பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

October 9, 2012

"பிள்ளையார் "பிடிக்க அது "பெரியார்" ஆனது!




அக்டோபர் முதல் தேதி 2012 அன்று  அதிமுக "மெஜாரிட்டி" அரசின் அடக்குமுறைகளை , அரசின் மக்கள் நலம் கவனிக்கப்படாத நிலைகள்... இவைகள் எல்லாம் குறித்து விவாதிக்க  திமுகவின் அவசர செயற்குழு கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் தலைவர் கலைஞரால் கூட்டப்பட்டது. கூட்ட முடிவில் செய்தியாளர்களை சந்திக்கின்றார் கலைஞர். அதிமுக அரசின் செயல்பாடுகளை மற்றும் செயல்படாத ....அதனால் மக்கள் படும் பாடுகளை எல்லாம் கண்டித்து தமிழக மாவட்ட தலைநகரங்களில் கருப்பு உடை அணிந்து மனித சங்கிலி போராட்டம் நடைபெறும், சென்னையில்  ஆட்சியர் அலுவலகம் முதல் கலங்கரை விளக்கம் வரை தன் தலைமையிலேயே மனித சங்கிலி போராட்டம் நடைபெறும் என அறிவிக்கிறார். அப்போது ஒரு பத்திரிக்கையாளர் "அய்யா நீங்கள்  சென்னையில்  மனித சங்கிலி நடத்த இருக்கும் சாலையில் உங்கள் பெயர் தாங்கிய கல்வெட்டை அகற்றி விட்டு அங்கே ஜெயாவின் பெயர் தாங்கிய கல்வெட்டு வைக்கப்பட்டுள்ளதே? அதனால் அந்த சாலையில் நீங்கள் மனித சங்கிலி நடத்தினால் உங்கள் தொண்டர்கள் அதை பார்த்து உணர்சி வசப்பட்டு அதனால் அசம்பாவிதம் நடக்கும் என நினைத்து போலீசார் அனுமதி தருவார்களா? என கேட்கின்றார். மைக் பிரச்சனையால் அவர் என்ன கேட்கின்றார் என தலைவருக்கு சரியாக காதில் விழாமல் மீண்டும் கேட்கிறார். பத்திரிக்கையாளர் மீண்டும் இதை சொல்ல கலைஞர் அதற்கு "இதல்லாம் ஒரு பிரச்சனை இல்லை" என ஒற்றை வரியில் பதிலளித்து விட்டு அடுத்த கேள்விக்கு போகின்றார்.

நன்றாக கவனித்து பாருங்கள். இந்த பேட்டி ஒரு நேரலை நிகழ்சி. இதிலே ஒரு முறைக்கு இரு முறை அந்த பத்திரிக்கையாளர் இப்படி ஒரு கேள்வி கேட்கின்றார். அவர் கேள்வியில் திமுக தொண்டர்களை இந்த சாதா கல்வெட்டு பிரச்சனையால் அசம்பாவிதம் நடக்க வேண்டும் என தொண்டர்களை "தூண்டி" விடுகின்றாரா? அல்லது காவல் துறைக்கும் அரசுக்கும் மனித சங்கிலி நடைபெறாமல் தடுக்க வேண்டி காரணம் சொல்லி கொடுக்கின்றாரா என புரியவில்லை. இது தான் இப்போதைய "நான்காவது தூணின்" நிலைமை தமிழகத்தில். உணருங்கள் தோழர்களே!

எது எப்படியோ அந்த பத்திரிக்கையாளரின் ஆசை நிறைவேறுகின்றது. சென்னையில் மட்டுமல்ல தமிழகத்தில் எங்கும் மனித சங்கிலி நடத்தக்கூடாது என காவல்துறை அனுமதி மறுக்கின்றது. தமிழகத்தில் ஜெயா ஆட்சி அமைந்த மே 13 - 2011 முதல் திமுகவும் சளைக்காமல் நீதிமன்றம் செல்வதும் பின்னர் நீதிமன்றங்கள் அரசின் தலையில் சுத்தியால் அடிப்பதும் வழக்கம் தான் எனினும் இந்த முறை தலைவர் கலைஞர் எடுத்த முடிவு அசாதாரமான ராஜதந்திர முடிவு. மூன்றாம் தேதி இரவு வரை காவல்துறை அனுமதி கொடுக்கவில்லை.

நான்காம் தேதி காலை கலைஞர் பத்து மணிக்கு அறிவாலயம் வரும் போது அரசின் தலையில் இப்படி ஒரு இடி இறங்கும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. வரும் போதே பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் பகுத்தறிவு சீருடை பளபளக்க வருகின்றார். கருப்பு சட்டை, அதன் மேல் தன்மான வெள்ளை துண்டு அணிந்து வருகின்றார். பார்ப்பவர்கள் பதைபதைத்து போகின்றனர். "என்ன இது கோலம் அய்யா?" என அழவில்லை. "ஆகாஇதுதானய்யா நாங்கள் எதிர்பார்த்த  உங்கள் உருவம்" என ஆனந்த கூத்தாடுகின்றனர். அறிவாலயத்தில் கலைஞரை வரவேற்ற தளபதி மற்றும் தளபதியின் தளபதிகள் மேயர் மா.சு, தோழர் ஜின்னா, மாவட்ட செயலர் ஜெ. அன்பழகன் அண்ணன் ஆகியோர் அரக்க பரக்க ஓடுகின்றனர். எங்கிருந்தோ கிடைத்த கடையில் இருந்து எத்தனை கருப்பு சட்டைகள் கிடைக்கின்றனதோ அத்தனையும் வாங்கி வந்து நான் முந்தி நீ முந்தி என உடுத்துகின்றனர்.

தமிழகம் முழுக்க தகவல் சொல்கின்றனர். எஸ். எம் எஸ் பறக்கின்றது. ஆண்களும் பெண்களும் கருப்பு உடை நோக்கி விரைகின்றனர். அறிவாலயம் முழுக்க கூட்டம் வழிந்து நிரம்புகின்றது. அறிவாலய மாடியில் இயங்கும் "கலைஞர் தொலைக்காட்சி" நிலைய செய்திப்பிரிவினர் ஓடிவருகின்றனர். பி டி ஐ, யு என் ஐ செய்தி நிறுவனத்தினருக்கு செய்தி போகின்றது. அத்தனை இந்திய தொலைக்காட்சி மற்றும் அச்சு ஊடகங்கள் அலுவலகங்களின் பேக்ஸ் மற்றும் தொலை பேசிகள் இந்த செய்தியை அலறுகின்றன. அனைத்து ஊடகங்களும் அறிவாலயத்தில் முற்றுகை இட தொடங்கின. அவசர கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் கூட்டப்படுகின்றது. நாளை மனித சங்கிலியை அனுமதி கொடுக்காவிடினும் நடத்தி சிறை செல்லலாமா என தலைமைக்கு கேட்டுக்கொண்டு இருந்த அரியலூர் மாவட்டம், புதுகை மாவட்டம், காஞ்சி மாவட்ட செயலர்கள் தலைமையை தொடர்பு கொண்டு "இன்றே நாங்களும்கருப்பு உடை அணிந்து விட்டோம், அடுத்து என்ன?" என கேள்வியால் துளைக்க தலைமை நிலைய செயலர் சதாசிவம் அவர்கள் "இருங்க மாவட்டம்...தலைவர் இதோ ப்ரஸ் மீட்க்கு ஏற்பாடு செய்ய சொல்லிட்டார்... எங்களுக்கும் எதும் புரியலை" என சொல்லிக்கொண்டே இருந்தார்.

ப்ரஸ்மீட் ஆரம்பம் ஆனது. "மனித சங்கிலி நாளை நடக்காது. ஆனால் அதற்கு பதிலாக திமுகவினர் கருப்பு உடை அணிந்து அதிமுக அரசின் அராஜக போக்கினை துண்டு பிரசுரம் மூலமாக மாவட்டத்துக்கு மாவட்டம், நகரத்துக்கு நகரம், ஒன்றியத்துக்கு ஒன்றியம், பேரூருக்கு பேரூர், வார்டுக்கு வார்டு ,தெருவுக்கு தெரு, வீட்டுக்கு வீடு கொண்டு சேர்ப்பர்" என சொல்கிறார். அப்போது ஒரு பத்திரிக்கையாளர் கேட்கின்றார்... "அய்யா இதற்கு முன்னர் கருப்பு சட்டை போட்ட நிகழ்வு தமிழகத்தில் எப்போது என நியாபகம் உள்ளதா?" ... அதாவது ஒரு கட்டத்தில் எம் ஜி ஆர் அவர்கள் தன் மந்திரிசகாக்களுடன் கருப்பு சட்டை சிலநாட்கள் அணிந்தார். அதைத்தான் அந்த பத்திரிக்கையாலர் கேட்கின்றார். அதற்கு தலைவர் அவர்கள் " தமிழகத்தில் நீங்கள் நினைக்கும் அந்த நிகழ்வுக்கு முன்பே கருப்பு சட்டை போட்டவன் இந்த கருணாநிதி" என்கிறார். கேட்டவர் வாயடைத்து போனார். அவரிடமேவா? கருப்பு சட்டை பகுத்தறிவு பல்கலைகழக முதல் பேட்ஜ் மற்றும் முதல் மாணவரிடமேவாஅந்த கேள்வி?

கருப்பு உடையில் தலைவர் கலைஞர் அய்யா பெரியார் போல இருக்கிறார், கருப்பு உடையில் தலைவர் ஆசிரியருக்கு ஒட்டிப்பிறந்த இரட்டையர் போல இருக்கிறார் என்றெல்லாம் அறிவாலய கூட்டம் சிலாகிக்கின்றது.

பெரியார் திடல் தோழர்கள் ஆனந்த கூத்தாடுகின்றனர். மகிழ்வின் உச்சத்தில் அமிழ்கிறார் ஆசிரியர் வீரமணி அய்யா அவர்கள். சுபவீ அய்யா கருப்பு உடை அணிந்து அறிவாலயம் வருகின்றார். எங்கு திரும்பினும் கருப்பு உடைகள். நான் மயிலாடுதுறை திரும்ப வேண்டி பேருந்தில் வரும் சமயம் ஏகப்பட்ட எஸ். எம். எஸ்கள் என என் இன்பாக்ஸ் நிரம்பி வழிகின்றது.தலைவர் கலைஞரின் பேஸ்புக்ல் பார்த்தேன். "நான் இன்றைக்கே கருப்பு உடை அணிந்து விட்டேனே" என சொல்லி சிரிக்கின்றார். கடலூர்  வந்த போது எடுத்து பார்த்தேன். அதன் பின்னர் என் வெள்ளை சட்டை எனக்கு உறுத்தியது. ஓடிப்போய் ஒரு கடையில் கருப்பு சட்டை கேட்டேன். "இல்லீங்க போங்க" என கோவப்பட்ட கடைக்காரரிடம் ஏனய்யா கோவம் என கேட்டமைக்கு " பல வருஷமா விற்காம இருந்த கருப்பு சட்டை எல்லாம் இன்றைக்கு  காலை முதல் தள்ளுபடி விலையில் விற்பனை செய்து விட்டேன். கருப்பு துணி கூட ஒரு பண்டல் இல்லாம விற்பனை ஆகிப்போச்சு. இப்ப வந்து கேக்குறீக்களே" என அங்கலாய்த்தார்.

மயிலாடுதுறை வரும் முன்னர் என் அக்கா பையன் போன் செய்தான். "மாமா நான் மகாபலிபுரம் வந்தேன். இங்க ஒரே கருப்பு சட்டையா இருக்கு. என்ன எதுனா பிரச்சனையா?" என கேட்டான். "ஆமாம் தமிழகம் முழுக்க பிரச்சனை தான். மின்சாரம் இல்லை, தண்ணீர் இல்லை, விவசாயம் இல்லை... அதனால் தமிழகம் முழுக்க இனி இருண்ட காலம் என்பதை காட்டத்தான் இந்த கருப்பு சட்டை" என்றேன். சிறிது நேரம் கழித்து அவனே போன் செய்தான். "மாமா இங்க ஏன் இத்தனை கருப்பு சட்டை என கேட்ட ஒரு ஆங்கிலேயரிடம் ஒரு கருப்பு சட்டைக்காரர் 'ஹியர் இன் தமிழ்நாடு.. நோ எலக்ட்ரிசிட்டி, நோ வாட்டர், நோ அக்ரிகல்சர், நோ லா அண்டு ஆர்டர், ஃபுல் ஆஃப் தெஃப்ட் அண்டு ராபரி பட் ஒன்லி ,அரஸ்ட் ஆஃப் ஆப்போசிட் பார்டீஸ்.. ஸோ ஒன்லி ப்ளாக் ட்ரஸ்" என சொன்னாரு. அவங்களும் அதை கேட்டு கிட்டு அதையே போன்ல யார் கிட்டயோ சொன்னாங்க" என சொன்னான்.

மயிலாடுதுறைக்கு வந்தேன். கடைகளில் "இங்கே கருப்பு சட்டை மற்றும் கருப்பு துணி இருப்பு இல்லை" என்னும் அறிவிப்பு பலகைகள் துணிக்கடைகள் வாசல் தோரும் தொங்கக்கண்டேன்.

ஆக ஒரு நாள் கூத்தாக முடிந்து இருக்க வேண்டிய மனிதசங்கிலியை இப்படியாக உலகம் முழுக்க தெரியவைத்தது ஜெயாவின் ஆலோசகர்கள் என்னும் கும்பல்கள் தான். மூளைக்காரர்களாம் இவர்கள்:-))

இந்த மூளைக்காரர்கள்  செய்த லீலைகளின் பயன்கள்,

 1. மஞ்சள் துண்டு மகான் என  இனி  கலைஞரை கேலியும் கிண்டலும் செய்ய இயலாவண்ணம் பகுத்தறிவு சீருடைக்கு கொண்டு வந்து ஒரு இனத்தையே தட்டி எழுப்பியது.

2. திமுகவினர் அனைவரும் கருப்பு உடை அணிவதால் ஒரு ரயில் பெட்டியிலோ, ஒரு பேருந்திலோ அனைவரும் இவன் நம்ம இனத்தான் என எளிதில் அடையாளம் காண்பது.அதன் காரணமாய் ஒற்றுமை ஓங்குவது .


3.சுனக்கமாய் போனதாய் சொன்ன பெரியாரியல் கொள்கைகள் ஒரே நாளில் வீறு கொண்டு எழுந்தது.

 4. ஒரே நாளில் முடியக்கூடிய மனித சங்கிலி போராட்டத்தை விட பல மடங்கு பெரிதாக்கி சாதாரண நடுநிலையாளர்களும் ஏன் இத்தனை மக்கள் கருப்பு சட்டை போடுகின்றனர் என கேள்வி கேட்டு அதற்கு கருப்பு சட்டைகாரர்கள் பதிலுக்கு துண்டு பிரசுரம் செய்வதால் கடைக்கோடி வாக்காளனுக்கும் அரசின் அவலட்சனம் தெரிவது.

பொதுவாக "பிள்ளையார் பிடிக்க குரங்கானது" என சொல்வார்கள். ஆனால் அந்த மூளைக்காரர்கள் (???) "பிள்ளையார் "பிடிக்க அது "பெரியார்" ஆனது!சூரியனே கருப்பு சட்டை போட்டபின் சுட்டெரிக்கும் நெருப்பென்ன, சுழண்டு அடிக்கும் காற்றென்ன... கருப்பு சட்டை அணிந்திடுவோம். இனமானம் காத்திடுவோம்!

15 comments:

  1. 5ம் தேதியே எழுதிய இந்த பதிவு நெட் சொதப்பல் மற்றும் சீரான மின்சாரம் இல்லாமை ஆகிய காரணங்களால் இன்றைக்கு தான் என் வலைப்பூவில் ரிலீஸ் ஆகியது.

    ReplyDelete
  2. மிக்க மகிழ்ச்சி. பாராட்டுக்கள்.தொடரட்டும் உங்கள் பணி
    வில்லவன் கோதை

    ReplyDelete
  3. /ஆமாம் தமிழகம் முழுக்க பிரச்சனை தான். மின்சாரம் இல்லை, தண்ணீர் இல்லை, விவசாயம் இல்லை...

    //

    அப்படியே நல்ல அரசியல்வாதிகளும் இல்லை என போட்டுகொள்ளுங்கள்

    ReplyDelete
  4. //மயிலாடுதுறைக்கு வந்தேன். கடைகளில் "இங்கே கருப்பு சட்டை மற்றும் கருப்பு துணி இருப்பு இல்லை" என்னும் அறிவிப்பு பலகைகள் துணிக்கடைகள் வாசல் தோரும் தொங்கக்கண்டேன்.
    //

    நானும் மயிலைதான் இருக்கேன் ..இப்படி ஒரு அறிவிப்பு பார்க்கவில்லையே ?

    ReplyDelete
  5. // ஒரே நாளில் முடியக்கூடிய மனித சங்கிலி போராட்டத்தை விட பல மடங்கு பெரிதாக்கி சாதாரண நடுநிலையாளர்களும் ஏன் இத்தனை மக்கள் கருப்பு சட்டை போடுகின்றனர் என கேள்வி கேட்டு அதற்கு கருப்பு சட்டைகாரர்கள் பதிலுக்கு துண்டு பிரசுரம் செய்வதால் கடைக்கோடி வாக்காளனுக்கும் அரசின் அவலட்சனம் தெரிவது.
    //

    100% உண்மை ..

    ReplyDelete
  6. //ஆக ஒரு நாள் கூத்தாக முடிந்து இருக்க வேண்டிய மனிதசங்கிலியை //

    அப்ப நீங்க நடத்துற போராட்டம் எல்லாம் வெறும் கூத்தா ? சிறை நிரப்பும் போராட்டம் நடக்கும் போது பேருந்து நிறுத்தத்தில் ஒரு பெரியவர் சொன்னார் .. இதுலாம் சும்மா ஒரு நாள் கூத்து என்று அதான் கேட்டேன் ...

    ReplyDelete
  7. இந்த நாடும் நாட்டு மக்களும் என்னவாக போகின்றார்களோ..?

    என்ற பயம் உள்ளூர வரத்தான் செய்கிறது..

    தொடருங்கள்...

    ReplyDelete
  8. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  9. அறிவாலயமே கண் முன் வந்ததாக அருமையான உணர்வு .....அழகான பதிவு

    ReplyDelete
  10. அருமையான பதிவு!!!!!

    ReplyDelete
  11. அருமையான பதிவு!!!

    ReplyDelete
  12. வரும்கால முதல்வர் குழ்பூ வாழ்க! அய்யா கலைஞ்சர் அருகில் எவ்வளவு ஒய்யாரமாய் காட்சி தருகிறார் அம்மா குஷ்பூ.

    ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))