அன்பு அண்ணன் திரு செல்வராஜ் (லண்டன்) அவர்களுக்கு!!!
நான் உங்க தம்பி அபிஅப்பா எழுதும் அன்பு கடிதம்.
உங்க கருத்து என்னவோ நல்ல கருத்து தான். ஆனா சொன்ன விதம் தான் சரியில்லையோனு தோனுது.
கரப்பான்பூச்சி விருது கொடுத்தவர் அண்ணாச்சி என்னும் ஆசீப்மீரான். அவர் அந்த விருது கொடுக்கும் போது எழுதிய பதிவை பார்த்து அப்படியே நீங்களும் எழுதிவிட்டுஅவரையே கிண்டல் செய்வதாக நினைக்கிறேன்.
இங்கே இரவு மணி 1 ஆகிவிட்டது. அதனால் கண்டிப்பாக அந்த சுட்டியை காலை அனுப்பிவிடுகிறேன்.
அப்படியே அவர் கொடுத்தால் கூட (ஏதாவது நல்ல விருதாகவே) அவர் அதற்க்கு ஏற்புடையவர்.இது பற்றி விலாவாரியாக என்னால் தனிமடலிடமுடியும் உங்களுக்கு. ஆனால் இந்த களத்தில் இல்லாத அவரை பற்றி இப்போது நான் பேச விரும்பவில்லை.
அடுத்து செந்தழல் ரவி! அவர் எப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்த விருதை அறிவித்தார் தெரியுமா? எல்லாம் அடிச்சுகிட்டு ஓடிவிடும் சூழ்நிலையில் அதை அறிவித்தார். அவருக்கு என்ன தகுதி என நீங்க கேட்பது புரிகின்றது. இதே திரட்டிகள் சேய்யாத வேலையை அவர் அமைதியாக செய்து கொண்டிருக்கின்றார்.
அவரால் இந்தியாவிலும் வெளிநாட்டிலும் கனினி துறையில் வேலை பெற்றவர்கள் அதிகம். அப்படி அவரால் வேலை பெற்றவர்கள் கூட அடித்து கொண்டு நிற்பது யாரால் அமைதியாக பார்த்து கொண்டிருக்க முடியும்??துனைவேந்தர் படிக்க வைக்கிறார். இவர் அவங்களுக்கு வேலை வாங்கி தரார் . ஆனாதிரட்டியின் வேலை அது அல்ல. ஆக திரட்டி விருது தருவதை விட இவரின் விருதை வாங்கியவர்கள் பெருமை படவே வாய்ப்பு அதிகம்.
"பசங்க"ன்னு ஒரு படம். பசங்க அடிச்சுப்பாங்க.ஒரு சின்ன பொண்ணு சொல்லி பார்ப்பா. வாத்தியார் கிட்ட சொல்லி பார்ப்பா. பின்னவும் சண்டை நிற்காது. ஓடி போய் ஜனகனமன போடுவா! சண்டை நிற்கும்.
ரவி செய்ததுக்கும் இதுக்கும் எந்தவித வித்யாசமும் இல்லை. இப்போ என்ன ஒரு சந்தோஷம் பாருங்க எல்லார் முகத்திலும்.தவிர இந்த வலைபதிவு ஆரம்ப கட்டத்தில் அவரின் உழைப்பு ஏழை பசங்க மேல்படிப்புக்கு அதனால் அவர் இழந்தது எத்தனை எல்லாம் சொல்லி இருப்பார் ஒரு பதிவிலே. அந்த சுட்டியும் தரேன். இந்த சேவையை எந்த திரட்டியும் செய்ததா? இவர் இதை செய்து கொண்டிருக்கிறார் இலவச சேவையாக. அதற்காக ஒரு சின்ன இடத்தை முகப்பிலே ஒதுக்கி கொடுத்த தமிழ்மணத்துக்கு நன்றிகள் இந்த இடத்திலே.
இதோ யாரும் செய்ய முடியாத அளவு ஏற்பாடுகளை கோவியார் என அன்பாக அழைக்கப்படும் கோவி. கண்ணன் மணற்கேணி மூலமாக செய்து வருகின்றார். உழைப்பு அத்தனை. நீங்கள் குறிப்பிட்ட திரட்டிகள் சென்னை - சிங்கப்பூர் அவ்வளவு செலவு செய்தனவா? இதோ இந்த சுட்டியில் பார்த்தால் சிங்கை பதிவர்களின் முயற்சி தெரியும்.
இதே பைத்தியகாரன் என்று அழைக்ப்படும் மூத்த பதிவர் சிவராமன் 20 பேருக்கு தலா 1500 வீதம் அப்படின்னு பிரமாதபடுத்தி அதற்கு வந்த கதைகள் 250. அதில் புது பதிவர்கள் கதை மட்டுமே 150க்கு மேல் இருக்கு. இது புதிய பதிவர்களை ஊக்குவிகும் முயற்சிதேனே. நீங்க சொல்லும் திரட்டிகள் 1500 கொடுத்து ஊக்குவித்தது உண்டா?
பாலபாரதி, லக்கி , பொன்ஸ் போன்றவர்கள் வலைப்பதிவர் பட்டரை நடத்தி அதனால் தான் இத்தனை புது பதிவரும் வந்ததே.இதே பாலபாரதி ஓசை செல்லா போன்றவர்கள் தங்கள் கைகாசை செலவு செய்து தானே அங்கே இங்கே ஸ்பான்சர் கொடுங்க அய்யா நாங்க பட்டரை நடத்தி புது பதிவர்களை வலைக்கு கொண்டு வர போகிறோம் என கோவை பட்டரை முடித்தார்கள். இதே சென்னை பதிவர் பட்டரை நடத்த இடம், அத்தனை கம்பியூட்டர் அதாவது இவங்க எடுக்கும் பாடத்தை புதியவர்கள் தனி தனியா கவனிக்க வேண்டி எத்தனை பேரிடம் லேப்டாப் கெஞ்சி , கம்பியூட்டர் கெஞ்சி 2 மாதம் அதை நடத்திய அனைவருக்கும் தூக்கம் போனது.
வரும் புதியவர்களுக்கு FLASH பாடம் எடுக்க சொந்த பணத்தில் ஷார்ஜாவில்ல் இருந்து ஓடிய பினாத்தலார் என்னும் சுரேஷ் செல்லவில்லையா? கோவையிலிருந்து தனது தொழில்நுட்ப உபகரனங்களோடு ஓடி வந்து உலகம் முழுக்கும் இருக்கும் எங்களுகு சொல்ல ஓடி வரவில்லையா?
நாமக்கல் சிபி போன்றவர்கள் வ.வா.ச என்ற அமைப்பின் மூலமாக எத்தனையோ போட்டிகள் வைத்து ஏன் நான் கூட வாங்கி இருக்கிறேன் வ.வா.ச பரிசை. அவர் கொடுத்து அனுப்பி ராம்(இப்போது சிங்கை) கொண்டு வந்து 500 மதிப்புள்ள புத்தகம் கொடுத்தார்கள்(22.07.2007)
ஒரு 7 பதிவர் சேர்ந்து நடத்தும் அந்த போட்டிகே 500 மதிப்புள்ள புத்தகம். ஆனால் திரட்டிகள் கொடுப்பதோ அதே 500.
யார் யாரை விரட்ட நினைப்பது. நினைத்து பார்க்கவும்! இந்த பதிவு யார் மனதையும் புண்படுத்த அல்ல. குறிப்பாக உங்க மனசையும். இது எனது 250 வது பதிவு இந்த என் மெயின் பிளாக்கில். அதனால் உங்களிடமிருந்தே முதல் வாழ்த்தை எதிர்பார்க்கும் இளைய பதிவர்.
அன்பு தம்பி
அபிஅப்பா





