பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

November 13, 2008

மீண்டும் "அபிஅப்பா" - புத்தம் புதிய காப்பி!!!



வணக்கம் மக்கா! விட்டேனும் விட்டேன் ஒரு மாத லீவ் தமிழ்மணத்துக்கு! அப்படியே லீவ் எக்ஸ்டன் பண்னி பண்ணி நாள் ஓடி போயிடுச்சு. நடுவே காலை ஆட்டி கொண்டிருப்பதை காட்டி கொள்ள ஒரு பதிவு போட்டேன்.

ஒரு வழியா லீவ் கிடைத்து இந்தியா வந்து டிங்கரிங், புட்டி பார்த்து புது பெயிண்ட் அடிச்சு புத்தம் புதிய காப்பியா ஆகி இதோ இப்போது வெள்ளோட்டம் விட்டு கொண்டிருக்கிறேன். இன்று முதல் புதியதாக பிறந்து இருக்கிறேன் "அபிஅப்பா".

இந்த ஒரு மண்டல விடுப்பில் என்னை காணுமேன்னு சந்தோஷ பட்டவங்க எல்லோருக்கும் ஒரு விஷயம் சொல்லிக்கறேன். ‘என் கிட்ட இருந்து தப்பிக்க முடியாது!”

மற்றபடி இந்த மயிலாடுதுறை காற்று இருக்கே அது எங்களுக்கு உயிர் மாதிரி! ஊர் போய் சேர்ந்த உடனேயே ஒரு வித புத்துணர்சி வந்துடுச்சு மனசுக்கும் உடம்புக்கும். ஊரில் பெரிய மாற்றங்கள் ஏதும் இல்லை. நகராட்சி காண்டிராக்ட்காரர்களுக்கு உடனடி பணம் பட்டுவாடா செய்ய படுகின்றது. காரணம் எங்கள் நகராட்சி தலைவர் ஏற்கனவே ஒரு கண்டிராக்ட்காரராக இருந்த காரணத்தால் என நினைக்கிறேன். பண பட்டுவாடா விஷயத்தில் அவர் ஏற்கனவே ரொம்ப கஷ்டப்பட்டு இருந்திருப்பார் போல இருக்கு. அடுத்த தடவையாவது கொசுக்கடியில் கஷ்டப்படும் ஒருவரை தலைவர் ஆக்க வேண்டும்.

பஸ்ஸ்டாண்டு எங்கே அமைப்பது என்கிற பட்டிமன்றம் இன்னும் முடியவில்லை. பெரிய ராஜன் தோட்டம் தன் பழைய பொலிவை இழந்து விட்டது. முன்பெல்லாம் வெற்று கிரவுண்டாக இருந்து இரவில் கஞ்சா அடிக்கும் கனவான்களுக்கும், குடிகார குசும்பன்களுக்கும் பொக்கிஷமாகவும், காலையில் கார் ஓட்ட பழகும் பணக்கார அம்மனிகளுக்கும், திருட்டு தம் அடிக்கும் கத்துகுட்டிகளுக்கும், செட்டிதெருவில் இருந்து வழியும் சாக்கடையில் ஸ்னானம் செய்யவரும் நமீதாக்களுக்கும், ஞானாம்பிகை மகளிர் கல்லூரி மாணவிகளின் பாதுகாவலர்களுக்கும் அப்படி ஒரு வசதியாக இருந்தது. ஆனால் இப்போதோ அதிலே சுத்தியும் காம்ப்பவுண்ட் போட்டு வி.ஐ.பி கேட் போட்டு செக்யூரிட்டி போட்டு பெரிய பெரிய வாயில் நுழையாத பெயர் உள்ள விளையாட்டுகளுக்கான இண்டோர் ஸ்டேடியங்களும், உவ்வே அசிங்கமான அவுட்டோர் ஸ்டேரியங்களும் கேலரிகளும், காலை நேரத்தில் வாக்கிங் போகும் எல்லாவயது ஜோடிகளின் அலப்பரைகளும், சோடியும் பல்புகளும் பார்க்கவே கஷ்டமாக இருக்கின்றன. மணிசங்கர் அய்யர் டவுன் டவுன்.

வழக்கத்துக்கு மாறாக காவிரியில் தண்ணீர் பொங்கி வழிந்து போகின்றது. வழக்கம் போல 300 பொடியன்களை சர்வே செய்ததில் 299 பேருக்கு “அந்த” இடத்தில் மாத்திரம் டவுசர் ஓட்டையாக இருக்கின்றது. மீதி ஒருத்தனுக்கு டவுசரே இல்லை.சர்வேயில் நட்டுவும் உண்டு.

ஒரு அமதியான பெண், ஒரு துடிப்பான பெண், ஒரு கடலை போடும் பையன் ஆகியோர் பஸ்ஸ்டாண்டு கடைவாசலில் நின்று அந்த கடலை பையனுக்கு அந்த துடிப்பான பெண் பதில் சொல்லி கொண்டு இருந்தால் அந்த கடலைக்கும், அமைதிக்கும் இடையே தான் காதல் என்னும் காந்தி காலத்து பார்முலா இன்னும் மாறவே இல்லை.

சுந்தரம் தியேட்டர் இடிக்கப்பட்டு அந்த பக்கம் போகவே மனசு “வருஷம் 16” படத்தை ஞாபகப்”படுத்துகின்றது”. அந்த இடத்தில் சாரதாஸ் வர போகுதாம். கூறைநாட்டில் கே.எஸ் பட்டு செண்ட்டர் வந்துவிட்டது. சாரதாஸ் மட்டும் வரட்டும் சீமாட்டி அவுட்டுடான்னு ஜோசியம் சொல்லி கொண்டு போகிறார்கள் அந்த இடத்தை கடப்பவர்கள்.

தாசில்தார்கள் இன்னமும் பேண்ட்டை இன் செய்யாமல், செறுப்பு போட்டு கொண்டு அதிலும் சிலர் வெற்றிலை போட்டு கொண்டு “இதுக்கு ஏகப்பட்ட பார்மாலிட்டீஸ் இருக்குப்பா”ன்னு சொல்லி கொண்டுதான் இருக்கின்றனர். முனிசிபாலிட்டியில் நாமம் போட்ட நாராயனன் எல்லோரையும் “ந்தா ஓரமா நில்லு”ன்னு ஒருமையில் சொல்லி குலப்பெருமை காக்கின்றார்.

பி.எஸ்.என்.எல் கஸ்ட்டமர் சர்வீஸ் அருமையாக இருக்கின்றது. “சார் இந்த பேக்கேஜ் எடுத்தா உங்களுக்கு இத்தனை நஷ்ட்டம் வரும். நான் சொல்றதை சொல்லிட்டேன் அதுக்கு மேல உங்க இஷ்ட்டம்”

பஸ்ஸில் இருந்து பொலிச்சுன்னு வெற்றிலை துப்புபவர்களை யாரும் கண்டு கொள்வதே இல்லை. பேருந்து நிலைய கட்டண கழிப்பிடம் மற்ற எல்லா ஊர்களை காட்டிலும் அருமையோ அருமை.

எல்லா ஹாஸ்பிட்டல்களிளும் கூட்டம் வழிகின்றது. டாக்டர்கள் ஒரு ஹாஸ்பிட்டலில் இருந்து அடுத்த ஹாஸ்பிட்டலுக்கு அடுத்த அடுத்த ஆப்ரேஷன்களுக்கு ஜெட் வேகத்தில் பறக்கின்றனர்.

“அடுத்த கெட் டு கெதர் எங்க வச்சுக்கலாம்” என யூனியன் கிளப்பில் எல்லா ரோட்டரி, ஜேசீஸ், லைன்ஸ் என ஒத்துமையாக ஒரே டயலாக்கை பேசுகின்றனர்.

இது எதுக்குமே சம்மந்தம் இல்லாமல் மாயூரநாதரும், அவயாம்பிகையும் கோவிலுக்கும் லாகடம் காவிரிகரைக்கும் காலை போய் இரவு திரும்பி இந்த ஐப்பசி மாதத்தை சந்தோஷமாக கழிக்கின்றனர். நேற்று திருகல்யானம். நாளை அடுத்தநாள் தேர் திருவிழா. 14ம் தேதி கடை முழுக்கு திருவிழா! மகாதானதெருவில் இரு பக்கமும் கடைவிரித்தாகி விட்டது. நான் கூட ஒரு பலூன் வாங்கினேன். இன்னும் பஞ்சுமிட்டாய் வாங்கவில்லை.

அதல்லாம் போஒகட்டும் டோண்டு சார் பாணியில் சொல்ல போனால் சமீபத்தில் 39 வருஷத்துக்கு முன்பு இதே நாளில் எடுக்கப்பட்ட என் போட்டோ எதேர்சையாக இன்று பழைய குப்பையை கிளறும் போது கிடைத்தது. எப்படி களத்தூர் கண்ணம்மா கமல் மாதிரி இருக்கேனா?

நாளை முதல் வழ்க்கம் போல கிறுக்க போகிறேன்! முதல் கிறுக்கல் ஒரு சின்ன தொடர் எழுத உத்தேசம். பெயர் “வீரசேகரவிலாசும், மாமாவும்,சீட்டுகச்சேரியும் கூடவே ஒரு கல்யாணமும்” பெயர் எப்படி இருக்கு?

நாளை சந்திப்போமா!

60 comments:

  1. //விட்டேனும் விட்டேன் ஒரு மாத லீவ் தமிழ்மணத்துக்கு! //

    அதனால தான் இது பேஜார் பண்ணுதா?

    ReplyDelete
  2. //நடுவே காலை ஆட்டி கொண்டிருப்பதை காட்டி கொள்ள ஒரு பதிவு போட்டேன். //

    அதுக்கு கால ஆட்டினா போதாதா
    பதிவு வேற போடுனுமா?

    ReplyDelete
  3. //இந்தியா வந்து டிங்கரிங், புட்டி பார்த்து புது பெயிண்ட் அடிச்சு//

    வண்டி ரொம்ப அடி வாங்கிருச்சோ

    ReplyDelete
  4. //இன்று முதல் புதியதாக பிறந்து இருக்கிறேன் //

    பிறந்தநாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. //‘என் கிட்ட இருந்து தப்பிக்க முடியாது!”//

    அது தெரிஞ்ச விசயம் தானே

    ReplyDelete
  6. //இந்த மயிலாடுதுறை காற்று இருக்கே அது எங்களுக்கு உயிர் மாதிரி! //

    எங்களுக்கும் காத்து தான் உயிர்.
    உங்களுக்கு மட்டும் என்ன ஸ்பெஷலா?

    ReplyDelete
  7. //ஊரில் பெரிய மாற்றங்கள் ஏதும் இல்லை.//

    அதான் வந்துட்டிங்களே
    இனி வந்துரும்

    ReplyDelete
  8. //நகராட்சி காண்டிராக்ட்காரர்களுக்கு உடனடி பணம் பட்டுவாடா செய்ய படுகின்றது.//

    கமிஷன் போக என்பதை சேர்க்க மறந்துட்டிங்களா

    ReplyDelete
  9. முரளிகண்ணனுக்கு என் கண்டனங்கள்..

    நான் சொல்ல நெனைச்சதை முந்திரி கொட்டையாட்டம் சொல்லிட்டார்.. :(

    ஆனாலும் சொல்வோமுல்ல.. வெல்கம் பேக் :))

    ReplyDelete
  10. //எங்கள் நகராட்சி தலைவர் ஏற்கனவே ஒரு கண்டிராக்ட்காரராக இருந்த காரணத்தால்//

    ஓஓ எல்லாம் ஒரே மட்டைங்க தானா

    ReplyDelete
  11. ம்.. ஊருக்கு போயிட்டு வந்தமாதிரி இருக்கு ..நன்றி..
    ஆனாலும் சுந்தரம் தியேட்டர் பெரும் சோகம்தான்..
    அப்ப இனி டவுனுக்கு போகவேண்டாம் எல்லாமே இந்த பக்கமே கிடைச்சுடுமா.. பார்க்கிங்க் ப்ளேஸ் இருக்குமா..?

    ReplyDelete
  12. //அடுத்த தடவையாவது கொசுக்கடியில் கஷ்டப்படும் ஒருவரை தலைவர் ஆக்க வேண்டும்.//

    அப்படி பார்த்தா எல்லோருமே தலைவருங்க தான் இங்கே

    ReplyDelete
  13. //பஸ்ஸ்டாண்டு எங்கே அமைப்பது என்கிற பட்டிமன்றம் இன்னும் முடியவில்லை. //

    பஸ் நிக்கிற இடத்துல அமைக்கலாமே

    ReplyDelete
  14. //பெரிய ராஜன் தோட்டம் தன் பழைய பொலிவை இழந்து விட்டது. //

    சின்ன ராஜா நீங்க வந்துமா?

    ReplyDelete
  15. //முரளிகண்ணன் said...

    வெல்கம் பேக்//

    repeatuu. :-)

    ReplyDelete
  16. //கஞ்சா அடிக்கும் கனவான்களுக்கும், குடிகார குசும்பன்களுக்கும் //

    உங்கள் நண்பர்கள் மேல் உங்களுக்கு எப்புட்டு பாசம்

    ReplyDelete
  17. //சாக்கடையில் ஸ்னானம் செய்யவரும் நமீதாக்களுக்கும், //

    என்ன கொடுமை இது!
    எல்லாத்தையும் ஈரோடு அனுப்புங்க, காவேரியில குளிப்பாட்டுறேன்

    ReplyDelete
  18. //ஞானாம்பிகை மகளிர் கல்லூரி மாணவிகளின் பாதுகாவலர்களுக்கும்//

    தலைமை பாதுகாவலரே நீங்க தானாமே

    ReplyDelete
  19. //மணிசங்கர் அய்யர் டவுன் டவுன். //

    பார்ப்பன எதிர்ப்பா?

    ReplyDelete
  20. //வழக்கத்துக்கு மாறாக காவிரியில் தண்ணீர் பொங்கி வழிந்து போகின்றது. //

    அதுக்கு எங்களுக்கு தான் நீங்க நன்றி சொல்லனும்

    ReplyDelete
  21. //300 பொடியன்களை சர்வே செய்ததில் 299 பேருக்கு “அந்த” இடத்தில் மாத்திரம் டவுசர் ஓட்டையாக இருக்கின்றது.//

    இந்தியாவின் பொருளாதாரம் ஓட்டையாக இருக்குன்னு சொல்லுங்க

    ReplyDelete
  22. //சாரதாஸ் மட்டும் வரட்டும் சீமாட்டி அவுட்டுடான்னு ஜோசியம் சொல்லி கொண்டு போகிறார்கள்//

    அடக்கம் பன்ணிரலாம்

    ReplyDelete
  23. //செறுப்பு போட்டு கொண்டு அதிலும் சிலர் வெற்றிலை போட்டு கொண்டு//

    செருப்பில எப்படி வெற்றிலை போடுரது

    ReplyDelete
  24. //“இதுக்கு ஏகப்பட்ட பார்மாலிட்டீஸ் இருக்குப்பா”ன்னு//

    பாக்கெட்டை பார்த்துகிட்டே

    ReplyDelete
  25. //“சார் இந்த பேக்கேஜ் எடுத்தா உங்களுக்கு இத்தனை நஷ்ட்டம் வரும். நான் சொல்றதை சொல்லிட்டேன் அதுக்கு மேல உங்க இஷ்ட்டம்”//

    ஆகா, இப்படியல்லா இருக்கனும் சர்வீஸ்

    ReplyDelete
  26. //பஸ்ஸில் இருந்து பொலிச்சுன்னு வெற்றிலை துப்புபவர்களை யாரும் கண்டு கொள்வதே இல்லை.//

    இவர்களுக்கு பான்பராக் துப்பும் வேலை இருந்திருக்கலாம்

    ReplyDelete
  27. //பேருந்து நிலைய கட்டண கழிப்பிடம் மற்ற எல்லா ஊர்களை காட்டிலும் அருமையோ அருமை. //

    துபாய் மாதிரி இருக்குமா?

    ReplyDelete
  28. //எல்லா ஹாஸ்பிட்டல்களிளும் கூட்டம் வழிகின்றது. //

    ஆப்புரேஷன் தியேட்டருல நல்ல படமா ஓடுது போல

    ReplyDelete
  29. //நான் கூட ஒரு பலூன் வாங்கினேன். இன்னும் பஞ்சுமிட்டாய் வாங்கவில்லை. //

    எனக்கு மறக்காமல் குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும்

    ReplyDelete
  30. //சமீபத்தில் 39 வருஷத்துக்கு முன்பு //

    அந்த போட்டோ 60 வருஷத்துக்கு முன்னாடி எடுத்ததுன்னு சொல்றாங்களே

    ReplyDelete
  31. //இதே நாளில் எடுக்கப்பட்ட//

    போட்டோவுக்கு புறந்த நாளா, உங்களுக்கா

    ReplyDelete
  32. //இன்று பழைய குப்பையை கிளறும் போது கிடைத்தது.//

    அடப்பாவமே அங்கேயா கிடக்கனும்

    ReplyDelete
  33. //எப்படி களத்தூர் கண்ணம்மா கமல் மாதிரி இருக்கேனா? //

    கமல் பாவம் விட்டுடுங்க

    ReplyDelete
  34. //நாளை முதல் வழ்க்கம் போல கிறுக்க போகிறேன்!//

    நாங்களும் படிக்காமேயே மீ த பர்ஸ்டு போட்டுக்குறோம்

    ReplyDelete
  35. //முதல் கிறுக்கல் ஒரு சின்ன தொடர் எழுத உத்தேசம்.//

    கருத்து கணிப்பு கேட்டிங்களா!
    இப்பல்லாம் தொடருக்கு வரவேற்ப்பு இல்லையாமா!

    ReplyDelete
  36. //“வீரசேகரவிலாசும், மாமாவும்,சீட்டுகச்சேரியும் கூடவே ஒரு கல்யாணமும்” //

    ஆனா இதுக்கு என் ஆதரவு உண்டு!

    ReplyDelete
  37. //நாளை சந்திப்போமா!//

    சந்திப்போம்

    ReplyDelete
  38. 40 தாவது பிறந்த நாளுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  39. நான் தான் 40 ஆவது பின்னூட்டமா ?

    அவ்வ்வ்வ்வ்!

    ReplyDelete
  40. கருப்பு வெள்ளையில் இருக்கும் பொடியன் யார் ?

    ReplyDelete
  41. murali kannan, valpaiyan, podiyan sanjai,muthulekshmi, goviyar,my friend ....thanks! no thamil. so evening i will come again with ekalappai! again thanks!

    ReplyDelete
  42. //புத்தம் புதிய காப்பியா ஆகி இதோ இப்போது வெள்ளோட்டம் விட்டு கொண்டிருக்கிறேன்//
    வாழ்க! வாழ்க! நோய் நொடியின்றி, மகிழ்ச்சியாய் வாழ்க!

    //செட்டிதெருவில் இருந்து வழியும் சாக்கடையில் ஸ்னானம் செய்யவரும் நமீதாக்களுக்கும்//
    'நமீதா'ன்னா அவுங்கதானா? :))
    அது என்ன? பெரும் பதிவர்கள் எல்லாம் நமீதா நினைவில் இருக்கிறீர்கள்.
    'கோவி'யைச் சொல்வதாக நினைக்கக் கூடாது.

    //வீரசேகரவிலாசும், மாமாவும்,சீட்டுகச்சேரியும் கூடவே ஒரு கல்யாணமும்//
    பெயரே ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தகிறதே. ஆவலுடன் காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  43. மீண்டு(ம்) வந்ததற்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  44. வந்து ஒரு போன் கூட பண்ணல? :(

    ReplyDelete
  45. அருமையான ஒரு லைவ் ரிப்போர்ட் கொடுத்திருக்கீங்க அண்ணே! இன்னும் கூட சேதிகள் பார்த்து காத்திருக்கிறேன்!


    (நான் கூட நிறைய பேர் சொல்லி நலம் விசாரிக்க சொல்லலாம்ன்னு நினைச்சு இருந்தேன்! :))) )

    ReplyDelete
  46. //ஒரு வழியா லீவ் கிடைத்து இந்தியா வந்து டிங்கரிங், புட்டி பார்த்து புது பெயிண்ட் அடிச்சு புத்தம் புதிய காப்பியா ஆகி ///

    ஒ.கேய்ய்ய்ய்ய்!

    ReplyDelete
  47. //பஸ்ஸ்டாண்டு எங்கே அமைப்பது என்கிற பட்டிமன்றம் இன்னும் முடியவில்லை. ///


    இன்னும்மா முடியல????????????????

    ReplyDelete
  48. //ஒரு அமதியான பெண், ஒரு துடிப்பான பெண், ஒரு கடலை போடும் பையன் ஆகியோர் பஸ்ஸ்டாண்டு கடைவாசலில் நின்று அந்த கடலை பையனுக்கு அந்த துடிப்பான பெண் பதில் சொல்லி கொண்டு இருந்தால்///


    இன்னும்மா நிக்கிறாங்க?????????

    ReplyDelete
  49. அண்ணா எப்ப நம்ம ஊருக்கு டிரெயின் திரும்ப வுடுவாங்களாம்??

    ReplyDelete
  50. //மணிசங்கர் அய்யர் டவுன் டவுன். ///

    ஆமாம் அண்ணே!

    விவரம் கேள்விப்பட்டேன் காலேஜ் சுத்தியும் காம்பவுண்ட் வைச்சுப்புட்டாங்களாம்ல :((((


    டவுன்
    டவுன்
    டவுன்
    டவுன்
    டவுன்
    டவுன்
    டவுன்
    மணி
    டவுன்

    ReplyDelete
  51. இப்ப இந்தியாவா இல்ல அமீரகமா அபி அப்பா, வெல்கம் பேக்

    ReplyDelete
  52. அபி அப்பா அவர்களே,

    உங்கள் பதிவை படித்துகொண்டிருக்கும் போது மயிலாடுதுறை என்ற பெயர் பார்த்தவுடன் சுந்தரம் டாக்கீஸ் என்னா ஆட்ச்சின்னு கேட்க நினைத்தேன் அடுத்த சில வரிகளிலேயே அதை இடித்து விட்டார்கள் என்ற செய்தி ரொம்ப வருத்தத்தை கொடுத்தது.

    Qyamat-se-Qyamat-tak 10 முறை அந்த தியேட்டரில் பார்த்தேன்.

    முதன் முதல் கைராசிக்காரன் என்ற படம் தனியாக பஸ் ஏறி வந்து (திருட்டுதனமாய்) பார்த்தேன்.
    நான் படித்த பள்ளி குரு ஞான சம்மன்தர், வசித்த ஊர் குத்தாலம்.

    என் நண்பர் சுந்தரோடு “இனைந்த கைகள்” பார்த்தேன்.

    மிக முக்கியமானது - நான் காதலித்த(ஒரு தலை காதல்) பெண்னோடு ( + அவங்க அம்மா & தம்பி) வருஷம் 16 படம் பார்த்தேன்.

    இத்தனை சம்பவங்களும் நினைவில் மீண்டும் வருகின்றது.

    இன்னும் பல உண்டு(ஒரு பதிவு போட்ர வேண்டியது தான்).

    ReplyDelete
  53. nandri sultan boy, vadakarai velan, chinna ammai, adirai jamal, aayilyan,nadhu,meendum meendum nandri!!!!!

    ReplyDelete
  54. அபி அப்பா boyதானா நானென்னவோ நீங்கள் bhai என்று மதிப்போடு சொல்வதாய் இதுநாள்வரை நினைத்திருந்தேன். :((

    ReplyDelete
  55. யோவ்... தீபாவளிக்கு நீர் ஊரிலா இருந்தீர்....

    என்ன மனிதரையா நீர்... சொல்லிட்டு போய் இருக்கலாம்லா?

    ReplyDelete
  56. // குடிகார குசும்பன்களுக்கும்//

    இதுல எதுக்கு சரவணன் அங்கிளை வம்புக்கு இழுக்கறீங்க:):):)

    ReplyDelete
  57. "சமீபத்தில் 39 வருஷத்துக்கு முன்பு இதே நாளில் எடுக்கப்பட்ட என் போட்டோ எதேர்சையாக இன்று பழைய குப்பையை கிளறும் போது கிடைத்தது"

    I couldn't see the photo..

    ReplyDelete
  58. என்ன ஆச்சு அபி அப்பா ? வீர சேகர விலாசை தொடருகிற எண்ணம் இல்லையா அல்லது நேரம் இல்லையா? இப்படி எனகேன்னானு கிடப்புல போட்டுட்டுப் போயிட்டிங்க அதை!!! சீக்கிரம் அதை எழுதி முடிங்க...அப்படியே நேரம் இருக்கும் போது புதுசா எழுத ஆரம்பிச்சிருக்கற எங்க பக்கமும் எட்டிப் பார்த்துட்டு ஏதாச்சும் சொல்லிட்டுப் போனா நல்லதே !?

    ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))