பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

June 3, 2012

கலைஞர் என்ன சாதித்து கிழித்தார்?



இன்று ஜூன் மாதம் 3ம் நாள். கலைஞர் அவர்களின் 89ம் ஆண்டு பிறந்த தினம். அவரை வாழ்த்துபவர்கள் ஒரு பக்கம், வசை பாடும் சிறு குழுக்கள் ஒரு பக்கம் இருப்பினும் இந்த கலைஞர் அப்படி என்ன சாதித்து கிழித்து விட்டார் என எதுவுமே தெரியாமல் கேட்கும் நடுநிலைவாதிகளுக்காகவே இந்த கட்டுரை. இதன் சாராம்சம் முரசொலி போன்ற பத்திரிக்கைகள், முரசொலி மலர்கள், சில அரசு ஆவணங்கள் உதவியோடு தொகுக்கப்பட்டது தான். நன்றி முரசொலிக்கு! கலைஞர் ஆற்றிய சாதனைகளை கொஞ்சம் சிரமம் பாராமல் வாசித்து பாருங்கள். உங்கள் கருத்துகளை தராளமாக சொல்லுங்கள்!

இந்த இனிய நாளில் கலைஞரை வாழ்த்துவதில் பெருமை கொள்கிறேன்! வாழ்க கலைஞர்! தன் வாழ்நாளில் நூற்றாண்டு காணப்போகும் ஒரே அரசியல் தலைவர் உலகிலேயே கலைஞர் மட்டுமே என்னும் புகழ் உண்டாகட்டும் அவருக்கு. அவரால் தமிழும், திராவிடமும் உயரட்டும். தமிழகம் தலைநிமிரட்டும்!

 "கலைஞர் என்ன சாதித்து கிழித்தார்?" என கேட்பவர்களுக்காகவே இந்த பதிவு என்பதால் அதையே தலைப்பாகவும் வைத்துவிட்டேன். தலைப்பு சில கலைஞர் அபிமானிகளுக்கு சின்ன உறுத்தல் கொடுக்கும் என்பதால் இந்த விளக்கம்!

                                                    *****************************

1969 முதல் 1976 வரையிலான ஆட்சி காலத்தில்:



1. பிச்சைகாரர்கள் மறு வாழ்வு திட்டம்.

2. இலவச கண்ணொளி வழங்கும் திட்டம்.

3. திருக்கோவில்களில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு கருணை இல்லங்கள்

4. கை ரிக்சாக்களை ஒழித்து சைக்கிள் ரிக்சாக்களை வழங்கும் திட்டம்.

5. ஊனமுற்றோர் நல்வாழ்வு திட்டம்.

6. அஞ்சுகம் அம்மையார் நினைவு கலப்பு திருமண திட்டம்.

7. ஜாதி கலப்பு திருமணம் செய்து கொண்டோருக்கு 1969 - 76 ல் தங்க பதக்கம் வழங்கும் திட்டம்.1989-90ல் நிதி உதவி ரூபாய் 5000, 1996- ல் 10,000 ரூபாய், 1997 முதல் 20,000 ரூபாய்.

8. அரசு ஊழியர்களுக்கு குடும்ப பாதுகாப்பு திட்டம்.

9. பணிக்காலத்தில் இறக்கும் அரசு ஊழியர் வாரிசுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்கும் திட்டம்.

10. டாக்டர் தர்மாம்பாள் நினைவு விதவை மறுமண திட்டம். 1975ல் தொடக்கம், 1989ல் நிதி உதவி ரூபாய் 5000. 1997-98ல் ரூபாய் 7000, 1999-2000 ல் ரூபாய் 10,000

11. குடிசை மாற்று வாரியம், சுற்றுலா வாரியம், குடிநீர் வடிகால் வாரியம் உருவாக்கம்.

12. ஆதிதிராவிடர் இலவச கான்கிரீட் வீட்டு வசதி திட்டம்.

13. சிங்காரவேலர் நினைவு இலவச வீட்டு வசதி திட்டம்.

14. தலைமை செயலகத்தில் பிற்படுத்தப்பட்டோ நலன் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலனுக்கு தனித்துறை உருவாக்கம்.

15. மாநில திட்டக்குழு உருவாக்கம்.

16. பிற்படுத்தப்பட்டோர் நலக்குழு அமைத்து பிற்படுத்தப்பட்டோர் , ஆதி திரவிடர் இட ஒதுக்கீடுகளை உயர்த்தியது.

17. காவல் துறை மேம்பாட்டிற்கு 1969ல் முதலாவது காவல் ஆணையம். 1989ல் இரண்டாம் காவல் ஆணையம். 2006ல் மூன்றாவது காவல் ஆணையம்.

18 .பேருந்துகள் அரசுடைமை ஆக்குதல். போக்குவரத்து கழகங்கள் உருவாக்குதல்.

19. அனைத்து கிராமங்களுக்கும் மின் இணைப்பு திட்டம்.

20 விவசாய தொழிலாளர்களுக்கு அனுபோக தாரர்கள் குடியிருப்பு மனை உரிமை சட்டம்.

21. சேலம் உருக்காலை திட்டம்.

22. பதினைந்து ஏக்கர் நில உச்ச வ்ரம்பு சட்டம். ஒரு லட்சத்தி எழுபத்தி எட்டாயிரத்து எண்னூற்று எண்பது ஏக்கர் உபரி நிலம் கைப்பற்றப்பட்டு 1,37,236 விவசாயிகள் பயன் அடைய செய்தது.

23. சிப்காட் தொழில் வளாகங்கள்.

24. பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம்.

                       ******************************************

1989 - 1991 ஆண்டு ஆட்சிகாலத்தில் செய்த சாதனைகள்:

1.  மாநில அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு சமமான ஊதியம்.பொங்கல் போனஸ் முதலான பல சலுகைகள்.

2. பெண்களுக்கு சொத்துரிமை வழங்கிட தனிச்சட்டம்.

3. ஏழைப்பெண்கள் பயன் பெறும் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவி திட்டம். நிதி உதவி, 1989ல் ரூ 5000, 1996ல் ரூ 10,000, 2006ல் ரூ 15,000 2007ல் 20,000, 2010ல் 25,000 ஆக உயர்வு.

4. ஈ வெ ரா நாகம்மையார் நினைவு மகளிர் இலவச பட்டப்படிப்பு திட்டம். தாழ்த்தப்பட்ட வகுப்பு, மிகப்பிற்படுத்தப்பட்ட வகுப்பு வருமான வரம்பிற்குட்பட்டு பிற்படுத்தப்பட்ட வகுப்பு பெண்களுக்கு பட்டப்படிப்பு வரை இலவச கல்வி. 2008ல் முதுகலை பட்டப்படிப்பு வரை இலவச கல்வி.

5.கருவுற்ற பெண்களுக்கு நிதி உதவி வழங்கும் டாக்டர் முத்து லெட்சுமி ரெட்டி நினைவு மகப்பேறு நிதியுதவி திட்டம். 1989-90ல் ரூ 200, 1996-2001ல் ரூ 500, 2006ல் ரூ 6,000 வழங்கப்பட்டது.

6. மகளிர் திட்டத்தின் மூலம் மாநிலம் எங்கும் சுய உதவி குழுக்கள்.

7.வன்னியர், சீர்மரபினர், பிற்படுத்தப்பட்ட , மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் 20 சதம் தனி இட ஒதுக்கீடு.

8. தாழ்த்தப்பட்டோருக்கு மட்டும் 18 சதம் இட ஒதுக்கீடு நிர்ணயித்து பழங்குடி இனத்தவருக்கு ஒரு சதம் தனி ஒதுக்கீடு.

9. மகளிர்க்கு அரசு வேலைவாய்ப்பில் 30 சதம் இட ஒதுக்கீடு.

10. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்.

11. நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைத்தல்.

                              ***************************************

1996- 2001 ஆட்சிகால சாதனைகள்:

1. உயர்கல்வித்துறை, நெடுஞ்சாலைத்துறை, தகவல் தொழில் நுட்பத்துறை, சமூக சீர்திருத்தத்துறை என புதிய துறைகள் உருவாக்கம்.

2. சென்னையில் டைடல் பூங்கா.

3. உள்ளாட்சி அமைப்புகளில் மகளிருக்கு 33 சதம் இட ஒதுக்கீடு.

4. பெரியார் நினைவு சமத்துவபுர திட்டம்.

5. உழவர் சந்தை திட்டம். (14.11.1999)

6. வரும் முன் காக்கும் திட்டம் (29.11.1999)

7. கால்நடை பாதுகாப்பு திட்டம். (2000)

8. பள்ளிகளில் வாழ்வொளி திட்டம். (1999)

9. விவசாய தொழிலாளர் நல வாரியம்  உட்பட தொழிலாளர் நலனுக்கான தனித்தனி நல வாரியங்கள்.

10. தமிழ்மொழி வளர்சிக்கு தனி அமைச்சகம்.

11. போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய திட்டம்.

12. தென்குமரியில் 133 அடி உயர ஐயன் திருவள்ளுவர் சிலை.

13. ஆட்சி பொறுப்பேற்ற ஆறு மாதங்களுக்குள் தடைப்பட்டு கிடந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கும் கூட்டுறவு அமைப்புகளுக்கும் தேர்தல்.

14. கிராமங்களில் சிமெண்ட் சாலைகள்.

15. வரலாறு காணாத வகையில் ஆறு, குளம் அனைத்திலும் தூர்வாறும் பணி.

16. சட்ட மன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாடு திட்டம்.

17. கிராமப்புற மாணவர்களுக்கு தொழில் கல்லூரிகளில் 15 சதம் இட ஒதுக்கீடு திட்டம்.( அதிமுக ஆட்சியில் இத்திட்டம் முடக்கப்பட்டது)

18. கிராமப்புறங்களுக்கு மினி பஸ் திட்டம்.

19. சென்னை கோயம்பேட்டில் ஆசியாவிலேயே மிகப்பெரிய பேருந்து நிலையம்.

20. சேமிப்புடன் கூடிய மகளிர் சிறு வணிக கடன் திட்டம்.வங்கியின் வாயிலாக சுழல் நிதி வழங்கும் திட்டம்.

21. பள்ளி குழந்தைகளுக்கு சத்துணவுடன் முட்டை வழங்கும் திட்டம்.

22. மதுரை மாநகரில் உயர்நீதிமன்ற கிளை அமைப்பு.உலக நெறியில் எழில் கொழிக்கும் வடிவுடன் கட்டடங்கள்.

23. பள்ளி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் திட்டம்.

24. அண்ணா மறு மலர்ச்சி திட்டம்.

25. நமக்கு நாமே திட்டம்.

26. பத்தாயிரம் சாலைப்பணியாளர்கள் நியமனம்.

27. அதிமுக அரசால் பணி நீக்கம் செய்யப்பட்ட 13000 மக்கள் நல பணியாளர்கள் மீண்டும் நியமனம். (இப்போது அதிமுக அரசால் அவர்கள் மீண்டும் நடுத்தெருவில்)

                                       **********************************

2006 முதல் 2010 வரை ஆட்சியில் செய்த சாதனைகள்:






1. ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி வீதம் மாதம் 20 கிலோ அரிசி. ஒரு கோடியே 85 லட்சம் குடும்பங்கள் பலன்.

2. மாதம் தோரும் குறைந்த விலையில் பாமாயில் எண்ணை, துவரம் பருப்பு, உளுத்தம்பருப்பு, ரவை, மைதா, செறிவூட்டப்பட்ட கோதுமை மாவு வழங்கல்.

3. மான்ய விலையில் மளிகை பொருட்கள் என 50 ரூபாய்க்கு பத்து சமையல் பொருட்கள்.

4. 22,40,739 விவசாய குடும்பங்களுக்கு 7000 கோடி ரூபாய் கூட்டுறவு கடன் தள்ளுபடி.

5. விவசாயிகளுக்கான பயிர்கடன் வட்டி 2005-2006ல் 9%, 2006-2007ல் 7%, 2007-2008ல் 5%, 2008-2009ல் 4%, 2009-2010ல் பயிர்கடன் வட்டி முழுவதும் ரத்து செய்யப்பட்டது.

6. 2005-2006ல் நெல் கொள்முதல் குவிண்டாலுக்கு விலை ரூ 600, 2010-11ல் சாதா ரக நெல் விலை 1050 ரூ, சன்ன ரக நெல்விலை 1100 ரூ.

7. மீண்டும் புதுப்பொலிவுடன் 117 உழவர் சந்தைகள். மேலும் புதிதாக 45 உழவர் சந்தைகள் அமைப்பு.

8. பயிர்க்காப்பீடு திட்டத்தில் 2006ல் 50 சதம் காப்பீடு தொகையை அரசே மான்யமாக வழங்கி ஊக்கப்படுத்தியதால் 2005 - 2006ல் ஒரு லட்சம் விவசாயிகள் பயனடைந்த நிலையில் 2009-2010ம் ஆண்டு 7,80000 விவசாயிகள் அரசின் மானிய உதவி பெற்று பயிர்காப்பீடு செய்தனர். கடந்த் நான்கு ஆண்டுகளில் விவசாயிகளுக்கு 891 கோடி ரூபாய் இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டது.

9. கரும்பு விவசாயிகளுக்கு 2005-2006 ல் டன் ஒன்றுக்கு கிடைத்த விலை 1024 ரூபாய், 2009-10ல் 1650 ரூபாய் என ஏற்றப்பட்டது. 2010-11 முதல் போக்குவரத்து கட்டணம் மற்றும் ஊக்க தொகையுடன் சேர்த்து டன் ஒன்றுக்கு ரூ 2000 ஆக்கப்பட்டது.

10. ஆதி திராவிட விவசாயிகள் தாட்கோ நிறுவனம் மூலம் 31.03.2000 வரை பெற்ற கடன் தொகை வட்டி உட்பட 5 கோடியே 25 லட்சம் தள்ளுபடி.

11. நில அடமானத்தின் மீது தொழில் செய்ய வழங்கப்பட்ட பண்ணை சாரா கடன்களுக்கு வட்டி , அபராத வட்டி எல்லாம் தள்ளுபடி செய்யப்பட்டு வாங்கிய கடன் அசல் தொகையை செலுத்தினால் கடன் ரத்து.

12. மாநிலத்துக்குள் பாயும் ஆறுகளை இணைக்கும் புரட்சிகர திட்டத்தின் கீழ் 189 கோடி ரூபாய் மதிப்பீட்டில் காவிரி, குண்டாறு இணைப்பு திட்டம்.

13. 369 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தாமிரபரணி- கருமேனியாறு- நம்பியாறு இணைப்பு திட்டம்.

14. கழக அரசு விவசாயிகளுக்கு வழங்கும் சலுகைகளால் உனவு தான்ய உற்பத்தி 2005-2006ல் 61 லட்சம் டன், 2008-2009ல் 95 லட்சம் டன்னாக உயர்வு.

15. விவசாய தொழிலாளர் நல வாரியம் உட்பட 31 அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்களில் 2 கோடியே 2 லட்சத்தி 21 ஆயிரத்து 504 உறுப்பினர்கள் சேர்ப்பு.

16. 13,6482 அமைப்பு சாரா தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு 616,43,44,832 ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டது.

17. 2687கோடியே 30 லட்சத்து 35 ஆயிரத்தி 794 ரூபாய் செலவில் ஒரு கோடியே 13 லட்சத்து 57 ஆயிரத்து 454 குடும்பங்களுக்கு இலவச வண்ண தொலைக்காட்சிகள் வழங்கப்பட்டன.

18. 360 கோடி செலவில் 20 லட்சத்தில் 660 குடும்பங்களுக்கு எரிவாய் இணைப்புடன் இலவச எரிவாயு அடுப்புகள்.
19. ஒரு லட்சத்தி 57 ஆயிரத்தி 57 நிலமற்ற ஏழை விவசாயிகள் குடும்பங்களுக்கு 2,11,356 ஏக்கர் இலவச நிலம் வழங்கப்பட்டது.

20. 6,99,917 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டாக்கள்.

21. காமராஜர் பிறந்தநாளை கல்வி வளர்சி நாள் என பள்ளிகளில் கல்வி விழா.

22. 2 வயது முதல் 15 வயது வரை உள்ள 73 லட்சம் குழந்தைகள் மாணவ மாணவியர்களுக்கு சத்துணவுடன் வாரம் 3 முறை முட்டைகள் வாழைப்பழங்கள் வழங்கப்பட்டன.

23. தமிழ் வழியில் பயிலும் 50 லட்சத்துகும் மேற்ப்பட்ட மாணவ மாணவியருக்கு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் சிறப்பு கட்டணங்கள் ரத்து. 11 லட்சம் மாணவ மாணவியருக்கு 10, 12ம் வகுப்புகளில் அரசு தேர்வுக்கு கட்டணங்கள் ரத்து.

24. பட்டப்படிப்பு பயிலும் 3 லட்சத்தி 75 ஆயிரத்துக்கும் மேற்ப்பட்ட கலை, அறிவியல் கல்லூரி மாணவ மாணவியர் படிப்பு கட்டணம் ரத்து. 2010-11 முதல்  எம் ஏ, எம் எஸ்சி வகுப்புகளுக்கும் படிப்பு கட்டணம் ரத்து.

25. படிப்பை தொடர இயலாமல் இடையில் நிறுத்திய ஏழை மாணவர்களில் ஆண்டுக்கு பத்தாயிரம் பேர் வேலை வாய்ப்புகளுக்கு ஏற்ற தொழிற் பயிற்சிகளை சமுதாய கல்லூரிகள் மூலம் பெற ஒரு கோடி ரூபாய் செலவில் திறந்த நிலை பல்கலைகழகம் மூலம் தலா ஆயிரம் ரூபாய் உதவித்தொகை.

26. ஆண்டுதோறும் 24 லட்சத்தி 82 ஆயிரம் பள்ளி மாணவர்களுக்கும் 2 லட்சத்தி 99 ஆயிரம் கல்லூரி மாணவர்களுக்கும் இலவச பஸ் பாஸ்.

27.ஏழை மகளிர்க்கு பட்ட படிப்பு வரை வழங்கப்பட்ட இலவச கல்வி முதுகலை பட்டப்படிப்பு வரை நீட்டிப்பு.

28. தொழிற்கல்வி படிப்புக்கான நுழைவு தேர்வு ரத்து.

29. கோவை திருச்சி நெல்லை ஆகிய இடங்களில் நான்கு புதிய அண்ணா தொழில் நுட்ப பல்கலைகழகங்கள்.

30. 2006க்கு பின் ஒரத்த நாடு, பெரம்பலூர், வால்பாறை, சுரண்டை, குளித்தலை, லால்குடி, மேட்டூர், புதுகோட்டை, தேனி, திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய இடங்களில் அரசின் புதிய கலை அறிவியல் கல்லூரிகள்.

31. மாவட்டத்து ஒரு மருத்துவ கல்லூரி கோட்பாட்டின் படி விழுப்புரம், திருவரூர், தர்மபுரி, சிவகங்கை, பெரம்பலூர், திருவண்ணாமலை ஆகிய இடங்களில் ஆறு புதிய மருத்துவ கல்லூரிகள்.

32. அரசு பொறியியல் கல்லூரிகள் இல்லா திண்டிவணம், விழுப்புரம், அரியலூர், பண்ருட்டி, திருக்குவளை , ராமநாதபுரம் திருவண்ணாமலை, தஞ்சை, திண்டுக்கல், தூத்துக்குடி , கன்யாகுமரி ஆகிய மாவட்டங்களில் புதிதாக அரசு பொறியியல் கல்லூரிகள்.

33. பத்தாம் வகுப்பு வரை பள்ளிகளில் தமிழ் மொழி கட்டாய பாடம் என சட்டம்.

34. நூற்றாண்டு கனவை நனவாக்கி செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் சென்னையில் அமைப்பு.

35. அருந்தமிழ் சான்றோர் 110 பேரின் நுல்களை நாட்டுடமை - 7 கோடியே 27லட்சம் ரூபாய் பரிசு தொகை.

36. 4020 திருக்கோவில்களில் 387 கோடி செலவில் திருப்பணிகள் செய்து குழமுழுக்கு விழா நடத்தப்பட்டது.

37.2010ல் மேலும் 1100 திருக்கோவில்கள் 100 கோடி செலவில் குழமுழுக்கு.

38. மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண திட்ட நிதி உதவி 10,000 ரூ என்பது 25,000 ரூ ஆக உயர்வு. 2,92000 ஏழை பெண்களுக்கு 520 கோடி நிதி உதவி.

39. கருவுற்ற ஏழைப்பெண்களுக்கு 6000 ரூபாய் நிதி உதவி திட்டத்தின் கீழ் 20லட்சத்தி 11 ஆயிரத்து 517 ஏழை மகளிர்க்கு மொத்தம் 1052 கோடியே 83 லட்சம் ரூபாய் நிதி உதவி.

40. 50 வயது கடந்து திருமணம் ஆகாமல் வறுமையில் வாடும் 9158 ஏழை மகளிர்க்கு மாதம் 400 ரூபாய் உதவித்தொகை.

41. தை மாதம் முதல் நாளே தமிழ் புத்தாண்டு என அறிவிப்பு.

42. வரும் முன் காக்கும் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்பட்டு 14, 894 மருத்துவ முகாம்களில் ஒரு கோடியே 37 ஏழைகள் பயன்.

43. தமிழகத்தில் உள்ள 1421 ஆரம்ப சுகாதார நிலயத்திலும் புதிதாக உண்டாக்கப்பட்ட 117 ஆரம்ப சுகாதார நிலையத்திலும் தலா 3 செவிலியர்களை பணியமர்த்தி 24 மணி நேரமும் மருத்துவ சேவை அளிப்பதால் அங்கு 2005-06ல் நடைபெற்ற மகப்பேறு எண்ணிக்கை 82,530 என்பது 2009-10ல் 2,98853 ஆக மூன்று மடங்கு உயர்ந்து கிராமப்புற மகளிர் மகிழ்வு.

44.குழந்தைகள் உயிர் காத்திட மூடிய அறுவை சிகிச்சைக்கு 20,000 ரூபாய். திறந்த அறுவை சிகிச்சைக்கு 50,000 ரூபாய், கடினமான திறந்த அறுவை சிகிச்சைக்கு 1 லட்சம் ரூபாய் என அரசு நிதி உதவி.

45. 21.11.2007ல் தொடங்கப்பட்ட இளம் சிறார் இருதய அறுவை சிகிச்சை திட்டம், 3.6.2006ல் தொடங்கப்பட்ட பள்ளி சிறார் இதய அறுவை சிகிச்சை திட்டம் ஆகிய இரண்டு திட்டங்களி கீழ் 3264 சிறார்களுக்கு 17 கோடியே 10 லட்சம் சொலவில் புகழ்வாய்ந்த 28 தனியார் மருத்துவ மனைகள் மூலம் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டு குழந்தைகள் காக்கப்பட்ட்னர்.

46. கிராமப்புற ஏழைகளுக்கும் உடனடி மருத்துவ சிகிச்சை கிடைக்க செய்திட ஈ எம் ஆர் ஐ நிறுவனத்துடன் இணைந்து 15.9. 2008ல் தொடங்கப்பட்ட 385 ஊர்திகளுடன் கூடிய அதி நவீன அவசரகால மருத்துவ ஊர்தி சேவை திட்டம் தமிழகம் முழுமைக்கும். 401152 பேர் இதனால் பயன். ஆபத்தான நிலையில் இருந்த 20,154 உயிர்கள் காப்பு.

47. அரசு ஊழியர்களுக்கு நான்கு ஆண்டுகளில் 2 லட்சம் வரை மருத்துவ உதவி வழங்கும் புதிய மருத்துவ காப்பீடு திட்டம்.

48. உயிர்காக்கும் உயர் சிகிச்சைக்கான மருத்துவ காப்பீடு திட்டம் 2009 ஜூலை முதல் நடைமுறை. ஒரு கோடியே, 44 லட்சத்து 32 ஆயிரம் குடும்பங்கள் பயன் அடைந்தன. 2010 வரை அந்த திட்டத்தில் 87 ,135 ஏழை மக்களுக்கு 246 கோடியே 79 லட்சத்தி 30 ஆயிரம் ரூபாய் செலவில் உயிர்காக்கும் அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன.

49. 1,05494 கைத்தறி நசவாளர்களுக்கும் 90,547 விசைத்தறி நசவாளர்களுக்கும் சிறப்பு தொகை செலுத்தி மின் இணைப்பு பெற 2,39,511 விவசாயிகளுக்கும் இலவச மின்சாரம்.

50. 2,22,569 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் 46,91 கோடி முதலீட்டில் 25 புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டு 12 அரசாணைகள் வெளியிடப்பட்டு 37 தொழிற்சாலைகள் அமைக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில்  2010 வரை 12 தொழிற்சாலைகள் திறப்பு.

51) 3,53,801 படித்த வேலைவாய்ப்பு அற்ற இளைஞர்களுக்கு 240 கோடி ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டது.

52. 4,65,658 இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது.

53. புதுப்பிக்க தவறிய 2,70000 இளைஞர்கள் 2001 முதல் பதிவு மூப்புடன் மீண்டும் புதுப்பித்து பயன்.

54. முதியோர் ஆதரவற்றோர் உதவித்தொகை மாதம் 200 முதல் 400 ரூபாய் என உயர்வு.7,39,541 முதியோரும், 7,90,041 ஆதரவற்றோரும் இதனால் பயன்.

55.கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்று திறனாளிகளுக்கு பராமரிப்பு தொகையாக மாதம் 200 ரூ என்பது 500 ரூ என உயர்த்தப்பட்டு 2006 முதல் ஆண்டு தோறும் 10,000 கடும் மாற்று திறணாளிகள் பலன்.

56. 1989ல் தர்மபுரி மாவட்டத்தில் கழக அரசு தொடங்கிய மகளிர் திட்டத்தின் மூலம் இதுவரை உருவாக்கப்பட்ட மகளிர் சுய உதவி குழுக்களில் எண்ணிக்கை 4,41,311. இவற்றுள் ஊரக சுய உதவி குழுக்கள் 3,0 2092. நகர்புற சுய உதவி குழுக்கள் 1, 39,219. இக்குழுவில் சேர்ந்துள்ள மகளிர் எண்ணிக்கை 69,91000. இக்குழுக்களுக்கு வழங்கப்பட்டுள்ள உதவித்தொகை மொத்தம் கடன் தொகை 6342 கோடியாகும்.

57. 2006 க்கு பின் 17,12000 மகளிர் கொண்ட1,25493 புதிய மகளிர் சுய உதவிக்குழுக்கள் உண்டாக்கப்பட்டன. 2,81,883 மகளிர் குழுக்களுக்கு வழங்கப்பட்டுள்ள சுழல் நிதி 281 கோடியே 88 லட்சம் ரூபாய். மகளிர் சுய உதவி குழுக்கள் போலவே 2006க்கு பின் 19,885 இளைஞர் சுய உதவி குழுக்களும் 30,000 நகர்புற சுய உதவி குழுக்களும் 10,772 விவசாயிகள் கூட்டுப்பொறுப்பு குழுக்களும் ஏற்படுத்தப்பட்டு நிதி உதவிகள் வழங்கப்படுகின்றன.

58. சுய உதவிக்குழு உறுப்பினர்கள் ஆகிய 56,748 இளைஞர்களுக்கு தொழிற் பயிற்சிகள் வழங்கப்பட்டன.

59)  2,033 கோடி ரூபாய் செலவில் 10,096 கிராம ஊராட்சிகளில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் அடிப்படை கட்டமைப்பு மேம்பாட்டு பணிகள்.2010ல் 2,514 ஊராட்சிகளில் 508 கோடி ரூபாய் செலவில் இத்திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

60. அதே போல அனைத்து பேரூராட்சி அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 810 கோடி செலவில் 420 பேரூராட்சிகளில் கட்டமைப்பு பணிகள்: 2010ல் 141 பேரூராட்சிகளில் 70 கோடி செலவில் கட்டமைப்பு பணிகள். நிதிநிலையில் நலிந்த 30 நகராட்சிகளிலும் தலா 75 லட்சம் செலவில் அடிப்படை கட்டமைப்பு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

61. மாநகராட்சி நகராட்சிகளில் நிதிநிலை மேம்பட்டு மக்களுக்கு வசதிகள் செய்திட அவை அரசுக்கு செலுத்த வேண்டிய 793 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி.

62. உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி பகிர்வு. 2006-07ல் எட்டு விழுக்காடு. அதாவது 2112 கோடி ரூபாய். 2007-2008ல் 9 விழுக்காடு.  2008-2009ல்  9 விழுக்காடு. அதாவது 2959 கோடி ரூபாய். 2009-10ல் 9.5 விழுக்காடு. அதாவது 3316 கோடி என உயர்வு. 2010-11ல் 10 விழுக்காடு. அதாவது 4,030 கோடி ரூபாய் வழங்கப்பட்டது.

63. 12,094 கோடி ரூபாய் செலவில் 57 ஆயிரத்து 787 கிமீ நீள சாலைகளில் மேம்பாட்டு பணிகளும் பராமரிப்பு பணிகளும் நிறைவேற்றப்பட்டன.

64.   4,730   கிமீ நீளமுள்ள சாலைகள் இருவழித்தடங்கள் ஆக அகலப்படுத்தப்பட்டன.

65. தமிழகத்தில் உள்ள சாலைகளில்  1046 பாலங்கள் மற்றும் 3800 மிகச்சிறு பாலங்கள் 881 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டன.

66. தமிழகத்தில் உள்ள 4,676 கிமீ தேசிய நெடுஞ்சாலைகளில் 3,226 கிமி நீள சாலைகள் நான்கு வழிச்சாலைகள் ஆக மாற்றப்பட்டுள்ளன.

67. தலவரி, தலமேல்வரி, தண்ணீர் தீர்வை அனைத்தும் ரத்து. நிலவரி ஏக்கர் ஒன்றுக்கு புஞ்ஜை நிலத்துக்கு 15 ரூபாய் என்பது 2 ரூபாய் எனவும் நஞ்சை நிலத்துக்கு 50 ரூ என்பது 5 ரூ எனவும் பெயரளவுக்கு மட்டுமே வசூலிக்க அரசாணை.

68. ஈரோடு, திருப்பூர், வேலூர், தூத்துக்குடி ஆகிய நான்கு நகராட்சிகள் மாநகராட்சிகளாக நிலை உயர்த்தப்பட்டுள்ளன.

69. அரியலூர், திருப்பூர் புதிய மாவட்டங்களாக உதயம்.

70. தர்மபுரி மாவட்டத்தில் ஆரூர் புதிய கோட்டம், காஞ்சி மாவட்ட்த்தில் தாம்பரம் புதிய கோட்டம், திருப்பூர் மாவட்டத்தில் உடுமலைப்பேட்டை புதிய கோட்டமென மூன்று புதிய கோட்டங்கள்.

71. திருவண்ணாமலை மாவட்டத்தில் தண்டராம்பட்டு, திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர், திருவள்ளூர் மாவட்டம் மாதவரம், கரூர் மாவட்டம் தரங்கம்பட்டியை தலைமை இடமாக கொண்டு கடவூர் , கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி, வேலூர் மாவட்டம் ஆம்பூர், திருப்பூர் மாவட்டம் வடக்குகுளம், காஞ்சி மாவட்டம் ஆலந்தூர், சோழிங்கநல்லூர் என ஒன்பது புதிய வட்டங்கள் உண்டாக்கப்பட்டன.

72. கட்டணம் உயர்த்தப்படாமல் 12,137 புதிய பேருந்துகளுடன்  மேலும் 3000 புதிய பேருந்துகள்.

73. இஸ்லாமிய சமுதாயம் மேன்மை பெற 3.5 விழுக்காடு தனி உள் ஒதுக்கீடு.

74. அருந்ததியர் சமூக அவலம் தீர 3 சதம் உள் ஒதுக்கீடு.இதன்காரணமாக 2009-2010ல் 56 மாணவர்கள் மருத்துவ கல்லூரியிலும், 1165 மாணவர்கள் பொறியியல் கல்லூரியிலும் சேர்ந்து பயில்கின்றனர்.

75. சமத்துவ சமுதாயம் காணும் நோக்கில் அனைத்து சாதியரும் அர்சகர் ஆகும் சட்டம் நிறைவேற்றப்பட்டு பல்வேறு சாதிகளை சேர்ந்த 216 பேருக்கு அர்ச்சகர் பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

76. அனைத்து சாதியினரும் ஒரே இடத்தில் வசிக்க ஏற்கனவே உருவாக்கப்பட்ட பெரியார் நினைவு சமத்துவபுரங்களுடன் மேலும் 95 சமத்துவபுரங்கள் அமைத்து 240 சமத்துவ புரங்கள் தந்தை பெரியார் சிலைகளுடன் நிர்மானிக்கும் திட்டம் நடைமுறை.

77. சென்னை கோட்டூர்புரத்தில் உலகத்தரத்திலான 200 கோடி மதிப்பிலான அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம்.

78. 1000 கோடி ரூபாய் செலவில் சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் புதிய தலைமைச்செயலகம்.

79. 100 கோடி செலவில் அடையார் பூங்கா திட்டம்

80. சென்னை மாநகர் குடிநீர் பற்றாக்குறை முற்றிலும் தீர்த்திட வடசென்னை மீஞ்சூரில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் நிறைவேற்றம்.

81. மத்திய அரசு அனுமதித்துள்ள 908 கோடி ருபாய் நிதியுதவியுடன் தென்சென்னையில் நெம்மேலியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம்.

82. ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு வங்கி நிதியுதவியுடன் 14 ஆயிரத்து 600 கோடி ரூபாய் மதிப்பில் மெட்ரோ ரயில் திட்ட பணிகள்.

83. 1929 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒக்கேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம்.

84.  630 கோடி ரூபாய் செலவில் ராமநாதபுரம் கூட்டு குடிநீர் திட்டம் நிறைவேற்றம்.

85. மதுரவாயிலில் இருந்து சென்னை துறைமுகத்துக்கு 1655 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பறக்கும் சாலை திட்டம் (கிட்டத்தட்ட முடியும் நேரத்தில் அதிமுக அரசு முடக்கி விட்டது)

86. மத சுதந்திரம்பேண கட்டாய மதமாற்ற சட்டம் ரத்து.

87. மூன்றாவது காவல் ஆணையம், மூத்த ஐ ஏ எஸ் அதிகாரி ஆர். பூர்ணலிங்கம் தலைமையில் அமைக்கப்பட்டு அது வழங்கிய 444 பரிந்துரைகளில் 2010 வரை 278 பரிந்துரைகள் நடைமுறைக்கு வந்துள்ளது.

88. 2,12,981 சத்துணவு பணியாளர்கள் பயன்பெற காலமுறை ஊதியம் - ஓய்வூதியம்.

89. டெஸ்மா, எஸ்மா சட்டங்களை நீக்கி அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு பறிக்கப்பட்ட சலுகைகள் மீண்டும் வழங்கப்பட்டு 1.1.2006 முதல் தமிழகத்தில் ஆண்டுக்கு 5,115 கோடியே 79 லட்சம் ரூபாய் கூடுதல் செலவில் ஆறாம் ஊதியக்குழு பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட்டன. இதன் காரணமாக 11, 099 கோடி ரூபாய் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு நிலுவை தொகையாக அனுமதிக்கப்பட்டு புதிய வரலாறு படைக்கப்பட்டது.

90. 21 லட்சம் குடிசை வீடுகளை ஆறு ஆண்டுகளில் கான்கிரீட் வீடுகளாக மாற்றும் கலைஞர் வீட்டு வசதி திட்டம் என்னும் புரட்சிகரமான திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு முதல் ஆண்டில் ஒரு லட்சம் வீடுகளுக்கும் மேலாக கட்டி கொடுக்கப்பட்டும் விட்ட நிலையில் அடுத்து வந்த அதிமுக அரசு அந்த திட்டத்தை முடக்கிபோட்டது.

24 comments:

  1. அருமை அண்ணா..!!

    ReplyDelete
  2. என்னா தல,

    திமுக தேர்தல் அறிக்கையெல்லாம் சேர்த்து வச்சி ஸ்கேன் பண்ணி சேர்ந்திட்டீங்களோ :))

    ReplyDelete
  3. இஸ்லாமியர் இடஒதுக்கீடு என்பது பல வகையான பரிமாணங்களை கடந்துவந்துள்ளது.1927முதல்1947வரை இஸ்லாமியர்கள்சென்னை மாகாணத்தில் 16 சதவிகிதம் இட ஒதுக்கீட்டை பெற்று வந்தனர்.
    1947ம் வருடத்தில் ஓமந்தூர் ராமசாமியால் இந்த சதவிகிதம் 7 ஆக குறைக்கப்பட்டது. இந்த 7 சதவிகித இட ஒதுக்கீடு 1954ம் ஆண்டுவரை முஸ்லிம்களால் பெறப்பட்டது. 1954ம் ஆண்டு காமராஜர் முதல்வராக இருந்த போது இந்த 7 சதவிகித இட ஒதுக் கீட்டையும் தேவை இல்லை என நீக்கினார்.
    "மத ரீதியான இட ஒதுக்கீடு இருக்கக்கூடாது'' என்று காமராஜர் முடிவு செய்து, முஸ்லிம் இட ஒதுக் கீட்டை முழுமையாக ரத்து செய்த பிறகு, முஸ்லிம்கள் அரசியல் ரீதி யாக காங்கிரஸ் கட்சியை வெறுக் கத் தொடங்கினார்கள். அந்த நேரத்தில்தான் "காமராஜர் தள்ளு படி செய்த இட ஒதுக்கீட்டை நாங் கள் பெற்றுத் தருவோம்'' என்று கூறிய தி.மு.க.வை முஸ்லிம்கள் ஒட்டுமொத்தமாக ஆதரித்து வெற்றி அடைய வைத்தனர்.
    மாநிலக் கட்சியாக முதன் முதலில் உருவெடுத்த தி.மு.க.வால் முஸ்லிம் இட ஒதுக்கீட்டை உட னடியாக செயல்படுத்த முடியாமல் போனது. பின்னர் 1973ல் கருணா நிதி தலைமையிலான திமுக அரசு! இஸ்லாமியர்களை அப்போது இருந்த 31 சதவிகித பிற்படுத்தப் பட்டோர் இட ஒதுக்கீட்டில் இடம் பெற வைத்தது.
    அதன் பிறகும் இஸ்லாமியர்கள் தொடர்ந்து கோரிக்கைகள் வைத்து தனி இட ஒதுக்கீட்டிற்காக போராடி வந்தனர்.
    "மற்ற இந்து சமுதாயங்களோடு போட்டியிட்டு வாய்ப்புகளைப் பெறுவதில் எங்கள் சமூகம் கஷ் டப்படுவதால் தனி இட ஒதுக் கீடே எங்களுக்கு பயனளிக்கும்" என்ற அவர்களின் வாதம் சரியான முறையில் ஆட்சியாளர்களால் உணரப்படவில்லை.
    பின்னர், 2008ஆம் ஆண்டில் தான் கருணாநிதி தலைமையிலான திமுக அரசு இஸ்லாமியர்களுக்கு தனியாக 3.5 சதவிகித இட ஒதுக் கீட்டை அளித்தது!.....(படித்ததில் பிடித்தது)

    அபி அப்பாவுக்கு வாழ்த்துக்கள்.....இத்தனை புள்ளி விபரங்களை சேர்க்க எத்தனை பத்திரிக்கை குறிப்புகளை, புத்தகங்களை, கழக இணைய தளங்களை, படித்திருப்பீர்கள், நேரத்தை செலவழித்திருப்பீர்கள் என்று எண்ணிப்பார்க்கின்றேன்... எந்த உழைப்பும் அதற்குரிய பலனை பெறாமலிருப்பதில்லை.... சில சமயங்களில் கால தாமதமாகலாம்...சாதனைகள் காலாவதியாவதில்லை....

    ReplyDelete
  4. கோடானு கோடி நன்றி அபி அப்பா....

    ReplyDelete
  5. கலைஞரின் சாதனியில் எனக்கு மிகவும் பிடித்தது கை ரிக்சாக்களை ஒழித்து சைக்கிள் ரிக்சாக்களை வழங்கும் திட்டம்.

    ReplyDelete
  6. திராவிடம் என்ன கிழித்தது என்பதற்கும் இப்பதிவு சாட்சியாக அமைகிறது. நன்றி அண்ணா

    ReplyDelete
  7. 2006-11 iil ivargal arivittha thittangal ellam makkalai poyi sernthu irunthaal...ivargal yaen aatchiyai parikoduthaargal!intha scheme moolam avargalai suttri ullavargal palan adainthaargal!

    ReplyDelete
  8. மிகவும் அருமை

    ReplyDelete
  9. மிகவும் அருமை

    ReplyDelete
  10. நல்லதொரு பயனுள்ள பதிவு. ஒரு ஆட்சி நிர்வாகம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான உதாரணமாகத்தான் கலைஞர் அவர்களின் 19 வருட ஆட்சியும் சாட்சியாக இருக்கிறது.

    இனி திமுக காரன் ஒவ்வொருவனும் கலைஞரை விமர்சிக்கும் கூட்டத்திடம் மல்லுக்கட்டாமல் இதை ஒரு கையேடாக போட்டு வைத்துக் கொண்டு மற்றவர்களுக்குக் கொடுத்தாலே போதும்.

    ReplyDelete
  11. kalakkal abhi appa, I have added it to my favories!!!

    ReplyDelete
  12. அவரோட ரெண்டு மகன்களுக்கும் சண்டை வராமல் பாத்துகிட்டதே அவரோட வாழ்நாள் சாதனை

    ReplyDelete
  13. தலைவர் கலைஞரின் சாதனைகளை விலாவாரியாக,சிறப்பாக தொகுத்து தந்திருக்கிறீர்கள் தொல்காப்பியன்.

    இதற்காக நீங்கள் எவ்வளவு உழைத்திருப்பீர்கள் என்பது தெரிகிறது.
    அத்தனையும் தலைவருக்காக என்று நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது உடன்பிறப்பே...

    இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்.....

    ReplyDelete
  14. கலைஞரின் கொள்கை பரப்புப் பதிவு !!!

    இணையத் தமிழன்
    http://www.inaya-tamilan.blogspot.com/

    ReplyDelete
  15. மிக சிறப்பான பதிவு வாழ்த்துக்கள் அபி அப்பா .

    ReplyDelete
  16. முடியலை..... நெஜமாவே உங்களை மாதிரியான ஆளுங்களை வெச்சுதான் அந்த கம்பெனி இன்னும் ஓடிட்டு இருக்கு....

    ReplyDelete
  17. அபிஅப்பா, தகவல்கள் தெரிந்துக்கொள்வதோடு, அதை சேகரித்து, சேர்த்து, பதிவிட்டு....

    கட்சி சார்ந்த உணர்வுகள், ஆர்வம், தேவைகள் இருந்தாலும்.....எல்லாவற்றையும் தாண்டி உங்க உழைப்பு தெரியுது. தகவல்களுக்கு நன்றி. !

    ReplyDelete
  18. அபிஅப்பா, தகவல்கள் தெரிந்துக்கொள்வதோடு, அதை சேகரித்து, சேர்த்து, பதிவிட்டு....

    கட்சி சார்ந்த உணர்வுகள், ஆர்வம், தேவைகள் இருந்தாலும்.....எல்லாவற்றையும் தாண்டி உங்க உழைப்பு தெரியுது. தகவல்களுக்கு நன்றி. !

    ReplyDelete
  19. மிகவும் அருமையான பதிவு அங்கிள். வயதான காலத்திலும் நல்ல புள்ளிவிவரங்கள் சேகரித்து நமது அடுத்த தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்ததற்கு நன்றி.

    ReplyDelete
  20. மிகவும் அருமையான பதிவு அங்கிள். வயதான காலத்திலும் நல்ல புள்ளிவிவரங்கள் சேகரித்து நமது அடுத்த தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்ததற்கு நன்றி.

    ReplyDelete
  21. இந்திய அரசியல் என்பது சாணக்கியன் வழிவந்த சூது நிறைந்தது என்பதை முதலில் மனதில் நிறுத்தவேண்டும்.அதன் பின் கலைஞர் என்ன சாதித்தார் என்பதை அசைபோடவேண்டும்.சூழ்ச்சியை ச்சுழ்ச்சியால்தான் வெல்ல வேண்டுமே தவிர,வீரத்தால் அல்ல.பார்ப்பனீய அரசுகளைச் சமாளிக்க கலைஞர் போன்ற ஒருவர்தான் நமக்குத் தேவை.பதுங்கும் போது பதுங்கி பாயும் போது பாய்பவர் கலைஞர்.இருக்கின்ற சட்ட முறைகளுக்குள் எவ்வளவு முடியுமோ அந்தளவு கொள்கைகளைக் கொண்டு சென்றவராக கலைஞர் திகழ்கிறார் என்பதைத்தான் தோழர் பட்டியலிட்டுள்ளார்.கம்யூனிஸ்டுகள் 35 ஆண்டுகள் ஆண்ட மேர்கு வங்கத்தில் இன்னும் கை ரிக்‌ஷாக்கள் உள்ளன.ஆனால்,பெரியாரின் தொண்டர் கலைஞர் 1971 லேயே ஒழித்துவிட்டார்.1929 ல் பெரியார் போட்ட தீர்மானமான பெண்ணுக்கு சொத்துரிமையை 1989 ல் கலைஞர் கொண்டுவந்தார்.இப்படி திராவிட இயக்க கொள்கைகளை முடிந்த அளவு நடைமுறைப்படுத்திய முதல்வராக கலைஞர் 100க்கு 75 மதிப்பெண் பெற்றுவிட்டார் என்றுதான் சொல்லவேண்டும்.தமிழ்நாட்டில் பெரியாரைப் பேசாமல் அரசியல்,சமூக இயக்கங்கள் இயங்கமுடியாது என்பதுபோல,தமிழக அரசுக்கட்டிலி அமரும் யாரும் கலைஞரின் திட்டங்களைப் பின்பற்றாமல் இயங்கமுடியாது என்பதே உண்மை.

    ReplyDelete
  22. அபி அப்பா ,
    நீங்கள் சொல்லும் சாதனைகள் எல்லாம் நடந்ததா? தெரிந்த வரையில் நீங்கள் சொல்லும் சாதனைகள் எல்லாம் பேப்பரில் மட்டும் தான்

    ReplyDelete
  23. தொல்காப்பிய்ன் தொண்டு தொடரட்டும்.உங்கள் முயற்சியை என் வலைதளத்திலும் வெளிப்படுத்தியிருக்கிறேன்.நன்றி
    பாண்டியன்ஜி ( வில்லவன் கோதை )வேர்கள்
    ஒன்றுமே நடக்கவில்லை என்று கருதுகிறீர்களா..கிருஷ்ணன்.இந்த மாநிலத்தில் மனிதனை மனிதன் சுமந்து இழுக்கும் கை ரிக்ஷா ஒழிந்த்து போதும் .. கலைஞருக்கு.

    ReplyDelete
  24. Ithil ethanai avar aatchi kalathil mudikkappattathu.. koyembedu.. admk kalathil jaya vaal katti mudikkappattathu.. karuna adikkal mattum naativittu kambi neeti vittaar...

    ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))