பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

April 11, 2011

திமுக வெற்றிக் கோட்டை தொட்டது எப்படி???


ஒரு பூரணம் என்று சொல்வார்களே, ஒரு முழுமை என்று சொல்வார்களே, ஒரு பௌர்ணமி என்று சொல்வார்களே, அது போல ஒரு ஒரு நிலையில் இருக்கின்றோம் இப்போது. மே மாதம் 2011ல் தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் என்று நினைத்தோம். ஆனால் முன்கூட்டியே வந்தது. ஏப்ரல் 13 அன்று தேர்தல் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. எல்லோரும் சொல்லிப்பார்த்தார்கள். அதற்கு அடுத்த நாள் பொது விடுமுறை வருகின்றது. பலரும் பழைய நினைவிலே அன்று தமிழ் புத்தாண்டு கொண்டாடுவர், சிரமமாய் இருக்கும் என சொல்லியும், +2 , 10 வது பொது தேர்வுகள் நேரம் என்றெல்லாம் சொல்லிப்பார்த்தும் தேர்தல் தேதியில் மாற்றம் இல்லை.

போகட்டும் என எதிர் கொண்டோம் அதையும். பின்னர் யார் யார் நம்முடன் கூட்டணி என்ற பிரச்சனை. பாமகவை கொண்டு வந்தோம். அதன் முன்னர் பிப்ரவரி முதல் தேதி கலைஞர் டெல்லி பயணம். எத்தனை தொகுதி என பேசி முடிக்கப்படும் என நினைத்தோம். முதல்வர் மாநாடு முடிந்ததும் சோனியா அம்மையாரை, பிரதமரை சந்திக்க முடிந்த போதும் காங்கிரசில் ஐவர் குழு தான் அணைத்தையும் முடிவு செய்யும் என கூறப்பட்டது. பிரச்சனை. சந்திப்பு முன்னர் பாமக எங்களோடு உண்டு என சொன்னார் கலைஞர். மருத்துவர் இல்லை என்றார். அடுத்த பிரச்சனை.அடுத்த நாள் திமுகவின் தொலை தொடர்பு அமைச்சராக இருந்த ராசா கைது. பத்திரிக்கைகள் கொக்கரித்தன. திமுக அழிந்து விட்டதாக அறிவிப்பு செய்தன.பிரச்சனை. பின்னர் ஐவர் குழு அமைக்க தாமதம் ஆனது. இதனிடையில் காங்கிரசில் ஒரு சாரார் பாதிக்கும் மேல் தொகுதிகள் ஆட்சியில் பங்கு, துணை முதல்வர் பதவி என ஆரம்பிக்க இதை எல்லாம் ஜுனியர் விகடனும், ரிப்போர்டரும், தினமலரும், தினமணியும் கடந்த சில ஆண்டுகளாக கூட்டணியை உடைக்கும் முயற்சியின் உச்சகட்ட போராட்டத்தை தொடங்கின. இது அதற்கடுத்த பிரச்சனை.

பின்னர் பாமக கூட்டணிக்குள் கொண்டு வரப்பட்டது. அதே நேரம் காங்கிரஸ் ஐவர் குழு அமைக்கப்பட்டு அதிலே இளங்கோவன் இல்லை என சத்தியமூர்த்தி பவன் அல்லோகலப்பட்டது. இங்கே பாமகவுக்கு 31 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இதனிடையே தேமுதிக, மதிமுக, கம்யூனிஸ்டுகள் அதிமுக கூட்டணியில் சேருமா எது சேரும் எது ஒதுக்கப்படும் என சரியாக தெரியாத நிலை உண்டானது. ஏனனில் திமுக காங்கிரசை கைகழுவினால் அதை இரு கரம் நீட்டி வரவேற்க அதிமுக தயாராக இருந்தது. அதன் காரனமாகவே தேமுதிகவுக்கு சீட் எண்ணிக்கை இத்தனை என சொல்ல முடியாத நிலை அதிமுகவுக்கு. இங்கே காங்கிரசுடன் பேச்சு வார்த்தை இழுபறியாகவே இருந்தது. அதிமுக இன்னமும் காங்கிரசுக்கு கதவு திறந்து இருந்தது. உடனே தேமுதிகவை அந்த பக்கம் தள்ளிவிட "மானம் உள்ளவர், ரோசக்காரர் அந்த பக்கம் போகமாட்டார் " என அஞ்சாநெஞ்சன் ஒரு பேட்டி கொடுத்து அங்கே தள்ளிவிட்டார். அன்றே 41 வாங்கி கொண்டு அது அங்கே அடக்கமாகியது. இங்கே அதற்குள் விடுதலை சிறுத்தைகளுக்கு பத்து இடங்கள் ஒதுக்கப்பட்டது. ஆனால் காங்கிரஸ் இன்னும் இங்கே முரண்டு பிடித்து கொண்டு தான் இருந்தது.

பின்னர் காங்கிரஸ் ஐவர் குழு எல்லாம் டெல்லி போய் அது சுறுங்கி ஒருவர் குழுவாக குலாம்நபி ஆசாத் இங்கே வந்தார். அதற்குள் முஸ்லீம் லீக், மூமுக ஆகியவற்றுக்கு சீட் ஒதுக்கப்பட்டது. காங்கிரஸின் குலாம் வந்து பேசும் போது அந்த 110 என்பது குறைந்து கார்திக் சிதம்பர பார்முலா 72க்கு வந்து பின்னர் 63க்கு வந்து அதும் முடியாமல் குலாம் திரும்பி போக அதே நேரம் கொமுகவுக்கு 7 சீட் கொடுக்கப்பட்டு கூட்டணிக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த நேரத்தில் அந்த நடுநிலை நாளேடுகள், வாரமிருமுறை ஏடுகள் கொட்டம் அடக்க முடியா குதிரையாக திமிறிக்கொண்டு அலைந்தன. பின்னர் திமுகவின் ராஜினாமா முடிவு, காங்கிரசுக்கும் திமுகவுக்கும் உடன்பாடு 63 சீட்டுகள் என ஒரு வழியாக எங்கே பயணிக்கிறோம் என தெரியாத பயணத்தை திமுக ஒருமுகப்படுத்தி ஒரு பாதை அமைத்தது. அடுத்த பிரச்சனை எந்த எந்த தொகுதி என பிரிப்பது தான். அது காங்கிரஸ் தவிர மற்றவர்களுக்கு சுலபம் தான் எனினும் காங்கிரஸ் போலவே திமுகவும் நகம் கடிக்க தொடங்கியது. ஏனனில் எல்லோருக்கும் நன்றாக தெரியும். காங்கிரசின் கோஷ்டி பிரச்சனைகள். அது நடந்து கொண்டு இருக்கும் போதே அந்த பக்கம் அதிமுக அடுத்த அடுத்த கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டிய சூழலுக்கு ஆளானது.

இதனிடையே திமுக தன் கட்சி வேட்பாளர்களை தேர்ந்து எடுக்கும் பணியும் சளைக்காமல் நடந்து கொண்டு இருந்தது. அதே வேளையில் திமுக தலைவரின் மனைவியும் மகளும் கூட கலைஞர் டிவியின் காரணமாக விசாரிக்கப்பட்டு கொண்டு இருந்தனர். பத்திரிக்கைகளுக்கு கேட்கவா வேண்டும்? இத்தனை பிரச்சனைகளுக்கு நடுவே தேர்தல் அறிக்கையும் தயாராகிக்கொண்டு இருந்தது. பின்னர் திமுக, பாமக, விசி, கொமுக என கூட்டணிக்கட்சிகள் தங்கள் வேட்பாளரை தேர்ந்தெடுத்து அறிவிக்க தொடங்கினர். அது போல திமுகவும் அறிவித்தது. வேதைம், கடலூர் போன்ற ஒரு சில தொகுதிகள் தவிர வேறு எங்கேயும் எந்த பிரச்சனையும் இல்லை. மார்ச் 19ம் தேதி தேர்தல் அறிக்கையும் வெளியிடப்பட்டது. மக்களுக்கு உண்மையாக என்ன தேவை என்பதோடு கவர்சியாக என்ன தேவை என்பதும் அதிலே சொல்லப்பட்டது. அதிலே மற்ற கட்சிகள் கவனிக்க தவறிய ஒரு விஷயமும் இருந்தது. அதை இந்த பதிவின் கடைசியில் சொல்கிறேன்.

அதன் பின்னர் இரு நாட்களுக்கு அறிவாலயத்தில் நடந்தது எல்லாமே வியூகம் அமைக்கும் பணி தான். கிட்ட தட்ட இந்த தேர்தலில் கதாநாயகன், கதாநாயகி, பிரச்சார பீரங்கி புண்ணாக்கு புடலங்காய் என எல்லாவற்றையும் விட அந்த 19ம் தேதி முதல் 22ம் தேதி வரை நடந்த அந்த 3 நாட்களில் ந டந்த தேர்தல் போரின் வியூகம் தான் என்னை கேட்டால் இந்த தேர்தலில் திமுக வெற்றிக்கான கதாநாயகன். ஆமாம்.

கலைஞர்,பேராசிரியர், தளபதி, அழகிரி, தயாநிதி மாறன், கனிமொழி, நட்சத்திர பேச்சாளர்களாக நடிகர் பாக்கியராஜ், நடிகை குஷ்பூ, குமரிமுத்து, வாகைசந்திரசேகர், நெப்போலியன் ஆகியோர் என முதலில் முடிவானது. பின்னர் திண்டுக்கல் லியோனியிடம் கேட்கப்பட்டு அவரும் ஒத்துக்கொண்டார். பின்னர் நடந்த விவாதத்தில் யார் யார் எந்த எந்த ஆயுதம் ஏந்துவது என விவாதிக்கப்பட்டது.அதாவது எப்படி பேச வேண்டும் என்பது தான் ஆயுதம். தேர்கள், சாரதிகள் தயாரானது. தவிர எந்த எந்த திசையில் யார் யாருக்கு செல்வாக்கு என பிரிக்கப்பட்டது. அதன்படி தயாநிதி முதலில் சென்னை முழுமைக்கும், பின்னர் கோவைப்பகுதி எனவும், கனிமொழி விருதுநகர் , நெல்லை, குமரி எனவும், பேராசிரியர் உடல் நிலை கருத்தில் கொண்டும் அவருடைய வில்லிவாக்கம் தொகுதியையும் (முன்னர் போல சின்ன தொகுதி இல்லை இப்போது) பார்க்க வேண்டியும் இருப்பதால் அவரை சில தொகுதிகளில் மட்டும் வைத்து கூட்டம் மட்டும் நடத்துவது என்றும் அன்றைய தினமே அவரை கொண்டு வந்து தலைநகரில் சேர்த்து விடுவது என்றும், தளபதி தன் தொகுதி தலைநகரில் இருப்பதால் காலை 5.30 முதல் காலை 10 மணி வரை தினமும் அங்கே பிரச்சாரம் பின்னர் சென்னை விமானநிலையத்தில் இருந்து திருச்சி, கோவை, மதுரை, திருவனந்தபுரம் என போய் அந்த அந்த மண்டலங்களுக்கு வேன் மூலமாக பிரச்சாரம் எனவும் இரவு கண்டிப்பாக தலைநகருக்கு திரும்பி வந்து விட வேண்டும் என்றும் முடிவானது. பாக்யராஜ் கொங்கு மண்டலத்தில் வேன் மூலமும், குமரி முத்து நாகர்கோவில் மண்டலத்திலும், நெப்போலியன், வாகை சந்திரசேகர் போன்றவர்கள் ஒரு வழி அமைத்தும் வியூகம் அமைக்கப்பட்டது.

கூட்டனி கட்சிகள் விடுதலை சிறுத்தைகள், பாமக, காங்கிரஸ், திராவிடர் கழகம், சுபவீ அய்யா ஆகியோரும் தனித்தனியாக சுழன்றனர்.

இதில் அழகிரியோ தன் மதுரை மண்டலம் தென் மண்டலத்தை முழுமையாக பார்த்து கொள்வதாக கூறினாலும் அங்கே கொமுகவுக்கோ, விசி, பாமகவுக்கோ அத்தனை செல்வாக்கு இல்லை என்பதாலும் காங்கிரசை மட்டுமே அவர் கூட்டணியாக நம்பி இருந்ததாலும் தவிர அந்த பகுதி தேமுதிக தலைவர் விசயகாந்து சொந்த தொகுதி அதனால் கொஞ்சம் வாக்குகள் அவர் கட்சிக்கு அங்கே அதிகம் என்பதாலும் கிட்ட தட்ட அவர் வியூகத்தில் தொங்கலில் விடப்பட்டார் என்றே சொல்ல வேண்டும். அப்போது தான் அவர் வடிவேலுவை பிரச்சாரத்துக்கு கொண்டு வந்தார். (அதை பின்னர் விரிவாக பார்ப்போம்)

இதில் கிட்ட தட்ட எல்லோருமே அதாவது கலைஞர், தளபதி தவிர யாரும் ஜெ, மற்றும் அதிமுகவை பற்றி விமர்சிக்காமல் தாங்கள் செய்த நன்மைகள், செய்ய போகும் நன்மைகள் அதாவது தேர்தல் அறிக்கை மட்டுமே பிரச்சாரம் அதாவது பாசிட்டிவ் அப்ரோச் மட்டுமே இருக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.

அது போல அதிமுக அணியினர் மூலமாக வரும் தொல்லைகளை உடனுக்குடன் தேர்தல் கமிஷனுக்கு தெரிவிக்க பொன் முத்துராமலிங்கம் தலைமையில் ஒரு குழு. பாவம் அது ஒரு கட்டத்தில் தேர்தல் கமிஷன் மேலேயே குற்றம் சாட்டி நீதிமன்றம் சென்ற சம்பவமும் நடந்ததது என்பது சோகம்.

இப்படியாக வியூகம் அமைக்கப்பட்டு கலைஞரின் முதல் தேர்தல் பிரச்சாரக்கூட்டம் திருவாரூரில் நடக்கும் வரை ஒரு திட்டமிட்ட பாதையில் தான் திமுக மெதுவாக அடியெடுத்து வைக்க தொடங்கியது. அங்கே வடிவேல் பேசிய கன்னிப்பேச்சு அதிரடியாக இப்படி ஒரு மாற்றம் கொண்டுவரும் என யாரும் அத்தனை ஏன் கூட்டணி கட்சி தலைவர்கள் டாக்டர் அய்யா, திருமா உட்பட யாரும் விசயகாந்தை அதுவரை விமர்சிக்காமல் இருந்த போதும் இவர் தனது அதிரடியால் ஒரே ஒரு கன்னிப்பேச்சால் அந்த மேடையில் இருந்தவர்களை விட அந்த பேச்சை கேட்க விசயகாந்தை அதிகம் அதிர்சியடைய செய்து இருக்க வேண்டும். அன்றைக்கு அடுத்த நாள் தான் விசயகாந்து ஒரு மலிங்கா போல சீண்டி விட்டால் சின்னாபின்னமாகும் ஒரு தண்ணி பாம்பு என்று மற்ற தலைவர்களுக்கு புரிந்து போனது.

அடுத்த நாள் முதல் விசயகாந்தின் குடி, குடித்துவிட்டு தனது வேட்பாளரையே அடி, கூட்டணி கட்சி கொடிகளை இரக்க சொல்லி மிரட்டியது, பொதுவாகவே கொடியை இரக்கு என சொன்னால் அது அசம்பாவிதம் என நினைப்பவன் தொண்டன். தன் தலைமைக்கு ஒரு கேடு வந்தால் மட்டுமே கொடி இரக்கப்படும். அப்படி எல்லாம் விசயகாந்து அடித்த ரகளையால் வடிவேலுவை மதுரை மட்டுமல்ல தமிழகம் முழுக்க பயன்படுத்திக்கொள்ள வியூகம் மாற்றி அமைக்கப்பட்டது.

இதனிடையே அந்த பக்கம் அதிமுக தன் பங்குக்கு எல்லாமே திமுகவுக்கு சாதகமாக செய்தது. சாதிக்பாட்ஷா தற்கொலை அன்றைக்கு அதை பூதாகரமாக்கி இருக்க வேண்டிய அதிமுக தன்னிச்சையாக கூட்டணிக்கு ஒதுக்கிய தொகுதிக்கும் சேர்த்து பட்டியல் வெளியிட்டு சாதிக் பாட்ஷா தற்கொலையை நீர்த்து போக வைத்தது. தன் அணிக்கு எதிராக 3 வது அணி அமைக்கும் விதையை அதுவே போட்டு தண்ணீர் ஊற்றியது. மதிமுகவை கழட்டி விட்டது. அதனால் மதிமுக மீது நடுநிலையாளர்கள் பார்வையும் அனுதாபமும் அதிகரித்தது. அபசகுணமாக இரண்டாவது பட்டியல் வெளியிட நேர்ந்தது. ஸ்பெக்ட்ரம் பிரச்சனையை மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டிய இடத்தில் அதிமுக இருந்தும் அதை சரியாக செய்ய இருந்த வைகோவை அதிமுக இழந்தது. அதை கொண்டு பட்டி தொட்டியில் சேர்க்கும் வல்லமை படைத்த நாஞ்சில் சம்பத் பாவம் பட்டிமன்றத்தில் நடுநிலை நீதிபதியாகிப்போனார். (ஆனால் இங்கே பட்டிமன்ற நடுவர் லியோனி திமுகவின் தேர்தல் அறிக்கையை மக்களிடம் கொண்டு சென்று கொண்டு இருந்தார்) ஆனால் அந்த பணியை செய்ய தெரிந்த இந்திய கம்யூனிஸ்ட் தா. பாண்டியனை மக்கள் அதிமுக கிளைக்கழக பிரதிநிதியாக மட்டுமே பார்த்து வருவதால் அதுவும் பயன்படவில்லை. ஜெயலலிதாவின் ஹெலிகாப்டர் பிரச்சாரம் மக்களிடம் அத்தனை பெரிய வரவேற்பை பெறவில்லை. தவிர நெப்போலியன் போன்றவர்கள் தங்கள் செய்த நிறைவேற்றிய திட்டங்களை சர்வர் சுந்தரம் நாகேஷ் பாணியில் வரிசையாக 8 நிமிடம் அடுக்கி கொண்டே போய் மூச்சு வாங்கி நிற்கிறார். ஆனால் விசயகாந்தும் மூச்சு வாங்கி தள்ளாடி நிற்கிறார். இந்த இரண்டு மூச்சு வாங்கலுக்கும் மக்களுக்கு வித்யாசம் புரிந்து போனது. அந்த பக்கம் சீமான் பிரச்சாரம் இருந்தாலும் அது திமுகவை பெரிதும் பாதிக்கவில்லை. காங்கிரஸ் கட்சியின் ராகுலுக்கு நெருக்கமான கரூர் ஜோதிமணி "அண்ணா என் தொகுதிக்கு வந்து பிரச்சாரம் செய்ய வேண்டாம் " என கெஞ்சலாக கடிதம் அனுப்பியது போன்ற சில கேவலமான சம்பவங்கள் தவிர்த்து வேறு எதும் பாதிப்பு திமுக அணிக்கு இல்லை.

விசயகாந்து "ஞாயிறை" பார்த்து சனி என்கிறார். சுற்றி சுழலும் புயலை பார்த்து பிணி என்கிறார். ஆனால் தான் தொண்டை வலி என பிரச்சாரத்தை நிறுத்திவிட்டு ஓய்வெடுக்கின்றார். மக்கள் எல்லாவற்றையும் உன்னிப்பாக கவனித்து வந்தனர். ஜெயலலிதாவோ அட்டையில் வைத்து படிக்கிறார். இங்கே வடிவேலுவோ கருத்தை உள்வாங்கி கொண்டு அவர் பாணியில் நடிக்கிறார், பாடுகிறார், குழந்தைகள் பெண்கள் எல்லாம் சிரிக்கும் அளவு சிரிக்க வைத்து தேர்தல் அறிக்கையை கொண்டு போய் சேர்க்கின்றார். பாக்கியராஜ் குட்டி கதைகள் சொல்லி தேர்தல் அறிக்கையை மக்கள் மனதில் பதிய வைக்கின்றார். குமரி முத்து அரசியல் ஒப்பீடு செய்து பேசுகின்றார். நெப்போலியன் மக்களை கவரும் விதத்தில் பேசுகின்றார். குஷ்பூ பெண்கள் கூட்டத்தை கூட்டுகின்றார். அங்கே ஜெயலலிதாவை தவிர யாரும் பிரச்சாரத்துக்கு இல்லை. இல்லவே இல்லை. அது தேவையும் அங்கு இல்லை என்கிற அளவில் முந்தைய ஆட்சியில் நன்மை எதும் செய்திருக்கவும் இல்லை.

பதிவின் ஆரம்பத்தில் சொன்னதை இப்போது விளக்குகின்றேன். இந்த தேர்தல் அறிக்கையில் மிக்சி அல்லது கிரண்டர் என்பது கவர்சி திட்டம் இல்லை. ஏனனில் அது 1500 முதல் 2000 வரை தான் செலவாகும். ஆனால் மகளிர் சுய உதவி குழுக்கள் தமிழகத்தில் பரவலாக ஓட்டு போடும் மக்கள் இருக்கின்றனர். அவர்கள் ஒரு குழுவுக்கு 20 பேர். ஒரு குழுவுக்கு 2 லட்சம் அதாவது 10000 ரூபாய் கடன் குறைந்த வட்டியில் கொடுக்கப்படுகின்றது தொழில் தொடங்க. ஆனால் இப்போது அது 4 லட்சம் ரூபாய். அதிலே 2 லட்சம் மானியம். அதாவது ஒரு மகளிருக்கு 20000 ருபாய் அதிலே பத்தாயிரம் ரூபாய் மானியம். இதன் ரீச் அதாவது நீங்கள் யாரும் கணிக்க முடியாத அளவுக்கு இருக்கப்போகின்றது என்பது சர்வ நிச்சயம்.

அதிமுக பக்கம் மீடியா பரப்புரை என்று பார்த்தால் ஜெயா டிவி, ஜூனியர் விகடன், ஆனந்த விகடன், ரிப்போர்டர், தினமலர், தினமணி என்று பலமாக இருந்தாலும் திமுக அணியில் சன் டிவி, கலைஞர் டிவி, தினகரன் என்ற அளவிலேயே இருக்கின்றது. ஆனாலும் சமாளித்து வருகின்றது திமுக அணி.

அது போல கட்சிகள் சதவீதம் என்று ஒரு புரூடா கணக்கு எப்போது எல்லோரும் போடுவார்களே, அதில் திமுக அணியில் திமுக, பாமக, விடுதலை சிறுத்தைகள்,கொமுக, காங்கிரஸ் மூமுக, மு.லீக், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், நாடார் பேரவை, கார்த்திக் கட்சி:-)) , மற்றும் மதிமுகவின் தொண்டர்களின் வாக்கு இருக்கின்றது. கொமுகவினால் திமுக அணிக்கு எந்த பிரயோசனமும் இல்லை என்று சொல்பவர்களுக்கு: ஆமாம், ஆனால் அதே நேரம் கொமுக அதிமுக பக்கம் சேர்ந்து இருந்தால் மிகப்பெரிய பாதிப்பு வந்திருக்கும் திமுக அணிக்கு. அது இப்போது தவிர்க்கப்பட்டுள்ளது.

அங்கே அதிமுக, இரு கம்யூனிஸ்டுகள் மட்டுமே.தவிர சேதுராமன் கட்சி, தவிர மிகப்பெரிய பலம் கமிஷன். தேமுதிகவுக்கான வாக்கு வங்கி முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிட்டன என்பது கண்கூடு. அவர்களுக்கு இருந்த 9 சத வாக்கு வங்கியில் நடுநிலையாளர்கள் 6 சதம் அப்படியே போய்விட்டது. மீதி இருகும் 3 சத விசயகாந்து ரசிகர்களால் அதிமுகவுக்கு ஓட்டு கிடைக்குமா என்பதே சந்தேகம். அதே போல தேமுதிக வுக்கு அதிமுக தொண்டர்கள் ஓட்டு போடுவார்கள் என்று நம்புவதும் தவறானதாகும்.

ஆக எல்லா சாதக பாதகங்களையும் வைத்து ஆராயும் போது, நாங்கள் வெற்றிக்கோட்டை தொட்டு விட்டோம். நான் களப்பணியில் ஒரு மூன்று தொகுதிகளை மட்டுமே பார்த்தேன் என்பதால் என் ஒட்டு மொத்த கணிப்பை சொல்ல முடியாது என்கிற போதும் சில ஆன்லைன் செய்தி நிறுவனங்கள் வெறும் 300 பேரை மட்டும் பார்த்துவிட்டு 150 தொகுதிகள் அதிமுக வெல்லும் என சொல்லும் போது நான் கடந்த ஒரு மாதமாக படித்ததை, கேட்டதை, பார்த்ததை வைத்து ஏன் என் கணிப்பை சொல்ல கூடாது? அதனால் சொல்கிறேன். திமுக தனியாக 100 முதல் 110 தொகுதி வரை வெல்லும். இந்த கணிப்பு சிலருக்கு எரிச்சலூட்டலாம். அவர்கள் ஒரு கிளாஸ் தண்ணீர் குடிக்கவும்.ஒரு பூரணம் என்று சொல்வார்களே, ஒரு முழுமை என்று சொல்வார்களே, ஒரு பௌர்ணமி என்று சொல்வார்களே, அது போல ஒரு ஒரு நிலையில் இருக்கின்றோம் இப்போது. தேர்வு நன்றாக எழுதி முடித்த மாணவனின் மனநிலையில் இருக்கின்றோம். மனது நிறைவாக இருக்கின்றது.

வெல்க திமுக! வெல்க திமுக! வெல்க திமுக!

53 comments:

  1. நல்லா படிச்சாலும் ஹால்க்கு போறதுக்கு முன்னாடி ஒரு டென்சன் வருமே அப்படி இருக்கு, எப்படியும் டிஸ்டின்ஸன் வரும், வெயிட் அண்ட் வாட்ச்

    ReplyDelete
  2. dmk alliance with kongu katchi is one of the rajathanthiram of kalaignar.Azhagiris master stroke is bringing SUN TVs pet Vadivelu.
    110 seats out of 119 seats is a great victory.Let us wait and see.

    ReplyDelete
  3. பா.ம.க வேட்பாளர் படங்கள் & விவரங்கள்



    இங்கே காண்க:


    http://pmkmla.blogspot.com/


    http://pmkmla.blogspot.com/2011/03/2011.html


    http://arulgreen.blogspot.com/

    ReplyDelete
  4. "திமுக தனியாக 100 முதல் 110 தொகுதி வரை வெல்லும். இந்த கணிப்பு சிலருக்கு எரிச்சலூட்டலாம். அவர்கள் ஒரு கிளாஸ் தண்ணீர் குடிக்கவும்"

    இதெல்லாம் பத்தாது. ரெண்டு பாட்டிலு செண்டு பினாயிலு வாங்கி குடிச்சாத்தான் வாழாவெட்டி நெடுமாறன் வகையறாவுக்கெல்லாம் அடி வயிறு நெருப்பௌ அணையும்.

    ReplyDelete
  5. haa haa ஹா ஹா செம காமெடியா இருக்கே..

    ReplyDelete
  6. ஒரு பூஜ்யம் என்று சொல்வார்களே.. ஒரு ஆப்பு என்று சொல்வார்களே.. ஒரு முட்டை என்று சொல்வார்களே.

    ReplyDelete
  7. அஸ்ஸலாமு அலைக்கும்
    மூத்த சகோதரர் அபி அப்பா அவர்களுக்கு,
    இந்த தேர்தலில் மற்றவர்கள் எந்த அடிப்படையில் வாக்களிக்க போகிறார்கள் என்பதை விட முஸ்லிம்களாகிய நாங்கள் தனி இட ஒதுக்கீடு என்ற ஒற்றை அடிப்படையில் தான் வாக்குகளை செலுத்துவோம். அந்த வகையில் எமது தனி இட ஒதுக்கீடுக்காக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி கொடுத்த திமுகவை ஆதரிப்பது எம் கடமையென எண்ணி வாக்குகளை செலுத்துவோம். குறிப்பாக எங்களது தொகுதியில் (கருணாநிதி போட்டியிடும் திருவாரூர் தொகுதி) 47 ஆயிரம் முஸ்லிம் வாக்குகள் இருக்கின்றன. அதை கருணாநிதி அவர்களுக்கு தான் அப்படியே கொண்டு வந்து சேர்ப்போம். மற்ற தொகுதிகளிலும் முஸ்லிம்களுடைய வாக்குகள் இந்த தடவை திமுகவிற்கு தான்.

    ReplyDelete
  8. நான் ஓரளவு கனித்தேன்,நீங்கள் பதிவாகவே போட்டுவிட்டீர்கள்.ம்.....,பாப்போம்.

    ReplyDelete
  9. அப்போ ஜவாஹிருல்லாஹ் எல்லாம் முஸ்லீம்லே சேத்தி இல்லையா?! என்னா கொடுமை சார் இது!

    ReplyDelete
  10. கலக்கல் போஸ்ட் தொல்ஸ் சார். கீப் ராக்ஸ்.

    ReplyDelete
  11. இந்த தேர்தலில் அழகிரி , வடிவேலுவை கட்சிக்கு கொண்டு வந்த செயல் அருமை.
    அதுவே,, திமுகவுக்கு பெரும் பலமாய் அமைய போகிறது.

    ReplyDelete
  12. வெல்க திமுக! வெல்க திமுக! வெல்க திமுக!
    வெல்க திமுக! வெல்க திமுக! வெல்க திமுக!
    வெல்க திமுக! வெல்க திமுக! வெல்க திமுக!
    வெல்க திமுக! வெல்க திமுக! வெல்க திமுக!
    வெல்க திமுக! வெல்க திமுக! வெல்க திமுக!
    வெல்க திமுக! வெல்க திமுக! வெல்க திமுக!

    ReplyDelete
  13. நிச்சயமாக இந்த முறை கழகத்தின் கதாநாயகன் "பிரசார வியுகம்" தான்.. !

    கலைஞரின் டச்சிங் பிரசாரம்.. யாரையும் திட்டமால் , அந்த அந்த தொகுதி / மண்டலத்தில் முன்னாள் தலைவர்களை நினைவு கூர்ந்து பேசியது, அமைதியான பேச்சு.. அப்பப்போ கமிஷனுக்கு இடி கொடுத்தது ...
    இளங்கோவனை தன் பக்கத்தில் ஒட்கார வைத்த சாதுரியம்

    தளபதி அனல் சுற்றுபயணம்.. மிக தெளிவாக திட்டங்களை எடுத்து சொல்லி , அம்மாவின் அணைத்து கேள்விக்கும் பதிலடி கொடுத்து

    கனிமொழியின் அமைதியான, ஆழமான பெண்களை கவர்ந்த பேச்சு

    நெப்போலியனின் அழக்கான பாடல்களில் செய்ததை சொன்னது

    லியோனியின் மதுரை தமிழ்.. நக்கல் நையாண்டி பேச்சு

    வடிவேலு தனியாக விஜயகாந்தை டேமேஜ் பண்ணிகொன்டே , கலைஞர் திட்டங்களை மக்களிடம் எடுத்து சென்றது..

    உடைந்த தம்ழில் குஷ்பு அம்மாவிற்கு கொடுத்த பதில்கள்..

    அனைத்தும் சூப்பர்

    அங்கே

    விஜயகாந்தின் மப்பு பேச்சு .. செய்கை
    அம்மாவின் ஒரே மோனோ டைப் எழுதி வெச்ச பேச்சு.. வெறும் கலைஞர் எதிர்ப்பு புராணம், சலிக்க வைத்த அதே ரிபிட் பேச்சு.. ஹெலிகாப்ட்டர் பயணம், மக்களுடன் ஒன்றாமல் கண்ணாடி கூடுக்குள் பேச்சு,
    கூட்டணி ஒற்றுமை இன்மை.
    2009 ல் மக்கள் ஒதுக்கி தள்ளிய அதே குடும்பம், வாரிசு , விலைவாசி , இலங்கை என்ற பேச்சுக்கள்..

    வேலைக்கு ஆகல..

    சோ ராமசாமி அம்மாக்கு செரியா கிளாஸ் எடுகல

    தலைவர் கலைஞர் 6வது முறை முதல்வர் ஆவது நிச்சயம்

    ReplyDelete
  14. விஜயகாந்த் மட்டுமே குடிப்பார்,கருணாநிதி கட்சியில் எவனும் குடிக்கமாட்டானா?

    டாஸ்மாக் வைத்து பிழைப்பை ஓட்டும் கருணாநிதிக்கு இதைவிட கேவலம் ஏதும் இல்லை.

    கனினிமொழி நாடாருக்கு விருதுநகர், நெல்லை, குமரியா? அவர் நாடார் பொம்பளைக்குப் பிறந்தவர் என்பதால் நாடாராகிவிட்டார். அப்பா யாரு கண்ணா?அந்த ஆள் என்ன சாதி கண்ணா?

    வடிவேலு...இவன் ஒரு டி.ராஜேந்தர், 1984-ல் இப்படித்தான் குதித்து குதித்து பிரச்சாரம் செய்தான். ராஜேந்தர் கூட்டங்களில் நல்ல கூட்டம்(அந்த கருணாநிதிக்குக் கூடியதைவிட). என்ன ஆச்சு? பொச்சு கிழிந்தது.

    அந்த கருணாநிதி கட்சி ஒரு 40 இடங்களில் வெற்றிபெற்றால் சாதனை.

    அந்த கருணாநிதி என்ற நபருக்கு எந்த ஊரில் சமாதி என்று முடிவுசெய்யுங்கள். நாள் நெருங்கிவிட்டது.

    ReplyDelete
  15. வெல்க திமுக! வெல்க திமுக! வெல்க திமுக!

    ReplyDelete
  16. வாங்கின காசுக்கு மேலேயே ஊவுரிங்க. மே 13 உங்கள் கனவு முடியும்

    ReplyDelete
  17. //பலரும் பழைய நினைவிலே அன்று தமிழ் புத்தாண்டு கொண்டாடுவர், சிரமமாய் இருக்கும் என சொல்லியும்,//

    எப்பவுமே அன்னிக்குதான் தமிழ் புத்தாண்டு , உங்க தலைவர் சொன்னதுக்காக யாரும் மாத்தி கொண்டாட மாட்டங்க. அண்ணே, திமுக பாசம் ரொம்ப கண்ணை மறைக்குது பார்த்து

    ReplyDelete
  18. நீங்க டிப்பிகல் திமுக காரர் போல இருக்கு.:) I mean your optimistic attitude!

    I can't predict anything now! :)

    ReplyDelete
  19. என்னுடைய கணிப்பில் இரண்டு அணிகளும் ஏறத்தாழ சமமான இடங்களில் வெல்லும் வாய்ப்பினையே எதிர்பார்க்கிறேன். மயிரிழை வித்தியாசத்தில் திமுக ஆட்சியமைக்குமென எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete
  20. அட இப்படி நீட்டி முழக்காட்டி என்ன? 'காறித் துப்புன பாக்க திரும்பவும் எடுத்து வாயில போட்டுக்கிட்டோம்னு' சிம்பிளா சொல்லீட்டுப் போக வேண்டியதுதானே?

    ReplyDelete
  21. ஆழமான கருத்துக்கள்... அருமையான அலசல்.... ஊடகங்களின் ஒரு தலைபட்சமான செய்திகள் பொய்யாகும் என்றே தோன்றுகிறது.. இவர்களின் வாதங்கள் பொய்யாகும் நாள் மே பதிமூன்று... வாழ்த்துக்கள் தோழரே...

    ReplyDelete
  22. மிக நேர்மையான சாத்தியமாகக் கூடிய கணிப்பு.

    பாராட்டுகள், நன்றி.

    பல ஊடகங்கள் தமிழ்நாட்டில் ஜெ. ஆதரவு அலை வீசுவது போன்று எழுதிவருகின்றன. எப்படி யோசித்து பார்த்தாலும் அதற்கான சாத்தியம் கொஞ்சமும் இல்லை. மக்கள் எதற்காக ஜெ'வுக்கு வாக்களிக்க வேண்டும் என்பதற்கான ஒரு காரணத்தையும் என்னால் கண்டறியமுடியவில்லை.

    ReplyDelete
  23. ada naarappasangalaa inumaa ungalai intha oor nambuthu?

    ReplyDelete
  24. Don't worry.. ADMK will win for sure. It may need little majority. But ADMK will form a Govt. Whereas DMK has to look for a place in burial ground.. Gud luck

    ReplyDelete
  25. If not this predict?

    Pls don't write blog future?

    Are you accepted?

    ReplyDelete
  26. திமுக வெல்ல வேண்டும்! கலைஞர் மீண்டும் ஆறாவது முறையாக ஆட்சி அமைக்க வேண்டும்.

    கலைஞர் - 80
    பா ம க - 15
    திருமா - 5
    கொங்கு - 4
    முஸ்லீம் - 2

    மொத்தம் - 106
    காங்கிரஸ் - 20

    126 - ஆட்சி அமைத்தாலே போதும்!!!

    திமுக வெல்லட்டும்!

    நன்றி தொல்ஸ்..

    மயிலாடுதுறை சிவா...

    ReplyDelete
  27. அண்ணே, கனவு காண எல்லொருக்கும் உரிமை உண்டு. ஆனா மே 13க்கு பிறகு,

    'கனவு காணும் வாழ்க்கை யாவும்
    கலைந்து போகும் கோலங்கள்' னு பாடாம இருந்தா சரிதான்

    ReplyDelete
  28. Victory to DMK...

    ReplyDelete
  29. சிறந்த கணிப்பு. திமுக கூட்டணியே ஆட்சி அமைக்கும் போல் தெரிகிறது.. நானும் தினமலரையும்,ஜூனியர் விகடனையும் பார்த்து கொஞ்சம் அப்செட் ஆனேன். நாள் நெருங்க நெருங்க நிலைமையும் மாறி விட்டது. நல்லதே நடக்கட்டும்.

    ReplyDelete
  30. அனைத்து கருத்து கனிப்பையும் பொய்யாக்கும் ஒரு வாக்கு வங்கி இருக்கிரது
    இஸ்லாமியர்களின் வாக்கு, உதாரணம் கடந்த பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க கூட்டனி பனிரண்டு இடங்களில் தான் வெற்றிபெரும் என்று கருத்து கனிப்பு சொன்னார்கள் நடந்து என்ன எதிர் மரையான முடிவு அதுவேதான் இந்ததேர்தலிலும் நடக்கப்போகிரது.

    ReplyDelete
  31. அண்ணே அண்ணே தொல்ஸ் அண்ணே, இந்த வெற்றியில் திகார் சிறையில் இருக்கும் ராசாவுக்கும் பங்கு இருக்காண்ணே ?

    ReplyDelete
  32. Why congress will get 24 seats?
    Is that because they protected Indian tamil fishermen against srilankan attacks

    Good joke

    ReplyDelete
  33. சூப்பர் பதிவு....வைகோ யும் பல்டி அடிது விட்டார்...

    பார்போம்.....

    ReplyDelete
  34. 17600 Kodi OOLAL pathi ethuvum sollalaiyae... Enna aachi sir ungalukku....

    ReplyDelete
  35. //அந்த கருணாநிதி என்ற நபருக்கு எந்த ஊரில் சமாதி என்று முடிவுசெய்யுங்கள். நாள் நெருங்கிவிட்டது.//

    இது அநாகரீகம். அவரல்ல! எல்லோரும் இறக்கத்தான் போகிறோம்.
    சிலசமயம் அவருக்கும் முன் நீங்களும் போகலாம்.
    எனக்கு ராமனும் ஒன்றே! ராவணனும் ஒன்றே!

    ReplyDelete
  36. //அண்ணே அண்ணே தொல்ஸ் அண்ணே, இந்த வெற்றியில் திகார் சிறையில் இருக்கும் ராசாவுக்கும் பங்கு இருக்காண்ணே ?//

    அண்ணே..அண்ணே! கோவிக்கண்ணன் அண்ணே! நாலு பங்கா வச்சு ஒரு பங்கை வடிவேலுக்கும், இரண்டாவது பங்கை விஜயகாந்துக்கும், மூன்றாவது பங்கை சசிகலா நடராஜனுக்கும், நாலாவது பங்கை ஜெயலலிதாவின் ஆணவத்துக்கும்(வைகோவை வெளியேற்றியது) குடுத்துருவோம்ண்ணே! நீங்க கவலையேபடாதீங்க...:-)

    ReplyDelete
  37. //அனைத்து கருத்து கனிப்பையும் பொய்யாக்கும் ஒரு வாக்கு வங்கி இருக்கிரது
    இஸ்லாமியர்களின் வாக்கு,//

    அடச்சே, வடிவேலு தான் காமெடி பீசுன்னு நெனச்சேன். அதைத் தாண்டிய காமெடி பீசெல்லாம் நாட்டிலே உலவுது!

    ReplyDelete
  38. பயோடேட்டா - பா.ம.க: சாதிவெறியின் வெளிப்பாடு

    http://arulgreen.blogspot.com/2011/04/blog-post_12.html

    ReplyDelete
  39. தங்கள் கருத்து ஓரளவு சரியெனவே எனக்கு தோன்றுகிறது.

    எப்படியானாலும் அதிக இடங்களைப் பெறும் தனிப்பெரும் கட்சியாக 70 முதல் 80 இடங்களை திமுக அல்லது அதிமுக பெறக்கூடும் என்பது எனது கருத்து.

    நிச்சயம் இந்த முறை தொங்கு சட்டசபை அல்லது கூட்டணி ஆட்சிதான் என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை.

    கூட்டணி ஆட்சி என்று வரும் போது 70-80 இடங்களைப்பெறும் தனிப்பெரும் கட்சி ஏதாவது 2 (அ) 3 கட்சிகளின் (தோராயமாக 15-20 இடங்களைப் பெறும் கட்சிகள்) ஆதரவோடு மீண்டும் ஆட்சியமைக்க முடியும்.

    இதன்படி பார்த்தால் கலைஞரால் மட்டும் தான் கூட்டணிகட்சிகளோடு சுமுகமாக இணைந்து ஆட்சியமைக்க முடியும். சென்றமுறை இருந்த அளவிற்கு பெரும்பான்மை இல்லாததால் கூட்டணி சேரும் கட்சிகள் மக்கள் நலனை வலியுறுத்தி பிரச்சனைகளின் அடிப்படையில் குரல் கொடுக்கும் கட்சிகளாக இருந்தால் சிறப்பானதொரு ஆட்சி இந்தமுறை அமையும் என்பது எனது கருத்து.

    தேர்தல் கூட்டணியை கூட ஆணவத்துடன் அவமதித்தஜெயலலிதா கூட்டணி ஆட்சி நடத்த தகுதியற்றவர் என்பது என் கருத்து. ஏனெனில் அவர் ஒரு ஈகோ பிடித்த பெண்மணி. கட்சிகாரர்களின் ஆலோசனைகளையோ கூட்டணி கட்சி தலைவரிகளின் கருத்துகளையோ கேட்டு ஆட்சி செய்யும் பொறுமையோ பக்குவமோ இன்னும் ஜெயலலிதாவுக்கு வரவில்லை என்பதுதான் சரி அதனை நாம் அனைவருமே தன்னிச்சையான வேட்பாளர் பட்டியல் அறிவிப்பிலேயே பார்த்தோம். தனது சுயநலத்துக்காக வாஜ்பாய் அரசை கவிழ்த்த ஜெயலலிதா நிச்சயம் கூட்டணி அரசு அமைக்க தகுதியற்றவர். மீறி கூட்டணி அரசு ஜெயா தலைமையில் அமைந்தால் தமிழகம் மீண்டும் ஒரு சட்டசபை தேர்தலை விரைவில் சந்திக்க தயாராக இருக்கவேண்டும்.

    எனவே இந்த முறை கூட்டணிகட்சிகளோடு திமுக மீண்டும் ஆட்சியை பிடிக்கும். அதன் நலத்திட்டங்கள் முன்புபோல் மீண்டும் அனைவருக்கும் தங்கு தடையின்றி கிடைக்கும் யாரும் கவலையே பட வேண்டாம்.

    ReplyDelete
  40. //எனவே இந்த முறை கூட்டணிகட்சிகளோடு திமுக மீண்டும் ஆட்சியை பிடிக்கும். அதன் நலத்திட்டங்கள் முன்புபோல் மீண்டும் அனைவருக்கும் தங்கு தடையின்றி கிடைக்கும் யாரும் கவலையே பட வேண்டாம்.//

    ஜோசியர் சொல்லிட்டாரு.. நடந்திடும். எல்லாரும் புள்ளக்குட்டிங்கள படிக்க வைங்கப்பா!

    யோவ் ஜோசி, வாயையும் டேஷையும் பொத்திக்கிட்டு உட்கார வேண்டியது தானே? மே 13 மதியம் உம்ம டங்கு டணால் ஆகும். அப்போ இருக்குடி!

    ReplyDelete
  41. What happened now?

    ReplyDelete
  42. //ஆக எல்லா சாதக பாதகங்களையும் வைத்து ஆராயும் போது, நாங்கள் வெற்றிக்கோட்டை தொட்டு விட்டோம்.//

    இப்புடி உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடம்பை ரணகளப் படுத்திட்டிங்களே மாயவரத்துக்காரரே! யப்பா!உங்களை மாதிரி ஜால்ரக்களை விட அவுகளே பரவால்லை! வாணாம், வலிக்குது அளுதுருவேன்!

    வெடிவேலு

    ReplyDelete
  43. ஹஹ்ஹா நீயும் உன்னோட கருத்து கணிப்பும் முட்டா பயலே ; உன்னோட மூடத்தனமான திமுக பாசத்தால இப்படி முட்டா பய மாதிரி பதிவு போடுறியே
    ஹஹஹா

    ReplyDelete
  44. Maappu vechuttaanga aappu....
    nallathu senja mattum pothaathu, makkal manasula veruppu uruvaagaama aatchi nadathanum....

    ReplyDelete
  45. ilai malarnthaal ezham malarum

    ReplyDelete
  46. திமுக வெற்றிக் கோட்டை தொட்டது எப்படி???

    தலைப்பை மாத்துங்கன்னா

    திமுக கோட்டை விட்டது எப்படி???

    ReplyDelete
  47. அதை விட இப்படி சொல்லலாம் 'திமுக ரிவர்ஸ் கியர் போட்டது எப்படி?'

    ;-)

    ReplyDelete
  48. இப்புடி உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடம்பை ரணகளப் படுத்திட்டிங்களே

    ReplyDelete
  49. இப்பதான் உங்க இந்த பதிவை படித்தேன் .... உங்களையெல்லாம் என்ன சொல்வதென்றே தெரியவில்லை ..... நாட்டை கொஞ்சம் திருந்த விடுங்கையா? கொள்ளை அடிச்சா அவன் அப்பனா இருந்தாலும் புள்ள கல்லால அடிக்கணும் ... அவன்தான் புள்ள ...

    ReplyDelete
  50. அற்புதமான பதிவு! ஹா ஹா ஹா! கொஞ்சம் லேட்டா வந்துட்டேன்! இன்று 06.07.2011!

    ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))