பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

January 23, 2012

இதை எல்லாம் "ஜொள்ளி"த்தான் புரிய வைக்கனும்!!!

முன்குறிப்பு:


எனக்கு இன்னிக்கு என்னவோ ரவாதோசையை தேடித்தேடி வருது மனசு. ஏற்கனவே நான் ரவாதோசைக்காக நாத்திகனா ஆக இருந்த கதை கூட சொல்லியிருக்கேன். அதை படிக்க இங்க அமுக்குங்க. சமீபத்திலே மாயவரத்தான் ஒரு பதிவு போட அதிலே நான் போட்ட ஒரு பின்னூட்டமே இந்த பதிவு. பின்ன பத்து நாள் முன்ன கூட நண்பர் பெனாத்தலார் ரவாதோசையை ரொம்பவும் சிலாகிக்க இந்த பதிவை வார்ப்பதுன்னு ஒரு முடிவுக்கு வந்துட்டேன்:-))


*************


இந்த ரவா தோசை இருக்கே ரவா தோசை, இதை பொதுவா வீட்டில் வார்ப்பது மிகவும் அரிது. ஹோட்டலில் தான் கிடைக்கும். இப்போது எல்லாம் ரவாதோசை மிக்ஸ் கிடைக்கின்றது எனினும் அப்போதெல்லாம் 80 களில் அதல்லாம் கிடையாது. ரவா தோசை கிடைக்கும் கடைகளில் சிலது மாத்திரம் ஸ்பெஷல். அதில் ஒன்று தான் மாயவரத்தில் இருக்கும் மயூராலாட்ஜ் ஹோட்டல். இரண்டு கடைகள். அதிலே ஒன்று ரயில்வே ஜங்ஷனில் இருந்து வெளியே வந்தவுடன் இருக்கும் மற்றும் ஒன்று மாயவரம் கடைத்தெருவில் ஏ ஆர் சி ஜுவல்லரிகள் எதிரே ராமூர்த்தி அய்யர் இரும்பு கடைக்கு பக்கத்தில் இருக்கும். இரண்டுமே பிரமாதம் தான் ரவாதோசைக்கு. செங்கோட்டை பாசஞ்சரோ, போட்மெயிலோ மாயவரத்தில் குறிப்பிட்ட நேரத்துக்கு அதிகமா நிற்குதே என்ன காரணம் என கேட்டா மயூரா ரவா தான் காரணம். ரயிலை நிப்பாட்டி விட்டு ஓடி வந்து பார்சல் வாங்கி போகும் இஞ்சின் டிரைவர்களும் டி டிக்களும் அனேகம் பேர். அத்தனை ஒரு பேர் அந்த ரவாதோசைக்கு.

ரவாதேசைக்கு உலகிலேயே ஒரு சிறப்பு என்னான்னா, மாவு தோசை மாதிரி ஒரே நேரத்தில் கரைத்து பக்குவமா வைக்க முடியாது. மாவு தோசை முதல் தோசை நல்லா இருந்துச்சுன்னா கடைசி தோசை வரை நல்லா இருக்கும். முதல் தோசை என்ன ருசியோ அதே தான் கடைசி தோசை வரைக்கும். ஆனால் இந்த ரவா தோசை இருக்கே அது ஒரு ஒரு நான்கு அல்லது ஐந்து பேருக்கும் அதாவது அப்போது டேபிளில் இருக்கும் ஆர்டர் எத்தனையோ அத்தனைக்கு உண்டான மாவு மாத்திரம் அவ்வப்போது கரைக்கப்படும். அதனால் சாதா மாவு தோசை போல முதலில் கரைக்கும் போது மட்டும் கேர்புல்லா இருந்துட்டு பின்னே மாஸ்டர் பார்துப்பாருன்னு விட முடியாது. ஒரே நேரத்தில் முதல் டேபிளில் சாப்பிடும் ரவாதோசைக்கும் கடைசி டேபிளில் சாப்பிட்டு கொண்டிருக்கும் தோசைக்குமே சுவை மாறித்தொலையும் அபாயம் உண்டு.

ஆனால் மயூரா ரவா தோசை அப்படி இல்லை. ஒரே டேஸ்ட் அன்றைக்கு முழுவதும் இருக்கும். இது மயூரா ரவாதோசையின் சிறப்பு. ரவா தோசை சிலருக்கு முறுகலா பிடிக்கும், சிலருக்கு பதமா பிடிக்கும். ஆனால் என்னைப்போல வித்யாசமான சிலருக்கு ரெண்டு விதமாகவும் பிடித்து தொலைக்கும். அதனால் மயூராவில் எனைப்போல கிறுக்கன்களுக்கு என பிரத்யோக பார்முலா உண்டு. தோசையை வார்த்த பின்னே தனியே கொஞ்சம் மாவெடுத்து நட்ட நடுவே அதன் மேல் ஊற்ற வேண்டும். அந்த இடம் பதமாகவும் ஓரத்தில் முறுகலாகவும் இருக்கும்.

அதிலேயும் ஒரு குழப்பம். ரவா தோசையை ரவுண்டாக வார்க்க முடியாது. இந்தியா மேப் போல வரும். இலங்கை போல வரும், அவ்வளவு ஏன், எண்பதுகளில் அமரிக்க விசாவுக்கு அப்ளை செஞ்சுட்டு கால் கடுக்க நின்று அது ரிஜக்ட் ஆன விரக்தியில் செங்கோட்டை பாசஞ்சரில் வரும் நபர்களுக்கு அமரிக்கா மேப் போலவும் வரும். எம்பசியில் கிடைக்காத அமரிக்கா எங்கூர்ல கிடைக்கும். அதிலே எங்கே "நடு செண்டர்" பார்த்து மொத்தமாக்குவது? அதையும் செய்வாரு அந்த மாஸ்டர்:-))

அதிலே சிலருக்கு நெய் ஊற்றினால் பிடிக்கும். ஆனால் மிதமிஞ்சி இருக்கவும் கூடாது. திகட்டி விடும் அபாயம் உண்டு. அதையும் பதமா ஊற்ற வேண்டும். வார்த்து முடித்து அதற்குண்டான நேரத்தில் அதை புரட்டி போட்டு தோசை திருப்பியால் அதை பாசமுடன் வருடிக்கொடுத்து தோசைக்கல் மேலேயே அதை குடும்பக்கட்டுப்பாடு சின்னமாக்கி அதை வாழையிலையில் வைத்து அந்த வாழையிலையை ஒரு எவர்சில்வர் தட்டில் வைத்து நம் டேபிள்க்கு கொண்டு வந்து ஒரு சுத்து சுத்திவிட்டு சர்வர் நம்மை பெருமையாக பார்க்கும் போது நமக்கு எச்சில் ஊறி தாவங்கட்டை வலிக்கும்.

அதன் ஜோடியாக சின்ன வெங்காயம் போட்ட சாம்பார் வாளியை தூக்கி வந்து டேபிளில் வைக்கும் போது அந்த இந்தியாவுக்கோ, அமரிக்காவுக்கோ எல்லைப்பிரச்சனை எதும் இல்லாதபடி முறுகல் எல்லாம் பிய்த்து விழுங்கி இருப்போம்.

"அது என்ன அந்த சாம்பாரில் சின்ன வெங்காயத்தை முதலில் வேக வைத்து போட்டீங்களா சார், பார்க்கும் போது முழுசா இருக்கு தொட்டால் கரைந்து போகுது" என சர்வரை கேட்கும் போது அவர் முகம் வெட்கத்தால் சிவக்கும். ரவாதோசையின் சீரகமும், கருவேப்பில்லையும் என்னவோ ஒத்துமையான புருஷன் பொண்டாட்டி மாதிரி அத்தனை ஒரு ஒட்டுதல். கூடவே சின்ன வெங்காய சாம்பாரும் பக்குவமா இருந்திட்டா ஆஹா ஓஹோ பேஷ் பேஷ் தான்.

கூட வரும் கெட்டி சட்னி (தேங்காய் சட்னி)யும் , தக்காளி கார சட்னியும் சரியான பக்கவாத்தியம்... இல்லை இல்லை பக்கா வாத்தியம் போங்க... சார் சிலதை சொல்லி புரியவைக்கலாம். ஆனால் மயூரா ரவாவை "ஜொள்ளி"த் தான் புரிய வைக்க வேண்டும்!

January 14, 2012

இட்லி, நெய் ஜீனி - போகி ஸ்பெஷல்... 14.01.2012


" தம்பி என்னடா பண்ணிகிட்டு இருக்க?"


"அப்பா, வெயிட்டிங் ஃபார் குளிச்சிங்"


@ " ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன் மகன் இங்கிலிபிஸ்
பேசுறான் எனக்கேட்ட டேடி"


=================================================


படம் ஆரம்பிச்ச உடனே ஒரு ஜெயிலை காட்டுறாங்க. அதிலே தாடிவச்ச ஒரு கெட்டத்தனமான குற்றவாளி. அவன் நல்லா மொழு மொழுன்னு பச்சையா ஷேவ் செஞ்ச நம்ம ஹீரோ பரத் என்னும் பொய்க்குற்றம் சுமத்தப்பட்டு அனியாயமாக ஜெயிலில் இருக்கும்(அப்படித்தானே?) அப்பாவி கிட்டே வீணா வம்பு செஞ்சு அடிக்கிறான். நம்ம ஹீரோ எவ்வளவோ அமைதியா இருந்தும் நாம் எல்லாம் சீட்டு முனைக்கு வந்து "திருப்பி அடி திருப்பி அடி"ன்னு கத்துவதை காதில் வாங்கி திருப்பி அடிக்கிறார். செம அடி. கெட்டவன் ஒரு கம்பி பந்தை எடுத்து பரத் மேல அடிக்க அந்த கம்பி பந்து பரத் கண்கிட்டே வரும் போது நாம எல்லாம் பயந்து போய் அழ ஆரம்பிக்க அதை ஒரே உதையா உதைச்சு அது ஒரு தென்ன மரம் உயரத்துக்கு பறந்து போய் எலக்ட்ரிக் கம்பத்திலே பட்டு ஜெயில்ல ஒரே தீப்பொறி பறக்குது. கெட்டவன் தோத்துட்டான்.

உடனே பாட்டு பாடுறாங்க. ஹீரோவை சுத்தி சுத்தி எல்லா நல்ல குற்றவாளிகளும் ஒரே ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம். ஒரு கட்டத்திலே ஜெயிலர் கூட தன்னை மறந்து ஆடிகிட்டு இருக்காரு. பிறகு அவர் "தான் ஒரு ஜெயிலர்" என்பதை நினைவு கொண்டு நாக்கை கடித்து கொண்டு ஆட்டத்தை நிப்பாட்டிகிறார். இங்க தான் டைரக்டர் நிக்கிராரு.

@ ஆண்டவா, சன் டிவியிலே இப்பதான் அந்த படம் ஓடிகிட்டு இருக்கு. இன்னிக்கு பொழுது ரொம்ப பிரமாதமா இருக்கும் போலிருக்கே எனக்கு.... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

=========================================================

மார்கழி ஆரம்பிச்ச முதல் நாள் முதலே வாசலில் இருக்கும் புல் எல்லாம் செதுக்கி தர சொல்லி அபிஅம்மா அழாத குறை தான். எனக்கு தான் இணைய சண்டை போடவே நேரம் சரியா இருக்கு. இதிலே எங்க புல் எல்லாம் வெட்டுவது? அப்படியே புல் செதுக்கி கொடுத்தாலும் காபிபொடியை காயவைத்து அதான் பிரவுன் கலர், செங்கல் நுனுக்கி அதான் செங்காமட்டை கலர், அப்பா வேட்டிக்கு போடும் நீலத்தை எடுத்து கோலமாவுடன் கலந்து அதான் நீலகலர் என என் அக்காக்கள் சின்ன வயசிலே கோலம் போடுவது போல போடவா போறாங்க. போன வருஷம் ஒரு கோலம் போட்டாங்க. அதன் கீழே வெல்கம் என எழுதியும் வச்சிருந்தாங்க. "அடடே வாத்து நல்லா வருதே உனக்கு" என பாராட்டியது தப்பா? அதிலிருந்து படம் கோலம் எல்லாம் இல்லை, ஒன்லி புள்ளி கோலம் தான் என தீவிர முடிவுக்கு வந்துட்டாங்க. மயிலை பார்த்து வாத்து என சொன்ன என் தவறான புரிதலுக்காக என்னை பார்த்து பதிலுக்கு "வாத்து" என திட்டுவதை என்னால் சகிச்சுக்க முடியலை. அதனால் தான் இந்த வருஷம் புல் செதுக்கி தரவில்லை.

======================================================

இருந்தாலும் மனசு வரலை. போனால் போகுதுன்னு இன்று காலை மண்வெட்டி எல்லாம் எடுத்து புல் செதுக்க ஆரம்பித்தேன். வியர்த்து போனது. பின்னர் ஒரு டீ போட சொல்லி குடித்து விட்டு செதுக்க ஆரம்பித்தேன். அப்பவும் வியர்த்தது. கை எல்லாம் குடைந்தது. பின்னர் ஒரு காம்பிளான் போட சொல்லி குடித்தேன். திரும்பவும் செதுக்கிய போது நெஞ்சு எல்லாம் லைட்டா வலிப்பது போன்ற பிரம்மை. என் சிக்ஸ் பேக்குடன் நிமிர்ந்து என் நெற்றி வியர்வையை வழித்து நிலத்தில் போட்டேன். ஹாலில் ஏதோ லோக்கல் சேனலில் படையப்பா ஓடியது. "வயசானாலும் உன் ஸ்டைலும் இளமையும் இன்னும் அப்படியே தான் இருக்கு" என அப்பாஸ் சொல்லிகிட்டு இருந்தார். ஊக்கும்.... "நீ புடுங்கினது போதும்" என மண்வெட்டியை தூக்கி போட்டு விட்டு எங்கயாவது இணைய சண்டை இருக்கான்னு பார்க்க வந்துட்டேன்.

==================================================

கிரிக்கெட் பார்க்கலாம் என நினைத்து ஸ்டாருக்கு போனேன். எப்போதும் போல இந்தியா அருமையாக போராடிக்கொண்டு இருந்தது. இன்னும் கொஞ்ச நேரத்தில் டெண்டுல்கர் வந்து 100 வது சதம் அடிக்க போகின்றார் என எப்போதும் போல 100 கோடி பேரும் எதிர்பார்க்க போறாங்க. மதியம் எல்லா டி வியிலும் நாளை எல்லா பேப்பரிலும் "டெண்டுல்கர் ரசிகர்களை ஏமாற்றினார்" என்றே வரும். எனக்கு அதிலே புரியாத விஷயம் இதான். ஏன் ஒருவருமே "டெண்டுல்கர் ஏமாந்தார்"ன்னு மட்டும் எழுத மாட்டேன்னு அடம் பிடிக்கிறாங்கன்னு தான் தெரியலை. என்னவோ அவருக்கு மட்டும் ஏமாற்றம் இல்லை என்பது போலவும் என்னவோ ரசிகர்களை அவர் வேண்டுமென்றே ஏமாற்றி கொண்டு இருப்பது போலவும் ......

========================================

முதல்வர் அம்மா இலவச வேட்டிசேலை எல்லாம் பொங்கல் முதல் கொடுக்க ஆரம்பித்து தமிழ் புத்தாண்டுக்குள் கொடுத்து முடிக்கப்படும் என அறிவித்து இருக்காங்க. ஆக நாளை காலை முதல் மாலைக்குள் ஒரே நாளில் கொடுத்து முடிப்பாங்க போலிருக்கு. செம சுறு சுறு தான். இதே சசிகலா கூட இருந்த போது இத்தனை ஒரு சுறுசுறுப்பு அம்மாவிடம் இல்லை. சோ வந்தவுடன் தான் ஆட்சி களைகட்டுது. வாழ்க "சோ" வளர்க அவர் புகழ். இன்னிக்கு துக்ளக் ஆண்டு விழா நடக்க போகுதாம். வழக்கம் போல "டோண்டு"சார் முதல் ஆளா போய் உட்காந்து வந்து பதிவு போடுவார். அவருடைய பதிவுக்கு பயங்கர எதிர்பார்ப்பு இருக்கும் அதே வேளையில் "காண்டு"கஜேந்திரன் பதிவுக்கு அதிபயங்கர எதிர்பார்ப்பும் இணைய உலகில் இருக்கு. இருவரும் மனசு வச்சு நல்ல பதிவா தரனும். பார்ப்போம்...

=========================================

எல்லோரும் வீட்டை போகியின் காரணமாக சுத்தம் செஞ்சுகிட்டு இருக்கும் போது நட்ராஜ் மட்டும் கருமமே கண்ணாயினாராக தன் சைக்கிள், தன் விளையாட்டு பொருட்கள் எல்லாம் சுத்தம் செய்தது பார்க்க சந்தோஷமாக இருந்தது. அவன் அம்மா "உன்னுது மட்டும் தான் சுத்தம் செய்வியா மத்த பொருட்கள் எல்லாம் சுத்தம் செய்ய மாட்டியா" என கேட்டு தொலையாமல் இருந்திருக்கலாமோ. அபிஅம்மாவின் செல் போனையும் கழுவி காயவைத்து விட்டான். தேவையா இது? ஆனால் நான் சூப்பர். அதிகமாக தொல்லை கொடுக்காமல் தரையை துடைக்கும் போது காலை தூக்கி நாற்காலி மேல் வைத்துப்பதும், ஃபேனை துடைக்கும் போது ஸ்விட்ச் எல்லாம் போடாமலும், வெற்றிலை போட்டு சீவலை தரையில் கொட்டாமலும் ரொம்ப சமத்தா இருந்தேன். ஏன் என்னை போல இருக்க தெரியலை நட்ராஜுக்கு? இன்னும் சின்ன குழந்தையாவே இருந்தா என்ன அர்த்தம்? என்னை பார்த்து திருந்துடா மொவனே!

=============================================

இந்த பொங்கலுக்கு "நண்பன்" பார்த்துடலாம்னு இருந்தேன். ஆனா இணையம் முழுக்க "படம் நல்லா இருக்கு"ன்னு படம் காட்டுவதை பார்த்தா பயந்து வருது. இவங்க எல்லாம் படம் நல்லா இருக்குன்னு சொன்னா அந்த படம் "பப்படம்" ஆவதும் "உவ்வே"ன்னு சொன்னா படம் நல்லா இருந்து தொலைப்பதும் இஸ்ட்ரியாகிப்போச்சு. என்ன செய்வது இவங்க ராசி அப்படி. இப்படித்தான் ஓரிருவர் தவிர மௌனகுருவை அதிலும் கதாநாயகன் நடிப்பை சொதப்பல் என எழுதியதை பார்த்து மிரண்டு போய் இருந்தேன். ஆனால் படம் பார்க்கும் போது எனக்கு ரொம்ப பிடித்து இருந்தது. அந்த கேரக்டர் அதுக்கு போல என்ன மௌனராகம் கார்திக் மாதிரியா நடிக்க முடியும். நல்ல அழுத்தமான நடிப்பு. அவர் மு க தமிழரசு பையன் என்பதல் சத்தியமாக இப்படி சொல்லலை. நிஜமாவே நல்லா இருந்துச்சு படமும், பையன் நடிப்பும். அதனால் தான் நண்பன் பார்க்க பயந்து வருது. விதி வலியது... பார்க்கத்தான் போகிறேன்.

=================================================


"அப்பா மாட்டுப்பொங்கலுக்கு மாடு வாங்கனும்ப்பா" - இது நட்ராஜ்

"அப்பா பொங்கல் அன்னிக்கு 'நண்பன்" படம் போலாம்ப்பா - இது அபி

"பொங்கல் வேட்டி சேலை எப்போ தருவாங்கன்னு தெரியலையே... இட்லி பானைக்கு துணி மாத்தனும், தலகாணிக்கு கவர் போடனும், ஜன்னல் ஸ்க்ரீன் போடனும் - அஃப்கோர்ஸ் அபிஅம்மா

"மாட்டு பொங்கலுக்கு வீட்டு தெய்வத்துக்கு படைக்கனும்" - இது நான் நானே தான். ஏன்னா அதிலே ஒரு விஷயம் இருக்கே:-))

அவரவர் கவலை அவரவர்களுக்கு!

அனைவருக்கும் இனிய தமிழ்புத்தாண்டு, பொங்கல், உழவர் தின ,திருவள்ளுவர் தின மற்றும் "விடுமுறை தின" வாழ்த்துக்கள்.

January 8, 2012

பெரியாரிஸ்டுகள் ஜாக்கிரதை!!!

ஒரு நாள் என் சுசுகி மேக்ஸ் 100 வண்டியை ஓட்டிக்கொண்டே போகும் போது தான் திடீரென கவனித்தேன். முன்பக்கம் செறுகி இருந்த சாவியை காணும். வண்டி ஆடிய ஆட்டத்தில் அது எங்கயோ துள்ளி குதித்து விட்டது. என் வண்டியில் பிரேக் இல்லை, இண்டிகேட்டர் இல்லை, ஸ்பீடாமீட்டர் இல்லை, டயரில் காத்து இல்லை என்பன போன்ற இல்லைகளுடன் சாவி இல்லை என்னும் புது இல்லையும் சேர்ந்து கொண்டது என நினைத்து கொண்டேன். பெரியதாக அலட்டிக்கொள்ளவில்லை. பூட்டு சாவி இல்லையெனில் எனக்கு பெரிய பாதிப்பு எதும் வந்துவிடாது. ஏனனில் அதை எவனும் "மெனக்கெட்டு" திருட போவதில்லை. ஒரு திருடனுக்கு எத்தனை எத்தனை ரிஸ்க் தெரியுமா? மாட்டிகிட்டா என்ன அவஸ்தை படனும்? ரிஸ்க் எடுத்து திருடும் ஒருத்தன் இதை திருட மாட்டான். எவனாவது வெங்கலப்பூட்டை உடைச்சி வெளக்குமாத்தை திருடுவானா என நினைத்து அதைப்பற்றி கவலைப்படவில்லை.

ஆனால் நான் போகும் இடம் வந்த பின்னர் தான் தெரிந்தது அதை ஆஃப் செய்ய சாவி வேண்டும் என்று. சாவி இல்லாமல் எப்படியும் என் வண்டியை ஆஃப் செய்ய முடியாது. அதுவா நினைச்சா நான் வேகமாக போக வேண்டி ஆக்சிலேட்டர் குடுக்கும் போது தானாக ஆஃப் ஆனாலும் ஆகுமே தவிர நான் என் இஷ்டத்துக்கு எல்லாம் அதை ஆஃப் செய்ய அது ஒத்துக்காது. சரி வேற வழியில்லை புதியதாக சாவி போட வேண்டியது தான் என நினைத்து டி வி எஸ் கம்பனி பக்கம் போய் ட்யூப்ளிகேட் சாவி கிடைக்குமா? போட முடியுமா? என கேட்டேன். என்னை ஒரு மாதிரியாக கேவலமாக பார்த்து விட்டு அவன் "சார் டைட்டானிக் கப்பலுக்கு கூட ட்யூப்ளிகேட் போட்டுடலாம், ஆனா எங்க டி வி எஸ் கம்பனி வண்டிக்கு எல்லாம் எதும் முடியாது. வேண்டுமானா புது லாக் செட் வாங்கி போட்டுகுங்க, என்னூறு ரூபாய் ஆகும்" என சொன்னான்.

சரி போகட்டும், அது என்ன டைட்டானிக் கப்பல் உதாரணம்? அதாவது அவன் கம்பனி டி வி எஸ்சை மிகப்பெரிசா கம்பேர் செய்கிறானாமாம். கஷ்டம்டா சாமீ! போடலாம், என்னூறு ரூபாய் கொடுத்து லாக்செட் போடலாம். அப்படி போட்டா என் வண்டியில் அதிகபட்ச விலை உயர்ந்த ஐட்டமாக அது மட்டுமே இருக்கும். பூட்டுக்கு ஆசைப்பட்டு எவனாவது திருடிகிட்டு போக வேண்டி ஆகலாம். ரைட்... நம்ம வண்டி 108 ஆம்புலன்ஸ் மாதிரி 24 மணி நேரமும் அலர்ட் ஆறுமுகமா ஓடிகிட்டே இருக்கட்டும் என விட்டுவிட்டேன். அப்படியே போகும் வழியில் ஒரு நண்பனை பார்த்தேன். அவன் என் வண்டியின் நிலையை கண்டுவிட்டு கண்டுகாணாம போகாம "நாம சின்ன வயசா இருக்கும் போது லாகடம் பூட்டுகடை தங்கராசுன்னு ஒருத்தர் இருந்தாரே, அவர் கடையிலே போய் கேட்டுப்பாறேன். அவரு கைய வைச்சா திறக்காத பூட்டே இல்லை. பூட்டாத பூட்டே இல்லை" என உசுப்பேத்த என் வண்டி அங்கே போய் நின்றது.

அந்த இடத்தில் இப்போது பூட்டுகடை சுவடே இல்லாமல் வாழை இல்லை நறுக்கி விற்று கொண்டிருக்க அவரிடம் நான் பூட்டுகடை தங்கராசு பற்றி கேட்க அவரோ "அவருக்கு வயசாகிப்போச்சுங்க. அவரு பையன் ஒருத்தர் தான் அமெச்சூரா செஞ்சுகிட்டு இருக்காரு. அவரு வூடு லால்பகதூர் நகர்ல இருக்கு. அவரு வீட்டுக்கு போய் அவர் பையன் வீடு எங்கன்னு விசாரிச்சு பாருங்க" என சொன்னார். சரின்னு நானும் வண்டியை லால்பகதூர் நகர் பக்கம் வண்டியை விட்டேன். அங்கே ஒரு சைக்கிள் கம்பனி, விறகு கடை எல்லாம் இருந்த இடத்தில் பேப்பர் படிச்சுகிட்டு இருந்த ஒருத்தர் கிட்டே "சார் பூட்டுக்கடை தங்கராசு அண்ணன் வீடு எங்க இருக்கு?" என கேட்ட போது "இதோ இந்த சந்திலே போங்க, இரண்டாவது கட்டிங்ல கடைசி வீடு" என சொல்ல நான் அங்கே போனேன். அவங்க வீட்டிலே அவங்க பையன் வீடு எங்கன்னு கேட்டதுக்கு " அப்படியே வந்த வழில ஒரு மெயின்ரோட்டிலே சைக்கிள் கம்பனி, விறகு கடை எல்லாம் இருக்குமே அதுக்கு நேர் எதிரே ஒரு ரோடு போகும் பாருங்க. அதிலே போய் ஒரு 5 வீடு தள்ளி ஒரு காம்ப்ளக்ஸ் இருக்கும் அதிலே முதல் மாடில இருக்காரு" ன்னு சொல்ல நான் திரும்பவும் வந்து அதே பேப்பர் படிப்பவரிடம் "சார் இந்த எதிர் ரோட்டிலே பூட்டுகடை தங்கராசு பையன் வீடு இருப்பதா சொன்னாங்க. அது எது?"ன்னு கேட்டேன். அவரும் அந்த காம்ப்ளக்சை காட்டினார். அங்க போனேன். அவன் மனைவி "ஆமாங்க இதான் அவரு வீடு. அவரு அந்த சைக்கிள் கடையிலே பேப்பர் படிச்சுகிட்டு இருப்பாரு அங்க போய் பாருங்க" என சொன்ன போது எனக்கு கிட்ட தட்ட மயக்கமே வந்துடும் போலிருந்தது. அவர் பேர் என்னங்க என கேட்டதுக்கு அவங்க "அமுதன்"ன்னு சொன்னாங்க.

நான் திரும்பவும் அந்த கடைக்கு வந்து அதே பேப்பர்படிப்பவரிடம் "சார் அமுதன் யார் சார்?" என கேட்க அவர் "நான் தான் என்ன விஷயம்?" என்றார். எனக்கு செம கோவம். அடக்கி கொண்டேன்.

"பின்ன ஏன் சார் அலையவிட்டீங்க?"

"நான் எப்ப அலையவிட்டேன்?" - அவர்

"நான் தான் முதல்லயே பூட்டுகடை தங்கராசு வீடு எதுன்னு கேட்டனே?"

"ஆமாம். நான் தான் சரியா பதில் சொன்னனே"

"ம்.. அது சரி பின்ன வந்து பூட்டுகடை தங்கராசு பையன் வீடு எங்கன்னு உங்க கிட்ட தானே கேட்டேன்"

"ஆமாம். அதுக்கும் சரியா தானே பதில் சொன்னேன்"

எனக்கு என்ன பதில் சொல்வதுன்னு தெரியலை. ஒருவேளை நான் தான் தப்பு பண்ணிட்டனோ என நினைத்து கொண்டேன்.

அவரே மெதுவாக "தம்பி, எனக்குன்னு ஒரு சுயமரியாதை இருக்கு. என் பேரை சொல்லி கேட்டா நான் தான் அதுன்னு சொல்லியிருப்பனே. எங்கப்பாவுக்கு வயசு 85 ஆச்சு. எனக்கோ 50க்கு மேல ஆச்சு. இன்னும் என்னை அப்பா பிள்ளையாக மட்டுமே அறிப்பட்டு இருக்கேன் என நினைத்த போது கொஞ்சம் சுயமரியாதையை இழந்த மாதிரி ஒரு பீலிங். இப்ப சொல்லுங்க என்ன வேண்டும்"

உஷ்.... அப்பாடா... முடியல.. என்னால முடியல... "சார் என் வண்டி சாவி காணாம போச்சு. ட்யூப்ளிகேட் போடனும்" என்றேன். அதுக்கு அவர் "இல்லீங்க நான் சாவி போடுவதில்லை"ன்னு சொன்னார். எனக்கு இன்னும் கோவம் அதிகமாச்சு. இதுக்கு தான் நான் இத்தனை அலைந்தேனா என்று எனக்கு என் மேலயே கோவம். நான் அவரிடம் "சார் அப்பவே அந்த டி வி எஸ் கம்பனி காரன் சொன்னான். டைட்டானிக் கப்பல்க்கு கூட மாத்து சாவி போடலாம் ஆனா எங்க கம்பனிக்கு போட முடியாதுன்னு சொன்னான். அது உண்மை தான் போலிருக்கு" என சொல்லிவிட்டு கியரை போட்டு வண்டியை சர்ன்னு கிளப்பினேன். அந்த தெரு முனைக்கு போய் தான் யூ டேர்ன் அடித்து திரும்பி வரனும். நான் போய் திரும்பி அவரை கிராஸ் செய்து போகும் போது "தம்பி கொஞ்சம் வண்டிய நிப்பாட்டுங்க" என குரல் கேட்டு நிப்பாட்டினேன். வண்டி கிட்ட வந்து ஒரு சாவியை போட்டு வண்டிய ஆஃப் செய்ய அது குழந்தை போல ஆஃப் ஆகியது. "இப்ப ஸ்டார்ட் பண்ணுங்க" என சொன்னார். செய்தேன். அழகா ஸ்டார்ட் ஆகியது. அடடே என நினைத்து கொண்டேன்.

"தம்பி, பொதுவா நான் இது போல ஜுஜுபி கம்பனி வண்டி சாவி எல்லாம் போடுவதில்லை. இதல்லாம் எனக்கு 60 நொடி வேலை தான். நீங்க யூ டேர்ன் எடுத்து திரும்புவதுக்குள்ள என் வண்டி சாவியை இதே ரோட்டிலே கீழே போட்டு தேய்த்து உங்க வண்டிக்கு போட்டுட முடியும். ஆனா பாருங்க உங்களுக்கு மாத்து சாவி கிடைச்சிடும், ஆனா எனக்கு தான் ஜாப் சேட்டிஸ்ஃபேக்ஷன் கிடைக்காது" என சொன்னார்.

எனக்கு இப்போ அந்த டைட்டானிக் உதாரணம் சொன்னவன் மீது கோபம் திரும்பியது. நான் அவரிடம் "உங்க சார்ஜ் எத்தனை சார்" என கேட்டேன். அவர் முப்பத்தி ஏழு ரூபாய் தேவைப்படுது. ஆனா நீங்க நாற்பது கொடுங்க. ஏன்னா சில்லரை இருக்காது என் கிட்ட" என சொன்ன போது எனக்கு மேலும் ஆச்சர்யம். "இது என்னங்க கணக்கு முப்பத்தி ஏழு?" என்றேன். அதற்கு அவர் "எனக்கு இப்போது அவ்வளவு தான் தேவைப்படுது" என சொன்னார். மேலும் பேசினா அதுக்கு எதுனா வியாக்யானம் பேசுவாரோ என நினைத்து நாற்பது கொடுத்து விட்டு கிளம்பி வந்து விட்டேன். திரும்ப வரும் போது அவர் "தம்பி இனிமே இது போல வண்டிக்கு சாவி போடல்லாம் கேட்டு வராதீங்க. ரொம்ப ஒஸ்தியான யாராலும் திறக்க முடியாத பூட்டு கோத்ரெஜ் போல சவாலான வேலைன்னா மட்டும் வாங்க" என சொல்லி நம்பர் கொடுத்தார். எதுக்கும் இருக்கட்டும் என அதை என் போனில் சேவ் செய்து கொண்டேன்.

நிற்க... இதல்லாம் ஒரு வருஷ முந்தின கதை. பின்னர் இப்போ ஒரு மூன்று மாதம் முன்னே நான், என் மனைவி, அபி, நட்ராஜ் எல்லாரும் என் தம்பி வீடு கட்டும் இடத்தில் இருந்து விட்டு மாலை ஒரு 5.30க்கு வீட்டுக்கு திரும்பி கதவை திறந்தால்... ஒரே அடம்.. திறக்க மாட்டேங்குது. என்ன என்னவோ செய்தும் அது திறக்கவில்லை. எல்லோரும் வெளியே நிற்கின்றோம். எனக்கு வியர்த்து விட்டது. கதவை உடக்கவும் முடியாது. நல்ல பர்மா தேக்கு கதவு. பூட்டும் சாதாரண பூட்டு இல்லை. இரண்டு பூட்டுகள். இரண்டும் 7000 மதிப்புள்ள கோத்ரெஜ் நவீன பூட்டுகள். அதில் ஒன்று மட்டுமே பூட்டி விட்டு போனோம். அது தான் மக்கார் செய்யுது. அந்த பூட்டு வாங்கியது என் நண்பனின் தம்பி கடை தான். அதை வாங்கும் போதே "அண்ணே, இதான் இப்போதைக்கு கோத்ரெஜ்ல லேட்டஸ்ட் மாடல். இது வாங்கினா அவங்களே ப்ஃரீ இன்சூரன்ஸ் 50000 ரூபாய்க்கு தருவாங்க. பூட்டை மாத்துசாவி போட்டு திறந்து திருட்டு நடந்தா போலீஸ் எஃப் ஐ ஆர் காமிச்சா இன்சூரன்ஸ் பணம் கிடைச்சிடும்" என்றெல்லாம் சொன்னதால் அதை வாங்கி போட்டோம். ஆனா அது இப்படி மக்கர் செய்யும் என யாரும் எதிர்பார்கலை. அவனுக்கு போன் செய்து திட்டினேன். "என்ன பாபு, இப்புடி ஆகிடுச்சு. பொதுவா இந்த பூட்டிலே ரிப்பேர் வராது ஒருலட்சம் பூட்டிலே ஒன்னுக்கு தான் இதே போல பிரச்சனை வரும்னு சொன்னியே" என கேட்டேன். அதுக்கு அவன் "அண்ணே அந்த லட்சத்தில் ஒரு பூட்டு தான் இது போலிருக்கு" என சொன்னான். இதுக்கு மேல என்ன செய்ய முடியும்.

அப்ப தான் அந்த அமுதன் நியாபகம் வந்தது. அமுதன் சாருக்கு போன் பண்ணினேன்.

"அண்ணே, வீட்டிலே பூட்டு திறக்க மாட்டேங்குது. நீங்க கேட்டபடி சவாலான கேஸ் இது. கோத்ரெஜ் லேட்டஸ்ட் மாடல். வந்து திறந்து தர முடியுமா?" - இது நான்.

"ம்.. அப்படியா? வீட்டின் உள்ளே யாரும் குழந்தைகள் மாட்டி இருக்காங்கலா?"

"இல்லை"

"சரி எதுனா முதியவர், பெண்கள்?"

" முதியவர்ன்னா நான் தான், நானும் வெளியே தான் இருக்கேன். பெண்கள், குழந்தைகள் எல்லாம் வெளியே தான் இருக்காங்க. இண்டர்வியூ பண்ணும் நேரமா இது, உடனே வர முடியுமா?"

"இல்லை தம்பி, மணி இப்போ ஆறு ஆச்சு, நான் இரவு ஒரு எட்டு மணிக்கு வர்ரேன்" என சொல்லிவிட்டு போனை வச்சுட்டாரு.

எனக்கு ஆத்திரம் உச்சத்தை தொட்டது என்றாலும் வேறு வழி இல்லை. நம்ம பசங்களுக்கு தான் நேரம் காலம் தெரியாதே. "அப்பா பசிக்குது" என நட்ராஜ் சொல்ல... ஹோட்டலில் போய் வரலாம் என நினைத்தால் கூட பணம் கூட உள்ளே தான் இருக்கு. அப்படியே ஒரு ரெண்டு மணி நேரம் ஓடியது. நான் போன் செய்யலாம் என நினைத்த போது அவரே அவருடைய டி வி எஸ் 50ல் வந்தார். வரும் போது கையில் ஒரு "போஸ்க்" பெட்டியில் கொஞ்சம் டூல்ஸ்.

வந்து பூட்டின் சாவியை பார்த்தார். நாங்க அதை நெளிச்சு வச்சிருந்தோம். சாவியில் பால்ரெஸ் வந்து உட்காருவது போல குழி குழியா இருக்கும். அதை தட்டி நெளித்து அந்த குழியில் இரண்டு குழியை கொஞ்சம் ஆழப்படுத்தினார். மொத்தம் இரண்டு நிமிஷம். பூட்டு "ப்ளக்" என திறந்து கொண்டது. எனக்கு மீண்டும் ஆச்சர்யம்.

உள்ளே கூப்பிட்டேன். வந்தார். எத்தனை சார்ஜ் என கேட்டேன். "இருநூறு ரூபாய் தேவைப்படுது" என சொன்னார். இப்பவும் கேட்டேன். அது என்ன கணக்கு தேவைப்படுவது மட்டுமே தான் கேட்பீங்களா? என்றேன். "ஆமாம்" என்றார். கொடுத்தேன். மேசை மேல் இருந்த "ஏ தாழ்ந்த தமிழகமே" என்ற அண்ணாவின் அண்ணாமலை பேச்சு புத்தகம் இருந்தது. அதை எடுத்து பிரித்து பார்த்தார். நான் அதற்கு "அது அண்ணாவின் புத்தகம்" என சொன்னேன். "அப்படியா" என கேட்டார். நான் அவரிடம் "ஆமா வேலை செஞ்சது இரண்டு நிமிஷம் தான். அதுக்கு ஏன் இரண்டு மணி நேரம் கழிச்சு தவிக்க விட்டு வரனும். அதிலே என்ன உங்களுக்கு ஒரு சேடிஸ்ட் மனோபாவம். இதிலே வேற குழந்தைகள் உள்ள இருக்காங்களா, முதியவர், பெண்கள் இருக்காங்கலா என்றெல்லாம் வேற கேள்விகள்" என நேரிடையாக கேட்டேன்.

அவர் என்னை கொஞ்சம் நிமிர்ந்து பார்த்து " எனக்கு சேடிஸ மனோபாவம் எதும் இல்லை. நீங்க போன் செஞ்ச பத்து நிமிஷம் முன்ன தான் என் அப்பா இறந்து போனாரு. அதான் தகவல் சொல்லிகிட்டு இருந்தேன் எல்லாருக்கும். ஆசிரியர் வீரமணி அய்யா "நான் நாளை கண்டிப்பா வர்ரேன்னு சொன்னாரு. அதனால ஃப்ரீசர் பாக்ஸ் வாங்கி வச்சிடலாம்னு நினைச்சு தான் அதுக்கு ரெண்டு மணி நேரம் ஆகுமேன்னு எட்டு மணிக்கு வர்ரதா சொன்னேன்" என அமைதியாக சொன்னார்.

நான் உண்மையாகவே அதிர்ந்து விட்டேன். அட என்ன மனுசன்யா இவருன்னு நினைச்சுகிட்டேன். பின்னர் நான் கேட்டேன் "சரி பின்ன ஏன் உள்ளே குழந்தைகள் மாட்டி இருக்காங்கலா, பெண்கள், முதியவர்ன்னு எல்லாம் கேட்டீங்க" என்றேன். அதுக்கு அவர் "அப்படி யாராவது மாட்டி இருந்தா நான் உடனே வந்திருப்பேன். அப்போ அங்கே இறந்து கிடப்பது என் அப்பா என்பதை விட நாளை அழுக போகும் ஒரு விஜிடபிள் அது என மனசிலே நினைச்சுகிட்டு இங்க வந்திருப்பேன். ச்அப்படி எதும் பிரச்சனை இல்லை என்கிற போது நீங்க ஒரு ரெண்டு மணி நேரம் காத்திருப்பதால் எந்த பிரச்சனையும் வந்துடாது என்றே நினைத்து ஃப்ரீசர் பாக்ஸ் வாங்க போயிட்டேன்"

நான் கொஞ்ச நேரம் எதும் பேசவில்லை. அவர் கிளம்பி போய்விட்டார். நான் அடுத்த நாளே அந்த பூட்டை கொண்டு போய் அதே கடையில் கொடுத்தேன். அதை கோத்ரெஜ் கம்பனிக்கு அனுப்பி விட்டு ஒரு மாதம் கழித்து "இது ரிப்பேர் செய்ய இயலாது, கேரண்டி பீரியட்ம் முடிஞ்சு போச்சு, மன்னிக்கவும்" என கடித்தத்துடன் திரும்பி வந்து விட்டது.

நான் அதை எடுத்து கொண்டு அமுதன் அண்ணன் வீட்டுக்கு போனேன். வாங்கி பார்த்தார்.அந்த கோத்ரெஜ் அனுப்பிய கடித்தத்தையும் பார்த்தார். அவருக்கு மனசு திருப்தி. நான் அவர் வீட்டை பார்த்தேன். அத்தனை ஒரு பொருளாதார நிலையில் மிகப்பெரிய நிலையிலும் அவர் இல்லை. வீடும் வாடகைக்கு தான் இருக்கார். ஆனால் வீடு நிறைய புத்தகங்கள். திராவிட, கம்யூனிச புத்தகங்கள். நான் பார்த்ததே கிட்ட தட்ட ஒரு ஆயிரம் புத்தகங்கள் இருக்கும். அவரின் அப்பா பற்றி கேட்டேன். திராவிட கழகத்தின் முக்கிய தூண் அவர். ஆசிரியர் வீரமணி ஆகியோர்களுக்கு இந்த குடும்பமே நல்ல பழக்கம் என தெரிந்து கொண்டேன். மயிலாடுதுறை நகராட்சியில் அவங்க அம்மா ரெட்டை தொகுதியா இருக்கும் போதே அந்த காலத்தில் 1950களில் கவுன்சிலர். பெண்கள் அரசியலுக்கு வரவேண்டும் என நினைத்து அவங்க அப்பா அப்போ அவங்க அம்மாவுக்கு தைரியமூட்டி அரசியலில் கொண்டு வந்தாராம். இப்போது போல அப்போது பெண்கள் தொகுதின்னு எல்லாம் இல்லாத காலம் அது என்பதையும் நாம் நினைத்து பார்க்க வேண்டும். அப்படிப்பட்ட அவருக்கே நான் அண்ணாவின் புத்தகம் பற்றி சொல்லியிருக்கேனே என நினைத்து வெட்கமாக இருந்தது. அவரிடம் அண்ணாவின் பேச்சுகள் என்ற தலைப்பில் ஒரு புத்தகமே பார்த்தேன். கிட்ட தட்ட அண்ணாவின் முக்கிய பேச்சுகள் அடங்கிய புத்தகம். நான் அந்த புத்தகம் எல்லாம் பிரித்து பார்த்து பிரம்மித்து கொண்டே இருக்கும் போது அவர் "தம்பி வேலை முடிஞ்சுது" என கொடுத்தார். வழக்கம் போல என்ன சார்ஜ் என கேட்டேன்.

"160 ரூபாய் தேவைப்படுது. அது தவிர இந்த கோத்ரெஜ் கம்பனி காரனுக்கு 'உன்னான செய்ய முடியாததை ஒரு தமிழன் பத்து நிமிஷத்தில் செஞ்சு முடிச்சுட்டான்' என ஒரு கடித்தமும் நீங்க போடனும் இதான் சார்ஜ்" என சொன்னார். நான் அவரிடம் புத்திசாலித்தனமாக கேட்பதாக நினைத்து கொண்டு "சரி உங்களுக்கு இப்போ ஆயிரம் ரூவாய் தேவைப்பட்டா இந்த வேலைக்கு என்னிடம் எத்தனை கேட்டிருப்பீங்க?" என மடக்கினேன்.
அவர் சொன்னார் "ஆயிரம் ரூபாய்"

எனக்கு பெரியார் படத்தின் ஒரு காட்சி தான் ஞாபகம் வந்தது. இந்த பெரியாரிஸ்டுகளிடம் கொஞ்சம் ஜாக்கிரதையாதான்பா பழகனும்:-)

January 7, 2012

இவ்விடம் மாட்டுக்கறி பிரியாணி கிடைக்கும்!!!


இன்று காலை வெளிவந்த நக்கீரனில் (எங்கே வெளிவந்தது, அதான் காலை ஆறு மணிக்கு எல்லாம் எல்லா ஊர் அதிமுகவினருக்கும் மேலிடத்தில் இருந்து போன் வந்து அவர்கள் கத்தை கத்தையாக பிடுங்கி எரித்து விட்டனரே) ஜெயா மாட்டுகறி சாப்பிடுவார் என்னும் விஷயம் பற்றி அவர்கள் எழுதப்போக இப்போது பிரச்சனை நக்கீரனை அடித்தது சரியா தவறா என்பது போய் மாட்டுக்கறி சாப்பிடுவது சரியா தவறா என்னும் "கொள்கை" பிரச்சனைக்கு தாவி விட்டு நக்கீரனை அடித்தது மறைந்து போய்விட்டது. சபாஷ்! நம்ம மக்கள் பலவீனமே அது தானே! சில சமயம் பிரச்சனை திசை திருப்பப்படும். சில சமயம் பிரச்சனைகள் தானாகவே ட்ராக் மாறி போய் வேகமெடுக்கும். இப்பவும் இப்படித்தான் நக்கீரனை அடித்தது அதிமுக அரசின் அராஜகம் என்பதை மக்கள் மறந்து போய் மாட்டுக்கறி பிரியாணிக்கு வந்து கெக்கேபிக்கேன்னு சிரிக்க ஆரம்பித்து விட்டது.

ஒரு பத்திரிக்கை தவறாக எழுதுகின்றது என நினைக்கும் பட்சத்தில் அதை கூண்டில் ஏற்றுங்கள். அதைவிடுத்து அராஜகம் கையில் எடுப்பது தவறு என பொதுவான குரல் எழும்பிய போது அப்படி குரல் எழுப்பியவன் நடுநிலைவாதியாக இருந்தாலும் கூட அவன் திமுககாரனாக சித்தரித்து "நீங்க மட்டும் தினகரனை தாக்கவில்லையா" என அரைவேக்காடு கும்பல் பிதற்ற ஆரம்பித்தது. தம்பி அப்துல்லா அதற்கு அழகாய் "நக்கீரன் அலுவலக தாக்குதலுக்கு கண்டனம் சொன்னா உடனே ஏன் நீங்க மட்டும் தினகரனைத் தாக்கலையோன்னு பதிலுக்கு கூவுறானுங்க. அடகூமுட்டைகளா, தினகரன் திமுக பத்திரிக்கை, தாக்கினவனும் திமுககாரன். ஆட்சியை விமர்சிச்சு செய்தி வந்ததுக்காகவும் தாக்கலை. அது உட்கட்சி பூசல்தொடர்புடையது. ஒரு வீட்டுக்குள்ள இருந்துகிட்டே கிர்மினல் பண்றானேன்னு அண்ணங்காரன் தம்பியை ரெண்டு அறை அறையிறதில்லையா அது மாதிரி விசயம் திமுககாரன் தினகரனை எரிச்சது. ஏன்டா நீ அடுத்த வீட்டுக்காரனை அடிச்சன்னு கேட்டா நீ ஏன்டா உன் வீட்டுக்குள்ளயே அடுச்சிகிறனு கேக்குறானுங்க அறிவாளிங்க!'' என அழகாய் பதில் சொல்லியும் கேட்பார் இல்லை.

சில நடுநிலைவாதிகள் என்னும் போர்வை போத்தியவர்கள் 'அவா செஞ்சதும் தப்பு, இவா செஞ்சதும் தப்பு" என அருமையான விளக்கம் கொடுத்து விட்டு கடையை கல்லா கட்டிவிட்டு கிளம்பிவிட்டனர். ஒரிஜினல் அக்மார்க் அதிமுகவினரோ "அம்மாவைப்போய் மாட்டுக்கறி சாப்பிடுவாங்கன்னு சொல்லும் அந்த அயோக்கியன் கோபாலை கொன்னு போடனும்" என திருவாய் மலர்ந்துள்ளனர். அதற்கு தம்பி அப்துல்லாவோ "ஜெயலலிதா மாட்டுக்கறி உண்பர் என்று எழுதியது பெரிய தவறாம். அதனால் தாக்குதல் நடத்துவது சரியாம். அதிலும் இன்னும் சிலர் எழுதிய ஆளைச் சரியாக கண்டுபிடித்து உதைக்க வேண்டும் என்று கூப்பாடு வேறு. ஆமாம் மாட்டுக்கறி உண்பது என்பது என்ன அவ்வளவு கேவலமா? மலத்தை உண்பதுதான் நான் அறிந்தவரையில் கேவலம். மற்ற எதுவும் அவரவர் சுயவிருப்பம். அதில் எந்தப் பெருமையும் இல்லை சிறுமையும் இல்லை. இந்த நாட்டின் கோடான கோடி தாழ்தப்பட்ட மக்களின் புலால் ஆசைக்கு ஒரே தீர்வாக இருப்பது இன்றும் மாட்டுக்கறி உணவுதான். நான் அறிந்தவரையில் செல்வி.ஜெயலலிதா அவர்கள் திரைப்படங்க்களில் நடித்த காலத்தில் எந்த ஒளிவுமறைவுமின்றி ஷூட்டிங்களில் புலால் உணவை உண்டவர். அதைக் கண்ணால் பார்த்த சாட்சிகள் இன்றும் ஆயிரம்பேர் உண்டு. அந்த அம்மாவே சும்மா இருக்க அல்லக்கை அடிவருடிகளின் ஆட்டம் ஓவர்'' என காட்டமாக பதில் சொல்லி இருக்கின்றார். நல்ல பதில் தான்.

அதிமுகவினர் மற்றும் நடுநிலைவாதிகள் போர்வை போத்திய சிலர் "அம்மா மாட்டுக்கறி சாப்பிட்டாங்கன்னு அவதூறு கிளப்பிய நக்கீரன் செயல் மன்னிக்க முடியாத குற்றம்" என வாதிட அதற்கு தோழர் ஜே பி பிரகாஷ் அருமையாக ஒரு "டங் புல்லிங்" கேள்வி கேட்கிறார். "மாட்டுக்கறி தின்னும் மாமி என்று எழுதிய நக்கீரனை தாக்கியது சரி என்றால், கருணாநிதி குடும்பத்தை பற்றியும் , கனிமொழி , ராசா போன்றவர்களை குறித்து
இல்லாததை பொல்லாததை , ஆபாசமாக, விரசமாக தொடர்ந்து எழுத்தும் பூணுல் பத்திரிகைகளுக்கு என்ன தண்டனை...." .... சரியாகத்தான் இருக்கு இதும். நல்ல கேள்வி தான். ஆனால் பதில் வந்தபாடில்லை.

இதற்கிடையே முன்னாள் அமைச்சர் அதிமுகவை சேர்ந்த பொன்னையன் ஒரு அதிரடி அறிக்கை வெளியிடுகின்றார். அது என்னான்னா "ஜெயலலிதா, அவரது வீட்டிலேயே கொள்கை ரீதியாக ஒருகாலத்திலும் இதை (Beef) அனுமதிப்பதே இல்லை'' அடடே அருமையான அறிக்கையாக இருக்கே, மாட்டுக்கறி சாப்பிடக்கூடாது என்பது அதிமுகவின் கொள்கையா அல்லது ஜெயா அம்மையாரின் வீட்டு கொள்கையா என புரியவில்லை. ஆனால் அதற்கு தோழர் ஜே பி பிரகாஷ் ஒரு சூடான பதில் கொடுக்கின்றார். அது என்னான்னா "இதுல என்ன கொள்கை சம்மந்தபட்டது ????

நேரு பிரதமராய் இருந்தபோது நாடு முழுவதும் பசுவதை தடை சட்டத்தை கொண்டுவர கோரி பார்பன சனாதனிகள் போராட்டம் நடத்தினர்...காமராஜர் இருந்த டெல்லி வீட்டையும் கொளுத்தினர்..அப்போது இந்த போராட்டத்தை எதிர்த்து தமிழகத்தில் இருந்து மட்டும்தான் எதிர்ப்பு குரல் எழுந்தது....அந்த குரல் திராவிட இயக்க பிதாமகன் தந்தை பெரியாருடையது....அப்போது அவர் அறிவித்த போராட்டம் தான் "மாட்டு கறி உண்ணும்" போராட்டம்....அனைத்து இடங்களிலும் மாட்டுக்கறி பிரியாணியும், மாட்டுக்கறி சூப்பும், பொது இடங்களில் சமைத்து வேண்டுவோர்க்கு அளிக்கப்பட்டது...அந்த போராட்டத்தின் எதிரொலியாக, வட நாட்டு சனாதனிகளின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது....அனால் பொன்னையன் போன்றோர் இப்போது "வேறு" ஒரு கொள்கையை பேசுகின்றனர்"" இப்படியாக தோழர் பிரகாஷ் போட்டு கிழிச்சு எடுக்கின்றார். பொன்னையன் வாயை மூடிகிட்டு பேசாம இருந்து தொலைச்சு இருக்கலாமோ?

இதன் நடுவே நக்கீரனை தாக்கிய விஷயத்தை அம்போன்னு விட்டு விட்டு பிரச்சனை முழுவதுமாக மாட்டுக்கறிக்கு வந்து விடுகின்றது. விந்தைமனிதன் ராஜாராமன் என்னும் தோழர் மாட்டுக்கறியின் ஜாதகம் எல்லாம் தூசி தட்டி கட்டம் எல்லாம் போட்டு சோழி உருட்டி விளையாடிவிட்டார். அது என்னான்னா \\ பிராமணர்கள் மாட்டுக்கறி உண்பது இழிவான செயல் என்ற கருத்துருவாக்கம் எப்போதிருந்து வந்தது தெரியுமா?வேதகாலத்தில் மாட்டுக்கறி உண்பது இயல்பாகவும், மதிக்கத் தக்க ஒன்றாகவுமே இருந்து வந்திருக்கின்றது. சமைக்க உகந்த மாடு எத்தனை பற்கள், எத்தனை சுழிகளோடு இருக்க வேண்டும்.. மாட்டை எப்படி அறுத்துப் பங்கு வைக்கவேண்டும், அக்னிதேவன் உள்ளிட்ட அதிதேவதைகளுக்கு எந்தப் பாகத்தில் இருந்து கறியெடுத்து அவிர்ப்பாகம் கொடுக்கப்படவேண்டும், அவிர்ப்பாகம் கொடுக்கும்போது எந்தெந்த மந்திரங்களையெல்லாம் உச்சாடனம் செய்யவேண்டும் என்றெல்லாம் மிகத்தெளிவாக எழுதிவைத்து, மாட்டுக்கறி உண்பதை சனாதனத்தினர் கொண்டாட்டமாகவே செய்திருக்கின்றனர். பின்னர் உயிர்க்கொல்லாமையை வலியுறுத்தி வளர்ந்த சமண, பௌத்த மதங்களின் போட்டியைச் சமாளித்துத் தாக்குப்பிடிக்கவே சனாதன இந்து மதமும் உயிர்க்கொல்லாமைத் தத்துவத்தினைக் கடைப்பிடிக்கத் துவங்கியது \\ சபாஷ்!

அப்போது தான் தோழர் வினி ஷர்பனா ஒரு புது கோணத்தில் இந்த பிரச்சனையை அனுகுகின்றார். அது என்னான்னா ஜெயா அசைவம் சாப்பிடுபவர் என நக்கீரன் சொல்லியிருந்தா கோவிச்சுகிட்டு இருக்க மாட்டார், ஆனா பொதுவாக விலை குறைவு என்னும் காரணத்தால் ஏழ்மை நிலையில் இருக்கும் தாழத்தப்பட்டவர்கள் சாப்பிடும் ஒரு உணவை தான் உண்டதாக சொல்லி தன்னை அவமானம் செய்ததாக ஜெயா நினைத்து இப்படி காண்டு ஆகி நக்கீரனை அடிச்சு துவைக்க சொல்லிட்டார்" என அதிரடியாய் போட்டு தாக்க...

ப்யூர் இந்துத்வாவாதிகள் "அது ஒரு தெய்வம் அதை கொல்லலாமா"என கேட்க "அப்படின்னா முருகன் தமிழ்கடவுள் கையில் இருக்கும் சேவல் கோழியை கொல்லலாமா? என மடக்க ஒரே அதகளம் இன்றைக்கு நம் இணையம் பக்கம் முழுக்க முழுக்க.

நிற்க..... ஒரு விஷயம் மட்டும் தெளிவு. அம்மையார் நக்கீரனை அடிச்சது என்பது போய் பிரச்சனை மாட்டுக்கறிக்கு வந்து நிற்கின்றது. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். அதிமுகவினரோ, ஆதிக்க சக்திகளோ பத்திரிக்கை தணிக்கை வேண்டும் என்ற குரல் மட்டும் எழுப்பவே இல்லை. ஏன்னா திமுக, ஸ்பெக்ர்டம், 2ஜி, கனிமொழி, ராசா என அவர்கள் இஷ்டத்துக்கு ஆட்டம் போட முடியாமல் போய்விடும் அபாயம் அவர்களுக்கு இதனால் ஏற்படுமே என்கிற பயம் தான். அப்படி அவர்கள் போட்ட ஆட்டத்தினால் தான் இன்று அதிமுக ஆட்சிகட்டிலில் பப்பரக்கான்னு படுத்து கிடக்கு. அதை இழக்க விரும்ப மாட்டார்கள் அவர்கள். அதே போல மாட்டுக்கறி சாப்பிடுவது தவறு என கோஷமிடும் இந்துத்வாக்கள் "மனித கறி" சாப்பிட்ட மோடிகளை மறந்தும் கூட இந்த விவாதத்துக்கு கொண்டு வரவில்லை. ஏன்னா மட்டுக்கறி மட்டும் கூடாது ஆனால், சிறுபான்மையினர் கறி என்பது அவர்கள் உயிர் வாழ தேவையான உணவு. அப்படித்தானே? என்ன நடக்குது இந்த நாட்டில்?

ஆனால் இந்த விவாதங்களில் எல்லோருமே ஒன்றை மட்டும் மறைக்க விரும்பவில்லை. அதிமுக தான் இந்த அராஜகத்தை நடத்தியது. அதும் தலைமை சொல்லித்தான் இது நடந்தது என்பதை எல்லோரும் ஒத்துகொள்கின்றனர். இதற்கு உண்மையான நடுநிலைவாதிகள் பதில் என்ன? நிலை என்ன? எப்போதும் போல வாய் மூடி மௌனகுருவாக இருக்க போகின்றார்களா? எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் ஓட்டு பட்டனை அழுத்தி பதில் சொல்ல போகின்றார்களா?



அறிஞர் அண்ணாவும் அசன்முகமது ஜின்னாவும்!

அது 1963ம் ஆண்டு. சென்னை நுங்கம்பாக்கத்தில் இந்தி எதிர்ப்பு சிறப்பு மாநாடு. நம் அண்ணா பேசுகின்றார். 'நான் 1938ல் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் சிறை சென்றவன்" என்கிற ரீதியில் பேச்சை ஆரம்பித்து "அரசியல் சட்டத்தின் 17 வது விதியை அதாவது மொழி பிரிவினையை எதிர்த்து அதை கொளுத்தும் போராட்டம். 1963ல் நவம்பர் 17 அன்று நான் கொளுத்த போகின்றேன்" என சொல்லிவிட்டார். ஆனால் நவம்பர் 16ம் தேதி அவர் காஞ்சியில் இருந்துன்சென்னை புறப்படும் முன்னர் கைது செய்யப்பட்டார். அவருக்கு ஆறு மாத சிறை தண்டனை சென்னை மத்திய சிறையில்.....

பல முறை அவர் சிறையில் இருந்தார். ஆனாலும் இந்த முறை அவரை வளர்த்த அவரால் "தொத்தா" என அழைக்கப்பட்ட அம்மையார் இறந்துவிட்டார். அண்ணா சிறையில் இருக்கும் போதே! ஆனால் அதை விட அதிகம் அவரை வாட்டிய செய்தி எது தெரியுமா தோழர்களே! உடன்பிறப்புகளே!

அப்போது "மெயில்" என்று ஒரு ஆங்கில தினசரி. அதை பற்றி அண்ணா அந்த ஆறு மாதகாலத்தில் எழுதுகின்றார்.. ... அப்படியே தருகின்றேன்! கேளுங்கள்.......படியுங்கள்...

\\ இன்று மெயில் என்று ஒரு பத்திரிக்கை பார்த்து ஒரு கணம் பதறிப்போனேன். இந்தி எதிர்ப்பு அறப்போரினை நான் வெளியே வந்ததும் நிறுத்திவிட எண்ணுவதாகவும், என்னை சிறையில் வந்து பார்த்த முக்கிய நண்பர்கள் சிலரிடம் நான் இதை சொல்லி அனுப்பியது போலவும் மெயிலில் செய்தி வெளியிட்டு இருக்கின்றனர். நான் நினைத்து கூட பார்க்காத ஒன்றினை இப்படி மெயில் துணிந்து வெளியிட்டு இருப்பது நான் பதறிப்போனேன். இவ்விதமான பத்திரிக்கை தாக்குதல்களிடமிருந்து நாம் தப்பி பிழைத்து இந்த அளவு வளர்ந்து இருக்கிறோம் என எண்ணிப்பார்க்கும் போது பெருமிதம் எழத்தான் செய்கின்றது!"

அதற்கு அவருடன் சிறை சென்ற அரக்கோணம் ராமசாமி " அண்ணா! இந்த பத்திரிக்கையில் வெளியாவதை எல்லாம் நம் தோழர்கள் நம்ப மாட்டார்கள். நீங்கள் தான் ஏற்கனவே சொல்லிவிட்டீங்களே, இந்திஎதிர்ப்பு அறப்போர் சம்மந்தமாக நம்நாடு, முரசொலி ஆகியவை தவிர எந்த செய்தி எதில் வந்தாலும் நம்ப வேண்டாம் என" ---- இப்படி சொல்கின்றார்.

அப்போது அன்று அண்ணா தன் நாட்குறிப்பில் எழுதுகின்றார்! \\ அவர் சொன்னது போலவே நமது தோழர்கள் பத்திரிக்கைகள் இட்டுகட்டு எழுதுவதை நம்ப மாட்டார்கள் என்ற உறுதி எனக்கு இருக்கின்றது என்றாலும்பத்திரிக்கைகள் இப்படிப்பட்ட செய்திகள் வெளிப்படுத்துவது ஜனநாயக முறையை குந்தகப்படுத்துகின்ரனறோ என்கிற அச்சம் வர செய்கின்றது. இனி நாட்டிலே ஒரே கட்சி, ஒரே ஆட்சி, என அறிவித்துவிட்டு போகலாமே!ஜனநாயகம், எதிர்கட்சி, பொதுத்தேர்தல், பேச்சுரிமை என்று உதட்டளவில் மட்டும் செயல்படுவதற்கு இது மேல் தானே" \\

ஆக நம் அண்ணா அன்று மனம் புண்பட்டார். இன்று குமுதம் என்னும் விஷ பத்திரிக்கை வெளியிட்ட செய்தி ....

\\ நெருங்கியே இருப்பவர்கள் திடீ ரென பிரிந்துவிடுவதும், முட்டி மோதிக்கொள்பவர்கள் ஒரேநாளில் இணைவதும், நிழல்கள் நிஜமாவதும், நிஜம் நிழலாகிப் போவதும் அரசியலில் அடிக்கடி காணக் கிடைக்கிற காட்சிகள்தான். இப்போது ஜெ.-சசி பிரிவுக்கு இணையாக தமிழக அரசியலில் மற்றொரு பிரிவுக் காட்சியும் தி.மு.க.வில் நிகழ்ந்துள்ளது. ஸ்டாலினுக்கும் அவரது நண்ப ரான அசன் முகமது ஜின்னாவுக்கும் இடையே நிகழ்ந்து வரும் மௌன மோதல்தான் அது.

கடந்த சட்டசபைத் தேர்தல் வரை தி.மு.க. வினரால் அரசல் புரசலாக அறியப்பட்டிருந்த ஜின்னா, தேர்தலின் போதுதான் பிரபலமடைந்தார். காரணம், அதுவரை ஸ்டாலின் போட்டியிட்டு வந்த ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதியில் ஜின்னாவே போட்டியிட்டார். இந்த அளவுக்கு நெருக்கமாக இருந்த அந்த நட்புதான் இப்போது பிளவாகியிருக்கிறது.

‘தி.மு.க.வில் வட்டச் செயலாளர் பதவிக்காக போராடியே வாழ்க்கையைக் கடந்துவிட்டவர்கள் பலர். ஆனால், திடீரென வந்த ஜின்னாவுக்கு மாநில அளவில் இளைஞரணி துணைச் செயலாளர் பதவி, எம்.எல்.ஏ. சீட் என ஸ்டாலின் முக்கியத்துவம் கொடுத்ததால்தான் அவருக்குப் பிடிக்காதவர்கள் இந்த விரிசலுக்கு வழிவகுத்திருக்கிறார்கள்..’ என்கிறது ஒரு தரப்பு. இன்னொரு தரப்போ, ‘ஸ்டாலினுடன் இருந்த நெருக்கத்தை ஜின்னா பயன்படுத்தி கட்சியிலும், ஸ்டாலின் குடும்பத்திலும்கூட பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தினார். இதனால்தான் தளபதி அவரை வெளியேற்றிவிட்டார்’ என்கிறது.\\

ஆக அன்று நம் அண்ணா! இன்று நம் ஜின்னா! ஊடகங்கள் அன்று அண்ணாவின் இந்தி எதிர்ப்பு போராட்டம் எதிர்த்து தோல்வி கண்டதை போல இன்றும் தோல்வி காணும்! இன்று காலை கூட நான் தோழர் ஜின்னாவிடம் பேசினேன். மிகுந்த ஆர்வமுடம் புதிய இரத்தம் காணப்போகும் திமுக இளைஞர் அணி பற்றி பேசினார். தளபதியுடன் அவர் நேற்று திருவள்ளூர் கூட்டம் கலந்து கொண்டதை அழகாய் பேசினார்! அது பற்றி நான் கட்டுரை எழுத போவதை சொன்னேன். " அதற்கான என் டிப்ஸ் என்ன வேண்டுமோ கேளுங்க" என சொன்னார்! இது தான் ஜின்னா! தளபதி உடல்நிலை பற்றி கேட்டேன்! அதற்கு அவர் அதை நாங்க இருக்கோம் பார்த்துப்போம். நீங்க எல்லாரும் கட்சி வேலை பாருங்க என சொன்னார்! இதான் ஜின்னா!

January 5, 2012

கலைஞரின் சொத்து மதிப்பு எத்தனை கோடி?



பொதுவா எங்க ஊர்ல இருக்கும் திமுகவினருக்கு கலைஞர் எங்க ஊர் பக்கம் வரும் நாள் எல்லாமே தீபாவளி போல, பொங்கல் போல... காலை முதலே "ரெஸ்ட்லெஸ்" ஆக இருப்பாங்க. சின்ன பசங்க தீபாவளியை எதிர்பார்த்து காத்து கிடந்து தீபாவளி அன்று காலை 11 மணிக்கு அந்த பசங்க கிட்டே பெரியவங்க வந்து "தீபாளி போய்டிச்சா" என கேட்கும் போது "ம் .. அது கும்மோணம் தாண்டி போச்சுது. இனி அடுத்தோர்ஷம் தான் வரும்" என சோகமாக சொல்வாங்களே அதே போல கலைஞர் எங்களை கடந்து போனதும் திரும்பி வீட்டுக்கு வரும் போது நடை தளர்ந்து வருவோம். ஆனாலும் அவரை பார்த்த அந்த "பூஸ்ட்" அடுத்த முறை அவர் வரும் வரை மனதில் இனிக்கும் அளவு அவர் நினைவுகள் மலர்ந்து கிடக்கும். இதான் எங்கள் தலைவர் கலைஞர்.

இந்த முறை அவர் வருவதோ பிய்ந்து போன பலரின் வாழ்வை வசந்தமாக்க. தானே புயல் தாக்கியவர்களை தாங்கிப்பிடிக்க. கடலூர் தாண்டி எங்கள் ஊர் நகர் பக்கம் அத்தனை ஒரு சேதம் இல்லை என்றாலும் விவசாய பயிர் சேதம் அதிகம். அதனால் டவுன் பக்கம் அத்தனை ஒரு தாக்கம் இல்லை நகர்புர மக்களிடம். ஆனாலும் தலைவரை காண வேண்டும் என்கிற ஆர்வம் மிக மிக அதிகமாக இருந்தது. நான் இன்று தலைவரை பார்த்த போது ஒரு மூன்று விஷயங்கள் என்னை மிகவும் யோசிக்க வைத்தது. அது என்ன மூன்று விஷயம்?

மயிலாடுதுறையில் கால்டெக்ஸ் பெட்ரோல் பங்க் இடத்தில், மணிக்கூண்டு அருகில் மற்றும் நகராட்சி வாசலில் ஆகிய மூன்று இடங்களில் தலைவர் மக்களை சந்திக்க இருக்கின்றார் என்பது தான் திட்டமிடல். ஆனால் கூட்டம் கூடியதோ மயிலாடுதுறை எல்லை ஆரம்பம் முதல் முடிவு வரை. நான் நின்ற இடம் நகராட்சி வாசலில். அங்கே தான் நகர செயலர் குண்டாமணி என்கிற செல்வராஜ் முதல் நகராட்சி சேர்பர்சன் திருமதி பவானி சீனிவாசன், வக்கீல் சீனிவாசன் உட்பட அனைத்து கவுன்சிலர்களும் இருந்தனர். தவிர என் வீட்டுக்கு அருகில் இருக்கும் இடம் அது என்பதால் நான் அங்கு நின்றேன். நான் அங்கே போகும் போது மாலை மணி நான்கு.

யாருக்கும் அவர் எப்போது வருவார் என சரியாக தெரியவில்லை. ஆனாலும் எல்லோரும் "அவர் சிதம்பரம் தாண்டி விட்டார், வைத்தீஸ்வரன்கோவில் வந்து விட்டார் இன்னும் ஒரு மணி நேரத்தில் இங்கே வந்துவிடுவார் என யூகமாக சொல்லிகொண்டே இருக்க நேரம் கடக்க கடக்க கூட்டம் அதிகமாகி கொண்டே இருந்தது. நான் சப்ஜெயில் பக்கத்தில் தாலுக்கா ஆபீஸ் வாசலில் நின்றேன். எனக்கு பின்னால் ஒரு வருவாய் ஊழியர் சங்க கொடிக்கம்பம். அதன் மேடையில் ஒரு பைத்தியம் அழுக்கான கிழிந்த உடை. பரட்டை தலை, கோர முகம். அந்த சின்ன கொடி மேடையின் மீது சுருண்டு கிடந்தது. கூட்டம் கூட கூட அதுக்கு அது பற்றி எல்லாம் கவலை இல்லை. எங்கோ வெறித்து பார்த்தது. பின்னர் கண் மூடி சுருண்டு கொண்டது. அதை விடுங்கள்.

என் பக்கத்தில் ரொம்ப டீசண்டாக ஒருவர். அவர் மீது யாரும் படாமல் ஜாக்கிரதையாக நின்று கொண்டு இருந்தார். கவுன்சிலர் அசோக் என்னருகே வந்து ஒரு பொட்டலம் சூடான கடலையுடன் வந்து எனக்கும் கொடுத்து பேசிக்கொண்டு இருந்தார். அப்போது நகர செயலர் குண்டாமணி எங்கள் அருகில். அவருக்கு போன் வரும் போதெல்லாம் எல்லோரும் "தலைவர் எது கிட்ட வர்ராரு" என கேட்டுக்கொண்டே இருக்க... குண்டாமணி ஒருவரை அழைத்து காதில் ஏதோ கிசுகிசுக்க ஒரு ஐந்து நிமிடத்தில் ஒரு நான்கு ஒளிவிளக்குகள், ஜெனரேட்டர் எல்லாம் வரவழைக்கப்பட்டு பொருத்தப்பட்டது. அப்போதே எனக்க்கு தெரிந்து விட்டது. தலைவர் வர மணி கண்டிப்பாக 7.30 ஆகும் என்று.

யாரோ ஒருவர் என்னிடம் அந்த் பைத்தியத்தை பார்த்து "ஹூம் இந்த இடம் இத்தனை பரபரப்பா இருக்கே, இதுக்கு அது பத்தி எதுனா கவலை இருக்கா? அதுக்கு கலைஞரை தெரிய போகுதா? மன்மோகன் சிங் வந்தா தெரிய போகுதா" என அங்கலாய்த்தார்.

ரங்கன், ஜெய்லாபாய் போன்ற பழம் ஆட்கள் எல்லாம் சலவை வேட்டி சட்டையுடன் வந்ததோடு கையில் அழுகிப்போன வாழைத்தார், நெற் செடிகள் கொண்டு வந்திருந்தனர். சீனியர் என்றால் சீனியர் தான். தலைவர் வரும் நோக்கம் புயலை பார்வையிட. அதனால் ஆஸ் பர் புரொசிஜர் அவங்க அதை எடுத்து வந்தனர். (திமுககாரனை அசைச்சுக்க முடியாதுப்பா.... சின்ன பசங்க எல்லாம் கத்துக்கனும்)

இதே போன தடவை திருவாரூர் பிரச்சாரம் வரும் போது தலைவர் அதே நகராட்சி பக்கம் வரும் போது ஒரு 200 போலீஸ். திமுக தொண்டர்களை கிட்டே நெருங்காமல் கயிறு கட்டி எல்லாம்.... ச்சே... ஆனால் இப்போ அதல்லாம் இல்லை. கடமைக்கு என 5 போலீஸ். ஆனால் சில தொண்டர்களை கொண்டு நகரசெயலரே களத்தில் இறங்கி கூட்டம் ஒழுங்கு செய்ய .... கிட்ட தட்ட தலைவர் வந்தார்.

எப்படி முதலில் ஒரு அம்பாசிட்டர் ஹார்ன் அடித்து கொண்டே வந்தது. அடுத்து இரண்டு கார். அதிலே எல்லாம்யார் யார் இருந்தாங்கன்னு தெரியலை. அடுத்த ஒரு பொலீரோ. அதிலே எங்க மாவட்டம் (அண்ணன் ஏ கே எஸ்) வந்தது. உடனே கூட்டம் அந்த காரை மறித்து நிற்க அவர் உள்ளே இருந்து கத்தி கொண்டே "ஓரமா போங்கப்பா" என குதிக்க... அடுத்த காரில் வந்தார் கலைஞர். காரின் நம்பர் TN 27 - BD 2728.
காரில் அவர் தகதகத்தாய சூரியனாய் மின்ன, அவருக்கு பக்கத்து சீட்டில் அண்ணன் துரைமுருகன் , இவர்களுக்கு பின் சீட்டில் அண்ணன் பொன்முடி, நடுவே அண்ணன் எம் ஆர் கே பன்னீர் செல்வம், அடுத்து அண்ணன் எ. வ வேலு. அண்ணன் மர் நால்வரும் ரோஜாப்பூவாய் கசங்கி இருக்க என் தலைவனோ சுட்டெரிக்கும் சூரியனாய், அன்பொழுகும் தென்றலாய், அமைதியான ஆறாய், சீறும் அருவியாய், ஆர்பரிக்கும் கடலாய், புன்னகை முகமாய், இன்று பிறந்த குழந்தையாய், சிரிக்கும் ரோஜாவாய், வாசனையான மல்லிகையாய், அன்பு அம்மாவாய், கண்டிப்பான தகப்பனாய் .... எல்லாமுமாய் கலந்த ஒரு கலவையாய் கை அசைத்தார். யாரோ ஒரு பையன் கல்லூரி பையன் என் பக்கம் இருந்து அண்ணன் துரைமுருகனை பார்த்து "அண்ணே ஹிண்டுல கலக்கிட்டீங்க" என சொல்ல அவர் முகத்தில் அந்த களைப்பிலும் ஒரு சுகம் தெரிந்தது.

தலைவர் கார் நின்ற பின் என் அருகே நின்றாரே அந்த டீசண்ட் ஆசாமி வெறி கொண்டவர் மாதிரி "அன்னை அஞ்சுகம் பெற்ற என் தங்கம் வாழ்க, என் தலைவர் கலைஞர் வாழ்க" என கோஷம் போட அதுவரை அவர் சீவி சிங்காரித்து வைத்த தலை முடி எல்லாம் கலைந்து சட்டை பட்டன்கள் பிய்ந்து போனது. கொஞ்ச நேரம் முன்னர் யாரும் தன் மீது படக்கூடாமல் ஜாக்கிரதையாக இருந்த ஆசாமியா இவர் என நினைத்து கொண்டேன்.

தலைவர் காரின் கண்ணாடி இறக்கி சால்வைகள் வாங்கி கொண்டார். அப்போது ஒரு திமுக உடன்பிறப்பு தலைவரின் காரை தொட வர இசட் பிரிவு வீரர் அவரை தள்ளி விட அந்த தொண்டர் தன் சட்டையை கழட்டி அவரிடம் காண்பித்து "சுடு சுடு என் தலைவர் காரை நான் தொடுவதை நீ தடுத்து மீறி நீ சுட்டா சுடு" என சட்டை பிரித்து காண்பிக்க அந்த வீரருக்கு நம் உடன்பிறப்பு சொல்லும் மொழி புரியாவிட்டாலும் உணர்ச்சி புரிந்தது.

தலைவர் வாழ்க என்ற கோஷம் வானை பிளக்க தலைவரின் கார் மெல்ல எங்களை கடந்து போனது. நான் அந்த பைத்தியம் இருந்த கொடிக்கம்பம் கீழே என் வண்டியை நிப்பாட்டி இருந்தேன். அதை எடுக்க போன போது அந்த பைத்தியம் நம் தலைவர் கார் போகும் திசை நோக்கி கும்பிட்டு கொண்டு இருந்தது. நான் ஒரு கனம் அதிர்ந்தேன். என்னால் இப்போதும் யோசித்து யோசித்து பார்க்கிறேன். அதுக்கு எதும் தெரியாது. ஆனாலும் என்னவோ நம் தலைவர் ஒரு ரிஷி போல, ஒரு சித்தர் போல, ஒரு யோகி போல தெரிந்து இருப்பாரோ என்னவோ என நினைத்து கொண்டேன்.

நான் ஒரு மூன்று விஷயங்கள் என் மனதில் ஓடியது என சொன்னேனே. அந்த பைத்தியம் முதல் விஷயம். அடுத்து..... இதே அண்ணன் துரைமுருகன், அண்ணன் எம் ஆர் கே, அண்ணன் வேலு, அண்ணன் பொன்முடி... இவர்கள் கொடுத்து வைத்தவ்ர்கள்.... இதே போலத்தானே பரிதி இளம்வழுதியையும் வைத்து இருந்தார் தலைவர். அதை கெடுத்து கொண்டாரே பரிதி:-( இனி பரிதி நினைத்தாலும் அந்த உயரத்தை தொட இயலுமா? ஏன் மனிதர்கள் புத்தி இப்படி போகின்றது? இது இரண்டாவது விஷயம்.

மூன்றாவது விஷயம்.... கலைஞரின் சொத்து பட்டியல் என கொஞ்ச நாள் முன்னர் ஒரு மெயில் எல்லோருக்கும் பரப்பப்பட்டதே? அதிலே கோபாலபுரம் வீடு மதிப்பு 5 கோடின்னு இருந்துச்சு. அடப்பாவிகளா! கலைஞரின் காரை தொடவே நம் தொண்டன் தன் மார்பை பிளந்துகொள் என காட்டுகின்றான். அந்த வீடு கலைஞர் மூச்சு காற்றால் நிரம்பிய வீடு. அதை எந்த அம்பானியாவது ஆயிரம் கோடி கொடுத்து வாங்கி டிக்கெட் போட்டு தினமும் பார்க்க அனுமத்தித்தால் திமுக தொண்டன் அத்தனை பேரும் பிளாக்ல வாங்கி போய் அந்த இடத்தை தரிசித்து விட்டு வருவாங்களே. அம்பானி போட்ட காசை ஒரு வருஷத்தில் எடுத்துடுவானே. அவருடைய வீட்டுக்கு மதிப்பு 5 கோடின்னு போட்ட படுபாவிங்களே கலைஞரின் சொத்து மதிப்பு போட நீங்கள் யாரடா? போடத்தான் முடியுமா உங்களால்??????

வாழ்க கலைஞர்! வெல்க திமுக!

January 4, 2012

அடுத்தாத்து அம்புஜத்தை பார்தேளா?

தமிழகத்தில் "தானே" புயல் கடலூர் தலையெழுத்தை புரட்டி மாற்றி எழுதி 5 நாட்கள் ஆகின்றது. அங்கே மின்சாரம் இல்லை,குடிதண்ணீர் இல்லை, டி வி இல்லை, செய்திகள் இல்லை, செல்போன் இல்லை, தினசரி செய்திதாள் கிடையாது, அழும் குழந்தைக்கு பால் இல்லை என்பது மட்டுமல்ல , புயலால் செத்தவனுக்கு அடுத்த நாள் ஊத்தக்கூட பால் இல்லை, ரோட்டில் நடந்து போக இயலாது. மரங்கள் தற்கொலை செய்து கொண்டன. சுவற் உண்டு கூரை இல்லை, கூரை மட்டும் உண்டு சுவர் இல்லை என சமதர்மம் நிலவும் தெருக்கள். அரசாங்கம் என்பது எங்கே இருக்கு என யாருக்கும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரியவில்லை.


வழக்கம் போல மத்திய அரசு நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகின்றது. எதிர்கட்சிகள் சத்தம் ஆளும் கட்சி அம்மையாரின் நித்திரையை எழுப்பவில்லை. முதல்வருக்கு அவர் தோழி போட்ட தடுப்புச்சுவற்றால் உளவுத்துறை தரும் தகவல் போவதில்லை. போயிருந்தா மட்டும் அம்மையார் மட்டைக்கு ரெண்டு கீத்தா பிளந்து போட்டிருப்பாங்க என சப்பைகட்டு கட்டின பத்திரிக்கைகள் ஒன்று சேர்ந்து ஒரு வழியாய் அந்த தோழிக்கு சமாதி கட்டி அனுப்பி விட்ட பின்னர் தான் தானே புயல் போட்டு தாக்கியது.


ஆச்சு ஐந்து நாள். தோழி இருந்த போதாவது இரண்டொரு நாட்களில் அம்மையார் "மூட்" அறிந்து காதில் போட்டிருப்பார்கள். ஆனால் இப்போது இருக்கும் ஆலோசகர்களுக்கு கடலூர் பற்றி எந்த கவலையும் இல்லை போலிருக்கு. எதும் சொல்லவில்லை.


நேற்று கலைஞர் விட்ட ஒரு அறிக்கை.... அம்மையாருக்கான சங்கு. ஆம் ஓங்கி ஒலித்தது அந்த சங்கு. அறிவாலயத்தில் இருந்து போயஸ் தோட்டம் வரை அந்த சத்தம் கேட்டது. அம்மையார் செவியை கிழித்தது. .. தலைவர் கலைஞர் விட்ட அந்த அறிக்கை " நானே கடலூருக்கு போகின்றேன், பாண்டி மக்களை பார்க்கிறேன், நாகை, திருவாரூர் மக்களை கண்டு வருகிறேன் " . அந்த அஸ்திரம் அம்மையாரின் காதை கிழித்தது. " சரி அப்படின்னா, நானும் வானத்தில் இருந்து குனிந்து பார்க்கிறேன்" என திருவாய் மலர ஏதோ கடலூருக்கு வெளிச்சம் வரும் வழி கொஞ்சம் தெரிந்தது. கடலூரை புயல் புரட்டிப்போட்டால் என்ன? எனக்கு எது பற்றியும் கவலை இல்லை என இருந்த அம்மையார், தலைவர் கலைஞர் "நான் போகிறேன்" என சொன்னதும் " அப்படின்னா நானும் போகிறேன்" என சொல்வது,என்னவோ அடுத்த வீட்டுக்காரி பட்டுப்புடவை வாங்கினால் தானும் வாங்க வேண்டும் என நினைப்பது போல இருக்கின்றது. இந்த அம்மையார் ஆட்சி நடத்துகின்றாரா அல்லது அடுக்களை பெண்ணா என சந்தேகம் வருகின்றது.இது தான் ஆலோசனை சொல்லும் "துக்ளக்" லட்சனம் போலிருக்கு. தூரத்தில் இருந்து விமர்சிக்க மட்டுமே சிலருக்கு கைகூடும். ஆனால் ஆட்சி நடத்த தேவையான ஆலோசனை சொல்ல அந்த துக்ளக்கிற்கு மண்டையில் சரக்கு பத்தாது என்பது தெளிந்து போனது. அடுத்தவன் குடியை கெடுக்க மட்டும் ஆலோசனை சொல்பவர்கள் மக்கள் நலனில் எங்கே கவனம் செலுத்த போகின்றனர்?


ஆக ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தமிழகம் அதன் நலம் என நினைப்பது கலைஞர் மட்டுமே. ஆனாலும் நம் தமிழ் இணையம் மட்டும் கலைஞரை வசை பாடுவதை நிறுத்தப்போவதில்லை. இந்த வார தமிழ்மண நட்சத்திரம் திரு. அமுதவன் எழுதியது போல கலைஞரை திட்டி தீர்த்து ஜெயாவை ஆட்சியில் உட்கார வைக்க பெரும் முயற்சி எடுத்த வலையுலகினர் இன்று கைபிசைந்து நிற்கின்றனர்.


எல்லாம் தமிழகத்தின் தலையெழுத்து!

January 2, 2012

அடடே இந்த பதிவை இப்படி கூட எழுதலாம்! ஈரோடு பதிவர் சங்கமம் - சில சங்கடங்கள்....

!

நான் ஈரோடு சங்கமம் சென்று வந்தேன். எனக்கு அங்கே பிடித்தது மிக்க மகிழ்வான உணவு. நான் ஈரோடு வந்தது முதல் விடைபெறும் வரை அருமையான உபசரிப்பு.

இப்படியாக கூட எழுதலாம். ஆனால் நான் போன வருடம் கடைசியில் எழுதிய பதிவு... ம் ம் ம் கொஞ்சம் காரம் தான் போலிருக்கு. சரி வேற மாதிரி கூட எழுத முயற்சிக்கிறேனே!

ஈரோடு பதிவர் சங்கமம்! சில சங்கடங்கள் பார்ட் 2

நாங்கள் போய் வந்தோம். மிகவும் அருமையான ஒரு நிகழ்வு. நானும் கூட அது பற்றி ஒரு பதிவு எழுதினேன். நீண்ட நாட்கள் பின்னர் நான் பதிவு எழுதுவதாலோ அல்லது இந்த சங்கமம் பற்றிய பல நிகழ்வுகள் எழுதியதாலோ நிறைய பின்னூட்டம் வந்தது. மிக்க மனம் மகிழ்வு. "இது போல எழுதி தொலைச்சால் என்ன? " என்று மும்பை அனுஜன்யா குறைபட்டுக்கொள்ளும் அளவு கூட இருந்து தொலைச்சுது.

அதன் பிறகு என்னிடம் நான் அங்கு வந்தமைக்காக சில ஈரோடு குழும பதிவர்கள் நன்றி சொல்லி பேசிய போது கிட்டதட்ட கொல்லிமலை செந்தில்குமார் பதிவு வந்திருந்தது. அதில் நான் படித்த போது கூட எனக்கு எதும் "ரைட்டா" தெரியவில்லை எனும் போதிலும் "தப்பா"வும் எதும் தெரியலை. ஏன்னா நான் பதிவுலகில் மிகவும் கருத்து வேறுபாடு கொண்ட ஜோதிடர் ஆர் கே சதீஷ்குமார் அது தவிர வக்கீல் நாண்டு நொரண்டு ஆகியோர் வரவில்லை என தெரிந்த போது கூட நான் " அட ஒரு வீட்டு கல்யாணம்னா சில சித்தப்பா பெரியப்பா 'எனக்கு நேரில் வந்து சொல்லலை"ன்னு கோவிப்பாங்களே அது போல இருக்கும்" என கூட கருத்து சொன்னேன் தொலைபேசியில்.

பின்னர் அங்கே விருது வாங்கின உண்மை தமிழன் பதிவை படிக்கும் போது எங்கோ என் மனசில் ஓடிய ஒரு நெருடல் என்னை இடிக்க ஆரம்பித்தது. உண்மைதமிழன் சரவணன் " நீ ஏன் வரவில்லை?" என சஞ்சய் கிட்டே கேட்க " எனக்கு ஏன் தரவில்லை" என்ற சஞ்சய் கேள்வி மிக்க சரி தான் என எனக்கு பட்டது. ஆமாம் அப்போது தான் நான் எனக்கே கேட்டுக்கொண்டேன். " எனக்கு ஏன் தரவில்லை?"

தமிழ்மணம் விருது கொடுக்குறாங்கன்னா அது ஓட்டு போடுதல், பின்ன மீண்டும் ஓட்டு போடுதல், பின்ன பதிவர்கள் சிலரை வச்சு நடுவர்... அதன் பின்னே அபிஅப்பாவை நிராகரித்தல் என இந்த 3 வருஷமா போய்கிட்டே இருக்கும் போது... இங்கயுமா அந்த மாதிரி என்னும் எரிச்சல்...

மீண்டும் மீண்டும் நான் பேசிய போதெல்லாம் இது ஒரு குழு எடுத்த முடிவல்ல. ஒரு தனி நபர் எடுத்த ஒரு முடிவு என்றும் புரிந்தது. இதே இதற்கு முன்னர் எழுதிய பதிவில் பரிசல் பெயரை கூட தவறாக குறிப்பிட்டு விட்டேன். மன்னிக்கவும். அதற்கும் பரிசலுக்கும் சம்மந்தம் இல்லை. அது வெண்பூ பின்னூட்டம் பார்த்த பின்னர் தான் தெரிந்தது.

நான் நான்கு நாட்கள் முன்னர் இந்த பதிவு போட்ட பின்னர் கதிர் கிட்டே சொல்லிட்டு அவர் இட்ட பின்னூட்டம் இட்டு விட்டு தான் வெளியூர் போனேன். இன்று மதியம் வரும் போது பார்த்தேன். எல்லா கூத்துகளும். நான் பதிவு போட்டவுடன் அத்திவெட்டி ஜோதிபாரதி எப்போதும் போல வம்புக்காக அலைந்து கொண்டிருந்தார்:-)) ( சிரிப்பான் போட்டிருக்கேன் அவெஜோபா)

அதனால் அவருக்கு அந்த லிங் கொடுத்து விட்டு நகர்ந்தேன். அதே போல கதிர்க்கு கூட "இதை தமிழ்மணத்திலே சேர்க்க முடியலை சேர்க்க முடியுமா?" என கேட்ட போது அவர் கோவமாக சொன்ன பதில் எனக்கு சிரிப்பை தான் கொடுத்தது. ஏன்னா நான் அப்படித்தான்.

நான் மீண்டும் சொல்கிறேன். ஈரோடு சங்கமம் முதல் வருடம் அங்கே போய் வந்தவர்களால் பாராட்டப்பட்டது. எப்படி? "அங்கே உணவு நன்றாக இருந்தது" என. இரண்டாவது வருடம் "பரிசல் போன்றவர்கள் அருமையாக நிகழ்சி நடத்தினர், அத்தோடு உணவும் அருமை" ஆனால் மூன்றாவது வருடம்... விருது 15 பேருக்கு சிறந்த வலையுலக ஜாம்பவான்களுக்கு கொடுக்க போகின்றோம் என அறிவிக்கப்படவில்லை. கலந்துரையாடல் என சொன்னாலும் அது பிரதானப்படுத்தப்படவில்லை. உணவு எப்போதும் போல பிரதானப்படுத்தப்பட்டது. அப்படிபட்ட சூழலில் வருபவன் அதுக்கு தகுந்த "பிரிப்பரேஷன்"ல தான் வந்து தொலைவான் என்பது எல்லாருக்கும் பிரிந்ததே. இதை நீங்க பிரமாதப்படுத்த எதும் இல்லை.

ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். இங்கே இணையத்தில் இருப்பவன் எவனுமே அன்னாடம்காய்ச்சி இல்லை. அவன் மற்றவர்களை தொடர்புகொள்ளவே கூட மாதம் 500 முதல் 1000 வரை செலவு செய்யும் ஆள் தான்.(நெட் செலவை சொல்கிறேன்) அவனுக்கு கறி சோறு ஒரு பொருட்டு இல்லை. இல்லவே இல்லை. அவனவன் வந்த தூரத்தை கணக்கிட்டு பாருங்கள். அவன் போக்குவரத்துக்கு செய்த செலவிலே இதை விட அருமையாக அதே கறி சோறு சாப்பிட முடியும். ஆனால் அங்க வந்த ஒரே காரணம்.. அங்கே கிடைக்கும் அன்பு, மரியாதை, அரவணைப்பு, பதிவர்களை ஒரு சேர பார்க்கும் பாக்கியம்.... இங்கே இவனுக்கு என்ன தேவை? ஒரு கலந்துரையாடல். அவன் என்ன கருத்து எழுதினாலும் அவன் ஒரு படைப்பாளி என்னும் அங்கீகாரம் கொடுத்த தன்மை. ஆனால்.... 3ம் வருட சங்கமத்தில் அது மிஸ்ஸிங்.......

எனக்கு தனிப்பட்ட முறையில் ஆர் கே சதீஷ்குமார் பிடிக்காது. ஆனால் அவருடைய பதிவுகள் படிக்கும். என்னை எரிச்சல் அடைய செய்யும் அளவு ஒரு படைப்பாளி படைக்கும் அந்த எழுத்துக்கு நான் அடிமை. கிட்ட தட்ட நான் அந்த விஷயத்தில் ஒரு மாசோகிஸ்ட் போல. அதை தேடி தேடி படிப்பேன். எரிச்சல் அடைவேன். அங்கேதான் அந்த எழுத்தாளனின் திறமை இருக்கு. அந்த எழுத்தாளன் அதே ஊரை சேர்ந்தவரை கூப்பிடலை என நினைக்கும் போது.... என்னவா இருக்கும் அதன் உள்ளே இருக்கும் அரசியல் என நினைத்து பார்க்க தோன்றியது. தட்ஸ் ஆல்....

அதே தருமி சார், நான் உமாசங்கர் என்னும் ஐ ஏ எஸ் ஆபீசர் பற்றி ஒரு அரசாங்கம் எடுத்த ஒரு அஃபீசியல் முடிவு பற்றி பொங்கி எழுந்த போது நான் மட்டும் சொன்னேன்.... "சார் இது ஒரு அரசாங்கம் எடுக்கும் ஒரு சாதாரண முடிவு. இதுகெல்லாம் உணர்சி வசப்பட்டு முடிவெடுக்க கூடாது"ன்னு. அவர் சொன்ன வார்த்தைக்காக ஒரு 40 பதிவர்கள் ஒரே நேரத்தில் அரசாங்கத்துக்கு எதிராக பதிவிட நான் மட்டுமே அதற்கு எதிராக பதிவிட்டவன். அதன் காரணமாக முதன் முதலாக 40 மைனஸ் ஓட்டுகள் கூட பெற்றவன்.

இன்றைக்கு நானே என் முந்தைய பதிவில் தருமி சாருக்கு விருது கொடுக்கலாம் என சொன்னேன். ஏன்? அவருடைய திறமை! ஒரு சேர 40 பதிவர்களை திரட்டி அரசாங்கத்தை எதிர்க்கும் திறமை யாருக்கு வரும்? அதனால் அவருக்கு விருது கொடுக்க வேண்டும் என நினைத்தேன். இது தவறா? அதே நேரம் ஒரு பதிவு போட்டு அந்த 40 பேரையும் நான் எதிர்த்தேன். தகுந்த காரணங்கள் கொண்டு. அதனால் எனக்கு விருது கொடுத்து இருக்க வேண்டும். நான் கேட்பதில் என்ன தவறு? இதோ அந்த நான் போட்ட பதிவின் லிங் http://www.abiappa.blogspot.com/2010/08/ias.html

இது காமடிபீஸ் மொக்கைன்னா இப்படிப்பட்ட காமடிபீஸ் மொக்கை பதிவு போட நான் எப்போதும் தயார். இதோ... சென்ஷி... என் மீது எப்போதும் விழுந்து பிறாண்டும்.. (அதே கதிர் வார்த்தைகள்.... சென்ஷி... இதே போல ஒரு காமடிபீஸ் மொக்கை இது வரை போட்டதுண்டா? சொன்னால் நான் மொட்டை போட்டு கிட்டு வீதியூர்வளம் வரத்தயார். இல்லை எனில் நான் இது வரை போட்ட 350 பதிவிலே ஒரு 100 பதிவாவது சென்ஷி பின்னூட்டம் போட்ட பதிவை எடுத்து இங்க லிங் கொடுக்கவா? நான் மரண மொக்கை போட்டா அதுக்கு எதுக்கு பாராட்டி பாராட்டி பின்னூட்டம் போடனும்.

இதே 2007ல் இளைய நக்கீரன் என்னும் பெரியரில் ஒரு பதிவர் என்னை திட்டி ஒரு பதிவு போடும் போது திட்டின்னா பயங்கரமா இல்லை ரொம்ப சாதாரணமா " அபிஅப்பா போன்ற பதிவர்கள் எடுக்கும் வாந்திகள் இணையத்தை நாறடிக்குது" என சொன்ன ஒரே வார்த்தைக்காக இதே சென்ஷி பொங்கி பொங்கி அவரை திட்டி எழுதிய பதிவும் எல்லோருக்கும் தெரியும். அந்த லிங் வேண்டுமா? அதே சென்ஷி தான் இதே சென்ஷியா? ஆக அவரது மனோநிலை மாறிவிட்டது அல்லது இரட்டை நிலை என்பதற்கெல்லாம் நான் பதில் சொல்லதான் ஆகவேண்டுமா?

ஆக சென்ஷி என்னை தனிமனித தாக்குதல் செய்வதால் தான் பெரிய ஆளாக நினைக்கும் பட்சத்தில் நான் அதற்கு மனப்பூர்வ அனுமதி அளிக்கின்றேன். தவறே இல்லை. எப்படியாவது "கவனிக்கப்படவேண்டும்" என்னும் உன் ஆர்வம் எனக்கு புரிகின்றது என்றே பொருள் கொள்கின்றேன்.

ஆக "இணையம் முழுக்க என எடுத்து கொண்டால் அந்த 20 பேரில் நீங்க கொடுத்த சிலர் தகுதி குறைவானவர்கள். தவிர என்னை தேர்ந்தெடுக்காதது தப்பு. அல்லது நீங்க அந்த 15 பேரை முன்னமே அறிவிக்காதது தவறு! இதான் என் முந்தைய பதிவின் சாரம்சம்.

இப்ப வாங்க! நான் இதற்கு முன்ன போட்ட பதிவுக்கு கூகிள் பஸ்ல லிங் கொடுத்தவங்க... அதுக்கு சென்ஷி போன்றவர்கள் கொடுத்த பதில்கள் அதுக்கு லைக் போட்டவங்க... அதுக்கு சரியான பதிலடி கொடுத்த மணிஜி போன்றவர்கள் எல்லாரும் வாங்க.... நான் இனி 3 நாட்கள் ஆன்லைன்ல இருப்பேன்... தொடர்ந்து 24 மணி நேரமும் இருப்பேன்....
குறிப்பு: நான் இன்னும் அந்த + எல்லாம் படிக்கலை. கேள்விப்பட்டது மாத்திரமே!