பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

May 3, 2007

ஆல மரம் எப்படி இருக்கும்?

நான் சின்ன வயசுல படாத பாடு பட்டதா நெனச்சுகிட்டு பல பேரை படாத பாடு படுத்தியிருக்கேன். அஞ்சாப்பு படிக்கும் போதே ராதா தோள் மேல கைய போட்டுகிட்டு பக்கத்து ஹைய்ஸ்கூல்க்கு போய் லேப்ல இருக்கும் எலும்புக்கூடு பாத்து "ஐ என்னைப்போல் ஒருவன்"ன்னு ஆச்சர்யப்பட்டு அந்த லேப் அட்டண்டரால் அடித்து விரட்டப்பட்டு அவர் கிட்ட "நானும் ஒரு நாள் இந்த ஸ்கூல்ல படிப்பேன்ன்னு மனசுகுள்ள சவால் விட்டுட்டு அடுத்த வருஷமே அங்க போய் சேந்து சபதத்தை நிறை வேத்திட்டு சந்தோசப்பட்டுகிட்டேன்.

6ம் வகுப்புல சேந்ததுல இருந்து ஏதோ IIT ல சேந்த மாதிரி 5ம் கிளாஸ் பசங்களை பாத்து"டேய் நல்லா படிங்கடா அப்ப தான் அண்ணன் மாதிரி ஹைய் ஸ்கூல் சேர முடியும்"ன்னு பீலா வுட்டுகிட்டு இருந்தப்ப தான் பின்னந்தலைல நொட்டுன்னு ஒரு தட்டு. திரும்பி பாத்தா தடிமாடு கணக்கா 10ம் கிலாஸ் பயபுள்ள. அப்ப ஆரம்பிச்ச அடி அந்த ஸ்கூல்ல +2 வரை தொடர் கதையாவே ஆனதுதான் சோகம்.

அதிலயும் என் தமிழ் டீச்சர் என்னய போட்டு தாக்குனதையே தொடர் பதிவா போடலாம். என் தமிழ் ஸ்பெல்லிங் மிஸ்டேக்ல அவங்க நொந்து நூலானது பத்தி எழுதினா எழுதிகிட்டே இருக்க்லாம் ஸ்பெல்லிங் மிஸ்டேக்கோட.

எனது பள்ளி ன்னு கட்டுரை எழுத சொன்னப்போ எனது பல்லின்னு நான் எழுதியதை பார்த்து என் விரலை பிடிச்சு சுவத்துல பர பரன்னு தேய்ச்சு பின்னயும் வெரி அடங்காம ஓ ன்னு தேம்மி தேம்பி அழுதாங்க. ஒரு சின்ன தப்புக்கு இப்டி ஃபீல் பண்றாங்களேன்னு நெனச்சுகிட்டேன். அதோட விட்டாங்களா என்னய பழி வாங்கவே அந்த கட்டுரைய் முழு ஆண்டுலயும் கேட்டு வச்சு, எனக்கு அவங்க அப்டி பழி வாங்குவாங்கன்னு தெரியும் அதனாலயே பிட் வச்சிருந்தேன். உலக இஸ்டரில 6ம் கிளாஸ் படிக்கும் போதே பிட் அடிச்ச மாணவன் ஐயாதான்.

பிட் வச்சிருந்தனே தவிர எப்டி வெளியே எடுத்தேன் எப்படி எழுதினேன் என்பதெல்லாம் ஒரு ஹிட்ச்காக் படம் மாதிரி இருக்கும். அபிஅப்பா த்ரில் எழுதியிருக்கார்ன்னு கோபி யாருக்காவது போன்ல சொல்ல அவங்க விழுந்து விழுந்து சிரிக்க வேண்டாம் சாமீ. ஆனா கடைசியா சொதப்பிடுச்சு. ராதா நான் பிட் அடிகிறத பார்த்துட்டான். அவனுக்கு பட படப்பு. பேந்த பேந்த முழிக்கிறான். அதை பாத்துட்டு டீச்சர் அவன் கிட்ட வந்து "ஏண்டா பிட்டா வச்சிருக்க"ன்னு அதட்ட அந்த நாதாரி அழுதுகிட்டே என்னய போட்டு குடுத்துட்டான்.

அவ்ளோவ்தான். அவங்களுக்கு பிரஷர் ஏறி சொர்னாக்கா மாதிரி பாஞ்சு வந்து "நானே பிட் பிடிக்கரதுல மன்னி, (அதாங்க மன்னனுக்கு எதிர் பதம்) என்கிட்டயேவா"ன்னு பிட்ட எடுத்து பாத்தா அது "எங்கள் பள்ளி"."ஏன்டா இதுதான் உனக்கு தெரியுமே"ன்னு அவங்க கேட்டப்ப "தெரியும் டீச்சர் ஸ்பெல்லிங் மிஸ்டேக் வரும்ன்னு பிட்ட பாத்து எழுதினேன்"ன்னு சொன்னப்ப தலைல அடிச்சு கிட்டாங்க.

7ம் வகுப்புக்கும் அவங்க தான் தமிழ் எடுத்தாங்க. முதல் நாள் கிளாஸ்க்கு வந்த உடனே பாடத்தை நடத்த ஆரம்பிக்கும் முன்ன சின்ன டிரெய்லர் போடுவது மாதிரி "ஆல மரம் எப்படி இருக்கும்?"ன்னு ஒரு கேள்விய போட்டாங்க. சரி இந்த வருஷமாவது அவங்க கிட்ட நல்ல பேர் எடுக்கலாம்ன்னு நான் டக்குன்னு எழுந்து "ஆலமரம் விசாலமா இருக்கும்"ன்னு சொன்னேன். நாதாரி கூட்டம் அத்தினியும் குபீர்ன்னு சிரிச்சுடுத்து. அவங்க பிரஷர் திரும்பவும் எகிறிடுச்சு. அப்ப தான் எனக்கு ஒரச்சிது அவங்க பேர் விசாலம். அவங்க குண்டா ஆலமரம் மாதிரி இருப்பாங்கலா அதான் எல்லாரும் சிரிச்சுட்டாங்க.அவங்களுக்கு அப்பதான் நான் அந்த கிளாஸ்ன்னு தெரிஞ்சுது. சர்ன்னு யு டர்ன் அடிச்சு ஹெட் மாஸ்டர் கிட்ட போயிட்டாங்க. எனக்கு இந்த கிளாஸ் வேண்டாம்ன்னு சொல்ல.

சாதாரணமா ஒரு கிளாஸ் பாஸ் பண்ணி வேற கிளாஸ் போகும் போது ஸ்டூடண்ட் தான் ஃபிரண்ஸை பிரிய மனசு இல்லாம எனக்கு இந்த கிளாஸ் வேண்டாம்ன்னு அழுவாங்க.ஆனா எனக்கு ப்யந்து கிட்டு இவங்க இப்டி பண்ணிட்டாங்க.

சமீபத்துல அவங்களை அவங்க மருமகள் கூட ஒரு ஹாஸ்பிட்டல்ல பார்த்தேன். 2 முறை ஹார்ட் அட்டாக் வந்திடுச்சாம். அவங்க மருமகள் கிட்ட என்னய அறிமுகப்படுத்தினாங்க. "எனக்கு முதல்ல பிரஷர் வர காரணமே இவன் தான். இவன் ஸ்பெல்லிங் மிஸ்டேக் தான். ஆக என் ஹார்ட் பிராப்ள்ம் ஸ்டார்ட் ஆனதுக்கு இவன் தான் காரணம்"ன்னு அறிமுகப்படுத்த அந்த மருமகள் என்னய பார்த்து"சந்தோஷம்"ன்னுது. என்னய சந்திச்சதுல சந்தோஷமா இல்ல அவங்களுக்கு அட்டாக் வர காரணமா இருந்ததுக்கு சந்தோஷமான்னு நான் ஆராய்ச்சி பண்னலை.

"ஏண்டா இப்பவும் ஸ்பெல்லிங் மிஸ்டேக் பண்றியா?"ன்னு கேட்டாங்க "இல்லை டீச்சர்" ன்னு சொன்னேன். "எப்படிடான்னு"ன்னு ஆச்சர்யமா கேட்டாங்க. "நான் இப்பொல்லாம் தமிழ் எழுத சந்தர்ப்பமே இல்லை
டீச்சர்"ன்னு சொன்னேன். நெஞ்சை பிடிச்சுகிட்டாங்க!!

39 comments:

  1. :))))

    கலக்கல் அபிஅப்பா.

    அப்புறம். அபிபாப்பாவுக்கு பொறந்த நாளாமே... வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  2. தங்கப் பாப்பாவுக்கு பர்துடே வாழ்த்துக்கள்!! :-D

    ReplyDelete
  3. \"எனக்கு முதல்ல பிரஷர் வர காரணமே இவன் தான். இவன் ஸ்பெல்லிங் மிஸ்டேக் தான். ஆக என் ஹார்ட் பிராப்ள்ம் ஸ்டார்ட் ஆனதுக்கு இவன் தான் காரணம்"\\

    பல பேருக்கு பிரஷரை ஏத்தி விட்டுட்டு தான் வந்திருக்கிங்க போல ;-)))

    ReplyDelete
  4. முதலில் பாப்பாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். அடுத்தது, நான் ஒரு முடிவு எடுத்திருக்கேங்க. எக்காரணத்தை முன்னிட்டும் அலுவலகத்திலிருக்கும் போது என்னதான் போரடிச்சாலும் உங்க பதிவையோ கண்மணியக்காவோட பதிவையோ(இன்னும் சில பெயர்கள் இந்த பட்டியலில் உண்டு) படிக்கறதில்லைன்றதுதான் அந்த முடிவு. பின்ன என்னாங்க? என் க்யூபிக்கலை தாண்டி போறவங்க எல்லாம் தனியா உட்கார்ந்து சிஸ்டத்தை பாத்து விழுந்து விழுந்து கண்ல தண்ணி வரா மாதிரி சிரிச்சிக்கிட்டிருக்கற என்னை பத்தி என்னனுன்ங்க நினைப்பாங்க? நீங்களே சொல்லுங்க. அதான் இந்த முடிவு.

    ReplyDelete
  5. அண்ணே,

    கலக்கல் .... எப்பிடிண்ணே இப்பிடியெல்லாம் ஃப்ளோ'வா எழுதுறீங்க..??

    நமக்கு சுட்டு போட்டாலும் வரமாட்டேன்கிது...

    அபி பாப்பா'வுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் :)

    ReplyDelete
  6. //
    லொடுக்கு said...
    :))))

    கலக்கல் அபிஅப்பா.

    அப்புறம். அபிபாப்பாவுக்கு பொறந்த நாளாமே... வாழ்த்துக்கள்!!! //

    வாங்க லொடுக்கு! வாழ்த்துக்கு நன்றி நன்றி!

    ReplyDelete
  7. //.:: மை ஃபிரண்ட் ::. said...
    தங்கப் பாப்பாவுக்கு பர்துடே வாழ்த்துக்கள்!! :-D //

    வாங்க வாங்க!! நன்றி!

    ReplyDelete
  8. //பல பேருக்கு பிரஷரை ஏத்தி விட்டுட்டு தான் வந்திருக்கிங்க போல ;-)))//

    கோபி தம்பி! லோ பிரஷர் இருந்தா கொஞ்சம் இங்க தள்ளிவிடுங்க:-))

    ReplyDelete
  9. //லக்ஷ்மி said...
    முதலில் பாப்பாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.//

    வாங்க சகோதரி வாழ்த்துக்கு நன்றி! எல்லாரும் சிரிச்சு சந்தோஷமா இருந்தா நம்க்கு சந்தோஷம் தான்:-))

    ReplyDelete
  10. இன்னைக்கு இங்கே கும்மி உண்டா? :-P

    ReplyDelete
  11. //அப்ப ஆரம்பிச்ச அடி அந்த ஸ்கூல்ல +2 வரை தொடர் கதையாவே ஆனதுதான் சோகம்.
    //

    என்ன ஒரு சீரியஸ் பதிவு!!!


    (நேத்து அடிக்க முடியாத கும்மியை சேர்த்து இங்கே அடிக்கிறேன்..) ;-)

    ReplyDelete
  12. அபி அபி அபி அபி....

    ReplyDelete
  13. அபி அபி அபி அபி....

    ReplyDelete
  14. அபி பாப்பா,

    இந்த அத்தை அனுப்பி வச்ச கிஃப்ட் எல்லாம் வந்து சேர்ந்துச்சா???

    ReplyDelete
  15. திருந்தாத ஜென்மங்கள என்ன சொல்ல ஏழரை....க.....வயசாச்சு..
    டீச்சருக்கு ரெண்டுதடவை அட்டாக் வரவழைச்சாச்சு எனக்கும் பி.பீ எகிறுது இந்த பதிவுலயும் நிறைய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் ய இருக்கு அண்ணே ஸ்பெல்லிங் மிஸ்டேக்

    ReplyDelete
  16. //.:: மை ஃபிரண்ட் ::. said...
    //அப்ப ஆரம்பிச்ச அடி அந்த ஸ்கூல்ல +2 வரை தொடர் கதையாவே ஆனதுதான் சோகம்.
    //

    என்ன ஒரு சீரியஸ் பதிவு!!!


    (நேத்து அடிக்க முடியாத கும்மியை சேர்த்து இங்கே அடிக்கிறேன்..) ;-) //

    வாங்க தங்கச்சி! தராளமா வெல்கம் டு கும்பி:-))

    ReplyDelete
  17. // கண்மணி said...
    திருந்தாத ஜென்மங்கள என்ன சொல்ல ஏழரை....க.....வயசாச்சு..
    டீச்சருக்கு ரெண்டுதடவை அட்டாக் வரவழைச்சாச்சு எனக்கும் பி.பீ எகிறுது இந்த பதிவுலயும் நிறைய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் ய இருக்கு அண்ணே ஸ்பெல்லிங் மிஸ்டேக் //

    வாங்க தங்கச்சி! இந்த திட்டுக்கெல்லாம் பயப்பட மாட்டான் இந்த அபிஅப்பா! இன்னும் கீதாம்மா,கொத்ஸ் இந்த பதிவ பாக்கலை. கீதாம்மா பதிவ படிக்க வரும்போதே பெரம்போடத்தான் வருவாங்க. அடி வாங்க ரெடியாயிட்டான் அபிஅப்பா:-))

    ReplyDelete
  18. ஆத்தாடி........

    ரொம்ப அப்பாவிதான் நீங்க....

    ReplyDelete
  19. கண்மணி அக்கா கலாய்த்து என்னை இங்கே அனுப்பி வைத்தார்கள்! இங்கு இலவசமாக அரட்டை அடிக்கலாமாமே!
    மக்கா ரெடியா?

    அன்புடன்...
    சரவணன்.

    ReplyDelete
  20. நான் பாப்பாவுக்கு காலைலயே வாழ்த்துச் சொல்லி அல்வாவும் வாங்கியாச்சு!

    ReplyDelete
  21. // மனதின் ஓசை said...
    ஆத்தாடி........

    ரொம்ப அப்பாவிதான் நீங்க.... //

    பின்ன இல்லீங்கலா:-))

    ReplyDelete
  22. அபிஅப்பா
    பாப்பாவைப்
    பதிவைப் படிக்க விட்டுடாதீங்க.
    கந்தர கோளம் ஆகிடும்.
    அபி பேபி.
    செல்லக் குட்டி.
    ஹாப்பி பர்த்டே.

    ReplyDelete
  23. Abi Papa thambi appa, thambiyum ippadi ungalai mathiri irunthutta enna seyarathu? Pavam, antha teacherunga :D

    ReplyDelete
  24. Abi papavukku Birthday Greetings solidunga.

    ReplyDelete
  25. he he he, ippo solla vaye illai enakku, athan summa pirambai madakki eduthuttu poka vendi irukku. vayithu erichaloda than. vere enna solrathu? :P

    ReplyDelete
  26. // உங்கள் நண்பன் said...
    கண்மணி அக்கா கலாய்த்து என்னை இங்கே அனுப்பி வைத்தார்கள்! இங்கு இலவசமாக அரட்டை அடிக்கலாமாமே!
    மக்கா ரெடியா?

    அன்புடன்...
    சரவணன்.
    //

    சரா கும்மிக்கு பர்மிஷன் தேவையே இல்லப்பா:-)

    வாழ்த்துக்கு நன்றி சரா

    ReplyDelete
  27. ஆமா உண்மையில் அவங்க என்ன பதில் எதிர்பார்த்தாங்களாம்...
    எங்க கிட்ட எல்லாம் கேட்டா பெரிசா இருக்கும்...விழுதெல்லாம் கீழ தொங்கும் அப்படித்தான் சொல்லுவோம்..
    தமிழ் தெரியாது மிஸ்டேக் வரும்ன்னு சொல்லிட்டு ...விசாலமா இருக்கும்ன்னு சொன்னீங்கன்னா அது இன்னோசண்டா சொன்னதுன்னு யார் நம்புவா...விசாலம்ன்ங்கற வார்த்தை என்ன அடிக்கடி உப யோகிக்கறதா என்ன?

    ReplyDelete
  28. :))

    நல்லா இருக்குதுங்க உங்க தமிழ்ப் பயணம்!


    பாவம் விசாலம் டீச்சர்!

    ReplyDelete
  29. //delphine said...
    ம்ம்ம்... அசத்திட்டீங்க///as usual//

    நன்றி டாக்டர்:-))

    ReplyDelete
  30. // வல்லிசிம்ஹன் said...
    அபிஅப்பா
    பாப்பாவைப்
    பதிவைப் படிக்க விட்டுடாதீங்க.
    கந்தர கோளம் ஆகிடும்.
    அபி பேபி.
    செல்லக் குட்டி.
    ஹாப்பி பர்த்டே. //

    வாங்க வல்லியம்மா! மிக்க சந்தோஷம். உங்க ஆசீர்வாதம் அவசியம் குழந்தைக்கு தேவை. மிக்க நன்றிம்மா:-)

    ReplyDelete
  31. //கீதா சாம்பசிவம் said...
    Abi Papa thambi appa, thambiyum ippadi ungalai mathiri irunthutta enna seyarathu? Pavam, antha teacherunga :D //

    வாங்க கீதம்மா! அந்த டீச்சர் பாவமேயில்லை. நான் தான் பாவம். என் விரல் தேஞ்சது பத்தி கவலையே இல்லியா உங்களுக்கு. சரிதான் போங்க:-))

    ReplyDelete
  32. :-)))

    லேட் தான் ஆனாலும் என் வாழ்த்துக்கள் பாப்பாவுக்கு...அபி நோய் நொடி இல்லாம, சந்தோஷமா இருக்கனும்...

    ReplyDelete
  33. "எனது பள்ளி ன்னு கட்டுரை எழுத சொன்னப்போ எனது பல்லின்னு நான் எழுதியதை பார்த்து என் விரலை பிடிச்சு சுவத்துல பர பரன்னு தேய்ச்சு பின்னயும் வெரி அடங்காம ஓ ன்னு தேம்மி தேம்பி அழுதாங்க. ஒரு சின்ன தப்புக்கு இப்டி ஃபீல் பண்றாங்களேன்னு நெனச்சுகிட்டேன்."

    நல்ல வேள! என் ஸ்டூடண்ட் யாரும் இவ்ளோ புத்திசாலி இல்ல! அபி பாப்பாக்கு ப்ர்த் டேவா அண்ணா? சொல்லவே இல்லயே! சரி.. டென்ஷன் ஆகாதீங்க! லேட்டா சொன்னாலும் லேட்டஸ்ட்டா சொல்வோமில்ல? பிறந்த நாள் வாழ்த்துக்கள் செல்லம்! ( ரொம்ப லேட்டாயிருந்தா அடுத்த வருஷத்துக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்களா வெச்சுக்கங்க அண்ணா!

    ReplyDelete
  34. //எனது பள்ளி ன்னு கட்டுரை எழுத சொன்னப்போ எனது பல்லின்னு நான் எழுதியதை பார்த்து என் விரலை பிடிச்சு சுவத்துல பர பரன்னு தேய்ச்சு பின்னயும் வெரி அடங்காம ஓ ன்னு தேம்மி தேம்பி அழுதாங்க//

    வெறி வந்ததுல தப்பேயில்லன்னு தோனுது :-)))

    ReplyDelete
  35. //கீதா சாம்பசிவம் said...
    Abi papavukku Birthday Greetings solidunga. //

    சொல்லிட்டேன் கீதாம்மா, மிக்க நன்றி!!

    ReplyDelete
  36. //கீதா சாம்பசிவம் said...
    he he he, ippo solla vaye illai enakku, athan summa pirambai madakki eduthuttu poka vendi irukku. vayithu erichaloda than. vere enna solrathu? :P //

    அப்பாடா பதிவு எழுதின நோக்கம் நிறைவேறிடுச்சு! திட்டு வாங்கியாச்சு:-))

    ReplyDelete
  37. யாரு பிரசர் ஏறி எப்படி போனா நமக்கு என்ன...இத படிச்ச உடனே நம்ம பிரசர் குறைஞ்சுது....:-)

    ReplyDelete
  38. //vayithu erichaloda than. vere enna solrathu?//

    தலைவி இப்படியே வயிறு எறிஞ்சுகிட்டே இருங்க...இன்னும் கொஞ்ச நாள் கழிச்சு நீங்க சமைச்சு சாப்பிட வேண்டியது இல்ல...அப்படியே சாப்பிட்டுக்கலாம் உள்ள போய் வெந்துக்கும் :-)

    ReplyDelete
  39. பதிவு எழுதுவதை நிறுத்திவிட்டீர்களா? :(

    ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))