பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

May 3, 2011

இட்லி நெய் ஜீனி -- மே 3ம் தேதி 2011

காலை முதலே கொஞ்சம் பரபரப்பா இருந்துச்சு. என் அபி , என் அக்கா வீட்டிற்கு குடந்தைக்கு போனவ இன்னும் வரலை என்னும் கோவம். அம்மா கூட நேத்து திட்டியாச்சு. "புள்ளய பிறந்த நாளுக்கு வீட்டிலே வச்சிக்காம என்னடா இது. அதான் கிராமத்திலே சொல்லுவாங்க " வேண்டா வெறுப்பா புள்ளய பெத்தவன் காண்டா மிருகம்னு பேர் வச்சானாம்"

ஹே! அம்மா நான் அப்படியா பெத்தேன். உன் டார்ச்சர் அளவே இல்லாம போகிடுச்சுன்னு நினைச்சுகிட்டேன். காலை அபி வந்தாள்.

"அப்பா"

"எ ன் கிட்டே பேசாதே"

"சரிப்பா"

"என்ன சரிப்பா? ஏன்னு கேட்க மாட்டியா?"

அமைதி. அப்பா கோவமா இருக்கனாம். பின்னே அமைதியா அபி கிட்டே வந்தேன்.

"அப்பாவுக்கு என்ன வாங்கி வந்தே?"

"அடச்சே!"

இது கண்டிப்பாக அபிஅம்மாதான்னு எல்லாருக்கும் தெரியும்.

இப்படியாக இன்றைய பொழுது போனது. போனது அப்படியே போயிருக்கலாம். நடுவே கவிதா அதாங்க அணில் கவிதாவின் போன். நான் பேசவில்லை. அபி தான் பேசினா. எல்லாம் நல்லா தான் முடிஞ்சுது.

பின்னே நான் கவிதாவுக்கு நன்றி சொன்னேன். அப்போது டாக்டர் ரோகினி இரவு 12 மணிக்கு போன் செஞ்சதையும் அதுக்கு முன்னே என் தங்கை ஜெ சொன்ன வாழ்த்தையும் சொன்னேன். "இதுக்கு எதுக்குங்க நன்றி"ன்னு சொன்னாங்க.

நானெல்லாம் ஏங்கி இருக்கேன். எனக்கு பிறந்தநாள் வாழ்த்து கூட யாரும் சொன்னதில்லை. அஃப்கோர்ஸ் அதல்லாம் எனக்கு தெரியவும் தெரியாது என சொன்ன போது கவிதாவுக்கு ஆச்சர்யம் கூட வந்திருக்கலாம்.

"அட என்னங்க அபிஅப்பா அது கூடவா தெரியாது?" என கேட்ட போது சொன்னேன் " இல்லீங்க நாங்க எங்க நண்பர்கள் எல்லாருமே 27.06.1966 ன்னு ஒரே நாள் தான் பிறந்தோம். என சொல்ல அந்த விபரீதத்தின் காரணம் என்ன என கேட்க நினைத்து "அதுக்கு காரணம் யாரு?"ன்னு கேட்க, அதுக்கு துண்டு முறுக்கிசார் தான் காரணம் என நான் சொன்னா அது எக்கு தப்பா ஆகிவிடும் என்பதால் "அதுக்கு காரணம் சாதாரண காது தான்" என சொல்ல, பின்னர் தான் வலது கையால் இடது காதை சுத்தி மூக்கை தொட்டா ஐந்து வயது என்கிற சூப்பர் பார்முலாவை கவிதாவுக்கு சொல்ல கவிதா அதை ட்ரை பண்ண பின்னே " என்ன அபிஅப்பா எனக்கு இன்னமும் தொட முடியலை"ன்னு சொல்ல அதை கேட்ட அபி தொட முயற்சிக்க, நானும் முயற்சிக்க, நட்ராஜும் ட்ரை பண்ண, இதை எல்லாம் பார்த்த அபிஅம்மா " என்ன இது கவிதா தான் விளையாட்டுக்கு சொல்றாங்கன்னா நீங்க எல்லாருமா ட்ரை பண்ணுவீங்க, போங்க போங்க போய் அடுத்த வேலை பாருங்க" என சொல்லிவிட்டு கொல்லை பக்கம் போய் காதை சுத்தி மூக்கை தொட்ட போது தான் புரிந்தது. ஆக ஓட்டு மொத்த குடும்பமே அணில் கவிதாவால் பல்பு வாங்கியது! நல்லா இருங்க கவிதா!

*******************************

பின் லேடனை சாகடிச்சாச்சு. அடுத்து?? எனக்கு என்னமோ இதிலே கலைஞர் பார்முலா சரிதானோன்னு படுது. ஒருத்தன் சரியில்லைன்னா அதுக்கான காரணம் பார்க்கணும். திரும்பவும் பழமொழிக்கு வர்ரேன். "எரியுறதை இழுத்தா கொதிப்பது தானா அடங்கும்" . இதை தான் செய்தார் கலைஞர். சிதம்பரத்தில் ஒரு காலத்தில் (சமீபமாக) இரவு எட்டு மணிக்கு எல்லாம் பஸ் நிறுத்தப்படும். ஊரே சவக்கிடங்கு மாதிரி இருக்கும். காரணம் பிரேம்குமார் வாண்டையார். பின்னெ அவர்களை பிடிக்க திமுக ஆட்சியில் 1996- 2001ல் பெரும் முயற்சிக்கு பின்னே இப்போது கோவையில் இருக்கும் சைலேந்திரபாபு தலைமையில் டீம் போட்டு "பிடி ஆனா பிடிக்காதே" என சொல்லி அப்பொதைய எல்லா தினசரியிலும் " வாண்டையார் குரூப் தன்னை காப்பாத்திக்க ஒரு நாளைக்கு செலவிடும் தொகை பத்து லட்சம்" அப்படின்னு வந்தது. அப்படியே விட்டார். ஆக மொத்த அத்தனை சொத்தும் போயே போச்சு. பின்னே அரஸ்ட். இப்போ கதை வேற. கெட்டவங்க திருந்தனும் அத்தனையே என நான் சொன்னால் அதை அரசியலா பார்ப்பீங்க, அதை விடுங்க!இப்போ தேர்தலை சந்தித்த அந்த கட்சி பாவம் ஓட்டுக்கு வெறும் 50 ரு மட்டுமே கொடுத்ததாக கமிஷன் வரை புகார். கமிஷன் மீதி பணத்தை வாங்கி கொடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்ப்பு! அந்த ஏழை ஜெயிக்க வேண்டும் அதான் ஜனநாயகத்துக்கு நல்லது:-))

அது போல அல்கொய்த்தாவின் அத்தனை சொத்தும் போகும் அளவு அமரிக்கா செய்து விட்டு அவன் ரேஷனில் 35 கிலோ ஓ ஏ பி அரிசி வாங்கும் அளவு கொண்டு வந்து பின்னர் அவன் சுகரில் செத்த பின்னே அவன் சவத்தில் மீது நின்னுகிட்டு போஸ் கொடுத்து இருக்கலாமோ... என்னவோ போங்க நான் சொன்னா யார் கேட்பாங்க!

******************************

தேர்தல் ரிசல்ட் வரும் மே 13! எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் எம் ஜிஆர் ஜெயித்தார். கலைஞர் ஜெயிக்கும் காலத்தில் நான் அப்பா காசில் இருந்து என் காசுக்கு வந்து விட்டேன். அதனால் வெடிக்கு செலவழிக்க மனசு இல்லை. ஆனாலும் இந்த முறை ரிசல்ட் நாளன்று ஒரு இடம் பிடித்து இருக்கின்றேன். மாயவரம் தள்ளி ஒரு பத்து கிமீ தூரத்தில். நல்ல பெரிய டீவி. சன் டைரக்ட், ஜெனரேட்டர், குடிக்க பல கேஸ் பெப்சிகள், சில பல கோழிகள், வான் கோழிகள், சமையல் காரர், லைட்டா வெடிகள் இத்யாதிகள் என. ஒத்த அலைவரிசை இருப்பவர்கள் கூட இருந்தா ஒரு சந்தோசம். இல்லாவிடினும் சந்தோசம். கலந்துக்க ஆசைப்பட்டவங்க கலந்துக்கலாம்! பை தி பை.. இரண்டு லேப்டாப்ப்புகள் அதற்கான கனக்ஷன் கூட ரெடி:-))

_______________________________________________-பதிவுலகம்:- 1. வினவு சமீபத்தில் எழுதிய ஒசாமா பதிவு நன்றாக இருந்தது. 2. விருச்சிககாந்த் என்னும் பெயரில் எழுதும் திமுக நண்பர் எழுதுவதும் பிடித்து இருக்கு. ஆனாலும் சில பல சமயம் மன முதிர்வின்றி சக பதிவர்களை குறி வைத்து தாக்குவது பிடிக்கவில்லை. 3. பதிவர் அப்துல்லா பஸ் மட்டும் ஓட்டுகின்றார். சமீபத்தில் அவர் தான் எம் பி ஏ சத்யபாமா கல்லூரியில் படித்ததை எழுதினார். பிடித்தது. ஆனால் சிகப்பா, குண்டா இருப்பவங்க எல்லாம் ஐ ஐ எம்ல எம் பி ஏ படிச்சவங்க என்று யாராவது சொன்னா நம்மமாட்டாத அளவுக்கு அந்த பிம்பத்தை உடைத்து விட்டார் எனவும் பொருள் கொள்ளலாம். இனி யாரும் ஒருஜினல் ஐஐஎம்மை கூட நம்ப மாட்டாங்க! 4. கட் பேஸ்ட் அதிகமாக இருப்பதால் இனி தமிழ்மணம் திரைமணம் என தனியாக பிரிப்பது போல கட் பேஸ்ட் என தனி பிரிவு கொண்டு வரலாம்.. இது யோசனை மட்டுமே. நிராகரிக்க தமிழ்மணத்துக்கு சர்வ சுதந்திரமும் என் பொதுக்குழுவில் முடிவெடுத்து குடுத்து விட்டேன்.

16 comments:

  1. சித்தப்பு, அது ஐபிஎம் இல்லே. ஐஐஎம்.

    ReplyDelete
  2. இளா!எனக்கு என்ன தெரியும் அதல்லாம். ஐல ஆரம்பிக்கும். மூணு எழுத்து. அத்தனையே. அதை படிச்சவங்க, படிச்சதா சொன்னவங்க, அதை நம்பினவங்க எல்லாம் கவலைப்பட வேண்டிய விஷயம்ன்னு வெள்ளேந்தியா இருந்துட்டேன்:-)) மாத்திட்டேன்:-))

    ReplyDelete
  3. விருச்சிககாந்த் வாழ்க.

    ReplyDelete
  4. திமுக தோற்கிறதுக்கெல்லாம் கூட கொண்டாடுவீய்ங்களா?! அடடே!

    ReplyDelete
  5. எனக்கு இட்லி நெய் சீனி வேண்டாம். இட்லி நெய் மிளகாய் பொடிதான் வேண்டும்

    ReplyDelete
  6. //ஆக ஓட்டு மொத்த குடும்பமே அணில் கவிதாவால் பல்பு வாங்கியது! நல்லா இருங்க கவிதா!// தப்பு தப்பா சொல்லிக்கொடுத்தா இப்படித்தான் ஆகும்.

    ஸ்கூல் சேர்க்க, கையை சுற்றி காதைத்தான் தொட்டுக்காட்டனும் நீங்க மூக்குன்னு சொன்னதால, மூக்கை தொட்டு பார்க்க, தொடாமல், தொடர்ந்து கையை இழுத்து கழுத்தை திருப்பி எப்படியோ தொட்டுட்டோமில்ல... இதுல கூட ஆன்லைன் ல இருந்த சில பேரையும் தொடவச்சி.. ஹி ஹி அவங்க எல்லாம் ஆபிஸ் ல வேற இருந்தாங்க.. :))) எப்பூடீஈ? !

    ReplyDelete
  7. Hi Thols
    Thaj Annanukkum ithey formula padi 26.06.66 than birth day

    ReplyDelete
  8. Kozhi matrum vaan kozhikaga, unga kuda vandhu result pakanumnu aasai than... Aana adhukaga ooruku varathu than konjam kazhtam :-( anyways, ve a a good time anna...

    ReplyDelete
  9. எதிர்கட்சி ஜெயிக்கறதை கொண்டாடப்போறிங்க..அபி அப்பா என் ஜாய்..(தீ.வெ.யும் கூப்பிடுங்களேன்):-)

    ReplyDelete
  10. //
    கலைஞர் ஜெயிக்கும் காலத்தில் நான் அப்பா காசில் இருந்து என் காசுக்கு வந்து விட்டேன். அதனால் வெடிக்கு செலவழிக்க மனசு இல்லை.
    //
    அடப்பாவி மனுஷா..

    ReplyDelete
  11. இனி யாரும் ஒருஜினல் ஐஐஎம்மை கூட நம்ப மாட்டாங்க! //
    O.K...

    ReplyDelete
  12. என்ன அபி அப்பா ?
    பல்லிடுக்கில சிக்கின பாக்கு தூளை துப்பினீங்களே...
    இப்போ உங்க அகங்காரத்துக்கு தண்டனையா, திரும்பி நிக்கவச்சு துப்பீட்டங்களே மக்கள் .. இதுக்கு ஒரு பதிவு போடுங்க..

    ReplyDelete
  13. என சொல்லிவிட்டு கொல்லை பக்கம் போய் காதை சுத்தி மூக்கை தொட்ட போது தான் புரிந்தது//

    நல்லா வாய்விட்டுச் சிரிச்சேன். தாமதமான வாழ்த்துகள்.

    பி.கு. அது சரி, யாருக்குப் பிறந்த நாள்???? :)))))))

    ReplyDelete
  14. மறந்துட்டேனே, என்னை ஞாபகம் வைச்சுட்டிருக்கீங்களானே தெரியலை! நான் பாட்டுக்குக் கலாய்ச்சுட்டு இருக்கேன். :(

    ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))