பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking
Showing posts with label வலைப்பதிவர் சந்திப்பு. Show all posts
Showing posts with label வலைப்பதிவர் சந்திப்பு. Show all posts

July 25, 2007

அமீரக வலைப்பதிவர் மாநாடு - அறிவிப்பு & அழைப்பு!!!

அன்பு நண்பர் சங்கத்து சிங்கம் சூடான் புலி நாகை சிவா அவர்களின் 3 நாள் துபாய் விஜயம் முன்னிட்டு வரும் வெள்ளி 27/07/07 மாலை 4.30 க்கு கராமா பார்க்கில் (போண்டா வாங்க வசதியாக சரவண பவன் எதிரில்) கூடி தமிழை அடுத்த கட்டத்துக்கு எடுத்து போவது பற்றியும், நம்ம பிளாக்ல எழுதுவதை அடமட்ட தமிழனிடம் சேர்ப்பது எப்படி என்பது பற்றியும், தல பாலபாரதி போல நாம எப்ப டி.வி ல வார்ரது என்பது பற்றியும் எல்லாம் பேசாமல் வழக்கம் போல அருமையான கும்மிகள் அடித்து திரும்புவோம் என முடிவு செஞ்சிருக்கோம்.

நான் வீட்டில் தலைகீழா நின்னு பையில் ஒட்டியிருக்கும் 25 பைசாவையும் உதறி விட்டு வாயோடு வந்துவிடுகிறேன். யார் யார் என்னென்ன எடுத்து வர்ரீங்கன்னு பின்னூட்டத்துல வந்து குமுறுங்க மக்கா!

இன்று மாலை 6.00க்கு நான் போனிலும் அழைப்பு விடுகிறேன். என்னை தொடர்பு கொள்ள 050 7495127. உங்கள் வருகையை பின்னூட்டத்தில் சொல்லிடுங்க.

July 14, 2007

மின்னியது மின்னல்!!!

ஒரு வழியாக ஒரு அருமையான சந்திப்பு நடந்துவிட்டது. அலய்ன் என்னும் இயற்க்கை சூழல் மிக்க இடத்தில் இருக்கும் நம் மின்னுது மின்னல் இடத்தில் நாங்கள் அமீரகத்தின் பரவலாக இருக்கும் வ்லைப்பதிவர்கள் சந்திக்க முடிவு செய்யப்பட்டு அதன் ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு அபிஅப்பாவுக்கு கொடுக்கப்பட்டு இந்த கூட்டம் நடக்குமோ நடக்காதோ என ஹிட்ச்காக் படம் போல எல்லோரும் மனதில் பரபரப்பை ஏற்படுத்திய அன்னாரின் திறமை வெகுவாக பாராட்டப்பட்டது.

சந்தீப்பில் கலந்துகொண்டவர்கள்:

கோபி(ஷார்ஜா)

மின்னுது மின்னல்(அலய்ன்)

லியோசுரேஷ்(அஜ்மான்)

தம்பி (அபுதாபி)

குசும்பன்(துபாய்)

மகேந்திரன்.பெ(துபாய்)

சென்ஷி(சார்ஜா) புதிதாய் டெல்லி வலைப்பதிவர்களிடம் இருந்து கடத்திவரப்பட்டவர்- கிடேசன் பார்க்க்கு

அய்யனார்(துபாய்)

அபிஅப்பா(துபாய்)

அதுதவிர துபாய் அ.மு.கவினர் சேகர்/சிவா/கார்த்தி/பிரபு/ராஜ்குமார் ஆகியோர்.

எல்லோரும் எப்டியெல்லாம் மிக சந்தோஷமாக இருந்தோம் என்பது பற்றியெல்லாம் மீதம் உள்ள வலைப்பதிவர்கள் எழுதுவதாக சொன்ன காரணத்தால் நான் அங்கு ஐஸ்கேட்டிங் நிகழ்வு மாத்திரம் சொல்வதாக உத்தேசம்.

மிகப்பெரிய மைதானம். நிறைய பேர் அங்கு மிக வேகமாக சுத்தி சுத்தி வந்தாலும் எங்கள் டீம் உள்ளே நுழையும் போதே நாங்கள் ஸ்கேட்டிங் ஷூ போடும் அழகை பார்த்ததும் அவர்களுக்கு கொஞ்சம் கிலி ஏற்ப்பட்டது என்னவோ உண்மைதான்.

முதலில் தைரியமாக அ.மு.க வினர் உள்ளே நுழைய நம் வலைப்பதிவர்கள் அவர்களுக்கு கொஞ்சமும் சளைத்தவர்கள் அல்ல என உணர்த்தும் பொருட்டு அபிஅப்பா தயாராகும் போது குசும்பனுக்கும் அபிஅப்பாவின் வீரம் தொத்திக்கொண்டது.

மகியை கூப்பிடும் போது தன் அன்பான தங்கமணியும் குழந்தைகளையும் ஒரு நிமிடம் நினத்துபார்த்து(பர்ஸில் இருந்த அவர்களது புகைப்படங்களை பார்த்து) பின் நான் உங்களை எல்லாம் போட்டோ எடுக்கிறேன் என கூறி ஒதுங்கிக்கொண்டார். லியோ சுரேஸ் அவர்களும் மகிக்கு பாதுகாப்பாக நான் இருக்கிறேன் என இருந்துவிட அபிஅப்பா புறப்பட எத்தனிக்கும் போது "ஹய்யோஓஓஓஓஓ"என்ற நம் அனானி நண்பர் கார்த்தியின் வீரிடல் அந்த அரங்கம் முழுக்க வீரிட்டது. ஆனால் தன் முயற்ச்சியில் சற்றும் தளராத அபிஅப்பா உள்ளே இறங்க குப்பனின் முயற்ச்சியும் கைப்பிடி பற்றி ஆரம்பமானது. இனி!

1. அனானி நண்பர் சிவா பல முறச்சிக்கு பின் ஒரு பெண் கையை பிடித்துக்கொண்டே மைதானத்தின் நடுவே சென்று விட்டார்.

2. அய்யனார் அருமையாக அடிப்பிரதஷ்னம் செய்தார். கேட்டதற்க்கு "இன்னு வெள்ளிகிழமை" என்றார்.

3. அபிஅப்பா அந்த மைதானம் முழுக்க அருமையாக வித்யாசமான முறையில் சுத்தி சுத்தி வந்தார். அப்போது ஏதோ தமிழ் பொண்ணுங்க போல இருக்கு 2 பேர் அபிஅப்பாவுக்கு சமாமா வந்தார்கள். அதில ஒரு பொண்ணு"இங்க பார்டீ அதிராம்பட்டிணம் சொக்கு"ன்னு சொன்னது அபிஅப்பா காதில் விழுந்தது. பாலசந்தர் படம் பார்க்கும் பொண்ணுங்க போல இருக்கு!பின் ரோஷம் வந்த அபிஅப்பா கிட்டத்தட்ட 1 மணி நேரம்................எழுந்திருக்க முயற்ச்சி செய்தார்.

4. அனானி நண்பர் சேகர் இன்னும் ஒருவரோடு கைகோர்த்த படி நிற்க தேனிர் இடைவேளையின் போது "இவர் தான் என் பயிற்ச்சியாளராக்கும்" என பீற்றிக்கொண்டார்.

5. அனானி நண்பர் கார்த்தி 324 முறை எழுந்தார். நாங்கள் திரும்பி வரும் போது அவருக்கு 5 கிலோ அரிசியும் ஆர்லிக்ஸும் ஃபன் சிட்டி நிர்வாகம் தரவில்லை என்கிற கோபம் அவருக்கு வீடு வந்து சேறும் வரை தீரவில்லை.

6.குசும்பன் பாராட்டப்ப்ட வேண்டிய வலைப்பதிவர். ஒரே ஒரு முறை மட்டுமே விழுந்தார். 2 மணி நேரம் கழித்து திரும்பும் போது தூக்கி வந்தாகிவிட்டது.

7. அடிப்பிரதஷ்னம் செய்த அய்யனார் மைதானத்தின் அடுத்த எல்லைக்கு சென்று எங்களுக்கு"தொடர்பு எல்லைக்கு அப்பால் சென்று செட்டில் ஆகிவிட்டார்.

8. மைதானத்தின் நடு பகுதிக்கு ஒரு பெண்ணின் கரம் பிடித்து சென்ற நண்பர் சிவா அங்கேயே கைவிடப்பட்டு(அப்படி என்ன சொன்னார் அந்த பெண்ணிடம் என்று கடைசிவரை யாரிடமும் சொல்லவில்லை) கடல் பறவை மாதிரி திரும்ப முடியாமல் உறைந்து போனார்.

8. சென்ஷி தட்டு தடுமாறி நின்றவர் ஒரு 2 1/2 அடி உயரம் உள்ள அரேபிய சிறுவனால் நிலைகுலந்த்து போனார். அப்போது கீழே விழாமல் பேலன்ஸ் செய்த விதம் பார்வையாளர் அத்த்னை பேரையும் வயிறு குலுங்க வைய்த்தது. அப்போது ஒரு கட்டத்தில் ஒரு பாலஸ்தீன பையன் அனாயசமாக சென்ஷியை பச்சகுதிர தாண்டின விஷயம் சென்ஷிக்கு தெரியாமலே போனது.

9. இதில் தம்பி தான் அடிக்கடி ஏன் இந்த இடம் இத்தன இருட்டா இருக்குன்னு கேட்டுக்கொண்டே இருந்தார். ஆனால் கோபி"கூலிங் கண்ணாடியை கழட்டுடா வெள்ரு"ன்னு தான் தம்பியிடம் கடைசி வரை சொல்லவில்லை என காரில் திரும்பும் போது வரை சொன்னார்.

10. தம்பியும் கோபியும் அவவப்போது கீழே கிடந்த குசும்பனை நலம் விசாரித்து திரும்பினர்.

11. சென்ஷிக்கு சதையில் அடபடவேயில்லை!

12. எழுந்து நிற்க்கும் போது "தம்பி"யை காலை அகலமா வச்சி பேலன்ஸ் செய்யாதே என பலர் எச்சரித்தும் அவர் கேட்கவில்லை. அய்யனார் ஒரு முறை குறுக்கே புகுந்து போயிட்டார்.

13. எல்லாம் முடிந்து ட்திரும்பும் போது சேகரின் பயிர்ச்சியாளர் சேகரின் கையை பிடித்து கொண்டு" ரொம்ப நன்றிங்க! இந்த 2 மணி நேரமாக உங்களை நான் ஆதாரமா பிடிச்சுகிட்டு ரொம்ப எஞ்ஜாய் பண்ணினேன்ன்னு சொன்னப்போ பாவமாக இருந்தது சேகரை பார்க்க!

ஆக மொத்தத்தில் மின்னல் மின்னியது!