அப்பா கொக்கு முன்னம் செல்ல மீதி கொக்குகள் அப்படியே ஒரு போர் விமானம் மாதிரியான வடிவத்தில் போய் கொண்டு இருந்தன. அதிலே ஒரு சின்ன கொக்கு மாத்திரம் அந்த விமான வடிவத்தை கலைத்து கலைத்து அங்கும் இங்கும் செல்வதும் அப்பா கொக்கு "டேய் ஒழுங்கா வா" என்பது போல வெடுக் வெடுக் என தலையை திருப்பி அந்த குஞ்சு கொக்கை பார்ப்பதுமாய் அற்புத காட்சி அது. அனேகமாய் அதன் பெயர் "நட்டு"வாக இருக்கலாம் என அபத்தமாக தோன்றியது.
எனக்கு சில சமயம் அப்படி எதாவது ஏடாகூடமா தோணும். மன்மோகன் சிங் ஜெயித்த போது "ச்சே அவர் மட்டும் நம்ம கம்பனியிலே அப்ளை பண்ணினா அக்கவுண்டட் வேலை ஈசியா கிடைச்சு இருக்குமில்லே" என நினைத்தேன். அப்படித்தான் எனக்கு அப்பவும் நினைக்க தோன்றியது.
அந்த நட்டு கொக்குக்கு கிரீமி லேயர் பத்தி தெரியாதுல்ல என நானே என்னிடம் கேட்டு கொண்டேன். பின் நானே சிரித்து கொண்டேன். மனம் ஒரு நிலையில்லாமல் திடீர் திடீன்னு தாவியது சம்மந்தா சம்மந்தம் இல்லாமல். கிரீமிலேயர் பத்தி யோசிக்கும் போது அப்பா கொக்குக்கு பின் அழகா பறந்த அந்த அபி கொக்கை பார்த்தேன். சல்லென்று அந்த குஞ்சு கொக்கை அந்த விமான வடிவத்தை விட்டு வேகமாக வந்து தன் இறக்கையால் அனைத்து கொண்டே தன் பக்கத்திலேயே கிடுக்கி பிடி போல வைத்து கொண்டு பறந்தது. அந்த கொக்கின் அந்த செய்கையே எனக்கு அதற்கு 'அபி'என பெயர் வைக்க தோன்றியது.
சரி அந்த அபி கொக்குக்கு கிரீமிலேயர் பத்தி தெரியுமான்னு அடுத்த சந்தேகம் தேவையில்லாம வந்தது. போன தடவை ஊருக்கு போனப்ப அபி கேட்டாள் "அப்பா கிரீமி லேயர்"ன்னா என்னப்பா?
"அதுவா என் அப்பா ஒரு சாதாரண குமாஸ்தா, அவர் உன் அத்தைகளையும் என்னையும், உன் சித்தப்பாவையும் அந்த சொற்ப சம்பளத்தில் படிக்க வைக்க சிரமம் இருந்தது. அவர் அரசாங்க உத்யோகஸ்தராக இருந்த காரணத்தால் எங்களுக்கு எந்த வித சலுகையும் இல்லை. ஆனால் நம்ம கல்யாண சுந்தரம் மிராசு பையன் ஸ்காலர்ஷிப் பணத்தை வாங்கி ஹெசெம்டி வாட்ச் வாங்கி கட்டி கொண்டு என்னிடமே ஆட்டி காண்பித்தான். அதே ஸ்காலர்ஷிப் எனக்கு கிடைச்சு இருந்தா நான் கொஞ்சம் டியூஷன் அது இதுன்னு வச்சி இன்னிக்கு இதை விட நல்ல நிலமைக்கு வந்திருப்பேன். இன்னும் சில பேருக்கு உதவி செஞ்சி இருப்பேன். இதல்லாம் சட்டத்தின் ஓட்டைகள். இத அரசாங்கம் சரி செய்வதை விட நாமா பார்த்து செய்யனும் எதுனாவது. அதாவது நம் ரெக்கார்டு படி உன் அப்பா நான் துபாயில் சம்பாதிக்கவேயில்லை என்று சொன்னால் சட்டபடி அரசாங்கம் நம்பும். உனக்கு ஸ்காலர்ஷிப் கிடைக்கும். ஆனா அது இன்னும் ஒரு உண்மையான ஏழைக்கு போவதை தடுக்கும்"
உண்மையிலேயே கிரீமி லேயர்கான உதாரணம் சரியாக இதுவல்ல என எனக்கு தெரிந்திருந்தும் இடஒதுக்கீடு அது இதுன்னு சொல்லி அவளை குழப்ப மனமில்லை. கிரீமிலேயரின் கான்செப்டை மட்டும் புரிய வைத்தேன். அதுவே அவளுக்கு போரடித்து இருக்கும் போல. அதனால் "அப்பா சந்தோஷ் சுப்ரமணியம்" படம் போவுமா பியர்லெஸ்ஸில்" என கேட்ட போது சரி என்றேன்.
படம் பார்த்து வீட்டுக்கு வந்த போது நான் சொன்னேன் அவளிடம் "ஜெலீனீனா சரியான லூசா நடிச்சு இருக்கு". அவள் பதில் சொன்னா "இல்லப்பா ஜெயம் ரவி தான் சரியான லூசு" எனக்கு தூக்கி வாரி போட்டது. பின் அவளே சொன்னா "பின்ன என்னப்பா பிரகாஷ்ராஜ் கிட்ட எக்கசக்க பணம் இருக்கு. அவரும் பிசினஸ் பண்ண தரேன் என சொல்லியும் இவன் போய் பேங்கிலே நிக்கிறான் லோனுக்கு. இவன் அவனோட அப்பா பணத்திலே செய்யாம கவர்மெண்ட் பணத்திலேயே கொழிக்க பார்க்கிறான். இந்த படம் கூட கிரீமி லேயர் சம்மந்தப்பட்ட படம் தானப்பா" நான் கொஞ்ச நேரம் உறைந்துவிட்டேன். நான் இந்த கோணத்திலே பார்க்கவில்லையே என. நான் கூட படம் பார்க்கும் போது நினைத்தேன் "பய அப்பன் காசை எதிர்பார்க்காமல் சொந்த காலில் நிற்க ஆசைப்படுறான் ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப நல்லவன்"ன்னு. மறைமுகமாக அடுத்த ஏழையின் பிரட்டை திருடி திங்க ஆசைப்படுறான் என அபி சொல்லிய போது ஆச்சர்ய பட்டு போனேன்.
நான் அதை நினைத்து கொண்டே இருக்கும் போது கொக்கு கூட்டம் போய் விட்டிருந்தது. குளிர் கொஞ்சம் அதிகமானது. இனி குளிர் தாங்காது என நினைத்து "டாக்ஸி' என கத்தினேன்! கோவிலுக்கு போய் தியானம் செய்ததை விட அந்த கொக்கு கூட்டம் பார்த்தது மனசு லேசாச்சு!
மீ த ஃபர்ஸ்ட்டு!
ReplyDeleteபடம் நல்லா இருக்கு .பதிவை படிச்சிட்டு வரேன்
ReplyDeleteமீ த ஃபர்ஸ்டா?
ReplyDeleteம்ஹூம்! இருங்க பதிவைப் படிச்சிட்டு வரேன்!
ReplyDeleteஅபிக்கு மாறுபட்ட பார்வை!
ReplyDeleteஹ்ம்ம்...
ReplyDeleteஇந்தக் காலத்து பிள்ளைகளுக்கு தெரியாத புரியாத விஷயம் என்று ஒன்று ஏன் எதுவுமே தான் இல்லை நாம் தான் அவர்களிடம் கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது. கற்றுக் கொடுங்கள் நிறையக் கற்றுக் கொள்ளுங்கள் அவர்களிடமிருந்து (இங்கே அபியிடமிருந்து மற்றவர்கள் அவரவர் குழந்தைகளிடமிருந்து )
ReplyDelete//அதிலே ஒரு சின்ன கொக்கு மாத்திரம் அந்த விமான வடிவத்தை கலைத்து கலைத்து அங்கும் இங்கும் செல்வதும் அப்பா கொக்கு "டேய் ஒழுங்கா வா" என்பது போல வெடுக் வெடுக் என தலையை திருப்பி அந்த குஞ்சு கொக்கை பார்ப்பதுமாய் அற்புத காட்சி அது. அனேகமாய் அதன் பெயர் "நட்டு"வாக இருக்கலாம் என அபத்தமாக தோன்றியது//
ReplyDelete:)
நல்ல கற்பனை!
//எனக்கு சில சமயம் அப்படி எதாவது ஏடாகூடமா தோணும். மன்மோகன் சிங் ஜெயித்த போது "ச்சே அவர் மட்டும் நம்ம கம்பனியிலே அப்ளை பண்ணினா அக்கவுண்டட் வேலை ஈசியா கிடைச்சு இருக்குமில்லே" என நினைத்தேன். அப்படித்தான் எனக்கு அப்பவும் நினைக்க தோண்றியது.//
ReplyDeleteஅது சரி!
தோன்றியது க்கு ஏன் மூணு சுழி ண்?
ReplyDeleteசூப்பர் போஸ்டுங்க. தூரத்துல இருக்கும் போது குடும்பத்தைப் பத்தி நெனச்சிக்கறது தான் ரெண்டாவது குதூகலம் இல்ல? முதல் குதூகலம் அபி அத்தை தீபா வெங்கட்டைப் பத்தி நெனச்சிக்கறதுன்னு ஊருக்கே தெரியும்.
ReplyDeleteகுட்டிக் கொக்கு நட்டு உதாரணம் நல்ல ரசனை.
அபி பாப்பா சந்தோஷ் சுப்ரமணியத்தையும் க்ரீமி லேயரையும் முடிச்சிப் போட்டது நம்ம திங்கிங்க் எல்லாம் ஒரே திசையில தான் இருக்குன்னு காட்டுது.
:)
அபி அப்பா,
ReplyDeleteநீங்க இன்னும் அதை தெளிவா விளக்கலை. (ஹி..ஹி.. எனக்கும் தெளிவா தெரியல, சொல்ல முடியுமா) கிரீமி லேயர்னா உயர் சாதிக்காரர்களுக்கும் இட ஒதுக்கீடு குடுக்குறதா?
அது வேணும்னு சொல்றீங்களா? வேணாமா?
அது ஜெலீனீனா அல்ல
ReplyDeleteஜெனிலியா
ஒரு கிமீட்டரில் பாதியெ இந்த மாதிரி குண்டக்க மண்டக்கன்னு யோசிச்சிகிட்டே நடந்துட்டு அதுக்கப்புறம் எதுக்கு டாக்ஸி...
ரொம்பத்தேன்...
சந்தோஷ் பத்தி அபியோட திங்கிங் சூப்பர்..
ReplyDeleteகிளிகள் கூட்டம் பார்த்து மனசு மகிழும் ’மயிலிறகுக் கனவுகள்’ போல நீங்களும் கொக்குக் கூட்டம் பார்க்க ஆரம்பிச்சுட்டீங்களா எனக் கலாக்க நினைததேன் முதலில். தொடர்ந்து படித்து முடித்த போது மாற்றிக் கொண்டேன் எண்ணத்தை. அபிக் கொக்கு கேட்டது அத்தனை சரி.
ReplyDelete//அப்பா கொக்கு "டேய் ஒழுங்கா வா" என்பது போல வெடுக் வெடுக் என தலையை திருப்பி அந்த குஞ்சு கொக்கை பார்ப்பதுமாய் அற்புத காட்சி அது. அனேகமாய் அதன் பெயர் "நட்டு"வாக இருக்கலாம் என அபத்தமாக தோன்றியது.//
அபத்தம் அல்ல, கற்பனை அழகு.
//சல்லென்று அந்த குஞ்சு கொக்கை அந்த விமான வடிவத்தை விட்டு வேகமாக வந்து தன் இறக்கையால் அனைத்து கொண்டே தன் பக்கத்திலேயே கிடுக்கி பிடி போல வைத்து கொண்டு பறந்தது. அந்த கொக்கின் அந்த செய்கையே எனக்கு அதற்கு 'அபி'என பெயர் வைக்க தோன்றியது.//
இந்தக் கற்பனையே ஒரு அழகுக் கவிதை.
கிரீமி லேயர் பற்றிய சிறு விளக்கம்:
ReplyDeleteபின் தங்கிய வகுப்பினரின் வருட வருமானம் ஒரு லட்சத்திற்கு மேல் இருந்தால் அவர்கள் க்ரீமி லேயர் என அழைக்கப்பட்டனர். அவர்களுக்கு தனி சலுகைகள் கிடையாது.(அதாவது இவர்களும் பொது ஒதுக்கீட்டிலேயே பங்குப்பெற இயலும்)
இது கடந்த சிலவருடங்களாக நான்கு லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
அபிப்பா..
ReplyDeleteகாலாகாலத்துல ஊருக்கே வந்து செட்டில் ஆகப் பாருங்க..
ரொம்ப நாள் தாங்க மாட்டீங்க போலிருக்கு..
அப்பா மனசு! //கோவிலுக்கு போய் தியானம் செய்ததை விட// குழந்தைகளை நினைச்சது மனசு லேசாச்சு!
ReplyDelete//அந்த கொக்கு கூட்டம் ஜீன்சும், குரங்கு குல்லாவும் இல்லாமல் கூட்டமாய் போகின்றது// சரி, நம்பிட்டோம்! உங்க வித்தியாசமான திங்கிங் தான் உங்க குழந்தைகளுக்கும் வந்திருக்குன்னு:-)
சிந்தனை ஓட்டத்தை வார்த்தைகளில் கட்டிப்போட்டு எழுதுவது உங்களுக்கு இவ்வளவு எளிதாக வருகிறது. ரொம்ப நல்லா இருக்கு.
ReplyDeleteஅனுஜன்யா
அதான் படம் பாக்கப் போயிட்டீங்களே, அப்புறம் எப்படி கொக்கு, டாக்ஸி?
ReplyDeleteநல்ல சிந்தனை, அபிஅப்பாவுக்கு இல்ல, அபிக்கு.
குழந்தைகள் சட்டுன்னு வளர்ந்துடுறாங்க. நாமதான் அவங்கள இன்னும் குழந்தைகள்ன்னு நினைக்கிறோம்.
ReplyDeleteஎன் நண்பரோட பொண்ணு சொன்னா அங்கிள் கம்சன் லூசுன்னு. ஏன்னா அவங்க ரெண்டுபேரையும் வேற வேற ஜெயில்ல போடாம ஒன்னாப் போடுறாம் பாருங்கன்னா. அது சரி.
அபி உங்கள மாதிரி இல்லாம விவரமா இருக்கதப் பார்த்து மகிழ்ச்சி.
//படம் பார்த்து வீட்டுக்கு வந்த போது நான் சொன்னேன் அவளிடம் "ஜெலீனீனா சரியான லூசா நடிச்சு இருக்கு". அவள் பதில் சொன்னா "இல்லப்பா ஜெயம் ரவி தான் சரியான லூசு" எனக்கு தூக்கி வாரி போட்டது. பின் அவளே சொன்னா "பின்ன என்னப்பா பிரகாஷ்ராஜ் கிட்ட எக்கசக்க பணம் இருக்கு. அவரும் பிசினஸ் பண்ண தரேன் என சொல்லியும் இவன் போய் பேங்கிலே நிக்கிறான் லோனுக்கு. இவன் அவனோட அப்பா பணத்திலே செய்யாம கவர்மெண்ட் பணத்திலேயே கொழிக்க பார்க்கிறான். இந்த படம் கூட கிரீமி லேயர் சம்மந்தப்பட்ட படம் தானப்பா" நான் கொஞ்ச நேரம் உறைந்துவிட்டேன். நான் இந்த கோணத்திலே பார்க்கவில்லையே என. நான் கூட படம் பார்க்கும் போது நினைத்தேன் "பய அப்பன் காசை எதிர்பார்க்காமல் சொந்த காலில் நிற்க ஆசைப்படுறான் ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப நல்லவன்"ன்னு. மறைமுகமாக அடுத்த ஏழையின் பிரட்டை திருடி திங்க ஆசைப்படுறான் என அபி சொல்லிய போது ஆச்சர்ய பட்டு போனேன்.//
ReplyDelete:))
க்ரீமீ லேயர்ன்னா என்ன? கேக்ல இருக்கறதான்னு தான் நான் கேக்கனும்.. சரி எதோ சொல்லவந்தீங்க அபிக்கு புரிஞ்சா சரி.....
ReplyDeleteமொக்கை..................ஆசையா வந்தா சே போர்.....
ReplyDeleteசந்தோஷ் பத்தி அபியோட திங்கிங் சூப்பர்..
ReplyDeleteஎனக்கும் க்ரிமிலேயரை எளிமையாக விளக்கியதற்கு நன்றி
ReplyDeleteஅபி அப்பா,
ReplyDeleteமிக அருமையானப் பதிவு. மிகவும் இரசிச்சுப் படிச்சேன். அபியின் பார்வை என்னை மிகவும் வியப்பில் ஆழ்த்தியது. அதுதான் சரியானப் பார்வையும் கூட. அபி பாப்புவுக்கு என் வாழ்த்துக்கள்.
அபி உங்கள மாதிரி இல்லை அபிஅப்பா. ரொம்ப புத்திசாலி பொண்ணு
ReplyDeleteஎன்ன அபிஅப்பா ரெடியா..??
ReplyDeleteபடத்தையும், முதல் பத்தியையும் படிச்சவுடன் வேற யாரு பதிவுக்கோ வந்துட்டோம் என்று சந்தேகப்பட்டேன்.
ReplyDeleteஇரண்டாவது பத்தி படித்தவுடன் சே.. சே.. சரியான பதிவு தான்.
கம்பனி ய படித்தவுடன் முடிவே பண்ணிட்டேன்.... உங்க பதிவு தான் என்று...
"போரடிக்குதுப்பா"
ReplyDeleteகமாண்ட்டை ரிலிஸ் பண்ணவும்
:)
//
ReplyDeleteதோன்றியது க்கு ஏன் மூணு சுழி ண்?
//
ரொம்ப "தோண்டி"யிருப்பாரு :)
ஓஹோ இதுதான் க்ரீமி லேயரா.
ReplyDeleteஎனக்கு அபி அப்பா கோக்கும் கண்ணுக்குத் தெரிஞ்சுது. அதைச் சரியா பறக்கிறதான்னு செக் பண்ற அபி அம்மா கொக்கும் தெரிஞ்சது.
நட்டுப் பாப்பா கொக்கும், அபி பாப்பா கொக்கின் விதரணையும்
மனசை லேசாக்கிவிட்டனா. அருமை அபி அப்பா..
அழகான குளிரை அனுபவிச்சுகிட்டே சூரிய அஸ்தமனமும் சந்திரன் உதயமும் ஒரு சேர வரும் அந்த நடுங்கும் குளிரில் .
ReplyDeleteloverkuda appdiye kaiya pudichitu nadanthu pona evalavu azaka irukum.
அபி அழகா யோசிச்சு இருக்காங்க :)
ReplyDelete