பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

December 22, 2008

அபியும் நானும்!!!- ஒரு சுய விமர்சனம்

பதினைந்து நாள் மெடிக்கல் லீவிலே போய் விட்டு வந்துடலாம்னு போனா மழை அது இதுன்னு 45 நாள் முழுசா ஆகிடுச்சு. ஆனா இந்த விடுமுறை எனக்கு அத்தனை சுவாரஸ்யமா இல்லை என்றே சொல்ல வேண்டும். முதல் பத்து நாட்கள் ஹாஸ்பிட்டல் செக்கப் அப்டீன்னு செம போர். கடைசியா டாக்டர் "உங்களுக்கு ஒன்னுமே இல்லை" என சொல்லிய போது "மண்டையிலா டாக்டர்" என கேட்க நினைத்து "தேங்ஸ் டாக்டர்" என கூறி வந்து விட்டேன்.

பின்பு நான்கு நாட்கள் நல்ல படியாக போனது. பின்னே ஜாலியா அபி, நட்ராஜ் கூட விளையாடி கொண்டு இருக்கும் போது தம்பி அவன் தலையை சீவி முடிக்கும் வரை காத்திருந்து பின் முடியை இழுத்து முகத்தில் விட்டு ரஜினி ஸ்டைல் செய்யும் போது "அப்பா பொடியன் சஞ்சய் அங்கிள் கல்யாணம் இப்ப இருந்தா ஜாலியா நாம போயிட்டு வரலாம்ப்பா குசும்பன் அங்கிள் கல்யாணத்துக்கு போன மாதிரி" அப்படீன்னு சொன்ன போது ஏன் அபி சம்மந்தம் சம்மந்தமில்லால பேசறான்னு நினைச்சுகிட்டேன்.

அதன் பின் தம்பிக்கு குல தெய்வ கோவிலில் முடி இறக்கி, காது குத்தி ஜெக ஜோராய் வீட்டுக்கு வந்து சேர்ந்த பின்னே சுருட்டி வைத்த வாலை பிரிக்க தொடங்கியது "நிஷா" புயல். நவம்பர் 24 ம் தேதி மதியம் 3க்கு ஆரம்பித்த மழை டிசம்பர் 2 வரை தொடர்ந்து கொட்டியது. அன்று மாலை 5.30க்கு கரண்ட் போனது. பின்பு 6 நாள் கழித்தே வந்தது. முதல் நாள் மழை முடிந்த பின்னே தான் வெளியே வந்து பார்த்த போது அதன் உக்கிரம் புரிந்தது. வீட்டுக்கு பின் பக்கம் இருந்த கால்வாய் உடைத்து கொண்டு நகருக்குள் புகுந்து கொண்டிருந்தது. நகரில் என் வீடு கொஞ்சம் மேல் மட்டம் ஆகையால் வெளி கேட் வரை மட்டுமே தண்ணீர் இருந்தது. நகரின் உள்ளே இருந்த வீட்டின் உள்ளே எல்லாம் தண்ணீர் புகுந்து விட்டமைக்காக எல்லோரும் நீந்தாத குறையாக நகரை காலி செய்து கொண்டிருந்தனர்.

எனக்கும் கொஞ்சம் உதறல் எடுத்தது. ஆனால் என் “இதயம் தாங்கும் இதயத்து”க்கு வீடு நனைகிறதே, மோட்டார் மூழ்குகிறதே என்கிற கவலை ஒரு பக்கம் இருந்தாலும் “ என்னங்க கொஞ்சம் வெளியே நீந்தி போய் “பிரமிட்” எல்லாம் அழுக்கா இருந்துச்சே அந்த அழுக்கு எல்லாம் போய் பளிச்சுன்னு இருக்கான்னு பார்த்துட்டு வாங்களேன்” என்று சொன்ன போது பல்லை நற நறக்க தோன்றியது. ஆனால் பாப்பாவுக்கும் தம்பிக்கும் “ச்சோ”ன்னு கொட்டும் மழையும், மூட்டை முடிச்சுகளை தலையில் வைத்து கொண்டு போகும் மக்களையும், அந்த பரபரப்பான சூழ்நிலையும், விடிந்தும் விடியாதது போலவே இருக்கும் மேக மூட்டமும் ரொம்ப சந்தோஷ படித்தியிருக்க வேண்டும் என நினைக்கிறேன். அத்தனை ஒரு குதூகலம். முதல் 8 மணி நேரம் இன்வர்ட்டர் இருந்ததால் ஒரு பிரச்சனையும் இல்லை. பின்புதான் எல்லா பிரச்சனையும் ஆரம்பித்தன. மாடி அந்தபுரத்தில் “நிஷா” தலைவிரித்து கோர தாண்டவம் ஆடியதால் 2ம் நாள் இரவுக்கு கீழே வந்துவிட்டோம் படுக்கைக்கு.

நகரில் கொஞ்சம் கொஞ்சமாக உள்ளே வரும் தண்ணீர் அளவு அதிகமாகி போய் கொண்டே இருந்தது. 2ம் நாள் இரவுக்கு மட்டுமே தாங்கியது ஒரு எமர்ஜென்சி விளக்கு. அதிலும் பேட்டரி போய் விட்டது. காலை எழுந்து பார்க்கும் போது வீட்டின் வாசலில் கிரில் தாண்டி வாசம் மெயின் நிலை கதவுக்கும் 1 அடி கீழே வரை தண்ணீர் நின்று கொண்டிருந்தது. அபியின் சைக்கிள் “நான் எங்கே இருக்கேன் கண்டுபிடி” என சொல்லி கொண்டு சீட்டையும், பெல்லையும் மட்டும் காட்டி கொண்டு நின்றது. என் புதிய ஷூவில் ஒன்று மட்டும் மிதந்து கொண்டிருந்தது கிரில்லில் மாட்டி கொண்டு. மற்றைய எல்லா செறுப்பு வகையறாக்களும் பயணம் செய்து யார் வீட்டு கிச்சனுக்கோ போயிருக்கனும் என நினைக்கிறேன்.என் ஷூவுக்காகவே 2000 ரூபாய் தரனும் இந்த மைனாரிட்டி திமுக அரசு. நகரின் இளைஞர் அணி பசங்க எல்லோரும் ரொம்ப ஜாலியாக(!) நாகையில் இருந்து ஒரு ஃபைபர் போட் கொண்டு வந்து அதிலே பெண்கள், முதிய்வர்கள், குழந்தைகள் எல்லோரையும் ஏற்றி கொண்டிருந்தனர்.

"இந்தாங்க இந்தாங்க என் பிள்ளைகளையும் ஜாலியா போட்டிலே சுத்தி காமிங்க, நான் கேமிராவிலே புடிச்சுக்கறேன்"ன்னு சொல்லி அவங்க கிட்டே திட்டு வாங்குவதை விட பால்கனியில் இருந்து படம் பிடிப்பதே உத்தமம் என படம் பிடித்து கொண்டிருந்ததை பார்த்த, உயிரை படகில் பிடித்து கொண்டு உக்காந்திருந்த பாட்டி ரெட்டை விரலை காட்டிய போது எம்ஜியாரின் தாக்கத்தை நினைத்து அதிர்ந்தேன்.

வீட்டில் வாசலில் இத்தனை தண்ணீர் பார்த்த எனக்கு இந்தியன் கமல் போல என் பெண்ணுக்கும் 500 ரூபாய் நோட்டில் கப்பல் செய்து கொடுக்க ஆசை இருந்தாலும் இரண்டு காரணங்கலால் அதை தவிர்த்தேன். ஒன்று, ப.சிதம்பரம் கோவிச்சுப்பார், இரண்டு என்னிடம் 500 ரூபாய் நோட்டு இல்லை. ஆபத்பாந்தவனாக தம்பி நட்ராஜ் ஒரு நோட்டு புத்தகத்தை கொண்டு வந்து கொடுக்க நான் கப்பல் செஞ்சு கொடுக்க பாப்பாவும், தம்பியும் கப்பல் விட அந்த நோட் தீரும் போது தான் பாப்பாவுக்கு அது தன் நோட்டு என தெரிந்தது. அதற்கு அபராதமாக நான் 500 ரூபாய் கொடுக்க நேர்ந்தது பாப்பாவுக்கு.பாப்பாவின் ஹிஸ்டரி நோட்டை கிழித்ததுக்கு பதிலாக பேசாம ரூபாய் நோட்டிலே கப்பல் செஞ்சு விட்டிருந்தா ஹிஸ்டரியிலயாவது வந்திருக்கலாம் என நினைத்து கொண்டேன்.

நான்காம் நாள் ரொம்ப கொடுமைங்க. முதலில் இன்வர்ட்டர் போச்சா, அடுத்து எமர்ஜென்சி லைட் போச்சா, அடுத்து ஒரு சார்ஜர் லைட் போச்சு, அடுத்து என் செல் போன் பேட்டரி போச்சு, அடுத்து அபிஅம்மா செல் போன் போச்சு, மெழுகுவத்தி 1 பாக்கெட் அவுட், ரேடியோ இல்லை, கரண்ட் தான் 4 நாளா இல்லியே. 4ம் நாள் இரவு வரை சாமி விளக்கு எல்லாம் எண்ணெய் தீர்ந்து போச்சு. வந்திருப்பது புயலா? வந்திருந்தா கரையை கடந்துடுச்சா, இப்போ மணி என்ன, எப்போ விடியும், அல்லது உலகம் அழிய போகுதா, எதுவுமே தெரியாம இருட்டுக்குள் நானும் பசங்களும், அபிஅம்மாவும். பேசாம போட்டிலே போயிருக்கலாமோன்னு அப்ப தோனுச்சு. ஆனா நிலைமையின் விபரீதம் புரியாம பாப்பா தம்பிக்கு விளையாட்டு காமிக்கிறேன் பேர்வழின்னு "பூ" படத்தின் பாடலை "உச்சா உச்சா மாரி"ன்னு பாட அதுவரை சும்மா இருட்டுக்கு ப்யந்துகிட்டு என் மடியிலே உக்காந்து இருந்த தம்பி உச்சா போயி என் கைலிய நனைச்சுட்டான். ரொம்ப அவசியம் அப்போ அந்த பாட்டு. சரி டைம் பாசுக்கு அந்தாக்ஷரி பாடுவோம்ன்னு அபி சொல்ல நான் எப்போதும் போல பேமிலி பாட்டானா காக்கா பாட்டை பாட ஒரு மாதிரி நிசப்தம். ச்சே என்ன குடும்பம்டா சாமி பாட்டு நல்லா இருக்கு ,நல்லா இல்லை, சரி இந்த விளையாட்டு வேண்டாம், அல்லது யோவ் வாயை மூடுய்யா...இப்படி எதுனா சொல்லனுமா இல்லியா...என்கிட்ட சொல்லாமலேயே என்னை அந்த விளையாட்டில் இருந்து நீக்கிட்டாங்க.

இதல்லாம் போகட்டும். அப்போ இரவா, நடுஇரவா, விடியலா எதுவுமே தெரியாம இருந்த அந்த இரவில் "பாவி மனுசா, புதுவீட்டுக்கு வரும் போதே அம்மி, ஆட்டுக்கல், மண்ணென்னை விளக்கு, எதுவும் எடுத்துட்டு வரகூடாது, எல்லாமே கரண்ட் சமாச்சாரம் தான்னு சொல்லி தடுத்தப்ப எனக்கு எங்க போச்சு புத்தி, நானாவது எடுத்துகிட்டு வந்திருக்கலாமே......" இப்படியாக புலம்பி கொண்டிருந்தது எனக்கும், பசங்களுக்கும் அப்படி ஒரு சொர்க்கமாக தாலாட்டாக இருந்தது. தூங்கிவிட்டோம்.

அடுத்த நாள் கொஞ்சம் மழை நின்னு போயிருந்தது. தண்ணீர் குறைய வில்லை. அப்போதுதான் எங்களுக்கு உலகம் அழியவில்லை என்கிற உண்மை தெரிந்தது. ஆனால் பாவம் அபிக்குதான் ரொம்ப ஏமாற்றமாக இருந்துச்சு. "அப்பா அடுத்த புயல் எப்பப்பா வரும்?". ரமணனை கேட்டு சொல்றேன்ன்னு சொன்னேன்.

குறிப்பு: "நிஷாவும் நானும்"ன்னு தான் இந்த பதிவுக்கு பேர் வச்சிருக்கனும். ஆனா இப்போ டிரண்ட் "அபியும் நானும்"தான்னு தமிழ்மணத்தை பார்த்து தெரிஞ்சுகிட்டேன்.அதான் மக்கா. உண்மையான அபியும் நானும் பின்ன எழுதறேன்.

ரெண்டாவது குறிப்பு: வீரசேகர விலாஸ் சீக்கிரமா எழுதறேன். நேத்து தானே துபாய் வந்திருக்கேன். கொஞ்சம் வேலை பளு. அதான்.

65 comments:

  1. மீ த பர்ஸ்ட்டேய்ய்ய்ய்ய்!

    ReplyDelete
  2. //அப்பா பொடியன் சஞ்சய் அங்கிள் கல்யாணம் இப்ப இருந்தா ஜாலியா நாம போயிட்டு வரலாம்ப்பா குசும்பன் அங்கிள் கல்யாணத்துக்கு போன மாதிரி" அப்படீன்னு சொன்ன போது ஏன் அபி சம்மந்தம் சம்மந்தமில்லால பேசறான்னு நினைச்சுகிட்டேன்.//

    ஹய்ய்ய்ய்!

    ஐ லைக் திஸ் கமெண்ட் ப்ரம் அபிபாப்பா!

    பின்னே அபி பாப்பான்னா சும்மாவா!:))))

    ReplyDelete
  3. // வீரசேகர விலாஸ் சீக்கிரமா எழுதறேன்//


    மீ த வெயிட்டிங்க் :)))

    ReplyDelete
  4. // வீரசேகர விலாஸ் சீக்கிரமா எழுதறேன்//


    மீ த வெயிட்ட்டிங்க்!

    ஹாஸ்ட்ல் ஆனது வரைக்கும் கொண்டு வந்து விட்டாத்தான் நான் பெறவு கதை சொல்லமுடியும் :)))

    ReplyDelete
  5. சூப்பர் அபிஅப்பா..

    வெரி இன்ஸ்டரஸ்ட்டிங்..

    கடைசிவரைக்கும் விறுவிறுப்பாகச் சென்றது கதை..

    நம்ம கதையும் அதேதான்.. என்ன நீங்க கப்பல் விட்டீங்க.. நான் விடலை.. அவ்ளோதான் வித்தியாசம்..

    உடம்பெலலாம் நல்லாயிருக்குல்ல.. வேளாவேளைக்கு மாத்திரை, மருந்தெல்லாம் கரீக்ட்டா சாப்பிட்டு நல்ல பிள்ளைன்னு பேர் வாங்குங்க..

    அப்புறமா பிளாக்ல நல்லவர்ன்னு பேர் வாங்கலாம்..

    ReplyDelete
  6. \\//அப்பா பொடியன் சஞ்சய் அங்கிள் கல்யாணம் இப்ப இருந்தா ஜாலியா நாம போயிட்டு வரலாம்ப்பா குசும்பன் அங்கிள் கல்யாணத்துக்கு போன மாதிரி" அப்படீன்னு சொன்ன போது ஏன் அபி சம்மந்தம் சம்மந்தமில்லால பேசறான்னு நினைச்சுகிட்டேன்.//

    ஹய்ய்ய்ய்!

    ஐ லைக் திஸ் கமெண்ட் ப்ரம் அபிபாப்பா!

    பின்னே அபி பாப்பான்னா சும்மாவா!:))))

    December 22, 2008 10:50 PM\\

    ஆஹா அப்ப அதுல எதுனா உள்குத்து இருக்குதா ஆயில்யா? விளக்கமா சொல்லுப்பா நான் ஒரு டியூப் லைட்:-))

    ReplyDelete
  7. நாங்கூட ஒருவாரம் ஊரிலிருந்தேன். ஈத் தொழக்கூட மழையிலதான் போனேன். கரண்ட் போவது கூட பரவாயில்லை. ஒவ்வொரு கொசுவும் குதிரை சைஸில் வந்து மிரட்டுவதுதான் கொடுமை.

    துபையிலிருந்து அபி அப்பாவைக் காணவில்லை என்று விளம்பரம் போடலாமா என்று இருந்தேன். ஜாலியா ஊரிலா. வாழ்க.

    ReplyDelete
  8. வாங்க ஜெபஸ்ட்டின், வருகைக்கு நன்னி!

    ReplyDelete
  9. உண்மைதமிழன் வாங்க! நல்வரவு!உடல் நிலை சூப்பரோ சூப்பர்! மருந்து மாத்திரை எல்லாம் முடிஞ்சுது. ஒன்னும் இப்போ பிரச்சனை இல்லை. நன்றி நன்றி

    ReplyDelete
  10. வாங்க ஜெபஸ்ட்டின், வருகைக்கு நன்னி!

    ReplyDelete
  11. வாங்க sultan bhai,நான் நேத்து துபாய் வந்தாச்சு. அதான் பதிவெல்லாம் போடுறேன்!வருகைக்கு நன்றி!

    ReplyDelete
  12. இன்னைக்கு காணலைன்னு தேடிக்கிட்டிருந்தோம் வந்துட்டிங்களா அண்ணன்...

    ReplyDelete
  13. அபியோட கமென்ட்ஸ் கலக்கலா இருக்கறதால அபியும் நானும் கூட சரியாத்தான் இருக்கு...:)

    ReplyDelete
  14. அபியும் நானும் சூப்பர் விமர்சனம்...

    ReplyDelete
  15. //உச்சா உச்சா மாரி"//

    அது ச்சூ ச்சூ மாரி. தப்புத்தப்பா பாடியிருக்கீங்க.

    ReplyDelete
  16. உடம்பு நலம்னு சொன்னதுக்கு சந்தோஷம்....

    ReplyDelete
  17. //"மண்டையிலா டாக்டர்" என கேட்க நினைத்து "தேங்ஸ் டாக்டர்" என கூறி வந்து விட்டேன். //

    ஹிஹிஹி, டாக்டர் சொல்லித் தான் நாங்க தெரிஞ்சுக்கணுமா என்ன?? எங்களுக்கே தெரியுமே?

    ம்ம்ம்ம், வாழ்த்துகள், நல்லா ஃபார்முக்கு வந்திட்டீங்கனு புரியுது பதிவிலே! :)))))))

    ReplyDelete
  18. சூப்பரா இருந்தது விமர்சனம்.. எல்லாமே பிடிச்சிருந்தாலும். அந்த ஹிஸ்ட்ரில வந்துருக்கலாம் ரொம்ப பிடிச்சது.. என்ன நிலைவாசல் வரைக்குமா தண்ணி அட அநியாயமே..சரி ப்ரமிட கிளீனாகிடுச்சா... ஷூவுக்கு இரண்டாயிரமா அதான் ஒன்னு இருக்குல்ல அதனால் கொடுத்த ஆயிரம் சரியாப்போச்சு..

    ReplyDelete
  19. யோவ்... உடம்பு சரியில்லைனு போன் எல்லாம் அடிச்சு விசாரிச்ச நல்ல உள்ளங்களை பற்றி ஒரு வார்த்தை கூட கூறாத இந்த பதிவை நான் புறக்கணிக்கிறேன்.

    ;)

    ReplyDelete
  20. //பதினைந்து நாள் மெடிக்கல் லீவிலே போய் விட்டு வந்துடலாம்னு போனா மழை அது இதுன்னு 45 நாள் முழுசா ஆகிடுச்சு.//

    உங்களை அனுப்பவத்ற்க்கு இயற்கைக்கே மனசில்லை போல

    ReplyDelete
  21. //இந்த விடுமுறை எனக்கு அத்தனை சுவாரஸ்யமா இல்லை என்றே சொல்ல வேண்டும்.//

    குண்டு சட்டிகுள்ளேயே குதிரை ஓட்டுனா அப்படிதான்,
    ஈரோட்டு பக்கமெல்லாம் வந்திருந்தா சுவார்ஸியம் வந்திருக்கும்

    ReplyDelete
  22. //முதல் பத்து நாட்கள் ஹாஸ்பிட்டல் செக்கப் அப்டீன்னு செம போர்.//

    நர்ஸ்ஸுங்க தானே செக்அப் பண்ணுவாங்க. அதுவே போரா
    உங்களுக்கு ரொம்பவே வயசாயிருச்சு

    ReplyDelete
  23. //கடைசியா டாக்டர் "உங்களுக்கு ஒன்னுமே இல்லை" என சொல்லிய போது "மண்டையிலா டாக்டர்" என கேட்க நினைத்து "தேங்ஸ் டாக்டர்" என கூறி வந்து விட்டேன்.//

    அப்போதே அவருக்கு புரிந்திருக்கும்!
    எங்கே ஒண்ணுமில்லை என்று

    ReplyDelete
  24. //அப்பா பொடியன் சஞ்சய் அங்கிள் கல்யாணம் இப்ப இருந்தா ஜாலியா நாம போயிட்டு வரலாம்ப்பா குசும்பன் அங்கிள் கல்யாணத்துக்கு போன மாதிரி" //

    சஞ்சய் அங்கிள் மட்டும் வேணாம்னா சொல்றாரு!
    அவரும் ரெடியா தான் இருக்காரு

    ReplyDelete
  25. //பாப்பாவின் ஹிஸ்டரி நோட்டை கிழித்ததுக்கு பதிலாக பேசாம ரூபாய் நோட்டிலே கப்பல் செஞ்சு விட்டிருந்தா ஹிஸ்டரியிலயாவது வந்திருக்கலாம் என நினைத்து கொண்டேன்.//


    வரலாம், ஆனால் அதை படிக்க நீங்கள் ”உள்ளே” உட்கார்ந்திருக்க வேண்டுமே!

    ReplyDelete
  26. சோகத்திலும் காமெடியா?

    ReplyDelete
  27. //ஹிஸ்டரி நோட்டை கிழித்ததுக்கு பதிலாக பேசாம ரூபாய் நோட்டிலே கப்பல் செஞ்சு விட்டிருந்தா ஹிஸ்டரியிலயாவது வந்திருக்கலாம் என நினைத்து கொண்டேன். //

    சூப்பர் தல, இதுக்காகவே ஆயிரம் நிஷா வரலாம் போல் ;)

    ReplyDelete
  28. //பின்னே ஜாலியா அபி, நட்ராஜ் கூட விளையாடி கொண்டு இருக்கும் போது தம்பி அவன் தலையை சீவி முடிக்கும் வரை காத்திருந்து பின் முடியை இழுத்து முகத்தில் விட்டு ரஜினி ஸ்டைல் செய்யும் போது "அப்பா பொடியன் சஞ்சய் அங்கிள் கல்யாணம் இப்ப இருந்தா ஜாலியா நாம போயிட்டு வரலாம்ப்பா குசும்பன் அங்கிள் கல்யாணத்துக்கு போன மாதிரி" அப்படீன்னு சொன்ன போது ஏன் அபி சம்மந்தம் சம்மந்தமில்லால பேசறான்னு நினைச்சுகிட்டேன்.//

    அபியப்பாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஅ
    கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :((

    ஹாஸ்பிட்டல்ல இருக்கும் போது அக்கறையா போன் போட்டு விசாரிச்சதுக்கு இம்புட்டு பெரிய நக்கலா?


    யோவ் ஆயில்யா.. இது என் கல்யாண மேட்டர் இல்லைய்யா.. இது வேற மேட்டரு.. :(

    ReplyDelete
  29. //ஆஹா அப்ப அதுல எதுனா உள்குத்து இருக்குதா ஆயில்யா? விளக்கமா சொல்லுப்பா நான் ஒரு டியூப் லைட்:-))//

    உலகத்துலையே ரொம்ப நல்லவரு நீங்க தான்.. சாதா நல்லவரு இல்ல.. அபியப்பாவி நல்லவரு.. :((

    ReplyDelete
  30. நிஷா புயலை கட்டுப் படுத்த தவறிய மைனாரிட்டி திமுக அரசின் அராஜகப் போக்கிற்கு பொறுப்பேற்று கருணாநிதி ராஜினாமா செய்ய வேண்டுமென்று அம்மா சார்பில் ஆணையிடுகிறேன்.

    ReplyDelete
  31. //மாடி அந்தபுரத்தில் “நிஷா” தலைவிரித்து கோர தாண்டவம் ஆடியதால் 2ம் நாள் இரவுக்கு கீழே வந்துவிட்டோம் படுக்கைக்கு//

    ச்சி..ச்சி.. வெரி பேட் குமார் அண்ணா.. நிஷாவோட கூத்தடிச்சதை இப்டியா பப்ளிக்ல எழுதுவீங்க? :(

    ReplyDelete
  32. நிஷா புயல் அடிச்சப்ப ஊரில் தான் இருந்தீங்களா???நானும் அப்ப ஊரில் தான் இருந்தேன்.....திருவாரூர் கூட அடிக்கடி வந்தேன்.....நீங்க ஊரில் இருந்தது தெரியாமே போச்சே...:(

    ReplyDelete
  33. Sollave illa, veetukku sapita vanthuduvomnu avvalo payama ?...

    iimsai

    ReplyDelete
  34. அவ்வளவு பெரிய கொடுமையையும்..
    இவ்வளவு லந்தா உங்க ஒருத்தராலத்தான் சொல்லமுடியும்..!
    :)

    இவ்வளவு நாள் இங்கதான் இருந்தீங்களா?
    தெரியாம போச்சே அபி அப்பா!
    :(

    ReplyDelete
  35. வாங்க கருப்பன் தமிழி! வருகைக்கும் கருத்துக்கும் நன்றிப்பா:-))

    ReplyDelete
  36. வாங்க இராம்! சிங்கை எப்படி இருக்கு? நலமா?

    ReplyDelete
  37. சின்ன அம்மனி! பாட்டு என்னவோ சூ சூ மாரிதான். ஆனா எனக்கு வில்லங்கம் பண்னத்தானே பாப்பா அப்படி பாடினா:-))

    ReplyDelete
  38. ஹாஹ்ஹா...இதுநாள்வரை வருஷா வருஷம் நாங்க அனுபவிச்சதை இந்தமுறை நீங்கள்.உங்களுக்கு சைக்கிள் சீட்டாவது தெரிந்தது.நாங்க இருந்தப்ப காரே மூழ்கிடுச்சே.அப்பால பேரிச்சம் பழம் வாங்கினோம்.
    ஆமாம் அங்கெல்லாம் நல்ல மழையா அபிஅப்பா;)
    இங்ஙன நல்லாவே வெயில் அடித்தது.அப்பப்ப மழை பெய்தாலும் நாங்க சேஃப்

    ReplyDelete
  39. கேபிள் சங்கர் மிக்க நன்றி உங்க சிரிப்புக்கு:-)))

    ReplyDelete
  40. கீதாம்மா! என் மண்டையிலே ஒன்னும் இல்லைன்னுசொன்னா எத்தனை ஒரு சந்தோஷம் உங்களுக்கு! அட ஆண்டவா!

    அப்பாடா இந்த தடவை உங்களுக்கு பதில் சொல்லியாச்சு!தப்பிச்சேன்!

    ReplyDelete
  41. வாங்க முத்துலெஷ்மி! நல்லாத்தான் கணக்கு போடுறீங்க! அந்த ஊறி போன ஒத்தை ஷூவை வச்சு நான் என்ன செய்யட்டும். கண்டிப்பா 2000 வேண்டும் அம்மனி!வருகைக்கு நன்றிப்பா!

    ReplyDelete
  42. சின்ன அம்மனி! பாட்டு என்னவோ சூ சூ மாரிதான். ஆனா எனக்கு வில்லங்கம் பண்னத்தானே பாப்பா அப்படி பாடினா:-))

    ReplyDelete
  43. வாங்க சிவா! மிக்க நன்றி! கண்டிப்பா நான் போன் பண்ணினவங்களுக்கு, மெயில் அனுப்பினவங்களுக்கு, நேரில் வந்தவங்களுக்கு, என் கூட ஆதரவா இருந்த சென்ஷிக்கு எல்லோருக்கும் நன்றி செல்லியே ஆகனும். தனியா தனியா சொல்லிடறேன்! வலைப்பூவால் எனக்கு கிடைத்த சொந்தங்கள் பற்றி இப்போ நினைச்சாலும் கண்கள் பனிக்கின்றது! இதயம் கனக்கின்றது!(ச்சே இது காமடி இல்லை உண்மை, தலைவர் பல விஷயத்தை காமடியாக்கிட்டாரே, என்ன கொடுமை!)

    ReplyDelete
  44. வாங்க வால்பையா! சஞ்சை கல்யாணம் அதிலே மேட்டர் இல்லைப்பா, சஞ்சய் பின்னூட்டம் பாருப்பா, அதிலே ஏதோ உள்குத்து இருக்கும் போல இருக்கு!

    ஆமா நர்ஸ் தான் செக்கப் செஞ்சாங்க, ஆனா குட்டும்பமே கூட இருக்கும்போது என்ன பண்ணட்டும்!

    மண்டையிலே ஒண்ணும் இல்லாட்டி எத்தனை பேருக்கு சந்தோஷம் பாருங்க!:-))

    ReplyDelete
  45. வாங்க கானாபிரபா! ஒரு நிஷாவுக்கே அல்லு வுட்டு போச்சு! இதிலே 1000 நிஷாவா, போதும் சாமீ போதும்:-))

    ReplyDelete
  46. வாங்க பொடியன் சஞ்சய் தம்பிஆமா பாப்பா சொன்னதிலே எதுனா உள்குத்து இருக்குதா? விளக்கமா சொல்லுப்பா, இது என்ன தலை போற ஸாரி முடி போற ரகசியமா:-))

    முதலில் மைனாரிட்டி அரசு எனக்கு இன்னும் 1000 தரட்டும். இல்லாட்டி பர்துபாய் பஸ்ஸ்டாண்டு வாசல்ல சாலை மறியல் தான் அம்மா கட்சி சார்பாக!:-))

    நிஷாவோட நான் ஆட்டம் போட்ட மாதிரி சொல்றியப்பா, நிஷா போட்டது ஸோலோ ஆட்டம், அவ ஆட்டத்துக்கு நாங்களும் ஆடிட்டோம் அவ்வளவு தான்!

    ReplyDelete
  47. நிஜனா நல்லவரே! நீங்க நிஜமா நல்லவரா கெட்டவரா, ஊருக்கு வந்தவுடன் ஒரு போன் பண்ணியிருக்க கூடாதா? நல்ல வலைப்பதிவர் சந்திப்பு நடத்தியிருக்கலாமேப்பா! சரி இப்ப எங்க ஊர்ர்லயா, சிங்கையிலா?

    ReplyDelete
  48. வாங்க தூயாக்கா! இந்த மிக்சி, கிரைண்டர், மொத்தத்திலே கரண்ட் தேவைப்படாத ஒரு சமையல் குறிப்பு சொல்லுங்கக்கா புண்ணியமா போவும்:-))

    ReplyDelete
  49. வெங்கி! சாப்பாடு போட பயந்தவங்க இல்லப்பா நாங்க, ஆனா இப்பத்தான் கரண்ட் இல்லாம சமைப்பது எப்படின்னு தூயாகிட்டே கேட்டிருக்கேன். அடுத்ஹ்த தடவை ஜமாய்ச்சிடலாம்:-))

    ReplyDelete
  50. சுரேகா! வாங்க வாங்க! அடுத்தமுறை சொல்லிட்டு வரேன் ஜமாய்ச்சிடலாம்.

    ஆமா சுரேகா! சோகத்தை எல்லாம் சுகமாய் பார்த்து பழகிட்டா நவகிரகங்கள் கூட வித்தவுட்டிலே டிக்கெட் வாங்கிட்டு ஓடிடும்ல:-))

    ReplyDelete
  51. வாங்க கண்மணி டீச்சர்! கார் என்ன எங்க நகர்ல தேரே முழுகிடும், ஆனா நம்ம வீடு முதல் வீடு என்பதாலும் உயரமா கட்டினதாலும் பாப்பா சைக்கிளோட போச்சு! ஆனா உங்க பதிவிலே எழுதின போது பாம்பு எல்லாம்"என்ன அபிஅப்பா வீரசேகர விலாஸ் 2ம் பாகம் எப்போ?"ன்னு கியூவிலே நின்னு கேட்டுட்டு போச்சு!

    ReplyDelete
  52. என்ன அபி அப்பா வீர சேகர விலாஸ் ல நான் போட்ட கமெண்டுக்கு நீங்க இன்னும் பதிலே சொல்லலை .அதுக்குள்ள அடுத்த போஸ்ட் போட்டுடிங்க? புது பதிவர்களுக்கு எல்லாம் மறுமொழி போடறதில்லைன்னு ஏதாச்சும் கொள்கையோ ?

    ReplyDelete
  53. \\ மிஸஸ்.டவுட் said...
    என்ன அபி அப்பா வீர சேகர விலாஸ் ல நான் போட்ட கமெண்டுக்கு நீங்க இன்னும் பதிலே சொல்லலை .அதுக்குள்ள அடுத்த போஸ்ட் போட்டுடிங்க? புது பதிவர்களுக்கு எல்லாம் மறுமொழி போடறதில்லைன்னு ஏதாச்சும் கொள்கையோ\\


    டவுட்டக்கா, இது தேவையில்லாத டவுட் அக்கா. நானே கொஞ்ச நாளா பின்னூட்டத்துக்கு எல்லாம் பதிலே சொல்வதில்லைன்னு பெரிய க்க்றை இருக்கு. பர்ப்பஸா செய்வதில்ல்லை. நேரம் இருப்பது இல்லை. போன பதிவிலே உங்க பின்னூட்டம் பார்த்தேன். பப்ளிஷ் பண்ணினேன். அதனாலத்தான் இந்த பதிவிலே 2வது குறிப்பா உங்களுக்கான பதிலைப்போட்டேன். அந்த பதில் உங்களுக்குத்தான். நாளை எப்படியாவது வீர சேகர விலாஸ் 2ம் பாகம் போட்டுடறேன்.

    மத்தபடி உங்க பதிவுக்கு போய் பார்த்தேன். ரொம்ப நல்லா எழுதறீங்கப்பா, வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  54. அண்ணா,

    'காது புண்ணு ஆறிப்போச்சு.. கடுக்கணை மாட்டிகிட்டேன்' பதிவு எப்போ வரும்?

    ReplyDelete
  55. இந்த மழைக்கு நான் இல்லையே என நினைத்தேன்.
    நீங்களே நிஷாவை அழைத்து வந்துவிட்டீ..............ர்
    சூப்பர் நன்றி அபி அப்பா

    ReplyDelete
  56. இதல்லாம் போகட்டும். அப்போ இரவா, நடுஇரவா, விடியலா எதுவுமே தெரியாம இருந்த அந்த இரவில் "பாவி மனுசா, புதுவீட்டுக்கு வரும் போதே அம்மி, ஆட்டுக்கல், மண்ணென்னை விளக்கு, எதுவும் எடுத்துட்டு வரகூடாது, எல்லாமே கரண்ட் சமாச்சாரம் தான்னு சொல்லி தடுத்தப்ப எனக்கு எங்க போச்சு புத்தி, நானாவது எடுத்துகிட்டு வந்திருக்கலாமே......" இப்படியாக புலம்பி கொண்டிருந்தது எனக்கும், பசங்களுக்கும் அப்படி ஒரு சொர்க்கமாக தாலாட்டாக இருந்தது. //


    :) இதுதான் சூப்பர். நல்லா இருக்கீங்களா அபிஅப்பா.

    ReplyDelete
  57. முத்து! விரைவில் அந்த பதிவு வேற ரூபத்திலே வர போகுது பாறேன்!!

    ReplyDelete
  58. முத்து! விரைவில் அந்த பதிவு வேற ரூபத்திலே வர போகுது பாறேன்!!

    ReplyDelete
  59. படகு சாரே! வாங்க வருகைக்கு நன்றி! நல்ல நேரத்திலே நாகையிலே இருந்து நம்ம இளைஞர் அணியினர் டிராக்டர்ல வச்சு கொண்டு வந்து எல்லோரையும் காப்பாத்தினாங்க, மிக்கா நன்றி!!

    ReplyDelete
  60. அட புதுசா இருக்கே அபியும் நானும்.
    உச்சா உச்சா மாரி
    ரசித்து சிரித்தேன்.

    ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))