பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

August 26, 2007

அமீரக பதிவர்களின் போலிகள் செய்யும் அட்டகாசங்கள்!!!

எப்போதும் போல சுறுசுறுப்பா சேட்டிகிட்டு இருந்தப்ப ஒரு நண்பர் கேட்டார் "அபிஅப்பா நம்ம குசும்பன் அய்யனார் பதிவை கலாய்ச்சு ஒரு பதிவு போட்டிருக்காராமே அந்த லிங் தாங்க"ன்னு. நான் தமிழ் மணத்துல போய் அலைய அலுப்பு பட்டுகிட்டு சேட்டுல பச்சை பல்பு எரிந்த குசும்பனிடம் போய் "தம்பி குசும்பா அய்யனார் எதிர்வினை பதிவின் லிங் தாய்யா"ன்னு கேட்டேன். அதுக்கு பதில் வந்துச்சு "அபிஅப்பா நான் குசும்பனின் போலி நீங்க குசும்பன் கிட்டயே கேளுங்க"ன்னு. பதறி போய் பார்த்தா ஒரிஜினல் குசும்பன் ஆஃப் லைன்ல!

சரின்னு குசும்பனுக்கு போன் பண்ணி "எங்கய்யா இருக்க"ன்னு கேட்டேன். அதுக்கு குசும்பன்" ஆபீஸ்க்கு போய்கிட்டு இருக்கேன்"ன்னு சொன்னார். நான் நம்பலை."ப்ரூப் பண்ணுய்யா"ன்னு சொன்னேன். சரின்னு கார்ல உளரிகிட்டு இருந்த சக்தி FM நாகப்பன் சிரிப்பதை சவுண்டா வச்சார். அடபாவமேன்னு நெனச்சுகிட்டு "யோவ் தெரியுமா சேதி உனக்கு போலி வந்தாச்சு'ன்னு சொன்னேன். அதுக்கு குசும்பன் "அடபோங்க அபிஅப்பா எனக்கு நேத்தே தம்பி போன் பண்ணி புலம்பினார் மீதி சோக கதையை அவர்கிட்ட கேளுங்க"ன்னு சொன்னார்.

தம்பிக்கு போன் பண்ணினேன். தம்பி போன்ல கதற ஆரம்பிச்சுட்டார். "அபிஅப்பா நேத்து சேட்டுல குசும்பன் இருந்தாரு, சரின்னு ஒரு விஷம் சேட்டிலே சொன்னேன், அதுக்கு அதயே கட் பேஸ்ட் பண்ணி எனக்கு குசும்பன் கிட்ட இருந்து பதில் வருது, சரி இன்னிக்கு குசும்பன் கிட்ட நாம தான் மாட்டிகிட்டோம்ன்னு திரும்ப சேட்டினேன் வேற விஷயத்தை, திரும்பவும் காபீ பேஸ்ட், அடடா கொடுமையேன்னு கடுப்பாகி போன் பண்ணினேன் ஆனா எடுக்கவே இல்லை, சரின்னு சேட்ல "யோவ் போனை எடுய்யா"ன்னு கத்தினேன். அதுக்கு பதில் வந்துச்சு"தம்பி நீ மொதல்ல போன பண்ணு நான் எடுக்கறேன்'ன்னு. நான் சொன்னேன் "யோவ் அதான் ரிங் போகுதே"ன்னு கத்தினேன். அதுக்கு "தம்பி அது என் பாஸ் குசும்பர் தி ஒரிஜினல், நான் அவரின் போலி"ன்னு பதில் வந்துச்சு. சரின்னு கிளிக் பண்ணி பார்த்தா அது போலி! நம்ம குசும்பன் ஐடி kusumbuonly@gmail.com இல்லியா ஆனா போலில ஒரு u விட்டு போச்சு"ன்னு தம்பிகிட்ட இருந்து புலம்பல்.

ஏற்கனவே அய்யனாருக்கு ஒரு போலி இருந்து சிரமம் தருது, அதோட இது வேறயான்னு நெனச்சுகிட்டு போலி குசும்பன் கிட்ட சேட்டினேன்.

நான்: போலி சார் போலி சார் ஏன் சார் இந்த கொல வெறி நீங்க சைவ போலியா அசைவ போலியா?

போலி குசும்பன்:அபிஅப்பா நீங்களாவது என்னய புரிஞ்சுகிட்டீங்களே, என் பாஸ் என்கிட்ட சேட்டவே மாட்டங்குறார் அபிஅப்பா, நான் சுத்த சைவம் அபிஅப்பா, தம்பி என்னய கெட்ட வார்த்தைல திட்டுறார் அபிஅப்பா

நான்: சரி போலி தம்பி, உன் வேலை தான் என்ன?

போலி: என் முதலாளி குசும்பருக்கு விசுவாசமா அழைக்காமலே ஓடி வந்து உதவும் அலாவுதீன் பூதம் நான், யாராவது என் பாஸ்க்கு பின்னூட்டம் போடலைன்னா நான் அங்க போய் மிரட்டி பின்னூட்டம் போட வைப்பேன்.

நான்: நல்ல கொள்கைதான் வேற எதுனா இருக்கா?

போலி: என் பாஸ் சேட்ட ஆள் இல்லாம மஸ்தடிச்சு மானிடரை வெறிக்க வெறிக்க பார்த்துகிட்டு இருக்கும் போது நான் போய் சேட்டுவேன் அவர்கிட்ட, அவர் என்னை திட்டுவது தான் அவருக்கு சந்தோஷம்ன்னா எனக்கு அது தான் மிக பெரிய சந்தோஷம்.

நான்: வேற எதுனா இருக்கா?

போலி: அய்யனார் எதுனா போஸ்ட் போட்டா நான் ஓடி போய் "பாஸ் பாஸ் ஓடியாங்க ஆணி பின்ன புடுங்கலாம் அய்யனாருக்கு எதிர் போஸ்ட் போடனும் வாங்கன்னு அறிவிப்பு கொடுப்பேன், அவரும் குதிச்சுகிட்டே ஓடி வந்து பதிவு போடுவார். அதுக்குள்ள நான் அவரின் நட்பு வட்டம் எல்லார்கிட்டயும் எங்க பாஸ் இன்னும் 1/2 மணியில் ஒரு சூப்பர் போஸ்ட் தயாராகுது கும்மிக்கு ரெடியாகுங்கன்னு அறிவிப்போம்.

நான்: நல்லாயிருக்கே, நீங்க எத்தன பேர் இதுபோல இருக்கீங்க?

போலி: இப்போதைக்கு நானும் அய்யனார் போலியும் தான், ஆனா கூடிய சீக்கிரம் உங்களுக்கு,அண்ணாச்சிக்கு, தம்பிக்கு அவ்வளவு ஏன் எங்க மகளிர் அணியை வச்சு ஜஸீலாவுக்கு எல்லாம் தயாராகுது.

நான்: அடபாவிகளா உங்க எதிர்கால திட்டம் தான் என்ன?

போலி குசும்பன்: குட் கொஸ்டின், வேற என்ன எங்க முதலாளி புகழ் பரப்பனும், அடுத்து போலியார் மாநாடு நடத்தனும் அதே சிவ்ஸ்டார் பவன்லயோ இல்லாட்டி போலிகிடேசன் பார்க்கிலயோ, ஆனா உங்கள மாதிரி பிரயோசனமா பேசாம எங்க முதலாளிகளை அடுத்தகட்டத்துக்கு கொண்டு போவது பத்தி முடிவெடுப்போம் இன்னும் பல திட்டங்கள் இருக்கு!

நான்: ங்கொய்யால நல்லா இருங்கடா!!

August 21, 2007

ஜெய் ஜெய் ஜெயந்தி!- இப்படிக்கு அபிஅப்பா!

நான் பிளாக் எழுத ஆசைப்பட்டு அவசர குடுக்கையா ஒரு பிளாக் கிரியேட் பண்ணி "வணக்கம் - அன்புடன் அபிஅப்பா"ன்னு ஒரு பதிவு போட்டுட்டு வந்துட்டேன். பின்ன அந்த பக்கமே எட்டி பார்க்கலை. வெறும் பின்னூட்டமே போட்டு தாக்கிகிட்டு இருந்தேன். திடீர்ன்னு ஒரு நாள் வந்து எட்டி பார்த்தா" என்ன அபிஅப்பா ஏதாவது எழுதியிருப்பீங்கன்னு வந்து எட்டி பார்த்தா வணக்கம் மட்டும் போட்டிருக்கீங்க! அபி செல்லம் அப்பாவை நாலு சாத்து சாத்துடா- இப்படிக்கு இம்சை அரசி"ன்னு ஒரு பின்னூட்டம் வந்திருந்தது. எனக்கு முதல் பின்னூட்டமே அது தான்.

அதுல ஆரம்பிச்ச அந்த பழக்கம் இன்று இம்சை அரசி என்கிற ஜெயந்தி என் உடன் பிறவா தங்கச்சியாகி இனி அடுத்த ஜென்மம் என்று ஒன்று இருந்தால் நாங்கள் இது போலவே அண்ணன் தங்கையாக இருக்க வேண்டும் என ஆண்டவனை வேண்டும் அளவு பாசமாகியாச்சு!

இன்று அவளுக்கு என் தங்கைக்கு பிறந்த நாள்! அவள் நீடூடி வாழ எல்லா வளமும் பெற்று வாழ்நாள் முழுவதும் சந்தோஷமாக வாழ ஆண்டவனை வேண்டுகிறேன்! நல்லா இருடா செல்லம்!!

August 16, 2007

ஒரு இனிப்பான செய்தி!

தமிழ்மண சொந்த பந்தங்களே! அபிஅப்பாவால் கொஞ்ச நாள் தமிழை அடுத்த கட்டத்துக்கு கொண்டு போக முடியாது.இதுவரை ஆணிகளையே கொடுத்து பழக்கப்பட்ட எங்க மொதலாளி, என் ஆணி பிடுங்கும் திறமையை மெச்சி இனி கடப்பாறை கழட்டுப்பான்னு சொல்லி விட்ட காரணத்தால் (யோவ் தமிழ்மணத்தை ஆபீஸ்ல ஆப்பு வச்சுட்டாங்கன்னு சுருக்கமா சொல்லுய்யா‍ ‍....)அதனால நான் பின்னூட்டம் போடலைன்னு எல்லாம் கோவிச்சுக்காம நான் திரும்ப வரும் வரை சந்தோஷமா இருங்கப்பா! நன்றி வணக்கம்!

August 14, 2007

பொன்ஸ் அவர்களுக்கு சில கேள்விகள்!!!

பாகச ஆண்டு விழா பத்தி எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும். எனக்கு அதிலே உடன்பாடு இல்லை. இன்னிக்கு காலைல பொன்ஸ்கிட்ட இருந்து ஒரு SMS வந்துச்சு பாகச ஆண்டு விழாவில கலந்துக்கனும்ன்னு. பின்ன போன் வேற வந்துச்சு. பொன்ஸ் அவர்களே நான் உங்களை கேட்பதெல்லாம் இது ஒன்னு தான். நான் எப்பவாவது தல பாலபாரதியை கலாய்ச்சதுண்டா. பதில் சொல்லுங்க!



தல தன்னோட நண்பர்கள் போன் நம்பரை தன் செல்பேசியில் பதிந்து அவர்கள் பெயரை பதியாமல் ஜெ.அன்பழகன் ச.ம.உ, இந்து ராம், கலாநிதி மாறன், வைகுண்டராஜன், ஆ.வி. பாலசுப்ரமணியன் இப்படியாக பதிந்து பின் லக்கி, வரவனை, அண்ணாச்சி கூட பேசிகிட்டு இருக்கும் போது போன் வந்தால் போனை அவர்களிடம் காட்டி இங்க பாருங்க இந்து ராம் கூப்பிடுறார் அவர் கூட ரோதனையா போச்சு கொஞ்சம் இருங்க வாரேன்ன்னு சொல்லி கொஞ்ச தூரம் போய் ங்கொய்யால எப்டிடா இருக்க, சூப்பர் சூப்பர் சூப்பர்ன்னு மொக்கை போட்டு விட்டு திரும்ப வந்து லக்கி அன் கோவிடம் " அவசரமா அஸ்சாம் பிரச்சனை பத்தி ஒரு கட்டுரை வேணுமாம்"ன்னு பீலா விடுவாரே எனக்கு அந்த உண்மை தெரிஞ்சும் பொன்ஸ் அவர்களே இது வரை எந்த பதிவிலாவது சொல்லி தலயை கலாய்ச்சி இருப்பேனா?



சமீபத்துல இராமேஸ்வரம் எக்ஸ்பிரசில் வித்தவுடில் போய் மாட்டிகிட்ட பிறகும் பேந்த பேந்த முழிக்காமல் பாமக வேலுவுக்கு மாமாமொவன்ன்னு சொல்லி தப்பிச்சு வந்தாரே இது பத்தி எங்கிட்டாவது ஒரு வார்த்தை சொல்லியிருப்பேனா பொன்ஸ்! அதுவுமில்லாம ஊர்ல போய் கொஞ்சம் கூட கூச்சப்படாம இன்ஃபோஸிஸ்ல இஞ்சினீயர்ன்னு பால்ய நண்பர்கள் கிட்ட விட்டாரே பீலா என் வாயில இருந்து ஒரு வார்த்தை வந்திருக்குமா இத பத்தி!



ஜெயா டிவில போய் தான் ஒரு அதிமுக ஆதரவாளன் இராமேஸ்வரத்துல மொட்ட செயலர் வட்ட செயலர் அப்படின்னு சொல்லி எங்களை குலை நடுங்க வச்ச சொற்பொழிவு ஆற்றி விட்டு திரும்பும் வழியில் லக்கியின் சூழ்ச்சியால் சந்தேக கேஸ்ல பிடிபட்டு கே.கே நகர் போலீஸ்ஸ்டேஷனில் வெப்பன் சப்ளை ஆளு போல பட்டாபட்டி அண்டிராயரோட ராத்திரி முழுக்க குத்த வச்சி இருந்தாரே நம்ம தல அதை நான் யாருக்காவது சொன்னதுண்டா பொன்ஸ்!



மாட்டி விட்ட அதே லக்கி மருநாள் காலைல கவுன்சிலரை கூட்டி போய் மீட்டு வந்தாரே, பின்ன ஏன் வேலைக்கு லேட்டுன்னு கேட்ட முதலாலிகிட்ட "ஒரு சின்ன பஞ்சாயத்து லக்கிய ஸ்டேஷன்ல இருந்து மீட்டு வர வேண்டியதா போச்சு"ன்னு கூலா சொன்னாரே எங்க தல நான் யாரிடம் இதுவரை சொல்லியிருப்பேன்! இல்லவே இல்லையே!



அவ்வளவு ஏன், பதிவர் பட்டறைல உங்க எலிகுட்டியை நீங்க ஆப்டிகல் எலிகுட்டின்னு பெருமையா சொல்ல அது தல காதுல 'ஆப்பு'டிகல்ன்னு காதுல விழ சரி நமக்கு ஆப்பு வைக்க புது மிஷின் போலன்னு நெனச்சுகிட்டு பையில தூக்கி போட்டுகிட்டு இப்ப நீங்க பதிவு போட்டு தேடும் போது உங்க கூடவே சேர்ந்து தேடுறார் பாருங்க நான் இதை கூட இது வ்ரை யார்கிட்டயாவது சொல்லி தல பேர நாற அடிச்சதில்லை!



விட்டா குசும்பன் பாகச உருப்பினர் அட்டை கேக்கும் போது தல ரத்த கையெழுத்து போடுவார்ன்னு தெரிஞ்சும் "டேய் தம்பி சரவணா சும்மா சரவணான்னு கொடுக்காத பாட்டன் முப்பாட்டன் ஊரு தெருவு எல்லாம் சார்த்து குடு'"ன்னு நான் சொல்லி குடுத்ததா சொல்லுவீங்க போல இருக்கே! இதல்லாம் நல்லாயில்ல!



நான் இப்பவும் சொல்லிக்கிறேன் எனக்கு தனி மனித தாக்குதலில் உடன்பாடு இல்லை! அதனால பொன்ஸ் நான் தலயை கலாய்க்க மாட்டேன் என்பதை திட்டசதுரமாக சொல்லிக்கிறேன்!

பக்தி FM ல் பாம்பப்பனின் அட்டகாசங்கள்!

அமீரக தமிழர்களை தவிர மற்ற உலக தமிழர்களுக்கு இந்த வாய்ப்பு கிட்ட வழியில்லை. லோ பிரஷர் உள்ளவங்க நலனுக்காகவே நடத்தப்படும் FM இது இங்கே. சர்ர்ர்ர்ன்னு பிரஷர் எகிறும். நான் காலை 6.20 முதல் 7.00 மணி வரை மட்டுமே கேட்பேன். வாங்க நிகழ்ச்சிக்கு போகலாம்.

பாம்பப்பன்: காலையில் சாலையில் செல்லும் நீங்கள் அதை சோலையாக மாற்றி மாலையாக ஆக்கி மாலையில் வீடு திரும்ப(அடங்கொய்யால இதுக்கு தல கவிதையே பெட்டர்) வாழ்த்தும் பாம்பப்பன் ஹஹ் ஹஹ் ஹா (நடுவில என்ன சிரிப்பு) இன்னைக்கு SMS கேள்வி சமீபத்தில் சூப்பர் ஸ்டார் நடிச்சு வெளி வந்த பிரம்மாண்ட படத்தின் பெயர் என்ன? ஹஹ் ஹஹ் ஹா இப்ப லைன்ல இருக்கும் ரசிகர் கிட்ட பேசுவோமா?

ஹலோ பக்தி FM ல இருந்து பாம்பப்பன் நீங்க யாரு?

வணக்கம் பாம்பப்பன் சார் நான் தோப்புதுறை ஜமால் பேசறேன்

வாங்க தோப்புதுறை ஜமால் நீங்க காலையில் சாலையில் போகும் போது சோலை........... ஹஹ் ஹஹ் ஹா என்ன சொல்ல வர்ர்றீங்க

பாம்பப்பன் சார் நல்ல அறிவுபூர்வமான கேள்வி ஆனா ஒரு சின்ன குளூ குடுத்தீங்கன்னா நல்ல இருக்கும்

வாழ்த்துக்கு நன்றி, இப்படி அறிவு பூர்வமா கேட்டு தமிழர்களின் அறிவை வளர்ப்பதே நாம் பக்தி FM மின் கடமை, நீங்க கேட்டதுக்காக ஒரு சின்ன க்ளூ அந்த படத்தின் முதல் எழுத்து சி சரி நேயர்களே இது வரை 15 பேர் சரியான விடை அனுப்பி இருக்காங்க வாங்க பாட்டுக்கு போகலாம்

பாட்டு !@#$%^^&*()_++_)(*&^%$#@!

பாம்பப்பன்: என்ன நேயர்களே பாட்ட நல்லா இருந்துச்சுல்ல இப்ப அடுத்த நேயர் லைன்ல இருக்கார் ஹஹ் ஹஹ் ஹஹ் ஹா

ஹலோ பக்தி FM ல இருந்து பாம்பப்பன் நீங்க யாரு?

வாணக்கம் பாம்பப்பன் சார் நானு ஜேபலலில இருந்து கோபி

ஹஹ் ஹஹ் ஹா வாங்க கோபி என்ன பதில் தெரிஞ்சுதா? சாலையில் போகும் நீங்க சோலை காலை மாலை (கன்றாவி தலை எழுத்து)

சார் இன்னுமொறு சின்ன குளூ தாங்க சார்

சரி கோபி படம் 3 எழுத்து அதில கடைசி எழுத்து ஜி சர் நேயர்களே இப்ப செய்தி நேரம்

பக்தி FM செய்திகள் வாசிப்பது பாம்பப்பன், பாமக தலை வர் டாக்டர் ராமதாஸ் முதல்வர் கருணாநிதியை கம்மனாட்டி என்று திட்டினார் ஆனாலும் தொடர்ந்து ஆட்சிக்கு ஆதரவு தெரிவிப்பேன் என கூறினார். வடக்கு வல்வெட்டிதுறையில் கந்த சாமி ராசப்பன் மகிந்த ரசபக்சே அரசால் கொல்லப்பட்டார். சானியா 1 இடம் முன்னேறினார்.!@#$%^&*()_++_)(*&^%$#@

இத்துடன் செய்திகள் முடிவடைந்தது...ஹஹ் ஹஹ் ஹஹ்ஹா( நீ செய்தி வாசிச்ச லெட்சனத்துக்கு சிரிப்பா)

அடுத்த நேயர் யாருன்னு பார்ப்போமா ஹல்லோ பக்தி FM ல இருந்து பாம்பப்பன் நீங்க யாரு

வணக்கம் பாம்பப்பன் சார் நானு முத்துபேட்டை தாஜுதீன் பேசறேன் SMS கேள்விக்கு இன்னும் ஒரு குளூ தர முடியுமா

கண்டிப்பா தரேன் எப்படியாவது அமீரக தமிழர்களிடம் அறிவை வளர்ப்பதே பக்தி FM மின் முதல் நோக்கம் என்பது உலகம் அறிந்த ஒரு விஷயம். ஹஹ்ஹஹ் ஹா நடு எழுத்து "வா" இப்ப அடுத்த பாட்டுக்கு போவோமா

***********************************************************************************************
போதும் நான் காலையில் அனுபவிக்கும் சந்தோஷத்தை தமிழ்மணமும் அனுபவிக்கட்டும் என்ற நல்ல எண்ணத்தில் எழுத பட்டதே இந்த பதிவு, பாதிக்க பட்டவங்க யாராவது இருந்தா வந்து என் கண்ணை தொடச்சிட்டு போங்கப்பா. இதன் தாக்கம் ஆபீஸ் ல 2 மணி நேரம் நீடிக்குது தினமும். பின்ன என்னாத்துக்கு கேக்குற ஆஃப் பண்ண வேண்டியது தானேன்னு கேட்பவர்களுக்கு பதில் சொல்ல மாட்டேன்!

August 12, 2007

துபாயில் 1 மணி நேரம் டைம் பாஸுக்கு 2 திர்காம்!!!

நேத்து இங்கே வார ஆரம்பமாச்சா, அதனால கொஞ்சம் ஆணி ஆதிகமா இருந்துச்சு. எல்லாத்தையும் பிடுங்கிட்டு வீட்டுக்கு போனா செம போர். எவனாவது மாட்டினா தேவலை நாம கொஞ்சம் ஃபிரஷ் ஆகிக்கலாம்ன்னு நெனச்சா ஒருத்தனும் மாட்டலை. போன்ல யார் கிட்டயாவது மொக்கை போடலாம்ன்னு பார்த்தா 0 ஃபில்ஸ் தான் இருந்துச்சு.பின்ன ஏதாவது படம் பார்க்கலாமேன்னு உக்காந்தா நம்ம விஜய் படம் ஒன்னு மாட்டுச்சு. பார்த்து கிட்டு இருந்தேன். அதில விஜய் பைக் வேணும்ன்னு நெனைச்சா மேலேயிருந்து பைக் சாவி விழுது. தொப்பி வேணும்ன்னு நெனைச்சா தொப்பி கிடைக்குது. சரி நாமலும் அதுபோல செய்வோமேன்னு "ஆண்டவா நம்ம மொபைல்ல ஒரு 25 திர்காம் தட்டி விடுப்பா"ன்னு ஒரு அப்ளிகேஷன் போட்டேன். என்ன ஆச்சர்யம் டொய்ங்ன்னு ஒரு 25 திர்காம் வந்து விழுந்துச்சு. thanka aandava ன்னு ஒரு SMS அந்த நம்பருக்கு தட்டி விட்டுட்டு சரி மொக்கை போட சரியான ஆளை தேடினேன்.



என்னடா அபிஅப்பா வினையூக்கி மாதிரி அமானுஷ்யமா எழுதறார்ன்னு நெனைக்காதீங்க விஷயம் இது தான். இங்க ஒரு மெபைல்ல இருந்து வேற மொபைல்க்கு பைசா டிராண்ஸ்பர் பண்ணலாமா அப்படி ஒரு அப்பாவி இன்னொறு அப்பாவிக்கு டிராண்ஸ்பர் பண்ணும் போது ஒரு நம்பரை தப்பா அடிச்சு அது எனக்கு வந்துடுச்சு!

கொஞ்ச நேரத்துல ஒரு போன் அதே நம்பர்ல இருந்து!

ஹாலோ யூ தமில் யூ தமில்

நான் தமில் இல்ல நான் பேசுவது தான் தமில்

சார் என் பேரு பளனிச்சாமி உங்க போன்க்கு 25 திர்காம் அனுப்பினேன் வந்துச்சா

வந்துச்சுங்க ரொம்ம புண்ணியமா போகும் உங்களுக்கு!

அய்யோ அது உங்களுக்கு அனுப்பலை சார் என் தம்பி ஊர்ல இருந்து வந்திருக்கான் அவனுக்கு அனுப்பினேன் ஒரு நம்பர் தப்பா போச்சு அதான் உங்களுக்கு வந்துடுச்சு அதை எனக்கே திருப்பி அனுப்பிடுங்க சார்

எனக்கு அனுப்ப தெரியாதுங்களே நான் ஒரு படிக்காத லேபர்ங்க

அப்புடியா நான் சொல்ற மாதிரி செய்யி!

(சார் போய் ஒருமைக்கு வந்தாச்சு)

சரி சார் எப்படின்னு சொல்லுங்க - இது நான்

முதல்ல ஆஷ் கீய அழுத்து!

எனக்கு அது எங்க இருக்குன்னு தெரியாது சார்

கூட்டல் குறி மாதிரி இருக்கும் அதை அமுக்கு

எனக்கு கணக்கு வராது சார் அதனால கூட்டல் குறி எதுன்னு தெரியாது

கூட்டல் குறி தெரியாதா முண்டம் நாலாம்பு பெயிலான எனக்கே தெரியுது நீ என்ன படிச்சிருக்க

உங்கள விட அதிகமா படிச்சு இருக்கன் சார்

அப்புடி என்ன படிப்பு

2ம்ம்பு பாஸ் சார் பாஸு பெருசா பெயிலு பெருசா

டேய் டேய் டேய் கவுண்டமணி செந்தில் வெளையாட்டு வேணாம் மரியாதையா அனுப்பு

போங்க சார் இப்புடி சொன்னா அனுப்ப மாட்டேன்!

சரி சரி தற்குறி தற்குறி கீழ இருக்க கடேசி பட்டன அமுக்கு!

ஏன் சார் கோவபடிறீங்க மூலமா?

வந்துடும் போல இருக்கு சீக்கிரம் அமுக்குடா கடேசி பட்டன

சார் உங்க குரலுக்கு பாடுனா நல்லா இருக்கும் சார் ஒரு பாட்டு பாடுங்க

டேய்ய்ய்ய் நல்லா வருது வாயில, நீ எங்கிட்டு இருக்க சொல்லு கிட்டத்துல இருந்தா நானே வந்து காச மாத்திகிறன்

நீங்க எங்க இருக்கீங்க அத மொதல்ல சொல்லுங்க சார்

நான் அல்கூஸ் கிராண்ட் மால் கிட்ட இருக்கேன்

(அட நம்ம இடத்துக்கு பக்கத்துல தான்)

சார் நான் புஜைராவில இருக்கேன் வந்து வாங்கிகுங்க

அடங்கொய்யால அதுக்கே 200 திர்காம் ஆவுமே, டேய் எப்படியாவது அனுப்புடா அய்யோ இவன் கிட்ட மாட்டிகிட்டனே

நீங்க ஒரு பாட்டு பாடுங்க யார்கிட்டயாவது கேட்டு அனுப்பறேன்

டேய்ய்ய் சரி என்ன பாட்டு சொல்லு சொல்லி தொலை பின்னயும் அனுப்பல.....

பல்லேலக்கா பாடுங்க சார்...

பல்லேலக்கா பல்லேலக்கா பல்லேலக்கா....டேய் இதுக்கு மேல தெரியலடா

சரி அப்ப வேற பாட்டு பாடுங்க சார்

;
;
;
;
இப்படியா 1 மணி நேரம் போச்சு அவனுக்கு இதுக்கே 8 திர்காம் ஆகியிருக்கும். அதுக்கு பின்ன பாவம்ன்னு 35 திர்காம் இன்னிக்கு காலைல அனுப்பி வச்சேன் 1 மணி நேரம் டைம் பாசுக்கு 2 திர்காம்

August 8, 2007

நாங்களும் போட்டா போட்டி போடுவோம்ல!!!

போட்டின்னு வந்துட்டா குதிச்சுடுவோம்ல! நம்ம அபிபாப்பா வராத போன்கால் ல அட்டெண்ட் பண்றாங்க. அப்ப வயசு 2 1/2. மாமியா(ர் வீட்டு) கேமரா




இதுவும் அப்பதான் எடுத்தது, வீட்டில் எடுக்கப்பட்டது. பேக் ரவுண்ட் ஒரு வீணா போன சாய்ம் வெளுத்த பெட்ஷீட்! என்னவோ சிந்தனைல இருக்காங்க!



லெட்டர் படிக்கிறாங்க! என் செல் போன் நோக்கியா 6230 ல எடுத்தேன்!

இதுல 2 வது போட்டோவும் 3 வது போட்டோவும் போட்டிக்கு!

August 7, 2007

மயிலாடுதுறை!!!


மயிலாடுதுறைகாரங்க தாம்ப்பா "கைபுள்ள" நம்ம அரசாங்கத்துக்கு. எவ்வளவு அடிச்சாலும் தாங்குவானுங்க ரொம்ப நல்லவங்கப்பா ன்னு சமயம் கிடைக்கும் போதெல்ல்லாம் கும்மி எடுக்கும்.
.
தஞ்சை மாவட்டத்தை இரண்டாக பிரிக்கும் போது கீழதஞ்சை மாவட்டத்துக்கு மைய பகுதியே மயிலாடுதுறை தான். ஆனால் நாகை தலைநகராக்கப் பட்டது. அப்பவும் பேசாம வாயை மூடிகிட்டு இருந்தோம். பின்ன நாகை மாவட்டத்தை இரண்டாக பிரித்த போது அப்பவும் மயிலாடுதுறை புறக்கனிக்கப்பட்டு நாகைக்கு மிக அருகே இருக்கும் திருவாரூர் தலைநகராகியது. மாயவரத்துகாரன் எல்லாம் போண்டா சாப்பிட்டு கொண்டு இருந்தோம்.
.
அதெல்லாம் போகட்டும்ன்னு பார்த்தா இப்போ தொகுதி சீரமைப்புன்னு சொல்லிகிட்டு மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி என்பதே வேண்டாம் சிதம்பரம்(தனி) தொகுதியோட போய் ஒட்டிக்கோன்னு சொல்லிட்டாங்க. புவனகிரி, சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், சீர்காழி, மயிலாடுதுறை,பூம்புகார் இதல்லாம் சேர்ந்து சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியாம். என்ன கொடுமை ஆண்டவா. கொள்ளிடம் ஆத்துக்கு அடுத்து உள்ள சிதம்பரம்,காட்டுமன்னார்கோவில், புவனகிரி இங்கே எல்லாம் தஞ்சை பேச்சு வழக்கு கூட இல்லை. அது வேற ஸ்டைல்.
.
என்ன காரணத்துக்கு பிரிச்சாங்க என்பது விஷயமில்லை. ஆனா இனி பாராளுமன்றத்தில் "மயிலாடுதுறை" மயிலாடுதுறை" என்ற வார்த்தை ஒலிக்காது என்பதே என் வருத்தம். நிச்சயமாக என் மண்ணின் மைந்தர்களுக்கும் இந்த வருத்தம் இருக்கும் என்பது நிச்சயம். இதில் கட்சி வேறுபாடு இல்லாமல் வருத்தம் இருக்கும். என் வருத்தத்தை இங்கே பதிவு செய்து விட்டேன்.
.
அடுத்த ஆப்பு ரெடி பண்ணுங்கப்பா! நாங்க ரெடி வாங்கிக்க! 1 செட் போண்டா வித் கெட்டி சட்னி பார்சேல்ல்ல்ல்ல்....

August 6, 2007

சினிமாவுக்கு போவோமா?

எங்க குடும்பம் ரொம்ப பெரிய குடும்பம். ஏகப்பட்ட பெரியம்மாக்கள், சித்திகள் எல்லாருக்கும் வச வசன்னு பசங்க அந்தந்த ஏஜ் குரூப்பிலே செட்டு செட்டா திரிவோம். இதிலே சினிமா பார்க்க போவது இருக்கே ஒரு திருவிழாவுக்கு போவது போலத்தான்.

அதிலே ஒரு பெரியம்மா அவங்க தான் சினிமாவுக்கு சென்சார் ஆபீஸர். அவங்க எந்த படம் வந்தாலும் முதல் காட்சியே பார்த்திடுவாங்க. பின்ன அந்த படம் குடும்பத்தோட பார்க்கலாமா இல்லியான்னு முடிவு பண்ணிட்டு எல்லா மருமகளையும் (அதாங்க எங்க் அம்மா/சித்திகள்) அழைச்சுட்டு போக ஒரு ஞாயிற்று கிழமையை தேர்ந்து எடுத்து அதுக்கு 3 நாள் முன்னமே மெதுவா சாயந்திரம் 4.30க்கு எங்க வீட்டுக்கு வருவாங்க. அவங்களை பாத்தாலே எங்களுக்கு குஷி தான்.

வந்து மெதுவா அம்மாகிட்ட பார்த்து வந்த படத்தை சிலாகிச்சு பேசி அம்மாவுக்கு ஆசை காட்டி பின்ன "ஹூம் உன்னய அழச்சிட்டு போலாம்ன்னு பார்த்தா உன் வூட்டுகாரு கிட்ட கேக்கனும்ன்னு சொல்லுவ"ன்னு மெதுவா பிட்ட போடுவாங்க. அதுக்குள்ள நான், தம்பி, அக்கால்லாம் அம்மாவை சொறிய ஆரம்பிச்சுடுவோம். அப்ப அப்பா ஆபீஸ்ல இருந்து உள்ள வருவாங்க. உடனே பெரியம்மா "வாங்க தம்பி என்ன தலை வலி மாதிரி தெரியுதே கொஞ்சம் இருங்க காபி போட்டு தாரேன்"ன்னு அப்பாவை கூலாக்கி பர்மிஷனும் வாங்கிடுவாங்க.

பிறகு என்ன நான் வாரு வச்ச டிராயர் கீழே விழாதுன்ற நம்பிக்கைல சர்ருன்னு பி.டி உஷா ரேஞ்சுல ஓடி மீதி அத்தனை பெரியம்மா, சித்தி வீட்டுல எல்லாம் தகவல் சொல்லிட்டு அன்னிக்கு ராத்திரியே எங்க வீட்டு வாசப்படில போர்டு மீட்டிங்ல என்ன தீர்மானம் நிறைவேற போவுதுங்ற் ஆவல்ல மாங்கு மாங்குன்னு அசோகர் மரம் நட்ட பாடத்தையே 108 தடவை சத்தம் போட்டு படிப்பேன். சின்ன அக்கா ஓவர் ஆக்டிங்க நடந்து நடந்தெல்லாம் படிக்கும். அப்படி படிக்கலைன்னா சினிமாவுக்கு கிடையாதுன்னு மிரட்டல் வேற அம்மா கிட்ட இருந்து வரும்.

ராத்திரி 8.00 மணிக்கெல்லாம் எங்க வீட்டு முற்றத்துல இல்லாட்டா வீட்டு வாசல் படியுலேயே எல்லா சித்தியும், பெரியம்மாக்களும் ஆஜர் ஆகிடுவாங்க. அந்த மூத்த பெரியம்மா தான் தலைமை. யார் யார் முறுக்கு சுட்டு எடுத்துக்கனும் இல்லையா பரவாயில்ல கூழ்வடகமாவது சுட்டு எடூத்துக்கனும், யார் தண்ணி கூஜாவுக்கு பொருப்பு எல்லம் முடிவு செய்யப்படும். எடுத்த உடனே அம்மா "நான் தண்ணி கூஜா தூக்க மாட்டேன் எனக்கு வெக்கமாயிருக்கு"ன்னு ஆரம்பிச்சுடுவாங்க. அதுக்கும் பெரியம்மா சளைக்க மாட்டாங்க. "அதுக்கு சின்ன மாமியை கூபிட்டுப்போம்"ன்னு ஐடியா திலகமா ஆயிடுவாங்க. பின்ன வயசுக்கு வந்த அக்கா எல்லாம் எந்த வீட்டிலே விடனும் அவங்க பாதுகாப்பு படையா எந்த மாமியை போடனும் எல்லாம் முடிவு செய்யப்படும். ஆம்பிளை துணை எந்த சித்தப்பா சினிமாவுக்கு ன்னு முடிவு பண்ணி அந்த சித்தப்பாவுக்கு தகவல் தரப்படும்.அதுக்கு பின்ன திரும்பவும் அந்த பெரியம்மா அந்த படத்தின் கதையை அழகா சொல்லி அத்தனை தாய்குலத்தையும் அழவச்சி மீட்டிங் முடிப்பாங்க.

அடுத்த 2 நாள் நாங்க வீட்டை எல்லாம் சுத்தமாக்கி அம்மாவுக்கு பதில் அக்கா முற்றம் கழுவி, நான் அலக்கு குச்சியால சாக்கடை குத்தி ஒரே ரகளையா இருக்கும். அம்மா அதுக்குள்ள முறுக்கு சுத்தி பிரிட்டானியா டின்ல போட்டு எங்களுக்கு எட்டாத தூரத்துல வச்சிடுவாங்க.

சனி இரவு தூக்கமே வராது. எப்படியோ தூங்கி காலை எழுந்தது முதலே பரபரப்பா ஆகிடுவோம். செக்யூரிட்டி சித்தப்பாவை கூட்டி வருவது முதல் கூஜா பாட்டியை தாஜா பண்ணுவது வரை ஜரூரா நடக்கும்.

மாலை 4.00க்கு எல்லாம் எங்க வீட்டுல கூடிடுவாங்க. அதுல நீ எந்த கலர் புடவை நான் எந்த கலர் புடவை எல்லாம் முதல் நாள் முடிவுசெஞ்ச மாதிரி வந்து பார்த்தா ஏதாவது ஒரு சித்திக்கு புடவை சுமாரா இருக்கும்.அவங்க எல்லார் கிட்டயும் அவசரமா டாய்லெட் போகனும்ன்னு வீட்டுக்கு ஓடுவாங்க. திரும்பும் போது வேற பளிச் புடவைல வருவாங்க. "இவ இதுக்கு தாண்டி போயிருக்கா"ன்னு கோரஸா திட்டு விழும். அது வரை சும்மா இருக்கும் அம்மா எல்லாரையும் ஒரு நோட்டம் விட்டுட்டு உள்ளே போய் பன் கொண்டையோட வெளியே வந்து ஒட்டு மொத்த வயிதெரிச்சலையும் கொட்டிப்பாங்க.(முன்னமே சொல்லியிருந்தா நானும் போடிருப்பன்ல) பின்ன அதே சித்தி டாய்லெட் போக பர்மிஷன் கேட்டு திட்டு வாங்கிகிட்டு கிளம்புவோம். வயசுக்கு வந்த அக்கா எல்லாம் காலைலயே ஒருவீட்டுல கூடிடுவாங்க. ஒரே கும்மியும் கூட்டாஞ்சோறுமா அந்த வீடு கலகலன்னு இருக்கும். ரெண்டு மூணு பாட்டிங்க செக்யூரிட்டி அந்த வீட்டுக்கு.

பசங்கலா ஒருத்தர் கைய ஒருத்தர் பிடச்சுகனும், வெளிய வந்தா ஒரு தடவை போயிட்டு வந்துடுங்க அது இதுன்னு பெரியம்மா பதிவர் பட்டறை பாலா மாதிரி பீலா வுட்டுகிட்டு இருப்பாங்க!

கிளம்பி தியேட்டர் போகும் வரை எங்களை நடத்தி கூட்டிகிட்டு போனவங்க தியேட்டர் வாசல்ல பொதுகுழுவில முடிவு பண்ணிய மாதிரி டக் டக்ன்னு ஆளுக்கு ஒரு 4,5 வயசு பசங்களை தூக்கிப்பாங்க. அதுல என் வயசு பசங்க எல்லாம் அப்பு மாதிரி நடக்கனும். வேற என்ன டிக்கெட் வாங்காம இருக்கும் கயமைதான்.

இப்படியா உள்ள வந்து உட்காந்தா பியர்லெஸ்ஸின் மூத்திர நாத்தம் ஒரு பொருட்டாவே இருக்காது. டிக்கெட் கிடைச்சதே தள்ளுபடி புடவை வாங்கின சந்தோஷத்துல இருப்பாங்க எல்லாரும். நான் மட்டும் கரெக்டா முறுக்கு கூடை வச்சிருக்கும் சித்தி பக்கத்து உக்காந்துப்பேன். படம் ஓடும் போது மொத்தம் 2 தடவை முறுக்கு சப்ளை நடக்கும். ஆனா சித்தியை நைஸ் பண்னி நான் மட்டும் படம் முழுக்க தின்பேன். சத்தம் வராம இருக்க சப்பியே திங்க்கும் கொடுமை ரொம்ம கொடுமை. தியேட்டரே சிரிக்கும் போதோ சண்டை காட்சியின் போதோ நறுக் ன்னு நொருக்கனும்.

திரும்பி வரும் போது ஒத்தை மாட்டு வண்டி பேரம் பேசி வருவோம். அதன் பின் 1 மாசத்துக்கு அந்த நெனைப்பாவே இருக்கும்.

ஆனா இப்ப இந்த காலத்து பசங்க கிட்ட மிஸ்ஸிங். தியேட்டர் போகலாமான்னு அபிபாப்பாகிட்டே கேட்டா " I hate theater, very borepaa sweting, rush oh no...our sofa is the best to watch a film" ன்னு சொல்லிட்டு போகுது. அதே போல நாமும் மாறியாச்சு. அந்த பெரியம்மா அண்ணன் வேலை பார்க்கும் எல்லா நாட்டுக்கும் சுத்திகிட்டு இருக்காங்க, சினிமா போறீங்கலான்னா மையமா சிரிக்கிறாங்க. அது போல நானும் 3 மணி நேரம் உக்கார முடியலை.

சிவாஜி ரிலீஸ் அப்போ முதல் நாள் எல்லா பிரண்ட்ஸ்ம் போன் போட்டு போட்டு உடனே தியேட்டர்க்கு வா வா முதல் நாள் பார்க்கலைன்னா சரித்திரத்துல உன் பேர் வராதுன்னு கூப்பிட மொட்டை பாஸ் பகுதி முதல்ல பார்த்தேன், பின்ன அடுத்த ஷோவிலே பல்லேலக்கா பகுதி பார்த்தேன், அதுக்கு அடுத்த ஷோவிலே சாலமன் பாப்பையா வரும் பகுதி பார்த்தேன் இப்படியாக முதல் நாளில் 4 தடவை பார்த்தேன். வீட்டுக்கு வந்ததும் தங்கமணி படம் எப்படி இருந்துச்சுன்னு கேட்டப்ப "எடிட்டிங் சரியில்ல"ன்னு சொன்னேன்!