எப்போதும் போல இந்த புது வருஷத்திலே ச்சேட்டிகிட்டு இருந்தேன்! அப்போ தேவ் வந்தார்! என்னங்க இப்ப போட்ட பதிவு எப்படி இருக்குன்னு கேட்டேன். அதுக்கு அவரு "யோவ்! வாழ்த்துக்கள்! ஆனந்த விகடனில் வந்துட்ட"ன்னு சொன்ன போது கொஞ்சம் கிரக்கமாகவும் அதை வெளியே அவர்கிட்ட காமிச்சிகிட்டா அசிங்கமோன்னு நெனச்சுகிட்டே வேற விஷயம் எல்லாம் பேசிகிட்டே "ஆமா ஆ.வி ல என்னா வந்துச்து"ன்னு கேட்டு கிட்டே ஊருக்கு போன் பண்ணினேன்.
எடுத்தது அபி தான்! "ஒண்ணும் இல்லைடா எப்போதும் போல (!) என்னை பத்தி ஆ.வி ல போட்டிருக்காங்கலாம்"ன்னு சொல்லி முடிக்கலை! அவ ஓடிட்டா!
பின்ன என் தங்கமணிகிட்ட பேசிட்டு வச்சுட்டேன். பின்ன தேவ் கிட்ட கேட்டேன், அது உண்மையான்னு! பொதுவா வ.வா.சங்கத்துல இருக்கும் சிங்கம் எதுவுமே பொய் சொல்லாது(ஆஹா இது என்ன புதுமையா இருக்கு)ன்னு நெனச்சு கிட்டே ஆன்லைன்ல இருந்த ஆயில்யன் கிட்டே கேக்கலாம்னு இருந்தேன்.
அதுக்குள்ளே வடகரை வேலன் அண்ணாச்சி "நீங்க ஆ.வி யிலே வந்திருக்கீங்க"ன்னு ஒரு பின்னூட்டம் போட நான் அப்படியே மிதந்தேன்.
ஆயில்யனும் அதை உருதி படுத்த அப்போது ஒரு போன். என் வீட்டில் இருந்து தான்!
அபிபாப்பா தான்.
"அப்பா"
"என்னடா"
"ஆமப்பா! நீங்க ஆனந்த விகடன்ல வந்துட்டீங்க"
"அட நீ பாத்தியாடா"
'ஆமாப்பா! நீங்க சொன்னவுடனே வாசலுக்கு வந்தேன், என் ஸ்க்குல் ஆட்டோ வந்துச்சு, ஓடிப்போய் என் உண்டியலை உடைச்சேன், எத்தன காசு இருந்துச்சோ அத்தனையும் எடுத்துகிட்டேன்! போய் ஆட்டோவிலே ஏறி ஆ.வி வாங்கினேன். அங்கயே படிச்சேன்"
"ஏண்டா நாளைக்கு படிக்கலாமே"
"இல்லப்பா எனக்கு இப்பவே படிக்கனும், என் பிரண்ட்ஸ் யாருக்கும் வராத ஒரு பெருமைப்பா இது, ஆமா பத்து லெட்சம் பிரிண்ட் ஆகுமா இது"
"இருக்கும்டா"
"அப்பா ஒரு கேள்விப்பா! அந்த அபிஅப்பாவிலே அந்த அபி நான் தானேப்பா"
போனை வைத்து விட்டு அழுதேன்!!
அண்ணே! மகிழ்ச்சி பகிரும் வேளையில்....!
ReplyDeleteகடைசி வரிகளில் ஏன் சோகம்!
//இருந்த ஆயில்யன் கிட்டே கேக்கலாம்னு இருந்தேன்///
ReplyDeleteஅட நானும் ”அ.அ”ல வந்துட்டேனா???!!!!
நானும் நிறைய பேருக்கு ரீச் ஆகிட்டேனா :)
//இல்லப்பா எனக்கு இப்பவே படிக்கனும், என் பிரண்ட்ஸ் யாருக்கும் வராத ஒரு பெருமைப்பா இது,//
ReplyDeleteநிச்சயம்!
அந்த தருணங்களிலேயே மகிழ்ந்து வாழ்ந்திருத்தல் வேண்டும் :)))))
தியேட்டரேலே வந்துட்டீங்க ஆவி கோவின்னு...
ReplyDeleteவாழ்த்துகள் அண்ணாச்சி :)
ReplyDeletelink please
ReplyDeleteமனமார்ந்த நல்வாழ்த்துகள். தொடரட்டும் இது!
ReplyDeleteFriend, மனமார்ந்த வாழ்த்துக்கள்!
ReplyDelete:((
ReplyDeleteவாழ்த்துகள் அபிஅப்பா!! ரொம்ப நெகிழ்ந்து போய் அழுதுட்டீங்களோ??
ReplyDeleteஇந்தப் பொண்ண பெத்த பசங்க நிலைமையே இப்படித்தான். கலங்க அடிச்சிருங்க ...
ReplyDeleteநல்லா இருங்க...
வாழ்த்துகள்.
ReplyDeleteவாழ்த்துக்கள் நண்பரே!!!!! இந்த பொண்ணுகளே (மகள்) இப்படிதான்..அன்பாலேயே நம்மளை அழவெச்சுருவாங்க.
ReplyDeleteவாழ்த்துகள்.
ReplyDelete:)
மனம் நிறைந்த வாழ்த்துக்கள் அபி அப்பா.. இந்த வாரம் நம் பதிவர்கள் பலர் விகடனிலும் குமுதத்திலும் வந்திருப்பது மிக மிக சந்தோஷமாக உள்ளது...
ReplyDeleteமனம் நிறைந்த வாழ்த்துக்கள் அபி அப்பா!
ReplyDeleteநெஞ்சம் நெகிழ வைத்துவிட்டீர்கள்
ReplyDeleteநீங்களும் உங்க அபியும் ரொம்ப அழகு...:)
ReplyDeleteஅபி கேட்டது தப்பில்ல.. பெருமைல பாதி பங்கு அவளுக்கும் உண்டு.
ReplyDeleteசூப்பர். வாழ்த்துக்கள். :))
ReplyDeleteThan thanthaiai sandron endru paditha magal.
ReplyDeleteVazthukkal abikum, appavukum.
Cheers
Christo
வாழ்த்துக்கள் அபிக்கும் அபிஅப்பாவுக்கும் ...விகடன்ல வந்தாச்சு...அப்படியே சன் டி.வி...விஜய்டி.வி ...கலைஞர் டி.வி ....on..so...on .
ReplyDelete//கடைசி வரிகளில் ஏன் சோகம்!//
ReplyDeleteஅது சோகமில்லை ஆயில்யன்!
ஆனந்த அழுகை! உங்களுக்கும் அபிக்கும் என் வாழ்த்துக்கள்!!
அன்பின் தொல்ஸ்
ReplyDeleteநல்வாழ்த்துகள் - ஆ.வி நேற்று காலையிலேயே பார்த்தேன் - உடனே பதிவாகவோ தனிமடலோ என நினைத்ததில் இருந்து, வீட்டினில் விருந்தினர் வந்த வண்ணம் இருந்த படியால் செய்தி சொல்ல இயலவில்லை.
அபிஅப்பா என்ற பெயரினால் தான் வலைப்பூ பிரபலமானது - எனவே முழுப் பெருமையும் அபிக்குத்தான்
வாழ்த்துக்கள் சார்.
ReplyDeleteநான் இன்னும் விகடன் பாக்கல, மனமார்ந்த வாழ்த்துகள்.
ReplyDeleteஆனால், அபிகிட்ட அவங்களால தான் உங்களுக்கு பேரும்புகழும்-ன்னு சொல்லாமயே வளத்துட்டீங்களே! நியாயமா?
எனக்கும் கொஞ்சமா கண் கலங்கிடுச்சு.. கடைசி வரிகளை படிக்கும்போது.. வாழ்த்துகள்.
ReplyDeleteஉண்மையில் உங்களுக்கு வாழ்த்து சொல்லவந்தேன் விஷயம் தெரிந்து.
ReplyDeleteமிகவும் நெகிழ்ந்துபோனேன்.
மகன்/ள் தந்தைக்காற்றியது
போஸ்ட் போட்டுட்டு தான் என்கிட்டே கேட்டீங்களா.....ரொம்ப சந்தோஷம்...வாழ்த்துக்கள்!
ReplyDeleteவாழ்த்துக்கள். அந்த link ஐ கொடுங்களேன்.
ReplyDeleteஅபிக்குத்தானே பெருமை சேரும் அபி அப்பா, உங்களுக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteவாழ்த்துக்கள்
ReplyDelete\\போனை வைத்து விட்டு அழுதேன்!! \\
என்ன சொல்றதுன்னே தெரியலை ...
vaazhthukal
ReplyDeleteentha sectionail vanthirukku aanantha vikatanil?
நல்லா கேட்டா... :))
ReplyDelete//அபிஅப்பா என்ற பெயரினால் தான் வலைப்பூ பிரபலமானது - எனவே முழுப் பெருமையும் அபிக்குத்தான்//
ReplyDeleteஆமாம்!
வாழ்த்துக்கள் அண்ணாச்சி!
ReplyDelete\\ தீபா வெங்கட் said...
ReplyDeleteவாழ்த்துக்கள் அண்ணாச்சி
\\
இது யாரு இது யாரு! நா மத்தவங்களுக்கு பின்ன நன்னி சொல்லிக்கிறேன்! இப்ப இது யாருன்னு தெரிஞ்சாகனும்! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!
இது ரொம்ப அநியாயம் !
ReplyDeleteதீபா வெங்கட் ன்ன நான்கு நிமிஷத்தில் பதில் வருது.
பாஸ்கர்! ஒரு தப்ப்பு நடந்து போச்சு! அருப்பு கோட்டை பாஸ்கரும் எம்ஜியார் படம் போட்டிருப்பார். அதான் உங்களுக்கு அந்தபதிலை சொல்லிட்டேன்! ஸாரிப்பா!!!
ReplyDelete//அருப்பு கோட்டை பாஸ்கரும் எம்ஜியார் படம் போட்டிருப்பார். அதான் உங்களுக்கு அந்தபதிலை சொல்லிட்டேன்//
ReplyDeleteஅனைவருக்கும் அறிமுகம் ஆகிவிட்டதால் நான்தான் இப்போ அருப்புக்கோட்டை அடைமொழியை எடுத்து விட்டேன் !
இப்படிக்கு ,
பாஸ்கர் ( அருப்புக்கோட்டை )
ம்ம்ம் ஆனந்தக் கண்ணீர்தானே...பெண்ணைப் பெற்றிருக்கீங்களே...இப்படி வாழ்நாள் முழுவதும் இப்படி சின்னச் சின்ன மழைத் தூறல்களைக் கொட்டிக்கிட்டே இருப்பாங்க...
ReplyDeleteஅன்புடன் அருணா
//இப்ப இது யாருன்னு தெரிஞ்சாகனும்! //
ReplyDeleteஅண்ணே! நான்தான்!
உங்க பாசமலர்!
என்னை மறந்துபோச்சா?
நீங்க கூட பாடுவீங்களே!
"மலர்களைப் போல் சிஸ்டர் தூங்குகிறாள், பிரதர் வாழ வைப்பான் என்று அமைதி கொண்டாள்"னு!
அந்த தீபா வெங்கட் அண்ணே நானு!
சின்ன வயசுல கூட பாடுவீங்களேன்னா!
ReplyDelete"கை வீசம்மா கை வீசு! கடைக்குப் போகலாம் கை வீசு" ன்னு சொல்லி என்னை கைவீச வெச்சி என் கைல இருந்த காசை கீழே விழ வெச்சி எடுத்துட்டு ஓடிடுவீங்களே!
அந்த தீபா வெங்கட்டு நான்!
இங்க எதுவும் அபி அப்பா வரலையே!
ReplyDeleteஅபியும்,அபி அப்பாவும் இன்னும் பல உயரங்களைத் தொட வாழ்த்துக்கள்!!!
ReplyDelete