அப்போது சின்ன கடைத்தெருவில் அப்படி ஒரு சூப்பர் ஹோட்டல் இருந்தது இப்ப இருக்கும் பசங்க யாருக்கும் தெரியாது. சின்ன கடைத்தெரு வண்டிப்பேட்டையில் வாதா மரம் மிக பெரியதாக இருக்கும். அந்த பகுதி முழுமைக்கும் நல்ல நிழல் தரும். அந்த நிழலின் அடியிலே தான் ஒத்தை மாட்டு வண்டி பத்தும், ஒரு குதிரை வண்டியும் இருக்கும். அந்த மரத்து அடியிலே ஒரு பெட்டி கடை. எங்க தெரு பசங்க ஸ்கூல் போகும் போதும் வரும் போதும் வாதா மரத்து காயை எல்லாம் எடுத்து பையில் போட்டு கொள்ளாமல் போனதே கிடையாது. எடுத்து வந்த காயை அம்மிகல்லில் வைத்து மிக சின்ன ஒரு குழவியை வைத்து அதை உடைத்து அந்த பருப்பை எடுத்து திண்பதிலே ஒரு வித ஆசை.
அந்த வாதம் மரத்துக்கு பின் பக்கம் உயரமான படிக்கட்டுகளுடன் இருப்பதுதான் "சுந்தரம் பிள்ளை சைவ ஓட்டல்". நாங்க வாதம்காய் பொறுக்கிகிட்டு இருக்கும் போதே அந்த ஹோட்டலின் ரவாதோசை வாசனை மூக்கை துளைக்கும்.
நம்ம ராதாவுக்கு திடீர்னு அப்படி ஒரு ஆசை வந்திருக்க கூடாது. பாருங்க மக்கா என் சின்ன வயசு அயோக்கியதனம் அத்தனைக்கும் அவந்தான் காரணம் என்பது உங்களுக்கே நல்ல தெரியும்.
"டேய் நாம இப்போ 6ம் கிளாஸ் வந்தாச்சு. பெரிய ஆளா ஆயாச்சு. நாம எப்ப ஹோட்டல்க்கு போய் தனியா சாப்பிட்டு பழக கூடாது, அப்பதான் நம்மை கண்டா தெருவிலே ஒரு பயம் வரும், நீ என்னா சொல்ற"
"நான் என்ன சொல்றது. அதான் முடிவு பண்ணிட்டியே, வா இன்னிக்கு போய் ரவா தோசையை நொங்கு எடுத்துடலாம்"
ஆனா என்னையும், அவனையும் தலைகீழா கட்டி தொங்கவிட்டா கூட பையில இருந்து 5 பைசா கூட கீழே கொட்டாது. அப்படி ஒரு சுத்தம் நாங்க.
உள்ளே போன பின்னாடி அந்த டேபிள் (நல்ல கருப்பு கலர் கடப்பாகல்) நாங்க நின்று கொண்டு சாப்பிட்டாதான் சரியா வரும் போல இருந்துச்சு. ஆனாலும் ஒரு கெத்தா புஸ்தக மூட்டையை பெஞ்சில் போட்டு அதன் மேல குந்திகிட்டோம்.
சுந்தரம் பிள்ளை கருப்பா திறந்த உடம்போட குண்டாக உட்காந்து இருந்தார்.அவருக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள் எல்லாருமே தமிழ் பண்டிட்க்கு தருமபுரம் மடத்து காலேஜ்ல படிச்சிகிட்டு இருந்தாங்க. சுவற்றில் எல்லாம் புத்தர், பெரியார், மாசேதுங், அப்படீன்னு படங்கள். அப்போ மாசேதுங் யாருன்னு எங்களுக்கு தெரியலை. ஆனா அவர் சுந்தரம்பிள்ளையின் அப்பா பெரிய பிள்ளைனு ராதா சொன்னதை கூட அப்பாவியாய் நம்பினேன்ன்னா பார்த்துகுங்க. அவரின் மகன்கள் காலேஜ்ல படிச்சாகூட அவங்க தான் சப்ளை பண்னுவாங்க. அவரின் மனைவியும், மகளும் தான் சமையல் எல்லாம். அன்றைக்கு பார்த்து யாரும் சப்ளை செய்ய வரலை.
சரி கல்லாவிலே இருக்கும் சுந்தரம்பிள்ளையை எப்படி கூப்பிடுவது என யோசித்து "இந்தாங்க இந்தாங்க"ன்னு ரெண்டு பேரும் கோரஸ் பாட அவர் எழுந்து வந்து என்னடா பசங்களான்னு கேட்க "நல்ல பதமா ரெண்டு ரவா, ஆனா கெட்டி சட்னியா இருக்கட்டும், சாம்பார் வாளிய இங்கயே வச்சிடுங்க நாங்க ஊத்திக்கிறோம்"
ரொம்ப ஹோட்டல் பத்தி தெரிஞ்சவங்க மாதிரி ராதா ஏதேதோ சொல்ல அவரும் முதல்ல ஒரு டம்ளர் தண்னி வச்சுட்டு ஒரு தாமரை இலையை வைக்க பின்னாடியே சுட சுட தோசை வந்துச்சு.
பக்கத்திலே வந்து உக்காந்து சாப்பிட வந்தவர்களை நாங்க ஏதோ புழு மாதிரி பார்க்க அவர்கள் "ஏதோ பெரிய வீட்டு பிள்ளைங்க போலருக்கு"ன்னு நெனச்சுகிட்டு விலகி போனாங்க.
எல்லாம் முடிஞ்சுது. கல்லாகிட்டே போனோம். பிள்ளை கேட்டாரு "தம்பிகளா! இப்புடி புஸ்தக மூட்டை மேல உக்காந்து சாப்பிடுறீங்களே, அது சரஸ்வதி இல்லியா"
"அட ரவாதோசன்னு வந்துட்டா சரஸ்வதியாவது, மஞ்சுளாவாவது" இது ராதா.
பிள்ளை முகத்திலே 1000 வாட்ஸ் பல்பு போட்ட மாதிரி ஒரு பிரகாசம். அவரு ஒரு தி.க ஆள். சரஸ்வதியை போய் நடிகை மஞ்சுளா ரேஞ்சுக்கு நெத்தி நிறைய விபூதி போட்ட பசங்க சொல்ராங்களேன்னு.
"புள்ள எங்க கையில காசு இல்லை, தோசை மேல ஆசை. அதான் தின்னுட்டோம். வேணும்ன்னா எங்க அப்பாகிட்டே மாட்டிவிடுங்க" என்றான் ராதா. அப்போ ராதாவின் அப்பா R.I யா இருந்தார். வேற ஊர்ல வேலை. அதனால இவனை இவன் பாட்டிகிட்ட விட்டுட்டு அவனும் அவங்க அப்பா, அம்மா, தங்கை எல்லாம் அந்த ஊர்ல இருந்தாங்க. ஆனா என் நிலைமை அப்படியா. அப்பா காலை 7.55க்கு அந்த ஹோட்டலை தாண்டும் போது தான் பிள்ளை கடிகாரத்தை சரி செஞ்சு வச்சுப்பார்.
பிள்ளைக்கு ரொம்ப சந்தோஷமாக போயிடுச்சு. பசங்க இப்படி வெளிப்படையா இருக்காங்களேன்னு. "டேய் பசங்களா உங்களை ரொம்ப பிடிச்சு இருக்கு. இந்த ரவாதோசை ஃப்ரீ, நாளைக்கும் ரவா தோசை வேணுமா?"
ஆகா, புள்ள எதுக்கோ கொக்கி போடுறாரேன்னு எனக்கு பயம். அதுக்குள்ள ராதா "ஆமாம் புள்ள"ன்னு சொல்ல அதுக்கு புள்ள "அப்ப சரி உங்க வீட்டுல இருக்குற சாமி படம் எடுத்துகிட்டு வந்து என் கிட்ட்ட கொடுக்கனும், ஒரு படத்துக்கு ஒரு ரவா தோசை, சரியா?"
நானும் ராதாவும் அன்னிக்கு ஸ்கூல்ல முழுக்க யோசிச்சோம். என் வீட்டில் எல்லாமே பெரிய பரிய படம், தூக்கிட்டு வருவது கஷ்டம் என சொன்ன போது ராதா "எதுனா சின்ன சின்ன சிலை இருக்காடா"ன்னு கேட்டான். அதுக்கு நான் "ஆமாடா சித்தப்பா எங்க பார்த்தாலும் சின்ன சின்ன மண்ணால செஞ்சு சுட்டு பெயிண்ட் அடிச்ச புள்ளையார் வாங்கிட்டு வந்து அது இருக்கு ஒரு பத்து"ன்னு சொன்னேன். சரிடா பத்துல ஒண்ணு குறைஞ்சா தெரியாது. நாலைக்கு நீ அதை எடுத்து வா, நான் எதுனா எடுத்து வாரேன்"ன்னு தீர்ப்பை சொல்லிட்டான்.
அடுத்த நாள் காலையிலே குளித்து முடித்து சாமிகும்பிடும் போது "புள்ளையாரே நீயும் எத்தனை நாள் தான் அப்பா வைக்கும் காய்ந்த திராட்சைக்கே அடிமையா இருப்பே, உனக்கு நான் சுந்தரம்புள்ள மூலமா ஒரு வழி பண்றேன். இனி அவரு சுந்தரம்புள்ள இல்ல உனக்கு சுதந்தரம் கொடுக்க போகும் புள்ள"ன்னு சொல்லிகிட்டே அதை தூக்கி ட்வுசர் உள்ளே தள்ளிகிட்டேன்.
அப்பா சாமி கும்பிடும் போது நான் கிளம்பிகிட்டு இருந்தேன். "இங்க இருந்த புள்ளையார் எங்க"ன்னு அப்பா கத்துவதை நான் கவனிக்காத மாதிரி வந்துட்டேன்.
ராதா அவசரத்துக்கு பிடுங்கின ஒரு போட்டோவை கொண்டு வந்தான். அது ஒரு ஆஞ்சநேயர் படம். வால் வரை பொட்டு வச்சிருந்தது. சுந்தரம் பிள்ளைக்கோ ரொம்ப சந்தோஷம். ஆகா ஆஞ்சநேயரை கொண்டு வந்தவனுக்கு அடையும் அவியலும். புள்ளையார் சிலைக்கு புட்டும் ஜீனியும்ன்னு சொல்ல "அட புள்ளையாரப்பா உன் ரேஞ்சு இவ்வளவுதானான்னு நெனச்சிகிட்டே,சாப்பிட்டு கிள்ம்பினோம்.
அடுத்த அடுத்த நாள் பிள்ளையார் காணாமல் போன விஷயம் எங்க வீட்டிலே ஒரு வித பிரளயத்தை உண்டு பண்ணி கொண்டிருந்தது. அப்பா என் பாட்டியிடம் "ஒரு வேளை உன் சின்ன பையன் எடுத்திருப்பானோ" என்ற போது பாட்டிக்கும் அப்பாவுக்கும் சண்டை வந்தது. அம்மாவை பார்த்து "உன் தம்பி எடுத்திருப்பானோ" என்றபோது அம்மாவுக்கு அப்பாவுக்கும் சண்டை வந்தது.நம்ம பிள்ளையார் நாரதரா அவதாரம் எடுத்து வீட்டையே ஆட்டி படைச்சுகிட்டு இருந்த போது எனக்கு நாளை சுந்தரம் பிள்ளை கடையின் மெனு என்ன என்பதே அப்போது முக்கிய விஷயமாக இருந்தது.
ஆனால் ராதாவோ டிசைன் டிசைனாக காஞ்சி காமாட்சி, மதுரை மீனாட்சின்னு போட்டு தாக்க நானோ பிள்ளையார் சிலையாகவே கொண்டு வந்து கொண்டிருந்தேன். ராதாவுக்கு கவலை இல்லை. அவன் வீட்டிலே அப்பா, அம்மா யாரும் இல்லை. கண் சரியா தெரியாத பாட்டி மாத்திரம் தான். அவங்க வீட்டுல சாமி அலமாரியிலே ஒரு பல்பு எரியும் அதை ஒரு குன்சாக வச்சிகிட்டு அவன் பாட்டி சாமி கும்பிட்டுவாங்க. இன்னும் கொஞ்ச நாள்ல அவன் அந்த பல்பை மட்டும் வச்சிட்டு அந்த அலமாரியையே கொண்டு வரலாம். ஆனால் என் நிலமை அப்படியா.
சாயந்திரம் வீட்டுக்கு போன போது வீடே அல்லோகலகல்லோகல பட்டுகிட்டு இருந்துச்சு. சின்ன தாத்தா, சில பெரியப்பா எல்லாரும் ஒரே கூட்டம். "ரொம்ப ஆச்சர்யமா இருக்கு புள்ளையாரு செலை மாத்திரம் கானாம போவுது, மத்தபடி வூட்டுல ஒரு பொருளும் காணாம போவலை, அப்பன்னா இது ஏதோ தெய்வ குத்தமா இருக்குமோ!வீட்டுல பொம்பளைங்க சுத்த பத்தமா இல்லாம தீட்டு தொடக்கு பட்டிருக்கும், சரி எதுக்கும் பயலுக்கு மொட்ட போட்டுடலாம் நம்ம கச்சேரிகொடி புள்ளயாருக்கு"ன்னு தீர்மானம் இயற்றப்பட எனக்கு பக்குன்னு ஆகி போச்சு. ஆகா 4 தோசைக்காக என் முடியா? என்னை ஆம்பள புள்ளையா பெத்துகிட்டதே எங்க வீட்டில எந்த சின்ன சின்ன பிரச்சனைகளுக்கும் என் முடிதான் பலிகடா.மாடுசரியா கரவை இல்லைன்னா கூட நான் முடிதுரக்க வேண்டியிருந்த காலம் அது. எப்பவுமே நானேபடேகர் அளவு தான் முடியிருந்தது எனக்கு அந்த காலங்களில்:-((
ஆனா ராதா வீட்டு சாமி அலமாரி சுத்தமாக சுரண்டப்பட்டு இப்போது அந்த அலமாரியில் ஒரு பல்பு மட்டுமே இருந்து பார்ப்பதற்கு மீ.கி.வீரமணிஅய்யா வீட்டு சாமி அலமாரி மாதிரி சுத்தமா இருந்துச்சு. ஆனா அவன் பாட்டி ஏதோ சாமி படம் இருப்பதாக நினைத்து கொண்டு செவுத்துல பொட்டு வச்சிகிட்டு இருந்தாங்க.
இப்போ வீட்டிலே அப்பா சாமிஅலமாரிக்கு கீழேயே படுக்க ஆரம்பிச்சாச்சு. அவங்களுக்கு தெரியுமா அது காலை நான் சாமி கும்பிடும் நேரத்திலே தான் கானாம போவுதுன்னு. அப்போ ராதா அவன் வீட்டு அலமாரி காலியான விரக்தியிலே நம்ம வீட்டுக்கு வந்தானா. அவன் கிட்ட அம்மா "டேய் ராதா நம்ம வீட்டுல புள்ளையார் காணாம போரார்டா தினமும்"ன்னு சொல்ல அதுக்கு "அப்படியாம்மா, இப்புடித்தான் கோணார் வீட்டுல மாடு காணாம போச்சு. அவரு வண்டிகார தெரு மந்திர மூர்த்தி அய்யர் கிட்ட போய் வெத்தலையிலே மை போட்டு பார்த்தாங்க, அவரு யாரு திருடிகிட்டு போனதுன்னு கரெக்டா சொல்லிட்டாரு"ன்னு கொளுத்தி போட்டுட்டுபோக அதான் சரின்னு என் பாட்டி "நான் தோ போறேன் அய்யருகிட்ட இன்னிக்கு ஒண்ணுல ரெண்டு கேட்டுட்டு வாரேன்"ன்னு கிளம்ப, அம்மா "சரி அப்படியே போற வழியில இந்த ஒன்னேகால் ரூவாய வீரனுக்கு படி கட்டிட்டு போங்க, அவன் கை கால் வெளங்காம போவுட்டும்"ன்னு சொன்ன போது "அய்யய்யோ வேனாம், பின்ன எப்புடி அவன் வீட்டு பாடம் எழுதுவான், அந்த விசாலம் டீச்சர் எழுதலைன்னா போட்டு புரோட்டா மாவு தட்டிடுவாங்களே"ன்னு வாய் வரை வந்ததை ரவா தோசையை முழுங்குவது போல முழுங்கிகிட்டு இருந்துட்டேன்.
பாட்டிக்கு ஒரு பழக்கம் எங்க வெளியே போனாலும் என்னை கையிலே பிடிச்சுகிட்டு போறது தான்.நான் எவ்வளவோ கெஞ்சியும் நான் அழைத்து போக படவில்லை. கிட்ட தட்ட இழுத்து போகப்பட்டேன். மந்திர மூர்த்தி அய்யருக்கு இது ஒரு பெக்க்யூலியர் கேஸ். உடம்பை குலுக்கி குலுக்கி வெத்தலையிலே மையை தடவி "வருது, தோ வருது ராத்திரி ஒரு மணிக்கு வருது. நல்ல குண்டா இருக்குது. சலக்கு சலக்குன்னு கொலுசு சத்தத்தோட வருது. குள்ள உருவமா இருக்குது"ன்னு சொல்ல சொல்ல எனக்கு சந்தோஷமா போச்சு. அப்பாடா தப்பிச்சோம்டா சாமீன்னு.
இதிலே ரெட்டை சந்தோஷம் வேற. ஏன்னா நான் ஒல்லிபிச்சான். தம்பி நல்ல குண்டு. கால்ல வேற சலங்கை கொலுசு எல்லாம் போட்டிருப்பான். 4 வது படிக்கிறவன் குள்ளமாத்தானே இருப்பான். சரி அவனை போட்டுடலாம் வீட்டுலன்னி நெனச்சுகிட்டு வீட்டுக்கு வந்த உடனே "அம்மா வேற யாரும் இல்லியாம் தம்பிதான்னு அய்யரு சொல்லிட்டாரு.இவன் தான் வெளையாட எடுத்துகிட்டு போயிருப்பான்"ன்னு சொல்ல அம்மா அன்ரைக்கு ராத்திரி அவன் இடுப்பிலே முந்தானையை கட்டிகிட்டு படுக்க வச்ச போது நான் நம்பியார் மாதிரி சிரிச்சுகிட்டு படுத்தேன்.
அடுத்த நாள் சுந்தரம் பிள்லை கடைக்கு போகும் போது அவர் இல்லை. அவர் பையன் தான் இருந்தார். அவருக்கு இதல்லாம் சுத்தமாக பிடிக்காது போலருக்கு.ரவா தோசை முடியும் வரை காத்திருந்து "டேய் பசங்களா இந்தாங்க உங்க சாமியெல்லாம், என் அப்பாவுக்கு தான் தன் சாமி இல்லை கொள்கையை எப்படி உங்க கிட்ட திணிப்பதுன்னு தெரியலை. அதனால நீங்க திருடலாமா, எனக்கும் சாமி இல்லை கொள்கைதான். ஆனா உங்களை இந்த வழிக்கு கொண்டு வர திருட சொல்றது தப்பு. இந்தாங்க இந்த புத்தகத்தை எல்லாம் படிங்க, ஆனா இன்னிக்கு தோசை ஃப்ரீ இல்லை வாசல்ல நின்னு பத்து தடவை "தமிழ் வாழ்க, தமிழ் வாழ்க"ன்னு கத்திட்டு போகனும்"ன்னு சொல்ல நாங்களும் "அப்பாடா இத்தோட விட்டாரே"ன்னு வாசல்ல நின்னு "தமிழ் வாழ்க தமிழ் வாழ்க"ன்னு கத்தினோம்.
வெளியே வந்த நான் "டேய் இந்த பிள்ளையாரை எப்படிடா கொண்டு போறது"ன்னு ராதா கிட்ட கேட்க 'டேய் அம்மா தான் வீரனுக்கு படி கட்ட்டி இருக்காங்களே அதனால வீரன் கிட்ட கொண்டு போய் வச்சிடு, அது தானா வீட்டுக்கு போயிடும்"ன்னு சொல்ல அது எனக்கும் சரியா பட்டுச்சு. சரி இந்த புத்தகத்தை என்னடா பண்ணுறதுன்னு யோசிச்சு அதை எதிரே இருந்த கடலை கடையிலே போட்டு கடலை வாங்கி தின்னுகிட்டே ஸ்கூலுக்கு போனோம்.
அம்மா வழக்கம் போல சியாமளா கோவிலுக்கு போக அங்கே வீரன்கிட்டே அந்த பஞ்ச பிள்லையாரும் "வாம்மா மின்னல் வந்து என்னை வீட்டுக்கு கொண்டு போ"ன்னு சொல்ல "ஆகா வீரனுக்கு படிகட்டினா இன்ஸ்டண்ட் பலன்"இருக்கேன்னு அம்மா ஆச்சர்ய பட எல்லாம் சுபமா முடிஞ்சுது.
மீ த பஸ்டா?
ReplyDeleteஆமாம்
ReplyDeleteகாவாளித்தனத்துக்கு அளவே இல்லை போல!
ReplyDelete//Namakkal Shibi said...
ReplyDeleteகாவாளித்தனத்துக்கு அளவே இல்லை போல!
//
ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்!
பட் இதுல ராதா நொம்ப்ப்ப பாஸ்ட்டூ டக்குப்புக்குன்னு டோட்டல் பூஜை ரூமையே காலி பண்ணிட்டாருல்ல :)))))
//அந்த வாதம் மரத்துக்கு பின் பக்கம் உயரமான படிக்கட்டுகளுடன் இருப்பதுதான் "சுந்தரம் பிள்ளை சைவ ஓட்டல்//
ReplyDeleteஅங்க அம்புட்டு பெரிய ஹோட்டல் எல்லாம் இருந்திருக்கா
ஒரு சுவடுமே இல்லாமல்ல இருக்கு இப்ப.....! :(
//நல்ல பதமா ரெண்டு ரவா, ஆனா கெட்டி சட்னியா இருக்கட்டும், சாம்பார் வாளிய இங்கயே வச்சிடுங்க நாங்க ஊத்திக்கிறோம்"//
ReplyDelete:)))))))))
அய்யா சாமிகளா.. நல்ல வேளை நீங்க 2 பேரும் அரசியல்வாதிகளா வரலை.. இந்த நாடு புண்ணியம் பண்ணி இருக்குன்னு இப்போ ஒத்துகிறேன்.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. என்னா ஒரு வில்லத்தனமா வாழ்ந்திருக்காங்க.. :(
ReplyDeleteசுந்தரம் பிள்ளை ரவா தோசைக்கு ஆசைபட்டு நகை நட்டு கேட்டிருந்தா கூட குடுத்திருப்பிங்க போல.. :))
//ஆமாம்
ReplyDeleteகாவாளித்தனத்துக்கு அளவே இல்லை போல!//
பொறாமை.. அபி அப்பா பதிவுல மொத மொறையா இந்த வாய்ப்பு கெடைச்சிருக்கு.. கண்ணு வைக்காதிங்க.. :)
//மாடுசரியா கரவை இல்லைன்னா கூட நான் முடிதுரக்க வேண்டியிருந்த காலம் அது. //
ReplyDeleteஹஹா,
முழு பதிவையும் ரொம்பவே ரசித்தேன். :))
////ஆமாம்
ReplyDeleteகாவாளித்தனத்துக்கு அளவே இல்லை போல!//
பொறாமை.. அபி அப்பா பதிவுல மொத மொறையா இந்த வாய்ப்பு கெடைச்சிருக்கு.. கண்ணு வைக்காதிங்க.. :) //
அவ்வ்வ்வ்.. இந்த கமெண்ட் வாபஸ் வாங்கிக்கிறென்... களவாணித்தனம்னு சொன்ன உடனே என்னைய தான் சொல்றிங்களோன்னு உணர்ச்சிவசப் பட்டுட்டேன்.. கிகிகி..
//ஆனா என்னையும், அவனையும் தலைகீழா கட்டி தொங்கவிட்டா கூட பையில இருந்து 5 பைசா கூட கீழே கொட்டாது. //
ReplyDeleteஇதெல்லாம் தானா வருமோ? :))
//ஆனா என் நிலைமை அப்படியா. அப்பா காலை 7.55க்கு அந்த ஹோட்டலை தாண்டும் போது தான் பிள்ளை கடிகாரத்தை சரி செஞ்சு வச்சுப்பார்.//
ReplyDeleteசான்சே இல்ல போங்க.. :))
சோதனை பின்னூட்டம்
ReplyDeleteகும்மி அப்பாலிக்கா!
ReplyDeleteசார்!
ReplyDeleteback to form
சூப்பர் திரும்ப அதே நைய்யாண்டி நடை ரொம்ப ரசிச்சேன்
//காவாளித்தனத்துக்கு அளவே இல்லை போல//
ReplyDeleteகாவாளித்தனம்னு சொன்னது உங்களை இல்லை சஞ்சய்!
அபி அப்பாவை
//Namakkal Shibi said...
ReplyDeleteகாவாளித்தனத்துக்கு அளவே இல்லை போல!
//
பாம்பின் கால் பாம்பறியும்.:P
ஆனா அபிஅப்பா உண்மையிலேயே ஓவர் அழும்புதான்...
ReplyDeleteயப்பா சாமி... சான்ஸே இல்லை.. இன்னும் என்ன என்னவெல்லாம் பண்ணியிருக்கீங்களோ??? :)))
ReplyDeleteஆனா அந்த ரவா தோசையும் கெட்டி சட்னியும் எப்படி இருந்ததுன்னு சொல்லவே இல்லையே???
:))
ReplyDeleteinnum padikkalai... but post is good... ;)
/ஹஹா,
ReplyDeleteமுழு பதிவையும் ரொம்பவே ரசித்தேன். :))//
me too
//பாம்பின் கால் பாம்பறியும்//
ReplyDeleteஅஃப்கோர்ஸ் நிலா டார்லிங்க்
//ஆனா அபிஅப்பா உண்மையிலேயே ஓவர் அழும்புதான்//
ReplyDeleteஉங்கப்பா பண்ணுறதை விடவா டார்லிங்க்!
வாங்க சஞ்சய்! நூவே பஷ்ட்டு!
ReplyDeleteநல்ல வேளை நாங்க ரெண்டு பேருமே நல்ல அரசியவாதிங்க தான்! அதிலும் அவன் பக்கா காங்கிரஸ்காரன்!நகரகாங்கிரஸ் செக்ரட்டரி!
\\பொறாமை.. அபி அப்பா பதிவுல மொத மொறையா இந்த வாய்ப்பு கெடைச்சிருக்கு.. கண்ணு வைக்காதிங்க.. :)\\
ஹி ஹி நான் எதுனால மத்த பதிவை படிக்காம பின்னூடம் போடுறேன் தெரியுமா? இப்படி எதுனா நடந்துடக்கூடாதுன்னுதான்!
\\அவ்வ்வ்வ்.. இந்த கமெண்ட் வாபஸ் வாங்கிக்கிறென்... களவாணித்தனம்னு சொன்ன உடனே என்னைய தான் சொல்றிங்களோன்னு உணர்ச்சிவசப் பட்டுட்டேன்.. கிகிகி..\\
இப்ப தெரியுதா?
// Namakkal Shibi said...
ReplyDeleteஉங்கப்பா பண்ணுறதை விடவா டார்லிங்க்!//
எங்கப்பா சமத்துகுட்டியாக்கும்...
வாங்க சிபிஅய்யா! நமக்கு காவாளித்தனமெல்லாம் தெரியாது. தானா நடப்பது எல்லாம் அப்படியே தெரியுது அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:-))
ReplyDeleteவாப்பா ஆயில்ல்யா! ஆமா ராதா வீட்டுல யாருமே இல்ல பாட்டி மட்டும் தான், எனக்கும் அப்படி ஒரு வாய்ப்பு இருந்தா அப்படி செஞ்சிருப்போம்ல,
ReplyDeleteஆமா இப்ப அப்படி அந்த இடத்திலே ஒரு ஹோட்டல் இருந்ததும், வாதா மரமும், வண்டி பேட்டையும் இல்லை. சும்மா ஒரு தள்ளு வண்டி இருக்கு. சின்ன கடை தெரு டாஸ்மாக் சரக்கை அந்த தள்ளு வண்டியிலே பப்ளிக்கா வச்சு குடிக்கிறானுங்க. பொதுமக்கள் முன்னிலையிலேயே!
வாங்க அம்பி! மிக்க நன்றி!
ReplyDeleteஇது திருட்டு தனம் ;)
ReplyDeleteஹாஹா,
ReplyDeleteமுழு பதிவையும் ரொம்பவே ரசித்தேன்.
:-)
:-)
:-)
:-)))...செம ROTFL போஸ்ட். அங்கங்கே பிரேக் போட்டு போட்டு சிரிச்சுட்டு படிச்சேன்!!
ReplyDeleteசூப்பர்! அபி அப்பா டச் திரும்ப!!!
ReplyDeleteஆமா, ரவாதேசைன்னா தேசலா இருக்குமோ? (தலைப்பு). பிள்ளையார் தான் காலொடிச்சிருப்பாரோ?
// தம்பி நல்ல குண்டு. கால்ல வேற சலங்கை கொலுசு எல்லாம் போட்டிருப்பான். 4 வது படிக்கிறவன்// ஆஹா, நாலாப்பு படிக்கச் சொல்ல கொலுசு போட்டுட்டிருந்தாரா? அவர் பள்ளிக்கூடத்துல மட்டும் நான் கூட படிச்சிருந்தா, நல்லா ஓட்டியிருந்திருக்கலாம்:-)
//புத்தகத்தை என்னடா பண்ணுறதுன்னு யோசிச்சு அதை எதிரே இருந்த கடலை கடையிலே போட்டு கடலை வாங்கி தின்னுகிட்டே ஸ்கூலுக்கு போனோம்//
ReplyDeleteஅந்த காலத்திலேயே உஙகளுக்கு இவ்வளவு கொள்கைப் பற்றா? கொள்கை குன்றே! நம்பவே முடியலயே! :))
;)))) கலக்கல் !
ReplyDeleteராதாவோட உங்க கூட்டணி என்னைக்குமே சூப்பர் தான்.
ReplyDeleteஅபிஅப்பா பிளஸ் ராதா கூட்டணிக்கு(சத்யராஜ் கௌண்டமணி கூட்டணி போலல இருக்கு!)ஒரு ரவ தோசை செட் பிளஸ் பிரியாணி பார்சல்.வழக்கம் போல அபிஅப்பாவுக்கு ரவாதோசை தான்!
ReplyDelete//ராதாவுக்கு கவலை இல்லை. அவன் வீட்டிலே அப்பா, அம்மா யாரும் இல்லை. கண் சரியா தெரியாத பாட்டி மாத்திரம் தான். அவங்க வீட்டுல சாமி அலமாரியிலே ஒரு பல்பு எரியும் அதை ஒரு குன்சாக வச்சிகிட்டு அவன் பாட்டி சாமி கும்பிட்டுவாங்க. இன்னும் கொஞ்ச நாள்ல அவன் அந்த பல்பை மட்டும் வச்சிட்டு அந்த அலமாரியையே கொண்டு வரலாம். ஆனால் என் நிலமை அப்படியா.//
ReplyDeleteஇந்த மாதிரி சின்னத் தப்புகெல்லாம் அந்தக் காலத்துல சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில போடமாட்டாங்களா?
வழக்கம் போல பதிவு அருமையாக நகைச்சுவை ததும்ப இருந்தது !
ReplyDeleteஉங்கள் ப்ளாக்கை நீங்களே பாலோ பண்ணுவது எதற்காக ?
அபி அப்பா, பிள்ளையாரின் சார்பாக உங்க செயலை வன்மையாய்க் கண்டிக்கிறேன்,:)))))))))))))
ReplyDeleteநீங்க அங்கே தூக்கினீங்க, இங்கே சென்னையில், திடீர், திடீர்னு பிள்ளையாரா முளைச்சது அதனாலேயோ?? :P:P:P:P:P
வாங்க வாலு! வணக்கம்! வருகைக்கு நன்னி!
ReplyDelete\\ Pondy-Barani said...
ReplyDeleteசார்!
back to form
சூப்பர் திரும்ப அதே நைய்யாண்டி நடை ரொம்ப ரசிச்சேன்\\
வாங்க பாண்டி பரணி! வருகைக்கு மிக்க நன்றி!
\\ Namakkal Shibi said...
ReplyDelete//காவாளித்தனத்துக்கு அளவே இல்லை போல//
காவாளித்தனம்னு சொன்னது உங்களை இல்லை சஞ்சய்!
அபி அப்பாவை\\ஆகா சிபி விடமாட்டீங்க போலருக்கே! நாம் எல்லாம் ஒரே குட்டையிலே ஊறின மட்டை தானே!:-)
இப்பவாவது மனசார
ReplyDeleteநிறைய
ரவாதோசை கிடைக்கணும்னு அந்தப் பிள்ளையார் கிட்டயே சொல்லறேன்:))))
\\\ நிலா said...
ReplyDelete//Namakkal Shibi said...
காவாளித்தனத்துக்கு அளவே இல்லை போல!
//
பாம்பின் கால் பாம்பறியும்.:P
January 9, 2009 6:40 PM
நிலா said...
ஆனா அபிஅப்பா உண்மையிலேயே ஓவர் அழும்புதான்...\\,
அய்யோடா! நிலாகுட்டி, உங்க அப்பா என்னை விட சீனியர்டா அழும்பு விஷயத்திலே:-))
\\ வெண்பூ said...
ReplyDeleteயப்பா சாமி... சான்ஸே இல்லை.. இன்னும் என்ன என்னவெல்லாம் பண்ணியிருக்கீங்களோ??? :)))
ஆனா அந்த ரவா தோசையும் கெட்டி சட்னியும் எப்படி இருந்ததுன்னு சொல்லவே இல்லையே???\\
வாங்க வெண்பூ! என்னது அந்த 1 மாச வேலை எல்லாம் முடிஞ்சுதா? இப்போ வேலை டென்ஷன் ஏதும் இல்லியே! அப்ப பதிவா போட்ட்டு தாக்க வேண்டியதுதானே!
வருகைக்கு நன்றி!
\\ இராம்/Raam said...
ReplyDelete/ஹஹா,
முழு பதிவையும் ரொம்பவே ரசித்தேன். :))//
me too\\
மிக்க நன்றி இராம்!
\\ Thooya said...
ReplyDeleteஇது திருட்டு தனம் ;)\\
வாம்மா மின்னல்! இது திருட்டுதனம் இல்லை, கிவ் அண்ட் டேக் பாலிசின்னு தானே ராதா சொன்னான்:-)))
\\ ச்சின்னப் பையன் said...
ReplyDeleteஹாஹா,
முழு பதிவையும் ரொம்பவே ரசித்தேன்.
:-)
:-)
:-)
\\
வாங்க ச்சீன்ன பையன், வருகௌக்கு மிக்க நன்றி!
\\ சந்தனமுல்லை said...
ReplyDelete:-)))...செம ROTFL போஸ்ட். அங்கங்கே பிரேக் போட்டு போட்டு சிரிச்சுட்டு படிச்சேன்!!\\
பிரேக் ப்ரேக் போட்டு சிரிக்கும் அளவு பதிவு பெருசா இருப்பதா சொல்றீங்க்க அப்படித்தானே முல்லை:-))))
\\ கெக்கேபிக்குணி (05430279483680105313!) said...
ReplyDeleteசூப்பர்! அபி அப்பா டச் திரும்ப!!!
ஆமா, ரவாதேசைன்னா தேசலா இருக்குமோ? (தலைப்பு). பிள்ளையார் தான் காலொடிச்சிருப்பாரோ?
// தம்பி நல்ல குண்டு. கால்ல வேற சலங்கை கொலுசு எல்லாம் போட்டிருப்பான். 4 வது படிக்கிறவன்// ஆஹா, நாலாப்பு படிக்கச் சொல்ல கொலுசு போட்டுட்டிருந்தாரா? அவர் பள்ளிக்கூடத்துல மட்டும் நான் கூட படிச்சிருந்தா, நல்லா ஓட்டியிருந்திருக்கலாம்:-)
வாங்க கெக்கேபிக்குனியக்கா! அது பிள்ளையார் உடைக்கலை, நான் தான் தப்பு பன்ணிட்டேன். இப்போ சரி பண்ணிட்டேன்!
ஆகா என் தம்பியவே கலாய்க்க போறீங்களா! நடத்துங்க!
\\ சுல்தான் said...
ReplyDelete//புத்தகத்தை என்னடா பண்ணுறதுன்னு யோசிச்சு அதை எதிரே இருந்த கடலை கடையிலே போட்டு கடலை வாங்கி தின்னுகிட்டே ஸ்கூலுக்கு போனோம்//
அந்த காலத்திலேயே உஙகளுக்கு இவ்வளவு கொள்கைப் பற்றா? கொள்கை குன்றே! நம்பவே முடியலயே! :))
\\
வாங்க சுல்தான் பாய்! நாங்க ரவாதோசை கொள்கைக்காக புஸ்தக மூட்டையை போட்டு உட்காந்ந்தவங்களாச்சே! கடலைக்காக அதைக்கூட செய்ய மாட்டோமா?
வருகைக்கு நன்றி பாய்!
நன்றி கப்பி தம்பி, கோபிதம்பி, சின்ன அம்மனி! உங்க எல்லார் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
ReplyDeleteவாங்க மிசஸ் டவுட்! எப்புடி எல்லாம் சந்தேகம் வருது உங்களுக்கு, இதல்லாம் சீர்திருத்த பள்ளியில் போடும் அளவு குற்றமா! அப்படீன்னா நாங்க அடிச்ச கூத்து எல்லாம் சொன்னா 428 வருஷம் ஜெயில், முடிவுல தூக்குன்னு பெரிய பெரிய தண்டனை எல்லாம் கிடைக்கும்:-)))
ReplyDeleteவாங்க அருப்புகோட்டை பாஸ்கர்!வருகைக்கு மிக்க நன்றி!
ReplyDeleteவாங்க கீதாம்மா!என் நல்ல நேரம் லேட்டா வந்தீங்க, ரவா தோசைன்னு தலைப்பிலே டைப்பாம ரவா தேசைன்னு அடிச்சிருந்தேன். ஆனா கெக்கேபிக்குனிஅக்கா வந்து சொல்லிட்டு போனாங்க ! இல்லாட்டி அதுக்கும் திட்டு விழுந்திருக்கும் உங்க கிட்ட!:-))
ReplyDelete\\ வல்லிசிம்ஹன் said...
ReplyDeleteஇப்பவாவது மனசார
நிறைய
ரவாதோசை கிடைக்கணும்னு அந்தப் பிள்ளையார் கிட்டயே சொல்லறேன்:))))
\\
எங்க வல்லிம்மா! ஆயில் அது இதுன்னு இப்பல்லாம் பதிவு போட்டு ஆசைய தீத்துகிட்டாதான் உண்டு!
பீள்ளையார் வரம் கொடுத்தாலும் எங்க வீட்டு பூசாரி வரம் கொடுக்க மாட்டாங்க ஆயில் விஷயத்திலே:-))
சிருசுலேயே இவ்வளவு சேட்டையா?
ReplyDeleteஹஹாஹாஹாஹா....என்னால் சிரிப்பை அடக்கவே முடியலை....
ReplyDeleteஅன்புடன் அருணா
ஹ்ஹஹஹ.. அபி டேடி.. பதிவு சூப்பரு
ReplyDeleteFirst time here, romba nalla erukku.. 4 vadhu padikkum thambikku kolusa ?.. he he , romba rasichu padichen
ReplyDelete