பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

February 13, 2009

காணவில்லை! காரணம் என்ன? - கோவியார் பெசல் கும்மி!ஸ்வாமி அபியப்பானந்தாவின் வயித்தெரிச்சலை இங்கே கொட்டிகிட்ட சிங்கை ஜிங்கம் கோவியாரின் அழகான குசும்ப சித்தரால் பாடல்பெற்ற ஸ்தலமான அந்த அழகிய செல்ல தொப்பை எங்கே என நாம் கண்ணில் விளக்கெண்ணெய் விட்டு ஆராய்ச்சி செய்தோம்.
அவரின் பழைய அந்த போட்டோ இங்கே!


இப்படியாக இருந்த கோவியார் தனக்கு குசும்ப சித்தரால் ஏற்பட்ட டேமேஜின் காரணமாக இந்த முறை கோவை சென்று ஸ்வாமி ஓம்கார் அவர்களோடு ஆப்பிள் ஜூஸ் குடித்து கொண்டே ஆலோசனை செய்ததோடு மட்டும் அல்ல ஸ்வாமிகளோடு பத்து நிமிடம் தியானத்தில் கலந்து கொண்டு திரும்பி வரும் போது இப்படி ஆகிவிட்டார்! எப்படி இருந்த கோவியார் இப்படி ஆகிட்டார்!

இதை கேள்விப்பட்ட மாநக்கல் சிபியாரும், வடகரை அண்ணாச்சியோடு போய் ஸ்வாமி ஓம்கார் அவர்களை சந்தித்தும் ஆப்பிள் ஜூஸ் கிடைக்காமல் கொண்டு சென்ற பானையோடு திரும்பி வந்தனர் என்பது ஒரு உபரி செய்தி!

மக்கா! இதிலே ஏதும் நுன்னரசியல் பண்ணிடாதீங்க! ஸ்வாமி ஓம்கார் அவர்களும் நல்ல நகைச்சுவை உணர்வுடையவர் என்கிற நம்பிக்கைல தான் அவரை கேட்காமல் அவரின் புகைப்படம் வெளியிடப்பட்டது!

46 comments:

 1. சீக்கிரமே ஸ்வாமி ஓம்கார் கூட அபி அப்பா நிற்கிற போட்டோ வெளி வரும் என்று நினைக்கிறேன்...:)

  ReplyDelete
 2. //இதை கேள்விப்பட்ட மாநக்கல் சிபியாரும், வடகரை அண்ணாச்சியோடு போய் ஸ்வாமி ஓம்கார் அவர்களை சந்தித்தும் ஆப்பிள் ஜூஸ் கிடைக்காமல் கொண்டு சென்ற பானையோடு திரும்பி வந்தனர் என்பது ஒரு உபரி செய்தி!//

  அதுக்கெல்லாம் கொடுப்பினை வேணும்.

  :)

  ReplyDelete
 3. நாமக்கல்லே வீட மாநக்கல் நல்லா இருக்கு - மத்த்தெல்லாம் சுட்டிகளேப் படிச்சிட்டு வரேன்

  ReplyDelete
 4. //ஸ்வாமி ஓம்கார் அவர்களும் நல்ல நகைச்சுவை உணர்வுடையவர் என்கிற நம்பிக்கைல தான் அவரை கேட்காமல் அவரின் புகைப்படம் வெளியிடப்பட்டது!//

  அவரு(ம்) என்ன அடிச்சாலும் தாங்குவார். எதுக்கும் ஸ்வாமிக்கு சூனியம் வைக்கத் தெரியுமான்னு கேட்டுக் கொள்வது நல்லது

  ReplyDelete
 5. ஸ்வாமி ஓம்கார் ஓங்க....
  அபி அப்பா வாங்க...
  என்ற தலைப்பில்தானே...நிஜமா நல்லவா?

  நானும் அதையே எதிர்பார்க்கிறேன்.

  ReplyDelete
 6. பதில் தாக்குதல் பலமாக இருக்கலாம் என்பதில் முன்கூட்டிய ஆயத்தங்களுக்கு தயாராகவும்...:)

  ReplyDelete
 7. ஆமா இதுல யாரை கும்மலாம் அபிஅப்பாவையா இல்லை கோவியாரையா.. ;)

  ReplyDelete
 8. ஸ்வாமி அதெல்லாம் ஸ்போர்டிவா எடுத்துக்குவாரு. ஆனா எல்லை மீறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் நாம்.

  ReplyDelete
 9. //ஸ்வாமி ஓம்கார் அவர்களும் நல்ல நகைச்சுவை உணர்வுடையவர் என்கிற நம்பிக்கைல தான் அவரை கேட்காமல் அவரின் புகைப்படம் வெளியிடப்பட்டது//

  ஸ்வாமி மிஸ்டட் இண்டியாவுக்காக போஸ் கொடுத்து இருந்தார், இவரு அனுமதி இல்லாமல் எடுத்துட்டாராம்

  அபி அப்பா ....இதெல்லாம் டூ ஹண்டரட் மச்சா இல்லே....

  கெக்கெ கே......

  ReplyDelete
 10. அபிஅப்பா..

  எப்போ கோவை வர்றீங்க?

  ReplyDelete
 11. அபி அப்பா.. எப்போ கோவை வர்றீங்க?
  (இந்தக் கேள்வியை ஏற்கனவே கேட்டுட்டேன். அவெய்ட்டிங் மாடரேஷன்ங்கற கமெண்ட் மேல தெரியல.. அதான் மறுபடி,..)

  ReplyDelete
 12. தொல்ஸ்,

  தீபா வெங்கட் படத்தை திரும்ப பதிவுல போடணும்றதுக்காக ;).......... ஒரு பதிவு. நடக்கட்டும்.. நடக்கட்டும்..

  ReplyDelete
 13. வாப்பா நி.நல்லவா! ஸ்வாமி ரொம்ப நல்லவர், அடிக்கல்லாம் மாட்டாருன்னு உருதி படுத்தப்பட்ட செய்திக்கு பின்ன தான் பதிவே போட்டேன்ப்பா!:-))

  ReplyDelete
 14. \\ கோவி.கண்ணன் said...
  //இதை கேள்விப்பட்ட மாநக்கல் சிபியாரும், வடகரை அண்ணாச்சியோடு போய் ஸ்வாமி ஓம்கார் அவர்களை சந்தித்தும் ஆப்பிள் ஜூஸ் கிடைக்காமல் கொண்டு சென்ற பானையோடு திரும்பி வந்தனர் என்பது ஒரு உபரி செய்தி!//

  அதுக்கெல்லாம் கொடுப்பினை வேணும்.

  :)\\

  கோவியாரே! கொடுப்பானை வேண்டும்ன்னு தப்பா படிச்சுட்டேன் ஜாரி:-))

  ReplyDelete
 15. \\ cheena (சீனா) said...
  நாமக்கல்லே வீட மாநக்கல் நல்லா இருக்கு - மத்த்தெல்லாம் சுட்டிகளேப் படிச்சிட்டு வரேன்\\

  ச்சீனா சார்! நாமக்கல்லை மாநக்கல்ன்னு மாத்தின வார்த்தை விளையாட்டுக்கு சொந்தக்காரன் சென்ஷியாக்கும்!

  ReplyDelete
 16. \\ கோவி.கண்ணன் said...
  //ஸ்வாமி ஓம்கார் அவர்களும் நல்ல நகைச்சுவை உணர்வுடையவர் என்கிற நம்பிக்கைல தான் அவரை கேட்காமல் அவரின் புகைப்படம் வெளியிடப்பட்டது!//

  அவரு(ம்) என்ன அடிச்சாலும் தாங்குவார். எதுக்கும் ஸ்வாமிக்கு சூனியம் வைக்கத் தெரியுமான்னு கேட்டுக் கொள்வது நல்லது\\

  ஸ்வாமிக்கு அதல்லாம் தெரியாதாம், நாமளே சொந்த செலவிலே வச்சுகிட்டாத்தான் உண்டு:-))

  ReplyDelete
 17. \\
  சுரேகா.. said...
  ஸ்வாமி ஓம்கார் ஓங்க....
  அபி அப்பா வாங்க...
  என்ற தலைப்பில்தானே...நிஜமா நல்லவா?

  நானும் அதையே எதிர்பார்க்கிறேன்.

  February 13, 2009 6:54 AM\\

  என்ன ஒரு வில்லத்தனம்! சுரேகா போட்டோ விரைவில் குசும்ப சித்தருக்கு பார்சேல்ல்ல்ல்ல்ல்:-)

  ReplyDelete
 18. \\ தமிழன்-கறுப்பி... said...
  பதில் தாக்குதல் பலமாக இருக்கலாம் என்பதில் முன்கூட்டிய ஆயத்தங்களுக்கு தயாராகவும்...:)

  February 13, 2009 10:08 AM


  தமிழன்-கறுப்பி... said...
  ஆமா இதுல யாரை கும்மலாம் அபிஅப்பாவையா இல்லை கோவியாரையா

  வாங்க தமிழன் கறுப்பி! இதிலே என்ன சந்தேகம், கண்டிப்பா இதிலே கும்மப்பட வேண்டிய ஹீரோ நம்ம கோவியார் தான்:-)

  ReplyDelete
 19. \\ வடகரை வேலன் said...
  ஸ்வாமி அதெல்லாம் ஸ்போர்டிவா எடுத்துக்குவாரு. ஆனா எல்லை மீறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் நாம்.\\

  கண்டிப்பா அண்ணாச்சி! எல்லை தாண்டும் பயங்கவாதி எல்லாம் இல்லீங்...இதல்லாம் ச்சும்ம்மா டமாஸூ:-))

  ReplyDelete
 20. \\ஸ்வாமி மிஸ்டட் இண்டியாவுக்காக போஸ் கொடுத்து இருந்தார், இவரு அனுமதி இல்லாமல் எடுத்துட்டாராம்

  அபி அப்பா ....இதெல்லாம் டூ ஹண்டரட் மச்சா இல்லே....

  கெக்கெ கே......\\

  கோவியாரே! நான் இந்த பின்னூட்டத்தை ஆச்சுவல்லி வெளியிட வேண்டாம்ன்னு நெனச்சேன், ஏன்னா ஒரு காமடி பின்னூட்டம் போட்டா ஸ்மைலி போட வேண்டும் என்பது கூட ஒரு மூத்த பதிவருக்கு தெரியவில்லை என நாளை உலகம் உங்களை ஒரு பழி சொல்லிடக்கூடாதே என்கின்ற நல்ல எண்ணம் தான் எனக்கு!:-))

  ReplyDelete
 21. \\ பரிசல்காரன் said...
  அபிஅப்பா..

  எப்போ கோவை வர்றீங்க?\\

  பரிசல்! எனக்கு தான் தொப்பையே இல்லியே! சரி இருந்தாலும் அடுத்த தடவை கோவை விஜயம் உண்டு!

  ReplyDelete
 22. \\ வெயிலான் said...
  தொல்ஸ்,

  தீபா வெங்கட் படத்தை திரும்ப பதிவுல போடணும்றதுக்காக ;).......... ஒரு பதிவு. நடக்கட்டும்.. நடக்கட்டும்..\\

  வெயிலான்! நீங்க என்ன சொல்றீங்கன்னு எனக்கு புரியலையே! ஆமா அது யாரு அந்த புள்ள! அதுவும் கோவையா! அப்படீன்னா அது நாளை எதுனா பார்க் பக்கம் வருமா? ராம சேனா ரோந்து வரும் போது கோந்து மாதிரி ஒட்டிகிட்டா அடுத்து கண்ணாலம் தானா? ஒரே கொயப்பமா இருக்கே:-))

  ReplyDelete
 23. என்ன கொடுமை இது....அபி அப்பா எல்லா கமெண்டுக்கும் பதில் சொல்லுறாரு....:)

  ReplyDelete
 24. //இதை கேள்விப்பட்ட மாநக்கல் சிபியாரும், வடகரை அண்ணாச்சியோடு போய் ஸ்வாமி ஓம்கார் அவர்களை சந்தித்தும் ஆப்பிள் ஜூஸ் கிடைக்காமல் கொண்டு சென்ற பானையோடு திரும்பி வந்தனர் என்பது ஒரு உபரி செய்தி!//

  வாய்விட்டு சிரித்தேன்.

  ReplyDelete
 25. \\ நிஜமா நல்லவன் said...
  என்ன கொடுமை இது....அபி அப்பா எல்லா கமெண்டுக்கும் பதில் சொல்லுறாரு....:)
  \\

  அடடா நிஜமா நல்லவரே! போன பதிவுக்கு இன்னும் பதில் சொல்லலைதான்! காரணம் கொஞ்சம் நெகிழ்சியா இருந்துச்சு!

  அதிலும் இன்னிக்கு வெள்ளி லீவ்! சும்மா தான் உக்காந்து இருக்க்கேன் அதான்!

  கண்டிப்பா பதில் சொல்ல முயற்சிக்கிறேன் இனி!

  ReplyDelete
 26. வாங்க தேனியாரே! உங்க அரசியல் பின்னூட்டத்துக்கு கூட இன்னும் பதில் சொல்லவில்லை. அதுக்கு நன்றி! ஆனா சாலிசம்பர் பதிவிலே காபி பேஸ்ட் பண்ணினேன்!

  சந்தோஷம் வாய் விட்டு சிரிச்சா நோய் விட்டு போகும்!

  ReplyDelete
 27. //அதுக்கெல்லாம் கொடுப்பினை வேணும்//

  வெறும்பானையோட திரும்புறதுக்கும் கொடுப்பினை வேணுமா?

  (வெறும்பானைன்னு சொன்னது தொப்பையைக் குறித்து அல்லவே?)

  ReplyDelete
 28. //வாய்விட்டு சிரித்தேன்//

  தேனியாருக்கு ஆசிரமத்தில் இடம் ரிசர்வ் செய்யப் படுகிறது!

  சுவாமி பித்தானந்தா,
  கீழ்ப்பாக்கம்

  ReplyDelete
 29. //வெயிலான் said...

  தொல்ஸ்,

  தீபா வெங்கட் படத்தை திரும்ப பதிவுல போடணும்றதுக்காக .......... ஒரு பதிவு. நடக்கட்டும்.. நடக்கட்டும்..
  //

  ரமேஷ், இதுதான் மேட்டரா...

  ஒண்ணும் பண்ண முடியாது இராம் சேனா ஆளுங்களுக்கு போன் போட்டு போட்டுக் கொடுக்க வேண்டியதுதான். நம்ம புண்ணியத்துல தீபாவெங்கட்டுக்கு கையில ராக்கி.

  :)

  ReplyDelete
 30. //ச்சீனா சார்! நாமக்கல்லை மாநக்கல்ன்னு மாத்தின வார்த்தை விளையாட்டுக்கு சொந்தக்காரன் சென்ஷியாக்கும்!//

  சென்ஷிதான் காரணமா? அப்புறம் கவனிச்சிக்கிறேன்!

  ReplyDelete
 31. /ஆமா இதுல யாரை கும்மலாம் அபிஅப்பாவையா இல்லை கோவியாரையா.. ;)//

  அபி அப்பாவைத்தான் கும்மணும்!

  ReplyDelete
 32. அபி அப்பாவைத்தான் கும்மணும்!
  //

  அப்படியா..?

  தெரியாம போச்சே

  ReplyDelete
 33. \\ Namakkal Shibi said...
  //அதுக்கெல்லாம் கொடுப்பினை வேணும்//

  வெறும்பானையோட திரும்புறதுக்கும் கொடுப்பினை வேணுமா?

  (வெறும்பானைன்னு சொன்னது தொப்பையைக் குறித்து அல்லவே?)\\

  ச்சே ச்சே அப்படி எல்லாம் சொல்லுவோமா? நீங்க காமராஜர் மாதிரி நீள நீள கையா இருப்பதால் தானே கீ போர்டு எட்டுது என்பது எனக்கு தானே தெரியும்:-)

  ReplyDelete
 34. Your comment has been saved and will be visible after blog owner approval.
  //

  இதுக்கு பேரு கும்மியா??

  போடாங்....

  ReplyDelete
 35. அபிஅப்பா தலைகீழா நின்னாலும்
  தீபாவெங்கட் ஆண்டி கிடைக்க மாட்டாங்க..:)

  ReplyDelete
 36. \\\ சுவாமி பித்தானந்தா said...
  //வாய்விட்டு சிரித்தேன்//

  தேனியாருக்கு ஆசிரமத்தில் இடம் ரிசர்வ் செய்யப் படுகிறது!

  சுவாமி பித்தானந்தா,
  கீழ்ப்பாக்கம்\\

  சுவாமிஜி! தேனியார் தெளிவான கருத்துக்கள் கொண்டவர். அதனால் அவருக்கு கீழ்பாக்கம் மடம் தேவையிருக்காது. அவருக்கு பதிலா நான் வரட்டுமா? அங்கே என்ன பெசல் இன்னிக்கு?:-))

  ReplyDelete
 37. தேனியாருக்கு ஆசிரமத்தில் இடம் ரிசர்வ் செய்யப் படுகிறது!

  சுவாமி பித்தானந்தா,
  கீழ்ப்பாக்கம்
  //

  அப்படியே அபிஅப்பாவுக்கும் கோவிக்கும் புக் பண்ணிடுங்க :)

  ReplyDelete
 38. \\ கோவி.கண்ணன் said...
  //வெயிலான் said...

  தொல்ஸ்,

  தீபா வெங்கட் படத்தை திரும்ப பதிவுல போடணும்றதுக்காக .......... ஒரு பதிவு. நடக்கட்டும்.. நடக்கட்டும்..
  //

  ரமேஷ், இதுதான் மேட்டரா...

  ஒண்ணும் பண்ண முடியாது இராம் சேனா ஆளுங்களுக்கு போன் போட்டு போட்டுக் கொடுக்க வேண்டியதுதான். நம்ம புண்ணியத்துல தீபாவெங்கட்டுக்கு கையில ராக்கி.\\  \\நம்ம புண்ணியத்துல தீபாவெங்கட்டுக்கு கையில ராக்கி\\

  கோவியார் நீங்க இத்தன சீக்கிரம் என் கூட இருந்த போட்டியில் இருந்து விலகி தீ.வெ வை தங்கையாக ஏற்று கொள்வீர்கள் என நான் எதிர் பார்க்கவே இல்லை, அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்(இது ஆனந்த கண்ணீர் அய்யா ஆனந்த கண்ணீர்)

  ReplyDelete
 39. அவருக்கு பதிலா நான் வரட்டுமா? அங்கே என்ன பெசல் இன்னிக்கு?:-))
  //


  பிரமானந்தா சாமிகள் அங்க இருக்காங்க அத விட என்ன ஸ்பெசல் வேண்டியிருக்கு :)

  ReplyDelete
 40. கோவியார் நீங்க இத்தன சீக்கிரம் என் கூட இருந்த போட்டியில் இருந்து விலகி தீ.வெ வை தங்கையாக ஏற்று கொள்வீர்கள் என நான் எதிர் பார்க்கவே இல்லை, அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்(இது ஆனந்த கண்ணீர் அய்யா ஆனந்த கண்ணீர்)
  //

  கோவியார் விலகினாலும் போட்டி யில் 50 பேருக்கு மேல் இருக்காங்க
  அவங்களுக்கு பணம் தர ரெடியா இருந்தா பேசி பாக்காலாம்..!!!

  ReplyDelete
 41. \\ Namakkal Shibi said...
  //ச்சீனா சார்! நாமக்கல்லை மாநக்கல்ன்னு மாத்தின வார்த்தை விளையாட்டுக்கு சொந்தக்காரன் சென்ஷியாக்கும்!//

  சென்ஷிதான் காரணமா? அப்புறம் கவனிச்சிக்கிறேன்!

  February 13, 2009 1:59 PM


  Namakkal Shibi said...
  /ஆமா இதுல யாரை கும்மலாம் அபிஅப்பாவையா இல்லை கோவியாரையா.. ;)//

  அபி அப்பாவைத்தான் கும்மணும்!\\

  வாங்க சிபியாரே! சென்ஷி தான் காரணம்! அவனை கும்முங்க நான் பாவம் இல்லியா:-))

  ReplyDelete
 42. //கோவியார் நீங்க இத்தன சீக்கிரம் என் கூட இருந்த போட்டியில் இருந்து விலகி தீ.வெ வை தங்கையாக ஏற்று கொள்வீர்கள் என நான் எதிர் பார்க்கவே இல்லை, அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்(இது ஆனந்த கண்ணீர் அய்யா ஆனந்த கண்ணீர்)//

  ஆமாம் ஆமாம்....திவெ....அபிக்கு அத்தை ஆகிட்டேன்
  :)))))))

  ReplyDelete
 43. வாய்யா வெடிகுண்டு!

  மின்னல் அடிச்ச மாதிரி இருக்கும் உம்ம பின்னூட்டம் எல்லாம்! இப்ப ரொம்ப வேலை அதிகமோ! ஆளையே காணுமே!

  ReplyDelete
 44. அபி அப்பாவுக்கு ஏற்கனவே இடம் இருக்கே! அடிக்கடி வந்து போகிறவர்தான்!

  ReplyDelete
 45. //மக்கா! இதிலே ஏதும் நுன்னரசியல் பண்ணிடாதீங்க! ஸ்வாமி ஓம்கார் அவர்களும் நல்ல நகைச்சுவை உணர்வுடையவர் என்கிற நம்பிக்கைல தான் அவரை கேட்காமல் அவரின் புகைப்படம் வெளியிடப்பட்டது!//

  ஹிஹி.. என் கிட்ட கேட்டிருந்தா ஸ்வாமிகளின் பலவித படங்கள் கொடுத்துருப்பேனே.. :)))

  ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))