அப்படித்தான் நான் அன்றைக்கும் தூங்கி கொண்டிருந்த போது அருமையான என் அம்மாவின் ஸ்பரிசம் உணர்ந்தேன். எனக்கு நினைவு தெரிஞ்சு இப்படி ஒரு வாய்ப்பு எனக்கு கிடைத்தது இல்லை. என் நெற்றி முடியை ஒதுக்கி தள்ளிவிட்டு சொன்னாங்க,
"தம்பி! எழுந்திருடா, இந்தா காப்பி குடி கொஞ்சம் தெம்பா இருக்கும்"
எனக்கு ஆச்சர்யம் தாங்க முடியவில்லை. அம்மாவை பார்த்தேன்.
"என்ன ரேஷன் போகனுமா, போயிட்டு வந்துட்டா எனக்கு குடுத்த "தண்ட சோறு" பட்டத்தை திரும்பி வாங்கிடவா போறீங்க, என்னால முடியாது"
"என்னடா வெடுக்கு வெடுக்குன்னு பேசற, இந்தா முதல்ல இந்த காப்பி குடி நாம வெளியே போகனும். கொஞ்ச நேரத்திலே அப்பாவும் வந்திடுவாங்க"
என்னது அப்பாவா, தன் பொண்ணுங்க கல்யாணத்துக்கே ஒரே ஒரு நாள் தான் லீவ் எடுத்தாங்க. சின்சியர் சிகாமணியாச்சே, என்ன விஷயம் ஆபீஸ்ல இருந்து லீவ் போட்டுட்டு அப்படி என்ன அவசரமா எந்த ஊருக்கு போகனும். நான் தானே வீட்டிலே ஷெரீஃப் வேலை பார்க்கிறேன். எந்த எழவானாலும் நான் மட்டுமே தானே வீட்டின் சார்பாக கலந்துக்கறேன்.
அதுக்குள்ள அப்பா வந்து "தம்பிக்கு விஷயம் தெரியுமா"ன்னு அம்மாவை பார்த்து கேட்க அதுக்கு அம்மா என்னை பார்த்து "தம்பி, கிளம்புடா வைரத்து வீட்டுக்கு போகனும்"ன்னு சொன்னாங்க.
எனக்கு கொஞ்சம் ஷாக், ஆறு மாசம் முன்ன வைரத்தின் அப்பா செத்து போயிட்டாங்க. அப்பவும் இப்படித்தான் நடந்தது. அப்பத்தில இருந்தே அவங்க அம்மாவுக்கும் உடம்பு சரியில்ல. ஆகா ஆண்டவா வைரத்துக்கு மாத்திரம் என்ன சோதனை மேல் சோதனை!
"இரும்மா நான் கிளம்பிடுறேன். நீங்க முன்னால போங்க பஸ்ஸிலே, நான் சைக்கிள்ல வந்திடுறறேன். கார்த்திக்கு சொல்லியாச்சா, ஆமா உங்களுக்கு யார் சேதி சொன்னது?''
"இல்லடா தம்பி, வா அப்பா,கூடவே நாமளும் போயிடலாம், கார்த்தி, சங்கர், ஆனந்து எல்லாம் போயாச்சு அங்க, அவங்க வந்த போது நீ தூங்கிகிட்டு இருந்தியா நான் தான் எழுப்ப வேண்டாம்ன்னு அனுப்பிட்டேன் அவங்களை"
"நல்லா ஆளும்மா நீ, எதுக்கு எழுப்பனுமோ அதுக்கு எழுப்பாத, எத்தன தடவ வைரத்து அம்மா கையால சோறு தின்னுருப்பேன். சரி இரு வந்துட்டேன்"
ஆற அமர கொல்லை பக்கம் போனேன். அப்பாவை திரும்பி பார்த்த போது ஏதோ அவங்க முகத்திலே ஒரு படபடப்பு.
அப்பாவுக்கு எப்பவும் இப்படித்தான். எந்த வேலையாக இருந்தாலும் பறப்பாங்க. இப்ப அவசர அவசரமா வந்து தலை காமிச்சுட்டு "நானும் வந்தேன் கச்சேரிக்கு"ன்னு வைரத்துகிட்ட அட்டெண்டென்ஸ் குடுத்துட்டு ஆபீஸ்க்கு ஓடி வந்திடனும். ச்சே நான் கார்த்தி வீட்டிலே பிறந்திருக்கலாம்.
"அப்பா வைரம் வந்துட்டானாமா, எப்போ நடந்துச்சு, அவனுக்கு சேதி போயி கார்ல அவன் பறந்து அடிச்சுகிட்டு வந்தாலே கோயமுத்தூரில் இருந்து வர ஆறு மணி நேரம் ஆகும்!"
அப்பா வாயையே திறக்கவில்லை. அம்மாவை பார்த்தாங்க. சரி, அம்மா முகம் என்ன இத்தன வீங்கி இருக்கு. எதுனா பூச்சி பட்டு கடிச்சிருக்கும். சே ஒரு நாள் அம்மாவும் வைரம் அம்மா மாதிரி செத்து போய்டும்ல்ல, நாம இனிமே அது சொன்னா ரேஷன் கடைக்கு போகனும்!
முகத்தை துடைத்து கொண்டே அம்மா கிட்டே வந்தேன்.
"என்னம்மா, சாவுன்னா பயமா, விடும்மா பயப்படாதே, அவங்க விதி, உனக்கு என்ன கல்லுகுண்டு கணக்காதான் இருக்க, அதை நெனச்சு பயப்படுறியா, சரி விடு, வைரம் அப்பாவை எடுத்த மாதிரி நாலு மணிக்கே எடுத்துடுவாங்க அனேகமா, வந்து நான் ரேஷன் கடைக்கு போறேன் சரியா"
அய்யோ அம்மா எதுக்கு அழுவுது... நான் பேசாம வாயை மூடிகிட்டு இருந்திருக்கலாமோ!
வைரத்தின் வீடு என் வீட்டிலிருந்து நேர் கோடாக ஆறு கிலோமீட்டர். என் வீட்டின் வாசலில் பஸ் ஏறினால் ஆறுபாதியில் அவன் வீட்டு வாசலில் இறங்கி விடலாம்.
வாசலுக்கு வந்து சியாமளா கோவிலில் பஸ்ஸுக்கு நின்ன போது அம்மா முகத்தை பார்க்க முடியலை எனக்கு. அத்தனை வெளிரி போய் இருந்தது.
"தம்பி, பத்தாவது பண்ணென்டாவது பரிட்சை அப்பல்லாம் நம்ம வீட்டிலே தானே தங்குவான் வைரம்"
"ஆமாம்மா, பாவம்மா அவன்"
நாலாம் நம்பர் பஸ் வந்ததும், ஏறிக்கொண்டோம்! அம்மா ஜன்னல் ஓரம் போய் உட்கார்ந்ததும் அம்மா உட்க்காரட்டும் என நான் வேறு சீட் பார்த்து உட்க்கார போனேன். அப்போ அப்பா என்ன நினைத்தாங்களோ தெரியவில்லை!
"தம்பி வாடா அம்மா பக்கத்திலே உக்காந்துக்கோ"
எனக்கு நிரம்ப ஆச்சர்யமாகவும் கொஞ்சம் வெட்கமாகவும் கூட இருந்தது. நான் உட்கார்ந்த பின்னே எனக்கு அடுத்து அப்பா உட்கார பஸ்ஸில் எல்லோரும் என்னையே பார்ப்பது போல உணர்வு. வெட்கத்தின் காரணமாக கொஞ்சம் வேர்த்தும் போயிருந்தது.அப்பா என் பக்கத்தில் உட்கார்ந்த உடன் அவங்க பேஃவரிட் வசனம் தான் ஞாபகத்துக்கு வந்தது. "பத்து பைசா" வசனம். அப்பா பத்து பைசாவை வச்சிகிட்டு என்ன பண்ண போறாங்க, அதிகபட்சமா சைக்கிளுக்கு காத்து அடிக்கலாம், அதுவும் ஒரு வீலுக்கு தான் முடியும்! எனக்கு சிரிப்பு வந்தது. அப்பாவுக்கு வேற நல்ல டயலாக் எழுதி தரனும் என்று நினைத்து கொண்டேன்!
என் மேல கொஞ்சமும் ஆசையில்லை உங்களுக்கு என பாண்டியராஜன் ஒரு படத்தில் அவங்க அப்பா சிவாஜியிடம் சொல்லுவார். அப்போ சிவாஜி "தினமும் ஒரு தடவை தூக்கி கொஞ்சி முத்தம் கொடுக்கனுமா?" என கேட்பார். அதற்க்கு பாண்டியராஜன் "தினமும் கூட வேண்டாம் அட்லீஸ்ட் வாரம் ஒரு தடவையாவது கொடுக்கலாமில்லையா" என சொல்லுவார். தேவையில்லாமல் அந்த படகாட்சிகள் என் மனதில் வந்து போயின. என்னையே நொந்து கொண்டேன். எந்த நேரத்தில் எந்த நினைப்பு. பாவம் வைரம் கோவையிலிருந்து இந்நேரம் போடு போடுன்னு போட்டுகிட்டு வந்துகிட்டு இருப்பான்.
எனக்கு ஒரு கெட்ட பழக்கம்! பஸ்ஸில் ஏறி உட்காந்த உடனேயே தூக்கம் வந்து விடும். கஷ்டப்பட்டு கண்ணை கசக்கி கொண்டேன்.
வைரம் எனக்கு அறிமுகமானது நான் ஆறாம் வகுப்பு படிக்கும் போதுதான். நான் அட்மிஷன் முடிந்து வகுப்புக்கு வந்தபோது அனேகமாக எல்லா இருக்கைகளும் நிரம்பி போயிருந்தன. கடைசி பெஞ்சில் ஜன்னல் ஓர சீட்டில் வைரம் உட்கார்ந்திருந்தான். அவன் பக்கத்தில் ஒரு இடம்.
மனசே இல்லாமல் அவன் பக்கத்தில் போய் உட்கார்ந்தேன். அப்போதே அவனை விட்டு விலகியிருந்தால் இத்தனை மனசு கஷ்டங்களும் வந்திருக்க வாய்ப்பில்லை!
இப்போதைய நிலை "அவன் என்னை விட்டு விலகுவதும் இல்லை!! பிரிவதும் இல்லை!!!"
தொடரும்......
எதோ சோகமான கதைன்னு கோடிக்காட்டி இருக்கீங்க.. ஹ்ம்.. :(
ReplyDeleteஅதுனால நல்லா இருக்கு நடை.. அப்படியே நடந்த கதைபோல தெரிகிறது.
பேக் டு ஃபாம்..!!
ReplyDeleteஆமா முடிவு எங்க..?
ReplyDelete:(
//
ReplyDeleteஅவன் என்னை விட்டு விலகுவதும் இல்லை!! பிரிவதும் இல்லை
//
குரங்கு ராதாவை சொல்லுரீங்களா..
ஹா ஹா
அய்யோ அபி அப்பா நீங்களா?
ReplyDeleteசத்தியமா நம்ப முடியலை.
ரொம்ப இயல்பா அழகான நடையில் எங்கும் பிசிறில்லாமல் தேவி பாலா நாவல் மாதிரி சரளமா எழுதியிருக்கீங்க.
இது மனசார சொல்ற பாராட்டு.சும்மா உங்களுக்காக சொல்லலை.
வாங்க வாங்க, இப்போதக்கு பிரசண்ட்
ReplyDeleteInteresting!!
ReplyDeleteவாங்க வாங்க
ReplyDeleteஅசத்தலான நடையில் விறுவிறுப்பான ஆரம்பம்!
ReplyDeleteஐயாம் தி வெயிட்டிங் இஸ் பார் தி நெக்ஷ்ட் பார்ட் ஆப் திஷ் குறுஷ்டோரி!
ஹலோ வெயிட் வெயிட் வெயிட்
ReplyDeleteஎன்னா இது போன கடைசியா எல்லோருக்கும் டாட்டா சொல்லிட்டு பதிவு போட்டுட்டு போனா, திரும்ப வரும் பொழுது என்னை இவுங்க போன் செஞ்சு கூப்பிட்டாங்க, அவுங்க மெயில் அனுப்பினாங்க, இத்தனை பேர் அழுதாங்க என்று புள்ளி விவரம் சொல்லிட்டு இவர்களால் நான் திரும்ப வந்தேன் என்று ஒரு சம்பிராதய பதிவு போடனும் போட்டாதான் ஒத்துப்போம்.
இல்லை தமிழ்மண ரூல்ஸை மீறிய அபி அப்பா, அல்லது கட்டுடைக்கும் அபி அப்பா என்று பதிவு போட்டு கும்ம நேரிடும்!!!
கப்பி பய said...
ReplyDeleteஐயாம் தி வெயிட்டிங் இஸ் பார் தி நெக்ஷ்ட் பார்ட் ஆப் திஷ் குறுஷ்டோரி!///
ஆபிசர் என்னா சொல்றீங்க? கொஞ்சம் புரியிரமாதிரி சொல்லுங்களேன்!!!
// கண்மணி said...
ReplyDeleteஅய்யோ அபி அப்பா நீங்களா?
சத்தியமா நம்ப முடியலை.
ரொம்ப இயல்பா அழகான நடையில் எங்கும் பிசிறில்லாமல் தேவி பாலா///
அப்ப இதுவரை அசிங்கமான நடை நடந்தாரா? அவர் நடை எப்போழுதும் ராஜ நடைதான். இதுக்கு முன்னாடி பிசுறு இருந்தது இப்ப இல்லைன்னு சொல்லுறீங்க இது எல்லாம் நல்லா இல்லை டீச்சர்!!!
இப்படிக்கு
குடும்பத்தில் குண்டு வைப்போர் சங்கம்
//மின்னுது மின்னல் said...
ReplyDeleteபேக் டு பாம்..!!///
என்னது பேக்ல டூ பாம்ஸா அய்யயோ அபி அப்பா உட்காராதீங்க, உட்காந்து இருந்தா எழுந்திரிக்காதீங்க!!! பாம் ஸ்குவார்ட் வந்து செக் செய்த பிறகு எழுந்திரிக்கலாம்!!!
படிக்கிறப்போ கதைல ரொம்ப லேசா ஒன்றிட முடியுது. நல்ல லேசான எழுத்து நடை.
ReplyDeleteவைரத்தை படிக்கிறவங்க உள்ளத்துல தங்கத்துல பதிக்கிற மாதிரி பதிச்சிட்டீங்க. அடுத்த பாகத்துக்கு வெயிட்டிங்ல்.
இப்பல்லாம் நல்ல கதைகளைப் படிக்கிறப்போ பொறாமையா இருக்கு. :) நல்லா எழுதீருக்கீங்க.
இதே மாதிரி என் வாழ்க்கையிலும் ஒரு சம்பவம். ஆனால் இறந்தது என் நண்பன். போகும் வரை யாரும் எணக்கு சொல்லவில்லை. நண்பனுக்கு என்ன ஆறுதல் கூறுவது எண்று புரியாமல் சென்ற எனக்கு எல்லோரும் ஆறுதல் சொல்லும்படி ஆகிவிட்டது.
ReplyDeleteகலக்கலான ஆரம்பம்... அடுத்த பாகம் எப்போ வரும்ன்னு சொல்லுங்க
ReplyDeleteவாங்க முத்துலெஷ்மி! நன்றி,நடந்த கதை மாதிரி இருக்கா?
ReplyDeleteவாப்பா மின்னல்! வந்துட்டேன்! வந்துட்டேன்! முதல் பாகத்திலேயே முடிவை கேட்டா எப்படி? இது குரங்கு ராதா இல்லப்பா!
ReplyDeleteவாங்க டீச்சர், 50 நிமிஷம் போனில் என்னை போட்டு கரைத்து கதை எழுத சொல்லி "வைர நெஞ்சம்"ன்னு தலைப்பும் குடுத்து...அடுத்து அடுத்து என்ன பதிவு போடனும் என எல்லாம் தைரியம் குடுத்து நன்றி டீச்சர்!!
ReplyDeleteவாங்கப்பா குட்டீஸ் பவன், அபிஅப்பா எழுதனும்ன்னு பதிவுலே போராட்டம் எல்லாம் செஞ்சீங்களே, ஜூஸ் குடிச்சு முடிச்சுகோங்க உங்கள் அன்புக்கு மிக்க நன்றிப்பா!!!
ReplyDeleteவாங்க மங்களூர் சிவா, வலைச்சரம் எப்படி போகுது, முதல் பதிவே அசத்தல்!!
ReplyDeleteவந்துட்டேன் நந்து, நிலாகுட்டிக்கும் என் அன்பை சொல்லிடுங்க, நன்றி!
ReplyDeleteகப்பிசாரே! வந்துட்டேன், நாளை அடுத்த பாகம், ஏனனில் இன்னிக்கு நெட் சொதப்பல் இங்கே! புஷ்ஷின் வருகையால்! தொடர்ச்சியாக வரவில்லை!!!
ReplyDeleteகுசும்பா! உன் கேள்விக்கு எல்லாம் இதன் 3ம் பாகத்தில் பதில் கிடைக்கும்! குண்டு வைத்தாலும் உடையும் குடும்பமா இது:-))
ReplyDelete2ம் முறையாக வந்திருக்கீங்க ஜி.ரா. நீங்க எல்லாம் நல்லா இருக்கு கதைன்னு சொல்றது கொஞ்சம் கர்வமாவே இருக்கு! மிக்க நன்றி ஜிரா!!!
ReplyDeleteவாங்க டாக்டர்! கதை படிக்க போரடிக்குதா, சிரமம் தான் மெதுவா படிங்க!!
ReplyDeleteவாங்க அனானி! பேர் போட்டே உங்க கருத்தை சொல்லியிருக்கலாமே, நன்றி வருகைக்கு!!
ReplyDeleteவாங்க தேவ்! என்னங்க ஜிரா, நீங்க எல்லாம் கூட நல்லா இருக்குன்னு உசுப்பேத்தி விடறீங்க! பின்ன நான் அழுகாச்சி கதையாவே போடுவேன்:-)) நாளை இரவு அடுத்த பாகம்!!! இன்று நெட் சொதப்பல் பாசிச புஸ்ஸ்ஸ்ஸ் வருகையால்:-))
ReplyDeleteவாங்க தேவ்! என்னங்க ஜிரா, நீங்க எல்லாம் கூட நல்லா இருக்குன்னு உசுப்பேத்தி விடறீங்க! பின்ன நான் அழுகாச்சி கதையாவே போடுவேன்:-)) நாளை இரவு அடுத்த பாகம்!!! இன்று நெட் சொதப்பல் பாசிச புஸ்ஸ்ஸ்ஸ் வருகையால்:-))
ReplyDelete//
ReplyDeleteஅபி அப்பா said...
வாங்க மங்களூர் சிவா, வலைச்சரம் எப்படி போகுது, முதல் பதிவே அசத்தல்!!
//
அண்ணே இதெல்லாம் ஓவர்!!
ஒரு எட்டு அங்கன வந்து சொல்லியிருக்கலாம் :(
ச்சின்ன பையன் சந்தோச பட்டிருப்பேன்.
கதை நல்லாருக்குங்க...பாண்டியராஜன் , பத்துப் பைசா..இன்னும் சின்னச் சின்ன விஷயங்கள் பொருத்தமான செருகல்கள்..
ReplyDeleteட.. கதை சூப்பரா இருக்கே! ஆனால், கதை முடிவு எங்கே எங்கேன்னு தேடுறேன்.. கண்ணுல படவே இல்ல.. இது ஒரு தொடர்கதையோ? :-)
ReplyDeleteசென்ற வருடம் தாங்கள் எழுதியதில் தங்களுக்கு உவந்ததைப் பகிர முடியுமா?
ReplyDeleteஅழைப்பு இங்கே
நன்றிகள் பல :)
உண்மைக்கதை? சோகம் அதிகமாத் தெரியுதே? :(((((((( எப்போப் போடறீங்கனே தெரியறதில்லை, ஒரு மெயில் தட்டலாம்! :((((((
ReplyDeleteஎப்பவும் என்னோட பின்னூட்டத்தோட முடிச்சுடறீங்களே? ஏன்?
ReplyDeleteகதை/சம்பவம் பிசிறில்லாமல் அழகாக போகிறது அபி அப்பா.
ReplyDeleteதொடர் கதையா - வாழ்த்துகள் - இடை இடையே சிறு சிறு செய்திகள். பாண்டிய ராஜன் சிவாஜி அட்லீஸ்ட் வாரம் ஒரு முறை முத்தம் - பத்து பைசாவுக்கு ஒரு வீலுக்கு காத்து அடிக்க முடியுமா - சொம்புத் தண்ணி மிச்சம் - ம்ம்ம் நல்லா கதை போகுது - பார்க்கலாம்- திருப்பத்தெ அடுத்த பகுதியிலே
ReplyDeleteஅடடா வைரமே போய்ச் சேர்ந்துட்டானா?.....ஐயோ நாளை வரை காத்து இருக்கணுமா??
ReplyDeleteரொம்ப நல்லா எழுதிறீங்க...
அன்புடன் அருணா
அபிஅப்பா,
ReplyDeleteநல்ல தொடக்கம். சொக்க வைக்கும் நடை. (விளக்கம் அய்யனார் சொல்வார்) :)
அபியப்பான்னு சொன்னாலெ லொள்ள்ளு பிடிச்சவர்.. சரியான அராஅகப பார்ட்டினு தான எல்லாரும்( யார்னு கேக்காதிங்க) பேசிக்கிறாய்ங்க... இது
ReplyDeleteஎதோ சோக கீதம் மாதிரி இல்ல தெரியுது...
//அவன் என்னை விட்டு விலகுவதும் இல்லை!! பிரிவதும் இல்லை!!!" //
அதான என்ன தான் சோக கீதமா இருந்தாலும் இந்த குழப்ப கீதம் தான் அபியப்பா இஸ்டெயிலு. :P