பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

January 14, 2012

இட்லி, நெய் ஜீனி - போகி ஸ்பெஷல்... 14.01.2012


" தம்பி என்னடா பண்ணிகிட்டு இருக்க?"


"அப்பா, வெயிட்டிங் ஃபார் குளிச்சிங்"


@ " ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன் மகன் இங்கிலிபிஸ்
பேசுறான் எனக்கேட்ட டேடி"


=================================================


படம் ஆரம்பிச்ச உடனே ஒரு ஜெயிலை காட்டுறாங்க. அதிலே தாடிவச்ச ஒரு கெட்டத்தனமான குற்றவாளி. அவன் நல்லா மொழு மொழுன்னு பச்சையா ஷேவ் செஞ்ச நம்ம ஹீரோ பரத் என்னும் பொய்க்குற்றம் சுமத்தப்பட்டு அனியாயமாக ஜெயிலில் இருக்கும்(அப்படித்தானே?) அப்பாவி கிட்டே வீணா வம்பு செஞ்சு அடிக்கிறான். நம்ம ஹீரோ எவ்வளவோ அமைதியா இருந்தும் நாம் எல்லாம் சீட்டு முனைக்கு வந்து "திருப்பி அடி திருப்பி அடி"ன்னு கத்துவதை காதில் வாங்கி திருப்பி அடிக்கிறார். செம அடி. கெட்டவன் ஒரு கம்பி பந்தை எடுத்து பரத் மேல அடிக்க அந்த கம்பி பந்து பரத் கண்கிட்டே வரும் போது நாம எல்லாம் பயந்து போய் அழ ஆரம்பிக்க அதை ஒரே உதையா உதைச்சு அது ஒரு தென்ன மரம் உயரத்துக்கு பறந்து போய் எலக்ட்ரிக் கம்பத்திலே பட்டு ஜெயில்ல ஒரே தீப்பொறி பறக்குது. கெட்டவன் தோத்துட்டான்.

உடனே பாட்டு பாடுறாங்க. ஹீரோவை சுத்தி சுத்தி எல்லா நல்ல குற்றவாளிகளும் ஒரே ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம். ஒரு கட்டத்திலே ஜெயிலர் கூட தன்னை மறந்து ஆடிகிட்டு இருக்காரு. பிறகு அவர் "தான் ஒரு ஜெயிலர்" என்பதை நினைவு கொண்டு நாக்கை கடித்து கொண்டு ஆட்டத்தை நிப்பாட்டிகிறார். இங்க தான் டைரக்டர் நிக்கிராரு.

@ ஆண்டவா, சன் டிவியிலே இப்பதான் அந்த படம் ஓடிகிட்டு இருக்கு. இன்னிக்கு பொழுது ரொம்ப பிரமாதமா இருக்கும் போலிருக்கே எனக்கு.... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

=========================================================

மார்கழி ஆரம்பிச்ச முதல் நாள் முதலே வாசலில் இருக்கும் புல் எல்லாம் செதுக்கி தர சொல்லி அபிஅம்மா அழாத குறை தான். எனக்கு தான் இணைய சண்டை போடவே நேரம் சரியா இருக்கு. இதிலே எங்க புல் எல்லாம் வெட்டுவது? அப்படியே புல் செதுக்கி கொடுத்தாலும் காபிபொடியை காயவைத்து அதான் பிரவுன் கலர், செங்கல் நுனுக்கி அதான் செங்காமட்டை கலர், அப்பா வேட்டிக்கு போடும் நீலத்தை எடுத்து கோலமாவுடன் கலந்து அதான் நீலகலர் என என் அக்காக்கள் சின்ன வயசிலே கோலம் போடுவது போல போடவா போறாங்க. போன வருஷம் ஒரு கோலம் போட்டாங்க. அதன் கீழே வெல்கம் என எழுதியும் வச்சிருந்தாங்க. "அடடே வாத்து நல்லா வருதே உனக்கு" என பாராட்டியது தப்பா? அதிலிருந்து படம் கோலம் எல்லாம் இல்லை, ஒன்லி புள்ளி கோலம் தான் என தீவிர முடிவுக்கு வந்துட்டாங்க. மயிலை பார்த்து வாத்து என சொன்ன என் தவறான புரிதலுக்காக என்னை பார்த்து பதிலுக்கு "வாத்து" என திட்டுவதை என்னால் சகிச்சுக்க முடியலை. அதனால் தான் இந்த வருஷம் புல் செதுக்கி தரவில்லை.

======================================================

இருந்தாலும் மனசு வரலை. போனால் போகுதுன்னு இன்று காலை மண்வெட்டி எல்லாம் எடுத்து புல் செதுக்க ஆரம்பித்தேன். வியர்த்து போனது. பின்னர் ஒரு டீ போட சொல்லி குடித்து விட்டு செதுக்க ஆரம்பித்தேன். அப்பவும் வியர்த்தது. கை எல்லாம் குடைந்தது. பின்னர் ஒரு காம்பிளான் போட சொல்லி குடித்தேன். திரும்பவும் செதுக்கிய போது நெஞ்சு எல்லாம் லைட்டா வலிப்பது போன்ற பிரம்மை. என் சிக்ஸ் பேக்குடன் நிமிர்ந்து என் நெற்றி வியர்வையை வழித்து நிலத்தில் போட்டேன். ஹாலில் ஏதோ லோக்கல் சேனலில் படையப்பா ஓடியது. "வயசானாலும் உன் ஸ்டைலும் இளமையும் இன்னும் அப்படியே தான் இருக்கு" என அப்பாஸ் சொல்லிகிட்டு இருந்தார். ஊக்கும்.... "நீ புடுங்கினது போதும்" என மண்வெட்டியை தூக்கி போட்டு விட்டு எங்கயாவது இணைய சண்டை இருக்கான்னு பார்க்க வந்துட்டேன்.

==================================================

கிரிக்கெட் பார்க்கலாம் என நினைத்து ஸ்டாருக்கு போனேன். எப்போதும் போல இந்தியா அருமையாக போராடிக்கொண்டு இருந்தது. இன்னும் கொஞ்ச நேரத்தில் டெண்டுல்கர் வந்து 100 வது சதம் அடிக்க போகின்றார் என எப்போதும் போல 100 கோடி பேரும் எதிர்பார்க்க போறாங்க. மதியம் எல்லா டி வியிலும் நாளை எல்லா பேப்பரிலும் "டெண்டுல்கர் ரசிகர்களை ஏமாற்றினார்" என்றே வரும். எனக்கு அதிலே புரியாத விஷயம் இதான். ஏன் ஒருவருமே "டெண்டுல்கர் ஏமாந்தார்"ன்னு மட்டும் எழுத மாட்டேன்னு அடம் பிடிக்கிறாங்கன்னு தான் தெரியலை. என்னவோ அவருக்கு மட்டும் ஏமாற்றம் இல்லை என்பது போலவும் என்னவோ ரசிகர்களை அவர் வேண்டுமென்றே ஏமாற்றி கொண்டு இருப்பது போலவும் ......

========================================

முதல்வர் அம்மா இலவச வேட்டிசேலை எல்லாம் பொங்கல் முதல் கொடுக்க ஆரம்பித்து தமிழ் புத்தாண்டுக்குள் கொடுத்து முடிக்கப்படும் என அறிவித்து இருக்காங்க. ஆக நாளை காலை முதல் மாலைக்குள் ஒரே நாளில் கொடுத்து முடிப்பாங்க போலிருக்கு. செம சுறு சுறு தான். இதே சசிகலா கூட இருந்த போது இத்தனை ஒரு சுறுசுறுப்பு அம்மாவிடம் இல்லை. சோ வந்தவுடன் தான் ஆட்சி களைகட்டுது. வாழ்க "சோ" வளர்க அவர் புகழ். இன்னிக்கு துக்ளக் ஆண்டு விழா நடக்க போகுதாம். வழக்கம் போல "டோண்டு"சார் முதல் ஆளா போய் உட்காந்து வந்து பதிவு போடுவார். அவருடைய பதிவுக்கு பயங்கர எதிர்பார்ப்பு இருக்கும் அதே வேளையில் "காண்டு"கஜேந்திரன் பதிவுக்கு அதிபயங்கர எதிர்பார்ப்பும் இணைய உலகில் இருக்கு. இருவரும் மனசு வச்சு நல்ல பதிவா தரனும். பார்ப்போம்...

=========================================

எல்லோரும் வீட்டை போகியின் காரணமாக சுத்தம் செஞ்சுகிட்டு இருக்கும் போது நட்ராஜ் மட்டும் கருமமே கண்ணாயினாராக தன் சைக்கிள், தன் விளையாட்டு பொருட்கள் எல்லாம் சுத்தம் செய்தது பார்க்க சந்தோஷமாக இருந்தது. அவன் அம்மா "உன்னுது மட்டும் தான் சுத்தம் செய்வியா மத்த பொருட்கள் எல்லாம் சுத்தம் செய்ய மாட்டியா" என கேட்டு தொலையாமல் இருந்திருக்கலாமோ. அபிஅம்மாவின் செல் போனையும் கழுவி காயவைத்து விட்டான். தேவையா இது? ஆனால் நான் சூப்பர். அதிகமாக தொல்லை கொடுக்காமல் தரையை துடைக்கும் போது காலை தூக்கி நாற்காலி மேல் வைத்துப்பதும், ஃபேனை துடைக்கும் போது ஸ்விட்ச் எல்லாம் போடாமலும், வெற்றிலை போட்டு சீவலை தரையில் கொட்டாமலும் ரொம்ப சமத்தா இருந்தேன். ஏன் என்னை போல இருக்க தெரியலை நட்ராஜுக்கு? இன்னும் சின்ன குழந்தையாவே இருந்தா என்ன அர்த்தம்? என்னை பார்த்து திருந்துடா மொவனே!

=============================================

இந்த பொங்கலுக்கு "நண்பன்" பார்த்துடலாம்னு இருந்தேன். ஆனா இணையம் முழுக்க "படம் நல்லா இருக்கு"ன்னு படம் காட்டுவதை பார்த்தா பயந்து வருது. இவங்க எல்லாம் படம் நல்லா இருக்குன்னு சொன்னா அந்த படம் "பப்படம்" ஆவதும் "உவ்வே"ன்னு சொன்னா படம் நல்லா இருந்து தொலைப்பதும் இஸ்ட்ரியாகிப்போச்சு. என்ன செய்வது இவங்க ராசி அப்படி. இப்படித்தான் ஓரிருவர் தவிர மௌனகுருவை அதிலும் கதாநாயகன் நடிப்பை சொதப்பல் என எழுதியதை பார்த்து மிரண்டு போய் இருந்தேன். ஆனால் படம் பார்க்கும் போது எனக்கு ரொம்ப பிடித்து இருந்தது. அந்த கேரக்டர் அதுக்கு போல என்ன மௌனராகம் கார்திக் மாதிரியா நடிக்க முடியும். நல்ல அழுத்தமான நடிப்பு. அவர் மு க தமிழரசு பையன் என்பதல் சத்தியமாக இப்படி சொல்லலை. நிஜமாவே நல்லா இருந்துச்சு படமும், பையன் நடிப்பும். அதனால் தான் நண்பன் பார்க்க பயந்து வருது. விதி வலியது... பார்க்கத்தான் போகிறேன்.

=================================================


"அப்பா மாட்டுப்பொங்கலுக்கு மாடு வாங்கனும்ப்பா" - இது நட்ராஜ்

"அப்பா பொங்கல் அன்னிக்கு 'நண்பன்" படம் போலாம்ப்பா - இது அபி

"பொங்கல் வேட்டி சேலை எப்போ தருவாங்கன்னு தெரியலையே... இட்லி பானைக்கு துணி மாத்தனும், தலகாணிக்கு கவர் போடனும், ஜன்னல் ஸ்க்ரீன் போடனும் - அஃப்கோர்ஸ் அபிஅம்மா

"மாட்டு பொங்கலுக்கு வீட்டு தெய்வத்துக்கு படைக்கனும்" - இது நான் நானே தான். ஏன்னா அதிலே ஒரு விஷயம் இருக்கே:-))

அவரவர் கவலை அவரவர்களுக்கு!

அனைவருக்கும் இனிய தமிழ்புத்தாண்டு, பொங்கல், உழவர் தின ,திருவள்ளுவர் தின மற்றும் "விடுமுறை தின" வாழ்த்துக்கள்.

14 comments:

 1. மாயவரம் மம்பட்டியான்January 14, 2012 at 2:02 PM

  வெட்டு குத்து இருக்கும்னு வந்தா நம்ம கதைய எளுதி இருக்கீங்களே மாமா

  ReplyDelete
 2. // இன்னிக்கு துக்ளக் ஆண்டு விழா நடக்க போகுதாம். வழக்கம் போல "டோண்டு"சார் முதல் ஆளா போய் உட்காந்து வந்து பதிவு போடுவார். அவருடைய பதிவுக்கு பயங்கர எதிர்பார்ப்பு இருக்கும்

  //

  டோண்டு உடல்நிலை சரியில்லாமல் ஓய்வில் இருக்கிறார்.அதனால் இந்தமுறை கான்டு கஜேந்திரன் இல்லை :)

  ReplyDelete
 3. பில் கேட்ஸ்January 14, 2012 at 2:04 PM

  எனக்கென்னமோ பதிவவிட உங்களோட முத மூணு கமெண்ட்டும் கண்ணைப் பறிக்கிறது

  ReplyDelete
 4. கோல்கேட் பாதுகாப்பு வளையம்January 14, 2012 at 2:05 PM

  நமது பதிவைக் காப்பாற்ற ஒரே வழி கமெண்ட் மாடரேசன்

  ReplyDelete
 5. டெண்டுல்கர்January 14, 2012 at 2:07 PM

  இப்பத்தான் பேடும் காடும் மாட்டிக்கொண்டு உங்களின் இந்தப் பதிவைப் படித்தேன், அத்தனையும் படி தேன்

  ReplyDelete
 6. நல்ல பகிர்வு

  ReplyDelete
 7. யோவ், அபி அப்பா. என்னாய்யா மாயம் பண்றே! உன் எழுத்த படிக்க ஆரம்பிச்சா முடிக்கிறவரைக்கும் நிறுத்த முடியலே. சூப்பர்.

  ReplyDelete
 8. Vazthukal Abi Appa...

  ReplyDelete
 9. ஆகா என்ன நடக்குது இங்க? ஒரு ஆளு சொன்னதையே திரும்ப திரும்ப சொல்ராரு. அதையே ஒருத்தரு காபி பேஸ்ட் அடிக்கிறாரு. இதிலே மம்பட்டியான், டெண்டுல்கர் வேற எல்லாம் குடும்பத்தோட வந்திருக்காங்க. எல்லா அனானி அண்ணாச்சியும் இன்னிக்கு மாயவரம் விசிட்டா? நடத்துங்கப்பா...

  ReplyDelete
 10. //அதிகமாக தொல்லை கொடுக்காமல் தரையை துடைக்கும் போது காலை தூக்கி நாற்காலி மேல் வைத்துப்பதும், ஃபேனை துடைக்கும் போது ஸ்விட்ச் எல்லாம் போடாமலும், //

  உங்கள மாதிரியேதான்ணே நானும் வீட்ல அவ்ளோ உதவி பண்ணுவேன். :)

  ReplyDelete
 11. பொங்கல், உழவர் தின ,திருவள்ளுவர் தின மற்றும் "விடுமுறை தின" வாழ்த்துக்கள்.

  subbu thatha
  http://vazhvuneri.blogspot.com

  ReplyDelete
 12. பொங்கல், உழவர் தின ,திருவள்ளுவர் தின மற்றும் "விடுமுறை தின" வாழ்த்துக்கள்.

  subbu thatha
  http://vazhvuneri.blogspot.com

  ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))