உண்மைதான் நான் புத்தாண்டு அன்று சில மன கஷ்டங்களோடு இருந்தேன்.அதை நண்பர் வினியூக்கியோடுகூட பகிர்ந்து கொண்டு அவரின் மேலும் சுமை ஏற்றினேன்! உண்மை!
ஆனாலும் அதுக்கு அடுத்து நான் போட்ட ஒரு பதிவை தூக்கி விட்டேன்! காரணம் நான் எப்பவும் சாக்கடையில் கல் எறிய மாட்டேன் என்பது எல்லாருக்கும் தெரியும் என்பதால்!
அதற்கு பின்ன நான் போட்ட பதிவுக்கு நான் இது வரை கானாத அளவு கண்டணம் வர காரனம் தெரியவில்லை!
நான் குசும்பனுக்கு போட்டியாக பதிவு போட்டேன் என ஒரு அனானி நண்பர்\நண்பி சொல்லியிருந்தாங்க!
மன்னிக்கனும்! நான் தான் முதலில் வாழ்த்து சொன்னவன் குசும்பனுக்கு! மேலும் "மும்பையில் பெண்கள் மானபங்க படுத்துத்தப்பட்டபோது எடுத்த போட்டோ இது தான்" என நம் சாந்தோம் சர்ச்சில் எடுத்த போட்டோ போடலாம்" என சொல்லியவனும் நான் தான். அதாவது நம் சென்னை நல்லா இருக்கு! மும்பை தான் திருந்தனும் என உள் அர்த்தத்தோடு சொல்ல நினைச்சு சில கருத்துகள் சொல்ல வரும் போது save என்பதற்க்கு பதில் publish கொடுத்து அவசர அவசரமாக டெலேட் செய்யும் முன் ஒரு அவசரகுடுக்கை அனானி வந்து நான் குசும்பனுக்கு போட்டி என்றும் நான் மாயூரநாதரை கும்பிட்டு வந்தாள் சரியாகும் எனவும் பின்னூட்டம் போட்டிருக்கங்க!
நான் குசும்பனுக்கோ யாருக்கோ போட்டி போட்டவனில்லை! ஏனனில் அவன் என் தம்பி!
அது தவிர மாயூரநாதருக்கு ஏகப்பட்ட வேலை இருக்கு! மாயூரத்தின் தாதாக்களை அழிக்கும் வேலை!!! சரியா! அவர் பிலாக் பார்க்க மாட்டார் என நிணைக்கிறேன்
ஆனால் என் நகைச்சுவை உணர்வு குறைந்து போனதாக என் நண்பர்கள் \நண்பிகள் உணர்வதால் இத்துடன் என் நகைச்சுவை மாதிரி என்னும் என் பதிவுகளை நிறுத்திகொள்கிறேன்! கிட்ட தட்ட என் பதிவுகளை "எல்லாம்" கூட நிறுத்தி கொள்கிறேன்! ஆதரவுக்கு நன்றி! வணக்கம்!!!
டுபுக்கு...முதுகு அரிக்குதுன்னு கொல்லி எடுத்து சொறிஞ்சிக்குவாங்களாம்.
ReplyDeleteஅண்ணே!!!
ReplyDeleteஏன் இந்த கொல வெறி??? இங்க யாருக்கும் யாரும் போட்டியில்லைனு எல்லாருக்கும் தெரியும். அனானி சொன்னதெல்லாம் கணக்குலயே வெச்சிக்க கூடாது :-)
உங்களோட போன பதிவே நல்லா தான் இருந்தது...
ஒரு இழவும் புரியல...என்ன ஆச்சு இப்போ?..!
ReplyDeleteஹலோ.. நீங்க முந்தி மாதிரி பின்னூட்டத்துக்குப் பின்னூட்டம் போடாம மூஞ்சியைத் தூக்கிவச்சிட்டிருக்கிறதுக்கு என்ன காரணம்னுகூடத் தெரியாம வருத்தமா இருக்கேன். அதுல இது வேறயா??
ReplyDeleteஆஹா...என்ன இப்பிடி ஒரு போடு போட்டுட்டீக! என் காதுல மட்டும் சொல்லுங்க...ஒரு 300 பின்னூட்டம் வந்தவுடன் அப்பிடியே திரும்பி வந்துடுவீங்க, அதான விஷயம்? ஓகே...ஒகே...நமக்குள் இருக்கட்டும்.
ReplyDeleteஒன்னுமே புரியல
ReplyDeleteஇந்த வலைப்பூக்களின் அரசியல் எனக்குப் புரியவில்லை. எனக்கும் ஒரு சிறு மன வருத்தம் உண்டு. அதற்காக பதிவினை நிறுத்த வேண்டுமா என்ன ? தங்களின் பதிவுகளைப் படித்தவன் நான். எண்ணங்கள் எதிர் பார்த்த படி மற்றவரை அடைவதில்லை. தவறாகப் புரிந்து கொள்ளப் படுகின்றன. இதற்கெல்லாம் கவலைப் படாமல் தொடர்க பணியினை.
ReplyDeleteஏன் ஏன் ஏன் இப்படி?
ReplyDeleteஇதுக்கெல்லாம் நான் புத்தி சொல்ல கூடாது. நிலா பாப்பாவ விட்டுத்தான் சொல்லனும். அந்த மாதிரித்தான் இருக்கு
ReplyDeleteஒரு எழவும் புரியல! எவனோ என்னவோ சொல்லிட்டான்றதுக்காக மூட்டை கட்டறது கேனத்தனம்னு மட்டும் புரியுது.
ReplyDeleteமக்காஸ்
ReplyDeleteஊருக்கு போறதத்தான் அவர் இப்படி சொல்லி லந்து விடறார். நீங்களும்
போகாதே...
வாராதேன்னு பாசத்த அவசரப்பட்டு பொழிஞ்சிடாதிங்க.
:)))
அங்கிள் ஜனவரி மாசம் எல்லாம் ஏப்ரல் பூல் பண்ண கூடாது... இவ்ளோ படிச்சி இருக்கிங்க இது கூட தெரியலயா...சீக்கிரம் அடுத்த பதிவு போடுங்க கும்மி அடிக்க நாங்க ரெடி.... 1000, 2000, 3000 எவ்ளோ கமெண்ட் வேணும்னு மட்டும் சொல்லுங்க நான் பாத்துக்கரேன்...
ReplyDeleteசமீபத்திலதான் ப்ளாக் பக்கம் வந்தேன். ரசிக்க ஆரம்பிச்ச சில வலைபதிவுகள்ள உங்களது ஒன்று. அதுக்குள்ள...... வலைல மத்தவங்களுடன் உரையாட கொஞ்சம் தடிமனான தோல் வேண்டி இருக்கு. என்ன பண்ணுவது!
ReplyDeleteஎன்ன மன வருத்தம் இருந்தாலும் இறைவன் அதை போக்கட்டும்.
இன்னும் நல்லா எழுதுங்க.. உங்களுக்கு நல்லா நகைச்சுவை வரும்... அவசரமா போஸ்ட் பண்ணிடீங்களோன்னு கேட்டா என்ன இப்படி கோச்சுக்கறீங்க.. ... ரொம்ப ஆணியாகி நீங்க மூட் அவுட் ஆக காரண்மான உங்க மேலதிகாரிங்களைத்தான் திட்டனும்..
ReplyDelete//ஆனால் என் நகைச்சுவை உணர்வு குறைந்து போனதாக என் நண்பர்கள் \நண்பிகள் உணர்வதால் இத்துடன் என் நகைச்சுவை மாதிரி என்னும் என் பதிவுகளை நிறுத்திகொள்கிறேன்! கிட்ட தட்ட என் பதிவுகளை "எல்லாம்" கூட நிறுத்தி கொள்கிறேன்! ஆதரவுக்கு நன்றி! வணக்கம்!!!//
ReplyDeleteஅவ்ளோ சீரியஸ் ஆகும் ஆளா நீங்க நம்ப முடியலையே. புண்பட்ட மனதை பொக போட்டு ஆத்திட்டு பதிவை தட்டுங்க.....
ஒரு பாலிசி வச்சிகுங்க
ஜென்டில் மேன்...ஜென் டில் மேன் படத்தில் வரும் பிரபு தேவா பாடலில் வருமே...டேக் இட் ஈசி பாலிசி
:)
லெஸ் மொக்கை நோ டென்சன்
//கோபிநாத் said...
ReplyDeleteஒரு இழவும் புரியல...என்ன ஆச்சு இப்போ?..!
//
ரிப்பீட்டேய்ய்ய்.. :))
//கோபிநாத் said...
ReplyDeleteஒரு இழவும் புரியல...என்ன ஆச்சு இப்போ?..!
//
ரிப்பீட்டேய்ய்ய்.. :))
நீங்க நல்லாவே ஜோக் பண்ணுறீங்க.... :D
ReplyDeleteஎன்ன சின்னபுள்ளதனமா இருக்கு.இதுக்கு போயி யாராவது கோச்சிப்பாங்களா?.உங்க சில பதிவ படிச்சிட்டு,தனியா லூசு மாதிரி ஆபிஸ்ல சிரிச்சிருக்கேன்.விளையாட்டு போதும்..வாங்க பாஸ்.அட வாங்கனா..
ReplyDeleteஎன்ன எனக்கு போட்டியா பதிவு போட்டிங்க என்னா பிரச்சினை?
ReplyDeleteசரி ஊருக்கு ஏதும் போக போறீங்களா?
இது விருமாண்டி மாதிரி சீரியஸ்பதிவா?:)))))
I am a regular silent reader (fan) of your blogs, I was very much inspired and enjoyed by your writings. So dont stop for any reasons. (Even I cant understand what the problem is)
ReplyDeleteஅண்ணாத்தே! அப்ப நாம பொங்கலுக்கு மாயவரத்துல சந்திப்போம் :)))
ReplyDeleteநான் அல்ரெடி ஏர்போர்ட்டுக்கு போய்க்கிட்டிருக்கேன் :)
அப்பு,எங்கள வச்சி ஒண்ணும் காமடி கிமடி பண்ணலையே..
ReplyDeleteஹோய் ஷங்கர்,
ReplyDeleteஅண்ணாச்சி சொல்லிட்டார்..அது சரித்திரம்..
அதுனாலே..காதலன் படத்திலேயிருந்து, அந்தப் பாட்டை, ஜெண்டில் மேன் படத்திலே போட்டு, மீள் பதிவு என்று சொல்லி திரும்ப ரிலீஸ் செய்யவும்.
இது வேண்டுகோள் இல்லை !!
கட்டளை..! கட்டளை...! கட்டளை...!
///கோவி.கண்ணன் said...
ஒரு பாலிசி வச்சிகுங்க
ஜென்டில் மேன்...ஜென் டில் மேன் படத்தில் வரும் பிரபு தேவா பாடலில் வருமே...டேக் இட் ஈசி பாலிசி
:)///
லெஸ் மொக்கை நோ டென்சன்
அட இதுக்குப் போயி அலட்டிக்கலாமா.
ReplyDeleteஅனானி சொன்னதுக்கெல்லாம், உணர்ச்சிவசப்பட்டா எப்படி..
பதிவுலக வாழ்க்கையில இதெல்லாம் சஹஜமப்பா....
ReplyDeleteஇதுக்கெல்லாம் அளுவாச்சி மூஞ்சி காட்டுவாங்களா என்ன....
கெளம்பி வாருமய்யா அடுத்த பதிவோட.....
இந்த "நகைச்சுவையாளர்களிடம்" இதுதான் கஷ்டம். அவர்கள் எல்லோரையும் கன்னா பின்னா என்று போட்டுத் தாக்குவார்கள். நாமெல்லாம் சிரிக்க வேண்டும். ஆனால், அவர்களைப் பற்றி யாராவது ஏதேனும் சின்னதாக சொல்லிவிட்டால் கூட உடனே மூட் அவுட்டாகி தன்னிரக்கம் மிகுந்து தன்னைத்தானே தாழ்த்திக் கொள்ள ஆரம்பித்து விடுவார்கள்.
ReplyDeleteநானும் அந்த அனானியின் பதிவை மறுபடியும் ஒருமுறைக்கு இரு முறையாகப் படித்துப் பார்த்தேன். நன்றாக பதிவெழுதும் ஒரு பதிவர் புத்தாண்டும் அதுவுமாக இப்படி தடுமாறுகிறாரே என்கிற ஆதங்கம்தான் தெரிகிறதே தவிர வேறு எதும் தவறாகப் புலப்படவில்லை.
அதுபோலவே, மற்ற பின்னூட்டங்களிலும் ஒரு குறிப்பிட்ட பதிவு நகைச்சுவையாக இல்லை என்று குறிப்பிட்டிருக்கிறார்களே தவிர ஒருவர் கூட இந்த பதிவருக்கே நகைச்சுவை உணர்வு இல்லை என்று சொல்லவே இல்லை.
பதிவு நகைச்சுவையாக இருந்தால் எல்லாரும் கைத்தட்டிப் பின்னூட்டம் போடவேண்டும். ஆனால் நகைச்சுவையாக இல்லாவிட்டால் எதுவும் சொன்னால் நாங்கள் பதிவை மூடிவிட்டுப் போய் விடுவோம். எந்த ஊரில் ஐயா இந்த சட்டம் செல்லும்?
நகைச்சுவை என்பதே ஒருவழிப்பாதையாக இருப்பதுதான் தமிழ்நாட்டின் தூரதிருஷ்டம்.
தமிழ்ப் பதிவுலகும் இதற்கு விதிவிலக்கல்ல என்பது நகைச்சுவையான விஷயமில்லை.
உங்களை மாதிரி சிறந்த தரமான பதிவர்கள் வேண்டாம் பதிவுலகம் என விலகுவது மனதை பிசைகிறது
ReplyDeleteமக்கா டோண்ட் ஒர்ரி நாங்க அபி அப்பாவைக் கேட்டுட்டோம்ல!
ReplyDeleteஇது ச்சும்மாங்காட்டியும் உலுலாய்யியாம்.
அவரு போறேன்னு சொன்னா நாம எப்டி ரியாக்ட் குடுக்கோமின்னு பாக்கவாம்.
அப்பால ஆணி அதிகம் என்பதால் அதுவரை இப்படி கொளுத்திப் போட்டா பொகைஞ்சிக் கிட்டிருக்குமாம்.
இதுவும் ஒரு மொக்கையாம்.
சில பேருக்கு அப்பப்ப இப்படி கொலை வெறி வரும்.நாம் கண்டுக்கக் கூடாது.
காமெடி பதிவுகளின் அரசன் 'அபி அப்பா' வாழ்க!!!!!!!!!
சீரியஸ் பதிவெழுதினாலும் சிரிக்க வைக்கும் சிந்தனையாளன் வாழ்க வாழ்க!!!!
//சீரியஸ் பதிவெழுதினாலும் சிரிக்க வைக்கும் சிந்தனையாளன் வாழ்க வாழ்க!!!!//
ReplyDeleteசரியாப் போச்சு!
சிரிப்புப் பதிவெழுதி சீரியஸ் அல்லவா ஆ(க்)கிவிட்டார்?! :-)
என்னாச்சி அண்ணாச்சி... நீங்க போட்டுப் பாக்குற மாதிரி இருக்குது...
ReplyDeleteமெய்யாலுமே வருத்தத்துல சொன்னீங்கன்னா... உலகம் ஆயிரம் சொல்லும். மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் பழித்ததொழித்து விடின்ன்னு நம்ம திருவள்ளுவர் சொல்லியிருக்காரு... லூசுல விடுங்க.... நண்பர்கள் அப்படின்னாலே... புரிஞ்சிக்குறவங்கன்னு தான் அர்த்தம். ஒரு அனானி சொல்லுறதை நம்புவாங்கன்னு நீங்களே புசுக்குன்னு போகலாமா... போதுமய்யா போதும். விசுக்குன்னு எழுந்து ஒரு மொக்கையொன்ன்... சாரி... சாரி... பதிவொன்னு போடுங்கப்பா..
அனானியை அகிலமாக்கி
ReplyDeleteஅரண்டோடும் அபிஅப்பாவின்
வீர, தீர, தைரியத்திற்கு வாழ்த்துகள்! :-)
ஒண்ணும் புரியலை, உங்களைப் பார்க்கவும் முடியலை, மெயிலுக்கும் பதில் வரதில்லை, என்னவோ போங்க! :(((((((((((((
ReplyDeleteஅண்ணே சீக்கிரம் வாங்க ஆல் வெயிட்டிங்...
ReplyDeleteஅண்ணாச்சி..என்னாச்சு???
ReplyDeleteநம்ம விளையாட்டுக்கும் வாங்க சாமியோவ்
ReplyDeleteஉங்க பெஸ்ட் எது?
எல்லாமேன்னு அழுகின ஆட்டம் ஆடக் கூடாது
http://kouthami.blogspot.com/2008/01/blog-post_12.html
அபி அப்பா..என்னங்க இது? சின்னப் புள்ளைத் தனமாயில்ல இருக்கு?... நீங்களே இப்படி முறுக்கிக்கிட்டு போனா என்ன அர்த்தம்?..வாங்க ரெண்டாவது ரவுண்டு வந்து கலக்குங்க..:
ReplyDelete//Anonymous said...
ReplyDeleteஆஹா...என்ன இப்பிடி ஒரு போடு போட்டுட்டீக! என் காதுல மட்டும் சொல்லுங்க...ஒரு 300 பின்னூட்டம் வந்தவுடன் அப்பிடியே திரும்பி வந்துடுவீங்க, அதான விஷயம்? ஓகே...ஒகே...நமக்குள் இருக்கட்டும்.//
ஹிஹி.. அதான் மேட்டரா...கலக்குங்க மாம்ஸ்......:)
//இத்துடன் என் நகைச்சுவை மாதிரி என்னும் என் பதிவுகளை நிறுத்திகொள்கிறேன்!//
ReplyDelete”இத்துடன்”ன்னாக்கா..அப்போ இதுவும் நகைச்சுவைப் பதிவுதானா?..:)))
புரிஞ்க்கிட்டேனுங்க.. (அப்படித்தான் இருக்க புரிஞ்சுக்கனும்ன்னு ஆசை..:) )
அபி அப்பா உங்களுக்கு http://umaiyanan.blogspot.com/2008/01/blog-post.html இந்த தகவல் ரொம்ப பயனுள்ளதாக இருக்கும். முயற்சித்துப் பாருங்கள்.
ReplyDeleteதாங்க முடியல :-)
ReplyDelete/////Anonymous said...
ReplyDeleteஆஹா...என்ன இப்பிடி ஒரு போடு போட்டுட்டீக! என் காதுல மட்டும் சொல்லுங்க...ஒரு 300 பின்னூட்டம் வந்தவுடன் அப்பிடியே திரும்பி வந்துடுவீங்க, அதான விஷயம்? ஓகே...ஒகே...நமக்குள் இருக்கட்டும்.//
ஹிஹி.. அதான் மேட்டரா...கலக்குங்க மாம்ஸ்......//
அதேதான்..!
கரெக்டா 41 பின்னூட்டம் வந்து தமிழ்மணம் முகப்பிலிருந்து மறைந்தவுடன், இனிமேல் இது வேலைக்கு ஆகாது என்று அண்ணன் சத்தமே போடாம திரும்பிட்டாரு பாத்தீங்களா?
பின்னுட்டம் வாங்க மக்கள் என்னவெல்லாம் செய்யுராங்கப்பா :-)