பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

May 15, 2012

தகதகத்தாய சூரியன் பொய்மேகங்கள் கலைத்து வெளியே வந்தது!!!




இரண்டாம் அலைக்கற்றை விவகாரத்தில் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு தொகை ஊடகங்கள் மற்றும் சி ஏ ஜி  மதிப்பில் (???!!!) ஒரு லட்சத்தி எழுபத்தி ஐந்தாயிரம் கோடி ரூபாய் இந்திய பணம் என்பதில் தொடங்கி பின்னர் சி பி ஐ கணக்குப்படி  35000 கோடி  என்று வழக்கு பதிவும் செய்து கடந்த பிப்ரவரி இரண்டாம் தேதி 2010ம் ஆண்டு திமுகவை சேர்ந்த நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினரும்,  முன்னாள் தொலை தொடர்பு அமைச்சருமான ஆ.ராசா அவர்கள்  கைது செய்யப்பட்டு இன்று 15 மாதங்கள் முடிவடைந்து விட்டன.கடந்த ஏப்ரல் இரண்டாம் தேதி 2010ம் ஆண்டு முதல் தகவல் அறிக்கையும் சி பி ஐ ஆல் தாக்கல் செய்யப்பட்டது.  அவருடன் மற்றும் அவருக்கு பின்னர் இதே வழக்கில் கைது செய்யப்பட்ட மீதம் 16 பேரின் பிணை வழக்குகள் விசாரிக்கப்பட்டு சி பி ஐ நீதிமன்றத்தின், டெல்லி உயர்நீதிமன்றத்தில், சில உச்சநீதிமன்றத்தில் கூட பிணை கொடுக்கப்பட்டு அவர்கள் விடுதலையும் செய்யப்பட்டு அவர்கள் தினம் தோரும் வழக்கிற்காக நீதிமன்றம் (விடுமுறை நாட்களை தவிர்த்து) வந்து விசாரனை நடைபெற்று கொண்டு இருக்கின்றனர்.


இதுவரை  40 சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளனர். அவர்களது வாக்குமூலங்கள் 1500 பக்கங்களுக்கு மேலாக பதிவு செய்யப்பட்டுள்ளன. 100க்கும் மேலான வழக்கு ஆவணங்கள் சமர்பிக்கப்பட்டு அதன் மீதான சரிபார்ப்பு மற்றும் பரிசீலனையும் முடிந்தும் விட்டன. அதாவது கிட்டத்தட்ட வழக்கு பாதிக்கும் மேலாக முடிவடைந்து விட்டது.

இதுவரையிலான வழக்கில் ஆ.ராசா அவர்கள் தரப்பில் இருந்து நீதிமன்றத்துக்கும், வழக்கு தொடுத்துள்ள சி பி ஐ க்கும் எவ்வித முட்டுக்கட்டைகளும் போடப்படவில்லை என்பதும் விசாரணை வாய்தாக்கள் கேட்கப்படவில்லை என்பதும் முழுமையான ஒத்துழைப்பு தருவதாக சி பி ஐ கூட தெரிவித்து இருப்பதும் எல்லோராலும் ஒத்துக்கொள்ளப்பட்ட உண்மை. இதே இந்திய நாட்டின் முதலமைச்சராக இருக்கும் ஜெயலலிதா போன்றவர்கள் தங்கள் மீது நிலுவையில் இருக்கு வழக்குகளில் எப்படி எல்லாம் வழக்கை இழுத்தடிக்கும் கூத்துகளும் நடந்து கொண்டு இருக்கின்றன, அதிலே எல்லாம் எத்தனை முறை வாய்தா வாங்கப்பட்டு கொண்டு இருக்கின்றன என்பதும், தனக்கு வழக்கு விபரங்கள் இன்ன இன்ன மொழியில் வேண்டும் என்றெல்லாம் நீதிக்கு வித்தை காண்பித்து கொண்டு இருக்கின்றனர் என்பதையும் மக்கள் பார்த்து கொண்டு தன் உள்ளனர்.

இது இப்படி இருக்க.... இந்த வழக்கு உண்மையா? சி ஏ ஜி அறிக்கை என்பது திராவிட, தலித்தியத்தின் மீதான காழ்புணர்வானதா? அல்லது உண்மையிலேயே அத்தனை இழப்பு ஏற்பட்டதா? அதே போல மற்ற மற்ற துறைகளில் அரசுக்கு இழப்பு என்பதே இல்லையா? அரசுக்கு இழப்பு ஏற்படுவதால் மக்களுக்கு பயன் உண்டா? அல்லது அரசுக்கு இழப்பு ஏற்படும் போதெல்லாம் மக்களுக்கும் இழப்பு தானா? அரசு என்பது ஒரு கார்பரேட் கம்பனி போல மக்களிடம் நடந்து கொள்ள வேண்டுமா? அல்லது கனிவான தாயைப்போல நடந்து கொள்ள வேண்டுமா?  ராசா அவர்கள் வழக்கில் தானே பலமுறை வாதாடியும் வருகின்றாரே, அவர் என்ன மாதிரியான கருத்துகளை முன்வைக்கிறார்? சி பி ஐ இதுவரை வழக்கின் போக்கில் சரியான பாதையில் தான் போகின்றதா? பாரபட்சம் காட்டி செயல் படுகின்றதா? யாரால் இந்த வழக்கு பிரபல்யம் அடைந்ததோ அந்த நீரா ராடியா கைது செய்யப்பட்டாரா? ரிலையன்ஸ் இதில் முக்கிய குற்றவாளி என சொன்ன சி பி ஐ அம்பானிகளை கைது செய்யாமல் அவர்கள் கம்பனிகளின் அம்புகளை மட்டும் கைது செய்து விட்டு, வழக்கில் சம்மந்தப்பட்ட ஒரு கம்பனியில் கடன் மட்டுமே வாங்கியமைக்காக கனிமொழியையே கைது செய்தது அரசியல் காரணமா? வழக்கின் பின்னனி காரணம் என்னவாக இருக்கும்? என்னவாக இருக்க இயலும்? எந்த எந்த கட்சிகள் இதன் பின்னனியில் உள்ளன? என்ன என்ன இயக்கங்கள் இதன் உள்ளே புகுந்து ஆட்டுவிக்கின்றன? ஊடகங்கள் செய்த அயோக்கியத்தனம் இதில் என்ன? என்பன பற்றி எல்லாம் இதோ நவம்பர் 14 , 2010 அன்று தன் அமைச்சர் பதவியை துறந்து விட்டு ராசா அவர்கள் "தி ஹிண்டு" நாளேடுகளுக்கு அளித்த ஒரு முழுமையான நேர்காணலில் காண்போம்.

நாம் மேலே கேட்ட அத்தனை கேள்விக்கான பதிலும் அதில் இருக்கின்றன. ராசா என்பவர் ஒரு சாதாரண அரசியல் வாதி அல்ல. அவர் வாஜ்பாய் அரசில் இருந்து இன்றைக்கு இருக்கும் மன்மோகன் அரசு வரை "கேபினட் அமைச்சராக" பல ஆண்டுகள் பணியாற்றியவர். பல முறை பிரதமர்களால் தனது துறை சம்மந்தமாக பாராட்டுப்பெற்றவர். தனதுதொகுதி மக்களுக்கும், தான் சார்ந்த மாவட்ட மக்களுக்கும் அளவில்லா செயலாற்றியவர். மேலும் தான் ஒரு மிகச்சிறந்த வழக்கறிஞர் என இப்போது சி பி ஐ நீதிமன்றத்தில் நிரூபித்தவர். அவருக்காக நாம் யாரும் கட்டுரை எழுதி ஆதரிக்கிறேன் என "வக்காலத்து" வாங்கும் நிலையில் அவர் இல்லை. அதனால் அவர் வாதத்தை அவரே இங்கு வைக்கட்டும். நீதி  என்பது நீதிமன்றம் வழங்குவது மட்டும் அல்ல, மக்களே உங்கள் கையிலும் தான் உள்ளது. அவரது தரப்பு வாதத்தை கூர்ந்து படியுங்கள். அவர் என்னவோ ஆயிரம் ரூபாய் நோட்டு கட்டுகளாக கத்தை கத்தையாக கண்டெய்னரில் பெரம்பலூர் எடுத்து சென்றதாக பரப்பப்பட்ட செய்தியில் உண்மை உண்டா அல்லது தலித்திய காழ்புணர்சி மட்டுமே அதில் உள்ளதா என்பதை நீங்கள் எடை போடுங்கள்.

****************************************

கேள்வி : இந்தியத் தலைமைத் தணிக்கை அதிகாரியின் அறிக்கையிலிருந்து கசிந்ததாகக் கூறப் படும் பகுதி, அலைக் கற்றை ஒதுக்கீட்டில் உங்களது கொள்கை மூலமாக வும், மேலும் பல நிறு வனங்களை அறிமுகப் படுத்தியதன் மூலமாக வும், சில உரிமை நிபந்த னைகள் சில வற்றில் மாற்றங்கள் மூலமாகவும், அரசுக்கு ரூ.1.77 லட்சம் கோடி இழப்பு ஏற்படுத்தி விட்டதாகக் கூறப்படுகி றதே. தங்களால் விளக்க முடியுமா?

அமைச்சர் ஆ.இராசா : தற்போது எழுப்பப் பட்டுள்ள பிரச்சினைகளை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். முதலாவ தாக அரசுக்கு ஏற்பட்டு விட்ட தாகக் கூறப் படும் இழப்பு, இரண்டாவதாக நடை முறைத் தவறுகள்.

மத்திய அமைச்சரவையால் பரிசீலிக்கப் பட்டு நாடாளுமன்றத்தால் ஒப்புதல் அளிக்கப் பட்ட 1999ஆம் ஆண்டு தேசியத் தொலைத் தொடர்புக் கொள்கை ஏலமுறையிலிருந்து (94ஆம் ஆண்டு கொள்கை) வருவாய்ப் பங்கீட்டு முறைக்கு (99ஆம் ஆண்டு கொள்கை) மாற அதிகாரம் அளிக்கிறது. கசிந் துள்ள தணிக்கை அறிக்கை நாங்கள் ஏல முறையைக் கடைப் பிடித்து 3 ஜி படகில் கணக்கு ரீதியிலான பயணம் மேற்கொண்டி ருக்க வேண்டும் என்று கூறுகிறது. எனவே, தற் போது ஏற்பட்டுவிட்ட தாகக் கருதப்படும் இழப் புகணக்கிடப்பட்டுள்ள தற்கான அளவு கோலே சரியானதல்ல.

இங்கே நமக்குள்ள பிரச்சினை அரசியல் சட்ட ரீதியிலான ஒரு அமைப் பான தலைமைத் தணிக்கை அதிகரிக்கும் மற்றொரு அரசியல் சட்ட ரீதியிலான அமைப்புகளான மத்திய அமைச்சரவை, மற்றும் நாடாளுமன்றம் ஆகியவற்றிற்கு இடையிலான அபிப்ராய பேதம் (கருத்து வேறுபாடு ) ஆகும்.

தணிக்கை அதிகாரி, அமைச்சரவை, நாடாளு மன்றம் மற்றும் மற் றொரு அரசியல் சட்ட ரீதியிலான அமைப்பான தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணை யம், மற்றும் திட்டக் கமிஷன் ஆகியவற் றோடு ஒப்புக்கொள்ள முடியாததது போலத் தோன்றுகிறது. இப்படிப் பட்ட நிறுவன முறை மீறலுக்கு நீதித் துறை மூலமாகவோ அல்லது நாடாளுமன்ற அமைப்பு மூலமோ தீர்வு காணப் பட வேண்டும் என்பது எனது கருத்து.

கேள்வி: இந்தக் கொள்கையால் இழப்பு ஏற்பட்டு விட்டதாக எதிர்க்கட்சிகள் கூறும் ரூ.1.77 லட்சம் கோடி பற்றி?

அமைச்சர் ஆ.இராசா : 2 ஜி அலைக்கற்றை ஏன் ஏலம் விடப்படவில்லை என்ற அடிப்படைக் கேள் விக்கு ‘இந்து’ நாளேட்டில் எனது முந்தைய பேட்டி யில் விளக்கியுள்ளேன். மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து நாடாளு மன்றம் ஏற்றுக்கொண்ட 1999 ஆம் ஆண்டு தேசியத் தொலைத் தொடர்புக் கொள்கை ஆவணம் மறுப் பதால், 2ஜி அலைக்கற் றையை ஏலத்தில் விட முடியாது.
நாடாளுமன்றம்தான் கொள்கையை திருத்த முடியும்

பத்தாவது ஐந்தாண்டுத் திட்டம், பதினொறாவது ஐந்தாண்டுத்திட்டம், தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் (டிராய்) ஆகியவையும் 99 ஆம் ஆண்டு கொள்கை யின்படியே உள்ளன. 99 ஆம் ஆண்டு கொள்கை யில் ஏதாவது திருத்தம் தேவையென்றால் அதை நாடாளுமன்றம் மட்டும் தான் செய்ய முடியும்.
புதிய ஒருமைப் பயன் பாட்டு சேவை உரிமங்கள் மற்றும் 2ஜி அலைக் கற்றை வழங்குவதற்கான தற் போதைய கொள்கை 2003 ஆம் ஆண்டு நவம்பர் முதல் எந்தவித மாறுத லும் இன்றி, வெளிப் படையான கொள்கை யாக இருந்து வருகிறது. 2003 அக்டோ பர் 31 அன்று மத்திய அமைச்ச ரவையால் ஒப்புதல் அளிக் கப்பட்டக் கொள்கை யிலிருந்து எந்த விலகலும் இல்லை. 2003 நவம்பர் முதல் இன்றுவரை அடுத் தடுத்து வந்த அரசு களால், உரிமங்கள் வழங்குதல், அலைக் கற்றை ஒதுக் கீடு செய்தல், கட்டணங்கள் ஆகியவற் றிற்கான நடைமுறைக் கொள்கை கடை பிடிக்கப் பட்டு வந்துள்ளது.

61 சதவிகித மக்களுக்கு செல்போன் வசதி
அரசின் தொலைத் தொடர்புத் துறைக்கான வரிகள் மற்றும் ஒழுங்கு முறைக் கொள்கை முன் னேற்றுவதற்காக இருந்து வந்துள்ளது, இருக்கிறது. அதில் வருவாய் ஈட்டுதல் என்பதற்கு இரண்டாவது இடம்தான் தரப்பட்டுள்ளது. இவை இத்துறையில் முன்னெப்போதும் கண்டிராத வளர்ச்சிக்கும், தொலைத்தொடர்பு அடர்த்தியில் மிகப்பெரும் தாவுதலையும் கண்டுள் ளது என்பதால் இந்தக் கொள்கைகள் மாற்றப்படவில்லை ( அதாவது, உலகிலேயே இரண்டாவதாக தற்போது 70 கோடிக்கும் அதிகமான இந்தியர்கள் உலகிலேயே மிகக்குறைந்த கட்டணங் களில் செல் போன் வசதி யைப் பெற்றுள்ளனர் -) கிராமப்புறங்களில் 2010 செப்டம்பர் மாதம் அது 28.46 சதவீதமாகவும், கிராமப்புறம் மற்றும் நகர்ப் புறம் சேர்ந்து மொத்த தொலைத்தொடர்பு அடர்த்தி 60.99 சதவீத மாக உயர்ந்துள்ளன. ( அதாவது 100 இந்தியர் களில் சுமார் 61 பேருக்கு செல்போன் வசதி கிடைத் துள்ளது). தற்போது மொத்தம் உள்ள தொலை பேசிகளின் எண் ணிக்கை 72.3 கோடி ஆகும். இது 11வது ஐந்தாண்டுத் திட் டத்தின் இலக்கான 60 கோடிக்கும் அதிகமாகும்.

மேலும், அரசின் மிக அதிகமான வரி இல்லாத வருவாய் இத்துறையில் வருடாந்திர உரிமக் கட் டணமும், அலைக்கற்றை கட்டணமும் ஆகும். 2010 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை அரசு வருவாய்ப் பங்கீட்டு முறை மூலமாக ரூ.77,038 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.

6.2 மெகா ஹட்ஸ்க்கு மேலானஅலைக்கற்றை ஒதுக்கீட்டில், இதன் காரணமாக அரசுக்கு ரூ.36,729 கோடி இழப்பு ஏற்பட்டு விட்டதாகக் கூறப்படுகிறது. என்னு டைய அமைச்சரவையில் உள்ள விவரங்களின்படி, ஒட்டுமொத்த வருவாயில் ஒரு சதவித வருவாய் பங்கீடு என்ற அடிப்படையில் நிர்ணயிக்கப் பட்ட சந்தாதாரர் அடித் தளத்தை அடைந்த தொலைத் தொடர்பு சேவை நிறுவனத்தின் வேண்டுகோளுக்கு இணங்க 6.2 மெகா ஹட்ஸ்க்கு மேல் 10 மெகா ஹட்ஸ் வரை கூடுதல் அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யும் முடிவை அப்போதைய அமைச்சர் பிரமோத் மகாஜன் 2002 ஜன வரி 31 அன்று எடுத்தார்.

அடுத்த அமைச்சர் அருண்ஷோரி 6.2க்கு மேல் 21 மெகா ஹட்ஸ் ஒதுக்கீடு செய்தார். தயாநிதிமாறன் 38.8-ம் நான் 12.6 மெகா ஹட்சும் ஒதுக்கீடு செய்தோம். நான் ஒதுக்கீடு செய்தபோது, 6.2 மெகாஹட்ஸ் என்பது ஒப்பந்த கலவை மிஞ்சி இருப்பதால் 6.2 மெகா ஹட்சுக்கு மேலான அலைக்கற்றைக்கு அர சால் நிர்ணயிக்கப்படும் கட்டணம் வசூலிக்கப் படும் என்று ஒரு விதியை வகுத்தேன்.

இது நான் எனக்கு முன் இருந்தவர்கள் மீது குற்றம் சுமத்துகிறேன் என்றோ, அவர்கள் மீது பொறுப்பை சுமத்து கிறேன் என்றோ அர்த்த மாகாது, 1999 முதல் நடைமுறை முழுவதும் தொடர்ந்து வந்துள்ளது.
எதிர்க்கட்சிகள் விவாதத்தில் பங்கேற்காதது ஏன்?
இழப்பு என்று கருதப் படுவதற்கு எந்தவிதமான தர்க்க ரீதியிலான அடிப் படையும் கிடையாது. அது பொருத்தமான கணக்கீட்டு முறையும் ஆகாது. கொள்கை மற்றும் செயல் முறையில் ஏற்பட்டிருக்கலாம், வந் திருக்கலாம் என்றெல் லாம் வழிகிடையாது என்பதால் ஊடகங்களின் அடிப்படையில் இழப்பை கணக்கிட முடியாது.

எதிர்க் கட்சிகள் விவாதத்தில் பங்கேற்றால் அவை அம்பலமாகிவிடும் என்பதால், அவர்கள் நாடாளுமன்றத்தை முடக்குகிறார்கள்.

கேள்வி :- ஆனால் நீங்கள் அரசுக்குப் பெரும் இழப்பை ஏற்படுத்தி விட்டீர்கள் என்பது குற்றச் சாட்டு . . . . ?

அமைச்சர் ஆ.இராசா:- தொலைத் தொடர்புத் துறையில் ஒரு ஏகபோக சுயநல கும்பலை (உயசவநட) நான் உடைத்து விட்டேன் என்பதால் இந்தக் குற்றச் சாட்டுகள் கூறப்படு கின்றன என்று நம்புவ தற்கு எனக்கு உறுதியான காரணங்கள் உள்ளன. 1999 முதல் நான் பொறுப்பு ஏற்பதற்குச் சில நாட் களுக்கு முன்பு வரை இந்த ஏகபோக சுயநல கும்பலுக்குள் இதே கொள்கை நடை முறைப் படுத்தப்பட்டு வந்த வரை யில், எந்த அமைச் சரும் விமர்சிக்கப்பட வில்லை. 1998-99 ஆம் ஆண்டுக் கான தலைமைத் தணிக்கை அதிகாரியின் அறிக்கை யைப் பாருங் கள்; அது அப்போதிருந்த உரி மங்களை நிர்ணயிக் கப்பட்ட கட்டண முறை யிலிருந்து வருவாய்ப் பங் கீட்டு முறைக்கு மாற்றிய கொள்கையைக் கடுமை யாக விமர்சித்தது. அதில் பல கடுமையான கண்ட னங்கள் இருந்தன. ஆனால் தலைமைத் தணிக்கை அமைப்புக்கே தெரிந்த காரணங்களை 2000-ம் ஆண்டு முதல் அது மவுன காட்சியாக விளங்கி, அடுத்தடுத்து அளித்த அறிக்கைகளில் அது அமைச்சகத்தை எப்போதும் கேள்வி கேட்டதில்லை.

உரங்கள், பெட்ரோ லியப் பொருட்கள், பொது விநியோக முறை யின் கீழ் வழங்கப்படும் அரிசி போன்றவற்றிற்கு அரசு மானியங்கள் தரும் உதாரணத்தைப் பயன் படுத்தி, இந்த இழப்பு கருத்தியலானது, உண்மை நிலையை அடிப்படை யாகக் கொண்டது அல்ல (nடிவiடியேட) என்பதை நான் விளக்குகிறேன். இந்தப் பொருட்களின் சந்தை விலைகளை எடுத்துக் கொண்டு, அவை மிகக் குறைந்த விலைகளில் (அரசு மானி யத்தால்) விற்கப்படுவதால் அரசுக்கு இவ்வளவு ஆயிரம் கோடி இழப்பு என்று சொன்னால், அதை ஏற்க முடியுமா?

அறிவார்ந்த காரணங் களின் அடிப்படையில் ஒரு கொள்கை இருக் கிறது. அவ்வப்போது மாறிவிடும் பிரச்சினை களை முடிவு செய்ய சட்ட ரீதியிலான ஒரு அமைப்பு உள்ளது. எனவே தொலைத் தொடர்புக் கொள்கை தீர்ப்பின்படி, வருவாய்ப் பங்கீட்டு முறைதான் எங்களுக்கு உள்ளது.

கேள்வி:- அலைக் கற்றைப் பிரச்சினையில் நீங்கள் ஏன் சட்ட அமைச் சகம் நிதி அமைச்சகம் ஆகியவற்றின் சேவை களைப் பயன்படுத்த வில்லை? நீங்கள் பிரதம ரின் ஆலோச னையையும் பொருட் படுத்த வில்லை என்றும் ஒரு குற்றச்சாட்டு உள்ளதே?


அமைச்சர் ஆ. இராசா:- சட்ட அமைச்சகத்தின் ஆலோசனை தானாக வருவதில்லை. இருப்பில் உள்ள அலைவரிசை மிகக் குறைவாக இருப்பதால், வந்த ஏராளமான விண் ணப்பங்களை எப்படிக் கையாள்வது என்ற குறிப் பிட்ட பிரச்சினையில் எங்கள் அமைச்சகம் சட்ட அமைச்சகத்துக்கு ஒரு குறிப்பு அனுப்பியது. அந்தக் குறிப்பிலேயே நாங்களும் சில வழி முறை களைக் குறிப் பிட்டிருக்கி றோம். இதன்மீது அபிப்பி ராயத்தைக் கூறுவதற்கு மாறாக, சட்ட அமைச்ச கம் இதை அமைச்சர்கள் குழுவிற்கு அனுப்புமாறு ஆலோசனைக் கூறியது. இந்த ஆலோசனை அலைக்கற்றை விலை நிர்ணயிப்பு டனோ அல்லது வருவாய்ப் பங்கீட்டு அளவிலேயோ தொடர்புடை யது அல்ல. அலைக் கற்றை இருப் பைப் பொறுத்து முதலில் வந்த வர்களுக்கு முதலில் சேவை என்று இப் போதுள்ள கொள்கை அடிப்படையில் எங்கள் துறை செல்ல விரும்பிய தால் இது பிரதமரிடம் விளக்கப் பட்டது.

2001 ஆம் ஆண்டு நிர் ணயிக்கப்பட்ட நுழைவுக் கட்டணத்தை மாற்றி அமைக்க வேண்டிய தேவை உள்ளது என்று தொலைத் தொடர்புத் துறை செயலாளருக்கு நிதித்துறை செயலாளர் ஒரு கடிதம் எழுதினார். நுழைவுக் கட்டணம் நிர்ணயிக்கும் அதிகாரம் தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையத் திடம் (டிராய்) தான் உள்ளது. 2007 -ம் ஆண்டு டிராய் நுழைவுக் கட்ட ணத்தை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை என்று மிக உறுதியாக, அறுதி யிட்ட பரிந்துரையை அளித்ததாலும், ஏற் கனவே அந்தக் கட்ட ணத்துக்கு நிதித்துறை அமைச்சகத்தின் பிரதி நிதியும் உறுப்பினராக உள்ள தொலைத் தொடர்பு கமிஷன் ஒப்பு தல் அளித்துள்ள தாலும், டிராய் பரிந்துரையை மேற்கோள் காட்டி தொலைத் தொடர்புத் துறை செயலாளர் நிதித் துறை செயலாளருக்கு பதில் அனுப்பினார் - அத் துடன் அந்த சுற்று முடிந்தது.

அதுபோலவே, அலைக் கற்றை ஒதுக்கீடு மற்றும் சந்தாதாரர் விதி முறை தொடர்பாக பிரத மர் சில குறிப்புகளை அனுப்பி னார். உத்தேசிக்கப்பட் டிருந்த அனைத்துப் பிரச் சினைகள் மற்றும் விதி முறைகள் ஆகியவை பிரத மருக்கு அனுப்பப்பட்டு அது வந்து சேர்ந்ததற் கான பதிலும் வந்தது. கேபினட் அமைச்சர்கள் ஒருவருக் கொருவர் கடி தங்கள் எழுதிக்கொள் வது, கேபினட் அமைச்சர் கள் பிரதமருக்கு கடிதங் கள் அனுப்புவதும் சாதா ரண வழக்கம் தான். எனக்கும் பிரதமருக்கும் இடையில் கடிதப் போக்கு வரத்து இருந்தது என் பதை மட்டும் அடிப்படை யாக வைத்து நான் பிரதமரின் ஆலோசனை யைப் பொருட்படுத்த வில்லை என்று ஊகிக்க முடியாது.
கடைசி தேதி என்பது அர்த்தமற்றது

கேள்வி :- உரிமங்கள் பெறுவதற்கான கடைசி தேதியை நீங்கள் ஏன் அப்பட்டமாக மாற்றினீர்கள்?

அமைச்சர் ஆ.இராசா:- முதலில் விண்ணப்பித்த வர் முதலில் பரிசீலிக்கப் படுவதால், முதலில் வந்த வருக்கு முதலில் சேவை என்ற கொள்கை கடை பிடிக்கப்படும் வரை, கடைசி தேதி என்பது அர்த்தமற்றது. அலைக் கற்றை இருப்பின் தோராய மதிப்பீடு மற்றும் 2009 செப்டம்பர் 25 அன்று செய்திக் குறிப்பு வெளியிடப்பட்ட வரை யில் பெறப்பட்ட விண் ணப்பங்கள் ஆகியவற்றின் அடிப்படையில், அந்தத் தேதி வரையில் பெறப் பட்ட விண்ணப்பங்களின் முதல் தொகுதி பரிசீலிக் கப்பட்டது. ஏதாவது விண்ணப்பம் புறக்கணிக் கப்பட்டதா அல்லது பின் னுக்குத் தள்ளப்பட்டதா என்பதுதான் கேள்வி.

மீதமுள்ள விண்ணப் பங்கள் அலைக்கற்றை இருப்பைப் பொறுத்து பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும். மீத முள்ள விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட வில்லை என்பது ஊட கத்துறையில் உள்ள சில தவறான கருத் தாகும்.

பொதுமக்கள் பயனடைந்துள்ளனர்

கேள்வி :- நீங்கள் இலக்கிடப்பட்டுள்ளீர் கள் என்று நினைக்கிறீர் களா?

அமைச்சர் ஆ.இராசா:- தொலைத் தொடர்புத் துறையில் மாற்றங்கள் கூடாது என்று விரும்பும் ஒரு பெரிய (ஆதரவு திரட் டும்) கும்பல் இருப்ப தாக நினைக்க நான் நிர்ப்பந் தக்கப்படுகிறேன். உதா ரணமாக (செல் போன் சேவையை எண்கள் மாறா மல் ஒரு சேவையிலிருந்து மற்றொரு சேவைக்கு மாற்றிக் கொள்ளும்) எண் சேவை மாற்ற முறைக்கு எதிரானவர்கள் சிலர் உள்ளனர். என்னைக் குறி வைத்து பிரகடனப்படுத்தி யுள்ள ஏகபோக சுயநல கும்பல் (ஊயசவநட) ஒன்று உள்ளது. அதற்கு ஊடகத் துறையின் மீது செல் வாக்கு உள்ளது. அதனி டம் மிகப் பெருமளவு நிதி ஆதாரங்களும், பணமும் உள்ளன. இந்த நிகழ்வுகள் சில அரசியல் கட்சிகளால் தி.மு.க.வுக்கு கெட்ட பெயரைத் தேடித் தரப் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் மக்கள் பயன டைந்துள்ளனர் என்ற உண்மை உள்ளது. அது என்னாலும் அரசாலும் நிர்ணயிக்கப்பட்ட கொள் கைகளாலும், எடுக்கப் பட்ட முயற்சிகளாலும் ஆகும்.

கேள்வி:- கொடுக்கப் பட்ட 122 உரிமங்களில் 85 தகுதி நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யாத நிறு வனங்களுக்குச் கொடுக் கப்பட்டுள்ளது ஏன்?

அமைச்சர் ஆ.இராசா:- இதுவும் தெளிவற்ற கருத்து, தலைமை தணிக்கை அதிகாரி அரசி யல் சட்ட ஷரத்து 149 க்கு அப்பால் அதி காரங்களை அபகரிக்க முயலவோ, அரசியல் சட்ட ரீதியில் உச்சநீதி மன்றத்திற்கும், உயர்நீதிமன்றத்திற்கும் முறையே அதிகாரம் அளிக்கப்பட்டுள்ள 32 மற்றும் 226வது பிரிவு களின் கீழ் பிரச்சினை களை முடிவு செய்யவோ முயலக்கூடாது. விண் ணப்ப தேதியில் கம்பெனி கள் பதிவாளரிடம் குறிக் கோள் மாற்றப் பிரிவு, நிகர மதிப்பு, கம்பெனியின் பெயர் ஆகியவை காண் பித்தால் அது தொடர் பாக தணிக்கை அதிகாரி அறிக் கையில் தகுதி யின்மை என்று கூறப்பட் டுள்ளது என்பதை விளக்க வேண்டும். நாங்கள் சுய மாக அளிக்கப்படும் சான்றை அடிப்படை யாகக் கொள்கிறோம். கம்பெனிகள் பதிவாளர் பதிவேட்டில் பதிவு செய் வது என்பது ஒரு நடை முறை. அந்தப் பதிவாள ரிடம் முந்தைய தேதியில் பதிவு செய்யப்படுவது, அதற்கான தீர்மானம் முறையாக நிறை வேற்றப் பட்டு கம்பெனி செயலா ளரால் சான்றிதழ் அளிக் கப்பட்டிருந்தால், எந்தவிதமான சட்ட சிக்க லும் இல்லை என்று சட்ட அமைச்சகம் தற் போது கருத்து தெரிவித் துள்ளது.

கேள்வி : 99 ஆம் ஆண்டு புதிய தொலைத் தொடர்புக் கொள்கை தவறான கொள்கை என்று ஏற்றுக் கொள் வீர்களா?

அமைச்சர் ஆ.இராசா:- இல்லை. அந்தக் கொள்கையின் தீர்ப்பினுடைய வடிவமும், உணர்வும், நிகழ்ந்து வருகிறது. அரசில் கட்சி நிலைமை மாறுவதால் கொள்கைகள் மாற்றப்படக் கூடாது. 99ஆம் ஆண்டு கொள்கை தேசிய ஜனநாயகக் கூட் டணி அரசால் உருவாக் கப்பட்டது. இதை பா.ஜ.க. தலைமையிலான அரசு வடிவ மைத்தது என்ப தால் மட்டும் அதை நான் மாற்ற விரும்பவில்லை. அப்போதைய அரசின் தொலைநோக்குப் பார்வை சரியானது என்று நான் நாடாளுமன் றத்திலேயே பேசியிருக் கிறேன்.
சட்டம் தன் கடமையைச் செய்யட்டும்

கேள்வி : தணிக்கை அதிகாரியின் எதிரான கருத்தைத் தொடர்ந்து என்ன நடக்கிறது? நீங்கள் ராஜிமானா செய்வீர் களா?

அமைச்சர் ஆ.இராசா : அரசியல் சட்டத்தின் கீழ் தணிக்கைக் கான ஒரு நிறுவனமான தலைமை தணிக்கை அதிகாரியை நான் மதிக்கிறேன். இருப் பினும், முறையான நடை முறை தீர்க்கப்படும் வரை யில், ஒரு தணிக்கையரைத் தண்டிக்கவோ அல்லது அரசின் கொள்கை களைப் பற்றி முடிவுக்கு வரவோ தணிக்கை அதிகாரி அறிக்கையை நீதிமன்ற தீர்ப்பாக எடுத் துக் கொள்ள முடியாது.

மேலும், நாடாளு மன்றத்தின் மூலம் 2000 ஆம் ஆண்டில் வைக்கப் பட்ட தலைமை தணிக்கை அதிகாரியின் 1998 - 99 ஆம் ஆண்டுக்கான அறிக் கையிலும் இதுபோன்ற கருத் துக்கள் கூறப்பட்டி ருந்தன. பொதுக்கணக்கு குழுவோ, நாடாளு மன்றமோ, கொள்கையை மாற்ற முடிவு எதுவும் செய்ய வில்லை. பொதுக் கணக்கு குழுவிடமிருந்து எந்த விதமான ஆலோ சனையும், நடவடிக் கையும் வராத நிலையில், அதற்குப் பின்னர், 2010 ஆம் ஆண்டு வரையில் தலைமைத் தணிக்கை அதிகாரி எந்தத் தவறை யும் கண்டுபிடிக்க வில்லை. இதை தணிக்கை அதிகாரிதான் விளக்க வேண்டும்.

*************************
 மேலே இருக்கும் திரு ஆ.ராசா அவர்களின் நவம்பர் 14, 2010 தேதி  "தி ஹிண்டு" பேட்டியை ஒட்டியே இப்போதைய அவரது வாதங்கள் நீதி மன்றத்திலும் போய்க்கொண்டு இருக்கின்றது.


இதோ சிறிது நேரம் முன்னர் முன்னாள் தொலைத்தொடர்பு அமைச்சர்  ஆ. ராசா அவர்கள் இரு நபர் மற்றும்  20 லட்ச ரூபாய் பிணைத்தொகை, செலுத்த வேண்டும் என்றும், சென்னைக்கு செல்வதாக இருப்பின் நீதிமன்ற உத்தரவு வாங்கி மட்டுமே செல்ல வேண்டும் என்றும் சில நிபந்தனைகளுடன் பிணை வழங்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டார். ஊடகங்களின் பொய்ப்பிரச்சாரங்கள் , ஆரிய அடாவடித்தனங்கள் எல்லாவற்றையும் முறியடித்துவிட்டு  பொய் மேகக்கூட்டங்களில் இருந்து தகதகத்தாய சூரியனாக வெளி வந்துவிட்டார். இவரை "உள்ளே" அனுப்பிய கூட்டங்கள் இனி கைகூப்பி தொழுது வரவேற்றாக வேண்டும். அது காலத்தின் கட்டாயம். ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை!!!

24 comments:

  1. உங்களுக்கு எல்லாம் வெக்கமாவே இருக்காதா தொல்ஸ் அண்ணா. எனக்கு தனிப்பட்ட முறையில பிடிச்ச பதிவர் நீங்க தான், உங்களுக்கு இருக்கிற நகைச்சுவை உணர்வுக்கு நான் அடிமை. போஸ்டர் ஒட்டுவது எப்படியெல்லாம் எத்தனை முறை படித்திருப்பேன் என்று எனக்கே தெரியாது.

    ஆனா பாவப்பட்ட ஜென்மம்யா நீங்க, உங்களுடைய உழைப்பெல்லாம் விழலுக்கு இறைத்த நீராக போகிறதே என்ற வருத்தம் தான். அந்த ராசா எப்படிப்பட்டவர் என்று அனைவரைப் போல் உங்களுக்குத் தெரிந்தும் திமுகக்காரர் என்ற காரணத்திற்காக வக்காலத்து வாங்கும் உம்மைப் பார்த்தால் சிரிப்பு தான் வருகிறது.

    டீயை மட்டும் குடித்து விட்டு அயராது கட்சிக்காக உழைத்த உண்மையான தொண்டனெல்லாம் விரக்தியடைந்து கட்சியை விட்டு வெளியேறிட்டான்.

    திருந்துங்கப்பா.

    ReplyDelete
  2. தம்பி ஆரூர் மூனா செந்தில், சும்மா எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரமா பேசவும் அறிவுரையும் சொல்ல சொம்பை தூக்கிகிட்டு வந்துடக்கூடாது. உங்களுக்கு சரின்னு பட்டது எனக்கு தப்புன்னு படலாம். எனக்கு சரின்னு பட்டது உங்களுக்கு தப்பா தெரியலாம். அது நீங்களும் நானும் ஒரு விஷயம் பத்தி ஆழ்ந்து படிக்கவும் அதைப்பற்றி விருப்பு வெறுப்பு இல்லாமலும் ஆராய்ந்து பார்ப்பதை வைத்து தான் முடிவுக்கு வரனும். நீங்க ஸ்பெக்ட்ரம் வழக்கு, அதன் பிரச்சனை பத்தி ஆரம்பம் முதல் படிச்சு பார்தீங்களா இல்லையா என்பது பத்தி தெரியாது. ஆனால் நான் படிச்சேன். அதன் ஆரம்பம் முதல் இன்றைய நிலவரம் பத்தி தெரியும். இது பத்தி நான் உங்க கிட்டே நேரிடையாக விவாதிக்கவும் தயார். நான் கேட்கும் கேள்விகளுக்கு நீங்கள் பதில் சொல்ல தயாரா? நிலமை அப்படி இருக்க "ராசாவை பத்தி தெரியுமா?" என்கிற ரீதியில் அறிவுரை அள்ளி வீசி இப்போ திமுகவில் தொண்டர்களே இல்லை என சொல்லும் அறிவு கெட்ட தனமாக புத்தி சொல்லவும் வந்துட்டீங்க. நீங்க இருக்கும் அதே ஆரூர்ல 50,000 ஒட்டு வித்யாசத்தில் ஜெயிச்சு ஒரு வருஷம் தான் ஆகுது. பேச வந்துட்டீங்க பேச்சு. சும்மா உங்க திமுக எதிர்ப்பு அதிமுக ஆதரவு எல்லாம் உங்களோட வச்சுகுங்க. ஸ்பெக்ட்ரம் போன்ற உங்களுக்கு புரியாத, தெரியாத விஷயங்களில் எல்லாம் வந்து வாயை கொடுத்து வாங்கிகட்டிக்காதீங்க.

    ReplyDelete
  3. ஜாமீன்ல வந்ததுக்கே இந்த அலப்பறையா? மு.க. தைரியமா சொல்லலாம்...'நமக்கு வாய்த்த அடிமைகள் மிகவும் திறமைசாலிகள்'

    ReplyDelete
  4. ஐயா நமக்கு இதெல்லாம் புரியல.

    ஒன்னே ஒன்னு சொல்லுங்க உச்ச நீதிமன்றம் தகத்தகாய கதிரவனால் ஒதுக்கீடு செய்யப்பட்ட அனைத்து உரிமங்களையும் ரத்து செய்த போது ஏன் உன்ஹ்கள் தகத்தகாய கதிரவன் ஏன் எந்த மேல் நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    ReplyDelete
  5. இருண்டு கிடக்கும் தமிழகத்துக்கு இனி கரண்டு தேவை இல்லை.

    ReplyDelete
  6. தொல்ஸ் அண்ணே,
    என் குடும்பமே திமுக குடும்பம் தான். கடந்த தேர்தலில் என் குடும்பத்தில் என்னைத் தவிர மற்ற அனைவரும் கலைஞருக்குத் தான் ஓட்டுப் போட்டனர். பொதுவாக ஜெயா டிவியில் காட்டிய விஷயத்தை வைத்து ராசா அவர்களை தவறாக நினைக்க நான் ஒண்ணும் தெரியாத ஏகாம்பரமில்லை. இந்த ஸ்பெக்ட்ரம் விஷயத்தில் ஒரளவுக்கு விஷய ஞானம் உள்ளவன் தான்.

    என்னவோ திமுகவில் நல்லவர்கள் மட்டுமே இருப்பது மாதிரி பேசுகிறீர்கள். கலைஞர் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக திருவாரூர் தொகுதி முழுவதும் ஒட்டுக்கு 300 ரூபாய் முதல் 1000 வரை கொடுக்கப்பட்டது உங்களுக்கு தெரியுமா. என் வீட்டிற்கும் கொடுக்கப்பட்டது. முதலில் ஒரு விஷயத்தை புரிந்துக் கொள்ளவும். நான் மேம்போக்காக பேசுகிறவனில்லை. நானே திமுகவில் உள்ள என் நண்பர்கள் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட போது அவர்களுக்காக வாக்கு சேகரித்தவன் தான். கடந்த சட்டமன்ற தேர்தலில் நகர செயலாளர் ஒட்டுக்கு கொடுத்த பணத்தை என் வார்டு செயலாளர் பாதிக்கு மேல் அமுக்கிக் கொண்டது வரை தெரியும். இன்று சென்னையில் ஸ்கார்ப்பியோ வைத்துக் கொள்ளாத ஒரு வட்டச் செயலாளரை உங்களால் காட்ட முடியுமா. சம்பாதிப்பதற்கு எதற்கு அரசியலுக்கு வர வேண்டும். அரசியல் என்ன தொழிலா?

    ReplyDelete
  7. சம்பாதிக்க அரசியலுத்தான் வரவேண்டும் செந்தில் :))

    மக்கள் சேவைக்கு அரசியல் என்கிற காலமெல்லாம் மலையேறிப்போச்சு

    ReplyDelete
  8. என்ன தொழில் செய்தால் கோடிகோடியாய் பணம் கொட்டும் என்றால் அது அரசியல்தான். என்ன சாணக்கியத்தனம் வேண்டும்

    ReplyDelete
  9. kosu tholla thangaladaa Naaraayanaaa!!!!

    ReplyDelete
  10. நடத்துங்க எசமான்..நடத்துங்க.! இந்த உலகத்துல எதுவுமே தப்பில்ல..நாலு பேருக்கு மட்டுமே நல்லது நடக்குமுன்னா!

    ReplyDelete
  11. இதையும் கொஞ்சம் பாருங்கள்

    http://shanthibabu.blogspot.in/2011/08/2.html

    ReplyDelete
  12. ஒரு நல்ல பதிவு. இதில் ஹிந்து பத்திரிகையில், ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ஊடகங்கள் மூலம் சாட்டப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளையும் கேள்வியாக தொடுத்திருக்கிறார்கள். அதற்கு ஆ. ராசா அவர்கள் நிதானமாகவும், தெள்ளத்தெளிவாகவும், தொலைத்தொடர்புக் கொள்கைகளின் தெளிவான ஆதாரங்களையும் சுட்டிக்காட்டி பதிலளித்திருக்கிறார்.

    அவருடைய பதிலுக்கான ஹிந்துவின் குறுக்குக் கேள்விகளுக்கும் தெளிவான ஏற்றுக் கொள்ளும் பதிலை புள்ளி விவரங்களோடு தந்திருக்கிறார். இந்த வழக்கின் டிரையலும் இந்த அடிப்படையிலேயே சென்று கொண்டிருப்பதாக, தினசரி பத்திரிகளில் வரும் செய்திகளின் மூலம் தெரிகிறது.

    பிரச்சினைக்கான காலகட்டத்தில் தொலைத்தொடர்பு செயலராக இருந்தவர், ஆ.ராசா மேல் சுமத்திய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் தான் ஊடகங்கள் அப்பொழுது பெரும் பிரச்சாரத்தைச் செய்தன. அந்தச் செயலரே இப்பொழுது குறுக்கு விசாரணையில் ராசா மற்றும் அவரது வழக்கறிஞர்கள் கேட்கும் கேள்விகளை சந்திக்கும் திராணி இல்லாமல், பம்மிப் பதுங்கி.... ஒரு கட்டத்தில் தொலைத்தொடர்புக் கொள்கையே மறந்து விட்டத்து என்று ஒப்புக்கொண்டு ஓட ஆரம்பித்து விட்டார்.

    இதையெல்லாம் பார்க்கும் பொழுது இது ஒரு சோடிக்கப்பட்ட வழக்கு என்பது போல் தான் நம்ப வேண்டியிருக்கிறது.

    ஆகவே இந்தப் பதிவை எதிர்ப்பவர்கள், ஆ. ராசா வைத்திருக்கும் வாதங்களின் அடிப்படையில் எதிர் வாதத்தை ஆதாரத்துடன் வைத்தால் தான் அறிவார்ந்த செயலாக இருக்கும்.

    அதை விடுத்து இதை எழுதியவரை நாகரீகமில்லாமல் விமர்சிப்பதும், திமுகவினர் அனைவரையுமே அயோக்கியர்கள் என்ற ரீதியில் பேசுவதும் நிச்சயம் கண்டனத்துக்குறிது தான்.

    ReplyDelete
  13. this guy is may be paid by the disctrict DMK guys for SOMMBU ADICHIFYING to this redeculas Raja and Kari Nai Nithi

    ReplyDelete
  14. பாஸ் இதை எழுதும்போது உங்களுக்கு சிரிப்பே வரவில்லையா? போதும் இதோட நிறுத்திகிங்க, ராசாவை வைச்சு ஆளாளுக்கு காமெடி பண்ணிட்டு இருக்கீங்க.

    ReplyDelete
  15. அனானி நாய்கள் தொல்லை தாங்கலைப்பா... இதிலே ராவணன் என்னும் அனானி நாய் என் செல்ல நாய். எப்போது நான் எந்த பதிவு போட்டாலும் அது வந்து நிக்கும். அது ரத்தம் கொதிக்க கொதிக்க கொலைவெறியுடன் கத்தும். என் சிறந்த பொழுது போக்கே அதன் ரத்தம் கொதிக்க வைப்பது தான்:-))

    ReplyDelete
  16. ithellam oru pozaippu... ithukku karunai nidhi veettu vaasalla goorkka velai paakkalam neenga

    ReplyDelete
  17. Sir,

    Naanum Mayavram thaan enakkum 2G spectrum case pattri oralavu theriyum.Vaarungal vivathipom! Avar koduthulla interview la oru thappu ullathu "Parliament will not authorize or amend any policy decision,only Cabinet can make any policy decision and authorize policy decision"...ippo sollungal ithu kooda theriyatha oruvar Advocate ah?Athuvum Central Minister! Anyway i respect ur party worship,but dont put false statements!

    ReplyDelete
  18. கோவிந்த், நீங்களும் மாயவரம் தான் என்பதால் நான் விவாதத்துக்கு நேரிடை விவாதத்துக்கு தயார் தான். இடம் சொல்லுங்க. விவாதிப்போம். நீங்க சொன்ன பாயிண்ட்ல இருந்தே ஆரம்பிச்சுப்போம். நான் தயார் தான்.

    ReplyDelete
  19. Sir,

    Naan oorukku varum pothu ungalukku theriya paduthukiraen! Thanks for replying to my comment!

    ReplyDelete
  20. நண்பர் கொக்கரக்கோவை நூறு முறை வழிமொழிகிறேன்.

    ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))