கடந்த மாதம் 28 மதியம் வரை இந்தியா வர உத்தேசம் இல்லை. ஒரு வழியா போனஸ் வாங்கிகிட்டு வரலாம் என இருந்தேன். அதற்கு முன் 15 நாட்களாகவே உடல் நிலை சரியில்லாமலே இருந்தது. சமாளித்து கொண்டிருந்தேன். 28 காலை மிகவும் சரியில்லாமல் போகவே பெட்டியில் போவதை விட பெட்டியோடு போவதே உசிதம் என ஸ்வாமி மனசாட்சியானந்தா மண்டி போட்டு கேட்டுகிட்டதுக்கு இணங்க அதிஷ்ட்டவசமாக அன்று மாலைக்கே டிக்கெட் கிடைக்க மஞ்ச பையை தூக்கி கக்கத்திலே வச்சுகிட்டு துண்டை உதறி தோளில் போட்டுகிட்டு வேஷ்ட்டியை மடிச்சு கட்டிகிட்டு கிளம்பிட்டேன். இரவு 12 மணிக்கு திருச்சி வந்து ஒரு பஸ் பிடிச்சு மாயவரம் காலை 5.30கு வந்து கோலங்கள் போட்டு கிட்டு இருந்த அபிஅம்மாவுக்கு தொல்ஸ் என்கிற தொல்காப்பியனின் தரிசனம். வந்தது முதல் இப்போது வரை ஹவுஸ் அரஸ்ட் உடல் நிலை காரணமாக. ஆனால் கோவில், காவிரி அனுமதி உண்டு.
காவிரி கரை புரண்டு ஓடுது. பார்க்க பார்க்க ஆசையாக இருக்கின்றது. முறை வைத்து தண்ணீர் விடுகின்றார்கள். வீட்டின் பின்புறம் இருக்கும் பாசன கால்வாயில் இரவு சல சலன்னு ஓடும் தண்ணீர் இரவு தாலாட்டாக அருமையாக இருக்கின்றது. தவளை சத்தமும், அதை துரத்தும் பாம்பு சத்தமும் தவளையை முழுங்கிவிட்ட பாம்பு நகர முடியாமல் வீட்டில் கொல்லை புறத்தில் இருக்கும் (சனிமூலையில்) சரகொன்றை மரத்தின் அடியில் படுத்து கிடப்பது காண கிடைக்காத காட்சி. பசங்களும் பயப்படுவதில்லை. மனைவியும் பயப்படுவதில்லை. எனக்கு தான் அல்லு விட்டு போகுது. சர கொன்றை மரம் கேள்விபட்டது உண்டா? ஆஹா இரவில் பூக்கும். என் வீடு முழுக்க இரவு 12 மணி வாக்கில் அந்த வாசனை புகுந்து அப்படியே நம்மை ரம்மியமாக ஆக்குகின்றது. சர கொன்றை மரத்தின் அடியில் காம்பவுண்ட்க்கும் வாய்க்காலுக்கும் இடையே பாம்பு புற்று இருக்கின்றது. எல்லாம் அந்த வாசத்துக்கு சதந்திரமாக ஆடிப்பாடும். போகட்டும் நரி வலம் போனா என்ன இடம் போனா என்ன விழுந்து பிராண்டாமல் இருந்தா சரி தான்.
மாயவரத்தில் இந்த ஒன்பது மாதத்தில் பெரிய மாற்றம் எதும் இல்லை பஸ்ட்டாண்டு உட்பட. அது போல வழக்கம் போல பஸ்டாண்டு, ரயில்வே ஸ்டேஷன், பெரிய ஆஸ்பத்திரி போன்ற மக்கள் கூடும் இடங்களில் தலா இரண்டு பைத்தியங்கள் அழுக்கு கிழிந்த உடையுடன்(சில சமயம் அதுவும் இல்லாமல்) ஜடா முடியுடன் திரிகின்றனர்.ராதா போன்ற மாணவர்கள் இது பாகிஸ்தான் உளவாளி, இது நம்ம காலேஜ் கோல்டு மெடல் பார்ட்டி என்பன போன்ற கட்டு கதைகளை கட்டவிழ்த்து விடுவதும் என்னை போன்ற அப்பாவி(?) மாணவர்கள் வாய் பிளந்து கேட்பதும் நடந்து கொண்டு தான் இருக்கின்றது. இன்னும் எங்க ஸ்கூல் பக்கம் போகவில்லை. சீமாச்சு அண்ணா 11ம் தேதி வந்த பின்னே பள்ளியே கதி என இருக்க போவதால் அதற்கு முன் உடம்பை சரி செஞ்சுக்க ஐடியா.
நட்ராஜ் லீலைகள் நம்ம நகரிலே ரொம்ப பிரசித்தமாய் இருக்கு. அனைத்து டி வி விளம்பரமும் அத்துப்படி. அப்சர்வேஷன் ரொம்ப அதிகமா இருக்கு. கிருத்துருவத்தில் அப்படியே என்னை கொண்டிருக்கான். எஸ்க்கியூஸ்மீ கந்தசாமி தான் இப்போதைய முனுமுனுப்பு அவனுக்கு. தன் கைக்கு எட்டிய தூரம் வரை சுவற்றில் கோடு போட்டு வைத்திருக்கான். மாடி படியில் பக்கவாட்டில் ஏறி நம்மை பதற வைக்கிறான். இறங்கும் போது இம்சை அரசன் 23ம் புலிகேசி மாதிரி இறங்குகிறான். ஆட்டோகாரர், காய்கறி அம்மனி, பால்காரர், சலவைகாரர், பெரியகோவில் சிப்பந்திகள் உட்பட எல்லோர் மாதிரியும் இமிட்டேட் செய்து மோனோ ஆக்டிங் செய்கிறான். வீட்டில் எந்த ஒரு எலக்டானிக்ஸ் பொருளுக்கும் ரிமோட் என்பதே இல்லாமல் செய்து விட்டான். அடுத்த முறை இன்னும் நிறைய எதிர்பார்க்கலாம் நான். அதாவது அந்த எலக்ட்ரானிக்ஸ் பொருட்களே இருக்காது என நினைக்கிறேன். மதர் ஃபீடிங் நிப்பாட்டியாச்சு. கொலுசு, கை காப்புகள், செயின், கடுக்கன் எல்லாம் கழட்டி போட்டு விட்டான். கொஞ்சம் விட்டா மீசை வரைந்து கொண்டு பெண் பார்க்க சொல்லுவான் போலிருக்கு. அபிக்கு கொஞ்சம் அடங்குகிறான். அவன் அம்மாவை எல்லாம் கண்ணை கட்டி விடுவான்.
மாயவரத்தில் கிட்ட தட்ட எல்லோரும் அடை மொழி பட்டம் தனக்கு தானே கொடுத்து தானே போஸ்ட்டர் அடித்து ஒட்டியிருக்கானுங்க. (என்ன கொடுமை சரவணா) "எங்கள் தங்க ராஜா" " உங்க வீட்டு செல்லம்" போன்ற பட்டங்கள் சில உதாரணம். உடனே அந்த பட்டத்தை காரில் / ஜீப்பில் பின் பக்கம், முன் பக்கம், வலப்பக்கம், இடப்பக்கம் எல்லாம் ஒட்டி சும்மாவே சுத்தி சுத்தி வரானுங்க கடை தெருவை. பாவம் இவனுங்க தொல்லையால் தீபாவளி பர்ச்சேஸ் மக்கள் தவிச்சு போகுது. நம்பினால் நம்புங்கள் ஒரு இரு சக்கர மோட்டார் மெக்கானிக் ஏற்கனவே "அன்னை" என்னும் பட்ட பெயர் இருந்தும் அடிஷனலாக தேவைப்பட "டாக்டர்" பட்டம் போட்டு கோட் ஷூட் போட்டு போட்டோ எடுத்து”வருக வருக” போஸ்ட்டர் அடிச்சு இருக்கான்.வீட்டிலிருந்து கடைக்கு வர வருக போஸ்ட்டர். அட தேவுடா! கேட்டா சிரிக்கிறான். அந்த போஸ்டர் போட்டோ வேண்டுபவர்கள் தனி மடல் இடவும்.சீமாச்சு அண்ணா தலைமையில் ஒரு தனி படை அமைத்து இந்த பட்டகாரர்களை எல்லாம் ஒரு கூண்டு வண்டியில் பிடித்து போட்டு ஒரு பள்ளி கூடத்தில் அடைத்து வைத்து பாடம் நடத்தி பரிட்சை வைத்து படிக்க வைத்தால் சந்தோஷப்படுவேன்.
இன்னும் ஒரு தடவை மயிலாடுதுறை பஸ்ஸ்டாண்டு பிரச்சனை பத்தி பேசினா ஜோட்டால அடிங்க அப்படின்னு ரோசமுள்ள மனிதர்கள் விலகி விட்டனர். எனக்கும் ரோசம் இருக்கு என்பதால் அந்த பிரச்சனையிலிருந்து எஸ்கேப்.
கடைதெருவில் எள்ளு போட்டு எள்ளு எடுக்க முடியலை. அத்தனை கூட்டம். கடந்த ஒரு மாதமாகவே இப்படித்தானாம். காரணம் ரம்ஜான், நவராத்திரி....அது முடிந்த கையோடு இதோ தீபாவளி வியாபாரம், தீபாவளி முடிந்த அடுத்த நாள் முதல் ஐப்பசி மாதம் வருகின்றது. ஐப்பசி மாதம் என்றாலே மாயவரத்துக்கு கொண்டாட்டம் தான். ஐப்பசி கடைசியில் தேர், கடைமுழுக்கு, முடவன் முழுக்கு வரை இதே கூட்டம் தான் கடை தெருவில்.
இங்கே அண்ணா பொது தெய்வமாகிவிட்டார். ஏனனில் அவருக்கு மட்டுமே சிலை இருக்கு. அதனால் எல்லா கட்சியும் அவருக்கு தான் மாலை போட்டு போஸ் கொடுத்து போட்டோ எடுத்து கொள்கின்றனர். போகிற போக்கை பார்த்தா பி.ஜெ.பி யும் மாலை போடும் போலிருக்கு. காந்தி சிலை ஒன்று இருக்கு சுந்தரம் தியேட்டர் அருகே. ஆனால் காந்தியை அடிமைப்பெண் எம் ஜி ஆர் மாதிரி கூண்டுக்குள்ளேயே வைத்திருக்கின்றனர். முனிசிபாலிட்டியில் இருக்கும் காந்தி சிலையை யாரோ ஒரு குல்லா போட்ட புண்ணியவான் 4 நாள் முன்னே கழுவிகிட்டு இருந்தார். அதை பார்த்த ஒரு குடிமகன் ஏன் என்று கேட்டு அவசர அவசரமாக டாஸ்மாக் ஓடினார் சரக்கு ஸ்டாக் பண்ணி வைக்க. வாழ்க காந்தி. வளர்க மைனர் குஞ்சுமணி ஸாரி டாக்டர் அன்புமணி!.
மயிலாடுதுறை பெரிய ராஜன்தோட்டம் மணிசங்கர் அய்யர் புண்ணியத்தால் "ஸ்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா"(மத்திய அரசு)வுக்கு தாரை வார்க்கப்பட்டு பிரம்மாண்டமாய் ஆகிவிட்டது. அனைத்து விளையாட்டுக்கும் பயிற்சி கொடுக்கப்படுகின்றது. ஆனா மாயவரத்தான் எவனும் உள்ளே நுழைய முடியாது. நாயை விட்டு கடிக்க சொல்லுவாங்க. காலை வாக்கிங் மாத்திரம் போக அனுமதி உண்டு.
திருச்சி, தஞ்சை, குடந்தை, மாயவரம் அகல ரயில் பாதை முடிந்து ரயில் ஓடி கொண்டு இருக்கின்றது. அது போல் மாயவரம்- கடலூர் அகல ரயில் பாதையில் மாயவரம்- சீர்காழி ஓக்கே. அது போல கடலூர் - சிதம்பரம் ஓக்கே. நடுவே கொள்ளிடம் பாலம் வேலை முடிந்தால் சுபம். ஹாட்ஸ் ஆஃப் டூ முன்னாள் மத்திய அமைச்சர் மூர்த்தி மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் வேலு அவர்களுக்கு.
90 சத ஓட்டு வீடுகள் கான்கிரீட் வீடுகளாகி விட்டன. இன்னும் பத்து வருஷத்தில் ஓட்டு வீடுகளை எதாவது பழைய கல்யாண கேசட்டில் பார்த்தால் தான் உண்டு என்கிற அளவு மயிலாடுதுறையில் கட்டுமானப்பணி அதிகம் நடை பெறுகின்றது. கொத்தனார்களும், ஆசாரிகளும் குடியும் குடித்தனுமாக அமோகமாக இருக்கின்றனர். எப்போதும் போல A.R.C குரூப்ஸ், நாராயணன் ஜூவல்லரி எல்லாம் நிரம்பி வழிகின்றன. பவும் 15000 ஆனா எங்களுக்கு என்ன என்பது போல அடித்து பிடித்து நகை வாங்குகின்றனர்.
விலைவாசி கொடிகட்டி பறக்குது. ஒரு கிலோ ஒட்டு மாங்காய் 60 ரூபாய். ஆட்டோ லோக்கல் 20 ரூபாயாக இருந்தது இப்போது 40 ரூபாய் உள்ளூர் வாசிகளுக்கு. வெளியூர்வாசி என்றால் தனி சார்ஜ். அப்போது வாயில் என்ன வருகின்றதோ அதான் ரேட்.நான் போய் இறங்கியதும் ஆட்டோ பிடித்தேன். 80 ரூபாய் என்றான். நான் உள்ளூர் தான் என அவன் மேலேயே சத்தியம் செய்ய வேண்டியதாகி விட்டது.
கொடுமை என்னான்னா போஸ்ட் ஆபீஸில் இருந்து கூறை நாடு வரை ரோட்டின் நடுவே பிரித்து நடுவே வரிசையாக சோடியம் வேப்பர் லேம்ப்க்கு கம்பம் நட்டிருக்காங்க. நகரை அழகு படுத்துராங்களாமாம். இனி அந்த ரோட்டில் ஒரு மாட்டு வண்டி போனா எல்லா பஸ்ஸும் லாரியும் அதற்க்கு பின்னாலேதான் போக வேண்டும். கும்பகோணம், தஞ்சை எல்லா ஊர்லயும் அழகா பை பாஸ் ரோடு போட்டாச்சு. ஆனா அதற்கான முயற்சி கூட இங்கே இல்லை.
செருப்பு கடைகளில் ஏ.சி போட்டிருக்காங்க. நல்ல குளுமையா இருக்கு. அதை விட்டு வெளியே வந்தா கடை வாசலில் பஜ்ஜி சுட்டு விற்க்கிறாங்க. காய் கறி ரோட்டில் போட்டு விற்கிறாங்க. மண் புழுதி பறக்க மக்கள் சாப்பிடுறாங்க. ஹூம் காலில் போடும் செறுப்புக்கு ஏ சி கேக்குது. உணவு பொருட்கள் புழுதியில் இருக்கு. Ohhhhh My God!!!
//ஆஹா இரவில் பூக்கும். என் வீடு முழுக்க இரவு 12 மணி வாக்கில் அந்த வாசனை புகுந்து அப்படியே நம்மை ரம்மியமாக ஆக்குகின்றது.///
ReplyDeleteமகிழம்பூ தானே அண்ணே?
வெள்ளை கலர்ல ஆரஞ்சு காம்பு!
//மாயவரத்தில் கிட்ட தட்ட எல்லோரும் அடை மொழி பட்டம் தனக்கு தானே கொடுத்து தானே போஸ்ட்டர் அடித்து ஒட்டியிருக்கானுங்க. (என்ன கொடுமை சரவணா) "எங்கள் தங்க ராஜா" " உங்க வீட்டு செல்லம்" போன்ற பட்டங்கள் சில உதாரணம். உடனே அந்த பட்டத்தை காரில் / ஜீப்பில் பின் பக்கம், முன் பக்கம், வலப்பக்கம், இடப்பக்கம் எல்லாம் ஒட்டி சும்மாவே சுத்தி சுத்தி வரானுங்க///
ReplyDeleteஆமாம்! ஆமாம்! அடைமொழி வைச்சவன் எவனும் அழிஞ்சு போனதில்ல ரேஞ்சுக்க்கு திரியறானுங்க :(
//ஒரு இரு சக்கர மோட்டார் மெக்கானிக் ஏற்கனவே "அன்னை" என்னும் பட்ட பெயர் இருந்தும் அடிஷனலாக தேவைப்பட "டாக்டர்" பட்டம் போட்டு கோட் ஷூட் போட்டு போட்டோ எடுத்து”வருக வருக” போஸ்ட்டர் அடிச்சு இருக்கான்///
ReplyDeleteஅவுருதானே! மோட்டார் சைக்கிள் ரிப்பேர் விட்டுட்டு டாக்டராக்கிட்டாருன்னு ப்ரெண்ட் சொன்னாங்க :))
/ஐப்பசி மாதம் என்றாலே மாயவரத்துக்கு கொண்டாட்டம் தான். ஐப்பசி கடைசியில் தேர், கடைமுழுக்கு, முடவன் முழுக்கு வரை இதே கூட்டம் தான் கடை தெருவில்.///
ReplyDeleteஆஹா கேக்கவே ச்சும்மா ஜிலுஜிலுன்னு இருக்கே :))))
//கொடுமை என்னான்னா போஸ்ட் ஆபீஸில் இருந்து கூறை நாடு வரை ரோட்டின் நடுவே பிரித்து நடுவே வரிசையாக சோடியம் வேப்பர் லேம்ப்க்கு கம்பம் நட்டிருக்காங்க//
ReplyDeleteஅதானே பார்த்தேன் இந்த மேட்டர் டச் பண்ணி ஆகணுமே!
அழகுபடுத்துறேன்னு அரை ரோடு ஆக்கி அசிங்கப்படுத்திட்டாங்க :((
வந்தாச்சா..? உடம்பை நல்லபடியா பார்த்துக்குங்க..!
ReplyDeleteமெதுவா எழுதலாம். ஆடலாம்..?
எப்போ மெட்ராஸ்..? ஒரு நாள் வந்துட்டுப் போங்க..
நட்ராஜுக்கு என் முத்தங்கள்..
அந்தக் கட்சிக் கரை வேஷ்டியை இப்பவாவது கழட்டி எறிங்கண்ணே.. துவைப்பீங்களா? மாட்டீங்களா? வருஷக்கணக்கா அதேதானா..? உவ்வே..!
அபி அப்பா,
ReplyDeleteநலமுடன் இருங்கள்.
//பெட்டியில் போவதை விட பெட்டியோடு போவதே உசிதம்//
எத்தினி பெட்டினு சொல்லலையே?
பெட்டியா, மஞ்சப்பையா? பெட்டிக்குள்ளே மஞ்சப்பையா?
//காவிரி கரை புரண்டு ஓடுது.//
ஆஹா... பார்க்கணுமே?
//கொஞ்சம் விட்டா மீசை வரைந்து கொண்டு பெண் பார்க்க சொல்லுவான் //
அது அப்படித்தான் உங்களைப் போலவே!
குட்டி நடராஜ் லீலைகள் சுவை.
ReplyDeleteக்யூட்டாக இருக்கிறான்.
// மாயவரத்தான் எவனும் உள்ளே நுழைய முடியாது. //
நம்ம பதிவர் மாயவரத்தானா?
//செருப்பு கடைகளில் ஏ.சி போட்டிருக்காங்க. நல்ல குளுமையா இருக்கு. அதை விட்டு வெளியே வந்தா கடை வாசலில் பஜ்ஜி சுட்டு விற்க்கிறாங்க. காய் கறி ரோட்டில் போட்டு விற்கிறாங்க. மண் புழுதி பறக்க மக்கள் சாப்பிடுறாங்க//
உண்மைதான். காலுக்கு செருப்பு விலை 400 ருபாய்.
கத்திரிக்காய் அரை கிலோ வாங்க
ஒரு ரூபாய் குறைக்க இரண்டு மணி நேரம்
பேரம் பேசுவாய்ங்க.
அபி அப்பா, நல் வரவு.
ReplyDeleteஎன்ன உடம்புன்னு சொல்லாமலியே சரியில்ல சரியில்லன்னு கடத்துறீங்களே.
பூர்ண குணமானபிறகு திரும்பவும்.
மற்றபடி உங்க எழுத்தை மீடும் படிக வைத்தத்ற்கு நன்றி.
நட்டுவுக்கும் ,அபி பாப்பா அபிஅம்மாவுக்கும் என் அன்பு.
பத்திரமா இருங்க
கலக்கல் போஸ்ட் அபி அப்பா...
ReplyDeleteஉங்களோடு ஊர் சுற்றிமாதிரி பீலிங். படிச்சு முடிச்சுடு சட்டையில் தூசி தட்டினேன்.
நன்றாக இருக்கிறது நட்டு அப்டேட்ஸ்:)!
ReplyDeleteTake Care!
உடம்ப பாத்துக்குங்க அபி அப்பா!
ReplyDeleteநம்ம காலு கேக்காது கச்சி கூட்டம் அப்படி இப்படின்னு போவச்சொல்லும்!
அண்ணா நூறு எப்படிப் போவுது!?
தளபதியை சந்திச்சீங்களா!?
நிறைய எழுதுங்க!
Ennadhu cauvery la thanni odutha... Pathu romba naal aachu anna... Diwali ku vara varikum oduma?
ReplyDeleteமாயவரம் போயாச்சா...
ReplyDeleteவெரி குட்.. வெரி குட்...
நல்லா ரெஸ்ட் எடுத்து உடம்பை கவனமாகப் பார்த்துக் கொள்ளவும்.
மாயவரம் பல வருஷங்களா அப்படித்தான் இருக்கு. ஓடு வீடுகள் ஒட்டு போட்ட வீடுகளாக மாறியதைத் தவிர..
காளியாக்குடி போனீங்களா?
ஆகா...ஊர்ல தான் இருக்கீங்களா! ;))
ReplyDeleteநல்லது..நல்லது ;)
நல்லா ரெடியாகிட்டு வாங்க ;)
பதிவு மிகவும் அருமை, இது மாயவரத்துக்கு மட்டும் அல்ல எல்லா தமிழக நகராட்சிக்கும் பெருந்தும். அனைதும் முன்னேற அடிப்படை வசதிகள் மட்டும் வளரவில்லை(அவங்கதான் என்ன பண்ணுவாங்க பாவம், கஸ்டப்பட்டு காண்டிராக்ட் வாங்கி, போட்ட ரோடையே திரும்பித் திரும்பி போட்டாகனும்.
ReplyDelete//வந்தது முதல் இப்போது வரை ஹவுஸ் அரஸ்ட் உடல் நிலை காரணமாக//
ReplyDeleteஹவுஸ் அரெஸ்ட் வச்சதுக்கப்புறமும் இப்படி ஊர் சுத்தியிருக்கீங்க? அதுவும் செருப்புக்கடைக்கு ஏ.ஸி., பஜ்ஜிக்கடைக்குத் தூசின்னு ஆராய்ச்சி பண்ற அளவுக்கு!!
Get well soon anna....
ReplyDeleteஅபி அப்பா
ReplyDeleteசரளமாண உக்கள் எழுத்தின் நடை அழகு, ஏதோ மயவரம் மார்க்கெட்டில் ஒரு 3மணி நேரம் சுத்தீட்டு வந்த மதிரி ஒரு உணர்வைத் தந்தது.
திரும்ப துபாய் எப்போ?
நாங்கழும் ஊருக்கு வர்ரோம்ல...
தீபாவளி வாழ்த்துக்கள்.... inadvance.
ஊருக்கு வந்தது ரொம்ப நல்லது.. நல்லா ஓய்வு எடுத்துக்கோங்க
ReplyDelete//ஆனால் கோவில், காவிரி அனுமதி உண்டு//
ReplyDeleteஇந்த அனுமதிய வச்சிகிட்டு ஊர் சுத்தரீங்களா
விரைவில் முழு உடல் நலம் பெற வாழ்த்துக்கள்.
ReplyDeleteபதிவு வழக்கம் போல் கலக்கல்
தொல்ஸ், அந்த ஏ.சி செருப்புக் கடை ஓனர் இன்னும் "யாங்கள் அதிக முதலீட்டில் குறஞ்ச லாபம் வெச்சி விக்கிறோம், விலைய குறைக்க வேண்டா"-ன்னுதான் சொல்லுறாரா?
ReplyDelete"அன்னை" டாக்டர் ஆயிட்டாரா... மேட்டர மிஸ் பண்ணிட்டனே... :(
abi appa,
ReplyDeletepudhusa pattamangala theru la samosa, jilebi, pani poori, bhel poori, innum rajasthani sweets pottu vikkarangale paarthingalaa???
//ஆனா மாயவரத்தான் எவனும் உள்ளே நுழைய முடியாது. //
ReplyDeleteஏன் இந்த கொல வெறி?
அது சரி, உங்க நண்பர் ராதா யாரு? நம்ம அரிசிக்கடை ராதா அண்ணாச்சியா?
//நம்ம காலு கேக்காது கச்சி கூட்டம் அப்படி இப்படின்னு போவச்சொல்லும்!
ReplyDeleteஅண்ணா நூறு எப்படிப் போவுது!?
தளபதியை சந்திச்சீங்களா!?//
இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே ஒடம்ப ரண களம் பண்ணிடுவாங்கப்பா
//மாயவரத்தில் இந்த ஒன்பது மாதத்தில் பெரிய மாற்றம் எதும் இல்லை பஸ்ட்டாண்டு உட்பட. அது போல வழக்கம் போல பஸ்டாண்டு, ரயில்வே ஸ்டேஷன், பெரிய ஆஸ்பத்திரி போன்ற மக்கள் கூடும் இடங்களில் தலா இரண்டு பைத்தியங்கள் அழுக்கு கிழிந்த உடையுடன்(சில சமயம் அதுவும் இல்லாமல்) ஜடா முடியுடன் திரிகின்றனர்//
ReplyDeleteவணக்கம் மண்ணின் மைந்தரே....நான் இப்போதுதான் உங்கள் பக்கம் வருகிறேன். எனக்கென்னவோ பஸ்டாண்டை கொஞ்சம் மேம்படுத்துன மாதிரி தெரியுது. நான் போனமாதம் ஊருக்கு போனப்ப பார்த்தேன். நான் செம்பொன்னார்கோயில்.
ஆனாலும் தாங்கள் சொன்னது மாதிரி இன்னும் சிலஇடங்களில் பைத்தியங்கள் இருக்கின்றன.
அப்பறம் பஸ்டாண்ட் அண்ணா சிலையை தவிர வேறு எந்த சிலையையும் யாரும் கவனிப்பதில்லை. அந்த சிலையை சுற்றிலும் சுத்தம்செய்யப்படாமல் தான் உள்ளது.
உங்களின் எழுத்து நடை மிக அருமை...
அன்புடன்,
க.பாலாஜி
(balasee.blogspot.com)
மிக அருமை. இந்த முறை ராதா வீட்டிற்க்கு சென்றிருந்தேன். அங்கு ராதாவை பார்த்தேன் .
ReplyDelete//28 காலை மிகவும் சரியில்லாமல் போகவே பெட்டியில் போவதை விட பெட்டியோடு போவதே உசிதம் என ஸ்வாமி மனசாட்சியானந்தா மண்டி போட்டு கேட்டுகிட்டதுக்கு இணங்க//
ReplyDeleteஇப்போத் தான் இந்தப் பதிவைப் பார்க்கிறேன். ரொம்பவே வருத்தமா இருக்கு, நீங்க உடம்பை இப்படிக் கெடுத்துட்டு இருக்கிறதை நினைச்சா. கவனமாக இருக்கவும். அபி, நட்ராஜ், கிருஷ்ணா அனைவரையும் விசாரித்ததாய்ச் சொல்லவும்.
உடம்பைப்பார்த்துக்கொள்ளுங்கள் அபி அப்பா. சரக்கொன்றை மரம் கோவையில் எங்கள் வீட்டில் உள்ளது. சரம் சரமாக மஞ்சள் நிறத்தில் பூக்கள் தொங்குவது பார்க்க அழகாக இருக்கும்.
ReplyDeleteஅந்த பூவின் பெயர் பவழமல்லி.
ReplyDeleteஎன்ன தோழர் ஊருக்கு வந்துட்டீங்களா?
ReplyDeleteநாம்ம தலைவருக்கு அண்ணா விருது கொடுத்தப்பத்தி பதிவு எழுதலையே நீங்க? ஊர்ல எவன் எவனோ தனக்குதானே பட்டம் குடுக்குறதப் போயி தப்பா எழுதியிருக்கீங்க? அப்ப நீங்க நம்ம கட்சியில இல்லையா?
அபி அப்பா!
ReplyDeleteஉங்களை சதங்காவின் “சிறப்புத் தீபாவளி 2009” தொடர் பதிவுக்கு அழைத்திருக்கிறேன். மெல்ல வந்து பதிஞ்சு போங்கோ!!