எங்க வீட்டிலே ஒரு பழக்கம். 5 வயது ஆன பின்னே தான் நான்வெஜ் கொடுப்பாங்க. எனக்கோ கோழி கறி சாப்பிட நாலு வயது முதலே ஆசை வந்து விட்டது. சரியா ஐந்து வயதாகும் போது பக்கத்து வீட்டு டாமி கடித்துவிட்டது. அதுக்கு யார் மேல கோவமோ என்னை கடிச்சிடுச்சு.
நாய் கடிச்சா தொப்பிலை சுத்தி 64 ஊசி போடனும் என வள்ளியம்மை அத்தை ஆரம்பிச்சு பேரம் எல்லாம் முடிந்து கடைசியா 30 ஊசிக்கு வந்தாங்க. அத்தனை ஊசிக்கு என் தொப்புல் ஒர்த் இல்லைன்னு சொன்னா கூட யாரும் கேட்கலை. என் பாட்டி நம்புத்தாய் அம்மாள் தான் டாக்டர் ஏஜண்ட் எங்க எல்லார் குடும்பத்துக்கும்.
என்னை தூக்கிகிட்டு ராமூர்த்தி டாக்டர் கிட்ட போய் "டாக்டர் ஒரு 32 ஊசி போடுங்க"ன்னு சொன்னாங்க. அப்ப டாக்டர் கௌரவ டாக்டரா மயிலாடுதுறை பெரிய ஆஸ்பத்திரியிலே வாரம் இரு முறை வருவார். அதுக்கு டாக்டர் "இவனுக்கு வயிறே தொப்புல் சைஸ் தான் இருக்கு 32 எல்லாம் அதிகம். தவிர இப்ப எல்லாம் 32 ஊசி கிடையாது 16 தான். இவனுக்கு 15 வயசுல நாய் கடிக்கும் போது அனேகமா 1 ஊசி தான் போட வேண்டி இருக்கும்"ன்னு சொன்னார். என்னா ஒரு தீர்க்க தரிசனம்.
ஆனா 6 மாசத்துக்கு கோழிகறி , முட்டை எதுவும் கொடுக்க கூடாதுன்னு சொல்லிட்டார். அதிலிருந்து எவ்வரி 6 மாதம் முடியும் போதும் எதுனா ஒரு நாய் என்னை கவ்வி கொண்டு ராமூர்த்தி டாக்டர் கூட மருத்துவ வளர்சி காரணமாய் தொப்பிள் விளையாட்டு எல்லாம் நிப்பாட்டி இடுப்பு ஊசிக்கு வந்துட்டார். ஆனாலும் இந்த நாய்கள் என்னை விடுவதா இல்லை. "கொஞ்சமாவது சதை இருந்தாதானே மனிதன் என நினைக்கும். ஒரு எலும்புகூடு கண்டா நாய் கடிக்க தான் செய்யும் என கந்தசாமியால் கிண்டலடிக்கப்பட்டேன்.
ஆச்சு எல்லா ஆறு மாதத்துக்கும் தவறாம ஏதோ ஒரு டைகரோ, பிங்குவோ கடித்து வைத்தது. கோழி கறியும் முட்டையும் நான் மறந்தே போனேன். ராதா ஒரு ஐடியா சொன்னான். "டேய் நீ நாய் வெறுப்பவன் என நாய் சங்கத்திலே முடிவு செஞ்சுடுச்சு. அதனால நீயே ஒரு நாய் வளர்த்து பார்க்கலாமே". நான் உடனே "ராதா சரிடா அதுக்கு ஒரு சடை நாய் வளர்த்தா தாண்டா நல்லா இருக்கும்"ன்னு சொன்னதுக்கு "டேய் ஒரு 75 ரூவா கொடுத்தா கைப்புள்ள கிட்ட நான் சடை நாய் வாங்கி தரேன்"ன்னு சொன்னான்.
நான் 10 வது படிக்கும் போது இது நடந்தது. என் பாட்டி என்னை கூப்பிட்டு "எலேய் தம்பி நானோ படுத்த படுக்கையா ஆகிட்டேன். இனி உன்னை ராமூர்த்தி டாக்டர் கிட்ட அழைச்சிட்டு போக தெம்பில்லை. நாயெல்லாம் நமக்கு வேண்டாம்" என சொல்லியும் கேட்காமல் அதை வளர்த்தேன். ஆனா அதுக்கு தான் முடி வளரவே இல்லை. அப்போ என்ன என்னவோ போட்டு குளிப்பாட்டினேன். எனக்கு தான் மீசை வளர்ந்ததே தவிர நாட்டு நாய்க்கு எப்படி வளரும்.
ஒரு சுபயோக சுபதினத்தில் மே 1 - 1980 என் பாட்டி காலை என்னை கூப்பிட்டு "இன்னிக்கு எங்கயும் போகாதே, நாயை கொல்லைல கட்டி போடு"ன்னு சொல்ல "ஆத்தா இன்னிக்கு கிரிக்கெட் மேட்ச் இருக்கு ஜெயிச்ச டீமை தோத்த டீம் சகலகலாவல்லவன் கமல் படம் அழைத்து போகனும் ஆமா இதுக்கும் டைகரை ஏன் கட்டி போடனும்" அதுக்கு பாட்டி ஆளுங்க அதிகமா வருவாங்கய்யா அதனால குழந்தையம்மா வீட்டிலே (டி. ராஜேந்தர் வீடு)கட்டி போடு"
சரின்னு கட்டி போட்டேன். அந்த கொல்லையும் எங்க வீட்டு கொல்லையும் சின்ன மதில் தான். கட்டி போட்டு விட்டு வந்தா ஆத்தா செத்து போச்சு. அழுக முயற்சித்தும் அழுகை வரலை. வயசு அப்படி. எல்லாரும் என்னை பார்த்து தலைக்கு வைகோல் தலயனை தான் வைக்கனும் குழந்தையம்மா வீட்டிலே இருந்து எடுத்து வா என சொல்லிய போது பாய்ந்து குதித்தேன்.
குதித்தது என் நாயின் மேலே!!! தொடையை கவ்வி இழுத்தது. ஆஹா வள்ர்த்த கடா தொடைல பாஞ்சிசிடுச்சு. போச்சு ஆத்தா 40க்கு கூட கோழி திங்க முடியாது.
இன்னும் சில நாட்களில் சில நாய்கள் வீட்டு வாசல்க்கு வந்து லொல் லொல் என்று குறைக்கும் போது என் காதில் தொல்ஸ் தொல்ஸ் என விழும். ஓடிப்போய் பார்த்து கடி வாங்கிட்டு வருவேன். ங்கொய்யால டைம் பாஸ்க்காக பல்லை கூர் தீட்டிப்பதுக்காக என்னை கடிக்கிதுக்துங்க.
அபி பிறந்தவுடன் எனக்கு பயம். எங்கே நம்மள மாதிரியே அபிக்கும் நாய்கடி ராசி அமைஞ்சிட போவுதுன்னு. நல்ல வேலையா அதுக்கு நேர் எதிரே நல்ல விலங்கு ராசியா கிட்ட தட்ட தேவர் பிலிம்ஸ் தேவர் மாதிரி நாய், பூனை, மாடுன்னு எல்லாம் நல்ல ராசி அபிக்கு. யானையை தான் இன்னும் டெஸ்ட் பண்ணலை. அவ எல்.கே.ஜி படிக்கும் போது சிதம்பரம் அண்ணாமலை நகர்ல வீடு. பக்கத்து வெங்கடாசலம் என்கிற யுனிவர்சிட்டி இஞினியர் வீடு. அவர் ஒரு ஜெர்மன் ஷெப்பர்டு வச்சிருந்தார். ஆனா கட்டி எல்லாம் போடுவதில்லை. நாட்டு நாய் மாதிரி தான் ட்ரீட்மெண்ட் அதுக்கு. இஷ்டத்துக்கு தெருவிலே சுத்தி சுத்தி கடிச்சுது. ஒரு தடவை நான் லீவ்க்கு போனப்ப என்னையும் போட்டு தாக்கிச்சு.
வெங்கசாசலம் சாருக்கு மட்டுமே பயப்படும். ஆனா அது அபி மேல என்னை விட பாசம் வச்சது தான் ஆச்சர்யம். அதன் வாயீலே எல்லாம் கைவிடுவா. ஆன்னு காட்டிகிட்டு இருக்கும். காலை அபி ஸ்கூல் ஆட்டோ வந்ததும் எங்க இருந்தாலும் வந்துடும். யுனிவர்சிட்டில இருந்து ராஜேந்திரன் சிலை வரை ஆட்டோ வேகத்துக்கு ஈடு கொடுத்து ஆட்டோவின் முன்பாக வலதும் இடதுமா ஓடும். அது போலவே மதியம் ஆட்டோ நேரத்துக்கு ராஜேந்திரன் சிலைக்கு போய்விடும். அங்க இருந்து வீடு வரை அப்படியே வரும்.
என் மனைவி கூட "அந்த நாயை பாருங்க எத்தன ஆசை வச்சிருக்கு அபி மேல, நீங்களும் தான் இருக்கீங்கலே"ன்னு சொன்னாங்க. என் பாசத்தை காட்ட நானும் ராஜேந்திரன் சிலை வரை ஆட்டோ முன்னாடி வலதும் இடதுமா ஓடியா நிரூபிக்க முடியும்?
பின்னே மாயவரம் வந்ததும் அபி தீவிரமா நாய் வளர்க்க ஆரம்பித்து என் மனைவின் அக்கா வீட்டு பமரேனியன் குட்டி போட்டதும் ஒரு குட்டி கொண்டு வந்துட்டா. நாய்ன்னா ஆய் எல்லாம் போகும் வேண்டாம்ன்னு சொல்லி பார்த்தும் அவ கேட்கலை. அதுவும் ஒரு ஒரு சுக்லபட்ச தினத்தில் என்னை கடித்தது. சந்தோஷம் மகிழ்ச்சி.
எந்த வீட்டுக்கு போனாலும் முதலில் நாய் இருக்குதான்னு கேட்டுகிட்டுதான் கேட்டையே தொடுவேன். அது போலத்தான் சுந்தரேசன் என்ற நண்பர் வீட்டுக்கு போய் வாசல்ல இருந்து "சுந்தரேசன் நாய் இருக்கா"ன்னு கத்த அவர் மனைவிக்கு கோவம் வந்துடுச்சு. சுந்தரேசனுக்கும் நாய்க்கும் இடையே ஸ்பேஸ் விடாம கத்திட்டேன் போலருக்கு. எல்லாம் விதி. இதிலே சில பேர் வீட்டிலே "சும்மா பயப்படாதீங்க சார். இது கடிக்காது. இதுவரை யாரையும்ம் கடிச்சது இல்லை. நான் கட்டி போட்டிருக்கேன் வாங்கன்னு கெஞ்சுவாங்க. சரின்னு நம்பி போனா விழுந்து புடுங்கும். நாய்க்காரர் சந்தோஷமா " நீங்க தான் பஸ்ட் சார்ன்னு பெருமை பொங்க சொல்லுவார். நானும் பதிவுல போய் மீ த பஸ்ட் போட்ட சந்தோஷத்திலே வருவேன்.
இதல்லாம் எதுக்கு சொல்றேன்னா கடந்த மார்ச் 10 அன்று சைட்ல கிடந்த ஒரு நாய் விழுந்து புடுங்குச்சு. ஆக நாளையோட ஆறு மாதம் ஆகின்றது. அதனால இன்னும் 24 மணி நேரத்தில் என்னை நாய் கடிக்க போவுது அப்படின்னு தீர்மானமாக நம்பினேன். அதனால ரூமை விட்டு வெளியே போவதில்லை என முடிவெடுத்து நேற்று மாலை முதல் ரூம் உள்ளயே தான் இருந்தேன். இன்று லீவ் ஆகையால் விடிய காலை வரை கேரம் ஆடினோம். இரவு 3 மணிக்கு எல்லோருக்கும் டீ போட்டு எடுத்து வருவோமே என்று கிச்சன் போனேன். லைட்டை போட போகும் போது ஒரு பூனையை மிதித்து அது கடித்து தொலைத்துவிட்டது. விதி வலியது!!!!
//வீட்டுக்கு போய் வாசல்ல இருந்து "சுந்தரேசன் நாய் இருக்கா"ன்னு கத்த அவர் மனைவிக்கு கோவம் வந்துடுச்சு//
ReplyDeleteஇந்த டேமேஜ மனசில வச்சி அவங்க வீட்ல உங்கள கடிக்கறதுக்குன்னே இப்போ ஒரு நாய் வளர்த்த ஆரம்பிச்சிருக்காங்களாம்.. ஜாக்கிரதை அண்ணா :)))))
மீ த எத்தனாவது?
ReplyDeleteஅது எப்படி தொல்ஸ், இவ்வளவு சரளமாக நகைச்சுவையோட எழுதுறீங்க ரொம்ப நன்றாக இருக்கிற்து
ReplyDeleteஅண்ணாத்தே, 'அபி அப்பா'வை பூனை கட்சிடுச்சி..... :))
ReplyDeleteநகைச்சுவையான எழுத்துநடையில் பல இடங்களில் வாய் விட்டு சிரித்துவிட்டேன். :))
. "கொஞ்சமாவது சதை இருந்தாதானே மனிதன் என நினைக்கும். ஒரு எலும்புகூடு கண்டா நாய் கடிக்க தான் செய்யும்"
ReplyDeleteஹஹஹஹஹ
//சில நாய்கள் வீட்டு வாசல்க்கு வந்து லொல் லொல் என்று குறைக்கும் போது என் காதில் தொல்ஸ் தொல்ஸ் என விழும். ஓடிப்போய் பார்த்து கடி வாங்கிட்டு வருவேன். ங்கொய்யால டைம் பாஸ்க்காக பல்லை கூர் தீட்டிப்பதுக்காக என்னை கடிக்கிதுக்துங்க./
ReplyDelete:)))
ஆஹா மொத்தத்துல டர்ன் போட்டு கடிச்சிருக்குங்க
விதி வலியது இல்ல என்னமோ எனக்கு தோணுது ராஜன் தோட்டம் வழியா ஸ்கூலுக்கு போறப்ப நாயை கல் கொண்டு அடிச்சு காலி பண்ணிட்டீங்க போல பாவம் பாலோ பண்ணிகிட்டு வருது ! :))
ReplyDelete//லைட்டை போட போகும் போது ஒரு பூனையை மிதித்து அது கடித்து தொலைத்துவிட்டது. விதி வலியது!!!!///
ReplyDeleteலைட்டை போடறது ஏண்ணே பூனை மேல ஏறி நின்னீங்க!
சரி டீரிட்மெண்ட் நடந்துக்கிட்டிருக்கா!
மாசம் மாசம் டாக்டரு உங்களை வைச்சு நல்லா சம்பாதிச்சுக்கிட்டிருக்காரு அது நல்லா தெரியுது !
//அதனால இன்னும் 24 மணி நேரத்தில் என்னை நாய் கடிக்க போவுது அப்படின்னு தீர்மானமாக நம்பினேன். அதனால ரூமை விட்டு வெளியே போவதில்லை என முடிவெடுத்து நேற்று மாலை முதல் ரூம் உள்ளயே தான் இருந்தேன். இன்று லீவ் ஆகையால் விடிய காலை வரை கேரம் ஆடினோம். இரவு 3 மணிக்கு எல்லோருக்கும் டீ போட்டு எடுத்து வருவோமே என்று கிச்சன் போனேன். லைட்டை போட போகும் போது ஒரு பூனையை மிதித்து அது கடித்து தொலைத்துவிட்டது. விதி வலியது!!!!
ReplyDelete//
பூனை சாகமல் இருக்கான்னு கண்காணிங்க அபி.அப்பா !
:)
:) பழைய ஃபார்முக்கு வந்துட்டீங்க போல!
ReplyDeleteஎன்ன ஒண்ணு! இந்த தபா நாய்க்கு பதிலா பூனை!
உங்க வயசு x 2 = இது வரை நாய்க்கடிப்பட்ட மொத்த எண்ணிக்கையா?
ReplyDelete//சில நாய்கள் வீட்டு வாசல்க்கு வந்து லொல் லொல் என்று குறைக்கும் போது என் காதில் தொல்ஸ் தொல்ஸ் என விழும். ஓடிப்போய் பார்த்து கடி வாங்கிட்டு வருவேன். ங்கொய்யால டைம் பாஸ்க்காக பல்லை கூர் தீட்டிப்பதுக்காக என்னை கடிக்கிதுக்துங்க.//
ReplyDeleteரொம்ப ரசிச்ச வரிகள்!
அபி அப்பா ரிடர்ன்ஸ்!
ஜாதகத்தை நல்ல ஜோசியரிடம் காண்பித்து எதாவது பரிகாரம் இருக்கா என்று கேளுங்க... :-)
ReplyDeleteஅபி அப்பா செம போஸ்ட்... !!!! :) சிரிச்சி சிரிச்சி... . :)))))))))))))))
ReplyDelete//ஜாதகத்தை நல்ல ஜோசியரிடம் காண்பித்து எதாவது பரிகாரம் இருக்கா என்று கேளுங்க... //
ReplyDeleteஇதுக்கு ரிபீட்டேய்
அபி அப்பா..
ReplyDeleteசும்மாவா சொன்னாங்க..
"நாய் கூட நல்ல இடம் பார்த்துதான் கடிக்குமாம்"...
நீங்க அதிர்ஷ்டகாரர் தான்...
இத படிச்சிட்டு சிரிப்பா சிரிச்சுட்டேன்...
வணக்கம் அபி அப்பா,
ReplyDeleteநிஜமாவே உங்கள நாய் ஆறு மாசத்துக்கு ஒரு தடவ கடிச்சுதா??
அப்படின்னா, நாய்கடி படலம், பூனைக்கடி படலம் ன்னு நிறைய படலங்கள் போட்டு ஒரு பெருங்காப்பியமே எழுதிடலாம் போலிருக்கே...
செம காமெடி பீசுங்க... ;-))
-முகிலரசி தமிழரசன்
//சில பேர் வீட்டிலே "சும்மா பயப்படாதீங்க சார். இது கடிக்காது. இதுவரை யாரையும்ம் கடிச்சது இல்லை. நான் கட்டி போட்டிருக்கேன் வாங்கன்னு கெஞ்சுவாங்க. சரின்னு நம்பி போனா விழுந்து புடுங்கும். நாய்க்காரர் சந்தோஷமா " நீங்க தான் பஸ்ட் சார்ன்னு பெருமை பொங்க சொல்லுவார். நானும் பதிவுல போய் மீ த பஸ்ட் போட்ட சந்தோஷத்திலே வருவேன்.//
ReplyDeleteஅய்யய்யோ...
நானும் நிறைய மீ த பஸ்ட் கடி வாங்கியிருக்கேன்...
Cheers
..... இது .....
ReplyDelete//எனக்கோ கோழி கறி சாப்பிட நாலு வயது முதலே ஆசை வந்து விட்டது.//
ReplyDeleteகொலை வெறி கோவிந்தன்னு உங்களை சொல்றதுல தப்பேயில்ல!
:))
ReplyDeleteரொம்ப பாவம்............அந்த நாய்ங்க..
இராகவன் நைஜிரியா said...
ReplyDeleteஜாதகத்தை நல்ல ஜோசியரிடம் காண்பித்து எதாவது பரிகாரம் இருக்கா என்று கேளுங்க... :-)
//
அபி அப்பா சுயமரியாதைக்காரர், மூட நம்பிக்கைகளுக்கு எதிரானவர், பூசை புனஸ்காரங்களுக்கு எதிரானவர்,நாத்திகர் என்று நான் கட்டி வைத்திருக்கும் பிம்பத்தை இப்படி தொபுக்கடீர் என்று உடைக்கலாமா திரு இராகவன் சார்!?
வழக்கம்போல் கலக்கிட்டீங்க
ReplyDeleteஅச்சச்சோ...விதி ரொம்ப ரொம்பக் கொடியது!
ReplyDeleteஜனகராஜ் குரலில் படிக்கவும்
ReplyDeleteதங்கச்சியை நாய் கடிச்சிச்சிப்பா !.
வா அண்ணாத்தே, வந்து குந்து. இன்னிக்கு நடந்த கதய கேட்டுகினியா நீயி காலங்காத்தால, அஞ்சு மணிக்கெல்லாம், நம்ம பய வண்டியை கட்டிக்கினு வியாபாரம் பாக்க கிளம்பிகினம்பா. மார்கழி மாசமா, ஒரே குளுரு. பனியா பொய்து. ராவுல கஞ்சா அடிக்க வசதியாக கீனும்னு நம்ம பேட்டை பசங்க தெரு ட்யூப் லைட்ட எல்லாம் ஒடிச்சி போட்டுனுகிறானுகுகளே, கண்ணே தெரியலப்பா.
ராத்திரி பொண்டாடி மேல கைய போட்ட "ஏய்யா பேமானி, உன்க்கு வேற வேலை எதுவும் கிடியாதா" னு
கண்ட மேனிக்கு திட்டிட்டாப்பா. நானும் அதே சோகத்தில வண்டியை உருட்டிகினு போனாம்பா.
மார்கழி மாசம் ஆச்சா, நம்ம பேட்டை நாயுங்களெல்லாம், மஜாவா சோடியாய் சுத்திகினுகிறதா நான் பாக்காமா, ஒரு சோடி மேல லைட்டா டேஷ் உட்டுகினிம்பா.சும்மா வள் வள்னு கத்தினு என்ன ஒரக் கண்ணால பாத்திகினு நாய்ங்க ஓடிப் போச்சுப்பா.நானும் சரி, உடு, நாய்க்களுக்கு நம்மல மாத்ரி வேற வேலை எதுவும் இல்லனு வியாபாரம் பார்க்க போனேம்பா
தங்கச்சியை நாய் கடிச்சிச்சிப்பா !.
சும்ம சாயங்கலாம், நம்ம தமாசு தங்கவேலுவு, நம்ம இரவுடி கபாலியும் அண்ணாத்தே அண்ணாத்தே உனக்கு விச்யம் தெரியுமான்னு கூவிக்கினே பசாருக்கு நம்ம கடையாண்ட வந்தானுங்க.
"இன்னடா, பேமானிகங்களா இன்னாடா விசயம்னு" நானும் கேட்டுகினேம்பா
"அண்ணாத்தே, அண்ணாத்தே, நம்ம தங்கச்சிய நாய் கட்சிச்சிடுப்பா"னாங்க
"அட பரதேசிங்களா, நம்ம தங்கச்சிதான் முழு சைஸ் ஆச்சே, அதுபாட்டுக்கு எங்கனா கக்கூஸாண்டா, வாந்திதானாடா எப்ப பார்த்தாலும் எடுத்துனு இருக்கும் அத எப்பட்றா நாய் கடிச்சிது" ன்னு நானும் கேட்டுகினேம்பா !
"அண்ணாத்தே, வயக்கம்போல வாந்தி எடுக்கசொல்லறப்பதான் நாய் கடிச்சிசு" ன்னானுங்கப்பா
தங்கச்சியை நாய் கடிச்சிச்சிப்பா !.
அப்பால, நானும், கபாலி, தஙகவேலு எல்லாம் கையில குச்சி எடுத்துனினு அந்த நாய் அடிக்க கிளம்பினாம்பா.
எல்லா இடத்திலும் தேடி போய்., கடைசியா, குப்பத்தொட்டிகிட்ட கண்டுபிடிச்சம்பா.,
"அண்ணாத்தே அண்ணாத்தே , அந்த நாய்தான் நம்ம தங்கச்சிய கடிச்சிது " ன்னு பசங்க அடையாளம் காட்டினானுங்கப்பா.
அது எந்த நாய்டானு பார்த்தா, காலையிலே நான் வண்டியில டேஷ் உட்டேன் பாருப்பா, அதே நாய்தான்பா.மவனே என்னையாடா காலையில ஜல்சா பண்றசொல்ல இடிச்சே, இப்ப உன் தஙக்சசி கதிய பார்த்தியா ந்னு நக்கலா போஸ் குடுக்குதுப்பா.
சரின்னு நானும், கபாலியும் தங்கவேலும் நாலு அடிப்போட்டு தொர்த்திஉட்டேன்பா.வூட்டாண்டா வந்து பார்த்தா, தங்கச்சிக்கு வெறி புடிச்சி போச்சு, தொப்புள சுத்தி 48 ஊசி போட்டனும்னு டாக்கரு சொல்லிட்டாருப்பா.
என் தங்கச்சி கதைய பார்த்தியா நைனா. நான் என்னத்த பண்ணுவேன். இனிமே தண்ணியே அவ குடிக்ககூடாதாம்பா. அதான் நான் தண்ணிப் போட்டு பொலம்பினுகிறேன்.
தங்கச்சியை நாய் கடிச்சிச்சிப்பா !.
அன்புடன்,
டோண்டு ராகவன்
பேசுறதுக்கு முன்னால "ஹலோ மைக் டெஸ்டிங்"னு
ReplyDeleteசொல்வாங்கள்ல? அதுபோல நாய்கள் 'கடி டெஸ்டிங்'
பண்ணுச்சோ?
நேத்துதான் உங்களை நினைச்சுக்கிட்டேன். எங்க காணோமே என்று. வெல்கம் பேக்..!!
ReplyDeleteஇப்பதானே தெரிகிறது!!!!!!!!! உங்கள் வீட்டிற்க்கு எதிரில் ஏன் மிருக வைத்தியர் இருந்தார் என்று.....
ReplyDelete\\ இயற்கை said...
ReplyDelete//வீட்டுக்கு போய் வாசல்ல இருந்து "சுந்தரேசன் நாய் இருக்கா"ன்னு கத்த அவர் மனைவிக்கு கோவம் வந்துடுச்சு//
இந்த டேமேஜ மனசில வச்சி அவங்க வீட்ல உங்கள கடிக்கறதுக்குன்னே இப்போ ஒரு நாய் வளர்த்த ஆரம்பிச்சிருக்காங்களாம்.. ஜாக்கிரதை அண்ணா :)))))
\\
ராஜி, நான் வடிவேலு மாதிரிம்மா! ஒரு படத்துல வடிவேல் சொல்வது போல "எலேய் எல்லாம் பாரின் கார பசங்கலா இருக்கிங்களே என்னை கடிச்சு செத்து போயிட்டீங்களேன்னு நான் வசனம் பேச வேண்டி வரும் தெரிஞ்சுக்கோ!!!
நீ தான்ப்பா மீ த பஸ்ட்!
\\ jahir said...
ReplyDeleteஅது எப்படி தொல்ஸ், இவ்வளவு சரளமாக நகைச்சுவையோட எழுதுறீங்க ரொம்ப நன்றாக இருக்கிற்து
\\
jahir said...
. "கொஞ்சமாவது சதை இருந்தாதானே மனிதன் என நினைக்கும். ஒரு எலும்புகூடு கண்டா நாய் கடிக்க தான் செய்யும்"
ஹஹஹஹஹ
\\
ஜாகீர் நாம சின்ன பிள்ளைல இருந்து பழகுறோமே. சிரிப்புக்கு என்ன பஞ்சம் நமக்கு:-)))
சிரித்தமைக்கு நன்னி நன்னி நன்னி!
\\ துபாய் ராஜா said...
ReplyDeleteஅண்ணாத்தே, 'அபி அப்பா'வை பூனை கட்சிடுச்சி..... :))
நகைச்சுவையான எழுத்துநடையில் பல இடங்களில் வாய் விட்டு சிரித்துவிட்டேன். :))
\\
துபாய் ராஜா வாப்பா வா! பூனையும் கடிச்சிடுச்சுன்னு சொல்லியிருக்கலாம்:-))))
\\ ஆயில்யன் said...
ReplyDelete//சில நாய்கள் வீட்டு வாசல்க்கு வந்து லொல் லொல் என்று குறைக்கும் போது என் காதில் தொல்ஸ் தொல்ஸ் என விழும். ஓடிப்போய் பார்த்து கடி வாங்கிட்டு வருவேன். ங்கொய்யால டைம் பாஸ்க்காக பல்லை கூர் தீட்டிப்பதுக்காக என்னை கடிக்கிதுக்துங்க./
:)))
ஆஹா மொத்தத்துல டர்ன் போட்டு கடிச்சிருக்குங்க
September 11, 2009 1:42 PM
ஆயில்யன் said...
விதி வலியது இல்ல என்னமோ எனக்கு தோணுது ராஜன் தோட்டம் வழியா ஸ்கூலுக்கு போறப்ப நாயை கல் கொண்டு அடிச்சு காலி பண்ணிட்டீங்க போல பாவம் பாலோ பண்ணிகிட்டு வருது ! :))
September 11, 2009 1:44 PM
ஆயில்யன் said...
//லைட்டை போட போகும் போது ஒரு பூனையை மிதித்து அது கடித்து தொலைத்துவிட்டது. விதி வலியது!!!!///
லைட்டை போடறது ஏண்ணே பூனை மேல ஏறி நின்னீங்க!
சரி டீரிட்மெண்ட் நடந்துக்கிட்டிருக்கா!
மாசம் மாசம் டாக்டரு உங்களை வைச்சு நல்லா சம்பாதிச்சுக்கிட்டிருக்காரு அது நல்லா தெரியுது !
\\
டைம்டேபிள் போட்டு எல்லாம் கடிக்க்கலை, பொழுது போகலைனா கடிச்சுது அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
\\
ராஜன் தோட்டத்து நாய் எல்லாம் அடிச்சது உன் எதிர் வீட்டு டீச்சர் மொவன் காந்திதான் நான் இல்லைப்பா.\\
\\ஆமா எனக்கு ரொம்ப ஆசை பூனையை போட்டு ஏறி மிதித்து ஸ்விட்ச் போட .....அட போப்பா.....டாக்டர் கிரவுண்ட் புளோர் தான் இலவச கம்பனி டாக்டர். அவரை ரிசசன்ல தூக்காம இருப்பதுக்கு காரணமே நான் அவருக்கு கொடுக்கும் முழுநேர வேலை தான் அதுக்காக அவர் தான் நியாயமா எனக்கு பீஸ் தரனும்:-))))
\\
ReplyDeleteகோவி.கண்ணன் said...
//அதனால இன்னும் 24 மணி நேரத்தில் என்னை நாய் கடிக்க போவுது அப்படின்னு தீர்மானமாக நம்பினேன். அதனால ரூமை விட்டு வெளியே போவதில்லை என முடிவெடுத்து நேற்று மாலை முதல் ரூம் உள்ளயே தான் இருந்தேன். இன்று லீவ் ஆகையால் விடிய காலை வரை கேரம் ஆடினோம். இரவு 3 மணிக்கு எல்லோருக்கும் டீ போட்டு எடுத்து வருவோமே என்று கிச்சன் போனேன். லைட்டை போட போகும் போது ஒரு பூனையை மிதித்து அது கடித்து தொலைத்துவிட்டது. விதி வலியது!!!!
//
பூனை சாகமல் இருக்கான்னு கண்காணிங்க அபி.அப்பா !
:)
\\
கோவியாரே!5 வயது முதல் நாய் கண்காணிக்கும் படலமே இன்னும் முடியலை. இப்ப பூனையும் சேர்ந்துகிச்சு!அட கொடுமையே!!!!
வருகைக்கு நன்றி! புது வீட்டு வாங்கியதுக்கு வாழ்த்துக்கள். ஒரு வார்த்தை மெயில்ல சொல்லியிருக்கலாம். சரி விடுங்க அடுத்த வீடு சொந்த ஊர்ல கட்டும் போது மறந்துடாதீங்க சாரே!
\\ நாமக்கல் சிபி said...
ReplyDelete:) பழைய ஃபார்முக்கு வந்துட்டீங்க போல!
என்ன ஒண்ணு! இந்த தபா நாய்க்கு பதிலா பூனை!
September 11, 2009 2:53 PM
நாமக்கல் சிபி said...
உங்க வயசு x 2 = இது வரை நாய்க்கடிப்பட்ட மொத்த எண்ணிக்கையா?
September 11, 2009 2:54 PM
நாமக்கல் சிபி said...
//சில நாய்கள் வீட்டு வாசல்க்கு வந்து லொல் லொல் என்று குறைக்கும் போது என் காதில் தொல்ஸ் தொல்ஸ் என விழும். ஓடிப்போய் பார்த்து கடி வாங்கிட்டு வருவேன். ங்கொய்யால டைம் பாஸ்க்காக பல்லை கூர் தீட்டிப்பதுக்காக என்னை கடிக்கிதுக்துங்க.//
ரொம்ப ரசிச்ச வரிகள்!
அபி அப்பா ரிடர்ன்ஸ்!
\\
வாங்க மாநக்கலாரே!
நாயா இருந்தா என்ன, பூனையா இருந்தா என்னா, பொண்டாடியா இருந்தா என்னா கடிச்சா ஒரே வலி ஒரே பத்தியம் தான்ன்னு ஸ்வாமி டேஷானந்தா சொல்லி இருக்காரு.
\\
அடடா கணக்கு பார்முலா தப்பா இருக்கே
43 - 5 - 18 = 20
மீதி வருஷம் 23
அதிலே தப்பி ஓடியது 20 தடவை
மீதி 23 தடவைல ஹெவி இஞ்சுரி 4 தடவை, லைட்டா கவ்வினது9 தடவை, மீதி எல்லாம் பிராண்டல் தான்.
43 = வயசு
5 = 5 வயசு வரை கடிக்கலை
18 = அமீரகத்தில் இருந்தபோது 11 தடவை தான் கடிக்கப்பட்டேன்
கூட்டி கழிச்சு பாருங்க கணக்கு சரியா வரும்!
அதாவது முதல் 5 வருஷம் கடிக்கலை,, 18 வருஷம் துபாய்,\\
அபிஅப்பா எங்கயும் போகலை ரிட்ரர்ன்ஸ் ஆக இனி உங்க எல்லாருக்கும் பிடிச்ச மாதிரி எழுதறேன் சரியா!!!! மிக்க நன்றி!
\\ இராகவன் நைஜிரியா said...
ReplyDeleteஜாதகத்தை நல்ல ஜோசியரிடம் காண்பித்து எதாவது பரிகாரம் இருக்கா என்று கேளுங்க... :-)
\\
அண்ணா விருச்சிகலக்னம், லக்னத்துல சூரியன், புதன், சுக்கிரன் , கேது, 2 ல சந்திரன், 5 ல சனி, மேஷ ராகு, 10 கடகத்திலே குரு உச்சன், லாபத்திலே செவ்வாய்ன்னு ஜெகஜோதியாதான் இருக்கு. ஆனா ஜோதிபாரதி பத்தி தான் பயமா இருக்கு. நான் எப்பவாவது கடவுள் இல்லைன்னு சொன்னதுண்டா? இருங்க உங்களையும் என்னையும் வச்சி கும்மியடிக்க போறார்.
\\ இராகவன் நைஜிரியா said...
ReplyDeleteஜாதகத்தை நல்ல ஜோசியரிடம் காண்பித்து எதாவது பரிகாரம் இருக்கா என்று கேளுங்க... :-)
\\
பூனை கடிக்கு மருந்து போட்டு வந்த பின்னே உங்க லூசு பதிவு படிச்சேன். மனம் விட்டூ சிரிச்சேன். பின்ன தான் இந்த பதிவு அடிச்சேன். ரத்த பூமியையே கிளிர வைக்குது இந்த நகைச்சுவை , கும்மி மட்டுமே!ஒத்துகிறீங்களா இல்லையா???
\\ சின்ன அம்மிணி said...
ReplyDelete//ஜாதகத்தை நல்ல ஜோசியரிடம் காண்பித்து எதாவது பரிகாரம் இருக்கா என்று கேளுங்க... //
இதுக்கு ரிபீட்டேய்
\\
சின்ன அம்மிணி! இராகவன் அண்ணாக்கு பதில் சொல்லிட்டேன். அதையே ரிப்பீட்டிக்குங்கோ!
செம கலக்கல் கொங்கு தமிழ் பதிவு. கண்ணு பட போகுதம்மா சின்ன கவுண்டரம்மா சுத்தி போட வேணுமம்மா சின்ன கவுண்டர் அம்மா:-))))
\\ sarathy said...
ReplyDeleteஅபி அப்பா..
சும்மாவா சொன்னாங்க..
"நாய் கூட நல்ல இடம் பார்த்துதான் கடிக்குமாம்"...
நீங்க அதிர்ஷ்டகாரர் தான்...
இத படிச்சிட்டு சிரிப்பா சிரிச்சுட்டேன்...
\\
அட போப்பா சாரதி! அதுங்க கடிச்ச இடத்தை எல்லாம் சென்சார் பண்ணிட்டேன். உம்ம பழமொழி தப்பு. இல்லாட்டி என் அந்த இடமெல்லாம் ஜூப்பர் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:-))))
\\ தமிழ் said...
ReplyDeleteவணக்கம் அபி அப்பா,
நிஜமாவே உங்கள நாய் ஆறு மாசத்துக்கு ஒரு தடவ கடிச்சுதா??
அப்படின்னா, நாய்கடி படலம், பூனைக்கடி படலம் ன்னு நிறைய படலங்கள் போட்டு ஒரு பெருங்காப்பியமே எழுதிடலாம் போலிருக்கே...
செம காமெடி பீசுங்க... ;-))
-முகிலரசி தமிழரசன்
\\
வாங்க தாமிழ், பெரும் காப்பியம் எழுத முடியாது பெரும் "காயம்" தான் எழுதலாம் :-))
வருகைக்கு நன்றி!!
\\ அகல் விளக்கு said...
ReplyDelete//சில பேர் வீட்டிலே "சும்மா பயப்படாதீங்க சார். இது கடிக்காது. இதுவரை யாரையும்ம் கடிச்சது இல்லை. நான் கட்டி போட்டிருக்கேன் வாங்கன்னு கெஞ்சுவாங்க. சரின்னு நம்பி போனா விழுந்து புடுங்கும். நாய்க்காரர் சந்தோஷமா " நீங்க தான் பஸ்ட் சார்ன்னு பெருமை பொங்க சொல்லுவார். நானும் பதிவுல போய் மீ த பஸ்ட் போட்ட சந்தோஷத்திலே வருவேன்.//
அய்யய்யோ...
நானும் நிறைய மீ த பஸ்ட் கடி வாங்கியிருக்கேன்...
Cheers
\\\
அப்பாடா நமக்கு துணைக்கு ஒரு ஆள் இருக்குப்பா! நன்றிங்க நன்றி!
ஆஹா... எனக்கும் இந்த நாய் தோஷம் இருக்குங்க..இது வரைக்கும் ஏழு வாட்டி கடி வாங்கி 27 ஊசி போட்டு இருக்கென்... முதவாட்டி 12 ஊசி தொப்புள சுத்தி.....
ReplyDeleteகாலங்காத்தால 5 மனிக்கு எல்லாம் நாய் கடி வாங்கி இருக்கேன். கடிச்ச நாய் எல்லாமே என்கிட்ட பழகுன நாய்கள் தான்....
\\ தருமி said...
ReplyDelete..... இது .....
September 11, 2009 7:51 PM
\\
இதுக்கு தான் இனமான பேராசிரியர்ன்னு சொல்றோம். ரெந்தே எழுத்துல பதிவு நல்லா இல்லைன்னு சொல்லிட்டீங்களே! ( ஒரு வேளை நல்லா இருக்குன்னு சொல்லியிருப்பீங்களோ) நன்றி ஆசானே! நான்றி!
\\\ வால்பையன் said...
ReplyDelete//எனக்கோ கோழி கறி சாப்பிட நாலு வயது முதலே ஆசை வந்து விட்டது.//
கொலை வெறி கோவிந்தன்னு உங்களை சொல்றதுல தப்பேயில்ல!
\\
தல ஸாரி வாலு வர வர உன் பின்னூட்டம் குசும்பனுக்கு போட்டி போடுவது மாதிரி அசத்தலா இருக்குய்யா! கீப் வச்சிக்கோ மன்னிக்கவும் கீப் இட் அப்!
\\ கண்மணி said...
ReplyDelete:))
ரொம்ப பாவம்............அந்த நாய்ங்க..
\\
வாங்க குந்தவையே! இந்த பொன்னியின் செல்வனின் வந்தனம். அடிக்கடி வந்து தம்பியை பெண்டு நிமித்தினாதானே குந்தவை. இல்லாட்டி நாங்க குந்த வைன்னு சொல்லிடுவோமே! கமான் ஹரியப்!
\\ அத்திவெட்டி ஜோதிபாரதி said...
ReplyDeleteஇராகவன் நைஜிரியா said...
ஜாதகத்தை நல்ல ஜோசியரிடம் காண்பித்து எதாவது பரிகாரம் இருக்கா என்று கேளுங்க... :-)
//
அபி அப்பா சுயமரியாதைக்காரர், மூட நம்பிக்கைகளுக்கு எதிரானவர், பூசை புனஸ்காரங்களுக்கு எதிரானவர்,நாத்திகர் என்று நான் கட்டி வைத்திருக்கும் பிம்பத்தை இப்படி தொபுக்கடீர் என்று உடைக்கலாமா திரு இராகவன் சார்!?
\\
ஜோதி இதல்லாம் நல்லா இல்லை! நாம ரகசிய அக்ரிமெண்ட் போட்டுப்போம்.
தென் ஜோதி என் மெயில் ஐடில காண்டேக்ட் செய்யுங்க நாம நல்ல விஷயம் நிறைய பேசலாம்!!!!
\\\ T.V.Radhakrishnan said...
ReplyDelete:-))
September 11, 2009 8:57 PM
\\
டி வி ஆர் சார் சிரித்தமைக்கு நன்றி!
\\ உடன்பிறப்பு said...
ReplyDeleteவழக்கம்போல் கலக்கிட்டீங்க
\\
அய்யோ உடன்பிறப்பே நீங்க இன்னிக்கு கலக்குனது திராட்சை ஒயின் மாதிரி. காலம் ஆக ஆக ருசியும் போதை யும் அதிகம்.
இந்த பின்னூட்ட பதிவு இந்த பின்னூட்ட பதிவு அனேகமாக 2 வருடம் கழித்து கூட எங்களுக்கு 15நாள்பொழுது போக்கு.
ஜமாய்ங்க!!!!!!!!!!!!!உடன்பிறப்பே!!!!!
\\\ அன்புடன் அருணா said...
ReplyDeleteஅச்சச்சோ...விதி ரொம்ப ரொம்பக் கொடியது!
\\
நோ நோ அருணா கொடியது இல்லை. வலியது. நம்ம்மால் அதை விட வலிமையாக இருந்தால் சமாளிக்க முடியும்!!!!!
\\ dondu(#11168674346665545885) said...
ReplyDeleteஜனகராஜ் குரலில் படிக்கவும்
தங்கச்சியை நாய் கடிச்சிச்சிப்பா !.
வா அண்ணாத்தே, வந்து குந்து. இன்னிக்கு நடந்த கதய கேட்டுகினியா நீயி காலங்காத்தால, அஞ்சு மணிக்கெல்லாம், நம்ம பய வண்டியை கட்டிக்கினு வியாபாரம் பாக்க கிளம்பிகினம்பா. மார்கழி மாசமா, ஒரே குளுரு. பனியா பொய்து. ராவுல கஞ்சா அடிக்க வசதியாக கீனும்னு நம்ம பேட்டை பசங்க தெரு ட்யூப் லைட்ட எல்லாம் ஒடிச்சி போட்டுனுகிறானுகுகளே, கண்ணே தெரியலப்பா.\\
டோண்டு சார் பிச்சு உதரீட்டீங்க! நான் நினைச்சென் இந்த பதிவுக்கு இந்த டயலாக் வரும்ன்னு. ஆனா முதல்ல துபாய் ராஜா தொட்டார். ஆனா நீங்க பின்னி பெடல் எடுத்துடீங்க!
ரெண்டு நாள் மன சங்கடத்துக்கு மருந்து போட்ட மாதிரி ஆகிடுடுச்சு இல்லியா? பீ கூல் சாரே!!!!
\\ NIZAMUDEEN said...
ReplyDeleteபேசுறதுக்கு முன்னால "ஹலோ மைக் டெஸ்டிங்"னு
சொல்வாங்கள்ல? அதுபோல நாய்கள் 'கடி டெஸ்டிங்'
பண்ணுச்சோ?\\
அடப்பாவி நீடூரானே! உனக்கு தான் நம்ம ஊர் நாய் பத்தி தெஇர்யுமே இருந்தும் கேக்குறியேப்பா:-))
\\ செந்தழல் ரவி said...
ReplyDeleteநேத்துதான் உங்களை நினைச்சுக்கிட்டேன். எங்க காணோமே என்று. வெல்கம் பேக்..!!\\
நான் தினம் தினம் உன்னை நினைச்சுகிறேன்ப்பா!!!பேச எழுத வார்த்தை இல்லை என்னிடம்!
\\ natpu valai said...
ReplyDeleteஇப்பதானே தெரிகிறது!!!!!!!!! உங்கள் வீட்டிற்க்கு எதிரில் ஏன் மிருக வைத்தியர் இருந்தார் என்று.....
\\
அட மாலா! அவங்க வீட்டு நாய் கூட ஒரு தடவை கடிச்சது தெரியாதாப்பா! வாட் ய ஷேம் !@!!!!!!!!
அபி அப்பா
ReplyDeleteஉண்மையிலேயே நான் என்னை மறந்து சிரித்தேன்..............
ஆனாலும் அடிக்கடி நாய்கடி கொஞ்சம் அதிகம் தான்...........
பூனை கடியும் தான்...
ஜாக்கிரதையாக இருக்க வேண்டுகிறேன்
அன்புடன்
தங்கையா. பலசுப்பிரமணியன்
அபி அப்பா
ReplyDeleteநான் உங்களை எல்லாம் பார்க்கணும்...
//...இனமான பேராசிரியர்ன்னு..//
ReplyDeleteநீங்களும் ஆரம்பிச்சாச்சா ..!
நன்றியை பெற்றுக் கொள்கிறேன் - ஏன்னா நல்லாகீதுன்னு தான சொல்லியிருக்கேன்.
டோண்டு சும்மா அடிச்சு ஆடுறாரே!
ReplyDeleteஅவ்வ்வ்வ்!
பாட்டிக்கு ஆன்மீக ஈடுபாடு எப்படி
ReplyDeleteசொல்லிட்டு கிளம்பி போயிருக்காங்களே !!
\\\ Bala said...
ReplyDeleteஅபி அப்பா
உண்மையிலேயே நான் என்னை மறந்து சிரித்தேன்..............
ஆனாலும் அடிக்கடி நாய்கடி கொஞ்சம் அதிகம் தான்...........
பூனை கடியும் தான்...
ஜாக்கிரதையாக இருக்க வேண்டுகிறேன்
அன்புடன்
தங்கையா. பலசுப்பிரமணியன்
September 12, 2009 7:20 AM
Bala said...
அபி அப்பா
நான் உங்களை எல்லாம் பார்க்கணும்
\\
கண்மணி டீச்ஸ்ரீ சொன்னது போல் நாய்க்காக வேண்டிக்கப்பா!
நான் என்ன கடவுளா??? சீக்கிரம் வ்ருவேன் பார்ப்போம்!!
//http://geethasmbsvm6.blogspot.com/2009/08/blog-post_18.html//
ReplyDeleteஅபி அப்பா, எப்படியும் நீங்க என்னோட பின்னூட்டத்துக்கு பதிலே போடப் போறதில்லை, ஆனாலும் மேலே கொடுத்த சுட்டியிலே போய்ப் பாருங்க, நாய்க்கடி, பூனைக்கடி எல்லாம் சர்வ சாதாரணம், இந்த மாதிரி அபூர்வக் கடி எல்லாம் வாங்கி இருந்தால் அப்புறம் பேசணும்! :P:P:P:P
பதிவு முழுவதும் நல்ல நகைச்சுவை. மத்தவங்க கடி வாங்கினா நமக்கு சிரிப்பு வரது சகஜம்தானே
ReplyDelete:))
//வீட்டுக்கு போய் வாசல்ல இருந்து "சுந்தரேசன் நாய் இருக்கா"ன்னு கத்த அவர் மனைவிக்கு கோவம் வந்துடுச்சு//
:))))))))))))
என்னது அபி நாய் வளர்க்குதா??? நான் உங்க வீட்டுக்கு வந்தப்ப இல்லையே???
அக்மார்க் அபி அப்பா இடுகை. வாழ்க! வாழ்க!
ReplyDeleteஇவ்வளவு கடிபட்டும் லொள்ளு போகல என்று திரும்ப நாய்கள் முதல்ல இருந்து ஆரம்பிச்சிர போரதுகள். நல்ல நகைச்சுவை
\\ கீதா சாம்பசிவம் said...
ReplyDelete//http://geethasmbsvm6.blogspot.com/2009/08/blog-post_18.html//
அபி அப்பா, எப்படியும் நீங்க என்னோட பின்னூட்டத்துக்கு பதிலே போடப் போறதில்லை, ஆனாலும் மேலே கொடுத்த சுட்டியிலே போய்ப் பாருங்க, நாய்க்கடி, பூனைக்கடி எல்லாம் சர்வ சாதாரணம், இந்த மாதிரி அபூர்வக் கடி எல்லாம் வாங்கி இருந்தால் அப்புறம் பேசணும்! :P:P:P:P
\\
அய்யோ அப்படி இல்லை கீதாம்மா! உங்க பதிவை முதல்ல படிப்பவன் நான் தான்.அதுவும் நடராஜர் பத்தின பதிவுன்னா எங்க தீட்ஷிதர் பையர் உடனே லிங் அனுபிடுவார்.நான் அதை 50 பேருக்கு அனுப்புவேன்.
// மங்களூர் சிவா said...
ReplyDeleteபதிவு முழுவதும் நல்ல நகைச்சுவை. மத்தவங்க கடி வாங்கினா நமக்கு சிரிப்பு வரது சகஜம்தானே
:))
//வீட்டுக்கு போய் வாசல்ல இருந்து "சுந்தரேசன் நாய் இருக்கா"ன்னு கத்த அவர் மனைவிக்கு கோவம் வந்துடுச்சு//
:))))))))))))
என்னது அபி நாய் வளர்க்குதா??? நான் உங்க வீட்டுக்கு வந்தப்ப இல்லையே???
//
அன்றைக்கு நாம குசும்பன் கல்யாணத்துக்கு போக வேண்டி இருந்ததால் அவங்க பெரியம்மா வீட்டில் விட்டுட்டு வந்தா. நான் தனி மெயிலில் அபியும் டைகரும் போட்டோ அனுப்புறேன்
\\ சுல்தான் said...
ReplyDeleteஅக்மார்க் அபி அப்பா இடுகை. வாழ்க! வாழ்க!
இவ்வளவு கடிபட்டும் லொள்ளு போகல என்று திரும்ப நாய்கள் முதல்ல இருந்து ஆரம்பிச்சிர போரதுகள். நல்ல நகைச்சுவை
\\
நன்றி சுல்தான் பாய்! இனி இது போல எழுத மட்டும் உத்தேசம். நோ அரசியல். உங்க ஆசீர்வாதம் வேண்டும்.
அது சரி அபி அப்பா, என்னை மாதிரி மூஞ்சுறுக்கடி வாங்கி இருக்கீங்களானு படிச்சுப் பார்த்துட்டுச் சொல்லி இருக்கலாம் இல்லை?? நறநறநறநற
ReplyDelete:)))))))))))
அய்யா நாய்கிட்ட இருந்து தப்பிக்க ஒரு வழி இருக்கு, வைரவர் சாமி கும்புட்டிங்கனா நாய் கடிக்காது, வேனா அடுத்த தடவை நாய் கடிக்க வரும்போது வைரவானு சொல்லிப்பாருங்க நாய் கடிக்காது, இது என் தனிப்பட்ட அனுபவம்.
ReplyDelete## கீதா சாம்பசிவம் said...
ReplyDeleteஅது சரி அபி அப்பா, என்னை மாதிரி மூஞ்சுறுக்கடி வாங்கி இருக்கீங்களானு படிச்சுப் பார்த்துட்டுச் சொல்லி இருக்கலாம் இல்லை?? நறநறநறநற
:)))))))))))
##கீதாம்மா!அந்த லிங் ஓப்பன் ஆகலை. ஆனா மூஞ்சூரு கடிட்சதை நினைச்சா சிரிப்பு சிரிப்பா வருது!
ஏன்னா டைகர் என்னை கடிச்ச அதே தினம் கிருஷ்ணாவை மூஞ்சூரு கடிச்சிச்சுது.
நான் கெக்கே பிக்கேனு சிரிச்சிகிட்டே டாக்டர் கிட்ட போனோம்.
அருமை அருமை. நம்புங்க. நாயும் பூனையும் கடித்ததை சொல்லலை:). நகைச்சுவை மிளிர விவரித்திருப்பதைத்தான் சொல்றேன்!
ReplyDelete//அடப்பாவி நீடூரானே!//
ReplyDeleteநாய் வாலை நிமித்த முடியாது!
தெரியுமில்ல? பின்னே நீர் போய்
நாய்கிட்ட உங்க வால்தனத்தைக்
காட்டலாமா?
எங்க ஊர் நாய்ங்கல்லாம்
கொஞ்சம் சாது!
அபி அம்மா அப்பா உங்கள் இருவரின் பதிவுகளும் சூப்பர்ப்.
ReplyDeleteவிநாயக சதுர்த்தி, சுதந்திர தின ஸ்பெசல், நாய் கடிச்ச மகாத்மியம் எல்லாம் நல்லா இருக்கு.. சிதம்ப்ரத்தில் சில வருடங்கள் இருந்ததால் உங்கள் பதிவுகளைப் படிக்கும் போது அதைச் சார்ந்த ஊர்களான மயிலாடுதுறை, சீர்கா, வைத்தீஸ்வரன் கோவில் அனைத்தும் நினைவில் மலர்கிறது
உங்க பதிவைப் படித்து ரொம்ப சிரித்தேன்.
ReplyDeleteகுளோஸ்லா (அதாங்க தயிர்ல குந்த வச்ச முட்டைகோஸ்) சாப்பிட கூளிங்கிளாஸா... அவ்வ்வ்வ்வ்வ்வ்
ReplyDeleteஅருமையான நகைச்சுவை நடை.
ReplyDeleteஅருமையான நகைச்சுவை நடை.
ReplyDelete