நெட் கிடைக்கும். அந்த 1 மணி நேரம் அவ அக்காக்கள் வருவாங்க. அவங்க கூட இருப்பாங்க..



அடுத்து இரவு சாப்பாடு. பின்னே பால் வாங்கி எடுத்து கிட்டு மாடிக்கு போய்டுவா. அங்கே தான் படிப்பு. 11 மணிக்கு மாடியிலே தான் அடுத்த நாள் யூனிபார்ம் எல்லாம் அயன் செஞ்சு கீழே வைப்பா. பின்னே படுப்பா.



காலை 5 மணிக்கு அபிஅம்மாவின் செல் சினுங்குது. அவளுக்கு எழும்ப மனம் இல்லை. ஆனா நட்ராஜ் விடுவதா இல்லை. அக்கா அக்கான்னு எழுப்பறான். அரக்க பறக்க எழுகிறாள். ஓடி போய் ஹால் லை போடுறா. முதலில் தெரு கதவை திறக்கிறா.

July 18, 2009

முடிஞ்சா எங்க தல மாநக்கல் சிபி, தம்பி லக்கிலுக்கை சீண்டி பாருங்கப்பா!!!

சமீப கால சண்டையில் தமிழ்மணத்தில் மாட்டி கொண்டு முழிப்பது எல்லாம் சாதாரண "புள்ள பூச்சிகளே".

இதோ பரிசல் மாட்டிகிட்டார். (அப்பாடி எனக்கு ஜோடி கிடைச்சாச்சு சந்தோஷம்)

டேய் பசங்களா! போய் வெவசாயம் பாருங்கடா! விட்டா அடுத்து வடகரை வேலன் அண்ணாச்சி, ஆசீப் அண்ணாச்சின்னு வருவீங்க போல இருக்கே!இது எச்சர்ரிக்கை இல்லை கட்டளை! முடிஞ்சா எங்க தல பாலபாரதி, அடுத்த தல மாநக்கல் சிபி, செந்தழலார்,ஜோசப்பூ, சகீலா, திருமதி நயன்தாரா (சிபிஅத்தான்),வேண்டாம்டா வேண்டாம் அட்லீஸ்ட் லக்கிலுக்கை தொட்டு பாருங்கடா!

என்னா ஒரு வில்லத்தனம். புதுசா வந்தவனுங்க ஜீப்ல ஏறிகுங்க. ஓக்கே. எறங்குடா சித்தப்பான்னா எல்லாம் எறங்க போறோம். இல்லாட்டி புதுசா பஸ்ஸு வாங்கி உங்களையும் ஏத்திக்க போறோம். இப்புடி கொல வெறியோடவா திரிவான் மனுசன்!

July 11, 2009

ஆளை விடுங்க சாமி!!!!

காலை 4 மணிக்கு எழுந்தேன். வழக்கம் போல குளியல் எல்லாம் முடிச்சு 5க்கு ரெடியாகியாச்சு. வழக்கம் போல கலைஞர் செய்தி பார்த்தேன். எங்க ஊர் டைம் 6.30க்கு. 3 தடவை மிஸ்கால். ராஜேஸ். தோ வந்துட்டேன்னு சொலிட்டு லாப்பியயை தூக்கிட்டு ஓடினேன்.

7 மணிக்கு கார்டை கதவில் இழுத்துட்டு ஓடினேன் உள்ளே.

7.30 வரை பேண்ட்ரி. அருமையான டீ, சம்சா!

8க்கு வந்த போது எல்லா கடையும் அதாவது கம்பனியும் திறந்தாச்சு.

8.30க்கு மீட்டிங் கால்!

மீட்டிங்!

"மிஸ்டர் குமார் எனக்கு 40 mm 12 மீட்டர் ராட் 40 டன்க்கு வேணும்"

"சாரி சார் கிடைக்காது"

"ஏன்"

""ஏற்கனவே வாங்கி வச்சாச்சு, இது உங்க போன மாச மீட்டிங்கிங் மறு பதிவு"

"ரொம்ப அதிகமா பேசற!

"சரி ஃப்ளோர் அதிகமா போய்கிட்டு இருக்கு லைட் வெயிட் பிளாக் வாங்கனும் குவைத்துல இருந்து குமார்! உடனே போன் செஞ்சு ரிசல்ட் சொல்லு"

"சார் எனக்கு கார்டு தரலை இந்த மாசம்"

"சரி என் போன்ல இருந்து பண்ணு"

ட்ரிங் ட்ரிங் ட்ரிங்

"என்ன குமார்ஜி"

"சாயந்திரம் என்னா குழம்பு"

"மரியாதை கெட்டுடும் நீங்க தான் இன்னிக்கு டேர்ன்"

"அப்ப சாம்பார் வச்சிடலாமா"

"என்ன ஜி கடுப்பை கிளப்புறீங்க! நேத்தும் சாம்பார்தான்"

"அப்ப கோழி வச்சுடலாம்"
உடனே பிராஜக்ட் மேனேஜர் கிட்ட கொடுத்தேன்.
"சார் காதிலே கேளுங்க"

"ஓக்கே"

"குட் குமார் சப்லையர் ஓக்கேன்னு சொல்லிட்டார் நீங்க நல்ல பர்ச்செசர்"

"நன்றி சார்"

மீட்டிங் முடிஞ்சுச்சு.

காலை 11 மணி! "மணி டீ கொண்டுவா"

"தெலுகுமே செப்பு சார்"

12 மணிக்கு குசும்பன் போன்! "நான் அடுத்த 10 நிமிஷத்தில் அங்க இருப்பேன்"

குசும்பன் வந்தாச்சு!

"என்னங்க இது டெஸ்க் டாப்ல தீபா வெங்கட்"

"இரு இப்ப பிராஜக்ட் மேனேஜர் வருவாரு அப்ப அவரு போட்டோ மாத்திடுவேன்"

"மதியம் 1 மணி"

"மணி சாப்பாடு சூடு செஞ்சாச்சா"

"ஆச்சு சார் ஆம்லெட்டும் கேண்டீண்ல இருந்து வாங்கியாச்சு"

1.10

நான் தூங்கியாச்சு. காலை தூக்கி டெஸ்க் டாப் மேல போட்டுகிட்டு

2. 00மணி ஒரு எழவுகெட்ட போர்மென் வந்து "நான் கேட்ட பாலியூரித்தீன் சவுண்ட்ட் இன்சுலேஷன் போர்ம் எங்கன்னு கேக்குறான்.

3 மணிக்கு மீட்டிங் \

"சார் நீங்க இன்னிக்கு ரொம்ப ஸ்மார்ட்"

"யூ ப்ளீஸ் கெட் அவுட்"

"அப்பாடா இதுக்கு தானே அந்த வார்த்தை சொன்னேன் பாலகுமாரா"ன்னு நெனைச்சு வெளியே வந்து பழனியை கூப்பிட்டேன்.

"அவசரமா ஸ்டாஃப் கேண்டீண் வா ஒரு வேளை இருக்கு"

4.50க்கு போன் என் வண்டிக்கு!

சீக்கிரம் வா

5.20க்கு வீடு.

6,20க்கு சமையல் முடிதல்.

7க்கு சாப்பாடு.
9 வரை வரை அழுகாச்சு சீரியல்.
பின்ன தூக்கம்!

இப்படியா போய்கிட்டு இருந்த வாழ்க்கை இப்ப காலை முதல் தூக்கம் இரவு வரை. பின்ன அமரிக்கா வாழ்க்கை வாழ்ந்துகிட்டு இருக்கேன்! போதும் நான் சம்பாதிச்சது. ஆளை விடுங்க சாமி!!!!!!

July 7, 2009

நம்ம தங்கச்சி இயற்கைக்கு இன்னிக்கு பிறந்த நாள்!!!

நமது அன்பு தங்கை இயற்கைக்கு இன்று பிறந்த நாள்.

காலை துபாய் வந்து இறங்கி போன் செஞ்சுது தங்கச்சி. எங்கம்மா இருக்கன்னு கேட்டேன். "ஏர்போர்ட்ல அண்ணா" அப்படியா ஒரு டாக்சி பிடி.

"பிடிச்சாச்சு"
"டிரைவர் கிட்ட போன் கொடு"
"அவருக்கு தமிழ் தெரியலையே"
"பரவா இல்லை கொடு"
"ஆங் ஜி"
"ஜி ஆங்"
"அல் கூஸ் மாலுமே கிராண்ட் சிட்டி மால் ஒ ரவுண்டபுட் சே சீத நேஷனல் டாக்சி ரோட் பக்கடோ பிர் ஏக் நம்பர் ரைட்டு. சீத ஆவோ. T ஜங்ஷன் ஆயகா. உதர் ரைட் மாரோ. பஸ் கலாஸ் அம் உதரியே கடேயகா"
"யோவ் தமிழ்ல சொல்லுய்யா வெண்ணை, ஏன் இந்திய கொல்ற"
"அட நான் பாகிஸ்தானின்னு நெனச்சு பாப்பா சொல்லிடுச்சு, அக் மார்க் முத்திரை குத்தின மாயவரம் தான் ந்நானும்"
"அட அப்படியா எந்த தெரு தங்கச்சிகிட்ட போன் கொடு"
"அண்ணா இவர் தமிழ் தான் போல"
"ஆமாடா இரு நானும் அண்ணியும் கீழே வர்ரோம் நட்டுவோட! உனக்காக ஸ்பெஷல் சமையல் ஆகிடுச்சு. சாப்பிட்டு கோவிலுக்கு போவோம்"

இரவு 2 மணி. என் ரூம் மெட் எழுப்பறான். ஜி சாப் ஜி சாப்!

"என்னைய்யா"
"நீங்க ஜூஸ் குடிக்கவே இல்லை"
"அருமையான கனவை கலைச்சுட்டியே"
"ஆமா உங்களுக்கு என்ன தங்கச்சி கல்யாண நாள், தம்பி பர்த்டேன்னு கனவு வரும். எங்களுக்கு நீங்க நல்லா இருக்கனும்"

"தங்கச்சி கல்யாண நாள் இல்லைய்யா, பிறந்த நாள்"
"இது எந்த தங்கச்சி"
"ராஜி - இயற்கைன்னு பேர்ல அழகா எழுதும்"
"என் வாழ்த்தையும் சொல்லிடுங்க அதுக்கு முன்ன ஜூஸ் குடிங்க நான் டூட்டிக்கு போறேன்"

அன்பு தங்கைக்கு அண்ணனின் வாழ்த்துக்களும்!

"