1. ஸ்ரீ லெஷ்மி விலாஸ் பசும்பால் காபி கிளப்!
குப்பகோணம் கும்பேஸ்வரர் கோவில் அருகே தஞ்சை மெயின் ரோட்டில் இருக்கு. பஞ்சாமி அய்யர் ஹோட்டல்னு சொல்லுவாங்க. அவங்க கிட்ட பசுமாடுகள் நிறைய இருக்கு. அந்த பாலில் தான் பில்டர் காபி போடுவாங்க். பித்தளை ஈயம் பூசப்பட்ட சின்ன சின்ன டபராவில் தான் கொஞ்சமா இருக்கும் காபி.அருமையா இருகும். 2 சாப்பிட்டா தான் எனக்கு திருப்தி ஆகும்.
அங்கே அடை, அவியல் ஸ்பெஷல். உரைப்படை தான். அதுக்கு தொட்டுக்க அவியல், ஒரு ஆடுதொடா இலையில் வச்சு கொஞ்சம் நாட்டு சர்க்கரை, சின்ன உருண்டை வெண்ணெய். அந்த வெண்ணெய் உருண்டையை தூக்கி சூடா இருக்கும் தலையிலே போட்டுட்டா அது பாட்டுகு உருகிகிட்டே இருகும். நாம பாட்டுக்கு சிக்சர் அடிக்கலாம்.
2. "கணபதி அய்யர் காபி கிளப்"
. மயிலாடுதுறைல இருந்து செம்பனார் கோவில் போய் அங்க ஆக்கூர் போகும் முனையில் ஒரு வீடு. முற்றத்தின் மீது கூறை போட்டிருக்கும். அங்கயும் டேபிள் சேர், பின்னே 4 தாழ்வாரம், 1 கூடம் எல்லாத்திலயும் டேபிள் இருக்கும். டிபன் தாமரை இலையிலே. போய் உட்காந்த வுடனே தண்ணீர் வைத்து விட்டு இலையில் வட்டமாக பொதினா துகையல், கொத்தமல்லி சட்னி, தக்காளி கெட்டி சட்னி, பொடி அதுக்கு எண்ணெய் சின்ன ஊசி பாட்டில்ல ரப்பர் மூடி போட்டு, இந்த முஸ்தீபு எல்லாம் முடிந்த பின்ன தான் சூடா வரும் இட்லி. மூணு மூணா தான் வைப்பாங்க. அத்தனையே இடம் இருகும் அந்த இலையில். பின்னே அதன் தலையில் செல்லமாக சாம்பார் ஊத்துவார்.
மதிய சாப்பாடு கூட நல்லா இருக்குமாம்.நான் சாப்பிட்டதில்லை. மாலை 4 மணி முதல் அல்வா, பஜ்ஜி அல்லது போண்டா, அல்லது கதம்ப பக்கோடா என்று கிடைகும். அதுக்கு வாழை ஏடுதான், தாமரை இல்லை இல்லை. பஜ்ஜி ஒன்லி வாழைக்காய் பஜ்ஜி தான். அல்வா தலையிலே கொஞ்சம் முட்டகாராபூந்தி தூவி இருப்பார். இரவு மொடக்கத்தான் கீரை அடையோ, ஏதாவது ஒரு கீரை அடையோ ஸ்பெஷல். அதை நான் சாப்பிட்டதில்லை.
3.ஸ்ரீ சிவகாமி காபி ஓட்டல்
சிதம்பரம் நடராஜா கோவிலின் தெற்கு சன்னதில இருக்கு இந்த ஹோட்டல். இங்க சிதம்பரம் கொத்சு ரொம்ப பேமஸ். ஆனா கொத்சு பத்தி தெரியாதவங்க இங்க போய் படிக்கவும். இட்லி ,கட்டை தோசைக்கு நல்ல காம்பினேஷன்.ஆனா தனியா தான் காசு கொடுத்து வாங்கனும். இப்ப 1 கப் 5 ரூபாய்.கோவில்ல சம்பா சாதம் கிடைத்தா அதுக்கும் இந்த கொத்சு அருமையான காம்பினேஷன். அதே போல சிதம்பரத்தில் "வேலு மிலிட்டரி உணவகம்" கொத்சு அருமையா இருக்கும்.
4. மயிலாடுதுறை மாயூரநாதர் கீழவீதி மெஸ்
இதுக்கு பேர் எல்லாம் இல்லை. ஒரு அய்யர்மாமாவும் மாமியும் நடத்துறாங்க. அது ஒரு வீடுதான். பெரிய ஓட்டு வீடு. ரெண்டு பேரும் வயசானவங்க. உள்ளே தரையில் தடுக்கில் அமர்ந்து தான் சாப்பாடு. மதிய சாப்பாடு மாத்திரமே. நுனி வாழை இலை நல்லா கழுவி இருக்கும். மாமா தான் பரிமாறுவார். (வேஷ்ட்டி மடித்து கட்டியிருக்க மாட்டார்) இலை வைத்து அதன் ஒரு ஓரத்தில் தண்ணி வைத்து விட்டு அடுத்த மூலையில் கிடார்ங்கா ஊறுகாய் வைப்பார்.
அதிலிருந்து எண்ணெய் வழிந்து வரும். கொஞ்சம் கசப்பாகவும் அருமையாகவும் இருக்கும். அடுத்து தயிர் பச்சடி. ஒரு கூட்டு, ஒரு வறுவல், சின்ன மைசூர்பாகு எல்லாம் அப்பளம் எல்லாம் வந்த பிறகு அருமையா சுட சுட பொன்னி சாப்பாடு. இங்க ஸ்பெஷலே மனதக்காளி வத்த குழம்பு தான். சும்மா பேஸ்ட் மாதிரி இருக்கு. ஒரு ஸ்பூன் தான் போடுவார். இன்னும் கேட்டா சாப்பிட்டுட்டு வாங்கிக்கன்னு சொல்லிடுவார். அந்த ஒரு ஸ்பூன் போதும் நாம் குவித்து வைதிருக்கும் சாதத்துக்கு போதுமானதாக இருக்கும். அடுத்து கெட்டி தயிர், தவிர ஒரு கிண்ணத்தில் அவல் பாயசம், ஒரு கிண்ணத்தில் தாளித்துவிட்ட மோர்.
இங்க ஒரு விஷேஷம் என்னன்னா சாம்பார், ரசம், வத்தகுழம்பு தவிர தினமும் எக்ஸ்ட்ரா குழம்பு தினம் வேறுபடும். உருண்டை பொறிச்ச குழம்பு, வாழைப்பூ கோலா உருண்டை குருமா இப்படியாக.
பின்னே சாப்பிட்டு முடித்ததும் நாமதான் இலை எடுக்கனும். அடுத்டு பீடா கிடையாது. கல்யாண வீட்டில் தாம்பூள தட்டில் கொடுப்பது போல கொடுப்பாரு. அதிலேயே ஒரு வாழைப்பழம் இருக்கும்.
ஒரு ட்ரடிஷனல் கல்யான சாப்பாடு சாப்பிட்ட திருப்தி இருக்கும். மேலே இருக்கும் உருண்டை குழம்பு எங்க ரூம்ல 3 நாள் முன்ன செஞ்சப்ப எடுத்த போட்டோவாக்கும்.
5. ஐயப்பன் ஹோட்டல்
மயிலாடுதுறை கச்சேரி ரோட்டில் இருக்கு இது. ராஜேந்திரன் முதலியார் ஓனர். ஒரு கூறை ஹோட்டலா ஆரம்பிச்சாங்க நான் சின்னவனா இருக்கும் போது. இப்போது நல்ல ஹோட்ட்லா ஆகிடுச்சு. கூட்டம் அதிகமா இருகும். இங்கு புரோட்டா அருமையா இருக்கும். எனக்கு தெரிஞ்சு மதிய சாப்பாடு இல்லை. அப்பவும் டிபன் தான். இப்ப எப்படின்னு தெரியலை.
மசால் வடை அருமையா இருக்கும். கிட்ட தட்ட பேரளம் ரயில்வே கேட்டை தாண்டி திருவாருர் ரூட்க்கு போகும் இடத்தில் கேட் அருகே ஒரு அய்யர் கடை அங்க மசால் வடை பேமஸ். இட்ட தட்ட அய்யப்பன் வடையும் இருக்கும். தவிர தயிர் வடை மேலே இருக்கு முட்டகாராபூந்தி ஊறி இருகும். அதிலே ஸ்பூனை விட்டா வெண்ணையிலே போவது போல போகும்.
இப்படியாக முதல் பாகத்தில் சைவம் முடிஞ்சுது. கிரகணம் முடியட்டும் என் 250 வது பதிவாக 2ம் பாகம் அசைவ ஹோட்டல் போடுறேன்.