பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

August 8, 2007

நாங்களும் போட்டா போட்டி போடுவோம்ல!!!

போட்டின்னு வந்துட்டா குதிச்சுடுவோம்ல! நம்ம அபிபாப்பா வராத போன்கால் ல அட்டெண்ட் பண்றாங்க. அப்ப வயசு 2 1/2. மாமியா(ர் வீட்டு) கேமரா
இதுவும் அப்பதான் எடுத்தது, வீட்டில் எடுக்கப்பட்டது. பேக் ரவுண்ட் ஒரு வீணா போன சாய்ம் வெளுத்த பெட்ஷீட்! என்னவோ சிந்தனைல இருக்காங்க!லெட்டர் படிக்கிறாங்க! என் செல் போன் நோக்கியா 6230 ல எடுத்தேன்!

இதுல 2 வது போட்டோவும் 3 வது போட்டோவும் போட்டிக்கு!

32 comments:

 1. குழந்தைக்கு வாழ்த்துகள்!

  எந்த போட்டி எங்கன நடக்குது? எனக்கு ஓன்னுமே வெளங்கல!

  ReplyDelete
 2. ஏய் அய்யா...இது போர்ட்ரேய்ட்..போட்டிக்கா...சொல்லுங்க..அப்பதான் எங்களுக்கு தெரியும்...அதெப்படி..அபி அழகா இருக்காங்க...நீங்க.......

  ReplyDelete
 3. அபி அப்பா, அபி பாப்பா...மூன்றாவதுதான் என் சாயிஸ்

  ReplyDelete
 4. அது சரி களத்தில் குதிச்சிட்டீங்களா?
  படம் அதுவும் முதலும் கடைசியும் எனக்கு பிடிச்சிது.,

  ReplyDelete
 5. நன்றி மைபிரண்ட்! வாழ்த்துக்கு நன்றி!

  ReplyDelete
 6. பாரி! ஓசை செல்லா நடத்துறார். போர்ட்ரேய்ட் போட்டி அதுக்கு தான் இந்த போட்டோ!

  ReplyDelete
 7. tbcd! வாய்யா நல்ல மனுஷா! அதே போட்டிக்கு தான்! சேத்துல தான்யா செந்தாமரை வரும்!:-))

  ReplyDelete
 8. டாக்டர் 3 வது பிடிச்சிருக்கா! ரொம்ப தேங்ஸ்!

  ReplyDelete
 9. நீங்க இறங்கியாச்சா? அப்ப நாங்கெல்லாம் பின்(ஊக்கு இல்லை) வாங்க வேண்டியதுதான். :(

  ReplyDelete
 10. //சேத்துல தான்யா செந்தாமரை வரும்!:-)) //

  அட அட... என்ன ஒரு தன்னடக்கம்... என்ன ஒரு தன்னடக்கம்... :)

  ReplyDelete
 11. ஒரு படையே வாழ்த்தறாங்க! நானும் குதிச்சிட்டேன்... இந்தாங்க .. பிடிங்க... வாழ்த்துக்களை!

  ReplyDelete
 12. //சேத்துல தான்யா செந்தாமரை வரும்!:-)) //

  //அட அட... என்ன ஒரு தன்னடக்கம்... என்ன ஒரு தன்னடக்கம்... :)//

  உண்மையில நீங்க அடங்காத ஆளுன்னு கேள்விபட்டேன்...

  ReplyDelete
 13. திகிலன்August 8, 2007 at 2:42 PM

  //tbcd! வாய்யா நல்ல மனுஷா! அதே போட்டிக்கு தான்! சேத்துல தான்யா செந்தாமரை வரும்!:-))//
  பொளந்துபுட்டியலெ அண்ணாச்சி

  ReplyDelete
 14. லொடுக்கரே! நானும் ரவுடிதான் நானும் ரவுடிதான்ன்னு ஏறிகிட்டேன் அவ்வளவே! உங்க அளவு முடியுமா? என் தன்னடக்கத்தை பாராட்டு சொல்றீங்களா? நக்கலா எப்போதும் போல:-))

  ReplyDelete
 15. வாங்க ஓசை செல்லா! என்னையும் ஆட்டைல சேர்த்துகோங்க இல்லாட்டி ஆட்டைய கலைப்பேன்:-))

  ஆமா உங்க பெங்களூரு சிஷ்ய கோடிகள் ராம்/ஜெயந்தி/ஜி யாரும் கலந்துகிட்ட மாதிரி தெரியலையே!

  ReplyDelete
 16. //முத்துலெட்சுமி said...
  அது சரி களத்தில் குதிச்சிட்டீங்களா?
  படம் அதுவும் முதலும் கடைசியும் எனக்கு பிடிச்சிது.,//

  வாங்க முத்துலெஷ்மி! உங்க பின்னூட்டம் திடீன்னு எப்படி நடுவே வந்துச்சு! குழப்பம் அதை விடுங்க! 2 வது போட்டோவிலே அந்த சிந்தனை பிடிச்சு இருந்துச்சு அதான் போட்டேன், வேணும்னா மாத்திடுவோமா?

  ReplyDelete
 17. இத தான் நான் சொல்ல வந்தேன்..."போர்ட்ரேய்ட்..போட்டிக்கா...சொல்லுங்க..அப்பதான் எங்களுக்கு தெரியும்...அதெப்படி..அபி அழகா இருக்காங்க...நீங்க.......ரொம்ப அழகா இருக்கீங்க.?.."

  இத டைப் பன்னும் போது வேலை வந்திச்சா...மீதிய வந்து சொல்லலாமின்னு நினனச்சேன்...

  அதுக்குள்ள நீங்க..அவசரபட்டு..சேறு அப்படின்னு எல்லாம் சொல்லிகிட்டு..
  அவ்வளவு நல்லவரா நீங்க......?

  ReplyDelete
 18. வாழ்த்துக்கள் ;-)

  ReplyDelete
 19. முதல் போட்டாவுக்கு
  என்னுடைய ஓட்டு!

  அபி பாப்பா
  cute பாப்பா

  ReplyDelete
 20. சூப்பர்.... வாழ்த்துக்கள் அபி அப்பா. மாமியார் வீட்டுக் கேமராவுக்கு தனி அழகு தான் போங்க. பாப்பா க்யூட்.

  //பேக் ரவுண்ட் ஒரு வீணா போன சாய்ம் வெளுத்த பெட்ஷீட்! //
  முதல், இரண்டாவது படங்களில் பேக்ரவுண்ட் நல்லா இருக்குதுன்னு நெனச்சிட்டு, நீங்க எழுதியதைப் பார்த்ததும் சிரிப்பு வந்திருச்சி!

  ReplyDelete
 21. அபி பாப்பா அவங்க அம்மா மாதிரி, அழகும், புத்திசாலித் தனமும் நிறைஞ்சு இருக்கும் போலிருக்கு, கண்ணு பட்டுடும், சுத்திப் போடச் சொல்லுங்க, இல்லாட்டி நீங்களே எதிரே நின்னா பாப்பா பயந்துக்கும், அதுவே போதுமோ? :P

  பாப்பாவுக்கு நிஜமாவே சுத்திப் போடச் சொல்லுங்க!

  ReplyDelete
 22. மூணாவது படத்துக்கு கண்டிப்பா பரிசு கொடுத்தே ஆகணும். யாருங்க அது போட்டி நடத்தறது. பரிசு குடுக்கலன்னா ஆட்டோ வரும் ஆமாம்

  ReplyDelete
 23. திகிலன்/பாரிஅரசு/TBCD/ கோபிதம்பி வருகைக்கு மிக்க நன்றி! வாழ்த்துக்கு மிக்க நன்றி!

  ReplyDelete
 24. அப்பு! வாங்க வருகைக்கு மிக்க நன்றி! முதல் போட்டோ பிடிச்சிருக்கா!

  ReplyDelete
 25. வாங்க காட்டாறு! அது "மாமியா" என்ற ஜப்பான் கேமிரா, அஃப்கோர்ஸ் மாமியார் வீட்டு கேமிராவும் கூட! நல்ல கவித போடுங்க உங்க வீட்டுல வந்துகும்மி அடிச்சு ரொம்ப நாளாகுது:-))

  ReplyDelete
 26. கீதாம்மா மனச தொட்டு சொல்லுங்க, நான் நாயகன் கமல் மாதிரி இல்லயா, என்ன மணிரத்னம் கூப்பிட்டாக, ஷங்கர் கூப்பிட்டாக நான் தான் கால்ஷீட்டு கொடுக்கலையாக்கும்:-))

  ReplyDelete
 27. சின்ன அம்மணி! போட்டோ எடுக்கும் கலை என்கிட்ட அப்படியே ரத்தத்தில ஊறி கிடக்கு!(அடப்பாவி 100 எடுத்தா 1 தேருது இந்த அலட்டல் அடட்டிகிறியா- மனசாட்சி)

  ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))