பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

July 17, 2007

எங்க ஊர் பெரிய கோவில் போகலாம் வாங்க!! (பாகம் # 1)மயிலாடுதுறை மேம்பாலம் குறித்து முத்துலெஷ்மி தன் நட்சத்திர பதிவிலே போட்டிருந்தாங்க. அப்போ ஆயில்யன் என்னும் தம்பி "அப்படியே நம்ம ஊர் கோவில் பத்தியும் பதிவு போடலாமே"ன்னு கேட்டார். அதுக்கு முத்துலெஷ்மி அவருக்கு பதில் பின்னூட்டத்தில் தன்னால் இயலாதமையை சொல்லியிருந்தாங்க. சரி தம்பி ஆசையை கெடுப்பானேன், எந்த ஊர்ல இருக்குதோ ஊர் ஆசை வந்துடுச்சேன்னு நான் இந்த பதிவை போடுகிறேன். இப்போ என்கூட வர்ரவங்க வாங்க!

மாயவரம் பஸ்டாண்டில் இறங்கி 4ம் நம்பர் டவுன் பஸ்ல ஏறி பிரசவ ஆஸ்பத்திரின்னு டிகெட் எடுத்து(பஸ்டாண்டில் இருந்து 3வது ஸ்டாப்) அங்கே இறங்கி, அதுதான் பெரிய கோவிலின் வடக்கு வீதி, அங்க வடக்கு வீதியும் கீழவீதியும் இணையும் இடத்தில் இருக்கு சியாமளாதேவிக்கு ஒரு கும்பிடு போட்டுட்டு கீழவீதிக்குள்ள நடைய கட்டிட வேண்டீயதுதான். 2நிமிஷம் தான் என்னய மாதிரி நடந்தா! சந்நதி தெரு வந்துடும். அங்கே ஆஞ்சநேயர் மாயூரநாதர் நோக்கி கும்பிட்டுகிட்டே இருப்பார். அவருக்கு ஒரு கூம்பிடு. அதுக்கு பின்ன சந்நதி தெருவில இருந்து பெரிய கோபுரம் பிரம்மாண்டமாய் தெரியும். அதை நோக்கி போவோமா?

இதோ வலது பக்கம் ஒரு வீட்டிலே பிளாக் போர்டு தொங்குதே அதான் என் காலேஜ்ல தமிழ் பேராசிரியர் டாக்டர்.சொ.சி வீடு. அதிலே தினமும் ஒரு திருக்குறள் எழுதி விளக்கம் போட்டிருப்பார். அவர் போன பின்ன ஆளே இல்லாத டீக்கடைல டீ ஆத்துவது போல வெறும் போர்டு தான் தொங்குது. சரி இந்த பக்கம் பாருங்க இது போஸ்ட் ஆபீஸ். வந்தாச்சு பெரிய கோபுரம் வாசலுக்கு. பூ பழம் வாங்கிகிட்டு இதோ யானை கொட்டாய் பார்க்கலாம் வாங்க. ஆஹா அது எப்பவும் போல பின்பக்கத்தை காட்டிகிட்டு வாலை ஆட்டிகிட்டு பீக்ன்னு கத்துது பாருங்க. சரி உள்ளே நுழைவோமா! ஆஹா என்ன இரு காத்து என்ன ஒரு காத்து. வலது பக்கம் பாருங்க இவரு தன் இந்த கோபுரத்தை காக்கும் தங்கமுனீஸ்வரன். "நாராயணா கொஞ்சம் துன்னூரு குடு, இவங்கல்லாம் பிளாக்கர்ஸ்". "எதுவா வேணா இருக்கட்டும், துட்டு தேறுமா,எதினா கோடாலி தைலம் எடுத்தாந்தியா" காதில் முனுமுனுக்கும் நாராயனனை விட்டு விடுவோம்.

ஆஹா இந்த இடது பக்கம் பாருங்க. திருகுளம். வலது பக்கம் தென்னந்தோப்பு இருக்கே அந்த இடம் முன்ன கிரவுண்ட் மாதிரி இருந்துச்சு. அதில தான் அய்யா கிரிக்கெட் விளையாடுவேன். (எத்தனை தூரம் பந்து ஓடினாலும் சளைக்காம வந்து எடுத்துபோடுவேன்). சரி திருகுளத்துல காலை நனைச்சுப்போமா. மெதுவா வாங்க பாசி அதிகம் இருக்கும், பாத்து கழுவிக்குங்க. இங்க பாருங்க சாமியார் குளிச்சு முடிச்சு பட்டை அடிச்சு திருவோடு கழுவி கிளம்பிட்டாரு. இந்த குளத்திலே தண்ணி வத்தி நான் பார்த்ததே இல்லை. எங்க அப்பாவும் பார்த்ததில்லையாம். சரி மேலே வாங்க!

இதோ அடுத்த சின்ன கோபுரம் வந்துட்டோம். வலப்பக்கம் இடப்பக்கம் பிள்ளையார் இருக்கார் பாருங்க இவரை யாரும் கண்டுக்க மாட்டாங்க. உள்ள வாங்க நிலை படி தாண்டி! இதோ கொடிமரம். அதுக்கு கீழே ஒரு சின்ன "கொடிமரத்து பிள்ளையார்" சூடமும் எண்ணெய் பிசுக்குமா இருக்கு பாருங்க இந்த இடம். கும்பிட்டுகோங்க. இங்கிருந்து பார்த்தாலே மாயூரநாதர் இருக்கும் இடம் இருட்டா தெரியுதா. பின்ன இடது பக்கம் ரெண்டு தப்புடி நடப்போமா. இதோ இவரு தான் முக்குறுனி பிள்ளையார். போர்டுல "பாலும் தெளி தேனும் எழுதியிருக்கா அதை படிங்க. தலைல கொட்டிக்கனும் இப்போ. "டேய் மணியாட்டி பல்லு வேலு அயிரு இல்லியா?" "இருக்காருன்னே உள்ள" "இப்ப யாரு மொறை பாக்குறா?" "சுந்தரம் குருக்களு ஆனா பார்வதி குருக்களும் வந்துருக்காரு"

இவன் இந்த கோவிலின் மணி அடிப்பவன் cum பூ பறிக்கும் பையன். பல்லு எடுப்பா இருக்கும் அத்னால வேலுன்னா யாருக்கும் தெரியாது பல்லுவேலுன்னா பிரசித்தம்.

இதோ நமக்கு நேரா இருக்கே உயரமா படிவச்சு அதான் மடப்பள்ளி. பெரிய நசுங்கிய மோகந்தாஸ் பூசின பித்தளை தட்டு துணிய வச்சு கட்டி எடுத்துட்டு வர்ரானே அவன் ராமூர்த்தி. அவன் அப்பா கிட்டய்யர் மெயின் குக். மடப்பள்ளி ராஜராஜ சோழர் காலத்துல சுத்தம் பண்ணினது. அதுக்கு பின்ன இன்னும் செய்யலை. "ராமூர்த்தி, சாம்பய்யர் பொண்ணுக்கு நூல்வுட்டியே என்னாச்சு" "ஹய்யா அப்பா பின்னால வர்ரார்"

இப்போ வலதுபக்கமா போவோம். வந்தாச்சு. இப்போ நமக்கு இடப்பக்கமா இருக்கும் இந்த ஹால்க்கு பேர்"குமரகட்டளை" இந்த கோவிலே திருவாவடுதுறைக்கு சொந்தம். ஆனா இந்த இடம் மட்டும் தருமபுர ஆதீனத்துக்கு சொந்தம். இதிலே தான் கார்த்திகை அன்னிக்கு செல்வமுத்துகுமரனுக்கு அபிஷேகம் ஆகும். எல்லா கோவில் முருகனுக்கும் கார்த்திகை நட்டச்த்திரம் அன்னிக்கு அபிஷேகம். ஆனா வைத்தீஸ்வரன் கோயிலுக்கும் இங்கேயும் சொச்சத்தில் அதாவது அதுக்கு அடுத்த நாள் தான் அபிஷேகம், விரதம் எல்லாம்.(நாங்க எப்பவும் வித்யாசமானவங்க)

ஹய் ஜல் ஜல்ன்னு வர்ராளுங்க பாருங்க மயிலாடுதுறை ஸிஸ்டர்ஸ். இவளுங்க அழும்பு மாயவரம் பிரசித்தி. என்னா அழகு பாருங்க. கொலுசு போட்டுகிட்டு கேட் வாக் வரும் அழகு அநியாய அழகு. "டேய் குமாரு எங்கடா பெரியவ கொலுசுல ஒரு முத்து தான் இருக்கு" "அவுளுக்கு அதுவே அதிகம்னே, கொத்தி கொத்தி பிச்சிற்றா" "அவரு எங்க பெரியவரு" "அதுக்கு கொழுப்பு அதிகமாயிடுச்சு, மழை பேஞ்சா வந்து ரெண்டு குத்தாட்டம் போடுவாரு, வெயிலுன்னா வெள்ள வரமாட்டாரு வெள்ரு"

"அய்யோ மீனுக்கு போட்ட பொறி மீதிகீதி இருந்தா இவளுக்கு போட்டுடாதீங்க, இது கட்டாந்தரையா கொத்தி கொத்தி மூக்கு வீங்கிடுச்சு ஒரு தடவ, அதுக்கு வாழபழம் வேணா குடுங்க"

"டேய் நட்டு முட்டு யாருடா வாசிக்கிற மொற இப்போ"

"தொரையும் சவுந்தரமும்"

"போய் வெத்தலை பேக்கு வாங்கியா"

"இப்பதான் பாருவதி குருக்களு கேட்டாருன்னு அங்க குடுத்துட்டு வாரேன், உள்ள தான போறீங்க அவருகிட்ட வாங்கிக்குங்க"

இப்போ வலது பக்கமா திரும்பி மாயூரநாதர் இருக்கும் இடம் அருகே வந்தாச்சு. அந்த நிலைப்படி அருகே நிற்கிறோம்.

ஸ்ரீ கௌரி மாயூரநாதரை சந்திங்கும் முன்ன ஒரு சின்ன பிரேக்!

திஸ்கி: எங்க ஊர்காரங்க தவிர மத்தவங்களுக்கு கொஞ்சம் போர் அடிக்கலாம், ஆனா கண்டிப்பா மயிலாடுதுறை மக்கள் இந்த பதிவினை விரும்புவார்கள் என்றே நினைக்கிறேன், மீதி அடுத்த பாகத்தில்!
அடுத்த பாகம் இங்கே

28 comments:

 1. முன்பே பார்த்திருந்தால் படம் கண் முன்னே ஓடியிருக்கும். பார்க்காதவர்களுக்கு நேரடி ஒளிபரப்பு போல....

  பகைப்படம் இருந்தால் போடுங்கள் இன்னும் நல்லாயிருக்கும்...

  ReplyDelete
 2. நமச்சிவாய வாழ்க்
  நாதன்தாள் வாழ்க
  இமைபொழுதும் எம்நெஞ்சில் நீங்காதான்தாள் வாழ்க..!

  பாடி முடிச்சாச்சு,வாங்க அம்பாள பாக்க போவோம்!

  அண்ணா ரொம்ப நன்றிங்கன்னா..!

  ReplyDelete
 3. வாங்க ஜேக்கே! வருகைக்கு நன்றி! என்னிடம் படம் இல்லை. ஆனால் படம் கிடைத்தால் இணைத்துவிடுவேன்!

  ReplyDelete
 4. ஆயில்யன் அப்படியே கைதூக்கி கும்பிட்டுக்கிட்டே
  தென்னாடுடைய சிவனே போற்றி
  எந்நாட்டவற்கும் இறைவா போற்றி..பாடிட்டே போங்க..அபி அப்பா பின்னாடி..


  அட்டகாசமா இருக்கு மிகக்குறைந்த நேரத்தில் அப்படியே ஒரு ரவுண்ட் விட்டாச்சு கோயிலை.

  ReplyDelete
 5. தம்பி! ஆயில்யா! கடகராசிகாரரே! இன்னும் மாயூரநாதர் பார்க்கலை! அதுக்குள்ள அவயாம்பா பார்க்க அவசரமா?கொஞ்சம் இருப்பா!

  ReplyDelete
 6. நல்ல முயற்சி. ஆமா, அதென்ன மயிலாடுதுறை ஸிஸ்டர்ஸ்?? கிளிகள்??

  ReplyDelete
 7. வாங்க முத்துலெஷ்மி! நன்றி வருகைக்கு!

  ReplyDelete
 8. வாங்க லெஷ்மி! மயிலாடுதுறைல மயில் இருக்கும் இடம் கோவில் மற்றும் தருமபுர ஆதீனம் இரண்டு இடத்தில் தான்! நான் சொல்ல வந்தது மயில். கிளி இல்லை!

  ReplyDelete
 9. நெட்டில் சுட்டது

  http://i181.photobucket.com/albums/x202/chinnapaya/100_0243.jpg

  http://i181.photobucket.com/albums/x202/chinnapaya/100_0242.jpg

  http://www.shaivam.org/gallery/image/temples/spt_p_mayiladuturai_1.jpg

  ஹாப்பியா...!(எனக்கு ஹாப்பியோ ஹாப்பி)

  ReplyDelete
 10. வே ரொம்ப நாளைக்கப்புறம் உம்ம ட்ரேட் மார்க் பதிவு..நல்லாஇரும்

  ReplyDelete
 11. நன்றி! ஆயில்யன், ஊர்பாசம்ன்னா இப்படில்ல இருக்கனும்! முத்துலெஷ்மி உங்களுக்கு முன்ன கொடுத்து போட்டோ போட்டாச்சு!

  ReplyDelete
 12. வாங்க டாக்டர்! வருகைக்கு நன்றி! போட்டோ எடுத்து வரவில்லை. இந்த பதிவு எதேர்ச்சையாக போட்டது. பதிவின் முதல் பாராவிலே சொல்லியிருப்பேன். ஆனாலும் ஒரு போட்டோ போட்டாச்சு! நன்றி: முத்துலெஷ்மி!

  ReplyDelete
 13. நன்றி அய்யனார். ரொம்ப நாளா எழுதினது எல்லாம் வேஸ்ட்டா:-((

  ReplyDelete
 14. அபி அப்பா என்னது இது, எனக்கு எங்க அக்கா வீடு திருவிழந்தூரில் இருந்து எப்படி வரனும் திரும்ம ஒரு பதிவு போடுங்க

  ReplyDelete
 15. தல... அசத்தலா இருக்கு. மெய்யாலுமே நான் உங்க ஊருக்கு வந்தது மாதிரி இருக்கு. இனி கொஞ்ச நாளைக்கு "நாங்களும் மாயரம் போய் இருக்கோம்ல"ன்னு அளந்து விட வச்சாதியா இருக்கும். அடுத்த பாகம்?! :)))

  ReplyDelete
 16. ஆஹா...தலைவா அருமையான பதிவு....அப்படியே கோவிலை சுத்தி பார்த்த மாதிரி இருக்கு.

  (பதிவுல நல்லா தான் எழுதுறிங்க ஆனா நேரா பார்க்கும் போது மட்டும் ஆளு எஸ்கேப் ;) )

  ReplyDelete
 17. \\ அய்யனார் said...
  வே ரொம்ப நாளைக்கப்புறம் உம்ம ட்ரேட் மார்க் பதிவு..நல்லாஇரும்\\


  ரிப்பீட்டேய்...

  துபாய் சென்ஷி ;)

  ReplyDelete
 18. //ஆனா கண்டிப்பா மயிலாடுதுறை மக்கள் இந்த பதிவினை விரும்புவார்கள் என்றே நினைக்கிறேன், //

  நிச்சயமாக.

  ReplyDelete
 19. அடடா, ஒரே மாயா வரமாப் போச்சே.
  அபிஅப்பா, இப்படிக்கூட கோயிலைப் பத்தி எழுதமுடியுமா.
  சூப்பர்...
  நேரே அழைச்சுட்டு வந்துட்டீங்களே. காலு கடுக்குது.அடுத்த சன்னிதிக்கு எப்பொ போறது.

  ReplyDelete
 20. ரொம்ப நல்லா இருக்கு...படங்க இருந்து இருந்தா இன்னும் நல்லா இருக்கும்..ஹ்ம்ம்..

  காபி தண்ணி, போண்டா, பஜ்ஜி ஏதாவது வாங்கி குடுங்க சாமி.. பசிக்குதுங்கண்ணா

  ReplyDelete
 21. இந்தப் பதிவைப் பார்த்துட்டுப் பின்னூட்டமும் கொடுத்தேனே அபி அப்பா, அது எங்கேயோ ஓடிப் போயிருக்கு! கண்டு பிடிங்க! புதுசா எழுதி இருக்கீங்களோன்னு நினைச்சேன்! :P

  ReplyDelete
 22. //இடது பக்கம் பாருங்க. திருகுளம். வலது பக்கம் தென்னந்தோப்பு இருக்கே அந்த இடம் முன்ன கிரவுண்ட் மாதிரி இருந்துச்சு. அதில தான் அய்யா கிரிக்கெட் விளையாடுவேன்//

  சிக்சர் அடிச்சாக்கா, பந்து குளத்தில் போய் விழுமா? :-)

  முடவன் முழுக்கு பற்றியும், உங்க குளத்தின் ஸ்பெஷாலிட்டி பற்றியும் உங்க பொடி நடை ஸ்டைலில் எழுதுங்க அபி அப்பா! திரு இந்தளூர் பெருமாள் கோயில் கூட மாயவரம் தானே?

  ReplyDelete
 23. வாய்யா குசும்பா! திருவிழந்தூர்ல இருந்து பொடிநடையா வந்திடலாம். 1 மணி நேரத்துல!

  ReplyDelete
 24. தல! வாங்க உங்க வருகைக்கு நன்றி!

  ReplyDelete
 25. கோபி! வாப்பா, மிக்க நன்றி வருகைக்கும் சென்ஷிக்கு குடுத்த ப்ராக்ஸிக்கும்!

  ReplyDelete
 26. அருள்குமார்! வாங்க வருகைக்கு நன்றி!

  வல்லியம்மா! கால் கடுக்கும்ன்னு தான் கொஞ்சம் ரெஸ்ட் விட்டுருக்கேன்!

  மங்கை! போண்டா, பஜ்ஜி கிடையாது அவயாம்பிகை பார்த்த பின்ன ஃபுல் மீல்ஸ் ஏற்பாடு ஆகிட்டு இருக்கு!

  கீதாம்மா! உங்க பதிலுக்காகத்தான் அடுத்த பாகம் போட லேட் ஆகிடுச்சு!

  முத்துலெஷ்மி, உங்க ஆசைப்படி 2ம் பாகம் போட்டாச்சு!

  ReplyDelete
 27. வாங்க கேஆரெஸ்! குளத்தில் பந்து விழ ச்சான்ஸ் இல்ல கிரவுண்ட் பெரியது!

  அது போல குளம் பத்தி சொல்லனும்னா எனக்கு அது பத்தி தெரியாது. ஆனா அதுல நாங்க அடிச்ச லூட்டி பத்தி காமடி பதிவு வேணா போடலாம்.

  அதுபோல கடைமுழுக்கு/முடமுழுக்கு பத்தி ஏற்கனவே என் அழகு பதிவிலே லைட்டா சொல்லியிருப்பேன்! ஆனா வரும் ஐப்பசி மாதம் விரிவா சொல்ல்கிறேன்! வருகைக்கு நன்றி.

  திருவிழந்தூர் பெருமாள் பத்தி நான் சொல்வதைவிட அந்த பக்க வலைப்பதிவர் சீமாச்சு அண்ணன் சொன்னா நல்லா இருக்கும்.

  நீங்க படுத்து இருக்கும் அழகே பெருமாளை தரிசிச்ச ஆனந்தம்!

  ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))