ரொம்ப நாள் டச் விட்டு போச்சா! சரி இதன் 7ம் பாகத்தை இங்க போய் படிச்சுட்டு வந்து இதை படிங்க
***************************
இப்போ காலை ஆறு மணி! மாமா எங்கயோ போய் காலை கடன் எல்லாம் முடிச்சு வந்தாச்சு! முகத்தில் அத்தனை ஒரு விபூதி! மாமாவின் அத்தை இருக்காங்களே(அதாவது எனக்கு அத்தை) அவங்க அத்தனை ஒரு அழகு! நிறம் வெள்ளையோ வெள்ளை! என் தாத்தா தன் குழந்தைகளை தூக்கி கொஞ்சியது இல்லையாம். ஆனா தன் தம்பியின் குழந்தை இந்த அத்தை மாத்திரம் அதுக்கு ஒரு விதிவிலக்கு!
அத்தை சத்திரத்தின் உள்ளே நுழையும் போதே அத்தனை ஒரு கடுகடுப்பு! "என்னங்க நீங்க நேத்து 2 மணிக்கே வந்துட்டிங்கலாமே" என கேட்டதுக்கு மாமா "டிக்கு"ன்னு சொல்லி சீட்டை கவுத்த போது எனக்கு சிரிப்பாய் வந்தது! அத்தை உள்ளே போயாச்சு!
மணி இப்போ காலை 8.00 ஆச்சு! இதோ இப்ப வருவது திருவிழந்தூர் மாமா!! மாமாவின் காஸ்டியூம் ஒரு வெள்ளை டெரிகாட்டன் பாம்பே டையிங் வேஷ்டி, நல்ல தும்பை பூ டெரிகாட்டன் சட்டை, அதுக்கு மேட்ச்சா தும்பை பூ வெள்ளை தலை! ஆனா முடி அத்தனை கொட்டி இருக்காது!மம்மூட்டி மாதிரி பீடி தான். ஆனா பீடிக்கு லைட்டர் வச்சிருந்தது அவங்க மட்டுமேன்னு நினைக்கிறேன்.
மாமாவுக்கு ஒரு உபரி கதை எல்லாம் சொல்லுவாங்க! மாமா தவழ்ந்து நடந்தா கால் முட்டி எல்லாம் தேஞ்சு போயிடும்ன்னு அவங்க அக்கா அதாவது நாங்க "அத்தம்மா" என்னும் சொல்லும் அத்தம்மா (மாமாவின் அக்கா, அவங்க தான் மாமாவை வளர்தாங்களாம்)வீடு முழுக்க மெத்தை போட்டாங்களாம்! அந்த ஒரு சரித்திர காரணத்துக்கவே எங்க தாத்தா அவங்க பொண்ணை கொடுத்தாங்கலாம்!(என்ன கொடுமை சரவணா)
மாமா ஒரு இடத்துக்கு வந்தா என் அப்பாவுக்கும் ஒரு பெருமை! அது போல மாமாவுக்கும் ஒரு பெருமை! மாமா இருக்கும் இடத்தில் அப்பா இருக்க மாட்டாங்க! ஆனா மாமா" என் மச்சான் நான் வந்துட்டேன்னு தெரிஞ்சா இந்த பக்கம் வர மாட்டான் அப்புடி ஒரு மரியாதை"ன்னு சொல்லுவாங்க! ஆனா அப்பா பெரிய அத்தை கிட்ட போய் என்னவாவது சண்டை போட்டுகிட்டு இருப்பாங்க!
அதை எல்லாம் விடுங்க! இதோ மாமா வந்தாச்சு! வந்த வுடன் திருவீழிமிழலை மாமா கிட்டே "வா தம்பி! வா! நாம செம்மனார்கோவில் குடும்பத்திலே வாக்க பட்டதுக்கு பதிலா பேசாம நேரு குடும்பத்திலே வாக்க பட்டிருக்கலாம், பெரோஸ் கான் , பெரோஸ் காந்தியான மாதிரி நேரு மடி நாய்குட்டியா போயிருகலாம்"ன்னு சொன்னார்!
எனக்கு அப்ப ஒண்ணும் புரியலை! அப்ப மாமா அந்த இடத்திலெ உட்காந்து தனது ராஜ்ஜியம் ஆரம்பித்தார்! அப்போ அங்க வந்த பெரிய கோவில் மேஸ்திரி யை பார்த்து என்ன "என்ன மயிலு எப்படி இருக்க" என ஆரம்பிக்க (இந்த இடத்தில் ஒரு சின்ன விஷயம், அந்த மயிலு பேர் என்னன்னு தெரியலை ஆனா ஒரு ஆளை அடிச்சுட்டு மெயில் மாதிரி பறந்துடுவாராம், பின்னே அது மெயில் மயிலு ஆகிடுச்சு) ஆகா அண்ணே! எனக்கு நல்லா தெரியும் இப்ப நீங்க சொல்ல போற விஷயம்! இந்த செவுறு எப்புடி இத்தன வழ வழன்னு இருக்குன்னு தானே! அதாவதுண்ணே, ஒரு இருப்பு சட்டியிலே ஒரு பெரிய கரண செமெண்ட் எடுத்து அதுல 40 முட்டை கலந்து"…… அதுக்குள்ள மாமா சரி சரி விடுன்னு சொல்ல அந்த இடத்தை விட்டு வந்தேன்!
ஆனா திருவிழந்தூர் மாமா தன் தனி ஆவர்தனத்தை விடவில்லை! அவருக்கு ஒரு பழக்கம். தன்னை சுத்து 5 பேர் இருந்தா தான் சொல்லுவதை சொல்லிவிட்டு தனக்கு சுத்தியும் உள்ள ஆளுங்க கிட்ட தனக்கு "தமிழ்மணத்திலே ஓட்டு போடுங்க, தங்கிலீஷ்ல ஓட்டு போடுங்க"ரேஞ்சிலே "ஆமாவா" என்பது போல தன் தலையை மேலும் கீழுமாக தனி தனியாக ஆட்டி ஓட்டு கேட்பார்!
ஆனா மாமாவின் நக்கல் உலக பிரசித்தம்! தவிர நாஸ்டர்டோம் மாதிரி எதுனா சொல்லுவார். எனக்கு அப்போதே அவர் மீது ஒரு அலாதி பிரியம். அவர் சொல்வது எல்லாம் நடக்கும் மாதிரி ஒரு பிரம்மை! நம்ம KRS மாதிரி எது எதை நாம சம்மந்த படுத்த முடியாதோ அதை எல்லாம் சம்மந்த படுத்துவார்!
அப்போ அம்மா சத்திரதுக்கு வெளியே வரும் போது திருவிழந்தூர் மாமா"இந்த சுலோச்சனா இருக்கே சுலோச்சனா, அதுக்கு ஒரு பிள்ளை ,அதுக்கு சுத்த தமிழ் பெயர் வச்சுச்சு, ஆனா பாரேன் அதோட வீட்டு பெரியவர் கூட சண்டையாம், அவரு சபிச்சுட்டாரு என் கிட்ட, அதுவும் மகனும் பின்னால வேர வேர இடத்திலே இருந்து நிர்பந்தினால "சண்டை" மாதிரி போட்டுக்க போறாங்க பாரு ரங்கா"
அம்மாவுக்கு செம கோவம் வந்துடுச்சு! "அண்ணே நீங்க என்னை தானே சொல்றீங்க, பெரியவரு செஞ்சது சரியா அவங்க இத்தன வயசிலே இத்தன சின்ன பொண்ண கல்யாணம் பண்ணிகிட்டது சரியா?" என் கேட்க " அட அது இல்லம்மா நான் சொன்னது "EVKசம்பத், சுலோச்சனா சம்பத், இளங்கோவன் பத்தி, ஆனா அந்த சுலோச்சனா சம்பத் வீட்டு பெரியவர் கல்யாணம் பத்தி எனக்கு தெரியாது"ன்னு சொன்னார்! அடடே எனக்கு அப்ப அதல்லாம் புரியாம போச்சே!
இந்த பரபரப்பிலே அத்தை மட்டும் கல்யாண வேலையிலே மும்மரமாக இருந்தாங்க. பாலய்யர் மஞ்சள் கயித்துல தாலியை கோர்த்து அத்தை கிட்டே கொடுக்க, பண்டரிநாதன் ரெடியா காரை ஸ்டார்ட் பண்ண அத்தை தாலியை எடுத்துகிட்டு சியாமளா கோவில் போய் கந்தன் தாத்தா பூசாரிகிட்டே சொல்லி அம்பாள் மடியிலே வச்சு எடுத்துகிட்டு வந்துட்டாங்க. இன்னும் கல்யாணத்துக்கு நேரம் இருந்துச்சு. அதுக்குள்ள டிபன் சாப்பிட பந்தி நடந்துகிட்டு இருந்துச்சு. அது வரை தாலியை ஜாக்கிரதையா வச்சுக்க ஒரு ஆளை தேடி கடைசியா "டேய் வழுவூர் சம்முகம் இங்க வாடா, நீ தான் கக்கத்த விட்டு மஞ்ச பைய எறக்க மாட்ட, இந்தா இந்த தாலிய புடி, அந்த பையிலே வைய்யி"ன்னு சொல்லி சம்முகத்து பையை இழுக்க அவர் "அய்யோ அத்த அதிலே முக்கியமான சமாச்சாரம் இருக்கு, நா சட்ட பைல வச்சுக்கறேன்"ன்னு முரண்டு பிடிக்க நம்ம திருவீழிமிழலை மாமாவுக்கு குபீர்ன்னு சிரிப்பு வந்து ஜிப்பா கொஞ்சம் சிகப்பா ஆகிடுச்சு!
தொடரும்.............
\\நம்ம KRS மாதிரி எது எதை நாம சம்மந்த படுத்த முடியாதோ அதை எல்லாம் சம்மந்த படுத்துவார்!//
ReplyDelete:)
நீங்க பேசியே இருக்கமாட்டீங்களோ .. வெறுமே கவனிச்சிட்டே இருப்பீங்களோன்னு நினைக்கிற அளவு கவனிச்சிருக்கீங்க ஒவ்வொருத்தரையும்..
ReplyDeleteவாங்க முத்துலெஷ்மி! நான் அப்சர்வர் மட்டுமே அப்போது! இந்த வேடிக்கை எல்லாம் பார்த்து கொண்டிருப்பேன் வாயிலே விரல் வச்சுகிட்டு(அபிமாதிரி)
ReplyDeleteஉங்கள் வலைதளத்திற்கு புதுசு நான்..அதனால் எல்லா பாகங்களையும் படித்து விட்டு வருகிறேன்.
ReplyDelete:)
ReplyDeleteபந்திக்கு கூப்பிடுங்க!
அப்படி என்ன முக்கியமான சமாச்சரம் மஞ்ச பையில?
ReplyDelete// அ.மு.செய்யது said...
ReplyDeleteஉங்கள் வலைதளத்திற்கு புதுசு நான்..அதனால் எல்லா பாகங்களையும் படித்து விட்டு வருகிறேன்./*/
வாங்க சையத், வருகைக்கு நன்றி! மீதி பாகமும் படிச்சா தான் இந்த பாகம் புரியும். கண்டிப்பா படிச்சுட்டு வாங்க!
வாப்பா வாலு, பந்தி அடுத்த பாகத்துல வரும்! வருகைக்கு நன்றி!
ReplyDelete// நாகை சிவா said...
ReplyDeleteஅப்படி என்ன முக்கியமான சமாச்சரம் மஞ்ச பையில?//
புலி! இதுக்கு முந்தின பாகம் எல்லாம் படிச்சா அந்த பைக்குள்ளே என்ன இருக்குன்னு தெரியும்! ஓடி போய் அதை படிச்சுட்டு வாங்கப்பா!
அட எல்லாமே நமக்கு பழக்கமான இடங்களும் நபர்களுமாக இருக்கிறதே.... யாரடா இந்த அபி அப்பா-னு பார்த்தா... நம்ம தொல்ஸ்... என்னை தெரிகிறதா??
ReplyDelete\\ varadhu said...
ReplyDeleteஅட எல்லாமே நமக்கு பழக்கமான இடங்களும் நபர்களுமாக இருக்கிறதே.... யாரடா இந்த அபி அப்பா-னு பார்த்தா... நம்ம தொல்ஸ்... என்னை தெரிகிறதா??\\
தெரியலையே எந்த வரது! என் அக்கா பையன் வரதா?
அட கண்டுபுடிச்சிட்டீங்களே!! :-) give me your Email. I will send you a mail..
ReplyDeleteஅட கண்டுபுடிச்சிட்டீங்களே!! இன்னேரத்துக்கு உங்க அக்காவும் "வீரசேகரவிலாஸ்" படிச்சிக்கிட்டு இருப்பாங்க... :-) give me your Email. I will contact you.
ReplyDeleteஅட கண்டுபுடிச்சிட்டீங்களே!! இன்னேரத்துக்கு உங்க அக்காவும் "வீரசேகரவிலாஸ்" படிச்சிக்கிட்டு இருப்பாங்க... :-) your Email pls..
ReplyDeleteடேய் வரது! என் மெயில் ஐடி இந்த பிளாக்ல யே இருக்கும்
ReplyDeletekummarv@gmail.com
very niceeeeeeeee............
ReplyDeleteverynice........
ReplyDelete