வழக்கொழிந்த தமிழ்ச்சொற்கள் என்பது பற்றி முத்துலெஷ்மி ஒரு பதிவிட்டு என்னையும் Tag பண்ணியிருந்தாங்க. நான் அது பற்றி சும்மா சொல்லாம ஒரு கோர்வையா சொல்ல நினைத்த போது அது ஒரு சிறுகதையா ஆரம்பித்து பின் தொடரா ஆகிவிடும் போலிருந்தது. சரி சொல்ல வேண்டியதை அழகா சொல்லி விடுவோம் என நினைத்து எழுத ஆரம்பித்து விட்டேன். முதலில் அந்த கதையின் சுருக்கம் இதோ!
சீத்தா பிறந்தது வளர்ந்தது ஒரு கிராமத்தில் நல்ல செல்ல செழிப்பான பண்ணை வீட்டில். நல்ல அழகி. சந்தர்ப்ப சூழ்நிலையால் தப்பு செய்பவள். அவள் வாக்கப்பட்டு போவது ஒரு ராணுவவீரன். பின் அவள் வாழ்க்கை வேறு மாதிரியாக ஆகிவிடுகின்றது. இப்போது அவளுக்கு வெளிநாட்டில் வசிக்கும் ஒரு மகன், ஒரு மகள். அவள் இப்போது விதவை. காசு பணம் எதற்கும் குறை வில்லை.
அவள் இப்போதுஅந்த கிராமத்துக்கு வருவது தன் நிலத்தை எல்லாம் விற்று விட்டு பணத்தை வங்கியில் போடத்தான். கிராமத்தில் அவள் நுழையும் போது கதை ஆரம்பம். ஆனால் சீத்தா நம் கதாநாயகி இல்லை.
சீத்தா வீட்டில் வேலை செய்த "குந்தாணி கருப்பி" தான் நம் கதா நாயகி. அந்த கிராமத்துக்கு உள்ளே செல்ல வேண்டுமானால் ஒரு கிலோமீட்டர் நடந்து தான் போக வேண்டும். அப்போது தான் சீத்தா குந்தாணி கருப்பியை பார்க்கிறாள்.
நடந்து போகும் போது ஏற்படும் சம்பாஷனைகள், நடக்கும் விஷயங்கள், சீத்தா மனதில் ஏற்படும் பழைய நினைவுகள் இவை தான் கதையை ஆக்ரமிக்க போகின்றன. சீத்தா கிராமத்துக்கு உள்ளே போன பிறகு நடக்கும் மாற்றங்கள் தான் கதை.
நம்ம குந்தாணிக்கருப்பிக்கு தேதி வருஷம் எல்லாம் தெரியாது. உனக்கு எப்போ கல்யாணம் ஆச்சுன்னு கேட்டா "சோபா நாண்டுகிட்டு செத்துச்சே அப்பக்கா" என சொல்லும் வெள்ளேந்தி. குந்தாணிக்கு எல்லாமே சினிமாதான். இப்போ கூட தான் செத்து போனா விஜய் வந்து தூக்கி போடுவார் என நினைத்து கொண்டிருக்கும் ஒரு அப்பாவி.
குந்தாணிக்கு ஒரு புருஷன் கூட உண்டு. சிவலிங்கம். அவனுக்கு என்ன குறை? குந்தாணிக்கு ஊரில் என்ன வேலை? ஊரில் மாட்டுக்கு காளை சேர்ப்பது, உழவு காளைக்கு காயடித்து, நெற்றியில், முதுகில் சூடு வைப்பது, நிறை மாச கர்பினி பெண் குழந்தை பிறந்தால் கொடுக்கும் 'காரைக்கா மருந்து" வாங்க பூவம் போவது, பண்ணை வீட்டில் எதாவது தப்பு நடந்தா அந்த பழியை தான் ஏற்ப்பது...இப்படி சகல வேலையும்.
சீத்தாவின் அழகை வர்னிக்க போகும் நான் குந்தாணிக்கருப்பியின் அழகை வர்ணிக்க போவதில்லை. அதற்கு பதில் உண்மையான குந்தாணியை தான் வர்ணிக்க போகிறேன். கதையின் கடைசியில் யார் அழகு என நீங்களே சொல்லுங்கள். எது உண்மையான அழகு என்பதை சொல்லுங்கள்.
தயவு செய்து குந்தாணி என்பதை கெட்ட வார்த்தையாக நினைக்க வேண்டாம். கிராமத்தில் நெல் கொட்டி வைக்கும் பத்தாயம் என்பது போலத்தான் குந்தாணி. இதுவும் ஒரு வழக்கொழிந்த சொல் தான்.
இதில் நம் கதாநாயகி பேசும் தஞ்சை கிராமத்து மொழியில் அனேகமாக நிறைய சொற்கள் அது போல வரும். அதற்கான விளக்கத்தை நான் பின்னூட்டத்தில் சொல்கிறேன்!
தொடரும்....
இரண்டு கமெண்ட் பாக்ஸ் காட்டுது!
ReplyDeleteஎன்ன குழப்பம் நடக்குது இங்கே?
அசத்தல்... தஞ்சை தமிழ் கொஞ்சி விளையாடட்டும் :)
ReplyDeleteஓ..அடுத்தத் தொடரும் ஆரம்பிச்சாச்சா!! சூப்பர்!
ReplyDeleteவாங்க புலி சாரே! கண்டிப்பா தஞ்சை தமிழ் கொஞ்சும் பாருங்க! நன்றி!
ReplyDeleteஆமாம் முல்லை! இன்னும் வீரசேகரவிலாஸ் 2 பாகம் வரும்! அதுக்குள்ள இதையும் ஆரம்பிச்சாச்சு!
ReplyDeleteஇது நல்லா இருக்கே...
ReplyDeleteவாப்பா வால்! ஆமா 2 பாக்ஸ் காட்டுதே! அதெப்படி? குணாகமல் கையில் இருந்த துப்பாக்கி மாதிரி தானா வெடிக்குதே:-))
ReplyDeleteநன்றி அமுதா!
ReplyDeleteஅருமை
ReplyDeleteநன்றி திகழ்மிளிர்!
ReplyDelete\\நம்ம குந்தானிக்கருப்பிக்கு தேதி வருஷம் எல்லாம் தெரியாது. உனக்கு எப்போ கல்யாணம் ஆச்சுன்னு கேட்டா "சோபா நாண்டுகிட்டு செத்துச்சே அப்பக்கா" என சொல்லும் வெள்ளேந்தி. குந்தானிக்கு எல்லாமே சினிமாதான். இப்போ கூட தான் செத்து போனா விஜய் வந்து தூக்கி போடுவார் என நினைத்து கொண்டிருக்கும் ஒரு அப்பாவி.// இது நல்லாருக்கே... விளக்கம்
ReplyDelete//ம்ம், டாப் கியர் போட்டு தூக்குங்க அடுத்த பாகத்தில்.
ReplyDeleteவர்னிக்க - வர்ணிக்க. (இப்போதைக்கு இது மட்டும் தான் கண்ணுல பட்டது)
Not sure whether my comment reached your inbox. adhaan sandegathukku saambar maathiri :)))
2 comment boxes...? //
மேலே உள்ளது அம்பியின் பின்னூட்டம்!
நான் என்ன பண்றது அம்பி, முன்னமே வால் பையனுக்கு சொன்ன மாதிரி தானா வெடிக்குது:-))
நன்றி முத்து லெஷ்மி!
ReplyDeletecomment box 2
ReplyDelete:) nalla pathivu. ( appurama padichchukkalam ippa enna avasaram ? )
ReplyDeleteநன்றி நிஜமா நல்லவன்! ஜீவ்ஸ் அப்புறமா வந்து படிங்க, நன்றி!
ReplyDelete\\சீத்தாவின் அழகை வர்னிக்க போகும் நான் குந்தானிக்கருப்பியின் அழகை வர்ணிக்க போவதில்லை. அதற்கு பதில் உண்மையான குந்தானியை தான் வர்ணிக்க போகிறேன். கதையின் கடைசியில் யார் அழகு என நீங்களே சொல்லுங்கள்.\\
ReplyDeleteஅடுத்தத் தொடர் சீக்கிரம் போடவும்.
சூப்பர்!
நன்றி படகு! சீக்கிரம் போடுறேன்!
ReplyDeleteகுந்தாணி னு இல்லை எழுதி இருக்கணும்?? காலம்பரவே பார்த்துட்டேன், வர நேரமே இல்லை, ஆற்காட்டார் வேறே இன்னிக்கு நினைச்ச நேரமெல்லாம் வந்து ஒரே தொந்திரவு!
ReplyDeleteஜீவ்ஸுக்கு ஒரு ரிப்பீட்டே போட்டுட்டுப் போறேன்! :P:P:P:P:P
நன்றி கீதாம்மா, தப்பை சரி பண்ணிட்டேன்!
ReplyDeletekundhaani rombavum innocenta irukkaalay!!!!!!
ReplyDeleteஆஹா....என்னா ரோசனை!என்னா ரோசனை. தொடரச் சொன்ன வார்த்தைகளை வைத்து தொடர்கதை.
ReplyDelete//இப்போ கூட தான் செத்து போனா விஜய் வந்து தூக்கி போடுவார் என நினைத்து கொண்டிருக்கும் ஒரு அப்பாவி.
//
நம்ப குந்தாணி அம்மா இப்படித்தான் எம்சியார நெனச்சுச்சு :))
கீதா மேடம் சொன்னது சரி, ‘குந்தாணி’ என்றுதான் சொல்வாங்க. இது புழக்கத்தில் இருந்த வார்த்தைதான் ஒரு காலத்தில். குறிப்பா சரியா வேலை செய்ய வராத பொண்ணுங்களை அம்மாக்கள் ‘குந்தாணி மாதிரி வளர்ந்திருக்கிறாளே தவிர ஒரு விவரமும் பத்தல’ என்பார்கள்:). கதை நாயகியும் ஒரு வெள்ளந்தின்னுட்டீங்க. அங்க சுத்தி இங்க சுத்தி அம்மா, பொண்ணு, வேலைன்னு உங்க ரூட்டுக்கு வந்துட்டேன் பாருங்க:))!
ReplyDeletekavidhai supera iruku sithappa!ithe pola nalla nalla kavidhaikalai unga kitta irunthu melum melum ethirparkirom.
ReplyDeleteகுந்தாணிக்கு ராமலக்ஷ்மி சொன்ன விளக்கமே சரி. நானும் எங்க அம்மாக்கிட்டே அடிக்கடி,'குந்தாணி..குந்தாணி' என்று செல்லமாக திட்டு வாங்கியிருக்கிறேன். அண்ணன் கூட, 'கூதரப் பிசாசு! கூவை!' என்றெல்லாம் வைவார். இதற்கெல்லாம் அர்த்தம் தெரியாது.
ReplyDeleteதஞ்சை மொழியா? ஆவலுடன் காத்திருக்கோம்.
ReplyDeleteஅனுஜன்யா
மதுரை, திண்டுக்கல் பக்கம் உரலில் மீது வைப்பதுதான் குந்தாணி. நீங்கள் சொல்வது பெயர் குதிர். நெல்லு, தானியங்கள் கொட்டி வைக்கும் குதிர். இதையும் பெண்களுக்கு சொல்வார்கள். குதுரு மாதிரி வளர்ந்துருக்கையே அறிவிருக்கா என்று திட்டுவார்கள். ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு பேச்சு வழக்கு.
ReplyDelete