இருபது நபர்களுக்கு 1500 வீதம் என இமாலய பரிசு தொகையை வலையுலகில் அறிவித்து 250 படைப்புகளை படைக்க வைத்த சூத்திரதாரிகளுக்கு ஒரு ராயல் சல்யூட்.
சில ஆலோசனைகள்:
1. கடைசி கட்ட தேர்வுக்கு முன்னதாக 37 கதைகள் தேர்ந்தெடுக்க பட்டதாக எழுதியிருந்தீர்கள். அந்த மீதி 17 கதைகளின் பெயரையும் அறிவீத்து விட்டால் அவர்களும் காலரை தூக்கி விட்டுக்க ஒரு நல்ல வாய்ப்பு மேலும் அவர்களுக்கு அடுத்தடுத்து தனது சின்ன சின்ன தவறை திருத்தி கொண்டு கதை எழுத ஊக்கம் கொடுத்த மாதிரியும் இருந்திருக்கும்.
2 பின்னூட்டத்ட்தில் ஒரு சகோதரி சொன்ன மாதிரி அத்தனை கதைகளையும் ஈ புத்தகமாக கொண்டு வந்தால் உலகம் முழுக்க இருக்கும் தமிழர்கள் படிக்க வாய்ப்பாகவும் அமையும்.
3.கிழக்கு பத்ரி அவர்கள் மீதி இருக்கும் 230ல் சிறந்ததை எடுத்து அச்சு ஊடகத்தில் அடுத்த புத்தகமாக கொண்டு வரலாம்.
அடுத்து கோபி போட்ட பின்னூட்டத்தையும் நீங்கள் மனதில் கொள்ள வேண்டுகிறேன்.
\\
கோபிநாத் said:
முதலில் இப்படி ஒரு போட்டியை நடத்தி பல பதிவர்களின் திறமை வெளிப்படுத்திய உங்கள் இருவருக்கும் என்னோட மனமார்ந்த நன்றிகள்...வாழ்த்துக்கள் போட்டியில் வெற்றி பெற்ற அந்த 20 நண்பர்களுக்கும் என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள் போட்டியில் பங்கு கொண்ட மற்ற அனைத்து நண்பர்களும் அருமையான கதைகளை எழுதியிருந்தார்கள்...அவர்களின் மூலமாகவும் பல கதைகள் கிடைத்தது..அதனால் அவர்களுக்கும் என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள்
என் மனதில் தோன்றிய ஒன்று போட்டிய நடத்திய இரண்டு தலைகளுக்கும் சொல்லி கொள்ள விரும்புகிறேன். போட்டியில் வெற்றி பட்டியலில் இருக்கும் நபர்கள் பெரும்பாலும் ஏற்கனவே பல வெற்றிகளை கண்டவர்கள் புதிய பதிவர்கள் பெரும்பாலும் இல்லை என்பது என்னோட தனிப்பட்ட கருத்து.\\இந்த இக்கட்டான சூழ்நிலையில் வேறு வழியின்றி நாங்களே (பைத்தியக்காரன் - ஜ்யோவ்ராம் சுந்தர்) நடுவர்களாக இருந்துவிட்டோம்\\தொடக்கம் முதல் போன பதிவு வரை நடுவர்கள் வேறுயாரேன்னு என்று நினைக்க வைத்து இப்போது வேற வழியில்லை நாங்கள் தான் என்று சொல்லியிருப்பருப்பது பல கேள்விகளை கொண்டு வரும். ஆயிரம் விமர்சனம் இருந்தாலும் உங்கள் இந்த முயற்சிக்கு மனமார்ந்த பாராட்டுகள் & வாழ்த்துக்கள்\\
அடுத்து (இதுஎன் தனிப்பட்ட கருத்து)
நர்சிம் அவர்கள் கதையும், ரசனைக்காரி அவர்கள் கதையும், அமித் அம்மாவின் நாலனா கதையும், ராமலெஷ்மியின் பொட்டலம் கதையும் நான் மிகவும் எதிர்பார்த்தேன்.
நாலனா கதையில் ஓடி போன புருஷன், ஒரே பிள்ளை, வறுமை தாய் என இன்னனும் மனதில் ஒட்டி கொண்டிருக்கும் கதை கரு. அவங்க முடிச்ச விதமும் அருமை.
பொட்டலம் கதையில் சமூக அவலம், பையனிம் முடி டிபன் பாக்சில் இருப்பது குப்பையில் வீசிய பேப்பரிலிருக்கும் செய்தி அப்படியே ஏழ்மைக்கு நீதி இல்லை என்பதை காட்டி இருக்கும்.
இருபது வருட வாசிப்பு அனுபவன் உள்ள தங்களுக்கு நான் சொல்ல வேண்டாம். என் ஆசையை தான் சொன்னேன்.
நான் இந்த 4 கதைகளுக்கும் விமர்சனமே எழுத நினைத்தேன். அதை தான் இங்கே கொட்டி தீர்த்துகறேன் அத்தனையே.
அந்த இருபதும் முத்துக்கள். மற்றபடி வலையுலக சம்பிரதாயத்தின்படி லக்கிக்கு "ஸ்பெசல் பரிசு" "ஸ்பெசல் சாதா பரிசு" " ஆனியன் பரிசு" "ரவா பரிசு"ன்னு எதுனா கொடுத்து இருக்கலாம். அவருக்கு பரிசு கொடுத்தால் எங்கே "நண்பர்களுக்கே கொடுத்து கொண்டார்கள்" என்று உங்கள் நேர்மையை சந்தேகபடுவார்களோ என் எண்ணியே ஒதுக்கி விட்டீர்களோ என நான் நினைக்கிறேன்.
அவர் தான் 250 கதைகளில் முதல் கதை எழுதி துவக்கி வைத்தார். அருமையான கதை. அவருக்கு என் பாராட்டுகள்..
உங்களுடைய நேரம் எத்தனை செலவாகி இருகும் என நினைக்க்கும் போது பிரம்மிப்பாக இருக்கின்றது. வாழ்த்துக்கள் குருஜி சுந்தர்ஜி அவர்களுக்கும், சிவராமன் அவர்களுக்கும். உங்கள் இலக்கிய பணி தொடரட்டும்.
குறிப்பு: இருபது பேரில் யாராவது 1500 வேண்டாம் என சொன்னால் கீழ்கண்ட முகவரிக்கு தந்தி மணிஆர்டராகவோ, போஸ்டல் ஆர்டராகவோ அனுப்பினால் தன்யனாவேன்.
அபிஅப்பா,
4 வது குறுக்கு சந்து,
விவேகானந்தர் தெரு,
(பஸ்டாண்டு அருகே)
துபாய்!
ஏன் இந்த கொல வெறி.. ??
ReplyDelete:)
இப்போது தேர்ந்து எடுக்க பட்ட 20 கதையில் 4 கதை சரி இல்லை என்று சொல்ல வர்ரீங்களா..?
ReplyDeleteசரி அந்த நாலு எது? எது? எது? எது? என்று சொன்னீங்கன்னா மேற்கொண்டு பேசுவோம் :)
ஆக்கா மின்னது இதுக்கு இப்படி ஒரு அர்த்தம் வருதா?????
ReplyDeleteபத்த வச்சுட்டியே பரட்டை:-)))
1500 வந்தா பாதி தரலாம்ன்னு இருந்தேன். கிடையாது போய்யா!
1500 வந்தா பாதி தரலாம்ன்னு இருந்தேன். கிடையாது போய்யா!
ReplyDelete/
க்கும் வந்துட்டாலும்..
அட்ரஸ் தப்பா குடுத்துட்டு விட்டத்த பார்த்து கனவு வேற.. :)
//பத்த வச்சுட்டியே பரட்டை:-)))//
ReplyDeleteரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்ய் :))
/குறிப்பு: இருபது பேரில் யாராவது 1500 வேண்டாம் என சொன்னால் கீழ்கண்ட முகவரிக்கு தந்தி மணிஆர்டராகவோ, போஸ்டல் ஆர்டராகவோ அனுப்பினால் தன்யனாவேன்.//
ReplyDeleteபை தி பை உங்களோட இந்த அப்ரோச்சும் ரொம்ப நல்லா இருக்குண்ணே :))))
கடைசி வரிகள் கலக்கல்... ஹி..ஹி.. அப்படியே உங்க பேங்க் அக்கவுன்ட் நம்பரும் குடுத்திருக்கலாம்.. :)))
ReplyDeleteஅபிப்பா..
ReplyDeleteஎன் வீட்டு அட்ரஸை கொடுத்திருக்கலாம்..!
\\ மின்னுது மின்னல் said...
ReplyDelete1500 வந்தா பாதி தரலாம்ன்னு இருந்தேன். கிடையாது போய்யா!
/
க்கும் வந்துட்டாலும்..
அட்ரஸ் தப்பா குடுத்துட்டு விட்டத்த பார்த்து கனவு வேற.. :)
\\
துபாய்ல எல்லா பயபுள்ளையும் அங்க அங்க தான் இரூக்காங்க. பேர் தான் மாறும் மின்னலு!!!
\\ ஆயில்யன் said...
ReplyDelete/குறிப்பு: இருபது பேரில் யாராவது 1500 வேண்டாம் என சொன்னால் கீழ்கண்ட முகவரிக்கு தந்தி மணிஆர்டராகவோ, போஸ்டல் ஆர்டராகவோ அனுப்பினால் தன்யனாவேன்.//
பை தி பை உங்களோட இந்த அப்ரோச்சும் ரொம்ப நல்லா இருக்குண்ணே :))))
\\
ஆஹா குதிரை ஓடி முடிச்சு லாயத்துக்கு வந்துடுச்சுடோய்! இனி ரகளை தான்!!!
\\ வெண்பூ said...
ReplyDeleteகடைசி வரிகள் கலக்கல்... ஹி..ஹி.. அப்படியே உங்க பேங்க் அக்கவுன்ட் நம்பரும் குடுத்திருக்கலாம்.. :)))\\
வாங்க வெண்பூ, மணிஆர்டருக்கு எதுக்கு அக்கவுண்ட் நம்பர் நேரா கையில கொண்டு வந்து கொடுப்பாங்க போஸ்ட்மென்!
\\ உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
ReplyDeleteஅபிப்பா..
என் வீட்டு அட்ரஸை கொடுத்திருக்கலாம்..!
\\
கிட்ட தட்ட 2 பேர் இருக்காங்கலாம் 2வது 1500கு உங்க அட்ரஸ் கொடுத்தா போச்சு!
//
ReplyDeleteஅபிஅப்பா,
4 வது குறுக்கு சந்து,
விவேகானந்தர் தெரு,
(பஸ்டாண்டு அருகே)
துபாய்!
//
பரிசையெல்லாம் எடுத்துக்கிட்டு ஆட்டோவுல அஞ்சு பேரு வந்துக்கிட்டு இருக்காங்களாம் :0))
பங்களிப்பில் கிடைத்த மகிழ்ச்சியும், உங்களைப் போல பலரும் பாராட்டியதுமே போதுமே. வெற்றி பெற்றவர்களை வாழ்த்துவோம்.
ReplyDelete250 கதைகளைப் படித்துத் தேர்வு செய்வது அத்தனை எளிதானதில்லை.
சிரமமேற்கொண்டு போட்டியை நடத்தியவர்களுக்கு நம் நன்றிகள்.
அத்தனை கதைகளையும் ஈ-புக்காகக் கொண்டு வரும் ஆலோசனை நன்று.
பின்குறிப்பு பிரமாதம்:))!
தல
ReplyDeleteஉங்க தனிபட்ட கருத்தும் நல்லாயிருக்கு. ஆனா இப்படி தனியாக அம்புட்டு பணத்தையும் அமுக்கிறது தப்பு..!!
அய்யா என்னோட பின்னூட்டம் எல்லாம் நீங்க படிக்கிறிங்களா!! கண்ணு கலங்குய்யா..கலங்குது..;))
இதுல ஏதாச்சும் காமெடி இருக்கா!!...
தல லக்கியை பத்தி சொல்லியிருக்கிங்க..அருமையான கதை...எனக்கு பிடித்த கதைகளில் அதுவும் ஒன்று..இங்க தல லக்கிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் ;)
This comment has been removed by the author.
ReplyDelete//மின்னுது மின்னல் said...
ReplyDeleteஇப்போது தேர்ந்து எடுக்க பட்ட 20 கதையில் 4 கதை சரி இல்லை என்று சொல்ல வர்ரீங்களா..?
சரி அந்த நாலு எது? எது? எது? எது? என்று சொன்னீங்கன்னா மேற்கொண்டு பேசுவோம் :)//
ROTFL............. :)))
வெல்கம் பேக் மின்னலு.......
பத்தாயிரம் வரி'க்கு பதிவு போட்டாலும் ஒத்த வரி பின்னூட்டத்தில்லே தூக்கியடிக்கிற ஒன்னோட திறமை இருக்கே... :)))
//
ReplyDeleteகுறிப்பு: இருபது பேரில் யாராவது 1500 வேண்டாம் என சொன்னால் கீழ்கண்ட முகவரிக்கு தந்தி மணிஆர்டராகவோ, போஸ்டல் ஆர்டராகவோ அனுப்பினால் தன்யனாவேன்.//
அண்ணே,
இதுகொசரம் தான் நான் கதையே எழுதலை... எல்லா போட்டியிலேயும் பிரபல பதிவரான நீயே பரிசு வாங்கினா நாங்கல்லாம் என்ன பண்ணுறதுன்னு எல்லாரும் விரும்பி கேட்டுக்கிட்டதுனாலே நானு எதுவுமே எழுதலை.... :))
நெம்ப துப்பிறாதீங்க.. தொடைக்கிறது ரெண்டு மூணு துண்டு தான் இருக்கு.... :D
ReplyDeleteநல்ல தகவல்களை தந்து பதிவிட்டுருக்கும் அபி அப்பாவுக்கு வாழ்த்துக்கள்
ReplyDelete//அவர் தான் 250 கதைகளில் முதல் கதை எழுதி துவக்கி வைத்தார். அருமையான கதை. அவருக்கு என் பாராட்டுகள்..//
ReplyDeleteமுதல் கதை நிலாரசிகன்...
எல்லா கதையும் ஒரே தளத்துல இருக்குன்னு நினைக்கிறேன். ஈ புக்கா வந்தாலும் நல்லாத்தான் இருக்கும். ஏன்னா நிறைய கதைகள் இன்னும் படிக்கவேயில்லை. ஆணி....
ReplyDelete//இருபது பேரில் யாராவது 1500 வேண்டாம் என சொன்னால் கீழ்கண்ட முகவரிக்கு தந்தி மணிஆர்டராகவோ, போஸ்டல் ஆர்டராகவோ அனுப்பினால் தன்யனாவேன்.//
ReplyDelete:-))
****
ReplyDeleteகிழக்கு பத்ரி அவர்கள் மீதி இருக்கும் 230ல் சிறந்ததை எடுத்து அச்சு ஊடகத்தில் அடுத்த புத்தகமாக கொண்டு வரலாம்.
****
ஏன் பத்ரி மேல இவ்வளவு காண்டு ?
அபி அப்பா
ReplyDeleteகதையெல்லாம் படிப்பீங்களா? பரவாயில்லையே :-)
//குறிப்பு: இருபது பேரில் யாராவது 1500 வேண்டாம் என சொன்னால் கீழ்கண்ட முகவரிக்கு தந்தி மணிஆர்டராகவோ, போஸ்டல் ஆர்டராகவோ அனுப்பினால் தன்யனாவேன்.
ReplyDeleteஅபிஅப்பா,
4 வது குறுக்கு சந்து,
விவேகானந்தர் தெரு,
(பஸ்டாண்டு அருகே)
துபாய்! //
பேபால், வெஸ்டர்ன் யூனியன் மூலமும் அனுப்பலாம்
//இப்போது தேர்ந்து எடுக்க பட்ட 20 கதையில் 4 கதை சரி இல்லை என்று சொல்ல வர்ரீங்களா..?
சரி அந்த நாலு எது? எது? எது? எது? என்று சொன்னீங்கன்னா மேற்கொண்டு பேசுவோம் :)//
ஆகா.....
உங்களுக்கு ஏதோ 'நெய் ரோஸ்ட் பரிசு' குடுக்கப்போறாங்களாமே.. அப்படியா?
ReplyDeleteநீங்க சொன்ன நாலணாவும் பொட்டலமும், என்னையும் மிகவும் கவர்ந்த கதைகள்.
ReplyDeleteohh ithan dupai address ah, oru naal kandippa sapattuku vantharan. abiyum kutti paiyanum effdi irukanga?
ReplyDeleteரசனைக்காரி என்று தேடிப்பார்த்தேன், கிடைக்கவில்லை. லிங்க் கொடுக்க முடியுமா?
ReplyDelete