பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

January 17, 2011

அபிஅப்பா - வினவு - அரசியல் - சீமான் - டண்டனக்கா A டணக்கனக்கா!!!

இரண்டு நாட்கள் முன்னதாக நான் இட்ட சீமான் பற்றிய இடுகைக்கு வினவு குழுமத்தில் இருந்து முதன் முறையாக ஒரு பின்னூட்டம் வந்தது. அதை உடனே வெளியிட்டுவிட்டு பொங்கல் வேலையில் கொஞ்சம் வலைப்பக்கம் வர இயலாமல் ஆகிவிட்டேன். அதற்கு உடனே பதில் சொல்லியிருந்தால் உடனே மற்றவர்களும் பார்த்து இருப்பர். ஆனால் இப்போது அங்கே போய் பதில் சொல்லி கொண்டு இருந்தால் யாருக்கும் தெரியாமலே போய்விடும் என்பதால் அதை தனிப்பதிவாக இட வேண்டி ஆகிவிட்டது. மற்றபடி சிறப்பு காரணங்கள் என எதுவும் இல்லை. இதோ அந்த பதிவையும் அதில் வினவு இட்ட பின்னூட்டத்தையும் இங்கே படித்து விடவும்.

ஒரு ஆரோக்கியமான விஷயத்தை தொடங்கி இருக்கும் வினவுக்கு என் பாராட்டுகள். (அதாவது தன் கருத்தை தன் மனதில் பட்டதை தன் வலைப்பூவைத்தவிர மற்ற இடத்திலும் வந்து சகஜமாக விவாதிப்பதை தான் சொன்னேன்) இனி உங்களுக்கான எனது விளக்கங்கள். இதை படிப்பவர்களே!இது முழுக்க முழுக்க ஒரு ஆரோக்கியமான அரசியல் அலசல் மட்டுமே. இதில் தங்களுக்கு ஒவ்வாத கருத்து இருப்பின் வெளிப்படையாக நாகரீகமாக தெரிவிக்கவும்.எனக்கு நேரம் இருப்பின் கண்டிப்பாக பதில் சொல்லுவேன்.

+++++++++++++++++++++++


\\சாமர்த்தியமான ஆய்வு,கீழிருந்து ஒரு கட்சியை கட்டுவதன் சிரமம், யதார்த்தம் குறித்த பார்வையில் அது பூத் கமிட்டிகளாக மட்டும் வெளிப்படுகிறது என்றால் ....\\

அரசியல் என்று இனிஷியல் இல்லாமல் சொன்னால் அந்த அரசியலிலே நான் ஏன் பூத்கமிட்டி, கட்சியின் உட்கட்டமைப்பு இதை பற்றி எல்லாம் சொல்ல போகிறேன்???. சீமான் பேராவூரணியில் "என்னை ஒரு நாள் முதல்வராக ஆக்குங்கள், நான் ஈழம் வாக்கி தருகின்றேன்" என்கிற பேத்தல் பேச்சு பேசியதால் தான் அப்படி பூத்கமிட்டியில் இருந்து கட்சி உட்கட்டமைப்பு முதல் பேச வேண்டி இருந்தது. இங்கு முதல்வர் என்பவர் நியமிக்கப்படும் நிலை இல்லை. தேர்தலில் நிற்க வேண்டும். அதிலே வெற்றி பெற்ற ச.ம.உ வில் பெரும்பான்மையினர் தேர்ந்தெடுக்க வேண்டும். அதை எல்லாம் சீமான் அவர்களின் விசுவாசிகளுக்கு உணர்த்தவே இதை எல்லாம் தெளிவு படுத்த வேண்டியதாக போனது எனக்கு. தவிர தமிழ்நாட்டில் எல்லாரும் தேர்ந்தெடுத்து இவரை முதல்வராக ஆக்கினால் இவர் ஈழம் வாங்கி யாருக்கு கொடுக்க போகிறார்? தமிழக மக்களிடமா? யாரிடமிருந்து வாங்குவார்? ராஜபக்ஷேவிடம் இருந்தா? எப்படி வாங்குவார்? முதல்வரான பின்னர் அவரிடம் இருக்கும் தமிழக போலீஸ் வைத்து வாங்குவாரா? என்றெல்லாம் யோசிக்காமல் பேசிய பேத்தல் எல்லாம் கூட விட்டு விடுங்கள். ஆனால் முதல்வராக வர அவர் ஆசைப்பட்டு பேசியதற்கு அவர் முதலில் "தேர்தல் அரசியலுக்கு" வரவேண்டும். வந்தால் இத்தனை விஷயம் இருக்குன்னு தான் சொல்ல வந்தேன்.


+++++++++++++++++++++++++++++++++++++++

\\இப்போது கட்சி நிகழ்வுகள் கார்ப்பரேட் ஈவன்ட் மேனேஜ்மெண் போல மாறிவிட்டன. கொடி கட்டுவது, போஸ்டர் ஒட்டுவது, ஆள் சேகரிப்பது எல்லாம் காசு கொடுத்தால் பெறும் சேவைகளாக மாறிவிட்டன.\\

ஓக்கே ஒத்துக்கொள்கின்றேன். அங்க தான் நீங்கள் நன்றாக கவனித்து பார்க்க வேண்டும். இதை கொஞ்சம் பின்னோக்கியில இருந்து வருவோம். நேத்து கூட வீட்டில் ஒரு பழைய டைரி எடுத்து படித்து கொண்டு இருந்தேன். ஒரு சின்ன வரவு செலவு கணக்கு. ஒன்றும் இல்லை. தெருவில் கழக கொடி ஏற்றும் வகையில் வரவு-செலவு தான்.

கொடி துணி (கறார் ஜவுளிக்கடை பாய் ) = இலவசம்(நன்கொடை)

கொடி கயிறு 40 முழம் = 9 ரூபாய்

கொடி தைக்க புருஷோத்தமன் டைலருக்கு = 2 ரூபாய்

தரவுகார காசிநாதனுக்கு மூங்கில் கழி = 3 ரூபாய்

சலாமத் பாய் கடைக்கு கருப்பு, சிவப்பு பேப்பர் வாங்க = 3 ரூபாய்

சணல்,( மைதா பசைக்கு ) = 1.50 ரூபாய்

கொடியில் சுற்றி வைக்க உதிரி பூ = 10 பைசா

ஆக மொத்தம் தன் ஏரியாவில் தன் கழக கொடி ஏற்ற ஒரு தொண்டன் செய்த செலவு இருபது ரூபாய் என்றாலும் அப்போது மூங்கில் கணு அடிப்பது முதல் கலர் பேப்பர் கொடி கட்ட மின்கம்பத்தில் உயிரை பணயம் வைத்தது முதல், கொடி ஏற்ற வந்த யாரோ வுக்கு கலர் வாங்கி கொடுத்தது வரை ஒரு தொண்டன் நீங்க சொன்னது போல ரத்தமும், சதையும்,உணர்வும், மின்கம்பத்தில் உயிரை பணயம் வைக்கும் வெறியும் கொண்டவனாகவே இருந்திருக்கின்றான் திமுகவில். இது 1970ம் ஆண்டு டைரி. அப்போது திமுக ஆட்சிக்கு வந்து 3 வருடம் ஆகிவிட்ட நிலை.

அந்த கால கட்டங்களில் வீட்டுக்கு வீடு ஒரு மர பென்ச் அல்லது இரட்டை பென்ச் தான் இருக்கும். யார் வீட்டிலாவது எழவு விழுந்தால் அல்லது கட்சி கூட்டம் போட்டால் மேடை போட இவை இரண்டுக்கும் மட்டுமே கிராக்கி வரும். பத்து வீட்டில் இருந்து பென்ச் சேகரிப்பர். பத்து பென்ச் போட்டு ஒரு மேடை. அதிலே சில வீடுகளில் இருந்து எடுத்து வரப்பட்ட மர நாற்காலிகள்.(எதுவுமே சீராக இருக்காது) ஒரே ஒரு ஸ்டேண்டிங் மைக். 3 கூம்பு ஸ்பீக்கர் இது போதும்.


ஆனால் இப்போதைய நிலை என்ன? நீங்க சொன்னது போல காசு கொடுத்தால் பெறும் சேவையாகிப்போனது இதல்லாம். போர்ட்டபிள் மேடை மீடியம் சைஸ் போட 5000 (அதிலே மேடைக்கு பின்பக்க டிஜிட்டல் பிளக்ஸ் பேனர், வலது இடது மேல் பக்க பிளக்ஸ் ஆர்ச் உட்பட) மைக் வகையறா ( இரண்டு மைக் செட், 20 ஸ்பீக்கர் உட்பட) அது 5000 ரூபாய், 9 அடி இரும்பு பைப்ல கொடி மொத்தம் வலது பக்கம் 50 இடது பக்கம் 50 க்கு வாடகை 2000 ரூபாய், மேலே 100 அடி தூரத்துக்கு பிலாஸ்டிக்கால் கொடிகள் 1000 ரூபாய், 200 பிலாஸ்டிக் நாற்காலிகள் 600 ரூபாய், ட்யூப்லைட் 100 க்கு 500 ரூபாய், ஆட்டோ அறிவிப்பு 2000 ரூபாய், போஸ்ட்டர் (சுமாராக) 2000 ரூபாய், வரும் பேச்சாளர்க்கு தங்கும் உண்ணும் செலவு போக கச்சேரி காசு ஐந்தாயிரம் (சுமாரான பேச்சாளர்) இப்படியாக ஒரு சுமாரான கூட்டத்துக்கு இருபத்தி ஐந்தாயிரம் முதல் முப்பதாயிரம் வரை ஆகின்றது. இதிலே இப்போது முன்பு போல கடை வசூல் என்பதும் நடக்காது. சின்ன, பெரிய நிறுவனங்கள் (அவைகள் எப்போதாவது கட்சி உதவி வேண்டி வந்திருக்கும்) அவைகள் கொடுக்கும் ஆயிரம் இரண்டாயிரம் கொண்டு செய்ய வேண்டி இருக்கு இதை எல்லாம். ஆனால் இதிலே ஒரு சின்ன விஷயம் என்னான்னா இந்த மேடை, ட்யூப்லைட், ஸ்பீக்கர், பிலாஸ்டிக் கொடி, இதல்லாம் வாடகைக்கு கொடுக்கும் ஆள் கட்சிகாரனா இருப்பான். திமுக கூட்டம்ன்னா திமுககாரனிடமும், அதிமுக என்றால் அதிமுககாரனிடம் காண்டிராக்ட் போகும். அப்படி போனால் தான் கொடி கட்டி விட்டு அதை ஆசையோடு வாஞ்சையோடு தடவிப்பார்ப்பான் அவன் என்றே அப்படி செய்வர். தவிர பிரஸ் கூட கலைஞர் அச்சகத்திலே அண்ணா அச்சகத்திலோ தான் அடிப்பர். ரேட்டும் சல்லிசா இருக்கும். கட்சிகாரன் பிழைத்தது போல இருக்கும் என்கிற கட்சி உணர்வு.


ஆக உணர்வுகள் செத்து போய்விடவில்லை. ஆனால் கால மாற்றத்துக்கு ஏற்ப நாங்கள் மாறிப்போய்விட்டோம். இன்னும் மூங்கில் மரத்திலே கொடி கட்டிகிட்டு இருக்க முடியுமா சொல்லுங்க? பனைமரத்திலே மின்சார ஒயர் இழுத்து அதிலே குண்டு பல்பு போட்ட அரசாங்கமே இப்போ கான்கிரீட் கம்பம் வைத்தும் அண்டர்கிரவுண்டு கேபிள் சிஸ்டத்துக்கும் போன பின்னே நாங்களும் கொடி ஏற்ற அந்த அளவு முன்னேறிகிட்டு தான் இருக்க வேண்டும்.


ஆனாலும் நீங்கள் சொல்வது போல பெரிய மாநாட்டுக்கு எல்லாம் கட்டு சோறு கட்டிகிட்டு போய் பார்த்த தொண்டன் இப்போது இல்லை. மாநாட்டை தன் வீட்டில் உட்காந்து லைவ் ரிலே பார்க்கிறான். ஆனால் அவன் கட்சி உணர்வு இன்னும் கொஞ்சம் உயிரோடு தான் இருக்கின்றது. பிற்காலத்தில் எப்படி என கணிக்க இயலவில்லை.

“தேர்தல் அரசியல்” என்று வந்து விட்டால் "காம்ப்ரமைஸ்" என்னும் "தழைந்து போவது" என்னும் இந்த மாற்றம் தவிர்க முடியாதது. ஆனாலும் உங்கள் கூற்றில் உண்மை இல்லாமலும் இல்லை.

+++++++++++++++++++++++++++++++++++++++++++


\\அதன்படி இதற்கு ஒரு பெரிய ஸ்பான்சர் கிடைத்தால் சீமானாலும் முடியும், இல்லை அபி அப்பா திமுகவிலிருந்து பிரிந்து சென்று ஆரம்பித்தாலும் முடியும்.\\

ஸ்பான்சர் என்றாலே பணம் படைத்தவன்.அப்படி ஸ்பான்சர் செய்வதால் பலனை எதிர்பார்ப்பவன் தானே. அவன் ஏன் சீமானை பிடித்து தொங்கி கிட்டு இருக்க போகிறான். எப்படியாக இருந்தாலும் அந்த பணம் படைத்த ஸ்பான்சர் தமிழ்நாட்டிலோ அல்லது இந்தியாவின் பிற பகுதியையோ சேர்ந்தவனாக தான் இருக்க போகின்றான். சீமான் ஜெயித்து வந்தால் அவனுக்கு என்ன பிரயோசனம் இருக்க போகுது. அவர் தான் ஈழம் வாங்கி தர வேண்டி அதற்காக தமிழக போலீசை வைத்து ராஜபக்ஷே கூட சண்டை போட போயிடுவாரே? ஸ்பான்சர் செய்தவன் வாயிலே விரலை வைத்து கொண்டு போவானா? போயும் போயும் சீமானை கட்டிகிட்டு அழுவதை விட காசு குடுத்தா எல்லாம் கிடைக்கும் என்கிற போது அவனே நின்னுட்டு போயிடுவானே? ஓட்டும் அப்படி காசு கொடுத்து வாங்கிவிட மாட்டானா? ஒருவேளை சீமானுக்கு இந்தியாவை தவிர வெளிநாட்டு ஸ்பான்சர் கிடைத்தல் கூட இது சாத்தியம் இல்லவே இல்லை. அந்த பணத்தை வாங்கி பாக்கெட்டில் போட்டு கொண்டு சீமானை தூக்கி குப்பை பக்கெட்டில் போட்டு விட்டு தான் போவார்கள் மக்கள். இது தான் நிதர்சனம்.


\\பெரிய ஸ்பான்சர்\\ வி என் சுதகரன் மற்றும் பாரிவள்ளல் என்கிற பச்சமுத்துக்கு போன்றவர்களுக்கு கூடத்தான் பணமும் இருக்கு. ஆசையும் இருக்கு முதல்வர் நாற்காலி மாதிரி கனவெல்லாம் இருக்கு அவர்களுக்கும். அதுக்கு பக்க பலமா எதுக்கும் இருக்கட்டுமேன்னு தன் ஜாதியையும் தான் தூக்கி கிட்டு நிக்கிறாரு பச்சமுத்து. நடக்குதான்னு பாருங்க.நடக்காது. அதல்லாம் காசு கொடுத்து எல்லாத்தையும் வாங்கிட முடியாதுங்க. உணர்வு என்பது தானா ஊறனும்.அதையும் மீறி அந்த உணர்வை சரியான பாதைக்கு அழைத்து சென்று இலக்கை எட்ட வைக்க சரியான தலைமையும் வேண்டும்.


\\ அபி அப்பா திமுகவிலிருந்து பிரிந்து சென்று ஆரம்பித்தாலும் முடியும்\\

அபிஅப்பா மாதிரி ஆயிரம் அபிஅப்பா திமுகவில் இருந்து மதிமுக பிரிந்து போன போது வைக்கோ கூட போனாங்க. உணர்வும் இருந்துச்சு. ஆனா அதை சரியா பயன்படுத்த ஒரு சரியான தலைமை இல்லாம போச்சே அவங்களுக்கு:-(( அதனாலத்தான் சொல்கிறேன்… சும்மா காசு பணம் வச்சுகிட்டு கார்பரேட் கம்பனி மாதிரி கட்சி நடத்தவும் முடியாது. அது போல வெறும் உணர்வு, ரத்தம், சதை, கருத்து மோதல், விவாதம், இதையெல்லாம் வச்சுகிட்டும் எதும் "தேர்தல் அரசியல்" செய்யவும் முடியாதுங்க. இரண்டும் இருக்க வேண்டும் இப்போதைய தமிழக சூழலில்!


++++++++++++++++++++++++++++++

\\அடுத்து பூத் கமிட்டிக்கு 3000 ஆட்களை திரட்டுவதெல்லாம் பெரிய கட்சிகளுக்கே சாத்தியம் என்பதெல்லாம் தற்கால வணிக மேலாண்மையில் பெரிய விசயமே இல்லை. மேலதிகமாக பூத் கமிட்டியில் விலை போகாதவர் எவரும் இல்லை, இந்த சீரழிந்த நிலை தமிழக அரசியலில் நிலை கொண்டு நாளாகிறது. விலை அதிகம் கொடுப்பவனே அங்கு ராஜா. தி.மு.கவைக் கண்டு அம்மா அச்சப்படுவது இந்த விசயத்தில்தான்.\\

மேலே நீங்க சொன்ன மாதிரி "3000 ஆட்களை "திரட்டும்" ஆட்களை வைத்து கொண்டு பூத் கமிட்டி எல்லாம் போட்டா வேலைக்கு ஆகாது. விலைக்கு தான் போவார்கள். அதற்கு தான் மேலேயே சொல்லியிருக்கேன். உணர்வோடு கூடிய காசு இருந்தால் மட்டுமே இப்போதைய சூழலில் தேர்தல் அரசியல் சாத்தியம்.

+++++++++++++++++++++++++++++++

\\எனவே உங்கள் 'யதார்த்தமான' அரசியல் குறித்த ஆய்வு சில தொழில் நுட்பங்கள் பற்றிய அனுபவப் பார்வையாக இருக்கிறது. அரசியல் என்பது தொழில்நுட்பம் மட்டுமல்ல, அது மக்களுடன் இரத்தமும், சதையுமான கருத்துப்போராட்டம். அது குறித்த யதார்த்தத்தை அறிவதற்கு தி.மு.க அனுபவம் போதாது. ஏனெனில் தி.மு.க என்பது வசதி படைத்த தமிழர்கள் தமது சொத்துக்களை பெருக்குவதற்கும், காப்பாற்றுவதற்குமான செக்யூரிட்டி நிறுவனம்.\\


மக்களுடன் சேர்ந்த கருத்து போராட்டத்துக்கு எங்களுக்கு கிடைத்த வெற்றி தானே அய்யா 1967 முதல் மக்கள் எங்களுக்கு கொடுத்த ஆட்சி என்கிற அங்கீகாரம். அதை வைத்து தானே நாங்கள் எது எதுக்கு போராடினோமோ அதை எல்லாம் ஒன்னு ஒன்னா செஞ்சுகிட்டும் இருக்கோம். திமுக போராடிய விஷயம் எல்லாவற்றையும் பெற வேண்டுமானால் "தேர்தல் அரசியலுக்கு வர வேண்டும்" என்கிற நிலைப்பாடு எடுத்து தானே "சமூக அரசியல்" பாதையில் இருந்து விலகி பெரியாருடன் இருந்து விலகி திராவிடர் கழகத்தில் இருந்து பிரிந்து திராவிட முன்னேற்ற கழகம் கண்டோம். போராடிய அத்தனையும் "ஏன் கேட்டு பெற வேண்டும்? நாமே ஆட்சியில் இருந்தால் நாமே அதை செயல்படுத்தலாமே" என்பதால் தானே "தேர்தல் அரசியலை" தேர்ந்தெடுத்து அதிலெ வெற்றியும் கண்டோம். இருபத்தி ஒரு லட்சம் பேருக்கு குடிசைகளை மாற்றி கான்கிரீட் வீடு என்பது வரை கொண்டு வந்து இருக்கின்றோம். மக்களுடன் இரத்தமும் சதையுமாக நாங்கள் இல்லாமல் போயிருந்தால் மேட்டுக்குடி அரசியல் அதாவது மக்களோடு ஒட்டாமல் இருந்திருந்தால் குடிசைகள் கண்ணில் பட்டிருக்குமா? ஒரு ரூபாய்க்கு அரிசி கொடுக்க வேண்டி மனதில் பட்டிருக்குமா? குடும்பத்தில் முதல் பட்டதாரிக்கு இலவச படிப்பு கொடுக்கப்பட்டிருக்குமா? 108 ஆம்புலன்ஸ் திட்டம் கிடைத்து இருக்குமா? மருத்துவ காப்பீடு திட்டம் கிடைத்து இருக்குமா? இத்தனை தொழிற்சாலை கிடைத்து இருக்குமா? இடஒதுக்கீடு செய்து அடிமட்ட மக்கள் தொழில்நுட்ப படிப்பு படிக்கும் வசதி செய்து கொடுக்கப்பட்டிருக்குமா? கலப்பு திருமணம் ஊக்குவித்து இருக்கப்படுமா?மெட்ராஸ் ஸ்டேட் என்பது தமிழ்நாடு ஆகியிருக்குமா? சுயமரியாதை திருமணம் சட்ட ரீதியாக ஆகியிருக்குமா? பெண்களுக்கு சொத்தில் சம உரிமை சட்டம் கொண்டு வரப்பட்டிருக்குமா? பெண்களுக்கு கர்ப்ப கால சலுகைகள் கிடைத்து இருக்குமா? முதியவர்களுக்கு பென்ஷன், ஏழ்மையில் வாடும் கலைஞர்களுக்கு பென்ஷன் கிடைத்து இருக்குமா? என எத்தனையோ "மா" சொல்லிகொண்டே போயிருக்கலாம். தேர்தல் பாதை திருடர் பாதை என நாங்கள் சொல்லிக்கொண்டு இருந்திருந்தால் இப்போது அதே 1967க்கு முந்தைய ஒரு நிலையில் என்ன பெரிய முன்னேற்றம் தமிழகத்துக்கு வந்திருக்க போவுது. நேரு காலத்தில் நெய்வேலியில் நிலக்கரி கிடைத்த பின்னர் கூட அதை எல்லாம் சுரண்டி வடமாநிலங்களுக்கு தானே கொண்டு போகப்பட்டது. ராயல்டி என்கிற தொகை கூட தமிழகத்துக்கு திமுக ஆட்சியில் தானே பெறப்பட்டது. அதே போல இங்கு விளையும் நெல் கூட FCI க்கு மாத்திரம் தானே போயிருக்கும். TNCSC க்கு வந்திருக்குமா? அல்லது TNCSC என்பதே வந்திருக்குமா தமிழகத்துக்கு?. தேர்தல் அரசியல் நிலைப்பாட்டினால் மாத்திரமே இதல்லாம் சாத்தியப்பட்டது திமுகவுக்கு. அரசியலில் ஆட்சி அமைக்க அதிகாரத்தை கையில் எடுக்க "தேர்தல் அரசியலே" சரி என நினைத்து அந்த வழியில் மக்களோடு மக்களாக அது குறித்த யதார்த்தத்தை அறிந்த காரணத்தால் மட்டுமே நாங்கள் ஜெயிக்கிறோம். ஆகவே எங்களுக்கு அந்த அனுபவம் போதாது என்று நீங்கள் சொல்வதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? சரி அப்படி அப்படி சொல்லும் நிலையில் நீங்கள் இருப்பதாக அதாவது \\மக்களுடன் இரத்தமும், சதையுமான கருத்துப்போராட்டம்\\ இப்படியான போராட்டத்தை கையில் எடுத்ததாக நினைக்கும் நீங்கள் பெற்ற வெற்றி என்ன என்பதை பட்டியலிட முடியுமா? நான் மேலே பட்டியலிட்டது போல! (நான் பட்டியலிட்டது ஒரு சதம் தான். மீதி 99 சதம் சொல்ல இந்த பதிவு போதாது) சரி நீங்கள் எந்த விதத்திலாவது சமரசம் செய்து கொண்டு இருக்கின்றீகளா? வினவு தளம் மற்ற தளங்களில் வந்து தன் வாத பிரதிவாத்தை வைத்து இருக்கின்றதா? மற்ற வலைப்பதிவாளர்கள் கூட நீங்கள் ஒரு சக பதிவராக இருப்பதாக சஜமான பதிவராக இருப்பதாக உணர்கின்றீரா? இல்லை. கவிதை உங்களுக்கு இஷ்டம் இல்லை. கதை உங்களுக்கு இஷ்டம் இல்லை. சினிமா மீது வெறுப்பு. பிடிக்கின்றதோ பிடிக்கவில்லையோ 5000 பேர் இருக்கும் சக வலைப்பதிவர்களிடம் கூட சகஜமான ஒரு மனோபாவத்தில் பழக இயலாத நிலையில் இருக்கும் நீங்கள் உங்கள் கட்சியான மக்கள் கலை இலக்கிய கழகத்தை எப்படி மக்களோடு மக்களாக இருக்க வைக்க போகின்றீர்கள்? ஆனால் \\அது மக்களுடன் இரத்தமும், சதையுமான கருத்துப்போராட்டம்.அது குறித்த யதார்த்தத்தை அறிவதற்கு தி.மு.க அனுபவம் போதாது. \\ இப்படி திமுகவை விமர்சிக்கின்றீர்களே அதற்கு முன்னர் நீங்கள் ஏன் சகஜமாக மற்றவர்கள் கூட பழக கூடாது? நீங்கள் ஏன் "என் முகவரி இது தான். என் பெயர் இது தான் என வெளிப்படை அரசியல் செய்ய கூடாது? அப்படி என்ன மூடுமந்திர அரசியல்? அதற்கான தேவை என்ன?நீங்கள் சொல்வது எல்லாமே நல்ல விஷயம் தான் என நீங்கள் நினைக்கும் பட்சத்தில் நீங்கள் ஏன் முகமூடி அரசியல் நடத்த வேண்டும்? சரி அதல்லாம் உங்கள் அரசியல் பாலிசி என்று வைத்து கொள்வோம். ஆனால் நீங்கள் ஏன் திமுகவை அரசியல் என்பது மக்களுடன் இரத்தமும் சதையுமான கருத்து போராட்டம் அது குறித்த யதார்த்தத்தை அறிவதற்கு திமுகவுக்கு அனுபவம் போதாது என சொல்ல வெண்டும்?

ஆக மேலே நீங்கள் சொன்ன மாதிரி நாங்கள் தான் மக்களோடு பழகி பழகி அவர்களின் நாடி பிடித்து பார்த்த நாங்கள் தான் "மக்களுக்கான" அரசியலுக்கு தகுதி படைத்தவர்கள்.

+++++++++++++++++++++++++++++++++++++++

\\ஏனெனில் தி.மு.க என்பது வசதி படைத்த தமிழர்கள் தமது சொத்துக்களை பெருக்குவதற்கும், காப்பாற்றுவதற்குமான செக்யூரிட்டி நிறுவனம்\\

திமுகவில் ஒன்றரை கோடி உறுப்பினர்கள் இருக்கின்றனர். அனேகமாக அதிமுகவிலும் அப்படியே நீங்கள் சொல்வது போலத்தான் என்று வைத்துக்கொள்வோம்.காங்கிரஸ் ஒரு மேட்டிமை கட்சி என்றே வைத்துக்கொள்வோம். ஆக 60 சதத்துக்கும் மேலான மக்கள் தமிழகத்தில் ஏகபோக வாழ்க்கை வாழ்ந்து சுபிட்சமாக இருப்பதாக அர்த்தம் ஆகிப்போகின்றது. நீங்கள் சொல்வது போல இல்லை. நீங்கள் சொல்லும் சில அமைச்சர்கள் சட்ட மன்ற உறுப்பினர்கள் இப்படி பெரும் பணக்காரர்கள் ஆக இருக்கலாம், ஆனால் தொண்டன் தன் ஆட்சியினால் தனக்கு கிடைத்த தன் குடும்பத்துக்கு கிடைத்த தன் மகனுக்கு இடஒதுக்கிட்டால் கிடைத்த கல்வியால் பெற்ற வருமானத்தில் மட்டுமே சுபிட்சமாக இருக்கின்றான்.தன் ஆட்சியால் கிடைத்த விவசாய சலுகைகளால் சுபிட்சமாக இருக்கின்றான்.இன்னும் பல சலுகைகளால் சுபிட்சமாக இருக்கின்றான். ஒன்னரை கோடி உறுப்பினர்களும் நூறு சதம் உத்தமர்கள் என்று சான்றளிக்கவோ அல்லது உத்தமர்களாக மாற்றுவோம் என்று உறுதி கொடுக்கவோ ஒரு கட்சிக்கு இயலாத காரியம் என்கிற யதார்த்தத்தை உணருங்கள்.

+++++++++++++++++++++++++++++++++++

\\அரசியல் என்றாலே தேர்தல், தேர்தல் வெற்றிகளின் கணக்குகள், என்று பார்ப்பது கூட அந்த செக்யூரிட்டி பிசினஸ் மனநிலைதான் என்று தோன்றுகிறது. தேர்தல் வரும் போது இதை விரிவாக வினவில் எழுதுகிறோம்.\\

இல்லை. தேர்தல் அரசியல் என்பது மட்டுமே அப்படி. மற்றபடி திமுகவின் தாய் கழகம் திராவிடர் கழகம் "சமூக அரசியல்"மட்டுமே செய்து தன் நிலைப்பாட்டில் சமரசம் செய்து கொள்ளாமல் தான் இருக்கின்றது. \\தேர்தல் வரும் போது இதை விரிவாக வினவில் எழுதுகிறோம்\\ வந்தாச்சு தேர்தல். எழுத ஆரம்பிச்சுடலாம். ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். கொஞ்ச நாள் காஷ்மீர் பிரச்சனை எல்லாம் ஒதுக்கி வச்சுட்டு தமிழகம் பக்கம் பார்வையை திருப்புங்க சாரே!

++++++++++++++++++++++++++++++++

\\அந்த வகையில் எமது அரசியலுக்கு உங்களது ஆய்வுகள் நிச்சியம் பயன்படும். நன்றி.\\

மிக்க நன்றி. ஆமாம், இதிலே எதும் உள்குத்து இருக்குதா:-))

10 comments:

  1. முழுமையாக பணம் மட்டுமே பிரதானமாக இருக்கும் இப்போதைய நிலையில், கட்சி உணர்வு, கொள்கை (?) என்பதெல்லாம் வெறும் அலங்கார பேச்சுக்கள். தனக்கு பலன் இல்லையேல் யாரும் 'கட்சிக்காக' வரப்போவதில்லை. அது போன்ற ஏமாளிகள் குறைந்துவிட்டார்கள் என்று முழுமையாக நம்புகிறேன். இப்போது இருக்கும் நிலவரம், யாருக்கும் இதில் ஆதாயமில்லாத லாயல்டி இல்லை. இருக்கவும் கூடாது. அரசியல் என்பது முழுமையாக தொழில் என்றாகிவிட்டபிறகு ஆதாயமில்லாமல் யார் பின்னாலும் போவது சுத்த பயித்தியகாரத்தனம்.

    என்றுமே இப்படி யார் பின்னாலும் போகாததால் எனக்கு அதன் rational logic புரிந்ததே இல்லை! இருந்தும் இது தான் இப்போதைய நிலைமை என்று நம்புகிறேன். தவறிருந்தால் திருத்துங்கள். மற்றபடி இப்போதிருக்கும் எந்த, so called 'தலைவர்கள்' மேலும் எனக்கு கொஞ்சமும் நம்பிக்கையோ மதிப்போ இல்லை!

    ReplyDelete
  2. ஒருவன் பிறருக்கு கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக்கொள்கிறான் - கருணாநிதியை நினச்சே நீங்கள் போடாது போல இருக்கு

    ReplyDelete
  3. ம்ம்ம் எல்லாம் மக்கள் விழிக்கும் வரை தான் உங்கள் இந்த கணக்குகள்,விளக்கங்கள் எல்லாம்.......மக்கள் விழிப்பார்களா????அது தானே மக்களை விழிப்படைய விடாமல் சினிமா என்ற போதையை திணித்துள்ளீர்கள்.எல்லாம் பிளான் பண்ணி தானே செய்கிறீர்கள். நாசமா போக தமிழினம் ..வேறு வழி இல்ல...வாழ்வது நானாக இருக்க வீழ்வது தமிழன் ஆகட்டும்...வாழ்க உங்கள் திமுக ஆதரவு அதனால் "வளர்க" உங்கள் சந்ததி

    ReplyDelete
  4. அபிஅப்பா மாதிரி ஆயிரம் அபிஅப்பா திமுகவில் இருந்து மதிமுக பிரிந்து போன போது வைக்கோ கூட போனாங்க.

    ஆனா அட்லீஸ்டு வைகோ ஈழத்தமிழருங்கள அபி அப்பா மாதிரி கருணாநிதய திட்ற நாய்களே ஒங்கள ராசபக்ச கொல்றது சரிதாண்டா அனுபவியுங்கடான்னு திட்டலயே.

    ReplyDelete
  5. யதார்த்தமான 'தேர்தல் அரசியல்' பற்றிய பாடமாகத் தான் இந்த பதிவு அமைந்திருக்கிறது. நல்ல அலசல்.

    ReplyDelete
  6. இப்போது யாருக்கு அந்த உணர்வு இருக்கிறது?

    ReplyDelete
  7. நிச்சயமாய் உள்குத்து இருக்கு.. ஹி..ஹி.. ஏதோ நம்மால முடிஞ்சுது..


    வெற்றிமாறனின் திரைக்கதை நுணுக்கங்கள்

    ReplyDelete
  8. வினவு கும்பலுக்காக ஒரு பதிவு...என்ன செய்வது கருநாதி கும்பல் பயத்தில் ஒன்னுக்கு அடிக்கின்றார்கள்.

    நாளை ஜூன் மாதம் கருநாதி குடும்பம் ஜட்டியுடன் எந்த சிறையில் இருப்பார்களோ?

    பத்தினி தெய்வம் கனிமொழிநாடார் இருக்கின்றார்... கருநாதி கும்பலை பார்த்துக்கொள்வார்.

    ReplyDelete
  9. vandhachu... padichachu... vera enna solluradhu....

    ReplyDelete
  10. //சீமான் பேராவூரணியில் "என்னை ஒரு நாள் முதல்வராக ஆக்குங்கள், நான் ஈழம் வாக்கி தருகின்றேன்" என்கிற பேத்தல் பேச்சு பேசியதால் தான்//
    சீமான் மட்டுமல்ல - விஜயகாந்த்துக்கும் அப்படித்தான் எண்ணம்.
    -ஜெகன்

    ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))