பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

July 14, 2007

மின்னியது மின்னல்!!!

ஒரு வழியாக ஒரு அருமையான சந்திப்பு நடந்துவிட்டது. அலய்ன் என்னும் இயற்க்கை சூழல் மிக்க இடத்தில் இருக்கும் நம் மின்னுது மின்னல் இடத்தில் நாங்கள் அமீரகத்தின் பரவலாக இருக்கும் வ்லைப்பதிவர்கள் சந்திக்க முடிவு செய்யப்பட்டு அதன் ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு அபிஅப்பாவுக்கு கொடுக்கப்பட்டு இந்த கூட்டம் நடக்குமோ நடக்காதோ என ஹிட்ச்காக் படம் போல எல்லோரும் மனதில் பரபரப்பை ஏற்படுத்திய அன்னாரின் திறமை வெகுவாக பாராட்டப்பட்டது.

சந்தீப்பில் கலந்துகொண்டவர்கள்:

கோபி(ஷார்ஜா)

மின்னுது மின்னல்(அலய்ன்)

லியோசுரேஷ்(அஜ்மான்)

தம்பி (அபுதாபி)

குசும்பன்(துபாய்)

மகேந்திரன்.பெ(துபாய்)

சென்ஷி(சார்ஜா) புதிதாய் டெல்லி வலைப்பதிவர்களிடம் இருந்து கடத்திவரப்பட்டவர்- கிடேசன் பார்க்க்கு

அய்யனார்(துபாய்)

அபிஅப்பா(துபாய்)

அதுதவிர துபாய் அ.மு.கவினர் சேகர்/சிவா/கார்த்தி/பிரபு/ராஜ்குமார் ஆகியோர்.

எல்லோரும் எப்டியெல்லாம் மிக சந்தோஷமாக இருந்தோம் என்பது பற்றியெல்லாம் மீதம் உள்ள வலைப்பதிவர்கள் எழுதுவதாக சொன்ன காரணத்தால் நான் அங்கு ஐஸ்கேட்டிங் நிகழ்வு மாத்திரம் சொல்வதாக உத்தேசம்.

மிகப்பெரிய மைதானம். நிறைய பேர் அங்கு மிக வேகமாக சுத்தி சுத்தி வந்தாலும் எங்கள் டீம் உள்ளே நுழையும் போதே நாங்கள் ஸ்கேட்டிங் ஷூ போடும் அழகை பார்த்ததும் அவர்களுக்கு கொஞ்சம் கிலி ஏற்ப்பட்டது என்னவோ உண்மைதான்.

முதலில் தைரியமாக அ.மு.க வினர் உள்ளே நுழைய நம் வலைப்பதிவர்கள் அவர்களுக்கு கொஞ்சமும் சளைத்தவர்கள் அல்ல என உணர்த்தும் பொருட்டு அபிஅப்பா தயாராகும் போது குசும்பனுக்கும் அபிஅப்பாவின் வீரம் தொத்திக்கொண்டது.

மகியை கூப்பிடும் போது தன் அன்பான தங்கமணியும் குழந்தைகளையும் ஒரு நிமிடம் நினத்துபார்த்து(பர்ஸில் இருந்த அவர்களது புகைப்படங்களை பார்த்து) பின் நான் உங்களை எல்லாம் போட்டோ எடுக்கிறேன் என கூறி ஒதுங்கிக்கொண்டார். லியோ சுரேஸ் அவர்களும் மகிக்கு பாதுகாப்பாக நான் இருக்கிறேன் என இருந்துவிட அபிஅப்பா புறப்பட எத்தனிக்கும் போது "ஹய்யோஓஓஓஓஓ"என்ற நம் அனானி நண்பர் கார்த்தியின் வீரிடல் அந்த அரங்கம் முழுக்க வீரிட்டது. ஆனால் தன் முயற்ச்சியில் சற்றும் தளராத அபிஅப்பா உள்ளே இறங்க குப்பனின் முயற்ச்சியும் கைப்பிடி பற்றி ஆரம்பமானது. இனி!

1. அனானி நண்பர் சிவா பல முறச்சிக்கு பின் ஒரு பெண் கையை பிடித்துக்கொண்டே மைதானத்தின் நடுவே சென்று விட்டார்.

2. அய்யனார் அருமையாக அடிப்பிரதஷ்னம் செய்தார். கேட்டதற்க்கு "இன்னு வெள்ளிகிழமை" என்றார்.

3. அபிஅப்பா அந்த மைதானம் முழுக்க அருமையாக வித்யாசமான முறையில் சுத்தி சுத்தி வந்தார். அப்போது ஏதோ தமிழ் பொண்ணுங்க போல இருக்கு 2 பேர் அபிஅப்பாவுக்கு சமாமா வந்தார்கள். அதில ஒரு பொண்ணு"இங்க பார்டீ அதிராம்பட்டிணம் சொக்கு"ன்னு சொன்னது அபிஅப்பா காதில் விழுந்தது. பாலசந்தர் படம் பார்க்கும் பொண்ணுங்க போல இருக்கு!பின் ரோஷம் வந்த அபிஅப்பா கிட்டத்தட்ட 1 மணி நேரம்................எழுந்திருக்க முயற்ச்சி செய்தார்.

4. அனானி நண்பர் சேகர் இன்னும் ஒருவரோடு கைகோர்த்த படி நிற்க தேனிர் இடைவேளையின் போது "இவர் தான் என் பயிற்ச்சியாளராக்கும்" என பீற்றிக்கொண்டார்.

5. அனானி நண்பர் கார்த்தி 324 முறை எழுந்தார். நாங்கள் திரும்பி வரும் போது அவருக்கு 5 கிலோ அரிசியும் ஆர்லிக்ஸும் ஃபன் சிட்டி நிர்வாகம் தரவில்லை என்கிற கோபம் அவருக்கு வீடு வந்து சேறும் வரை தீரவில்லை.

6.குசும்பன் பாராட்டப்ப்ட வேண்டிய வலைப்பதிவர். ஒரே ஒரு முறை மட்டுமே விழுந்தார். 2 மணி நேரம் கழித்து திரும்பும் போது தூக்கி வந்தாகிவிட்டது.

7. அடிப்பிரதஷ்னம் செய்த அய்யனார் மைதானத்தின் அடுத்த எல்லைக்கு சென்று எங்களுக்கு"தொடர்பு எல்லைக்கு அப்பால் சென்று செட்டில் ஆகிவிட்டார்.

8. மைதானத்தின் நடு பகுதிக்கு ஒரு பெண்ணின் கரம் பிடித்து சென்ற நண்பர் சிவா அங்கேயே கைவிடப்பட்டு(அப்படி என்ன சொன்னார் அந்த பெண்ணிடம் என்று கடைசிவரை யாரிடமும் சொல்லவில்லை) கடல் பறவை மாதிரி திரும்ப முடியாமல் உறைந்து போனார்.

8. சென்ஷி தட்டு தடுமாறி நின்றவர் ஒரு 2 1/2 அடி உயரம் உள்ள அரேபிய சிறுவனால் நிலைகுலந்த்து போனார். அப்போது கீழே விழாமல் பேலன்ஸ் செய்த விதம் பார்வையாளர் அத்த்னை பேரையும் வயிறு குலுங்க வைய்த்தது. அப்போது ஒரு கட்டத்தில் ஒரு பாலஸ்தீன பையன் அனாயசமாக சென்ஷியை பச்சகுதிர தாண்டின விஷயம் சென்ஷிக்கு தெரியாமலே போனது.

9. இதில் தம்பி தான் அடிக்கடி ஏன் இந்த இடம் இத்தன இருட்டா இருக்குன்னு கேட்டுக்கொண்டே இருந்தார். ஆனால் கோபி"கூலிங் கண்ணாடியை கழட்டுடா வெள்ரு"ன்னு தான் தம்பியிடம் கடைசி வரை சொல்லவில்லை என காரில் திரும்பும் போது வரை சொன்னார்.

10. தம்பியும் கோபியும் அவவப்போது கீழே கிடந்த குசும்பனை நலம் விசாரித்து திரும்பினர்.

11. சென்ஷிக்கு சதையில் அடபடவேயில்லை!

12. எழுந்து நிற்க்கும் போது "தம்பி"யை காலை அகலமா வச்சி பேலன்ஸ் செய்யாதே என பலர் எச்சரித்தும் அவர் கேட்கவில்லை. அய்யனார் ஒரு முறை குறுக்கே புகுந்து போயிட்டார்.

13. எல்லாம் முடிந்து ட்திரும்பும் போது சேகரின் பயிர்ச்சியாளர் சேகரின் கையை பிடித்து கொண்டு" ரொம்ப நன்றிங்க! இந்த 2 மணி நேரமாக உங்களை நான் ஆதாரமா பிடிச்சுகிட்டு ரொம்ப எஞ்ஜாய் பண்ணினேன்ன்னு சொன்னப்போ பாவமாக இருந்தது சேகரை பார்க்க!

ஆக மொத்தத்தில் மின்னல் மின்னியது!

25 comments:

  1. இன்னைக்கும் நான் தான் உங்களுக்கு ஊருகாய போதும்யா முடியல ஒரு கையால டைப் செய்ய ரொம்ப கஷ்டமா இருக்கு.

    நல்ல வேளை சாதா ஷூ போட்டே சறுக்கி விழுந்த பற்றி சொல்லவே இல்ல..அப்ப நீங்க ஓட்ட வாய் முதலி இல்ல

    ReplyDelete
  2. சிம்ரன் ஆப்பக்கடை ஆளுங்க யாரும் கலந்து கொள்ளவில்லையா ?

    மேல் மாடி காலியாகி விட்டதா ?

    ReplyDelete
  3. வாய்யா குசும்பா! நீ அடிச்ச கூத்து இருக்கே! ரொம்ப ஜோரா ஸ்கேட்டிங் ஷூ போட்டப்ப நான் கூட பயந்துட்டென்யா!

    ReplyDelete
  4. வாங்க கோவி.கண்ணன்! அண்ணாச்சி சென்னைக்கு போயிட்டாரு. அதனால அவங்க யாரும் "அண்ணாச்சி வராம வரமாட்டோம்"ன்னு சொல்லிட்டாங்க! மேல்மாடி காலியா என்னான்னு எனக்கு செய்தி ஒன்னும் இன்னும் வரலை!:-))

    ReplyDelete
  5. வாங்க டாக்டர்! மிக்க நன்றி! ரொம்பவே எஞ்சாய் செஞ்சோம்!

    ReplyDelete
  6. வணக்கம் மக்களே,

    தமிழே டைப் செய்யமுடியமல் இருந்தவனை, தம்பியின் உதவியால் இந்த பின்னூட்டம்.
    நேற்று நம்ம தொள்ஸ் அலெய்ன்னுக்கு போலாம் வாய்யானு கூப்பிட்ட பொழுது நம்மல மாதிரி குடும்ப இஸ்த்தரியாச்சேனு நம்பிதான்யா போனேன், அங்க நம்ம மின்னல்லோடு சேர்ந்து வச்ச ஆப்பு மறக்க முடியலய்யா.
    1.மின்னலின் அன்பான உபசரிப்பில் நாலு கால் கோழி பிரியாணி சாப்பிட்டது
    2.ஸ்கேட்டிங் செய்கிறேன் என்று வீர தழும்புகளோடு திரும்பியது
    3.சின்ன பிள்ளைகள் ஒட்டும் டேஷிங் காரை மிகச்சிறப்பாக லியோசுரேஷ் ஓட்டியது!!!!
    4.ஒரு மனுஷன எப்படியெல்லாம் சுத்த முடியுமோ அந்த அளவுக்கு சுத்தியது.
    5.கடைசியாக கிளம்பும் பொழுது உயிர் காட்சி சாலைக்கு போயே தீரனும் என்று தம்பி அழுது அடம்பிடித்தது.
    6.இறுதியாக மின்னல் ரூமில் டீ சாப்பிட்டது ...பற்றியெல்லாம் பதிவர்கள் சொல்வார்கள்...நான் சொல்லபொவது திரும்பி வரும்பொழுது நான் தான் வண்டி ஒட்டினேன், ஆனா என் லைஸன்ஸ்சுக்கு 14 ஸீட்டர் வண்டிய ஓட்டக்கூடாதுனு யருக்குமே சொல்லல.

    லியோ சுரேஷ்

    ReplyDelete
  7. :p
    meeting pic illaiya?

    ReplyDelete
  8. :))))))

    அபி அப்பா வலைப்பதிவு மீட்டிங்க் இப்படித்தான் இருக்கணும்.

    எல்லாரும் மண்ணின் நலம் விசாரிப்பார்கள். நீங்க எல்லாம் ஐஸ் நல்லா இருக்கானு சுவைத்துவிட்டு வந்தீர்களா.
    டெல்ஃபின் வேற எலும்பு பத்திரமானு கேட்டு இருக்காங்க.

    ஸ்கேட்டிங் படிக்க இத்தனை சிரிப்பான்னு மகன் கேட்டுட்டுப் போறான்...
    ஒரு ஒரு வரியும் அக்ஷரலட்சம் பெறும்....நன்றி.

    ReplyDelete
  9. :) விழுந்த கணக்கு போடாமல் எழுந்த கணக்கு சொல்லி இருக்கீங்க..ஆகா என்ன ஒரு புத்திசாலித்தனம்.

    சென்ஷியை கடத்திதான் சென்றீர்கள் என்பதற்கு ஒப்புதல் வாக்குமூலம் தந்திருக்கிறீர்களே?

    என்னைக்கு இருந்தாலும் என் ஆர் ஐக்கு இந்திய உரிமை இருக்கற மாத்ரி சென்ஷிக்கு தில்லி வலைப்பதிவாளர் என்கிற அந்தஸ்து உண்டு..

    ReplyDelete
  10. "ஸ்கேட்டிங் படிக்க இத்தனை சிரிப்பான்னு மகன் கேட்டுட்டுப் போறான்..."

    அபி அப்பா அதுக்குதான் குப்புற படுத்து ஏதும் எழுதி இருக்கான்னு ஐஸ்ல தேடிக்கிட்டு இருந்தாரா அபி அப்பா நீங்க எப்படி குப்புற விழுந்திங்க??

    ReplyDelete
  11. ஹ ஹா!!!
    நல்லா கும்மியடிச்சிருக்கீங்க போல!!
    நடத்துங்க!!!

    எனக்கும் இந்த மாதிரி ஒரு பனிச்சறுக்கு அனுபவம் இருக்கு
    நானும் அன்னைக்கு கன்னா பின்னான்னு விழுந்து எழுந்துகிட்டு இருந்தேன்!! :-)

    அது இருக்கட்டும்!! சந்திப்புக்கு நம்ம கோபிநாத் வரலையா??

    ReplyDelete
  12. //Leo Suresh said...
    வணக்கம் மக்களே,

    தமிழே டைப் செய்யமுடியமல் இருந்தவனை, தம்பியின் உதவியால் இந்த பின்னூட்டம்.
    நேற்று நம்ம தொள்ஸ் அலெய்ன்னுக்கு போலாம் வாய்யானு கூப்பிட்ட பொழுது நம்மல மாதிரி குடும்ப //

    வாங்க சுரேஷ்! ஆஹா பதிவு மாதிரியே இருக்கு பின்னூட்டம். ஆக இந்த பினூட்டமும் பதிவாகவே கருதப்படுகிறது!

    ReplyDelete
  13. //†hµrgåh said...
    :p
    meeting pic illaiya? //

    வாங்க துர்க்கா! படம் இந்நேரம் கிடத்திருக்குமே!

    ReplyDelete
  14. //ஸ்கேட்டிங் படிக்க இத்தனை சிரிப்பான்னு மகன் கேட்டுட்டுப் போறான்...
    ஒரு ஒரு வரியும் அக்ஷரலட்சம் பெறும்....நன்றி. //

    வாங்க வல்லிம்மா! ஏதோ அபிபாப்பா போல சின்ன பசங்களே சர் புர்ன்னு போகுதேன்னு ஒரு நப்பாசை இறங்கியாச்சு, பின்ன தான் தெரிஞ்சுது இத்தனையும். அதுல அந்த சின்ன பசங்க எங்கள புழு மாதிரி பார்துதுங்க பாருங்க அதான் டாப்பே!;-))

    ReplyDelete
  15. //முத்துலெட்சுமி said...
    :) விழுந்த கணக்கு போடாமல் எழுந்த கணக்கு சொல்லி இருக்கீங்க..ஆகா என்ன ஒரு புத்திசாலித்தனம்.
    //

    வாங்க முத்துலெஷ்மி! எழுந்ததே பெரிய்ய சாதனையா இருந்துச்சு! தோ நம்ம குசும்பனை பாருங்க ஒரே தடவை தான் விழுந்தாரு, அது சாதனையா?:-))

    ReplyDelete
  16. //அபி அப்பா அதுக்குதான் குப்புற படுத்து ஏதும் எழுதி இருக்கான்னு ஐஸ்ல தேடிக்கிட்டு இருந்தாரா அபி அப்பா நீங்க எப்படி குப்புற விழுந்திங்க?? //

    குசும்பா! உனக்கு ஏகத்துக்கும் குசும்புய்யா:-))

    ReplyDelete
  17. எங்கே பிடிச்சீங்க இந்த லியோ சுரேஷை? தமிழ் எழுதறதிலே உங்களுக்கு மேலே வல்லவரா இருக்காரே? நல்லா எஞ்ஜாய் பண்ணி இருக்கீங்க போலிருக்கு! ம்ம்ம்ம், கை, கால் ஒண்ணா இருக்கிறவரை சந்தோஷம்! :P

    ReplyDelete
  18. போட்டோவை எனக்கு அனுப்பலையே... :(

    அனுப்புய்யா சீக்கிரம் நான் புடிச்சது கிடைத்ததா..?


    alif007@gmail.com

    ReplyDelete
  19. \\சந்தீப்பில் கலந்துகொண்டவர்கள்:

    மின்னுது மின்னல்(அலய்ன்)

    லியோசுரேஷ்(அஜ்மான்)

    தம்பி (அபுதாபி)

    குசும்பன்(துபாய்)

    மகேந்திரன்.பெ(துபாய்)

    சென்ஷி(சார்ஜா) புதிதாய் டெல்லி வலைப்பதிவர்களிடம் இருந்து கடத்திவரப்பட்டவர்- கிடேசன் பார்க்க்கு

    அய்யனார்(துபாய்)

    அபிஅப்பா(துபாய்)

    அதுதவிர துபாய் அ.மு.கவினர் சேகர்/சிவா/கார்த்தி/பிரபு/ராஜ்குமார் ஆகியோர்.\\

    அய்யா அபி அப்பா அவர்களே...நானும் உங்க கூட தானே வந்தேன்.....என்ன கொடுமை சார் இது ;((((((

    ReplyDelete
  20. \\CVR said...
    ஹ ஹா!!!
    நல்லா கும்மியடிச்சிருக்கீங்க போல!!
    நடத்துங்க!!!

    எனக்கும் இந்த மாதிரி ஒரு பனிச்சறுக்கு அனுபவம் இருக்கு
    நானும் அன்னைக்கு கன்னா பின்னான்னு விழுந்து எழுந்துகிட்டு இருந்தேன்!! :-)

    அது இருக்கட்டும்!! சந்திப்புக்கு நம்ம கோபிநாத் வரலையா??\\

    ஆஹா.....நன்றி CVR நன்றி ;))))

    ReplyDelete
  21. //அப்போது ஒரு கட்டத்தில் ஒரு பாலஸ்தீன பையன் அனாயசமாக சென்ஷியை பச்சகுதிர தாண்டின விஷயம் சென்ஷிக்கு தெரியாமலே போனது.// :-)) விழுந்து கிடந்தது சிரிப்பான்னு கேட்காதீங்க அதை அப்படியே காட்சிப்படுத்தி பார்த்ததில் ரொம்ப :-)))

    எங்களை கூப்பிட்டிருந்தா வந்திருப்போம்ல?

    ReplyDelete
  22. கீதாம்மா,

    //எங்கே பிடிச்சீங்க இந்த லியோ சுரேஷை? தமிழ் எழுதறதிலே உங்களுக்கு மேலே வல்லவரா இருக்காரே?//

    நாங்க எல்லாம் படிப்பது அபி அப்பா பதிவு தான் அப்ப எங்க தமிழ் இப்படித்தனே இருக்கும்.
    சின்னபுள்ளைய அழவைக்கதீங்க...அவ்..

    லியோ சுரேஷ்

    ReplyDelete
  23. //அப்போது ஒரு கட்டத்தில் ஒரு பாலஸ்தீன பையன் அனாயசமாக சென்ஷியை பச்சகுதிர தாண்டின விஷயம் சென்ஷிக்கு தெரியாமலே போனது.//

    உண்மையிலேயே அது எனக்கு தெரியாதுங்க ..

    //சென்ஷியை கடத்திதான் சென்றீர்கள் என்பதற்கு ஒப்புதல் வாக்குமூலம் தந்திருக்கிறீர்களே?

    என்னைக்கு இருந்தாலும் என் ஆர் ஐக்கு இந்திய உரிமை இருக்கற மாத்ரி சென்ஷிக்கு தில்லி வலைப்பதிவாளர் என்கிற அந்தஸ்து உண்டு.. //

    ஆமாங்க்கா

    துபாயிலிருந்து
    சென்ஷி

    ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))