பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

February 13, 2010

மயிலாடுதுறையும் சமீபத்திய நானும்!!!



எங்க ஊரின் சமீபத்திய ஃபீவர் ஷட்டில்கார்க் தான். பெரிய ராஜன் தோட்டத்தில் சுதந்திரமாக கிரிக்கெட் விளையாடிய அத்தனை பேருக்கும் கல்தாவை ஜிகினா பேப்பரில் சுத்தி மணிசங்கர் கொடுத்து விட்டு மாயமாகி விட்டார். ஊரின் ஒட்டு மொத்த தொழிலதிபர் கூட்டமும் ஷட்டில் கார்க் தான் கதியேன்னு கிடக்குது. பகல் பொழுதுகளில் இரண்டு லட்சம் மூணு லட்சம் பணத்தை தினதந்தி பேப்பரில் சுத்தி மயிலாடுதுறையின் ரங்கநாதன் தெரு என சொல்லப்படும் வண்டிகாரதெருவில் வர்த்தகம் செய்யும் அத்தனை பேரும் மாலை பொழுதுகளில்( மாலை என்பதே இரவு ஒன்பது மணிக்கு மேல் தான்) மற்றும் விடியல்காலை பொழுதுகளில் தவிர ஞாயிற்று கிழமைகளில் இனி ஒரு ஞாயிறு நமக்கு வரேவே வராது என்கிற மாதிரியான அவசரகதியில் விளையாடுகின்றனர்.

குறிப்பாக நகைகடை முதலாளிகளுக்கு கடைக்கு குடோன் இருப்பதை போல கட்டாயம் ஒரு ஷட்டில் கிரவுண்ட் இருந்தால் தான் நகைக்கடை வியாபாரிகள் சங்கத்தில் சேர்த்துப்பாங்க போலிருக்கு. மைதானம் எல்லாம் மிகத்தரமானதாக இருக்கின்றது. யூனியன் கிளப் மைதானம் வுட்டன் பேஸ் எல்லாம் போட்டு எபவ் எயிட்டி தாத்தாக்கள் கிரவுண்ட்க்கும் பந்துகும் நோகாமல் விளையாடுகின்றனர்.

விளையாடுவது என்னவோ அரை மணி நேரம் தான் எனினும் அதற்கான ஆயத்தங்கள் அதிக மணி நேரம் ஆகின்றது. அந்த பேட்டை வைத்து கொண்டு சல் சல்லென ஆளில்லாத விடிகாலையில் இரு சக்கர வாகனத்தில் பறந்து பறந்து பில்ட்டர் காபி குடிகின்றனர். சானியா மிர்சா அழகா சோனியா அகர்வால் அழகா என விவாதிக்கின்றனர்.(சானியா நிச்சயம் பணால் ஆனதுக்கு ஒருத்தர் 180 ml கண்ணீர் விட்டார்). ஆயிரத்தில் ஒருவனை கிழித்து மாலையா போட்டு கொள்கின்றனர். துபாயில் வெய்யில் ஜாஸ்த்தியாமே என கவலைப்படுகின்றனர். வாட்ச்மேன் தீர தீர பிளாஸ்கில் வைத்தா கடை டீ வாங்கி வருக்கிறார். இரண்டு மடக்கு டீயும் ஒரு கேம் விளையாட்டும் என்பது தான் மைதான விதியாக இருகின்றது. இதே விதி சனி இரவும், ஞாயிறும் மாறிவிடுகின்றது.

நகரின் அத்தனை பிரச்சனை பத்தியும் பேசி பேசி அலுக்காமல் திரும்பவும் பேசுகின்றனர். மயிலாடுதுறை - சென்னை ரயில் ஓடாதது பத்தி ரொம்ப கவலை படுகின்றனர். கவலை மட்டுமே படுகின்றனர். ஆனால் எல்லாருமே ECR சாலையில் மூன்று மணி நேரத்தில் ஸ்கார்பியோவில் சென்னைக்கு பறக்கும் பார்ட்டிகள். பின் ஏன் இத்தனை கவலை என கேட்டதுக்கு "எல்லாம் நம்ம மக்களுக்காகத்தான்" என சொல்லி எனக்கு டீ புறை ஏறியது தான் மிச்சம்.

தான் விளையாடும் மைதானத்திலிருந்து மற்ற மற்ற மைதானத்தில் யார் யார் இன்றைக்கு வரவில்லை என தெரிந்து கொள்ள மட்டுமே செல் போனை உபயோகப்படுத்துகின்றனர்.

மைதான உறுப்பினர்களுக்கு பிறந்த நாள், திருமண நாள் எல்லாமே மைதானத்தில் பார்ட்டி வைத்து பிறந்த நாள் வந்தவன் "நான் ஏன் பிறந்தேன்" என பாடி கொண்டே போகும் அளவு மஞ்சள் குளிக்கின்றனர்.

போஸ்ட்டர் ஃபீவர் கொஞ்சம் அதிகமாகவே இருக்கின்றது. புதிதாய் கிளினிக் திறக்கும் டாக்டருக்கு வாழ்த்து சொல்லும் பொருட்டு " வரும் நோயாளிகளை இன்முகத்துடன் வரவேற்கும்" என்பது போன்ற சூப்பர் காமடிக்கு கொஞ்சமும் பஞ்சமில்லை. எதிர் வரும் டிசம்பரில் பிறந்த நாள் காண இருக்கும் என போஸ்ட்டர் அடிக்கலாமா என பிப்ரவரியில் யோசிக்கும் தொலைநோக்கு சிந்தனைவாதிகள் இங்கே அதிகம்.

ஆனால் இது எதுக்குமே கவலைப்படாத மயிலாடுதுறை சிவாக்கள் "ராஜன் தோட்டம் மைதானம்" எங்களுக்கே சாஸ்வதம் என்பது மாதிரி அமரிக்காவில் இருந்து அவசரமாய் பத்து நாள் லீவ் எடுத்து வந்து walking ம், ரிட்டையர்டு புரபசர் தாத்தாக்கள் doging ம் போய் கொண்டு இருக்கின்றார்கள்.

12 comments:

  1. //ரிட்டையர்டு புரபசர் தாத்தாக்கள் doging ம் போய் கொண்டு இருக்கின்றார்கள். //

    ம்ம்ம் ....

    ReplyDelete
  2. அற்புதமாக சொல்லியுள்ளீர்கள். சங்கர் இந்த பதிவை பார்த்தாரா?

    ReplyDelete
  3. உங்களை இதுல எந்த கேடகிரில சேர்க்க?

    ReplyDelete
  4. "நான் ஏன் பிறந்தேன்" என பாடி கொண்டே போகும் அளவு மஞ்சள் குளிக்கின்றனர்.//

    வாரம் ஃபுல்லா வெளையாடுறதே வீக் எண்ட்ல ஃபுல் கட்டு கட்டத்தானா? :)))

    ஆனாலும் ஊர்ல இண்டோர் மைதானங்கள் பெருகிவிட்டன - ஒரு காலத்தில் ஏஆர்சிஐ மட்டும் பிரம்மிப்பாக பேசி வந்த காலம் போயே விட்டது!

    ReplyDelete
  5. இன்னும் ஊர்ல தானா!!!

    ReplyDelete
  6. //எதிர் வரும் டிசம்பரில் பிறந்த நாள் காண இருக்கும் என போஸ்ட்டர் அடிக்கலாமா என பிப்ரவரியில் யோசிக்கும் தொலைநோக்கு சிந்தனைவாதிகள் இங்கே அதிகம்// ,,,,,:) LOL

    ReplyDelete
  7. //மயிலாடுதுறை - சென்னை ரயில் ஓடாதது பத்தி ரொம்ப கவலை படுகின்றனர். கவலை மட்டுமே படுகின்றனர்//

    நம்பினால் நம்புங்கள் - நம்பாவிட்டால் விடுங்கள்!
    மார்ச் 31-ல் ரயில் ஓடும். (அட, எந்த வருஷம்னு
    கேட்றாதீக அப்பு!)

    ReplyDelete
  8. //மயிலாடுதுறை - சென்னை ரயில் ஓடாதது பத்தி ரொம்ப கவலை படுகின்றனர். கவலை மட்டுமே படுகின்றனர்.//

    ''நம்பினால் நம்புங்கள் - நம்பாவிட்டால் விடுங்கள்;
    மார்ச் 31-ல் ரயில் ஓடும். (எந்த வருஷம்னு கேட்றாதீக
    அப்பு!)

    ReplyDelete
  9. டெம்ப்ளேட் மாற்றம் நன்று:))!

    ReplyDelete
  10. "விளையாடுவது என்னவோ அரை மணி நேரம் தான்"

    செக்கன்ட் ஆகலையே.

    ஆரோக்கியத்திற்கு அத்திவாரம் போட்டாச்சு.

    ReplyDelete
  11. ஞானாம்பிகை காலேஜ் பொண்ணுங்கல்லாம் நலமா இருக்காங்களா?

    ReplyDelete
  12. ungal padhivai thodarndhu padiththu varugiren.
    vaazththukkal.

    ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))