பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

April 29, 2011

துளசி டீச்சர் பதிவை திருடிட்டாங்க!





(படம் நன்றி: பித்தனின் வாக்கு சர்வம் சிவமயம் வலைப்பூ)

துளசி டீச்சர் கூடவா இப்படி செய்வாங்க? என ஆச்சர்யத்துடன் வந்து படிக்கும் கனவான்களே முழுசா படிங்க. பின்ன தான் புரியும் துளசி டீச்சரின் பதிவை யாரோ திருடிட்டாங்கன்னு:-))

நான் கிட்டத்தட்ட இந்தியாவில் எல்லா இடமும் போயிருக்கேன். அது போல முழு வளைகுடாவும் சுற்றி இருக்கேன். ஆனால் எங்கே எங்கே போனேன். எப்படிப்போனேன் யார் என் கூட வந்தாங்க. அதன் நினைவுகள் என்ன? போன இடத்தின் சிறப்பு என்ன? என எதுவுமே தெரியாது. ஏனனில் எதையுமே ஆவணப்படுத்த ஒரு டைரி கூட எழுதி வைத்துக்கொண்டது கிடையாது.

ஆனால் நம்ம துளசி டீச்சர் தன் வீடு கட்டுவது முதல் தான் சென்று வந்த இடங்கள் வரை புகைப்படங்களோடு அந்த இடத்தின் சிறப்புகள், அங்கே வசிக்கும் தமிழர்கள், தமிழ்சங்கம், போன்ற அனைத்து விபரங்களோடும் நகைச்சுவையோடு படிக்க சுவாரஸ்யமாக நமக்கு தரும் பாங்கே தனி அழகு தான். அதே இடங்களுக்கு நாம் சென்று வந்திருந்தால் 'அட டே அந்த இடம் இப்போ இப்படியா மாறிப்போச்சு?" என மனதில் நினைத்து கொண்டு அன்றைய துளசி டீச்சரின் பதிவை வைத்து அதில் இருக்கும் புகைப்படங்கள் வைத்து 'அப்டேட்" செய்து கொள்கின்றோம். போகாத் இடமாக இருந்தால் அந்த இடங்கள் பற்றி ஏற்கனவே இருந்த ஒரு மாயை கற்பனையை அழித்து விட்டு அந்த உண்மையான நிலையை பதிந்து கொள்கின்றோம். (நான் கூட பல வருடங்கள் சென்னை என்றாலே வடிவேலு நடித்த சொர்க்கலோகத்தில் நா. அழகப்பன் படத்தில் வருவது போல சொர்கம் மாதிரியாகத்தான் நினைத்து கொண்டிருந்தேன் என்பது பதிவோடு சம்மந்தப்படாத விஷயம்)

விஷயம் அதுவல்ல. ரொம்ப சிம்பிள். ஆயிரம் பதிவு கண்ட அந்த அபூர்வ துளசி டீச்சர் தன் பயண அனுபவங்கள் குறித்து புத்தங்கள் கூட எழுதி பிரபலம் ஆனவர். அந்த பிரபல பதிவரின் பதிவையே பித்தன் என்பவர் அப்பட்டமாக காபி அடித்து அவர் பதிவு போலவே வெளியிட்டு இருப்பது கண்டனத்துக்கு உரிய செயலாகும். இதோ அந்த பதிவின் சுட்டி.

இப்படி செய்யும் போது சம்மந்தப்பட்ட பதிவரிடம் அதற்கான அனுமதியை பெறவில்லை என்பது அந்த பதிவில் டீச்சரின் பின்னூட்டம் வாயிலாக அறிய முடிகின்றது. அந்த பின்னூட்டத்திலே அவரது மன வலியும் உணரப்படுகின்றது. திருடியவருக்கு அன்றைக்கான சந்தோஷம். சும்மா கிடைத்தது தானே என அந்த திருடப்பட்ட பொருளின் அருமையை கூட தெரியாமல் பயன் படுத்துவர். ஆனால் உழைத்து உழைத்து அதை உண்டாக்கியவனின் வலி இருக்கின்றதே, அந்த வலி உணர்ந்தால் மட்டுமே புரியும். எனக்கு தெரிந்து ஒரு திருடன் கதை பாட்டி சொன்ன கதை, ஒரு திருடன் எங்கேயோ ஒரு வைரக்கல்லை திருடி வந்து விட்டான். அவன் வீட்டில் மின்சாரம் கிடையாது. அது ஒரு விலை மதிப்பு இல்லா வைரம் என்றெல்லாம் அவனுக்கு தெரியாது. அவன் வீட்டில் ஒரு கழிவறை உண்டு கொல்லை கடைசியில். இருட்டில் அங்கே செல்லும் போது கால் தடுக்கி விழாமல் இருக்க அந்த வைரத்தை அங்கே கழிவறையில் கால் வைக்கும் இடத்தில் புதைத்து வைத்தான். அதன் வெளிச்சத்தில் தடுக்கி விழாமல் இருந்தான். அவனுக்கு என்ன? எவன் வீட்டு வைரமோ. சும்மா கிடைச்சுது. அதை கழிவறையில் வைத்தால் அவனுக்கு என்ன? ஆனால் உழைத்து சம்பாதித்தவன் அதே அந்த வைரத்தை அங்கேயா வைப்பான்? அதே கதை தான் இங்கேயும். தான் கஷ்டப்பட்டு உழைத்த அந்த பதிவு நாம் சிலாகித்து படித்த அந்த பதிவு இப்போது அந்த பித்தன் என்பவரின் வலைப்பூவில். இதை எல்லாம் கண்டிக்க வேண்டும்.

ஏற்கனவே அங்கொன்றும் இங்கொன்றுமாக இந்த மாதிரி பதிவு திருட்டுகள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. இதற்கெல்லாம் என்ன காரணம்? புதிதாக பதிவு எழுத வருபவர்கள், முதலில் வலைப்பூ, அதை எப்படி எழுதுவது என்றெல்லாம் தெரிந்து வைத்து கொண்டவுடன் "தன்னை தவிர இந்த உலகில் இப்படி ஒரு விஷயம் யாருக்கும் தெரியாது" என நினைத்து கொள்வது தான் முதல் தவறு. நீங்கள் சத்தமாக வாயுபிரித்தால் கூட சக பதிவருக்கு தெரிந்து இணையத்தில் செய்தியாக வந்து விடும் அளவு உலகம் மிகச்சிறியது என அவர்களுக்கு புரிவதே இல்லை. அந்த பித்தனின் பதிவில் சென்று உங்கள் "அட்வைசை" இலவசமாக பொழியுங்கள். நீங்க கொடுக்கும் இலவச அட்வைஸால " இனி நான் பதிவு திருட்டு செய்யவே மாட்டேன் போ" என கோவிச்சுகிட்டு அந்த ஆள் போகனும். நம் துளசி டீச்சருக்கு : டீச்சர் கூல்... கூல்.. இப்பவாவது புரிஞ்சுகுங்க. நீங்க ஒரு தலை சிறந்த சூப்பர் ஸ்பெஷல் பதிவர் என. எங்களை எல்லாம் திருட கூட யாரும் வர மாட்டேன்னு அடம் பிடிக்கிறாங்க. என்ன ஒரு அழிச்சாடியம் அந்த திருடர்களுக்கு? எங்க பதிவுகள் அத்தனை ஒரு கேவலமா போச்சா?

8 comments:

  1. தலைப்புலே ஒரு கமா விட்டுப்போயிருக்கு!

    டீச்சர் அண்டு பதிவை ரெண்டுக்கும் நடுவில் போடுங்க ஒரு கால்புள்ளி.

    ReplyDelete
  2. டீச்சர்! அபிடாடி அது மட்டுமா செஞ்சிருக்காரு, பாருங்க படத்தின் கீழே நன்றி யாருக்கு சொல்லியிருக்காருன்னு. ஒரு படத்தை எங்கே இருந்து சுட்டோம்னு கூட சொல்லி நன்றி சொல்லனும்னு பித்தனுக்கு உணர்த்தியிருக்காரு போல... வெவரமான மனுஷ்ன்:-)))

    ReplyDelete
  3. துளசி டீச்சர் கமா இல்லாமலே இருக்கட்டும். பரபரப்பான தலைப்பா இருந்தாத்தான் நிறைய பேர் படிப்பாங்க. இல்லைன்னா அபி டாடி வழக்கம்போல மொக்கை போட்டிருக்காருன்னு கடந்து போயிருவாங்க. :)))

    ReplyDelete
  4. சீரியசான மேட்டர்.. ஆனாலும் படத்த பாத்து சிரிச்சிக்கிட்டே இருக்கேன்...

    ReplyDelete
  5. That blog is not available now. He removed it... aiyo paavam pathivu thirudan......

    ReplyDelete
  6. இதுக்கு நான் போட்ட கமெண்டைக் காணோமே? :(

    ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))