இன்றைக்கு டாக்டர்கள் தினம் என நம்ம வலைப்பூ டாக்டர் டெல்பின் ஒரு பதிவு போட்டு முடிஞ்சா தெரிஞ்ச டாக்டருக்கு ஒரு ரோஜா பூவாவது கொடுக்கலாமேன்னு சொல்லியிருந்தாங்க! நல்ல விஷயம் தான். என்னால பொக்கே கொடுக்கும் தூரத்தில் என் டாக்டர் இல்லாமையால் ஒரு பக்கா பதிவு வேண்டுமானால் தரலாம் என நினைத்தே இந்த பதிவு.
நான் மட்டுமல்ல மயிலாடுதுறைவாசிகள் அத்தனை பேருக்கும் இவரை தெரியாமல் இருக்க வாய்ப்பு இல்லை. சுத்து வட்டார அத்தினி கிராம மக்களுக்கும் இவர் கிட்டத்தட்ட தெய்வம் மாதிரிதான்.
எனக்கு தெரிஞ்சு அவருக்கு 70 வயதுக்கு மேல இருக்கும். ஒரு ஏழ்மையான குடும்பத்தில் முடிகொண்டான் என்னும் கிராமத்தில் பிறந்து வள்ர்ந்து படித்து டாக்டராகி மயிலடுதுறையில் செட்டிலாகி மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் கௌரவ டாக்டராக (அதாவது சம்பளம் வாங்கமல் உழைப்பது-அப்போது அது நடைமுறையில் இருந்தது, இப்போது இல்லை) இருந்து கொண்டே ஒரு கிளினிக் ஆரம்பித்து ஏழைகளுக்கு முடிந்த வரை இலவசமாக பணி செய்து தனக்கு வரும் சாம்பிள் மாத்திரைகளை அவர்களுக்கு கொடுத்து அப்பப்பா அவரின் குணம் யாருக்கும் வராது.
நான் சின்ன வயசா இருக்கும் போது அவரின் ஃபீஸ் நம்பினால் நம்புங்க 1 ரூபாய் தான். மாத்திரை கூட 10 பைசா ரேஞ்சுக்குதான் எழுதி தருவார். விலைவாசி ஏற ஏற அவர் பீஸ் ஏத்திக்காமலே இருந்ததால் 1 ரூபா ஃபீஸா தர மக்கள் வெக்கப்பட்டு 2 ரூபாயா கொடுக்க ஆரம்பிச்சு இப்போ நான் போன போது 10 ரூபாய்க்கு வந்து விட்டார்.
அவருடைய கிளினிக் அத்தனை ஒரு சுத்தமாக இருக்கும். அழகான ரோஸ்வுட் டேபில்/சேர் இருக்கும். ஆனால் அதில் அவர் ஒரு முறை கூட உக்காந்து பார்த்ததில்லை. அது போல் சட்டை போட்டும் பார்த்ததில்லை. கை வைத்த பனியன், தோளில் ஸ்டெத்தை துண்டு மாதிரி போட்டிருப்பார். அது போல் அவர் பேண்ட் போட்டு மயிலாடுதுறையில் யாரும் பார்த்ததில்லை. அதுபோல் பேஷண்ட் உட்கார ஒரு ஸ்டூல் இருக்கும் அதில் உட்கார வச்சி அவர் வைத்தியம் பார்த்ததே இல்லை. அப்படியே நின்னுகிட்டே பார்த்து பேசி பிரிஸ்கிரிப்ஷன் எழுதி கொடுத்து அனுப்பி விடுவார். ஆனால் கண்டிப்பாக மாத்திரை வாங்கியவுடன் அவரிடல் வந்து காட்டிவிட்டு போக சொல்லுவார். காரணம் அவர் எழுத்து மயூரா பார்மஸிக்கும் ஆண்டவனுக்கும் மட்டுமே புரியும். சில சமயம் மயூரா பார்மஸி தப்பு செஞ்சுட்டா என்ன பண்ணுவது என்பதால் அவரிடம் காட்டி செல்ல வேண்டும்.
எங்க ஊர்ல இருக்கும் டாக்டரிலேயே அதிகம் கூட்டம் வரும் டாக்டர் இவர்தான். ஆனால் கிளினிக் எப்பவும் காலியாவே இருக்கும். ஏனனில் ஒரு பேஷண்ட்க்கு இவர் எடுத்து கொள்ளும் நேரம் 5 நிமிடம் மட்டுமே. அது போல் இவர் நோயை டயகனைஸ் செய்வது போல் சுத்து வட்டாரத்தில் வேறு யாரும் இவருக்கு நிகரில்லை எனலாம்.
மத்த பெரிய பெரிய டாக்டர்கள் எல்லாம் கூட செகண்ட் ஒப்பீனியனுக்கு இவரிடம் தான் அனுப்புவார்கள் சில கிரிட்டிகள் கேஸ்களுக்கு. இவருக்கு ஒரு மகன் பெயர் சீனிவாசன் எனக்கு ஒரு வருஷ ஜூனியர் 1 முதல் 12 படிக்கும் வரை. இப்போது தமிழ்நாட்டிலேயே புகழ் வாய்ந்த சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நிபுனர். அவர் மனைவியும் அதேபோல் புகழ் பெற்ற டாக்டர். (அனேகமாக டாக்டர் டெல்பின் அவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பு உண்டு-சென்னையில்தான் இருக்கிறார்) அப்பாவுக்கு தப்பாத பிள்ளை. அப்பா லெட்டர் கொடுத்து விடுவார். பையன் காசு வாங்காமல் அறுவை சிகிச்சை செய்வார். அப்படி ஒரு குணம்.
எங்க ஊர்ல உள்ள அத்தனை குடும்பமும் அவருக்கு அத்துப்படி. நான் போனால் என்னய விட்டுட்டு பெரியப்பா/சித்தப்பா/அப்பா/மாமா/ அப்படீன்னு ஆரம்பிச்சு கிளப்பிளே இந்த வருஷம் யார ப்ரசிடெண்ட்டா ஆக்க போறேள்ன்னு ஆரம்பிச்சு எல்லாத்தையும் பேசிடுவார்.
சென்னையில் கிரிக்கெட் மேட்சுன்னா கண்டிப்பா ஆஜராகிவிடுவார். அதுபோல கார்த்திகை அன்னிக்கு வைத்தீஸ்வரன் கோவிலுக்கு செல்வமுத்துகுமரன் அபிஷெகத்துக்கு எதுத்தப்புல உள்ள டாக்ஸி ஸ்டாண்டில் கார் பிடித்து கொண்டு போயிடுவார். அன்னிக்கு அந்த கை பனியனும் கிடையாது மேல் துண்டுதான். அவருக்கு தி.மு.க, அ.தி.மு.க, காங்கிரஸ், ஏழை,பணக்காரன், ஜாதி,மதம் எதுவுமே கிடையாது.
காலை 7.00 மணிக்கு திறந்துடுவார். மதியம் 1.00 சாத்திட்டு வீட்டுக்கு உள்ள போயிடுவார். மாலை 3.30க்கு ஆரம்பிச்சு டான்னு 7.00க்கு உள்ளே போயிடுவார். தெய்வ கடாச்சமா இருப்பார்.
அவருக்கு நண்பர்ன்னு பார்த்தா டாக்டர் நாராயனன் L.I.M அவர்கள் தான். அவர் எதித்த வீடு. ரெண்டு பேரும் காம்பவுண்ட் சுவத்துல கை வச்சுகிட்டு (நடுவே பிசியான ரோடு) பேசிக்கிட்டே இருப்பாங்க. ஒரு தனி கேரக்டர் அவர்.
எனக்கு ஒரு ஆசை. அவர் வாழும் காலத்திலேயே அந்த பட்டமங்கல தெருவுக்கு "டாக்டர் ராமமூர்த்தி சாலை"ன்னு பேர் வச்சு மயிலாடுதுறை நகராட்சி நல்ல பேர் எடுத்துக்கனும். விதை போட்டுவிட்டுதான் வந்திருக்கேன். பார்ப்போம்!!
எங்க பேரையும் வைக்கனும்
ReplyDeleteசும்மா இது
ReplyDeleteபின்ன வரும்
(படிச்ச பிறகு)
சூப்பர் மனிதர் அவர்.
ReplyDeleteவாய்யா போலி டாக்டர், எங்கேர்ந்துதான் மூக்குல வேர்க்குமோ!
ReplyDelete//அது போல் அவர் பேண்ட் போட்டு மயிலாடுதுறையில் யாரும் பார்த்ததில்லை.//
ReplyDeleteஎன்ன கொடுமை அபிஅப்பா இது!
மின்னல் எங்கய்யா ஆளயே காணும்!
ReplyDeleteஅபிஅப்பா,
ReplyDeleteநல்ல டாக்டருக்கு பாராட்டு எழுதியது போல், மணப்பாறை டாக்டர் பத்தி எதாவது சொல்லுங்க. :)
ஆமாம் அனானி நன்பரே! அவரை பற்றி இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம், நேரமின்மையால் இத்தோடு விட்டுவிட்டேன்!
ReplyDeleteவாங்க டாக்டர் டெல்பின்! அவரை பற்றி இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்! முன்னமே எழுதியிருக்க வேண்டிய பதிவு! இந்த டாக்டர்ஸ் டேல எழுதனும்ன்னு இருந்திருக்கு. அதுக்கு நீங்க போட்ட பதிவுதான் உந்துதல்! உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்!!
ReplyDeleteஅபி அப்பா said...
ReplyDeleteமின்னல் எங்கய்யா ஆளயே காணும்!
//
அடபாவிங்களா நேத்து கமல் ரஞ்சனி எல்லாம் யாரு... :)
அருமையான மனிதர்...வாழ்க வளமுடன்.
ReplyDeleteரொம்ப நல்ல பதிவு தலைவா ;)))
முதலில் அந்த இனிய மனிதருக்கு வாழ்த்துக்கள். அவருடைய வாழ்க்கை காலத்தில் அந்த ஊர் மக்கள் அவருடைய பணியை கெளரவிப்பது மிக மிக முக்கியம். அவர் வாழும் தெருவிற்கு அவரது பெயர் சூட்டப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. இதற்காக முழுமூச்சுடன் பாடுபடுங்கள்.
ReplyDeleteஅவரிடம் கற்றுக்கொண்ட சேவை எண்ணத்தை அனைவரும் பின்பற்ற வேண்டும்.
முக்கிய குறிப்பு: இந்தப் பதிவையும் இந்த பதிவிற்கான பின்னூட்டங்களையும் அவரிடம் காண்பிக்கவும்.
ஒரு ஈழத்து தமிழன்
முதலில் அந்த இனிய மனிதருக்கு வாழ்த்துக்கள். அவருடைய வாழ்க்கை காலத்தில் அந்த ஊர் மக்கள் அவருடைய பணியை கெளரவிப்பது மிக மிக முக்கியம். அவர் வாழும் தெருவிற்கு அவரது பெயர் சூட்டப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. இதற்காக முழுமூச்சுடன் பாடுபடுங்கள்.
ReplyDeleteஅவரிடம் கற்றுக்கொண்ட சேவை எண்ணத்தை அனைவரும் பின்பற்ற வேண்டும்.
முக்கிய குறிப்பு: இந்தப் பதிவையும் இந்த பதிவிற்கான பின்னூட்டங்களையும் அவரிடம் காண்பிக்கவும்.
ஒரு ஈழத்து தமிழன்
முதலில் அந்த இனிய மனிதருக்கு வாழ்த்துக்கள். அவருடைய வாழ்க்கை காலத்தில் அந்த ஊர் மக்கள் அவருடைய பணியை கெளரவிப்பது மிக மிக முக்கியம். அவர் வாழும் தெருவிற்கு அவரது பெயர் சூட்டப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. இதற்காக முழுமூச்சுடன் பாடுபடுங்கள்.
ReplyDeleteஅவரிடம் கற்றுக்கொண்ட சேவை எண்ணத்தை அனைவரும் பின்பற்ற வேண்டும்.
முக்கிய குறிப்பு: இந்தப் பதிவையும் இந்த பதிவிற்கான பின்னூட்டங்களையும் அவரிடம் காண்பிக்கவும்.
ஒரு ஈழத்து தமிழன்
லொடுக்கரே! பேண்ட் போடமாட்டாரு வேஷ்டிதான் கட்டுவாரு. நான் ஏன் அப்படின்னு கேட்டப்ப "படிக்கும் காலத்தில் ஆசப்பட்டேன் கிடைக்கலை, பின்ன அந்த ஆசை விட்டு போச்சு"ன்னு கூலா சொன்னார்.
ReplyDeleteஅதுபோல மனப்பாறை டாக்டரை பத்தி சொல்லனும்ன்னா மங்கை பதிவிலே "குரங்காட்டிகள்" பதிவு படிங்க! அந்த ஆர்வ கோளாறுதான் காரணம்!
//எங்க ஊர்ல உள்ள அத்தனை குடும்பமும் அவருக்கு அத்துப்படி. நான் போனால் என்னய விட்டுட்டு பெரியப்பா/சித்தப்பா/அப்பா/மாமா/ அப்படீன்னு ஆரம்பிச்சு கிளப்பிளே இந்த வருஷம் யார ப்ரசிடெண்ட்டா ஆக்க போறேள்ன்னு ஆரம்பிச்சு எல்லாத்தையும் பேசிடுவார்//
ReplyDeleteஅப்படின்னா..!அ.அ
"வ.மு.பி".யா!
அடப்பாவி மின்னல்! நீர்தானா அது! என்ன கொடுமை சரவணா!
ReplyDelete1.
ReplyDelete//எங்க ஊர்ல உள்ள அத்தனை குடும்பமும் அவருக்கு அத்துப்படி. நான் போனால் என்னய விட்டுட்டு பெரியப்பா/சித்தப்பா/அப்பா/மாமா/ அப்படீன்னு ஆரம்பிச்சு கிளப்பிளே இந்த வருஷம் யார ப்ரசிடெண்ட்டா ஆக்க போறேள்ன்னு ஆரம்பிச்சு எல்லாத்தையும் பேசிடுவார்//
அப்படின்னா..!அ.அ
"வ.மு.பி".யா!
2.
மயிலாடுதுறையில்
டாக்டர்.ராமமூர்த்தி
டாக்டர்.நாராயணன்
டாக்டர்.வெங்கட்ராமன்
இவர்களை பற்றி தெரியாதவர்களே இருக்க முடியாது
இந்த கேப்பில் நானும் இவர்களுக்கு,நன்றியையும்,வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்
(சாரி.. கொஞ்சம் அவசரப்பட்டுட்டேன். ஆமாம் ரெடியாத்தான் உக்காந்துருக்கிங்களா)
Fees மட்டும் கம்மியில்ல அபி அப்பா, அவர் கொடுக்கும் மருந்து இன்னமும் கூட பத்து அல்லது இருபது ரூபாவுக்கு மேலப் போகாது.
ReplyDeleteஇன்னமும் பல சின்னப் பசங்க அவர்கிட்டதான் போவேன்னு அடம்பிடிக்கிறாங்க. ஏன்னா அவர்தான் ஊசி போடாத டாக்டர்.(நானும் கூடத்தான். எனக்கும் ஊசின்னா இப்பக்கூட பயம்தான்)
//அவர் வாழும் காலத்திலேயே அந்த பட்டமங்கல தெருவுக்கு "டாக்டர் ராமமூர்த்தி சாலை"ன்னு பேர் வச்சு மயிலாடுதுறை நகராட்சி நல்ல பேர் எடுத்துக்கனும்.//
நல்ல கருத்து நகராட்சி ஆலோசிக்குமா?
என் பெயர உங்க ஊர் ஏதாவது ஒரு ரோட்டு க்கு வைக்க சிபாரிசு பண்ணுவீங்களா
ReplyDelete/விதை போட்டுவிட்டுதான் வந்திருக்கேன். பார்ப்போம்!! /
ReplyDeleteவிழுந்து வாரியதாகத்தான் கேள்வி பட்டோம்
என் பேர வைக்க சிபாரிசு பண்ணுங்க நர்ஸ் பேரையும் சேத்து வச்சிங்கன்னா சந்தோசம்
ReplyDeleteஉங்க குடும்பத்தில் என்ன சேர்த்திப்பிங்களா
ReplyDeleteஅய்யய்யோ அபிஅப்பா நாந்தான் உண்மைத்தமிழன்
ReplyDeleteஅது போலி
அப்ப நீ ஓனரில்லையா?
ReplyDeleteமருத்துவர் ராமமூர்த்திக்கு ஜே ஜே, அப்படியே ஒரு நல்ல மனிதரை பத்தி எழுத வேணும்னு நெனப்பு வந்ததே, அதற்கு உங்களுக்கும் ஒரு ஜே.
ReplyDeleteடாக்டர் ராமமூர்த்தி எங்க குடும்ப டாக்டர். எல்லா நோய்களுக்கும் நாங்க அவர்ட்டத்தான் போய் காட்டுவோம். அவரைப்பற்றி இங்கு வலைப்பதிவில் பதிவுச் செய்ததற்கு உங்களுக்கு மிக்க நன்றி. நம்மைப்பற்றிய செய்திகளை முன்பே அறிந்திருப்பதில் தேர்ந்தவர். நாம் அவரைக் காணும் அந்த ஒரு சில நிமிடங்களில் அதைப்பற்றி பேசி நம்மை பிரமிக்க வைப்பார். நாம் திரும்பி வரும்பொழுது நோயைப்பற்றி சரியாக அவரிடம் கூறினோமா என்ற சந்தேகம் ஏற்படுவது இயல்பு.
ReplyDeleteஎன்னிடம் பீஸ் வாங்கியதாகவே எனக்கு நினைவில்லை. அவரின் உதவியாளர் இருந்தால் வாங்கிக் கொள்வார். சமீபக்காலமாக அவரின் உதவியாளரைக் காண இயலவில்லையே? அவரைப்பற்றி ஏதேனும் தகவல் இருந்தால் பகிர்ந்துக் கொள்ளவும்.
டாக்டர் ராமமூர்த்தி வாழ்ந்துக் கொண்டிருக்கும் தெருவிற்கு டாக்டர் ராமமூர்த்தி என்றப் பெயர் சாலச்சிறந்தது. இதை நான் வழிமொழிகின்றேன்.
நன்றி
அப்துல் குத்தூஸ்.
அவ்வ்வ்வ் அபிஅப்பாக்கு என்னமோ ஆயிப்போச்சி.இப்படி நல்ல பதிவா போடுறாரு.
ReplyDelete//விழுந்து வாரியதாகத்தான் கேள்வி பட்டோம் //
ReplyDeleteஆமா!! ஆமா!! அந்த விழுப்புண்களுக்கும் இந்த டாக்டரு தான் வைத்தியம் பாத்தாராம்! :)))
கேள்விப்பட்டிருக்கிறேன்..எங்க வீட்டுல அதிகம் டாக்டர் கிட்ட போறது இல்ல...அதால அவரப்பத்தி ரொம்ப தெரியாது...இருந்தாலும் இங்கே அவருக்கு ஒரு வாழ்த்து சொல்லிக்கிறேன்.வாழ்க வளமுடன்.
ReplyDeleteநல்ல பதிவு தொல்ஸ்... இது போல நல்ல மனிதர்கள் அங்கு அங்கு இருக்க தான் செய்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு சரியான அங்கீகாரம் தான் கிடைப்பது இல்லை.
ReplyDeleteகுறைந்தப்பட்சம் சிறந்த குடிமகன் விருது ஆச்சும் அவருக்கு கொடுத்து இருக்காங்களா?
தொல்ஸ், அங்க GD மருத்துவமனை என்று ஒன்று இருக்கே.. அவங்களை பற்றி ஏதும் உங்களுக்கு தெரியுமா, கணவன், மனைவி இருவருமே மருத்துவர்கள் தான்...
ReplyDeleteஅருமையான மருத்துவர், இப்போவும் அந்த மாதிரி டாக்டர்கள் இருக்கின்றனர். சென்னையிலேயே "ஒரு ரூபாய் ஆஸ்பத்திரி" உண்டு. மருத்துவர்கள் கிட்டத் தட்ட தெய்வம் போல்தான். எங்க குடும்ப மருத்துவரும் நீங்க சொல்றாப்பலே தான் அனைவரையும் நினைவு வச்சிருப்பார். கடைசியாத் தான் எப்போ எதுக்கு மருந்து கொடுத்தோம்னு கூட நினைவு இருக்கும்.
ReplyDeleteஅபி அப்பா,
ReplyDeleteஊருக்குப் போயிட்டு வந்தாச்சா?
பையன் பிறந்ததற்கு வாழ்த்துக்கள். டாக்டர் ராமமூர்த்தியை மிக மிக நன்றாகத் தெரியும். அவரைப் பற்றி மிக அழகாக எழுதியுள்ளீர்கள்.
அவர் கையெழுத்து தான் சூப்பர். பள்ளிக் காலத்தில் அவரிடம் மெடிக்கல் சர்ட்டிபிகேட் வாங்கிக் கொடுத்திருக்கேன். என் உடம்புக்கு என்ன், டாக்டர் என்ன எழுதியிருந்தார் என்பது யாருக்குமே புரியவில்லை. ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்.
ரொம்ப கைராசி. அந்தக் காலத்துலயெல்லாம் மருத்துவம் பார்க்க வீட்டுக்குக் கூப்பிட்டால், ஒற்றை மாட்டு வண்டியில் தான் வருவார். அவருக்கென்று ஒரு ஆஸ்தான வண்டிக்காரர் ஒருவர் இருப்பார். அவர் வண்டியில் தான் வருவார்.
பட்டமங்கலத்தெருவுக்கு அவர் பெயர் வைப்பதென்பது மிக நல்ல யோசனை.
நம்ம இராமபத்திரன் சார் பற்றிக் கேள்விப்பட்டீர்களா?
அன்புடன்,
சீமாச்சு..
கும்மி கண்டின்யூஸ்
ReplyDeleteநினைக்கும்போதெல்லாம் மனம் நெகிழ வைக்கும் அற்புத மனிதர் அவர். என் உறவினர் ஒருவருக்கு ஆரம்ப நிலை ஹார்ட் அட்டாக் வேறொரு டாக்டரால் உறுதி செய்யப்பட்டு என்று மருத்துவம் பார்க்க ஆரம்பித்த பின் இரண்டாவது ஆலோசனையாய் இவரிடம் வர, பரிசோதித்தபின் இது ஹார்ட் அட்டாக் இல்லை என்று சொல்லி ஆலோசனை வழங்கினார். உறவினர் பிழைத்தார்.
ReplyDeleteகுழந்தைகளை வாஞ்சையோடு கொஞ்சுவதை கேட்கவேண்டுமே ... (உடல் அரிப்புக்கு வந்த குழந்தையை, 'அரிக்குதாடி கண்ணூஊ...' என்று சொந்த பேத்தி போல விசாரித்து மருத்துவம் செய்தார்)
மயிலாடுதுறை நகராட்சி தன்னை கௌரவப்படுத்திக்கொள்ள ஒரு அற்புத வாய்ப்பு. தன்னலம் கருதாமல் உண்மையிலேயே அர்ப்பணிப்போடு சேவை செய்த திரு.ராமமூர்த்தி அவர்களை வாழ்நாளிலேயே பெருமைப்படுத்தி 'இறந்தால் புகழ்வர்' என்று வரவிருக்கும் அவப்பெயரிலிருந்து காத்துக்கொள்ளலாம்.
நன்றிகள் பல அபி அப்பா.
அன்புடன்
முத்துக்குமார்.
பி.கு : திரு.நாராயணன் அவர்களும் சிறந்த மருத்துவரே. எங்களுக்கு ஆரம்பத்தில், செம்பனார்கோவிலில் க்ளினிக் வைத்திருந்த போது, (திரு.வீரபாண்டியன் அவர்கள் புகழ்பெறும் முன்பாக) குடும்ப மருத்துவராக இருந்திருக்கிறார். உடையணிவதில் திரு.ராமமூர்த்திக்கு நேரெதிர்.
ஆமா அபி அப்பா,
ReplyDeleteநாங்களும் பார்த்து வியந்த டாக்டர் அவர்.
நாங்கள் avc யில் படித்துக்கொண்டிருந்தபோது ஹாஸ்டல் மாணர்வர்கள் அவரிடம் தான் போவோம்(வீட்டில் எவ்வளவு காசு கொடுத்தாலும் ஹாஸ்டல் மாணவர்கள் என்றும் ஏழைதானே!). சீனியர் மாணவர்கள் இவரைத்தான் அறிமுகம் செய்து வைப்பார்கள். அப்போது(93-96) அவர் இரண்டு ரூபாய் வாங்கிக்கொண்டிருந்தார்.
இப்படி குறிப்பிட்டுச் சொல்லும்படி எங்கள் ஊரில் - விருத்தாசலம் - ஒரு மருத்துவர் இருக்கிறார். திரு வள்ளுவன் அவர்கள். அவரைப்பற்றி நேரம் கிடைக்கும்போது நிச்சயம் எழுதுகிறேன்.
வாய்யா கோபிதம்பி! பயந்து கிடக்குதய்யா எங்க ரிப்பீட்டெய் போட்டுடுவியோன்னு! சரி எப்ப பதிவு போட உத்தேசம்!
ReplyDeleteவாங்க ஈழத்து தமிழ் நண்பரே! நிச்சயம் நீங்க சொல்லவது போல் பதிவை, பின்னூட்டத்தை இரண்டையும் காண்பிக்கப்படும். டாக்டரிடம் அல்ல மயிலாடுதுறை நகராட்சி தலைவர் மற்றும் கமிஷ்னரிடம். உங்க வருகைக்கு நன்றி!!
ReplyDelete//அப்படின்னா..!அ.அ
ReplyDelete"வ.மு.பி".யா!//
இதுக்கு என்னா அர்த்தம் அனானியாரே!
வாங்க ஆயில்யன்! ஆமாம் நீங்க சொல்வது போல் இந்த 3 டாக்டர்களும்மே மற்க்க முடியாதவங்கதான்! வருகைக்கு நன்றி!நீங்க எந்த ஊர்!
ReplyDeleteவாங்க பெருந்தோட்டம் மதி! நான் முதல்ல உங்க பதிவில போய்தான் தமிழ் டைப்பண்ணி பின்னூட்டம் போடுவேன். அதுக்கு பிறகு உங்களை காணும் வலையில்.
ReplyDeleteஆமாம்! அவர் ஊசி போடுவது ரொம்ப ரேர். ரொம்ப அவசியம் இருந்தால் மட்டுமே போடுவார்.
நகராட்சி ஆலோசிக்குமா! இதோ இந்த கூட்டத்திலேயே அது பத்தின பேச்சு ஆரம்பிக்கும் பாருங்க. யாரும் எதிப்பு தெரிவிக்க மாட்டாங்கன்னு நம்பிக்கை இருக்கு எனக்கு. பார்ப்போம்!
வாங்க ஜெஸீலா! நல்லவங்க பத்தி எழுத நெனப்பு வந்ததுக்கு காரனம் டாக்டர் டெல்பின் தான் அதனால அவங்களுக்கும் ஒரு ஜே போட்டுடுங்க!!
ReplyDeleteவாங்க அப்துல்குத்தூஸ்! முதன் முதலா வர்ரீங்க மிக்க நன்றி! ஆமாம் நீங்க சொல்வது போல் டாக்டர் எப்போதுமே பணம் வாங்க மாட்டார். டேபிள்ள நாமலா வச்சிட்டு போனாதான் உண்டு.
ReplyDeleteஅவர் உதவியாளர் பெயர் மறந்துவிட்டது(என்னவோ குட்டின்னு வரும்) குண்டா கட்டையா இருப்பார். அவர் இறந்து விட்டார். இப்போ யாரும் உதவியாளர் கிடையாது!
// கண்மணி said...
ReplyDeleteஅவ்வ்வ்வ் அபிஅப்பாக்கு என்னமோ ஆயிப்போச்சி.இப்படி நல்ல பதிவா போடுறாரு.//
டீச்சர்! என்ன பண்றது இதையே காமடி பதிவா வஞ்சப்புகழ்ச்சியா எழுதி பின்ன திருத்தி ஒரு வழியா போட்டுட்டேன். ஆனா நல்ல ரெஸ்பான்ஸ் இருக்கு இப்படி எழுதினாலும்!!
// காயத்ரி said...
ReplyDelete//விழுந்து வாரியதாகத்தான் கேள்வி பட்டோம் //
ஆமா!! ஆமா!! அந்த விழுப்புண்களுக்கும் இந்த டாக்டரு தான் வைத்தியம் பாத்தாராம்! :))) //
ஆமா இது ரொம்ப முக்கியம்! என்னய கலாய்ச்சா நல்லா தூக்கம் வருமே!!
//முத்துலெட்சுமி said...
ReplyDeleteகேள்விப்பட்டிருக்கிறேன்..எங்க வீட்டுல அதிகம் டாக்டர் கிட்ட போறது இல்ல...அதால அவரப்பத்தி ரொம்ப தெரியாது...இருந்தாலும் இங்கே அவருக்கு ஒரு வாழ்த்து சொல்லிக்கிறேன்.வாழ்க வளமுடன்.//
வாங்க முத்துலெஷ்மி! உங்க வாழ்த்துக்கு மிக்க நன்றி!
//குறைந்தப்பட்சம் சிறந்த குடிமகன் விருது ஆச்சும் அவருக்கு கொடுத்து இருக்காங்களா? //
ReplyDeleteஎங்க சிவா! அரசியல்வாதிங்கதான் தனக்கு தானே குடுத்துக்கறானுங்க! இவரை எவன் கண்டுக்கறான்! செலவில்லாமல் மருந்து வாங்க மட்டும் வருவானுங்க!
GD மருத்துவமணை தெரியும்,G=கீதாMBBS.,D.G.O
D=டேனியல் MBBS MD
ரெண்டு பேரும் டாக்டர்தான். எனக்கு நண்பர்கள் தான். என்ன புதுசா ஆஸ்பத்திரி சொந்த கட்டடம் கட்டுவதால நெறய சிசேரியன் பண்றாங்க! வேற என்னத்த சொல்ல!!
//கீதா சாம்பசிவம் said...
ReplyDeleteஅருமையான மருத்துவர், இப்போவும் அந்த மாதிரி டாக்டர்கள் இருக்கின்றனர். சென்னையிலேயே "ஒரு ரூபாய் ஆஸ்பத்திரி" உண்டு. மருத்துவர்கள் கிட்டத் தட்ட தெய்வம் போல்தான். எங்க குடும்ப மருத்துவரும் நீங்க சொல்றாப்பலே தான் அனைவரையும் நினைவு வச்சிருப்பார். கடைசியாத் தான் எப்போ எதுக்கு மருந்து கொடுத்தோம்னு கூட நினைவு இருக்கும். //
வாங்க கீதாம்மா! அப்பல்லாம் காசு கொடுத்து யாரும் சீட் வாங்கலை, அதனால சேவை மனம் இருந்துச்சு! ஆனா இப்போ 25 லட்சம் கொடுத்து வாங்குவதால் அதை எடுக்க வேண்டி இல்லாத கூத்தெல்லாம் நடக்குது!!
// Seemachu said...
ReplyDeleteஅபி அப்பா,
ஊருக்குப் போயிட்டு வந்தாச்சா?
பையன் பிறந்ததற்கு வாழ்த்துக்கள். டாக்டர் ராமமூர்த்தியை மிக மிக நன்றாகத் தெரியும். அவரைப் பற்றி மிக அழகாக எழுதியுள்ளீர்கள்.
//
வாங்க வாங்க சீமாச்சு அண்ணா! நல்லபடியா போயிட்டு வந்தேன். பையன் சுகபிரசவத்தில் நல்ல படியா பிறந்தான்.
ராமூர்த்தி டாக்டர் பத்தி இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். நீங்க சொல்வது சரி. காதிவஸ்திராலயம் பின்பாக கட்டப்பட்டிருக்கும் குதிரை வண்டில வருவார். இப்போ அங்கே குதிரை வண்டியும் இல்லை, அந்த குதிரை சாணி வாடையும் இல்லை. எல்லாம் டீசல்/பெட்ரோலா போய் பழமையை கெடுத்துவிட்டன.
இராமபத்திரன் சார் பத்தி ஒன்னும் தெரியலையே ஏன் என்னாச்சு(வைதவி ன்னு திட்டுவார்) ஆனா அவர் தம்பி அரங்கநாதன் சாரை திருவிழந்தூர் ஆஞ்சநேயர் கோவிலில் பார்த்தேன்!
வாங்க முத்துகுமார்! நீங்க சொல்வது மிக்க சரி! நேயை டயகனைஸ் பண்ணுவதில் இவர் கில்லாடி!
ReplyDeleteநீங்க சொல்வது போல் நாராயணன் டாக்டர் அந்த காலத்து ஜெமினி மாதிரி பேண்ட் போட்டு சின்ன பெல்ட் சட்டை இன் செய்து நச்சுன்னு இருப்பார்!
வீரபாண்டியன் டாக்டருக்கு கூட ச்மீபத்தில் ஹார்ட் அட்டாக் வந்தது! இப்போ நல்லா இருப்பார்ன்னு நெனைக்கிறேன்!
//அப்படின்னா..!அ.அ
ReplyDelete"வ.மு.பி".யா!//
இதுக்கு என்னா அர்த்தம் அனானியாரே!
வட்டார முக்கிய பிரமுகருங்கண்ணா!
நான் கொஞ்சம் அவசரப்பட்டதால அனானியாகிட்டேன்!
பரவாயில்லை இங்க நான் அனதையாய் இருந்தாலும்,
உங்களின் பதிவுகள் எனது அன்னை பூமி!(சொந்த ஊருல இருக்கற மாதிரி)
அப்படியே! ஊர பத்தி ரெண்டு போட்டோ போடறது!
சமீபத்தில...ஞான ஒளி படத்துல முக்கால் ரூவா டாக்டரைப் பார்த்தப்போ... இது மாதிரி இப்போல்லாம் யார் இருக்காங்கன்னு மனம் ஆதங்கப் பட்டது. நல்லவங்க இன்னும் இவ்வுலகில் இருக்குறாங்கன்றதே சந்தோஷமா இருக்குது. அதை பதிவா போட்ட உங்களுக்கு பாராட்டுக்கள். :)
ReplyDeleteநாங்க பூனாவுலே இருந்தப்ப அங்கே ஒரு டாக்டர் தண்ணி மருந்து, மாத்திரைக்கும் சேர்த்தே
ReplyDelete5 ரூபாய்தான் வாங்குவார். அப்படி ஒரு கூட்டம் நெரியுமங்கே . கைராசிக்காரர். ஒரு அஞ்சு
ரூபாய்லே நம்ம நோய் குணமாயிரும்.
அவர் ஒரு விபத்துலே இறந்துட்டார். அப்புறம்தான் தெரிஞ்சது அவர் ஒரு போலி டாக்டராம்:-)
//துளசி கோபால் said...
ReplyDeleteநாங்க பூனாவுலே இருந்தப்ப அங்கே ஒரு டாக்டர் தண்ணி மருந்து, மாத்திரைக்கும் சேர்த்தே
5 ரூபாய்தான் வாங்குவார். அப்படி ஒரு கூட்டம் நெரியுமங்கே . கைராசிக்காரர். ஒரு அஞ்சு
ரூபாய்லே நம்ம நோய் குணமாயிரும்.
அவர் ஒரு விபத்துலே இறந்துட்டார். அப்புறம்தான் தெரிஞ்சது அவர் ஒரு போலி டாக்டராம்:-) //
வாங்க டீச்சர்!
நம்ம டாக்டர் அப்போ சென்னை மெடிக்கல் காலேஜில் கோல்டு மெடலிஸ்ட், அந்த போட்டொ மட்டும் மாட்டியிருப்பார். அதிலிம் வேஷ்டிதான் கட்டியிருப்பார். அது தவிர இந்திய மருத்துவ கழகத்தில் கௌரவ தலைவராக 2 முறை இருந்திருக்கார்.
சில போலிகள் தவிர்க்கப்பட முடியாதுதான் டீச்சர்! பாருங்க இப்ப மணப்பாறை கிருக்கு டாக்டரை!
// அருள் குமார் said...
ReplyDeleteஆமா அபி அப்பா,
நாங்களும் பார்த்து வியந்த டாக்டர் அவர்.//
வாங்க அருள்குமார்! நம்ம காலேஜ்தானா நீங்க! நெய்வேலி/விருத்தாசலம் பசங்க ஏ.வி.சில தனி குரூப்பா திரியிவீங்களே! நீங்க எந்த ஹாஸ்டல் காலேஜ் ஹாஸ்டலா இல்லாட்டி எதிர்தாப்புல இருக்கும் SMH ஹாஸ்டலா?
காலேஜ் ஹாஸ்டல் மொத்தத்துக்கும் அவரு தான் டாக்டர். அவர்கிட்ட 5 ரூபாய்க்கு வைத்தியம் பார்த்துவிட்டு வீட்டில இருந்து 50 ரூபா வாங்க்கும் பசங்கள எனக்கும் நல்லாவே தெரியும்!:-))
ஆயில்யன்! நீங்க நம்ம ஊரா! என்னத்த போட்டோ போடுறது, 4 வருஷமா ரோடுன்னு ஒன்னே இல்ல ஊர்ல!
ReplyDelete//காட்டாறு said...
ReplyDeleteசமீபத்தில...ஞான ஒளி படத்துல முக்கால் ரூவா டாக்டரைப் பார்த்தப்போ... இது மாதிரி இப்போல்லாம் யார் இருக்காங்கன்னு மனம் ஆதங்கப் பட்டது. நல்லவங்க இன்னும் இவ்வுலகில் இருக்குறாங்கன்றதே சந்தோஷமா இருக்குது. அதை பதிவா போட்ட//
வாங்க காட்டாறு! வருகைக்கு நன்றி! எப்பவாவது கும்மிக்கு தேவைப்பட்டா சொல்லிவிடுங்க வந்துடறோம் குடும்பத்தோட!
//நெய்வேலி/விருத்தாசலம் பசங்க ஏ.வி.சில தனி குரூப்பா திரியிவீங்களே! நீங்க எந்த ஹாஸ்டல் காலேஜ் ஹாஸ்டலா இல்லாட்டி எதிர்தாப்புல இருக்கும் SMH ஹாஸ்டலா?
ReplyDelete//
நாம யாதும் ஊரே யாவரும் கேளிர் டைப்புங்க! எனக்கு இன்னிக்கும் மயிலாடுதுறைல தான் நண்பர்கள் ஜாஸ்த்தி. இங்க மெட்ராஸ் நண்பர்கள் பல பேரு எனக்கு சொந்த ஊரு மாயவரம்தான்னு இன்னும் நினைச்சிகிட்டு இருக்காங்க!
ஹாஸ்டல்ல கொஞ்ச நாள் இருந்தேன். அப்புறம் மயிலாடுதுறை கச்சேரி ரோடுல ஒரு வீடு எடுத்து தங்கியிருந்தோம். SMH பல நண்பர்கள் இருந்தாலும் எனக்கென்னமோ அங்க பிடிக்கல!
இந்த மாதிரி பதிவுகள் எழுதப்படுவதே, இது போன்ற புண்ணியவான்களுக்கு பெரிய விருதாகும்.
ReplyDeleteகடுகு
http://kadugu.wordpress.com/2008/04/26/87/
wonderful doctor
ReplyDelete
ReplyDeletePlease visit
முடிகொண்டானிலிருந்து வந்து மயிலாடுதுறைக்கு மகுடம் சூட்டிய மருத்துவர் ராமமூர்த்தி
http://nidurseasons.blogspot.in/2013/02/blog-post_3648.html