பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

July 8, 2012

2G வழக்கும், திரு.ஆ.ராசா அவர்கள் நேர்காணலும் பின்னே ஒரு புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.... ஆன மாய பலூனும்!

2 G வழக்கு! இந்த வழக்கை நான் ஆரம்பத்தில் இருந்தே கவனித்து வருபவன் என்பதாலும் இது ஒரு சித்தரிக்கப்பட்ட வழக்கு என நான் பல ஆதாரங்களை கொண்டு நம்பியதாலும் நான் இன்றைக்கு இதிலே இந்த வழக்கிலே முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள திரு ஆ.ராசா அவர்களின் நேர்காணல் "புதிய தலைமுறை" தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய போது கூர்ந்து கவனித்தேன். ஏனனில் இந்த வழக்கில் அக்டோபர் மாதம் 2010ல் தன் அமைச்சர் பதவியை திரு.ராசா அவர்கள் ராஜினாமா செய்து விட்டு வந்த பின்னர் "தி ஹிண்டு" பத்திரிக்கைக்கு பேட்டி அளித்த போது அவரது வாயால் சொன்னதை எழுத்தாய் பார்த்த பின்னர் இன்று தான் அவரது வாயால் "வாக்குமூலமாக" சொல்வது போல சொல்கிறார். அதனால்  அவர் என்ன சொல்கிறார் என்று கவனித்தேன்.

இந்த நேர்காணல் என்பது கிட்டத்தட்ட தமிழகத்தில் பல ஆயிரம் "உண்மையான" நடுநிலைவாதிகளை சிந்திக்க வைத்திருக்கும் என்றே நம்புகிறேன். நான் சிறிது நேரம் முன்னர் என் முகநூலில் ஒரு நிலைத்தகவல் வெளியிட்டேன். "புதிய தலைமுறை" தொலைக்காட்சி ஏன் இதை ஒளிபரப்ப வேண்டும்?" என கேட்டவர்களிடம் நான் "உப்பு தின்றவன் தான் தண்ணீர் குடிக்க வேண்டும். பொய்பரப்புரை செய்தவர்கள் தான் இதை ஒளிபரப்பி பாவம் கழுவிக்கொள்ள வேண்டும்" என பதில் சொன்னேன். அதையே திரு ராசா அவர்கள் தன் நேர்காணலில் "அங்கே சிறையில் தமிழில் பொதிகை தொலைக்காட்சி வரும். நான் வேறு சேனல்கள் கேட்ட போது அரசியல் கட்சி சாராத நடுநிலை தொலைக்காட்சி தான் தர இயலும் என சொல்லி 'புதிய தலைமுறை" தொலைக்காட்சி கொடுத்தார்கள். அதிலே கூட இது பற்றிய விவாதங்களில் எல்லாம் மெத்த படித்தவர்கள், பொருளாதார நிபுனர்கள், நான் மிகப்பெரிய அறிவாளி என நினைத்தவர்கள் கூட தவறாய் புரிந்து கொண்டு பேசினர். கட் ஆஃப் தேதியை முன்கூட்டியே முடித்து விட்டனர் என விஷயமே புரிந்து கொள்ளாமல் பேசினர்" என சொன்னார். பின்னர் அது பற்றி விளக்கினார். ஆக நான் சற்று முன்னர் வெளியிட்ட நிலைத்தகவல் போல இந்த நேர்காணலை வெளியிட்டதன் மூலமாக  உப்பு தின்ற புதியதலைமுறை தண்ணீர் குடித்தது. வழக்கு நடந்து கொண்டு இருக்கின்றது. அப்படி இருக்கும் போது அது பற்றி  பொதுவெளியில் பேசக்கூடாது என அழகாய் எல்லோரும் விலகி விடுவர். ஆனால் திரு.ராசா அவர்கள் அடிபடையில் ஒரு வழக்கறிஞராகவும் இருக்கும் காரணத்தால் 'விசாரனை முடிந்த' விஷயங்களை அழகாய் நேர்காணலில் விளக்கியும் சொல்லக்கூடாததை தவிர்த்தும் பேசினார்.ஒரு அழகான பேட்டியின் முத்தாய்ப்பாக கடைசி கேள்விக்கு ஒரு பதில்.... "நரகத்திலும் நரகம்"யாருக்கு கிடைக்கும் என்பது பற்றி சொன்ன போது சிரிப்பும் சிலிர்ப்பும் ஒருசேர வந்தது எனக்கு!

இப்போது நேர்காணல் பற்றி பார்ப்போம்......


முதல் கேள்வியே "நீங்கள் 13 ஆண்டுகாலம் மிக உயர்ந்த மத்திய அமைச்சர் பதவியில் எல்லாம் இருந்து விட்டு இப்போது 15 மாத காலம் சிறைவாசம் அனுபவித்தது சிரமமாக இல்லையா" என்கிற தொணியிலான கேள்வி. அதற்கு திரு.ராசா சொல்கிறார் "இல்லை. நான் சார்ந்த இயக்கம் திராவிடர்கழக - திராவிட முன்னேற்ற கழகத்தில் எனக்கான பயிற்சியிலேயே இதை எல்லாம் பயின்றவன் நான்". இதை எங்கே திமுக அவருக்கு பயிற்றுவித்தது? எந்த சிலபஸ்ல பயிற்சி கொடுக்கப்பட்டது என எடக்கு மடக்காக கேட்கும் ஆசாமிகளுக்கு அவருடைய பதில் "நான் கலைஞரின் நெஞ்சுக்கு நீதி படித்து படித்து பக்குவப்பட்டுவிட்டேன் என்கிறார். ஆமாம் அதிலே வரும் வாசகங்கள் ... அண்ணா சொல்கிறார் கலைஞரைப்பார்த்து "தண்டவாளத்தில் தலைவைத்துப்படு என்றாலும் அமைச்சர் பதவி ஏற்றுக்கொள் என்றாலும் இரண்டையும் ஒன்றாகவே பார்ப்பவர் தான் என் தம்பி கருணாநிதி".... பதில் வந்துவிட்டதா? திமுக என்னும் பல்கலைகழகத்தில் நெஞ்சுக்கு நீதி என்னும் பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர் ஆ.ராசா அவர்கள் அந்த 15 மாதகாலம் ... எந்த டெல்லி வீதிகளில் சிவப்பு விளக்கு சுழல காவலர் காவலில் சென்று வந்தாரோ அதே டெல்லி மாநகரில் அதே போல சிவப்பு விளக்கு சுழல சுழல காவலர் காவலில் ... ஆனால் இது வேறு விதம்... கிட்ட தட்ட தண்டவாளத்தில் தலை வைத்து படுக்கும் நிலை போன்றதொரு நிலை. ஆனால் கலைஞரின் நெஞ்சுரம் திரு ராசாவுக்கும் நெஞ்சுக்கு நீதியால் பாய்ச்சப்பட்டதை சொல்கிறார். பெரியார் அவர்கள் சொன்ன வார்த்தையை கோடிட்டு காட்டுகின்றார் திரு.ராசா அவர்கள். "பொதுவாழ்க்கை என்று வந்த பின்னர் மான அவமானங்களை பற்றி கவலைப்பட்டால் பொதுவாழ்க்கையிலே செய்ய வேண்டிய தொண்டினை செய்ய முடியாமலே போகும்" என்ற பெரியாரியல் தத்துவத்தை நினைவு கூறுகின்றார்.

இதல்லாம் கேள்வி அல்ல. அடுத்தடுத்து வந்தது அணுகுண்டு கேள்விகள். அத்தனைக்கும் புரியும்படியும் தெளிவாகவும் பதில் சொல்கிறார் பாருங்கள்.

1.75 லட்சம் கோடி அரசுக்கு உங்களால் இழப்பாமே என்ற கேள்விக்கு ராசா அவர்கள் தெள்ளத்தெளிவாக ஒரு பதில் சொல்கிறார். \\ 1.75 லட்சம் கோடி இழப்பு என சி ஏ ஜி அதாவது மத்திய தணிக்கை குழு சொன்னது. நியாயமாக பார்த்தால் அந்த சி ஏ ஜி என்பது ஒரு தன்னதிகாரம் கொண்ட அதாவது தேர்தல் கமிஷன் போல இதுவும் ஒரு குழு. மத்திய அரசால் ஏற்படுத்தப்பட்ட குழு. அது அரசுக்கு தன் அறிக்கையை சமர்பிக்கலாம். அத்தனையே. ஆனால் அந்த குழுவால் அரசில் பாலிசி மேட்டர் அதாவது கொள்கை சார்ந்த முடிவுகளில் தலையிட முடியாது. கூடவும் கூடாது. சாதாரண மக்கள் கூட சென்போனை பயன்படுத்த வேண்டும் என்கிற ட்ராய் என்னும் தொலை தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் எடுத்த முடிவின் மீது தனது ஆதிக்கத்தை சி ஏ ஜி செலுத்த முடியாது. மத்திய தணிக்கை குழு தனது அறிக்கையை பாராளுமன்ற பொதுக்கணக்கு குழுவுக்கு அளிக்கலாம். அதை ஏற்றுக்கொள்வதும் கொள்ளாததும் அந்த பாராளுமன்ற பொதுக்கணக்கு குழு மட்டுமே. ஆனால் அதை  சி ஏ ஜி அறிக்கையை அந்த குழு நிராகரித்து விட்டது.

 அதாவது "அரசன் தவறு செய்ய மாட்டான்" என்னும் நம்பிக்கை மாதிரி அந்த குழு தப்பு செய்யாது என்ற நம்பிக்கையில் ஏற்படுத்தப்பட்ட அந்த குழுவின் அறிக்கை எப்போது பாராளுமன்ற பொதுக்கணக்கு குழுவால் நிராகரிக்கப்பட்டதோ அப்போதே அரசன் தவறு செய்து விட்டான் என்னும் நிலைக்கு வந்தாகிவிட்டது. பின்னரும் சி ஏ ஜி குழு அறிக்கையை அடிப்படை ஆதாரமாக கொண்டு பத்திரிக்கைகள் மற்றும் மற்றைய ஊடகங்கள் ஊதிப்பெரிதாக்கிய போது அதையே ஆதாரமாக கொண்டு சி பி ஐ வழக்கு தொடுத்தது.

ஆனால் 1.75 லட்சம் கோடி என்னால் அரசுக்கு இழப்பு என சி பி ஐ வழக்கு பதிவு செய்ய முடிந்ததா என காட்டுங்கள். சரி போகட்டும், சி பி ஐ 30,000 கோடி இழப்பு என்றது. அதாவது நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டதா என காட்டுங்கள். இப்படி எந்த சி ஏ ஜி குழு 1.75 லட்சம் கோடி என்றதோ அந்த தொகைக்கான நீதிமன்ற குற்றச்சாட்டு எங்கே உள்ளது என காட்டுங்கள். \\ இப்படி திரு ராசா அவர்கள் சொன்ன போது நடுநிலையாளர்கள் சிலர் "ஆமாவா?" என பெங்களூர் தமிழர்கள் மாதிரி மனசுக்குள் கேட்டுக்கொண்டு கொஞ்சம் நிமிர்ந்து உட்கார்ந்தனர்.

1.75 லட்சம் கோடி என்பதை பற்றி அந்த நேர்காணலாளர் அதன் பின்னர் கேட்கவே இல்லை. அடுத்து "முதலில் வந்தவருக்கு முன்னுரிமை, ஏலம் கூடாது என நீங்க சொன்னதால இழப்பு ஏற்பட்டுச்சு. இல்லாவிடில் 3ஜி யை ஏலம் விட்டால் வரும் வருமானம் போல 2 ஜியையும் ஏலம் விட்டிருந்தால் வருமானம் வந்திருக்கும் என சொல்றாங்களே?" என கேட்ட போது....

"ஏலமுறை வேண்டாம், முதலில் வந்தவர்களுக்கே முன்னுரிமை" என்னும் அரசு கொள்கையை வகுத்தவன் ராசா இல்லை, டாக்டர் மன்மோகன் இல்லை, டாக்டர் கலைஞர் இல்லை. 1999ம் ஆண்டு வாஜ்பாய் அரசில் தொலை தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் (ட்ராய்) வகுத்த அரசு கொள்கை இது. இதை அதன் பின்னர் அருண்ஷோரி, தயாநிதிமாறன் பின்னர் நான் என வரிசையாக அதையே பின்பற்றினோம். நான் பதவி ஏற்கும் 29 நாட்களுக்கு முன்னர் எனக்கு முன்பாக அந்த துறை அமைச்சராக இருந்த தயாநிதிமாறன் அவர்கள் கூட அதே முதலில் வந்தவர்களுக்கு முன்னுரிமை நிலைப்பாட்டையே எடுத்தார். எடுத்து தான் ஆக வேண்டும். அது தான் அரசின் கொள்கை முடிவு என்னும் போது மாற்றி செய்ய இயலாது. அதில் என்னை குற்றம் சொல்வது ஏற்க இயலாதது" என்கிரார்.

இப்போது நேர்காணலை விடுங்கள். நான் பல இடங்களில் விவாதம் செய்யும் போது பலரும் சொல்லும் குற்றச்சாட்டு அதாவது உதாரணம் காட்டி எல்லாம் குற்றம் சுமத்துவர். அதாவது "சரிய்யா 1999ல் ஒரு வீடு பத்து லட்சம் ரூபாய்க்கு ஒருத்தன் விற்றான். அதையே பத்து வருஷம் கழிச்சு அதே வீட்டை பத்து லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்வாயா? இப்போது அதன் மதிப்பு கோடி ரூபாய் ஆயிற்றே. எனக்கு முன்னால் இருந்தவன் விற்றான்  நானும் அதே விலைக்கு விற்றேன் என சொல்ல அந்த பதவிக்கு ஒரு எஸ் எஸ் எல் சி படிச்ச குமாஸ்தா போதுமே? எதற்காக ஒரு ராசா என்னும் அமைச்சர்" என கேட்பாங்க. அதீத புத்திசாலித்தனமான கேள்வியாக நினைத்துக்கொண்டு மற்றவர்களும் கைதட்டுவர்.

உதாரணம் எல்லாம் சரி தான். ஆனா அதன் உள்ளே போய் பார்க்கும் போது தான் விஷயம் தெரியும். ராசா அவர்கள் பதவிக்கு வந்த போது மொத்த கையிருப்பு ஸ்பெக்ட்ரம் என்பது 100 மெஹா ஹெர்ட்ஸ். அதிலே 35 சதம் ஏர்செல், ஏர்டெல், ஐடியா உள்ளிட்ட ஐந்து கம்பனிகள் மட்டுமே பயன் படுத்தியும் , 30 சதம் இராணுவமும், மீதி 35 சதம் சும்மாவும் கிடந்தன. அப்போது அந்த 35 சதத்தை அந்த ஐந்து கம்பனிகளும் தான் விலை நிர்ணயம் செய்து விற்று வந்தன. ஆக நம் வீட்டு பொருளுக்கு யாரோ விலை நிர்ணயம் செய்து நம் வீட்டு மக்களுக்கே விற்கும் நிலை. இதை அவர்கள் ஒரு சிண்டிகேட் ஆக கூடிக்கொண்டு செய்து வரும் நிலையில் தான் ராசா அவர்கள் இராணுவம் பயன்படுத்தும் 30 சதத்தை தவிர மீதி இருக்கும் 65 சதத்தையுமே விற்க முன்வந்தார். அப்படி வரும் போது சந்தையில் போட்டி வரும். இந்த ஐந்து கம்பனிகளை தவிர மற்ற கம்பனிகளும் இதில் ஈடுபடும் போது போட்டியால் மக்களுக்கு சொற்ப பணத்தில் செல்போன் வசதி கிடைக்கும். அப்படி கிடைக்கும் பட்சத்தில் ஏழை மக்களும் இதனால் பயன் அடைவர். பயனாளிகள் எண்ணிக்கையும் கூடும் என்றெல்லாம் நினைத்தார். ஆனால் பத்து லட்சம் வீடு கதை எல்லாம் சும்மா டுபாக்கூர் வாதங்கள். ஏனனில் ராசா அவர்கள் தெளிவாக சொல்கிறார் தன் பேட்டியில்.... அவர்கள் அந்த ஐந்து கம்பனிகளும் சிண்டிகேட் அமைத்து கொண்டு செயல்படும் போது அவர்களுக்கு போட்டியாக மற்ற கம்பனிகளை  உள்ளே கொண்டு வந்து விட்டு மீதம் சும்மா கிடக்கும் அந்த 30 சதம் ஸ்பெக்ட்ரமையும் பயன்பாட்டுக்கு கொண்டு வரும் போது இந்த சிண்டிகேட் ஆசாமிகளுக்கு வயிற்றில் புளி கரைக்குது.

ராசா சொல்கிறார்.இந்த உதாரணம் பாருங்கள். ஒருத்தன் ஒரு காரை பத்து லட்சம் கொடுத்தும் வாங்கலாம், ஒரு கோடி ரூபாய்க்கு பென்ஸ் காரும் வாங்கலாம். ஆனால் லைசன்ஸ் என்பது சொற்ப விலைக்கு மட்டுமே தானே வாங்குவான். ஆக ஸ்பெக்ட்ரம் லைசன்ஸ்க்கான தொகை சிறியது. ஆனால் அதை வைத்து அவர்கள் வியாபாரம் எத்தனை விரிவா செய்கின்றரோ அந்த வரும் வருமானத்தில் அரசாங்கத்துக்கு பங்கு (ஷேர் ) உண்டு என்கிற உண்மையை அந்த வீடு - பத்துலட்சம் - இப்ப ஒரு கோடி என உதாரணம் காட்டுவோர் புரிந்து கொள்வது இல்லை என்கிறார். ஆக எத்தனை கம்பனிகள் அந்த ஸ்பெக்ட்ரம் பயன்படுத்தினாலும் அவர்களின் மறைவான பார்ட்னராக பங்குதாரராக அரசாங்கம் உண்டு. ஆக அந்த விற்பனை விரிவாக்கத்தினால் அரசுக்கு அதற்கான பங்கு வந்துவிடுகின்றது. இதிலே என்ன குறை? அதுவும் கூட 1999 தொலை தொடர்பு கொள்கையால் தான். இதிலே மாற்றம் செய்ய வேண்டிய அவசியம் என்ன வந்தது? சரி ஊடக மகாராஜாக்கள் சொல்வது போல ஏலத்துக்கு விடுவதாக வைத்துக்கொண்டால் அதிக விலைக்கு ஏலம் கேட்பவர்கள் அதை எங்கே போய் சம்பாதிக்க வேண்டும்? மக்களிடம் தானே? அப்போது எப்படி பத்து பைசாவுக்கு போன் செய்ய இயலும்? இதை கொஞ்சமாவது சிந்திச்சு பாருங்களேன்.

சரி, இதை படிக்கும் மக்களே, நான் ஒன்று கேட்கிறேன். 2ஜியில் ஏலம் விடாதது தான் பிரச்சனை என்று சொல்லி 3ஜி ஏலத்தில் விட்டதால் அது அடித்தட்டு மக்களை சென்று சேர்ந்ததா? இல்லையே? ஏன்? மெட்ரோ சிட்டிகளில் இருப்பவர்கள் மட்டுமே மனிதர்களா? இதோ இன்னும் மயிலாடுதுறை என்னும் மிகச்சிறப்பான பாராளுமன்ற தொகுதியில் கூட வரவில்லை 3ஜி. ஏன்? அதையே முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்னும் பழைய 1999 கொள்கை நிலைப்பாட்டில் இருந்து செய்திருந்தால் இந்நேரம் 3ஜி எங்கள் ஊர் குப்பனும் சுப்பனும் கூட வைத்திருப்பான். ஏனனில் 1999 தொலை தொடர்பு கொள்கையில் "மக்கள் நலம்" என்னும் கந்தாயம் கலந்து இருந்தது. ஆனால் இந்த பிரச்சனையை சி ஏ ஜி ஏற்படுத்திய பின்னர் அரசாங்கம் பயந்து விட்டது. அதனால் "மக்கள் நலம்" புறக்கணிக்கப்பட்டு அரசும் ஒரு கார்பரேட் நிறுவனமாக ஆகிப்போய் பணம் பண்ணும் வஸ்துவாகிப்போய் இன்று எங்கள் ஊர் குப்பனும் சுப்பனும் பழையபடி பின் தங்கிவிட்டனர்  மெட்ரோ நகர மக்களை ஒப்பிடும் போது:-( இது சி ஏ ஜிக்கு வேண்டுமானால் வெற்றியாக இருக்கலாம். ஆனால் மக்களுக்கான அரசாங்கம் என்னும் அரசாங்கத்துக்கு உண்டான தோல்வியே!

இதே ராசா அவர்கள் கூட மே மாதம் 20ம் தேதி 2010ல் 3 ஜி ஏலம் விட்ட பின்னர் மகிழ்வுடன் தெரிவிக்கிறார். அதாவது அப்போதே இந்த 2ஜி ஏலம் விடாமல் போனதால் தான் அரசுக்கு இழப்பு என்று ஊடகங்கள் ஊதிக்கொண்டு இருந்த உச்ச நேரம். அதன் காரணமாக 3ஜி ஏலத்தில் விடப்பட்டது. அப்போது ராசா அவர்கள் அலைக்கற்றை ஏலம் சிறப்பாகவும் வெற்றிகரமாகவும் நடந்து முடிந்துள்ளது. இதன் மூலம் அரசுக்கு ரூ. 67,719 கோடி வருமானம் கிடைத்துள்ளது. இது அரசு எதிர்பார்த்ததை விட அதிக தொகையாகும். இந்த பெரும் வருமானம் அரசுக்கு கிடைத்துள்ளதால், அத்துறை அமைச்சர் என்ற வகையில் நான் பெரிதும் மகிழ்ச்சி அடைகிறேன்’’ என்று தெரிவித்துள்ளார். ஆனால் நன்கு கவனிக்கவும் 3ஜி யில் அரசுக்கு வருவாய் எத்தனை? ஆனால் 2ஜியால் வந்த வருமானம் எத்தனை? அதிலே மக்கள் நலம் எப்படி இருந்தது? 3 ஜி ஏலம் முறையால் எங்கள் பகுதிகள் பின் தங்கிவிட்டது. ஏனனில் இங்கே வரவில்லை 3ஜி தொழில்நுட்பம். ஏன்? ஏன்?  ( 3ஜி ஏலம் எடுத்தவர்கள் விபரம் : ஐடியா நிறுவனம் ரூ. 5,765 கோடிக்கு 11 பகுதிகளையும், ஏர் டெல் நிறுவனம் 12,290 கோடி ரூபாய்க்கு 13 பகுதிகளையும், ஓடாபோன் 11,617 கோடி ரூபாய்க்கு 9 பகுதிகளையும், ரிலையன்ஸ் 8,583 கோடி ரூபாய்க்கு 13 பகுதிகளையும், டாடா 5,864 கோடி ரூபாய்க்கு 8 பகுதிகளையும், எஸ் டெல் 337 கோடி ரூபாய்க்கு 3 பகுதிகளையும் ஏலத்தில் பெற்றுள்ளன.ஏலம் விடப்பட்ட பகுதிகளில் அதிகத் தொகையாக 3,317 கோடி ரூபாய்க்கு தில்லி பகுதியும், அடுத்தப்படியாக 3,247 கோடிக்கு மும்பை பகுதியும் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளன)
ஆனால் ஏல முறை இல்லாமல் போட்டி முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என இருப்பின் அப்படி உரிமை அளிக்கப்பட்டவர்களுக்கு அரசு ஒரு மறைமுக பங்குதாரர் என சொல்லி இருப்பின் அதாவது 2ஜி யைப்போல.... இந்நேரம் இந்தியா முழுமைக்கும் அந்த திட்டம் குக்கிராமம் வரை சென்று சேர்ந்திருக்கும்.
ஒரு சி ஏ ஜி அறிக்கையை கொண்டு ஒரு குற்ற வழக்கு போடலாம் என்னும் முன்னுதாரணத்தை இந்த 2 ஜி வழக்கு ஏற்படுத்தி கொடுத்த பின்னர் நாளை என்ன நடக்கும்? கேஸ் சிலிண்டர்காக, பெட்ரோலுக்காக, விவசாயத்துக்காக, மின்சாரத்துக்காக, அரிசிக்காக கொடுக்கும் எல்லா சப்சிடியிலும் அரசுக்கு இழப்பு உண்டு தான். அதை எல்லாம் சி ஏ ஜி குற்றம் சொல்லும் தான். நாளை ஒரு பொதுநல வழக்காக இந்த 2ஜி வழக்கு சி ஏ ஜி அறிக்கையின் படி ஏற்படுத்தப்பட்டதோ அதை முன்னுதாரனமாக காட்டி தொடரப்பட்டால் மக்கள் நிலை என்ன ஆகும்? அல்லது எந்த அரசாங்கமாவது மானியம் கொடுக்கவோ அல்லது மக்கள் நலனை சிந்திக்கவோ செய்யுமா? இது ஏழைகளின் சார்பாக வைக்கப்படும் கேள்வி!

எப்படி ஒரு சி ஏ ஜி அறிக்கையை அடிப்படையாக கொண்டு இந்த வழக்கு சித்தரிக்கப்பட்டதோ அப்போதே ராசா அவர்கள் வழக்கில் அவர்களை இழுத்து கொண்டு வந்து மேற்படி கேள்விகளை அவர்களை நோக்கி கேட்டால் என்ன ஆகும்? அதை தான் ராசா நேர்காணலில் சொன்னார். இழுப்பேன்... நீதிமன்றத்திடம் அதற்கான அனுமதி கேட்பேன் என்றார். கேளுங்கள் ராசா அவர்களே, கேளுங்கள். ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது. அய்யா சி ஏ ஜி பெருமகன்களே, அரசாங்கம் என்பது வேறு. மக்கள் நலம் சார்ந்தது என்பதை புரிய வையுங்கள் ராசாவே! சரி மீண்டும் நேர்காணலுக்கு வருவோம்!

அடுத்து ஒரு கேள்வி! "நிங்கள் ஸ்வான், யூனிடெக் போன்ற கம்பனிகளுக்கு  சாதகமாக செயல்பட்டதாகவும் முதலில் வந்தவர்களுக்கு முன்னுரிமை என்பதில் கட் ஆஃப் தேதியை முன்கூட்டி முடித்து விட்டதாகவும் சொல்லப்படுகின்றதே" என்னும் ஒரு அணுகுண்டு கேள்வி!

அதற்கு அழகாக பதில் சொல்கிறார். "முதலில் வந்தவர்களுக்கு முன்னுரிமை என்னும் நிலைப்பாடு என்னுடையது அல்ல என்பதை ஏற்கனவே சொல்லிவிட்டேன். அது போல உங்கள் (புதியதலைமுறை) தொலைக்காட்சியில் கூட ஒரு மெத்தப்படித்த பொருளாதார நிபுனர் கூட ராசாவீட்டுக்கு முதலில் போனவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டது என்பது போல பேசினார். நான் சிறையில் இருந்த போது அதைப்பார்த்தேன். இது என்ன திருவிழாவில் மிட்டாய் வாங்கும் விஷயமா? இல்லை. அது போல அல்ல. ஸ்பெக்ட்ரம் விற்பனைக்காக மனு செய்ய சொல்லப்பட்ட கடைசி தேதி என்பது மாற்றப்படவில்லை. அதை மாற்றினால் மட்டுமே தவறு. ஆனால் ஐநூத்தி சொச்சம் மனு வந்தது. ஆனால் இருக்கும் ஸ்பெக்ட்ரம் அளவு 65 மெகாஹெட்ஸ் மட்டுமே. அதனால் அந்த ஐநூத்தி சொச்சம் பேரில் தகுதியான அதாவது ட்ராய் வகுத்த சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு மனு செய்த  கம்பனிகளுக்கு மட்டும் முன்னுரிமை கொடுக்கப்பட்டது. ஆனாலும் வந்த மனுவில் ஏ, பி, சி, டி என சீனியாரிட்டி போடப்பட்டது. அதிலே கூட ஏ இருக்கும் இடத்தில் டி யையும் டி இருந்த இடத்தில் சி யையும் மாற்றினோம் தவிர ஒட்டு மொத்தமாக இசட்டை கொண்டு வந்து எல்லாம் முதலில் உட்காரவைக்கவில்லை. ஆனால் அப்படி மாற்றியமைக்கான சரியான காரணங்கள் கூட எங்களிடம் உண்டு. அது சம்மந்தமான விஷயம் இப்போது நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. நான் அங்கே ஏன் மாற்றினோம் என்பதற்கான காரணம் சொல்வேன். இதற்கு மேல் இங்கே இப்போது சொல்ல முடியாது. காரணம் அது நீதிமன்ற விவகாரம். அதை மீறி இங்கே சொல்லக்கூடாது. இன்னும் தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் முதலில் விண்ணப்பித்த வர் முதலில் பரிசீலிக்கப் படுவதால், முதலில் வந்த வருக்கு முதலில் சேவை என்ற கொள்கை கடை பிடிக்கப்படும் வரை, கடைசி தேதி என்பது அர்த்தமற்றது. அலைக் கற்றை இருப்பின் தோராய மதிப்பீடு மற்றும் 2009 செப்டம்பர் 25 அன்று செய்திக் குறிப்பு வெளியிடப்பட்ட வரை யில் பெறப்பட்ட விண் ணப்பங்கள் ஆகியவற்றின் அடிப்படையில், அந்தத் தேதி வரையில் பெறப் பட்ட விண்ணப்பங்களின் முதல் தொகுதி பரிசீலிக் கப்பட்டது. ஏதாவது விண்ணப்பம் புறக்கணிக் கப்பட்டதா அல்லது பின் னுக்குத் தள்ளப்பட்டதா என்பதுதான் கேள்வி.மீதமுள்ள விண்ணப் பங்கள் அலைக்கற்றை இருப்பைப் பொறுத்து பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும். மீத முள்ள விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட வில்லை என்பது ஊட கத்துறையில் உள்ள சில தவறான கருத் தாகும் என்கிறார் ஆ.ராசா. அவர் சொன்னதை எனக்கு சரியாக இங்கே சொல்ல தெரியவில்லை எனினும் அந்த நேர்காணலை பார்த்தவர்கள் அதிலிருக்கும் நியாயத்தை உணர்வார்கள் என்றே நம்புகிறேன்.

அடுத்ததாக ஒரு கேள்வியில் 1650 கோடி ரூபாய்க்கு உங்களிடம் அதாவது அரசாங்கத்திடம் வாங்கி விட்டு அதை பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய்க்கு விற்ற கம்பனிகள் பற்றி என்ன சொல்கிறீர்கள் என்னும் கேள்வி. இது பரவலாக எல்லோருமே ஜூவி போன்ற காழ்ப்புணர்வு பத்திரிக்கை படிக்கும் மேதாவிகள் கேட்கும் கேள்வி. அதற்கு ராசா அவர்கள் " ஆமாம் உண்மை தான். எங்களிடம் 1650 கோடி கொடுத்து ஸ்பெக்ட்ரம் வாங்கியவர் அதை வைத்து மணியாட்டி கொண்டா இருக்க முடியும்? ஒரு டவர் போட 60 லட்சம் செலவாகும். சென்னையை மட்டுமே எடுத்துக்கொண்டால் குறைந்த பட்சம் 200 டவர் போட வேண்டும். தமிழ்நாடு முழுமைக்கும் எத்தனை ஆகும்? இந்தியா முழுமைக்கும் எத்தனை ஆகும்? 1650 கோடி கொடுத்து எங்களிடம் வாங்கியவன் இன்னும் சில பங்குதாரர்களை சேர்த்து கொள்வதையோ, பங்கு வணிகம் மூலமாக பணம் திரட்டுவதையோ ட்ராய் அல்லது நாங்கள் செய்யவில்லை. அது நிதித்துறை அவர்களுக்கு கொடுத்த அனுமதி. இதற்கும் எங்களுக்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை. அது ஒரு லைசன்ஸ்தாரரின் உரிமை என நிதித்துறை நினைக்கும் போது நாங்கள் எதும் செய்ய இயலாது" என்கிறார்.

மேலும் அந்த நிருபர் " தொலைத்தொடர்பு துறையில் முன் அனுபவம் இல்லாதவர்களுக்கு கொடுத்தது ஏன்?" என்ற கேள்வி கேட்க அதற்கு ராசா அவர்கள் "இதற்கு தர்க்க ரீதியாக கேட்டால் தர்க்க ரீதியாக பதில் சொல்லலாம். சட்ட ரீதியாக கேட்டால் சட்ட ரீதியாகவும் சொல்லலாம்" என சொல்லிவிட்டு "ட்ராய் அமைப்பின் சட்ட விதிகளிலோ அல்லது எந்த அரசாங்க சட்ட விதிகளிலோ முன் அனுபவம் உள்ள ஒருவர் தான் அந்த தொழில் செய்ய வேண்டும் என இருக்கும் ஒரு வரியை காண்பியுங்கள்" என சட்டரீதி பதிலை சொல்லிவிட்டு "அப்படி பார்த்தால் ஸ்பெக்ட்ரம் என்னும் விஷயமே இந்தியாவுக்கு புதியது என்னும் போது பி பி எல், டாட்டா, அம்பானி, பிர்லா என  யாருமே  கூட அந்த துறையில் முன் அனுபவம் இல்லாதவர்கள் தான் " என தர்க்க ரீதியாக பதில் சொல்கிறார். இதிலே நான் சொல்வது என்னவெனில் நடுநிலைவாதிகளே, மெத்த படித்த மேதாவிலாசம் கொண்டோரே, முன் அனுபவம் இல்லாமல் முதலிரவு நடத்தி அஸ்வினி முதல் ரேவதி முதல் 27 குழந்தை பெற்றுக்கொள்ளும் கிருஷ்ண பரமாத்மாவின் தோழர் குசேலரை ஒத்துக்கொள்லும் நீங்கள் தொலைதொடர்பு வேலைக்கு மாத்திரம் ஏன் முன் அனுபவம் பின் அனுபவம் என கேட்கின்றீர்கள்?

இப்படியாக எல்லா கேள்விகளுக்கும் சளைக்காமல் பதில் சரவெடியாக வெடிக்கும் போது நேர்காணளாலர் கேட்கிறார்... "சரி நீங்கள் ஜாமீன் வாங்க ஏன் இத்தனை காலம் எடுத்து கொண்டீர்கள்?" அதற்கு ராசா அவர்கள் " ஸ்பெக்ட்ரம் ஒன்னேமுக்கால் லட்சம் கோடி ரூபாய் என்னும் மாயவலை மாய பலூன் பார்த்து உச்சநீதிமன்றமே அதிர்வாகி விட்டது. அதனால் தான் திருமதி. கனிமொழி உட்பட பலரும் ஜாமீன் கேட்டு சிறப்பு நீதிமன்றம், டெல்லி உயர் நீதிமன்றம், பின்னர் உச்சநீதிமன்றம் எல்லாம் சென்ற போது அவர்கள் "தொகை பெரியது" என காரணம் காட்டினர். நான் இதற்கிடையில் வழக்கை சந்தித்து அந்த மாயபலூன் காற்றினை பிடுங்கி விடும் வேலையை சாட்சிகள் விசாரணை போன்று வழக்கில் ஈடுபட ஆரம்பித்து கொஞ்சம் கொஞ்சமாக காற்றை இறக்கிவிட்டு பின்னர் அதை சாதாரண வழக்காக நீதிமன்றம் நினைக்க ஆரம்பித்த பின்னர் ஜாமீன் கேட்டேன். கிடைத்தது" என சொன்னார். ஆக ஸ்பெக்ட்ரம் காற்று இறங்கி விட்டது.

பின்னர் கட்சி தலைமை மற்றும் தலைவர் மேல் அவர் வைத்திருக்கும் பக்தி, கலைஞர் இவர் மேல் கொண்ட நம்பிக்கை எல்லாம் பேசினார். கடைசியாக ஒரு கேள்வி... "நீங்கள் கைது செய்யப்பட்ட பின்னர் ஆகா இவர் நமக்கு உதவவில்லையே, பழிவாங்கி விட்டாரே என்றெல்லாம் யாரையாவது குறிப்பிட இயலுமா?" என்னும் கேள்விக்கு ராசா அவர்கள் " இல்லை.. யாரும் எனக்கு வந்து உதவி செய்யனும் என நான் நினைக்க இயலாது. இது சிவில் வழக்கு இல்லை. ஒரு பிரம்மாண்டமான குற்றவியல் வழக்கு என்மீது. நான் மட்டுமே இதற்கு பதில் சொல்லி ஆக வேண்டும். என்னை நான் தான் நிரபராதி என நிரூபிக்க வேண்டிய கட்டாயம் எனக்கு. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்" என சொல்லிவிட்டு ஒரு அறிஞர் எழுதிய தத்துவத்தை சொல்கிறார் ஆங்கிலத்தில். "அதாவது  ஒருவருக்கு ஒரு பிரச்சனை பற்றிய நியாயங்கள் உண்மைகள் தெரிய வந்தும் அவர் நான் நடுநிலையாக இருக்கிறேன் என நினைத்து வாய்மூடி மௌனியாக உண்மையை மறைத்தார் எனில் அவருக்கு நரகத்திலும் கூட மோசமான ஒரு நரக பகுதி தான் கிட்டும். அஃப்கோர்ஸ் எனக்கு சொர்கம் நரகம் மீது எல்லாம் நம்பிக்கை இல்லாவிடினும் அந்த அறிஞர் சொன்னதை சொல்கிறேன்" என சொல்லிவிட்டு சிரிக்கின்றார். திரு.ராசா அவர்களின் இந்த பதில் எத்தனை பேருக்கு வயிற்றில் பயப்பந்தை உருள செய்திருக்குமோ என தெரியவில்லை. 

07.07.2012 இரவு 9 மணி முதல் பத்து மணி வரை இந்த நேர்காணல் புதியதலைமுறை தொலைக்காட்சியில் ஒளிபரப்பு ஆகியது. நான் இரவு 11 மணி முதல் இந்த பதிவை டைப் செய்ய ஆரம்பித்து விட்டேன். ஆனால் எனக்கு மின்சாரம் நேற்று இரவு 11.30 முதல் 12.30 வரை நிறுத்தம் ஆகியது. பின்னர் மீண்டும் அடிக்க ஆரம்பித்தேன். பின்னர் 1.15க்கு நின்றுவிட்டது. சரி காலையில் எழுந்து அடிக்கலாம் என இருந்த போது 7 மணி முதல் 9 வரை மின்சாரம் இல்லை. இப்போது கூட எப்போது வேண்டுமானாலும் மின்சாரம் போய்விடும் நிலை தான். ஆனால் எனக்கு செல்போன் தடை இல்லாமல் கிடைக்கின்றது. இதே கட்டுரையை ஒரு அரை மணி நேரம் நான் என் செல்போன் வழியாக ஒரு சிலருக்கு படித்து காட்டலாம். ஆனால் ஆயிரம் பேர் படிக்க என்ன செய்யலாம்?

வேறு வழி இல்லை. கனம் நீதிமான்களே! மாண்புக்குரிய மத்திய அரசே, இந்த வழக்கு முடிந்த பின்னர் திரு.ஆ.ராசா அவர்களை மத்திய மின் துறை அமைச்சர் ஆக்குங்கள். தடையில்லா மின்சாரமும், அதுவும் குறைந்த விலை மின்சாரமும் கிடைக்க செய்வார் என்னும் நம்பிக்கை இருக்கின்றது. இன்று மதியம் மீண்டும் 1 மணிக்கு ( 08.07.2012) அதே புதியதலைமுறை தொலைக்காட்சியில் மீள் ஒளிபரப்பாகின்றது அந்த நேர்காணல். பாருங்கள். நான் சொல்வது உண்மை என புரியும்!

38 comments:

  1. மிகவும் அருமையான தொகுப்பு அபி அப்பா ...

    ReplyDelete
  2. ஆ.ராசா அவர்களின் நேர்காணலைப் போலவே இந்தக் கட்டுரையும் தெளிவாக இருக்கிறது. வாழ்த்துக்கள் நண்பரே!
    -சி.என்.இராமகிருஷ்ணன்

    ReplyDelete
  3. சுறுக்கமாகச் சொன்னால் மிகவும் அற்புதமான ஒரு தொகுப்பு விமர்சனம். கலைஞர் பொருக்கி எடுத்த மிக உயர் ரக மாணிக்கக் கல்லாகத்தான் திரு ஆ. ராசா அவர்கள் என் கண்களுக்குத் தெரிகிறார்.

    தலைவர் தந்த பரிசாம், இந்த மாணிக்கத்தைப் போற்றிப் பாதுகாத்துப் பயனடைய வேண்டியது ஒவ்வொரு திமுகவினருக்குமான முதன்மை கடமையாக நான் கருதுகிறேன்.

    ReplyDelete
  4. மிக தெளிவான தொகுப்பு அபி அப்பா

    - அபு ரய்யான்

    ReplyDelete
  5. அருமையான தொகுப்பு அபி அப்பா ...

    - அபு ரய்யான்

    ReplyDelete
  6. வேறு வழி இல்லை. கனம் நீதிமான்களே! மாண்புக்குரிய மத்திய அரசே, இந்த வழக்கு முடிந்த பின்னர் திரு.ஆ.ராசா அவர்களை மத்திய மின் துறை அமைச்சர் ஆக்குங்கள். தடையில்லா மின்சாரமும், அதுவும் குறைந்த விலை மின்சாரமும் கிடைக்க செய்வார் என்னும் நம்பிக்கை இருக்கின்றது.அப்புறம் இப்போ வர்ற கரண்டும் கூட வராது

    ReplyDelete
  7. neeyum oru periya sombu... appo kalaignar tv ku vandha money triar=l pathi enna solra?

    ReplyDelete
  8. மிகவும் அருமையான தொகுப்பு....

    ReplyDelete
  9. மிகவும் அருமையான தொகுப்பு

    ReplyDelete
  10. மிகவும் அருமையான தொகுப்பு

    ReplyDelete
  11. அற்புதமான கட்டுரை. நமது ராசா அவர்களின் டிவி பேட்டியை எழுத்து வடிவத்தில் பார்ப்பது போல இருக்கிறது. இதுவரை திரு. ராசா அவர்கள் கழகத்தின் பிற முன்னணியினர் போல ஒருவர்தான் என்று நினைத்திருந்தேன். அது தவறு அவர் ஆயிரத்தில் ஒருவர் என்று நிரூபித்து என் மனதில் மிக உயர்ந்து நிற்கிறார் அந்த மானமகன், வீரமகன், வெற்றிமகன் அண்ணன் ராசா அவர்கள். அவர் திராவிட இயக்கத்தின் ஒரு அரும்பெரும் சொத்து என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. ரௌ அருமையான கட்டுரை வடித்த உங்களுக்கு நன்றி, அபி அப்பா.

    ReplyDelete
  12. அற்புதமான கட்டுரை. நமது ராசா அவர்களின் டிவி பேட்டியை எழுத்து வடிவத்தில் பார்ப்பது போல இருக்கிறது. இதுவரை திரு. ராசா அவர்கள் கழகத்தின் பிற முன்னணியினர் போல ஒருவர்தான் என்று நினைத்திருந்தேன். அது தவறு அவர் ஆயிரத்தில் ஒருவர் என்று நிரூபித்து என் மனதில் மிக உயர்ந்து நிற்கிறார் அந்த மானமகன், வீரமகன், வெற்றிமகன் அண்ணன் ராசா அவர்கள். அவர் திராவிட இயக்கத்தின் ஒரு அரும்பெரும் சொத்து என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. ரௌ அருமையான கட்டுரை வடித்த உங்களுக்கு நன்றி, அபி அப்பா.

    ReplyDelete
  13. நமது ராசா அவர்களின் டிவி பேட்டியை எழுத்து வடிவத்தில் பார்ப்பது போல இருக்கிறது. இதுவரை திரு. ராசா அவர்கள் கழகத்தின் பிற முன்னணியினர் போல ஒருவர்தான் என்று நினைத்திருந்தேன். அது தவறு அவர் ஆயிரத்தில் ஒருவர் என்று நிரூபித்து என் மனதில் மிக உயர்ந்து நிற்கிறார் அந்த மானமகன், வீரமகன், வெற்றிமகன் அண்ணன் ராசா அவர்கள். அவர் திராவிட இயக்கத்தின் ஒரு அரும்பெரும் சொத்து என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. ரௌ அருமையான கட்டுரை வடித்த உங்களுக்கு நன்றி, அபி அப்பா.

    ReplyDelete
  14. சரியாக சொன்னீர்கள், அந்த மடசாம்பிரானிகளுக்கும் புரியும் என நினைக்கிறேன். 2Gஐ வைத்தே ஆட்சியை பிடித்த அதிரடி நாயகி தமிழ் நாட்டில்தான் இருக்கிறார். அவருக்கு என்ன போறீங்க....?

    ReplyDelete
  15. சிறப்பான பணி!

    ReplyDelete
  16. simply super. thanks for you

    ReplyDelete
  17. RAJA'S POINTS ARE AMAZING. THANKS ABI APPA

    ReplyDelete
  18. mikavum arumaiyaana pathivu. aanaal ethanai perukku ithu puriyum.

    ReplyDelete
  19. Sir,

    I am a Telecom professional, Mr.raja done wonder, the problem in India is as what Periyar said " Brahmins" and Brahmins Newspapers .

    ReplyDelete
  20. உண்மை விரும்பி நண்பரே...

    நேர்காணலும், தங்களின் விளக்கமும் நன்று. இதன் வீடியோ இணைப்பு கிடைக்குமா என தெரிய படுத்தவும்...

    ReplyDelete
  21. ஸ்வான் டெலிகாம் -ஐ எடுத்துக்கொள்வோம். இவர்கள் லைசென்ஸ் பெற கட்டணமாக செலுத்தியது 1750 கோடி . இந்த கம்பெனியின் 45% பங்குக்கு எடிஸ்லாட் கொடுத்த விலை 3500 கோடி. அதன் படி, கம்பெனியின் மொத்த மதிப்பு 8000 கோடி. அந்த நேரத்தில் ஸ்வான் கம்பெனிக்கு என்று வேறு எந்த அசெட்-உம் இல்லை. அதன் படி, லைசென்சின் நியாயமான விலை 8000 கோடி என்றாகிறது. 6250 கோடி வருமான இழப்பு அரசுக்கு என்றாகிறது. எவ்வளவு லஞ்சம் பெற்று இந்த சலுகை காட்டப்பட்டது என்பது தான் இதன் ஆணிவேர்.

    உங்கள் கூற்றுப்படியே இது மக்கள் நலனுக்கு என்றால், எடிஸ்லாட் கொடுத்தவிலை லைசென்ஸ் கட்டணமான குறைந்த விலை அல்ல. அதனால் அவர்கள் குறைந்த விலையில் சர்விஸ் கொடுக்கப்போவதில்லை. மேலும், இந்த லைசென்ஸ் வாங்கியவர்கள் எந்த அளவு சேவையை கொடுத்திருக்கிறார்கள், இதுவரை? .

    ReplyDelete
    Replies
    1. Perfect point... The whole issue of 2G is Criminal Conspiracy, which Raja & his associates (DMK 2nd Family) did... The whole article in this blog is ridiculous to the core...

      No is going to question even if they sell Spectrum for free to you, me and X but if the powers hatch a conspiracy to sell it for free to X and the X within few months goes to the market and sells it for a fancy amount.. The Net profit of this sale is divided among the rogues in government... This is the whole issue of spectrum scandal..

      Also this cut off date modification was another criminal conspiracy, which was done primarily to help Reliance and other few companies, for which Raja and his associates would have received heavy money as kickbacks...

      2G is a Scandal and i have no doubts in it (for your information, i am not a Brahmin :-) )

      Delete
  22. அண்ணே நீங்க திமுகவில் எப்படியாவது ஒரு பெரிய போஸ்டிங் வாங்க முயற்சி பண்ணுறீங்கன்னு நினைக்கிறேன், அதுக்காக கண்ண மூடிக்கிட்டு ஆதரிக்கிறீங்க. எல்லாம் சரி. ஒரு பொய்யை அப்படியே மறைத்து உண்மை போலவே சித்தரித்து எழுதும் கலையை தங்களின் தலைவரிடம் இருந்து கற்றுக் கொண்டீர்களா?

    நாங்க இது எல்லாத்தையும் நம்ப படிப்பறிவு இல்லாத கூட்டமா?

    தாங்கள் சொல்வதை வழி மொழிய ஒரு கூட்டம் வேறு. போங்கண்ணே போய் ஆகிற வேலை இருந்தா பாருங்க. ஹய்யோ ஹய்யோ.

    ReplyDelete
  23. தயிர்பிரியாJuly 9, 2012 at 12:40 AM

    இத தஞ்சாவூர் கோயில் கல்வெட்டுல எழுதி வெச்சுட்டு அங்கியே உக்காந்துக்குங்க.

    ReplyDelete
  24. எப்படிப் பார்த்தாலும், நமது நாட்டு சி.பி.ஐ ஒரு புண்ணாக்கு நிறுவனம். யாரையும் புடிக்கத்தெரியாது. ரெய்டு என்ற பந்தாவைத்தவிர வேறு எதுவும் கிடையாது.

    அதுவும் யாரைப் புடிக்கப் பார்த்தார்கள்? கலைஞர் பாசறையில், விஞ்ஞான முறையில் ஊழல் செய்தவர்களின் சீடரை மடக்க முடியுமா?

    நமது போலிசும் சரி, உளவுத்துறையும் கோட்டை விடுவதில் நம்பர் 1.

    கனிமொழிக்கும், ராசாவுக்கும் எனது நல் வாழ்த்துக்கள். நமது போலீசயும், உளவுத்துறயையும் நம்பி நீங்கள் தமிழகத்தையே ஒரு 25 லட்சம் கோடிக்கு விற்று விடலாம்.

    ReplyDelete
  25. அவரது பேட்டி புரியவில்லை என்றால், இந்த கட்டுரை, கருத்துரை புரியவில்லை என்றால் அவர்களுக்கு எதுவும் புரியாது என்று அர்த்தம் !- சிவசங்கர்.

    ReplyDelete
  26. ஆரூர் மூனா பூனா செந்தில் , என் பதிவுக்கு வர வேண்டாம் என சொல்லியும் ஏன் வருகிறாய்?

    ReplyDelete
  27. Jing chak Jing chak ....

    ReplyDelete
  28. Thelindha Sindhanai, thelivana bathil

    Theerndhadhu Sandhegam... Pidi 175000 porkaasugal (1 crore kku 1 porkasu)

    ReplyDelete
  29. ராஜா அவர்களின் நேர்காணலை நன்றாக அலசி ஆராய்ந்து திரணாய்வு செய்திருககிறார் நண்பர் அபி என்கின்ற தொல்காப்பியன். All are hypothetical figured. There is no substancial doccumentary or oral evidence. இதை நான் டைம்ஸ் ஆப் இந்தியா டெக்கான் கிராணிகில் பத்திரிககையில் செய்திகளுக்கு கீழே விமர்சணம் கமெண்ட் பகுதியில் எழுதியிருக்கிறேன். கனியின் ஜாமீண்மனு மீதான விசாரணையின்போதும் பதிவு செய்திருந்தேன்.ஒவ்வொரு ஜாமீன் மனு விசாணையின் பேர்தும் பதிவு செய்திருக்கிறேன்.ஒரு வழககறிஞர் என்ற முறையில் ராஜாவின் நேர்முகம் மிகசிறப்பாக இருநதது. சட்டநுணுக்கங்களை மிகச்சரியாக எடுத்துரைத்தார். தங்கள் பதிவு அதை அலசி ஆராய்ந்து உண்மைநிலையை மிகத்தெளிவாக பதிவிட்டுள்ளீர்கள். பாராட்டுககள்.

    ReplyDelete
  30. உங்க அப்பாவுக்கு தி மு க பீரியட்ல வேல கிடைச்சி இருக்கலாம். ஆனா சம்பளத்த கருணாநிதியோ , வைப்பாட்டியோ, பொண்டாட்டியோ, கூத்தியல்லோ, துனைவியாளோ, தரல எங்க வரி பணம் தான் உங்கப்பனுக்கு வரி பணமா வந்திருக்கு. கருணாநிதி வேட்டிய தூக்கி புடிக்கறத நிறுத்து. நாத்தம் தாங்க முடியல.

    ReplyDelete
  31. Today's News

    Because of the 2G minimum auction rate is high (as per the court order to auction it again), Cell phone companies decided to increase the charges 3 times more.

    ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))