பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

August 7, 2011

புதிய தலைமை செயலகத்தின் இருட்டு ஜெயாவின் அகங்காரத்துக்கு போடப்பட்டுக் கொள்ளப்பட்ட ஆயிரம் வாட்ஸ் பல்பு!!!

(நன்றி: தி ஹிண்டு, எஸ். ஆர். ரகுநந்தன், தி ஹிண்டு 7.8.2011)



இன்றைய "தி ஹிண்டு" நாளிதழில் ஒரு அருமையான போட்டோ இட்டு ஒரு கட்டுரை வந்துள்ளது. அதன் லிங் போக இங்கே அமுக்கவும். அதாவது திமுக அரசால் கட்டப்பட்ட புதிய தலைமை செயலகம், சென்னை மத்தியில் ஒரு முக்கியமான இடத்தில் எபடி இப்போது சீரழிந்து வருகின்றது என்பதற்கு சாட்சியாக அந்த கட்டுரை.

நேற்று நம் சக பதிவரான சக்தி செல்வி அவர்கள் கூட இது சம்மந்தமான ஒரு விஷயம் கூகிள் பஸ்ல் பகிர்ந்து கொண்டார்கள். அதன் சுட்டிக்கு செல்ல இங்கே அழுத்தவும். அந்த புதிய தலைமை செயலகத்தின் சிறப்புகள் பற்றி முன்பே ஒரு சக பதிவர் திரு. கீதப்பிரியன் எழுதிய ஒரு லிங் போக இங்கே அழுத்தவும்.

புதிதாக அமைந்த அதிமுக அரசு மாணவர்கள் மீது அதன் பெற்றோர்கள் மீது தன் ஈகோவை செலுத்துவது ஒரு பக்கம் இருக்கட்டும்.பரவலாக எல்லா நடுநிலைவாதிகளாலும் இது இப்போது இந்த சமச்சீர் கல்வி விஷயத்தில் தெரிந்து விட்டது. ஆனால் அதே போலவே தான் மற்ற எல்லா விஷயங்களிலும் நடந்து கொண்டிருப்பது எல்லோருக்கும் தெரிய வேண்டும் என்பதே இந்த பதிவின் நோக்கம்.

ஒரு சாதாரண வீடு கூட ஒரு வாரம் பூட்டிவிட்டு வெளியூர் சென்றார்களேயானால் அங்கே வெளிச்சமோ, ஆள் நடமாட்டமோ இல்லையெனில் பெருச்சாளி புகுந்து நாசம் செய்யும். அதுவும் அந்த கட்டிடத்தின் உள்ளே இருக்கும் மீன் தொட்டி மீன்கள் எல்லாம் இன்னேரம் பூனை சாப்பிட்டிருக்கும். ரொம்ப மனசுக்கு கஷ்டமான ஒரு விஷயம். எது எதுக்கோ போராட்டம் நடத்தும் திமுக இதற்காக நடத்தாமல் இருப்பது ஏன் என்று தெரியவில்லை. அந்த கட்டிடம் இருட்டாக இருட்டாக அந்தம்மாவின் அகங்காரம் வெளிச்சம் போடப்படுது மக்கள் மனதிலே, அதனால அப்படியே போகட்டும்னு விட்டுட்டாங்க போலிருக்கு:-( ஒரு பொதுவான நடுநிலைவாதிகளும், அதிமுக ஆட்சியை தாங்கிப்பிடிக்கும் மவுண்ட் ரோடு மஹாவிஷ்ணுவும் கூட இந்த விஷயத்தில் இப்படி வேதனைப்படுவது என்றால் அந்த கட்டிடத்தின் நிலை என்ன இப்போது என நன்றாக உணர முடிகின்றது:-(

மக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்ட ஒரு தலைமைச்செயலக கட்டிடத்தை தன் சொந்த ஈகோவால் இப்படி பாழ் செய்யும் அந்த கட்டிடத்தை "வேறு எதற்கெல்லாம் பயன்படுத்தலாம் " என ஆலோசனை கேட்டு "தி ஹிண்டு" அறிவிக்கும் அளவு நம் வரிப்பணம் என்பது நாதியற்றுப்போனதை நினைத்து வேறு வழியில்லை... அமைதியாக அழத்தான் முடியும்.... தலைமைச்செயலக மீன் தொட்டியில் இருக்கும் மீன்களைப்போல. தண்ணீரிலே மீன் அழுதால் கண்ணீரைத்தான் யார் அறிவார்??

நேற்று திருவாரூர் பொதுகூட்டத்திலே துரைமுருகன் பேசிய பேச்சு:

\\ அந்த புதிய தலைமை செயலகம் கட்டும் போது ஒரு நாள் கலைஞர் எங்களிடம் "தினம் தினம் என் ரூமையே கொண்டு வந்து காட்டுகின்றீர்களே, அந்தம்மா ஜெயலலிதா - எதிர்கட்சி தலைவர் ரூமை கொண்டு போய் காட்டுங்கய்யான்னு சொல்ல அந்த சர்க்கர நாற்காலி அங்கே திருப்பப்பட்டது. அந்த ரூமுக்கு வெளியே "கோ க மணி அறைக்கு போகும் வழி" என ஒரு அம்புக்குறி போடப்பட்டு அந்த அம்பு இந்த அம்மையார் ரூமை சுட்டிகாட்டுவது போல அம்புபாய்வது போல இருந்தது, உடனே இவர் "முதலில் அந்த அம்புக்குறியை அகற்றிவிட்டு ஜெ.ஜெயலலிதா என்ற போர்டை மாட்டுங்கப்பா என உத்தரவிட்டுவிட்டு உள்ளே போய் பார்த்து விட்டு "இது போதாது, இன்ன்னும் ரெண்டு ரூம் போடுங்க, என் அறை முதல்வர் அறை எப்படி இருக்கோ அதே போலத்தான் அந்தம்மா அறையும் இருக்க வேண்டும்" என உத்தரவிட்டார்...\\ ஊடகங்கள் நேற்று திருவாரூரில் அதே கூட்டத்தில் கலைஞர் சொன்னது போல "கோந்து" போட்டு வாயை மூடிக்கொண்டு இருக்கின்றன. ஹூம்... வாழ்க ஜனநாயகம்!


புதிய தலைமை செயலகத்தின் இருட்டு ஜெயாவின் அகங்காரத்துக்கு போடப்பட்டுக் கொள்ளப்பட்ட ஆயிரம் வாட்ஸ் பல்பு!!!

9 comments:

  1. ஜெ புதிய அவதாரம் எடுத்திருப்பதாக புளகாகிதம் அடைந்த அறிவு ஜீவிகள் இதற்கும் ஏதாவது அறிவான விளக்கம் கொடுப்பார்கள்.மக்கள் காசாவது,மண்ணாங்கட்டியாவது,அந்த காலத்து அரச்ர்கள் எதிரி நாட்டை பிடித்துவிட்டால் எதிரி அரண்மணையை தரைமட்டமாக்கி கழுதையை ஏர் பூட்டி உழுது அவமானப்படுத்துவார்களாம்.அதுதான் ஞாபகம் வருகிறது.

    ReplyDelete
  2. நல்ல பதிவு.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. //
    ஒரு சாதாரண வீடு கூட ஒரு வாரம் பூட்டிவிட்டு வெளியூர் சென்றார்களேயானால் அங்கே வெளிச்சமோ, ஆள் நடமாட்டமோ இல்லையெனில் பெருச்சாளி புகுந்து நாசம் செய்யும்
    //
    சரியா சொன்னீங்க மாம்ஸ்....
    சரியான பராமரிப்பு இல்லயேல், அந்த இடம் வீணாய்போகப்போவது நிச்சயம்...

    ReplyDelete
  4. நாம தான் கமிஷன் வாங்கி சுவிஸ் பேங்க்ல போட்டாச்சுல .
    பிறகு எதுக்கு பொலம்பனும் ?

    ReplyDelete
  5. 30 சதவிதம் மட்டுமே முடிவுற்ற பணிகள்....மிக கேவலமான ஒரு டிசைண்....சினிமா செட் கூரை
    இந்த அக்க்ரமெல்லாம் செஞ்சிட்டு...வேண்டாம் விடுங்க

    ReplyDelete
  6. இதுக்கும் ஒரு நாள் அவங்க பதில் சொல்லணும். சமச்சீர் கல்வில சொன்ன மாதிரி

    இப்படில்லாம் பணத்தை வீண் பண்ணிகிட்டு, வரிய ஏத்தறதுக்கு மட்டும் பணம் இல்லன்னு காரணம் சொல்வாங்க.:-(

    ReplyDelete
  7. Swiz bankla irukkara antha 35000 Kodi'la irunthu eduthu sari pannikkalaam, vidunga.....

    ReplyDelete
  8. Swiz bankla irukkara antha 35000 Kodi'la irunthu eduthu sari pannikkalaam, vidunga.....

    ReplyDelete
  9. உங்க கருத்து நியாயம்தான் அண்ணே!

    ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))