என்னய பார்த்து அதுவும் என்னய பார்த்து எட்டு போட சொன்னா நான் என்னான்னு போடுவேன்! குசும்பன்ல ஆரம்பிச்சு தங்கச்சி ஜெயந்தி வரை தரைல உருண்டு உருண்டு அழுதா போடாம இருக்க முடியுமா, அதான் போட்டுடலாம்ன்னு முடிவு செஞ்சுட்டேன்.
1. நானோ தம்பி பொறந்த சந்தோஷத்தில இருக்கேன். அந்த நேரத்துல போன். அமரிக்காவில இருந்து, நம்ம வெட்டிபாலாஜி இல்ல. புஸ்ஸுங்கொ புஸ். ஒடனே கெளம்பி வா, உங்க ஊரு பொண்ணு மாட்டிகிச்சு மானத்துல. நீ வந்து இஸ்துகினு வான்னு. தங்கமணியோ "ஊர் வேலைய செய்யறதே ஒங்களுக்கு பொழப்பா போச்சு சும்மா இருங்க"ன்னு சொல்ல சரி பிளாஸ்க்க கொண்டா எதித்தாப்புல இருக்குற காளியாகுடிக்கு போய் காப்பி வாங்கியாறேன்ன்னு சொல்லிட்டு பிளாஸ்குல காப்பிய நெறப்பிகிட்டு ஜூட்டு வுட்டுட்டேன். அங்கிட்டு போயி நெலமையை நல்லா மனசுல வாங்கிகிட்டு சர்ருன்னு மானத்துக்கு பறந்து அந்த பொம்பளய பார்த்தா பேயடிச்ச மாதிரி இருக்கு. சரின்னு காப்பிய குடுத்து தேத்தி கூட்டிகிட்டு வந்து சேந்தா இறங்கின பின்ன என் கைய புடுச்சிகிட்டு அழுவாச்சி. சரின்னு மீதி காப்பிய எடுத்து கிட்டு தங்கமணி கிட்ட வந்தா செம டோஸு! எதித்த கடைக்கு போக வர இத்தினி நேரமான்னு. டிராபிக் ஜாமுன்னு சொல்லி சமாளிச்சு பெரிய ரோதனையா போச்சு!
இப்பிடித்தான் ஏதாவது ஏடாகூடமா தோனுது 8 போடலாம்ன்னு பார்த்தா. கொத்தனார் என்னடான்னா போவாத கண்டம் இல்ல பறக்காத் ஹெலிகாப்டர் இல்லன்னு சொல்றார். மங்கை என்னான்னா 250 பேருக்கு பயிர்ச்சி மேலும் 250 பேருக்கு அப்டீன்னு சர்ருன்னு பறக்கறாங்க. முத்துலெஷ்மியோ வயலின்ல பின்னி பெடலெடுத்து ஹய்யோ நான் என்னத்த சாதிச்சு கிழிச்சேன்ன்னு நெனச்சி பார்த்தா ஜீரோ தான். சரி முயர்ச்சி பண்றேன்!
நெசமான 1. 1966 நவம்பர் 13 ஞாயித்து கிழமை விசாக நட்சத்திரம், விருச்சிகராசி, துலா லக்னம், லக்கனத்துல சூரியன் புதன் சுக்ரன் கேது எல்லாம் கூட்டனி போட அதுல சுக்ரன் வேற உச்சம், அடுத்து 2ல சந்திரன், 5ல சனி, வேஷ ராகு, கடகத்துல 10ல குரு உச்சம், லாபத்துல செவ்வாய்ன்னு ஜெக ஜோரா நான் பிறந்ததே ஒரு பெருமையான விஷயம் தானே!
2. படிக்கும் காலம் முதலே சரியான வால் பையன். விஷமம் எங்க அம்மாவால தாங்க முடியாத அளவு வால் பையன். அதே நேரம் என் காது தூங்கும் போது கூட கேக்கும். இப்பவும் எங்க அம்மா அதை சொல்லி சொல்லி மாஞ்சு போவாங்க. "இவன் தூங்கறான்ன்னு ஏதும் பேசிடாதீங்கப்பா"ன்னு சொல்லுவாங்க. இது கூட எனக்கு ஒரு பெருமையான விஷயம்.
3. ஸ்கூல், காலேஜ் படிக்கும் போதெல்லாம் கலாய்க்கும் போது என் பாணியே தனியா இருக்கும். அதனால என்னை சுத்தி எப்போதும் கூட்டம் ஜாஸ்த்தியா இருக்கும். பெண் நண்பிகளும் அதிகம். காரணம் என் கண்ணியம் அத்தனை பேருக்கும் ஏற்படுத்திய நம்பிக்கை. 1 மாதம் முன்பு கூட பெங்களூரில் இருந்து மாலா(சந்தானம்) என்ற பெண் நண்பி போனில் என்னை அப்படியே கல்லூரிகாலத்துக்கு அழைச்சுட்டு போனா. தேங்ஸ் மாலா!இப்படியாக எனக்கு நட்பு வட்டாரம்...பெருமைக்கு சொல்லலை நிஜாமாகவெ சொல்கிறேன், உங்களை எல்லாம் கம்பேர் செய்தால் ரொம்பவே அதிகம். இது கூட எனக்கு பெருமை தான்.
4. பள்ளி கல்லூரி நாட்களில் நாடகம்/பேச்சு/ டான்ஸ் என எல்லாம் கலக்கியது உண்டு. அதே போல் பின்னாலில் அபுதாபிதமிழ்சங்கத்தில் நல்லாவே கலக்கியிருக்கேன். இப்போ நாங்கள் ஒதுங்கி கொண்டு நெறைய புது பசங்க கலக்குறாங்க! விசு/வலம்புரிஜான்/காளிமுத்து/மேத்தா/நித்யாஸ்ரீ/சஞ்சய் சுப்ரமணியம் இன்னும் கணக்கு நீண்டு போகும், எல்லாரையும் கொண்டு வந்து மாரடிச்சாச்சு.( நான் துபாயில் இருந்தாலும் அபுதாபிதான் என் தாய்வீடு மாதிரி)
5. உதவின்னு கேட்டா ஓடிப்போய் நிக்கும் முதல் ஆள்தான் நான். முடிஞ்சதை கண்டிப்பா செய்வேன். அதுக்காக நான் பெருமை பட்டுக்கறேன். என் தற்பெருமையிலே இதுதான் எனக்கு ரொம்ப பிடிச்சது.
6. என் நெஞ்சு உருதி நான் பெருமைப்படும் இன்னுமொறு விஷயம். நசுக்க நசுக்க மேலே வருவேன். எனக்கு பிளாட்ஃபாரத்தில் படுத்து தூங்கவும் தெரியும். ஹில்ட்டனில் ரூம் போட்டு தூங்கவும் தெரியும். எல்லாத்துக்கும் எப்பவும் தயாராகவே இருப்பேன்.
7. என் கல்யாணம்! வாவ்! இப்போது மட்டுமல்ல எப்போதும் பெருமைப்பட்டுக்கும் விஷயம். 1995 ஜூன் 2ம் தேதியை மறக்க முடியுமா என்னால். கச்சேரி, சாப்பாடு, வந்த வி.ஐ.பிக்கள் என ஒரு கலக்கலான கல்யாணம். வலையப்பட்டிதவில், திருவிழா ஜெய்சங்கர், முதல் நாள், கல்யாணத்துக்கு திருவாலப்புத்தூர் TAK & குரூப், மாலை ரிஷப்ஷனுக்கு கத்ரி கோபால்நாத் ஸாக்ஸ்,கன்யாகுமரி வயலின்,T.H.வினாயக்ராம் கடம், பெங்களூர் ராஜசேகர் மோர்சிங், என தூள் கிளப்பப்பட்ட கல்யாணம்.
8. அதுபோல் நான் பெருமைபட்டுக்கும் விஷயம் இது எனக்கு கடவுள் கொடுத்த வரம் என் ஞாபக சக்தி! இது என் நட்பு வட்டாரம் மட்டுமல்ல என் பள்ளி கல்லூரி ஆசிரியர்களுக்கும் ஆச்சர்யமாக தோன்றும்.
9. என் நகைச்சுவை. இப்போது கொஞ்சம் பக்குவப்பட்டு விட்டேன். முன்னாடி காலேஜ் சமயத்தில் கண்ணாபின்னான்னு கலாய்ப்பேன். அது அபத்தமாக கூட இருக்கும் அப்படித்தான் ஒரு பால் வண்டி காரர் பஸ்ஸில் அடிபட்டு பிணமாக கிடந்தார். அவர் வண்டி பால் முழுக்கு அவர் மேல் ஊத்திகிடக்கு. அப்போ நான் "எல்லாருக்கும் இன்னிக்கு செத்தா நாளைக்கு பால், இவரு பால்காராச்சா அதனால இன்னிக்கே பால்"ன்னு கமெண்ட் அடிச்சேன். என் நண்பன் டக்குன்னு என்னை அடிச்சுட்டான். அத்தோட அடுத்தவங்களை புண்படுத்தும் நகைச்சுவைகளை விட்டு விட்டேன்!
10. அபிபாப்பா,தம்பிபாப்பா, அபிஅம்மா இவங்க என் முக்கியமான பெருமைகள்.
ஆஹா! 10 ஆயிடுச்சா, பரவாயில்லை மங்கை/முத்துலெஷமி ஆளுக்கு ஒன்னு குறைச்சு போட்டிருக்காங்க அதனால மீதி 2 அவங்களுக்காகன்னு வச்சுக்கோங்க!
Me 1st, Abi Appa u still not changed your name to Abi Appa + Abi Thambi Appa
ReplyDeleteபடிச்சிட்டொம்ல படிச்சிட்டொம்ல
ReplyDeleteபடிச்சிட்டொம்ல படிச்சிட்டொம்ல
ReplyDeleteகொடைவள்ளல் அண்ணன் வாழ்க..இரண்டு பாயிண்ட் எக்ஸ்ட்ரா போட்டு மங்கைக்கும் எனக்கும் குடுத்தீங்களே...ஆகா..
ReplyDeleteஅண்ணன், ஏன் அண்ணன் இப்படி....
ReplyDeleteநீங்க சொன்னது எல்லாம் பெருமை தான்னே...
ஆனா அதை விட பெருமைப்பட வேண்டிய விசயம் ஏகப்பட்டது இருக்கே....
4 ஃபுல்ல ராவா ஒரு நைட்ல காலி பண்ணும் உங்க தனி திறமை.
தண்ணிக்கு முன் ஒரு கலைந்த நீரோடைய போன்ற உங்கள் எண்ணம், தண்ணிக்கு பின் ஒரு தெளிந்த நீரோடையாகும் திறமை.
ஊர்ல இருக்குற அம்புட்டு கிள்ப்பிலும் உறுப்பினராக இருந்து ரவுண்ட் கட்டி அடிக்கும் திறமை
இப்படி ஏகப்பட்டது இருக்கேண்ணன்...
அதை சொல்லாம இப்படி ஏமாத்திட்டீங்களே...
"4 ஃபுல்ல ராவா ஒரு நைட்ல காலி பண்ணும் உங்க தனி திறமை.
ReplyDeleteஊர்ல இருக்குற அம்புட்டு கிள்ப்பிலும் உறுப்பினராக இருந்து ரவுண்ட் கட்டி அடிக்கும் திறமை"
Yaaruppa athu yenga annava thappa pesurathu. Avaru romba nallavaruppa
\\அதே நேரம் என் காது தூங்கும் போது கூட கேக்கும்.//
ReplyDeleteகோபி சரி பாவம்ன்னு விடுவம்ம்னு பார்த்தா மனுசன் ரீல் விடறார் பாருங்க..அன்னைக்கு விடிய விடிய போன் அடிச்சு பட்ட அவஸ்தை உங்களுக்குத்தானே தெரியும்...தூங்கினா காது கேக்குமாம்..போன் அடிச்சது ஏன்யா விழலன்னு வந்து கேளுப்பா...
//Yaaruppa athu yenga annava thappa pesurathu. Avaru romba nallavaruppa //
ReplyDeleteநான் சொன்னதை இல்லனு அவர் நெஞ்ச தொட்டு சொல்ல சொல்லுங்க...
அப்படி மட்டும் அவர் உண்மை மறைத்தார்னு வைங்க.... இனிமேல் விஸ்கி, பிராந்தி என்ற வஸ்துவும் கிடைக்காது என சாபம் இட நேரிடும்....
//கோபி சரி பாவம்ன்னு விடுவம்ம்னு பார்த்தா மனுசன் ரீல் விடறார் பாருங்க..அன்னைக்கு விடிய விடிய போன் அடிச்சு பட்ட அவஸ்தை உங்களுக்குத்தானே தெரியும்...தூங்கினா காது கேக்குமாம்..போன் அடிச்சது ஏன்யா விழலன்னு வந்து கேளுப்பா... //
ReplyDeleteமட்டை ஆகி இருப்பார்.... தூங்குவது வேற மட்டையாவது வேறு...
இது இரண்டிற்கும் வித்தியாசம் இருக்குங்க...
//முத்துலெட்சுமி said...
ReplyDeleteகோபி சரி பாவம்ன்னு விடுவம்ம்னு பார்த்தா மனுசன் ரீல் விடறார் பாருங்க..அன்னைக்கு விடிய விடிய போன் அடிச்சு பட்ட அவஸ்தை உங்களுக்குத்தானே தெரியும்...தூங்கினா காது கேக்குமாம்..போன் அடிச்சது ஏன்யா விழலன்னு வந்து கேளுப்பா... //
ரிப்பீட்டே... முத்துக்கா.. உங்களுக்குத்தான் க்ரெடிட்... ;))
வாய்யா இம்சை! நல்லாயிருகீரா?
ReplyDeleteபழக்கம் இல்லன்னாலும் நாகைபுலி எங்களுக்கும் அது இரண்டுத்துக்கும் வித்தியாசம் தெரியும்ங்க...
ReplyDeleteஆனா அன்னைக்கு வெறும் தூக்கம் தானாம்..பாவம் பஸ் ஸ்டாண்ட்ல அப்பாவியா அனாதைய அலைஞ்ச கோபி யின் நிலைமை கண்ணில் நீர் வைக்குது .
ஜி நன்றி நன்றி இப்படித்தான் கிரெடிட் யாருக்கு போய் சேரணும்ன்னு பார்த்து பின்னூட்டம் போடனும்...குட்
வாங்க முத்துலெஷ்மி! சரியான வெய்யில் இங்க கோடைவள்ளல்ன்னு சொல்லுங்க சரியா இருக்கும்!
ReplyDelete//4 ஃபுல்ல ராவா ஒரு நைட்ல காலி பண்ணும் உங்க தனி திறமை.
ReplyDeleteதண்ணிக்கு முன் ஒரு கலைந்த நீரோடைய போன்ற உங்கள் எண்ணம், தண்ணிக்கு பின் ஒரு தெளிந்த நீரோடையாகும் திறமை.//
புலி! இதெல்லாம் ஒரு பெருமையாப்பா! ஜூஜூபி மேட்டரு!
//ஊர்ல இருக்குற அம்புட்டு கிள்ப்பிலும் உறுப்பினராக இருந்து ரவுண்ட் கட்டி அடிக்கும் திறமை//
ஸ்கூல் டைம்ல - இந்தராக்ட் கிளப்
காலேஜ் டைம்ல- ரோட்டராக்ட் கிளப்
பின்ன - ஜேஸீஸ் கிளப்(39 வயசுக்கு மேல இருக்க முடியாது இதிலே)
இப்போ 2 வருஷமா - ரோட்டரி கிளப்
இதிலே என்ன விஷெஷம்ன்னா எல்லா கிளப்புமே "யூனியன் கிளப்"பிலேதான் கூடும். அங்கே தான் அத்தனை கூத்தும் நடக்கும்!
சரி இதிலே என்ன பெருமை இருக்கு!
இப்போ
//Yaaruppa athu yenga annava thappa pesurathu. Avaru romba nallavaruppa //
ReplyDeleteதேங்ஸ்ப்பா இம்சை!
//முத்துலெட்சுமி said...
ReplyDelete\\அதே நேரம் என் காது தூங்கும் போது கூட கேக்கும்.//
கோபி சரி பாவம்ன்னு விடுவம்ம்னு பார்த்தா மனுசன் ரீல் விடறார் பாருங்க..அன்னைக்கு விடிய விடிய போன் அடிச்சு பட்ட அவஸ்தை உங்களுக்குத்தானே தெரியும்...தூங்கினா காது கேக்குமாம்..போன் அடிச்சது ஏன்யா விழலன்னு வந்து கேளுப்பா... //
வாங்க! நம்ம புலியின் பதில பாருங்க! வித்தியாசத்தை நீங்களே உணருங்க(விளம்மர பாணில படிக்கவும்)
//ரிப்பீட்டே... முத்துக்கா.. உங்களுக்குத்தான் க்ரெடிட்... ;)) //
ReplyDeleteவாங்க ஜி! ஒரு முடிவோடத்தான் வந்து இருக்கீங்க!
சூப்பர் 8.
ReplyDeleteUngala patthi thappa yeluthuna pidikathu.
ReplyDeleteNeenga 8 full adichalum mattai aaga mattenga nu yellarukkum teriyume.
//புலி! இதெல்லாம் ஒரு பெருமையாப்பா! ஜூஜூபி மேட்டரு!//
ReplyDeleteஇவரை நல்லவர் என்று கூவியவர்கள் இந்த கமெண்டை பாக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்..
\\முத்துலெட்சுமி said...
ReplyDelete\\அதே நேரம் என் காது தூங்கும் போது கூட கேக்கும்.//
கோபி சரி பாவம்ன்னு விடுவம்ம்னு பார்த்தா மனுசன் ரீல் விடறார் பாருங்க..அன்னைக்கு விடிய விடிய போன் அடிச்சு பட்ட அவஸ்தை உங்களுக்குத்தானே தெரியும்...தூங்கினா காது கேக்குமாம்..போன் அடிச்சது ஏன்யா விழலன்னு வந்து கேளுப்பா...\\
புலி அருமையாக விளக்கிவிட்டார்....இருந்தாலும் உண்மையிலேயே தூங்குகின்றவர்களுக்கு காது கேக்கும்...நடிப்பவர்களுக்கு எப்படி கேக்கும்
\\ ஜி said...
ReplyDelete//முத்துலெட்சுமி said...
கோபி சரி பாவம்ன்னு விடுவம்ம்னு பார்த்தா மனுசன் ரீல் விடறார் பாருங்க..அன்னைக்கு விடிய விடிய போன் அடிச்சு பட்ட அவஸ்தை உங்களுக்குத்தானே தெரியும்...தூங்கினா காது கேக்குமாம்..போன் அடிச்சது ஏன்யா விழலன்னு வந்து கேளுப்பா... //
ரிப்பீட்டே... முத்துக்கா.. உங்களுக்குத்தான் க்ரெடிட்... ;)) \\
முத்துக்காவுக்கு நானும் ஒரு ரிப்பீட்டே .....
//Ungala patthi thappa yeluthuna pidikathu.
ReplyDeleteNeenga 8 full adichalum mattai aaga mattenga nu yellarukkum teriyume. //
8 ஃபுல்லா என்ன ஒரு மாசத்துக்காக.... 80 மில்லி உள்ள போனா தெளிவா ஆவார். கூட இன்னும் 80 மில்லி அப்படியே ஜர்க் ஆவார்... இன்னும் 80 போனா மட்டை தான்.... அவர் என்ன உ.பி காட்டுன ஆடுனு நினைச்சிங்களா?
"உதவீவீவீ"
ReplyDeleteசும்மா கூப்பிட்டு பார்த்தேன். :-))
\\உதவின்னு கேட்டா ஓடிப்போய் நிக்கும் முதல் ஆள்தான் நான். முடிஞ்சதை கண்டிப்பா செய்வேன். அதுக்காக நான் பெருமை பட்டுக்கறேன். என் தற்பெருமையிலே இதுதான் எனக்கு ரொம்ப பிடிச்சது.\\
ReplyDeleteவாழ்க தலைவர் ;))
என்னது நான் அழுது புரண்டேனா...நேற்று உங்கள நான் பார்க்கவந்த பொழுது கழுத்தில் கத்திய வச்சி அன்போடு நான் கேட்டத சொல்லவே இல்ல...
ReplyDeleteநாளை வரேன் திரும்ப உங்க ஆபிஸ்க்கு.
உன்மையாகவே நல்லா இருக்கு உங்க 10.
எட்டையும் படிச்சி தொலைச்சேன்!! என்ன செய்யறது பாசக்கார குடும்பத்துல வாக்கப்பட்டா அப்படித்தான்!!
ReplyDelete"என் நெஞ்சு உருதி நான் பெருமைப்படும் இன்னுமொறு விஷயம். நசுக்க நசுக்க மேலே வருவேன். "
ReplyDeleteஅய்யனார், தம்பி,கோபி,மின்னல் கேட்டுக்கங்க தலைவர் நசுக்க நசுக்க மேல வருவாராம் இந்த வாரம் நசுக்குர நசுக்குல முதல்ல மறுநாள் ஆபிஸ் வருவாரான்னு பார்கனும்...
ஓக்கே!!!
//ஆனா அன்னைக்கு வெறும் தூக்கம் தானாம்..பாவம் பஸ் ஸ்டாண்ட்ல அப்பாவியா அனாதைய அலைஞ்ச கோபி யின் நிலைமை கண்ணில் நீர் வைக்குது .//
ReplyDeleteமாயவரம் பஸ்டாண்டை சுத்திப்பார்க்க கோபிக்கு ஒரு நல்ல சந்தர்ப்பம் அல்லவா அது:-))
//லொடுக்கு said...
ReplyDeleteசூப்பர் 8. //
கிழிஞ்சுது! நல்லா பாருங்க எத்தினின்னு!
// இம்சை said...
ReplyDeleteUngala patthi thappa yeluthuna pidikathu.
Neenga 8 full adichalum mattai aaga mattenga nu yellarukkum teriyume//
யோவ்! நான் கூட அவசரப்பட்டு தேங்ஸ் சொல்லிட்ட்ன்யா உமக்கு!:-))
//இவரை நல்லவர் என்று கூவியவர்கள் இந்த கமெண்டை பாக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்..//
ReplyDeleteதேரை இழுத்து தெருவில உடுலன்னா தூக்கம் வராதே!
//புலி அருமையாக விளக்கிவிட்டார்....இருந்தாலும் உண்மையிலேயே தூங்குகின்றவர்களுக்கு காது கேக்கும்...நடிப்பவர்களுக்கு எப்படி//
ReplyDeleteகோபி நீனு இன்னுமா அண்ணாத்தைய நம்பல அவ்வ்வ்வ்வ்வ்வ்:-((
//அவர் என்ன உ.பி காட்டுன ஆடுனு நினைச்சிங்களா//
ReplyDeleteஇதுக்கு இன்னா அர்த்தம் புலி!
// வடுவூர் குமார் said...
ReplyDelete"உதவீவீவீ"
சும்மா கூப்பிட்டு பார்த்தேன். :-))//
வந்து நின்னனே குமாரண்ணே! நீங்க வேறபக்கம் பார்த்துகிட்டு இருந்தீங்க, அதுக்கு நான் என்ன பண்ண முடியும்!:-)
//குசும்பன் said...
ReplyDeleteஎன்னது நான் அழுது புரண்டேனா...நேற்று உங்கள நான் பார்க்கவந்த பொழுது கழுத்தில் கத்திய வச்சி அன்போடு நான் கேட்டத சொல்லவே இல்ல...
நாளை வரேன் திரும்ப உங்க ஆபிஸ்க்கு.
உன்மையாகவே நல்லா இருக்கு உங்க 10.//
குசுப்புதான்யா உமக்கு, 11 எழுதியிருக்கேன் உமக்கு அது 10ஆ தெரியுதா?
// குட்டிபிசாசு said...
ReplyDeleteஎட்டையும் படிச்சி தொலைச்சேன்!! என்ன செய்யறது பாசக்கார குடும்பத்துல வாக்கப்பட்டா அப்படித்தான்!!
//
வாய்யா பெரிய மனுசா! ரொம்ப நாளா எங்கிட்டு எந்த முறுங்க மரத்துல இருந்த, ஆளக்காணுமே! சரி புடிக்கலையா! விடு அடுத்த கச்சேரி அமர்க்களம் பண்ணுவோம்!
//அய்யனார், தம்பி,கோபி,மின்னல் கேட்டுக்கங்க தலைவர் நசுக்க நசுக்க மேல வருவாராம் இந்த வாரம் நசுக்குர நசுக்குல முதல்ல மறுநாள் ஆபிஸ் வருவாரான்னு பார்கனும்...
ReplyDeleteஓக்கே!!! //
யோவ்! நீர் செஞ்சாலும் செய்வய்யா, சிபி வாய்ல பீடி திணிச்சு குமட்டில குத்தின ஆளுதானே நீனு!
//என் நெஞ்சு உருதி நான் பெருமைப்படும் இன்னுமொறு விஷயம். நசுக்க நசுக்க மேலே வருவேன். எனக்கு பிளாட்ஃபாரத்தில் படுத்து தூங்கவும் தெரியும். ஹில்ட்டனில் ரூம் போட்டு தூங்கவும் தெரியும். எல்லாத்துக்கும் எப்பவும் தயாராகவே இருப்பேன்//
ReplyDeleteஸேம் ப்ளட் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
ஆஹா அதான் அத்தனை பேரும் வந்து சொல்லியாச்சே. நல்ல எட்டுதான். ஒரு விண்ணப்பம், ஒரு தடவைக்கு ரெண்டு தடவை படிச்சு கொஞ்சம் எழுத்துப் பிழைகள் இல்லாம எழுத ஆரம்பிக்கணும். இவ்வளவும் முடிஞ்ச உங்களுக்கு இது மட்டும் முடியாதா என்ன?
ReplyDelete"யோவ்! நீர் செஞ்சாலும் செய்வய்யா, சிபி வாய்ல பீடி திணிச்சு குமட்டில குத்தின ஆளுதானே நீனு!"
ReplyDeleteஎப்ப நானா மறந்து போச்சே...ஓஓ அதுவா நீங்க எழுதிக்கொடுத்த அப்படியே போட்டேன்...
பார்தீங்களா நான் எழுதி இருந்தா எனக்கு நினைவு இருக்கும்..சொன்னது நீங்களாச்சே உங்களுக்கு மறக்காம இருக்கு....
//விஷயம். 1995 ஜூன் 2ம் தேதியை மறக்க முடியுமா என்னால். கச்சேரி, சாப்பாடு, வந்த//
ReplyDeleteமயிலாடுதுறை முழுவதும், ஜெய்சங்கர் படம் போட்டு திருமண வாழ்த்து அடிச்சு ஒட்டுனாங்களே! அந்த கல்யாணத்தின் ஹீரோ நீங்கதானா மாமு..!
ஓகே குசும்பா...
ReplyDeleteமூட்டைபூச்சியை நசுக்குற மாதிரி நசுக்கனும்....
:)
நான் இன்னும் எட்டு போடல அதனால இங்க இருக்குற 2 எக்ஸ்டா பாயிண்டை காப்பி பண்ணி என்னோட நாலுல (ஏற்கனவே சுட்டது) சேர்த்துக்கவா...
ReplyDeleteமொத்தம் ஆறு வந்துடும் இன்னும் ரெண்டு யாராவது தராம போயிடுவாங்களா.... :)
வாங்க மகி! சேம் பிளட்தானா! அப்படீன்னா வாழ்க்கை நமக்கு அத்தனை ஒரு கஷ்டமாக இருக்காது!எல்லாம் டேக் இட் பாலிசி தான்!
ReplyDelete//இலவசக்கொத்தனார் said...
ReplyDeleteஆஹா அதான் அத்தனை பேரும் வந்து சொல்லியாச்சே. நல்ல எட்டுதான். ஒரு விண்ணப்பம், ஒரு தடவைக்கு ரெண்டு தடவை படிச்சு கொஞ்சம் எழுத்துப் பிழைகள் இல்லாம எழுத ஆரம்பிக்கணும். இவ்வளவும் முடிஞ்ச உங்களுக்கு இது மட்டும் முடியாதா என்ன? //
என்ன பண்ணட்டும் கொத்ஸ்! தப்பு திருத்தும் தண்டபாணியெல்லாம் லீவ்க்கு போயிட்டானுங்க! முடிஞ்ச வரை சரி செய்கிறேன்!
//மயிலாடுதுறை முழுவதும், ஜெய்சங்கர் படம் போட்டு திருமண வாழ்த்து அடிச்சு ஒட்டுனாங்களே! அந்த கல்யாணத்தின் ஹீரோ நீங்கதானா மாமு..! //
ReplyDeleteவாங்க கடகராசிகாரரே! உங்களுக்கும் ஒரு நாள் 40 ஆகும் அப்ப வச்சிகரண்டீய்!
இந்த சினிமாகாரங்கதான் தன்னைபத்தி பெருமையா விளம்பரம் போடுராங்கனா பிளாக்குளையும் ஏய்யா இப்படி அலையிரீங்க இதுல என்னைய வேற போட சொல்லி போன்ல சேட்ல மிரட்டல் வேற திருந்துங்கையா... :)
ReplyDelete//மின்னுது மின்னல் said...
ReplyDeleteஓகே குசும்பா...
மூட்டைபூச்சியை நசுக்குற மாதிரி நசுக்கனும்....
:)
//
பார்ரா பார்ரா ஆசைய!:-))
//மொத்தம் ஆறு வந்துடும் இன்னும் ரெண்டு யாராவது தராம போயிடுவாங்களா.... :) //
ReplyDeleteமண்டபத்துல எழுதி தராங்கப்பா! நானே அங்கிட்டுதான் வாங்கியாந்தேன்! 2 அங்கிட்டே பர்ச்சேஸ் பண்ணிக்கோங்க:-))
இங்க எப்ப வாரீங்க தல
ReplyDeleteஅண்ணா உங்க திறமைக்கு 10 எல்லாம் எந்த மூலைக்கு??? 100ஏ போடலாமாக்கும்...
ReplyDeleteஇந்த புலி ஓவரா உறுமுது... நம்மகிட்ட வச்சுகிட்டா அடிச்சு சூப்பு வச்சி குடிச்சுடுவோம்னு சொல்லி வைங்க...
//மின்னுது மின்னல் said...
ReplyDeleteஇங்க எப்ப வாரீங்க தல //
நாளைக்கு முடிவு செஞ்சிடலாம்! தம்பி இன்னும் கிஷ் அய்லேண்டில இருந்து வரலை!
// இம்சை அரசி said...
ReplyDeleteஅண்ணா உங்க திறமைக்கு 10 எல்லாம் எந்த மூலைக்கு??? 100ஏ போடலாமாக்கும்...
இந்த புலி ஓவரா உறுமுது... நம்மகிட்ட வச்சுகிட்டா அடிச்சு சூப்பு வச்சி குடிச்சுடுவோம்னு சொல்லி வைங்க//
ஆஹா புலி சூப்! வாயெல்லாம் எச்சில் ஊறுதே! சீக்கிரம் ரெடிபண்ணுப்பா! (நேத்துதான் கேனிபல் கலெக்ஷன் பார்த்தேன்)
ஞாபக சக்தியா... அத்த பத்தி மட்டும் பேசப்படாது. நீங்க ஒரு ஆல் இந்தியா ரேடியோவா மாறுனதுக்கு காரணம் இதுவாகூட இருக்கலாம்.
ReplyDeleteஅடப்பாவி மக்கா, இப்பல்லாம் ரிப்பீட்டேல கூட கிரெடிட் பாக்க ஆரம்பிச்சுட்டாங்கய்யா.. ஆரம்பிச்சுட்டாங்க :)
சென்ஷி
// இம்சை அரசி said...
ReplyDeleteஇந்த புலி ஓவரா உறுமுது... நம்மகிட்ட வச்சுகிட்டா அடிச்சு சூப்பு வச்சி குடிச்சுடுவோம்னு சொல்லி வைங்க//
எக்ஸ்கூயுஸ்மி இம்சை அரசி...
எந்த புலிய அடிக்க போறீங்க
நாகை புலியா?
இல்ல குருட்டு புலி (ராம்)
அதுவும் இல்ல அடர்காணக புலியா? (அய்யனார்)
இல்ல கரும்புலி (மணிகண்டனா)
எலி புலி மின்னலா? இத்தன புலி இருக்கு இதுல எந்த புலி சொல்லுங்க..
இம்சையரசி தங்கச்சி தூங்குனாலும் காது கேக்குமாமே,சந்திப்பு அன்னைக்கு பக்கத்திலே உக்கார்ந்து இவரப் பத்தி 'கோபி' சொன்னது காதுல கேக்கலியோ.நல்ல வேளை.[ஆகா பத்த வச்சிட்டேன்]
ReplyDelete//நசுக்க நசுக்க மேலே வருவேன்.//
ReplyDeleteஅட்டகாசம் சார்.
போதுமாய்யா 58? அடே... மறு மொழிகளை சொன்னேனப்பா...
ReplyDeleteஎட்டு எழுத சொன்னா... அது என்ன அதிக பிரசங்கியாட்டம் 10? சரி சரி... சாதனைன்னு சொல்லி மாமனாருக்கு செலவு வச்சதை சொன்னீங்க பாருங்க (7வது பார்க்கவும்)... கலக்குங்க ராசாத்தீ.
காட்டாறு தங்காச்சி! வலையப்பட்டி, TAK இதெல்லாம் தான் மாமனார்! கத்ரிகோபால்நாத் ஹரித்வாரமங்கலம்,வினாயக்ராம், கன்னியாகுமாரி எல்லாம் நாங்களாக்கும்! தனி மயில் அனுப்புங்கோ! ஒரு பரிசு தர்ரேன் kummarv@gmail.com
ReplyDelete//எக்ஸ்கூயுஸ்மி இம்சை அரசி...
ReplyDeleteஎந்த புலிய அடிக்க போறீங்க
நாகை புலியா?
இல்ல குருட்டு புலி (ராம்)
அதுவும் இல்ல அடர்காணக புலியா? (அய்யனார்)
இல்ல கரும்புலி (மணிகண்டனா)
எலி புலி மின்னலா? இத்தன புலி இருக்கு இதுல எந்த புலி சொல்லுங்க.. //
எந்த புலியா இருந்தா என்னா சூப்பு கிடைச்சா சரி!
டீச்சர்! பத்தவச்சுட்டீங்களே டீச்சர்! கொஞ்சம் கேப் கிடச்சாலும் வந்து சிக்ஸர் அடிச்சுட்டு போறீங்களே!
ReplyDelete// வினையூக்கி said...
ReplyDelete//நசுக்க நசுக்க மேலே வருவேன்.//
அட்டகாசம் சார். //
வினையூக்கி! நாம ஜெயிக்கனும்! ஆனா அடுத்தவனை கஷ்டப்படுத்தாம! என் மேல பல கிரகங்களுக்கு கோபம் உண்டு! குறிப்பா சனீஸ்வர பகவான்! "ஹய்யோ இவ்வளவு கஷ்டம் தர்ரோமே, இந்த நாயி கண்டுக்கவே மாட்டங்குதே நான் எங்கிட்டு போயி முட்டிப்பேன்"ன்னு பல தடவை வருத்தப்பட்டு பக்கத்தில இருக்கும் கேதுகிட்ட பேசிகிட்டதா எனக்கு ஓரு தகவல்! எல்லாமே டேக்கிட் ஈசியா எடுத்துக்கனும் வினையூக்கி!
//குறிப்பா சனீஸ்வர பகவான்! "ஹய்யோ இவ்வளவு கஷ்டம் தர்ரோமே, இந்த நாயி கண்டுக்கவே மாட்டங்குதே நான் எங்கிட்டு போயி முட்டிப்பேன்"ன்னு பல தடவை வருத்தப்பட்டு பக்கத்தில இருக்கும் கேதுகிட்ட பேசிகிட்டதா எனக்கு ஓரு தகவல்! //
ReplyDeleteடிபிகல் அபி அப்பா ஸ்டைல் நகைச்சுவை இழையோடும் எதார்த்தம் ...
:):) :)
வினையூக்கி
பிலாக்கர் சொதப்பலால் அனானியாக
கஷ்டம், இதிலே கூடவா ஒழுங்க தமிழ் எழுதமுடியலை? அதான் காலையிலே பார்த்தப்போ பதிவு போட்டிருக்கிற விஷயமே சொல்லலையா? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், தமிழ் ஒழுங்கா எழுதுங்க முதல்லே! :P
ReplyDeleteமேலும் மேலும் நிறைய நசுக்கப்பட வாழ்த்துக்கள். (நசுக்க நசுக்க மேலே வருவேன்)
ReplyDeleteExcellent job. Keep it up.
ReplyDelete