பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

July 1, 2013

அன்னக்கொடியும் அந்த கேடு கெட்ட முதுகும்!



எனக்கும் என் நண்பன் பண்டியன் டிம்பர் டிப்போ சங்கருக்கும் வாய்க்கால்  சண்டை. பேசுவது இல்லை சில ஆண்டுகளாக. ஆனாலும்  நடுவே 'பொம்மலாட்டம்" படம் வரும்  போது ஒரு போன் "நான் 3 டிக்கெட் எடுத்து விட்டேன். நமக்கு இடையே ஒரு சீட்". நானும் அவனும் பேசாவிடினும் "பேசாமல் படம் பார்போம்" .

இப்ப்டியகத்தான் மதியம் போன். "டேய் பாரதிராஜா ப்டம் வந்திருக்கு. சமீபத்தில் நீ "முதல் மரியாதை"படம் விமர்சனம் உன் ப்ளாக்கில் போட்டாயாம்.. வா.. வா... இப்ப வா " ....  பாரதிராஜா படம் "அன்னக்கொடியும் கொடிவீரனும்"இப்படியாகத்தான்  பார்த்தேன்.

அதாவது கி பி 1000ல் அனிருத்த பிராம்மராயர் தன் பினாமி பெயரில் படம் எடுத்தா "இங்க பாருங்க... அதிலே ஒரு வில்லன்... அவன் சாகும் போது அவன் இண்ட்ரட்யூஸ் ஆகும் போது பேசும் வசனத்தை ....அதையேத்தான்  பேசிகிட்டே சாகனும்... இது தமிழ் சினிமாவிலே புதிதாக இருக்க வேண்டும்" என சொன்னது போலவே இருக்கு படம். அத்தனை ஒரு புதுமை! படம் ஆரம்பம் முதல் முடியும் வரை ராதா பொண்ணு ஜாக்கெட் இல்லாம உள்பவாடையுடன் ஓடுவது தவிர்த்து பார்ப்பின்  எல்லாம் புதுமை.

ஒரே ஒரு ஊர்ல ஒரே ஒரு வில்லன். அடச்சே... உண்மை தமிழன் மாரியே பேசுறேன் பாருங்க. இருங்க சொல்றேன். ஒரு ஊர்ல ஒரு வில்லன். அவனுக்கு ஒரு மகன். வில்லன் கந்துவட்டி கந்த சாமி. அடுத்த ஊர் காரன் பாரதிராஜாவின் குலவழக்கப்படி ஆடு மேய்க்கும் ஆட்டுக்காரன். இது வரை தமிழ் சினிமாவில் வராத கதைக்களம். நிற்க. அந்த ஆடு மேய்ப்பவன் வழக்கம் போல ஆடு மேய்பதை தவிர மத்த வேலை ... அதாவது பக்கத்து ஊர் ராதா பொண்ணு வை லவ்றான்.

லவ்வுன்னா லவ்... இதுவரை தமிழ் சினிமாவில் வராத லவ். ரொம்ப புதுமை. ஆடு மேய்ப்பவன் ஆட்டுப்பாலை பீய்ச்சி அடிக்கனும் தானேன்னு நீங்க பாரதிராஜாவின் கேப்டன் படம் நினைச்சு வந்தீங்கன்னா... யூ ஆர் ய ஃபூல். இப்ப அப்படி இல்லை. ஆட்டுப்பால் அனாயஸ்யமாக கதாநாயகி வாயில் பின்னர் அங்கிருந்து கதநாயகன் மூஞ்சியில் என ட்விஸ்ட் இருக்கு. இதுவும் தமிழக சினிமா கண்ட புதுமை!

அதை விடுங்கள். இப்படியாக லவ்விகிட்டு இருக்கும் போது வில்லன் பையன் கதா நாயை தள்ளி கிட்டு போய் கட்டிகிடுறான். சரி ஒரு மகா ட்விஸ்ட். பின்ன தான் புரியுது. கதாவில்லன் ஒரு கத்தியை உறை யில் இருந்து எப்போதும் எடுப்பதும் பின்ன உள்ள போட்டுப்பதும். அப்பவே தெரியுது... இந்த வில்லன் கத்தி வேலை செய்யாதுன்னு. ரொம்ப ஈசியா இதை புரிஞ்சுக்க வச்சிடுறார் டிரக்டர்.

அதையும் விடுங்க.. யோவ் எல்லாத்தையும் விட்டா பின்ன கதை தான் என்ன?ன்னு நீங்க கேட்டா... கடேசியா தான் அந்த "பிட்டு" சீன் வருது. ராதா பொண்ணு ஜாக்கட் இல்லாம ஓடுது. அது ஏன்னு தெரியலை. அந்த வீட்டில் இருக்கும் எல்லாரும் நல்ல உடையுடன் அழகா தப்பிச்சு ஓடும் போது இந்த புள்ள மட்டும் ஏன் இப்படி என தியேட்டரில் முறுக்கு வித்தவன் என்னை பார்த்து கேட்ட போது கடுப்பாக முறைத்தேன்.

கடைசியில் ... ராதா பொண்ணு அந்த பழைய பையனை கட்டிகிடுச்சு. அவ்ளோவ்தாங்க.

@ பாரதிராஜா என்னும் பழைய பிம்பம் நினைச்சு போனவன் எல்லாம் செத்தான்

@பொதுவாகவே பாரதிராஜா என்பவர் ஒரு லூசு என பொதுத்தமிழனுக்கு தெரியும். அது இப்போது டபுள் ஆக ஆனது

@படத்தில் காமடி இல்லையா,என கேட்பவர்கள் வாயை மூடிக்கொள்ளும் அளவு காமடி என்னான்னா மனோஜ் வில்லன் என்பதும், அவர் படம் முடியும் வரை 188 தடவை தன் வேட்டியை அவுத்து விட்டு பட்டாப்பட்டியுடன்அந்த வேட்டியை  உருமா கட்டிப்பதும் தான்.

@படத்தின் வெற்றி என்பது வில்லன் வரும் போது குழந்தைகள் சிரிப்பது தான். மனோஜ் வரும் போது நனே மூணு தபா சி ரிச்சு தொலைச்சேன் என்றால் பார்த்து கொள்ளவும்.

@அந்த கிருத்திகாவின் முதுகை வைத்து அடுத்த படம் வாய்ப்பு வரலாம். ஆனால் நடிப்பை வைத்து அல்ல. இந்த படத்துக்கு "பின்னால "உனக்கு பெரிய வாய்ப்பு வரும் என டிரக்டர் சொன்னா அதிலே மாற்றம் இருக்காதுல்லா....

@மனோஜ் ஒரு நல்ல நடிகன். சரண் தான் முதலில் பாரதிராஜா மேல் இருந்த கோவத்தில் படம் எடுத்து அவுட் ஆக்கியது. அதை உணர்ந்த பாரதிராஜா" போங்கடா வெண்ணைகளா, என் பையனை நீங்க என்னடா கேவலம் செய்வது" என முழங்கி விட்டு எடுத்த படம் இது! ஏன்னா பாரதிராஜாவை விட இன்னும் ஒருத்தன் பிறந்து வர வேண்டும் மனோஜ் அவர்களை அசிங்கம் செய்ய! பல சமயம் அந்த மீசை வெளியே வந்து விழுந்து விடுமோ என நாம் சீட் முனைக்கு வரும் நேரங்கள் தான் படத்தின் த்ரில் டைம்!

@மகேந்திரன் அதாவாது "முள்ளும் மலரும்" மகேந்திரன், மற்றும் "பரதேசி" பாலா ஆகியோர்களை கட்டிப்போட்டு இந்த் படத்தை காண்பித்தால் அவர்கள் சாவு நிச்சயம். இதை யாரும் செய்ய மாட்டார்கள் என நம்புகிறேன். அத்தனை ஒரு கொலைவெறி யாருக்கும் இருக்காது என தீர்க்கமாய் நம்புகிறேன்.

@ புருவம் திருத்திய கிராமத்து கிளி அனேகமாய் பாரதிராஜா என்னும் மாபெரும் கலைஞர் மட்டுமே காண்பிக்க முடியும். "ரே" எழுந்து வந்து இந்த படம் பார்க்க வேண்டும். ப்ளீஸ். அந்த ப்ரீவ்யூ ஷோவில் நானும் இருக்க வேண்டும். ஒரு கலைஞன் சாவதை நான் நேரிடையாக காண ஆசை!

@பை தி பை நான் இன்னும் அதிஷா விமர்சனம் பார்க்கவில்லை!

@கலைஞர்  தொலைக்காட்சிக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். "முதல் மரியாதை" தொடர் வரப்போகுதாம்!

படம் முடிந்து வெளியே வந்ததும் சங்கர் சொன்னான்.... "இதுக்கு நாம் பேசித்தொலைத்து இருக்கலாம்"