இது சம்மந்தமாக சஞ்சய், பரிசில்காரன், அனு எல்லாம் பதிவு போடுட்டாங்க! இருந்தாலும் சமீபத்துல ஒரு 60 வருஷம் முன்ன பிறந்த என் பிரண்டுக்கு ஒரு பதிவுன்னு வச்சுகோங்க!
தாத்தாவுக்கு முன்ன கொள்ளு பேத்தி! முத்துலெஷ்மி! என் சின்ன அக்கா மாதிரி! எப்பவும் ஒரு கோவம் கலந்த கண்டிப்பு இருக்கும் பேச்சினிலே! என் கல்லூரி ஜூனியர்(பல வருஷம் பின்னப்பா), என் பெரிய அக்காவுக்கு பிடித்தபெண்! நல்ல பேச்சாளி! ஆனா அலுக்கவே அலுக்காது! நான் என் வீட்டில் கண்மணி டீச்சர், முத்து, ராம், இம்சை அரசிஜெயந்தி, காயத்ரி, காயத்ரி அம்மா, சென்ஷி, கோபி, ஜி(யாவுதீன்) எல்லோரும் வந்த போது ஒரு பார்வையாளராக மட்டுமே இருந்தேன்!
அட இந்த பொண்ணு என்னமா பேசுதுன்னு கொஞ்சம் ஆச்சர்யம். ஆனா அப்ப முத்துக்கு கொஞ்சம் ஈடு கொடுத்து கலாய்ச்சது டீச்சர் மட்டுமே!
நான் அப்ப அபிஅம்மா டெலிவரிக்காக 15 நாள் லீவில் போனேன். நான் போன அடுத்த நாள் தம்பி பிறந்தான். ஆனால் நான் போன அன்றைக்கே முத்து வீட்டுக்கு வந்தாச்சு! அவங்க அப்பா, அம்மா, மாதினி, சபரி கூட!
அடுத்து தம்பி பிறந்த போதும் சென்ஷி, சென்ஷி அம்மா, முத்து, அவங்கம்மா எல்லாரும் ஹாஸ்பிட்டல் வந்தாங்க. அப்ப முத்து கொடுத்த ஒரு தஞ்சை தலையாட்டி பொம்மையை பாப்பா இது வரை தம்பிகிட்ட கொடுக்கலை! ஏன்னு கேட்டதுக்கு "அப்பா தம்பிக்கு வந்த முதல் கிஃப்ட் இது! முத்து ஆண்டி கொடுத்தது, இப்ப கொடுத்தா உடைசிடுவான், அவன் பெரிய பெரிய பரிசெல்லாம் வாங்கும்போது இதை நான் கொடுப்பேன்,அப்ப சொல்லுவேன் 'இதாண்டா உனக்கு கிடைத்த முதல் பரிசு'ன்னு"
முத்துவின் அப்பா, அம்மா பத்தி சொல்லியே ஆகனும்! அம்மான்னா அம்மாதான்! சொல்வதுக்கு வார்த்தை இல்லை! அப்பா! அவர் ஒரு முனைவர் பட்டம் வாங்கிய பேராசிரியர்! மிகுந்த பண்பாளர்! இதுக்கு மேல என்னத்த சொல்ல!
இப்போ ஜனவரி 11ல் முத்துவின் தாத்தா நம்ம தாத்தாவுக்கு 100 வயசாச்சு! அதுக்கு கோவைல விழா! நம்ம சஞ்சய், வடகரைவேலன் அண்ணாச்சி போயிருந்தாங்க!(பரிசில் போகலை என்பதை இங்கே கண்டிக்கறேன், ஏன்னா அதை விடுங்க தனியா பேசிப்போம்)
நாம அங்க போகாட்டியும் நமக்கு தாத்தா ஆசீர்வாதம் உண்டு! தினதந்தியிலே தாத்தா பத்தின சேதி வந்த போட்டோ போட்டிருக்கேன்! பாருங்க ஆசீர்வாதம் வாங்கிகுங்க!
நானும் ஆசிர்வாதம் வாங்கிக்குறேன்..!
ReplyDeleteஆசிர்வாதம் வாங்கிக் கொண்டேன்.
ReplyDeleteநானும் ஆசிர்வாதம் வாங்கிக்கறேன்
ReplyDeleteவணக்கங்கள்!! குடும்பத்தினருக்கு வாழ்த்துகள்!
ReplyDeleteதாத்தா போஸ்ட்ல என்னைப்பத்தி எதுக்கு இத்தாம் பெரிய கதை... என் பேச்சை சொல்லலைன்னா தூக்கம்வராது போல எல்லாருக்கும். :)
ReplyDeleteநானும் வாங்கிக்கிறேன்.
ReplyDeleteநானும் ஆசிர்வாதம் வாங்கிக்குறேன்..!
ReplyDelete//முத்துலெட்சுமி-கயல்விழி said...
ReplyDeleteதாத்தா போஸ்ட்ல என்னைப்பத்தி எதுக்கு இத்தாம் பெரிய கதை... என் பேச்சை சொல்லலைன்னா தூக்கம்வராது போல எல்லாருக்கும். :)
//
yessuu :))))))
வாழ்த்துகள் தாத்தாவுக்கு...
ReplyDeleteதாத்தாவை மானசீகமா வணங்கிட்டேன். செய்திய எடுத்து போட்டு இதுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்ததுக்கு நன்றி.
ReplyDeleteஅவருக்கு என் நமஸ்காரங்களும், உங்களுக்கு நன்றிகளும்!
ReplyDeleteதாத்தாவுக்கு என் நமஸ்காரங்களும், உங்களுக்கு நன்றிகளும்!
ReplyDeleteதாத்தாவிற்கு என் வந்தனங்களும் வாழ்த்துகளும் :))
ReplyDelete//சமீபத்துல ஒரு 60 வருஷம் முன்ன//
ReplyDeleteஇது அபி அப்பா டச்சா என்ன? :))
அவர் நிறைவான வாழ்வுக்குத் தாத்தாவை வாழ்த்தி,
நம் நிறைவான வாழ்வுக்குத் தாத்தாவை வணங்கிக் கொள்கிறேன்!
சதாபிஷேகச் செம்மலை,
அடியேன் அடிக்கீழ் வீழ்ந்து சேவித்துக் கொள்கிறேன்!