கேட்கவே உவ்வேன்னு இருக்கா! நான் அப்படித்தான் சாப்பிட்டேன் குழந்தையாய் இருந்தபோது! எல்லாரும் "விடுபட்டவை"வெங்காய தோசை" "அவியல்" என எல்லா கூட்டாஞ்சோறும் ஆக்கி விட்ட பின்னே எனக்கு எப்போதும் போல தலைப்புக்கு பஞ்சம்! சரி வாங்க இட்லி சாப்பிடுவோம்!
**************************************************
புதுகை அப்துல்லா போன் என்பது எனக்கு உடனே தெரிந்த காரணம் மோகன்கந்தசாமியின் பதிவுதான்! "அண்ணே நல்லா இருக்கீங்களா" என்றதும் புல் அரித்து போய் மோகன் கந்தசாமி பதிவிலே போய் உரசிகிட்டேன்! தம்பி நல்லாதான் பேசுது!அவரு ராப் தங்கச்சியையே அண்ணான்னு கூப்பிட்டவராச்சே!ராப்பும் பதிலுக்கு "அப்து தங்கச்சீ'ன்னு கூப்பிட்ட கதை எல்லாம் இருக்கே:-)) அமரிக்க பொருளாதாரம் முதல் அமிஞ்சிகரை பொட்டிகடை வரை அழகா பேசுச்சு அப்து தம்பி! நானும் எனக்கும் அதல்லாம் தெரியும் ரேஞ்சுல ஏதேதோ பேசினேன்! என் தம்பி அப்துவை நான் இந்த தடவை பார்க்க முடியாமல் ஏதோ சதி நடந்து விட்டது! ஆனாலும் ஆசீப் அண்ணாச்சி ஏன் பதிவு போடவில்லை என அவர் கேட்ட கேள்வியை அவர் கேட்ட போது அவருக்கு மலசிக்கல் என சிக்கலில்லாமல் ஒரு பதிலை சொன்னேன்!ஏன்னா அவர் தான் ஒரு தடவை சொன்னார் "அண்ணாச்சி காலைகடன் கழிப்பது போல பதிவிடுவது" என! போகட்டும் அட்லீஸ்ட் ஆயில்யனுக்கு அந்த சிக்கல் வராம இருக்க வண்டிகார தெரு மாரியம்மனுக்கு வேண்டிக்கறேன்!
********************************************
சொந்தழல் ரவியின் "தொங்கபாலு" பதிவு நல்லா இருந்துச்சு!ஆனா டோண்டு -ரவி சண்டை இந்த வாரம் அத்தனை சூடு இல்லை! கொஞ்சம் கூட ரத்தம் இல்லா சண்டை ஒரு சண்டையா:-))
*******************************************
\
மிஸஸ். டவுட் இப்போ நல்ல நல்ல பதிவா போட்டு தாக்கிட்டு இருக்காங்க! ஒரு ரவுண்டு வருவாங்கன்னு நெனைக்கிறேன்! புது ஆளுங்களுக்கு பின்னூட்டம் போட்டு ஆதரவு தரும் துளசி ரீச்சர் வாழ்க! ரீச்சரின் கேக் பதிவுக்கு நான் பின்னூட்டம் போட போகும் போது ஒரே கூட்டம்!புது படம் எதுவுமே சரியில்லைன்னா மாயவரம் விஜயாவில் வசந்த மாளிகை போடுவாங்க. அப்ப ஒரு கூட்டம் இருக்குமே தியேட்டர் வாசல்ல அது மாதிரி ஒரு கூட்டம். அதான் ஓடியாந்துட்டேன். சிடி யிலே பார்த்துகலாம்ன்னு(அதான் ரீடர்ல படிச்சுக்கலாம்ன்னு) ஆனா ரீச்சர் நமக்கு வாழைப்ப்பழம்னா கொஞ்சம் அலர்ஜி!
*****************************************
வலைச்சரம் பத்தி சொல்லியே ஆகனும்! அதிரை ஜமால்! முதல் பதிவிலேயே நூத்துக்கும் மேல பின்னூட்டம்!நாங்கல்லாம் அந்த காலத்துல 100 பின்னூட்டம் வாங்க பழனிக்கு மொட்டை போடுவோம்ன்னு சொன்னா "ஏன்யா ரகசியத்தை சொல்றே"ன்னு கொத்தனார் திட்டி பின்னூட்டம் போட்டாலும் போடுவார் என்பதால் இந்த விஷயம் பத்தி சொல்லலை!விடுங்க அதல்லாம் அந்த காலம்:-))
\*************************************************
கோவியார் இப்போ சென்னையிலே! எனக்கு பயமே அதான்! "நீங்க தான் என் போட்டோவிலே என் முன்னாடி இருக்கீங்க"ன்னு அவர் போய் அந்தம்மாகிட்ட ஜொள் வடிக்க கூடாது என் அப்பன் முருகா!
********************************************
முருகனை அப்பன்னு சொன்னா உடனே உண்மை தமிழன் மனசிலே வர்ராரு!
உண்மை தமிழா! உனக்கு ஒரு சேதி!நீ என்ன தான் சின்ன புள்ளியா ஒரு பதிவா இன்னும் 100 வாரம் போட்டாலும் பெரிய பதிவர்ன்னு(பெரிய பதிவா போடுவதால்) உன் பேர் ரிஜிஸ்டர் ஆகிடுச்சுப்பா! நீ பெரிய பதிவா தான் போடுவேன்னு!!ஒரு விஷயம் சொல்லவா! நீ எனக்கு கொடுத்த 10 பாகம் "அர்த்தமுள்ள இந்துமதம்" படிக்கும் முன்னமே அதுக்கு அடுத்த நாள் ஒரு பிரபல பதிவர் வீட்டுக்கு சென்றேன்! மஞ்சை வசந்தன் எழுதிய "அர்த்தமற்ற இந்துமதம்" என்னும் புத்தகம் அதாவது அதுக்கு எதிர்வினை பதிவு புத்தகம் பரிசாக கிடைத்தது! என்னே அப்பன் முருகன் திருவிளையாடல்! ஆனால் இரண்டும் படித்தேன்! இப்போ போன போது!நானும் அபியும் குத்துகால் இட்டு அபிஅம்மாவின் பில்டர் காபி குடித்து கொண்டே படித்தோம்!புத்தகம் படிக்கும் பழக்கம் அபிக்கு வந்துவிட்டது! அண்ணா நூற்றாண்டு விழா சலுகை விலை 500 ரூபாய் க்கு அத்தனை புத்தகத்தையும் வாங்கி கொடுத்தாகி விட்டது! அடுத்த அடுத்ததை என் தம்பி முத்துகுமார் வாங்கி அனுப்ப சொல்லியாகிவிட்டது! அனேகமாக அடுத்த வருடம் முதல் அவள் தானாக டைப்பி பதிவு போடுவாள் என நினைக்கிறேன்! மயிலாடுதுறை சென்று நம் வீட்டில் தங்கி நவகிரகத்தையும் பார்த்து ஒரு அக்ரிமெண்ட் போட்டு விட்டு குறும்படமா இல்லாம பெரும் படமா எடுத்து நாங்க எல்லாரும் ஓசி டிக்கெட் எடுத்து கடைசி வரிசையிலே உக்காந்து பார்க்கனும் என அம்மா பச்ச காத்தாயியை வேண்டிகறேன்! ஆனா அது பழைய பாகவதர் படம் மாதிரி 30 ரீலா இருக்க கூடாதுன்னும் பச்சகாத்தாயி கோவிலில் இருக்கும் வாழ்முனீஸ் அய்யாகிட்டேயும் ஒரு தனி வேண்டுதல்!
*******************************************
//கேட்கவே உவ்வேன்னு இருக்கா!//
ReplyDeleteகேட்க உவ்வேன்னு இருந்தாலும், சாப்பிட ரொம்பவே ருசியா இருக்கும். நான் சின்ன வயசுல இட்லி தோசையோடு தொட்டுக்கொள்ள அதிகம் சாப்பிட்டது ஜீனியோட கலந்த நெய் அல்லது இட்லி பொடியுடன் கலந்த நெய் :)
:))))
ReplyDeleteசுவையான பதிவு...
ReplyDeletevote now for tamilbloggers...
அண்ணே டாப்பு டக்கரு
ReplyDeleteசுவாரஸ்யம் :))
ReplyDeleteஅனுஜன்யா
மிக்க நன்றிங்க
ReplyDeleteநம்ம பேரையெல்லாம் இங்க போட்டதுக்கு.
\\சூடான இட்லியும் அதுக்கு தொட்டுக்க ஜீனியோட கலந்த நெய்யும்\\
ReplyDeleteஉண்மையிலேயே நானும் இப்படித்தான் சாப்பிட்டேன்.
சில நேரங்களில் கட்டி தயிர்(இப்ப எங்க கிடைக்குது) அதன் மேல் ஜீனி போட்டு சாப்பிடுவேன்.
இப்ப இட்லி பேரே கேட்டால உவ்வே தான்.
(முருகன் இட்லி பிடிக்கும்)
பதிவு சூப்பர்... அண்ணா, இப்பவெல்லாம் சூடா எழுதற மாதிரி இருக்கு :)
ReplyDeleteஜூப்பரு!
ReplyDeleteபழனிக்கு மொட்டை போடுறேன்னு நேந்துக்கலையா?
பின்னூட்டம் காத்து வாங்குது!
//
ReplyDeleteவலைச்சரம் பத்தி சொல்லியே ஆகனும்! அதிரை ஜமால்! முதல் பதிவிலேயே நூத்துக்கும் மேல பின்னூட்டம்!நாங்கல்லாம் அந்த காலத்துல 100 பின்னூட்டம் வாங்க பழனிக்கு மொட்டை போடுவோம்ன்னு சொன்னா "ஏன்யா ரகசியத்தை சொல்றே"ன்னு கொத்தனார் திட்டி பின்னூட்டம் போட்டாலும் போடுவார் என்பதால் இந்த விஷயம் பத்தி சொல்லலை!விடுங்க அதல்லாம் அந்த காலம்:-))
வலைச்சரம் பத்தி சொல்லியே ஆகனும்! அதிரை ஜமால்! முதல் பதிவிலேயே நூத்துக்கும் மேல பின்னூட்டம்!நாங்கல்லாம் அந்த காலத்துல 100 பின்னூட்டம் வாங்க பழனிக்கு மொட்டை போடுவோம்ன்னு சொன்னா "ஏன்யா ரகசியத்தை சொல்றே"ன்னு கொத்தனார் திட்டி பின்னூட்டம் போட்டாலும் போடுவார் என்பதால் இந்த விஷயம் பத்தி சொல்லலை!விடுங்க அதல்லாம் அந்த காலம்:-))
//
அபி அப்பா அது நீங்க தானா
எனக்கு உங்களை தெரியாது
என்னைக்கு வலைச்சரத்திலே
உங்களை கண்டு பிடிச்சேன்
நல்லா எழுதி இருக்கீங்க
உண்மையை சொல்லி இருக்கீங்க
இதெல்லாம் வேறேயா ???
இட்லி கட்டி தயிர் நல்லா இருக்குமா
ReplyDeleteசரி யாருக்காவது கொடுத்து ட்ரை பண்ணி பாக்கறேன்
நானும் அப்படி ஜீனியும் நெய்யும் போட்டு சாப்பிடுவேனே இப்பக்கூட.. நல்லாருக்கும்.. எங்கப்பா சின்னவயசில் இப்படி ரூமுக்கு ரூம் கொஞ்சம் தேங்காவும் கலந்து வச்சிக்கிட்டு சாப்பிட்டுக்கிட்டே இருக்க்கனும்ன்னு ஆசைப்பட்டாங்களாம்.. :)
ReplyDeleteஇந்த இட்லிகூட்டணிப்பதிவு சுவை..
பதிவு ரொம்ப நாலா இருக்குங்க
ReplyDeleteரசித்தேன் புசித்த உணர்வடைந்தேன் !!
அடப்பாவி.......
ReplyDeleteஇந்தத் தலைப்பு விஷயம்தான்யா ந்ம்ம ஃபேவரிட்.
தோழி வீட்டுலே இட்டிலி செய்யறப்ப மறக்காம ரெண்டு இட்லி, அஸ்கா, நெய் எல்லாம் கொண்டுவந்து கொடுப்பாள்.
ஆஃபீஸ் உள்ளே நுழைஞ்சதும் அவ கண்ணே காட்டிக் கொடுத்துரும். தின்னுட்டுத்தான் வேலையே(?) செய்வேன்!!!!!
//அட்லீஸ்ட் ஆயில்யனுக்கு அந்த சிக்கல் வராம இருக்க வண்டிகார தெரு மாரியம்மனுக்கு வேண்டிக்கறேன்!//
ReplyDeleteavvvvvvvvvvvvvvvvvvv
:)
thambi thalai maraiva irukarara nerathula ippadiya
// வெட்டிப்பயல் said...
ReplyDeleteபதிவு சூப்பர்... அண்ணா, இப்பவெல்லாம் சூடா எழுதற மாதிரி இருக்கு :)
//
repeateyyyyyyy :))
அபிஅப்பா என்னது இது நம்ம பேரை எல்லாம் போட்டு பதிவு போடறீங்க...எவ்ளோ பெரிய பதிவர் நீங்க? (!!!!!) சந்தோசமா இருக்கு;
ReplyDeleteகூடவே ஒரு டவுட்டும் வருது ...இது நிஜமா இல்ல கிண்டலானு ...
ஏது எப்படியோ என் பதிவுகள் உங்களால்(பலரால்!!!) கவனிக்கப் படுவது சந்தோசமே.
அபிஅப்பா ஒரு ஆள் இல்லை அவர் பல பேருக்குச் சமமாக்கும் 10000000000000 ...&):):):)
kalakkareenga
ReplyDeletesenthil, bahrain
:-)))
ReplyDeleteஹாஹா.. எல்லாமே நல்லா தான் இருக்கு..
ReplyDeleteஆயில்யன் மேல் உங்களுக்கு ஏன் சாமி இம்புட்டு பாசம்? :))
இலக்கியவியாதி ஆகனும் என்ற எண்ணம் ரொம்பவே மேலோங்கி இருக்கு போல... ஏன் அதுக்குள்ள அவசரம்...
ReplyDeleteம்ம்ம் இட்லி, நெய், சர்க்கரை நல்லாத் தான் இருக்கும், எங்க குழந்தைகள் கூட அப்படித் தான் சாப்பிட்டாங்க! :))))
ReplyDeleteமத்ததெல்லாம் உள்நாட்டு விவகாரம் போல! புரியலை! வரேன், பின்னூட்டம் வந்தால் உங்க அதிர்ஷ்டம்!
இட்லி , நெய், சக்கரை, சூப்பர் காம்பினேஷன். நான் தோசை சப்பாத்தி எல்லாத்துக்கும் சக்கரை தொட்டு சாப்பிடற ஆளு. துளசி டீச்சர் கிட்ட கேரட் கேக் குடுக்க சொல்லுங்க. வாழைப்பழம் இல்லாட்டி கேரட் , ஆப்பிள் இப்படி எத்தினியோ இருக்கே
ReplyDeleteஐய!!!நானும் என் குழந்தைகளுக்கு இப்படித்தான் கொடுப்பேன். ஆனா என்னோட ஃபேவரைட் இட்லி+ கட்டித்தயிர்+ அதன்மேல் சட்னி அல்லது பொடி அதுக்கும் மேல் சீனி!!!அப்பப்பா.....சூப்பராயிருக்கும்.
ReplyDeleteதலைப்பைப் பாத்துத்தான் வந்தேன்.
மத்த விசயமெல்லாம் ஒண்ணும் புரியலை!!!!!
/*ஐய!!!நானும் என் குழந்தைகளுக்கு இப்படித்தான் கொடுப்பேன். ஆனா என்னோட ஃபேவரைட் இட்லி+ கட்டித்தயிர்+ அதன்மேல் சட்னி அல்லது பொடி அதுக்கும் மேல் சீனி!!!அப்பப்பா.....சூப்பராயிருக்கும்.
ReplyDeleteதலைப்பைப் பாத்துத்தான் வந்தேன்.
மத்த விசயமெல்லாம் ஒண்ணும் புரியலை!!!!!*//
ரிப்பீட்டு...
சந்தனமுல்லை said...
ReplyDelete// :-))) //
ரிப்பீட்டு.
நிஜமா நல்லவன் said...
ReplyDelete// :)))) //
ரிப்பீட்டு...
சரி இனி அடிக்கடி கிடைக்குமா இந்த சூடு குறையாத இட்லியும் இனிப்பு குறையாத ஜீனியும் மணம் குறையாத நெய்யும்..:)?
ReplyDelete:)
ReplyDeleteகுழந்தைப் பருவத்தில்
ReplyDeleteநல்லா சாப்பிட்டது!
இப்ப சாப்பிட முடியாது..
//ஆனா அது பழைய பாகவதர் படம் மாதிரி 30 ரீலா இருக்க கூடாதுன்னும் பச்சகாத்தாயி கோவிலில் இருக்கும் வாழ்முனீஸ் அய்யாகிட்டேயும் ஒரு தனி வேண்டுதல்!//
ReplyDelete=))
//Labels: மொக்கை//
ReplyDeleteCorrect
//கேட்கவே உவ்வேன்னு இருக்கா! //
ReplyDeleteஎன்னது உவ்வேவா??? இந்த காமினேஷனை அடிச்சுக்க முடியுமான்னேன்? :))
ரவுண்டு கட்டி அடிச்சிருக்கீங்க..பார்த்து சூதானமா இருங்க..உங்களுக்கு சொல்ல வேண்டியதில்லை..இருந்தாலும் :)))
//சூடான இட்லியும் அதுக்கு தொட்டுக்க ஜீனியோட கலந்த நெய்யும்
ReplyDeleteகேட்கவே உவ்வேன்னு இருக்கா!//
பின்ன இருக்காதா..? யாராச்சும் நெய்ல போய் ஜீனிய கலந்து சாப்பிடுவாங்களா..?
//நான் அப்படித்தான் சாப்பிட்டேன் குழந்தையாய் இருந்தபோது!//
ReplyDeleteஅபிப்பா சின்னப்புள்ளைலேயே இப்படித்தானா..? பாவம் உங்கம்மா..
//எல்லாரும் "விடுபட்டவை"வெங்காய தோசை" "அவியல்" என எல்லா கூட்டாஞ்சோறும் ஆக்கி விட்ட பின்னே எனக்கு எப்போதும் போல தலைப்புக்கு பஞ்சம்! சரி வாங்க இட்லி சாப்பிடுவோம்!//
ReplyDeleteஏன் கிச்சடி.. சட்னி, உருண்டை அப்படி, இப்படின்னு வைச்சுக்குறதுதானே.. தலைப்புக்கா பஞ்சம் அபிப்பாவுக்கு..?
//புதுகை அப்துல்லா போன் என்பது எனக்கு உடனே தெரிந்த காரணம் மோகன்கந்தசாமியின் பதிவுதான்! "அண்ணே நல்லா இருக்கீங்களா" என்றதும் புல் அரித்து போய் மோகன் கந்தசாமி பதிவிலே போய் உரசிகிட்டேன்!யய
ReplyDeleteஇந்த உரசுற வேலையை இன்னமும் விடலையா அபிப்பா.. பார்த்து துபாய்ல எங்கிட்டாச்சும் போய் இப்படி உரசி மாட்டிக்காதீங்க.. அப்பால களிதான்..
//தம்பி நல்லாதான் பேசுது! அவரு ராப் தங்கச்சியையே அண்ணான்னு கூப்பிட்டவராச்சே!ராப்பும் பதிலுக்கு "அப்து தங்கச்சீ'ன்னு கூப்பிட்ட கதை எல்லாம் இருக்கே:-))//
ReplyDeleteஐய்ய.. இந்தக் கூத்தெல்லாம் நடந்துச்சா..?
நீங்கதான் அபிஅப்பாவையே குசும்பன்னும், குசும்பனை அபிஅப்பான்னும் அறிமுகப்படுத்திவங்களாச்சே..? குசும்புக்கு சொல்லவா வேணும்..
//அமரிக்க பொருளாதாரம் முதல் அமிஞ்சிகரை பொட்டிகடை வரை அழகா பேசுச்சு அப்து தம்பி! நானும் எனக்கும் அதல்லாம் தெரியும் ரேஞ்சுல ஏதேதோ பேசினேன்!//
ReplyDeleteஇல்லாட்டி இங்கன இவ்ளோ நாள் குப்பை கொட்டிருக்க முடியுமா..? உங்க திறமை என்ன..? அறிவு என்ன? பகுத்தறிவு என்ன..?
//என் தம்பி அப்துவை நான் இந்த தடவை பார்க்க முடியாமல் ஏதோ சதி நடந்து விட்டது!//
ReplyDeleteநேரத்துக்கு எந்திரிக்காம குறட்டை விட்டு தூங்கிட்டு இப்ப எதுக்கு சதின்னு புலம்பலு.?
//ஆனாலும் ஆசீப் அண்ணாச்சி ஏன் பதிவு போடவில்லை என அவர் கேட்ட கேள்வியை அவர் கேட்ட போது அவருக்கு மலசிக்கல் என சிக்கலில்லாமல் ஒரு பதிலை சொன்னேன்!யய
ReplyDeleteஅடப்பாவி அபிப்பா.. ஆசீப் அண்ணாச்சிக்கு இப்படியொரு துரோகமா..? தாங்குவாரா அவரு..?
//ஏன்னா அவர் தான் ஒரு தடவை சொன்னார் "அண்ணாச்சி காலைகடன் கழிப்பது போல பதிவிடுவது" என!//
ReplyDeleteஎன் பதிவ படிச்சிட்டு சொல்லிருப்பாரு அபிப்பா.. அதையெல்லாமா சீரியஸா எடுத்துக்குறது..?
//போகட்டும் அட்லீஸ்ட் ஆயில்யனுக்கு அந்த சிக்கல் வராம இருக்க வண்டிகார தெரு மாரியம்மனுக்கு வேண்டிக்கறேன்!//
ReplyDeleteஅடடா.. தம்பி ஆயில்யன் மட்டும் இல்லேன்னா இங்கன எத்தனை பேர் பதிவு காத்தாடும் தெரியுமா? வன்மையாக கண்டிக்கிறேன்.. ஆயில்யன் தம்பிக்கு வாழ்க்கை முழுக்க மலச்சிக்கலே வரக்கூடாதுன்னு என் அப்பன் முருகனை வேண்டிக்கிறேன்.. அதே சமயம் இது மாதிரி கோல்மால் செய்யும் அபிப்பாவுக்கு ...................................................?
//சொந்தழல் ரவியின் "தொங்கபாலு" பதிவு நல்லா இருந்துச்சு! ஆனா டோண்டு -ரவி சண்டை இந்த வாரம் அத்தனை சூடு இல்லை! கொஞ்சம் கூட ரத்தம் இல்லா சண்டை ஒரு சண்டையா:-))//
ReplyDeleteஆமாம் சாமி.. இப்படி உசுப்பி, உசுப்பித்தான் ஒரு பிரச்சினையை பத்து பிரச்சனையாக்கினீங்க.. நீங்க பாட்டுக்கு துபாய்ல உக்காந்துக்கின்னு கெக்கெபிக்கேன்னு சிரிச்சுத் தொலைஞ்சு அதுக்கு அந்தப் பய மல்லுக் கட்டணுமா..?
தம்பி ரவி.. இந்த மாதிரி புருஷோத்தமர்களையெல்லாம் அடையாளம் கண்டுக்கிடணுமாக்கும்.. சொல்லிப்புட்டேன்..
//மிஸஸ். டவுட் இப்போ நல்ல நல்ல பதிவா போட்டு தாக்கிட்டு இருக்காங்க! ஒரு ரவுண்டு வருவாங்கன்னு நெனைக்கிறேன்!//
ReplyDeleteநிச்சயமா வருவாங்கன்னு நானும் நினைக்கிறேன்.. இவங்களோட கே.பி. பதிவு படிச்சீங்களா..? சூப்பர்..
//புது ஆளுங்களுக்கு பின்னூட்டம் போட்டு ஆதரவு தரும் துளசி ரீச்சர் வாழ்க!//
ReplyDeleteநானும் ஒரு வாழ்க போட்டுக்குறேன்.. டீச்சர்தான் பெருவாரியான பதிவுகளையும், பதிவர்களையும் வாழ வைக்குறாங்கன்னு நினைக்கிறேன்..
//ரீச்சரின் கேக் பதிவுக்கு நான் பின்னூட்டம் போட போகும் போது ஒரே கூட்டம்!புது படம் எதுவுமே சரியில்லைன்னா மாயவரம் விஜயாவில் வசந்த மாளிகை போடுவாங்க. அப்ப ஒரு கூட்டம் இருக்குமே தியேட்டர் வாசல்ல அது மாதிரி ஒரு கூட்டம். அதான் ஓடியாந்துட்டேன். சிடி யிலே பார்த்துகலாம்ன்னு(அதான் ரீடர்ல படிச்சுக்கலாம்ன்னு) ஆனா ரீச்சர் நமக்கு வாழைப்ப்பழம்னா கொஞ்சம் அலர்ஜி!//
ReplyDeleteஅதென்னமோ டீச்சர்.. இத்துணூண்டு பதிவு போட்டாலும் கூட்டம் மொய்க்குது.. பெத்த பெரிசா பதிவு போட்டாலும் கூட்டம் மொய்க்குது.. என்ன மாயமோ? என்ன மந்திரமோன்னு தெரியலை..
//வலைச்சரம் பத்தி சொல்லியே ஆகனும்! அதிரை ஜமால்! முதல் பதிவிலேயே நூத்துக்கும் மேல பின்னூட்டம்! நாங்கல்லாம் அந்த காலத்துல 100 பின்னூட்டம் வாங்க பழனிக்கு மொட்டை போடுவோம்ன்னு சொன்னா "ஏன்யா ரகசியத்தை சொல்றே"ன்னு கொத்தனார் திட்டி பின்னூட்டம் போட்டாலும் போடுவார் என்பதால் இந்த விஷயம் பத்தி சொல்லலை!விடுங்க அதல்லாம் அந்த காலம்:-))//
ReplyDeleteநிஜம்தான் அபிப்பா.. நானும் உள்ள வரும்போது ஒவ்வொரு பதிவும் சுமாரா 40 கமெண்டுகளையாவது வாங்கும்.. ஆனா இப்பத்தான் எல்லாமே காத்தாடு.. இந்த நேரத்துல ஜமாலுக்கு 100-ஆ? ஆ...?
//முருகனை அப்பன்னு சொன்னா உடனே உண்மை தமிழன் மனசிலே வர்ராரு!//
ReplyDeleteவருவார்ல்ல.. வரணும்ல்ல.. வந்தாத்தான உண்மைத்தமிழன்..
//உண்மை தமிழா! உனக்கு ஒரு சேதி! நீ என்னதான் சின்ன புள்ளியா ஒரு பதிவா இன்னும் 100 வாரம் போட்டாலும் பெரிய பதிவர்ன்னு(பெரிய பதிவா போடுவதால்) உன் பேர் ரிஜிஸ்டர் ஆகிடுச்சுப்பா! நீ பெரிய பதிவாதான் போடுவேன்னு!!//
ReplyDeleteநன்றி.. நன்றி.. இதை அப்படியே துபாய், குவைத், யு.ஏ.ஈ.ன்னு அல்லா ஊர்லேயும் போஸ்டர் அடிச்சு ஒட்டினா நல்லாயிருக்கும்..
//ஒரு விஷயம் சொல்லவா! நீ எனக்கு கொடுத்த 10 பாகம் "அர்த்தமுள்ள இந்துமதம்" படிக்கும் முன்னமே அதுக்கு அடுத்த நாள் ஒரு பிரபல பதிவர் வீட்டுக்கு சென்றேன்! மஞ்சை வசந்தன் எழுதிய "அர்த்தமற்ற இந்துமதம்" என்னும் புத்தகம் அதாவது அதுக்கு எதிர்வினை பதிவு புத்தகம் பரிசாக கிடைத்தது! என்னே அப்பன் முருகன் திருவிளையாடல்!//
ReplyDeleteஆஹா.. என் அப்பன் விளையாடிட்டான் பார்த்தீங்களா.. அவன் கருணையே கருணை.. இது அவனது ஜனநாயகமான கருணை.. அரசியல்வியாதிகள் எல்லாம் புரிஞ்சுக்க வேண்டிய மேட்டர்..
அவன் தன்னைப் பாராட்டுறதை மட்டும் படிக்க குடுக்கல.. திட்டுறதையும் கொடுத்து படிச்சுப் பார்த்து அறிஞ்சுக்க சொல்லியிருக்கான்..
முருகா.. முருகா..
//ஆனால் இரண்டும் படித்தேன்! இப்போ போன போது! நானும் அபியும் குத்துகால் இட்டு அபிஅம்மாவின் பில்டர் காபி குடித்து கொண்டே படித்தோம்!//
ReplyDeleteஅப்பாடா சந்தோஷம்.. விமர்சனம் எப்போ வரும்..? சுமாரா ஒரு 100 பக்கத்துல எதிர்பார்க்குறேன்.. ஏன் அபிப்பாவுக்கு காபி போடத் தெரியாதா? அதென்ன அபிஅம்மா காபி போட்டுக் கொடுத்து நீங்க குடிக்கிறது..?
//புத்தகம் படிக்கும் பழக்கம் அபிக்கு வந்துவிட்டது!//
ReplyDeleteபாராட்ட வேண்டிய விஷயம்.. எனது வாழ்த்துக்கள் அபிக்கு..
//அண்ணா நூற்றாண்டு விழா சலுகை விலை 500 ரூபாய்க்கு அத்தனை புத்தகத்தையும் வாங்கி கொடுத்தாகி விட்டது!//
ReplyDeleteஎனக்கு..?
//அடுத்த அடுத்ததை என் தம்பி முத்துகுமார் வாங்கி அனுப்ப சொல்லியாகிவிட்டது! அனேகமாக அடுத்த வருடம் முதல் அவள் தானாக டைப்பி பதிவு போடுவாள் என நினைக்கிறேன்!//
ReplyDeleteஅதுக்கப்புறமா அபிப்பா ரிட்டையர்ட்மெண்ட் வாங்கிருவாரா..? மாட்டாரா..?
//மயிலாடுதுறை சென்று நம் வீட்டில் தங்கி நவகிரகத்தையும் பார்த்து ஒரு அக்ரிமெண்ட் போட்டு விட்டு குறும்படமா இல்லாம பெரும் படமா எடுத்து நாங்க எல்லாரும் ஓசி டிக்கெட் எடுத்து கடைசி வரிசையிலே உக்காந்து பார்க்கனும் என அம்மா பச்ச காத்தாயியை வேண்டிகறேன்! ஆனா அது பழைய பாகவதர் படம் மாதிரி 30 ரீலா இருக்க கூடாதுன்னும் பச்சகாத்தாயி கோவிலில் இருக்கும் வாழ்முனீஸ் அய்யாகிட்டேயும் ஒரு தனி வேண்டுதல்!//
ReplyDeleteபடம் எடுக்குற உரிமையை என்கிட்ட கொடுங்க அபிப்பா.. 30 ரீல் இல்ல.. 60 ரீல்ல அகிலமே வியந்து பார்க்கும் வண்ணம் ஒண்ணை எடுத்து உங்க பேரை உலகம் பூரா பரப்பிர்றேன்..
அப்பாடா..
ReplyDeleteரொம்ப நாளாச்சுய்யா இது மாதிரி கொத்து புரோட்டோ போட்டு..
அபிப்பா கோச்சுக்காதீங்க.. ரெண்டு நாள் லேட்டா பார்த்ததுனால வட்டி சேர்த்து மொத்தமா போட்டுட்டேன்..
நன்றி.. நன்றி.. நன்றி..
நானும் சாப்பிட்டிருக்கிறேன். சூடா இட்லி, நெய், ஜீனி ;) சூப்பர் டேஸ்ட்டு. சாப்டாத்தான் தெரியும்.
ReplyDeletejeeni with ney....woo,naanum rusithirukkiren.rombavay supera irukkum
ReplyDelete## Nilofer Anbarasu said...
ReplyDelete//கேட்கவே உவ்வேன்னு இருக்கா!//
கேட்க உவ்வேன்னு இருந்தாலும், சாப்பிட ரொம்பவே ருசியா இருக்கும். நான் சின்ன வயசுல இட்லி தோசையோடு தொட்டுக்கொள்ள அதிகம் சாப்பிட்டது ஜீனியோட கலந்த நெய் அல்லது இட்லி பொடியுடன் கலந்த நெய் :)
##
வாங்க நிலோஃபர்! கிட்டதட்ட நம்ம டேஸ்ட் தானா! வ்வருகைக்கு நன்றி!
// நிஜமா நல்லவன் said...
ReplyDelete:))))
January 27, 2009 10:22 AM
TamilBloggersUnit said...
சுவையான பதிவு...
vote now for tamilbloggers...
//
வாங்க நி.நல்லவரே! நன்னி!
தமிழ் பிளாக்கர்ஸ் யூனிட்டும் நன்றி!
\\ அதிஷா said...
ReplyDeleteஅண்ணே டாப்பு டக்கரு\\
அட அதிஷா! வாங்க அதிஷா! வருகைக்கு மிக்க நன்றி! இதுல எது டாப்புடக்கரு, மேட்டரா, இட்லியா, நெய்யா?ஜீனியா?
\\ அனுஜன்யா said...
ReplyDeleteசுவாரஸ்யம் :))
அனுஜன்யா
\\
அப்பாடா அனுஜன்யாவுக்கு சுவாரஸ்யம் வரும் அளவு எழ்ழுத இப்பதான் முன்னேறி இருக்கேன்னு நினைக்கிறேன்!அப்படித்தான?
\\ நட்புடன் ஜமால் said...
ReplyDeleteமிக்க நன்றிங்க
நம்ம பேரையெல்லாம் இங்க போட்டதுக்கு.
January 27, 2009 10:54 AM
நட்புடன் ஜமால் said...
\\சூடான இட்லியும் அதுக்கு தொட்டுக்க ஜீனியோட கலந்த நெய்யும்\\
உண்மையிலேயே நானும் இப்படித்தான் சாப்பிட்டேன்.
சில நேரங்களில் கட்டி தயிர்(இப்ப எங்க கிடைக்குது) அதன் மேல் ஜீனி போட்டு சாப்பிடுவேன்.
இப்ப இட்லி பேரே கேட்டால உவ்வே தான்.
(முருகன் இட்லி பிடிக்கும்)
\\
வாங்க ஜமால்! வலைச்சரம் பின்னி எடுத்துட்டீங்க! அட நீங்களும் நம்மை மாதிரிதானா?நம்ம டேஸ்ட் தானா:-)) நன்றி!
\\ வெட்டிப்பயல் said...
ReplyDeleteபதிவு சூப்பர்... அண்ணா, இப்பவெல்லாம் சூடா எழுதற மாதிரி இருக்கு :)\\
வாங்க வெட்டிதம்பி! ரொம்ப நாள் ஆச்சு நம்ம பக்கம் வந்து! சரீ குடும்பஸ்தனாகியாச்சுல்ல, நேரம் எங்க கிடைக்க போவுது:-))
\\ வால்பையன் said...
ReplyDeleteஜூப்பரு!
பழனிக்கு மொட்டை போடுறேன்னு நேந்துக்கலையா?
பின்னூட்டம் காத்து வாங்குது\\
வாய்ய்யா வாலு! நாங்க என்ன உங்ஙளைப்போலவா! ஏதோ நம்மால முடிஞ்சது இத்தன தான் வருது:-))
\\அபி அப்பா அது நீங்க தானா
ReplyDeleteஎனக்கு உங்களை தெரியாது
என்னைக்கு வலைச்சரத்திலே
உங்களை கண்டு பிடிச்சேன்
நல்லா எழுதி இருக்கீங்க
உண்மையை சொல்லி இருக்கீங்க
இதெல்லாம் வேறேயா ???
January 27, 2009 11:10 AM
RAMYA said...
இட்லி கட்டி தயிர் நல்லா இருக்குமா
சரி யாருக்காவது கொடுத்து ட்ரை பண்ணி பாக்கறேன்
\\
வாங்க ரம்யா! அதை ஏன் யாருக்காவது கொடுத்து ட்ரை பண்ணனும்! இது ஒண்ணும் சூசயிடு அட்டெம்ப்ட் கேஸ்ல வராதே, தைரியமா சாப்பிட்டு பாருங்க!
என்ன அண்ணா இப்படிப் போட்டுத் தாக்கறீங்க. இன்னிக்கி தான் உங்க பதிலப் படிச்சேன். உங்கப் பதிவுகளுக்கு நான் லேட் என்ட்ரி. வாத்தியாருக்குத் தெரியாமல் லேட்டா வந்த மாணவன் போல நைசா நுழையப் பார்த்தேன். பிடிச்சிட்டீங்க. குத்துங்க எசமான் குத்துங்க.
ReplyDeleteஅனுஜன்யா