பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

November 29, 2009

நாகை சிவா கல்யாண வைபோகமே!!!!!

நாகை சிவா கல்யாணத்துக்கு குடும்பத்தோட போகனும்னு ஏகப்பட்ட பிளான் எல்லாம் செஞ்சு 28ம் தேதி மதியம் வரை வீட்டு வேலைகள் (கொஞ்சம் கொத்தனார் வேலை) இழுத்து கொண்டே வந்ததால் அபிஅம்மாவும் நட்டுவும் வராமல் நானும் அபியும் மட்டும் செல்வதென முடிவு செய்யப்பட்டு அப்புடி இப்புடின்னு மாயவரத்தை விட்டு கிளம்பவே மாலை ஆறு ஆயிடுச்சு. ஆனால் மாநக்கல் சிபி, திருமதி சிபி, கவிதா, அணில் குட்டி எல்லாரும் நல்ல பிள்ளையாக 28ம் தேதி காலையிலேயே நாகை வந்துவிட்டாங்க.
நான் காரைக்கால் நெருங்கிய போதே நல்ல மழை ஆரம்பித்து விட்டது. அப்போது அபிஅம்மாவிடம் இருந்து போன் வந்தது. மழைன்னு சொன்னேன். "பின்னே இருக்காதா அரிசி மண்டி ஓனர் பையன் கல்யாணம். ஸ்கூல்க்கு லீவ் போட்டுட்டு மூட்டை மூட்டையா அரிசி தின்னுருப்பாரு. பாருங்க நாளை வரை கொட்டி தீர்க்க போவுது"ன்னு வாழ்த்து சொன்னாங்க. அதுக்கு நான் "ச்சே ச்சே "புலி" பசிச்சாலும் அரிசி திங்காது"ன்னு பழமொழி சொல்லிட்டு ஒரு வழியா மண்டபத்துக்கு போய்சேரும் போது இரவு 9 ஆச்சு.
மண்டபத்திலே நுழைஞ்ச உடனே எனக்கு பக்குன்னு ஆச்சு. பொதுவா தமிழ் சினிமாவிலே தான் வெளிநாட்டுக்கு போனா வரும் போது ஒரு வெள்ளைகார அம்மணியை கண்ணாலம் கட்டி கூட்டிகிட்டு வருவாங்க. சிவா வேலை பார்ப்பது சூடான். எனக்கு பக்குன்னு ஆன காரணம் சிவாவை மண்டபத்திலே சுத்தி சுத்தி வந்தது ஒரு சூடானி பெண். போட்டோவை பாருங்க மக்கா.
உடனே இந்த ரகசியத்தை சிபிகிட்ட சொல்ல போன் செஞ்சு விஷயத்தை ஒரு அரை மணி நேரம் சுருக்கமா சொன்னேன். (அப்போ சிபி & குரூப் கர்ம சிரத்தையா நவகிரகம் சுத்த போயிருந்தாங்க) அபிதான் அந்த அம்மணியை சுத்தி சுத்தி வந்து போட்டோ எடுத்துகிட்டு இருந்தா. ஏன்னா அவங்க ஹேர் ஸ்டைல் அத்தனை ஒரு நேர்த்தி.

பின்ன தான் மேடையிலே பார்த்தா சிவா கருப்பு கோட் சூட் போட்டுகிட்டு பக்கத்திலே பார்த்தா பச்சைகிளி மாதிரி மணப்பெண். அப்படின்னா அந்த சூடானி பொண்ணு இல்லியா???அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...

பின்னே நானும் அபியும் மேடைக்கு ஏறினோம் வாழ்த்து சொல்ல. ஒரே கைத்தட்டல். அமைதி அமைதின்னு எல்லாரையும் அமைதி படுத்திட்டு மாப்பிள்ளை கிட்ட போனா சிவா மெதுவா என் காதிலே "தொல்ஸ் இந்த கைத்தட்டல் ரஜினி பாட்டு பாடின மியூசிக் ட்ரூப்புக்கு"ன்னு சொல்ல சரி அரசியல்ல இதல்லாம் சகஜமப்பான்னு வந்த வேலையை கவனிக்க ஆரம்பிச்சேன்.

(இந்த படத்தில் இருப்பது 29 காலை . இது வேற மெனு)
சூப்பர் மெனு. கல்கத்தா ரசகுல்லா, கேரட் அல்வா, மினி இட்லி ஒரு பவுல்ல வித் சூப்பர் சாம்பார், பரோட்டா வித் சென்னா குருமா, இடியாப்பம் வித் கடப்பா, கொத்தமல்லி ஊத்தப்பம் அதுக்கு வெங்காய சட்னி(காவிகலர்) தேங்காய் சட்னி(வெள்ளை கலர்), பொதினா சட்னி(பச்சை கலர்) இப்படி காங்கிரஸ் கலராக சட்னிகள், பகாலா பாத்(தயிர் சாதம் தாங்க) வித் கடாரங்காய் ஊறுகாய் மற்றும் மோர் மிளகாய், அக்குவா ஃபீனா வாட்டர் பாட்டில், அருண் ஐஸ்கிரீம். (உங்களுக்கே சாப்பிட்ட மாதிரி இருக்குதா) நல்லா ஒரு வெட்டு வெட்டினோம்.

திரும்ப 10 மணிக்கு தங்குவதுக்கு அரேன்ஞ் செய்யப்பட்ட ஹோட்டல் வந்து தங்கினோம். பேசி கிட்டே இருக்கும் போது மாப்பிள்ளையும் வந்து விட்டார். அவரை திருமதி சிபி "என்ன பொண்ணூ கூட கடலை போடாம இங்க வந்துடீங்கன்னு கலாய்க்க (குடும்பமே கலாய்த்தல் குடும்பமா இருக்குப்பா) சிவா முகமே கோவைப்பழமாக சிவந்தது.( குடுத்த காசுக்கு மேலயே கூவுறனோ)

பின்னே நானும் சிபியும் அமரிக்க, பாகிஸ்தான், சீனா(சீனாசார் இல்லை ஒரிஜினல் அக்மார்க் சீனா) பிரச்சனை எல்லாம் பேசி முடிக்க இரவு 2 ஆச்சு. காலை எழுந்து கல்யாணத்துக்கு போனோம். மாப்பிள்ளையை அய்யர் செமயா ட்ரில் வாங்கி கொண்டிருக்க நாங்க வந்த வேலையை ஆரம்பித்தோம். இப்பவும் மெனுவை சொல்லி பாவம் உங்க ஆவலை தூண்ட விருப்பம் இல்லை. சொன்னா எங்களுக்கு வயித்தை வலிக்கும்.

அப்போதும் அந்த சூடான் பொண்ணு தான் அட்ராக்ட் செஞ்சு கிட்டு இருந்துச்சு. பின்னே தான் தெரிஞ்சுது. ஐநா செயலர்(முன்னால்) கோபிஅன்னானின் சூடான் நாட்டு செயலராம் அந்த பெண். சிவா மீது கொள்ளை பிரியமாம். தவிர கீதாம்மா ஏற்கனவே அந்த பெண்ணின் போட்டோ போட்டு பதிவு கூட போட்டிருந்தாங்கலாம். ஓட்டை வாயிடா முதலின்னு என்னை நானே திட்டிகிட்டு சிவா- உமா தம்பதியினர் (பெயர் பொருத்தம் பாருங்க சூப்பர்)சந்தோஷமாக எல்லா செல்வமும் பெற்று வாழ வாழ்த்துகிறேன். உங்க வாழ்த்தையும் சொல்லிடுங்க.
நடுவே கவிதா அவங்க அயித்தான் மும்பைல இருந்து சென்னை வருவதால் சென்னை சென்றுவிட சிபியும் திருமதி சிபியும் மாயவரம் நம்ம வீட்டுக்கு வந்து விட்டு போனாங்க.
ஒரு மன நிறைவான ட்ரிப் இது.

17 comments:

  1. தம்பதியினருக்கு வாழ்த்துகள் :-)

    கலகலப்பான பதிவு அபிஅப்பா :)

    ReplyDelete
  2. ஆதவா இது என்ன கலக்கல். இனி சிபி பதிவு வரும் கலக்கல் கலாய்த்தல் போட்டோவோட:-)))

    ReplyDelete
  3. புலிக்கும் புலியிடம் சிக்கிய பூனைக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்..

    ReplyDelete
  4. அநேகமாய் அதிகம் தப்பே இல்லாமல் நீங்க எழுதின முதல் பதிவே இதான்னு நினைக்கிறேன் அபி அப்பா. படம் திறக்கலை எனக்கு. போகாதேனு Macfee side advisor ஒரே கூச்சல் போடுது. மெயிலில் பார்த்துட்டேன். அபி எழுதிக் கொடுத்தாளோ? வாழ்த்துகள் மீண்டும் புலிக்கும், பெண்புலிக்கும். கல்யாணத்தை நேரில் பார்த்தாப்பல இருந்தது. நன்றி. நாங்க நினைச்சுட்டே இருந்தோம்.

    ReplyDelete
  5. யப்பாடி, ஒரு கமெண்ட் கொடுக்க எத்தனை கேள்வி கேட்குது? முதல்லே இதை எடுங்க! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    ReplyDelete
  6. அருமையான பகிர்வு. தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. தம்பதியினருக்கு வாழ்த்துகள் !!

    பதிவு கலக்கல்!!

    ReplyDelete
  8. தம்பதியருக்கு வாழ்த்துகள்.

    எப்போதும் போல் கலகலப்பான இடுகை.

    ReplyDelete
  9. அட கீதாம்மா! வரலாறு தெரியாமல் பேச வேண்டாம்! இதை நன்மையாக கண்டிக்கிறேன். சாரி வன்மையாக கண்டிக்கிறேன். என் நட்சத்திர பதிவிகளில் சில பதிவுகள் நீங்க, சீமாச்சு அண்ணா, கண்மனி டீச்சர், நாகை சிவா ஆகியோர் தப்பு திருத்தி தந்தது நியாபகம் இல்லியா?? அதிலே எதுனா தப்பு இருந்துச்சா???

    (ஸ் அப்பாடா தப்பிச்சேன்)

    ReplyDelete
  10. நாகை சிவா தம்பதியினருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்

    ReplyDelete
  11. //சரி அரசியல்ல இதல்லாம் சகஜமப்பான்னு வந்த வேலையை கவனிக்க ஆரம்பிச்சேன்.//

    ரைட்:)))!

    மணமக்களுக்கு வாழ்த்துக்கள்:)!

    ReplyDelete
  12. சிவா- உமா தம்பதியினருக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  13. புதுமாப்பிள்ளை நாகை சிவாவிற்கு எனது வாழ்த்துக்களும்....கலக்கலான பதிவு

    ReplyDelete
  14. கலகலப்பான பதிவு. சிவாவுக்கு என்னை ஞாபகம் இருக்க நியாயம் இல்லை. உமா சிவா தம்பதியர்க்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.
    சிபியாரையும் விசாரித்ததாகச் சொல்லவும். அபிம்மா சூப்பராப் படம் எடுக்கறே.

    ReplyDelete
  15. சிவா- உமா தம்பதியினருக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  16. Kalyanathu appove kudumbathula kuzhapatha undakiduvinga pola.... Btw, Udaiyar review next part eppo anna?

    ReplyDelete
  17. மணமக்கள் நீடூழி வாழ்க என்று
    வாழ்த்துகிறேன்.
    12/12/2009-ல் ஒரு மெயில் அனுப்பினேன்,
    உங்களுக்கு. பார்த்தீர்களா?

    ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))