பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

March 28, 2008

அபிஅப்பாவின் தசாவதாரம்!!!

1.ஜெயந்தி! நான் ஷார்ப்பா மார்ச் 27 இரவு கிளம்பி 28 காலை பெங்களூர் வந்திடுவேன். பாப்பாவை நீதான் பார்த்துக்கனும், தம்பிய 3 நாளைக்கு ஜீவ்ஸ் தங்கமணிகிட்ட தத்து கொடுத்திடலாம். மங்களூர் சிவாவுக்கும், பொடியன் சஞ்சய்க்கும் எனக்கும் ஓர சீட் தான். நம்ம வாத்தி இளவஞ்சியும் நானும் ஹம்பி போன பின்ன தனியா கிளம்பிடுவோம் நீதான் உன் அண்ணிய என் பக்கம் திரும்பாம பார்த்துக்கனும். ஆஹ நாம மார்ச் 30 தூள் கிளப்பறோம். அப்பாகுரங்கு நாமக்கல் சிபி கூட வர்ரார்.(அப்பாகுரங்குன்னா என்னான்னு குட்டி குரங்கு துர்க்காகிட்ட கேட்டுக்கலாம்)


2.குசும்பா! நீ எப்படின்னு எனக்கு தெரியலை! ஆனா நான் சொன்ன சொல் தவற மாட்டேன் என உனக்கு நல்லாவே தெரியும். ஷார்ப்பா மார்ச் 30 காந்தி காக்காய் ஓட்டும் இடத்துக்கு மாலை 5க்கு வந்திடுவேன். தல பாலபாரதி அரேஞ் பண்ணின மீட்டிங்க்கு வந்திடுவேன். நாம உன் கல்யாண பத்திரிக்கை குடுத்துடுவோம். தூள் கிளப்பிடலாம்.

3.எக்ஸ்: என்னப்பா, உன் அப்பாவுக்கும் வயசாச்சு, இனிமே நீதான் நம்ம சியாமளா கோவில் டிரஸ்ட்டியா இருக்கனும் என்ன சொல்றே!

நான்: என்னங்க நான் துபாய்ல இருக்கேன், கோவில் பொருப்பு எல்லாம் எனக்கு எதுக்கு!

எக்ஸ்: அதனால என்ன நீங்க அங்க இருந்தா என்ன ரப்ரிதேவி ஆட்சி பண்னுங்க!

நான்:மனதுக்குள் (பூலாந்தேவிய போய் ரப்ரிதேவின்னு சொல்றாங்களே) சரி மார்ச் 30க்கு மீட்டிங் போட்டுடுங்க நான் ஷார்ப்பா மாலை 5க்கு வந்திடுவேன்!!

4.ஸ்கூல் HM: தொல்ஸ், நம்ம சீமாச்சு 20 நாள் முன்ன வந்த போது ஏதோ ஏர்கலப்பை பத்தி சொன்னார். நம்ம ஸ்கூல் ஸ்டாப்ஸ் எல்லாருக்கும் சொல்லி குடுத்துட்டு போப்பா!

நான்: அதுக்கு என்ன சார் சொல்லி குடுத்தா போச்சு! நம்மா ஸ்டாப்ஸ் எல்லாரையும் ஷார்ப்பா மார்ச் 30 க்கு காந்தி காக்காய் ஓர்ரும் இடத்துக்கு வர சொல்லிடுங்க!

ஸ்கூல் HM: ஓ நம்ம மீட்டிங் ஹாலா! வர சொல்லிட்டா போச்சு!

5.வீட்டுக்கு எதிர்ல உள்ள கிரவுண்டு பசங்க: அங்கிள், நாங்க நம்ம திருவள்ளுவர் நகர் கிரிக்கெட் டீம் vs ராஜேஸ்வரி நகர் டீம் மேட்ச் நடக்குது அங்கிள்,

நான்: சரி, யார் கேப்டன்!

பசங்க: நம்ம ராமசாமி தான்! அங்கிள், நீங்க தான் மேட்சுக்கு தலைமை தாங்கி நம்ம டீமுக்கு ஸ்டெம்ப், பேட், கிளவ்ஸ் எல்லாம் வாங்கி தரணும்ன்னு நாங்க முடிவு செஞ்சுட்டோம்!

நான்: அதல்லாம் வாங்கி தர்ரேன் ஆனா நம்ம நட்டுதான் கேப்டன் ஓக்கேவா!

பசங்க: அது எப்படி முடியும் அங்கிள்!

நான்: முடியும் பசங்களா! முடியும்!(படத்தை பார்க்கவும்)


சரி எப்போ மேட்ச்!

பசங்க: ஷார்ப்பா மார்ச் 30 மாலை 5க்கு நீங்க பரிசு தர்ரீங்க!

6.அம்மா: தம்பி! உன் கிட்ட கொஞ்சம் பேசனும்டா! நீ எப்போ ஃப்ரீ;

நான்: மார்ச் 30 மாலை 5க்கு நான் ரொம்ப ஃப்ரீமா உன் மடில படுத்துகிட்டே பேசலாம்!

7.நான்: சார் எப்படியிருக்கீங்க நான் அபிஅப்பா!

முத்துலெஷ்மிஅப்பா: தம்பி! எப்படி இருக்கீங்க! எப்போ வந்தீங்க, எப்போ வீட்டுக்கு வர்ரீங்க, ஆதிரையான் எப்படி இருக்கார்!(ஆதிரையான் முத்துலெஷ்மி அம்மா வச்ச பேர்)

நான்: நல்லா இருக்கேன்! பாப்பா, தம்பி, கூட்டிகிட்டு ஷார்ப்பா மார்ச் 30 மாலை 5க்கு வந்திடுவேன் சார்!

8.தங்கமணி: என்னங்க என் அக்கா பொண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்க வர்ராங்க எந்த தேதில வந்தா உங்களுக்கு சவுகரியமா இருக்கும்?

நான்: மார்ச் 30 மாலை 5 மணிக்கு நான் ஃப்ரீ

9.அபிபாப்பா: அப்பா என் பிரண்ட் மொஃபீனா வீட்டுக்கு போகனும் எப்போ போகலாம்! எங்க அப்பாதான் உலகத்திலேயே அழகு அப்பான்னு சொல்லிட்டேன்!

நான்: அதுக்கு என்னடா கண்ணு நான் மார்ச் 30 மாலை 5க்கு ரொம்ப ஃப்ரீ வந்துடலாம்!

10.திருவள்ளுவர் நகர் வாசிகள்: அபிஅப்பா! உங்களுக்காகத்தான் வெயிடிங்! நாம நெனச்ச மாதிரி இல்ல நம்ம கவுன்சிலர் மாங்கா மண்டி கிரவனன்! அநியாயத்துக்கு குடிச்சுட்டு அலப்பறை பண்றான். நாம நமக்கு நாமே திட்டத்துல சேர்ந்து ரோடு போடுவோம்!

நான்: ங்கொய்யால அவன் குடிக்கிறானா, நான் கேக்குறேன் அவனை! அவன் இப்ப எங்க இருக்கான்! சரி மார்ச் 30 மாலை 5க்கு மீட்டிங் போடுங்க, ஷார்ப்பா வந்திடுவேன்!
******************************************************
சந்திரசேகர்(அட்வகேட்): அபிஅப்பா, எப்ப வந்தீங்க! நம்ம பசங்க எல்லாம் உங்களை பார்க்க ஆசையா இருக்காங்க! எப்ப வர்ரீங்க!

நான்: சார் நான் வந்து……

சந்திரசேகர்: இல்ல சார்! நீங்க மார்ச் 30 ரொம்ப பிசி! போகட்டும்! நீங்க எப்போதும் போல உங்க நண்பர்கள் திருமணத்துக்கு செய்வது போல் இப்பவும் செய்யுங்க அபிஅப்பா! புண்ணியத்தை பரிசா கொடுப்பது நீங்க மட்டும் இல்லைன்னு இப்போ புரிஞ்சுகிகிட்டேன் உங்க சீனியர் உங்க சீமாச்சு அண்ணன் பதிவுகளை பார்த்து!

நான்: சார்! அய்யனார் கல்யாணத்துக்கு ஏப்ரல் 14 சாப்பாடு பின்ன என் பெரிய கூட்டத்தோட வந்து ஏப்ரல் 15 செம சாப்பாடு குசும்பன் என்கிற சரவணன் கல்யாணத்துக்கு!!! சார் நான் உங்களுக்கு கொடுத்த வாக்கை எப்பவாவது மீறி இருக்கேனா????????????????


டிஸ்கி:”அன்பகம்” செவிடு ஊமை குழந்தைகளும் நம் குழந்தைகளே!!!

27 comments:

  1. //ஸ்கூல் HM: தொல்ஸ், நம்ம சீமாச்சு 20 நாள் முன்ன வந்த போது ஏதோ ஏர்கலப்பை பத்தி சொன்னார். நம்ம ஸ்கூல் ஸ்டாப்ஸ் எல்லாருக்கும் சொல்லி குடுத்துட்டு போப்பா!//

    ம்

    நல்லா உழுது கொடுத்துட்டு வாங்க!!!!

    ReplyDelete
  2. //அபிஅப்பா! உங்களுக்காகத்தான் வெயிடிங்! நாம நெனச்ச மாதிரி இல்ல நம்ம கவுன்சிலர் மாங்கா மண்டி கிரவனன்! அநியாயத்துக்கு குடிச்சுட்டு அலப்பறை பண்றான். நாம நமக்கு நாமே திட்டத்துல சேர்ந்து ரோடு போடுவோம்!//

    நல்லா நா....றிய செலக்ட் பண்ணிப்புட்டு இப்ப இப்படி சொன்னா?
    நல்லா அனுபவீங்க! ராசாக்களே :))

    ReplyDelete
  3. /நான்: ங்கொய்யால அவன் குடிக்கிறானா, நான் கேக்குறேன் அவனை! //

    கேட்டா மட்டும் கொடுக்கவா போறான்!
    சரியான மொடாக்குடியன் அபி அப்பா!

    ReplyDelete
  4. //அன்பகம்” செவிடு ஊமை குழந்தைகளும் நம் குழந்தைகளே//

    மனம் மகிழும் வாழ்த்துக்களுடன்.......!!!

    ReplyDelete
  5. அண்ணே.. வாவ்! இந்த கவிதை சூப்பர்.. :))

    (இருங்க பதிவ படிச்சிட்டு வாரேன்)

    ReplyDelete
  6. 1 பாயிண்ட படிச்சா டூர் போனவங்க பாதில திரும்பி வந்து முதுகுல டின் கட்டப் போறாங்க.. உங்களுக்கு ரொம்பத்தான் தைரியம். :))

    ReplyDelete
  7. இது என்ன போன 10 வருஷத்து கணக்கா?
    ஹேவ் எ நைஸ் டைம்!

    ReplyDelete
  8. //ஆனா நான் சொன்ன சொல் தவற மாட்டேன் என உனக்கு நல்லாவே தெரியும்.//

    ஹஹ்ஹ்ஹா.. அய்யோ.. யப்பா..முடியலயே.. ஹாஹ்ஹ்ஹா

    ReplyDelete
  9. //எங்க அப்பாதான் உலகத்திலேயே அழகு அப்பான்னு சொல்லிட்டேன்//

    அபிஅப்பா வாயத் திறந்தா பொய் தான்னு நேத்துதான் ஒருத்தர் சொன்னார்.. பாப்பா நீயுமா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  10. இதெல்லாம் சொல்லித்தெரியணுமா??

    சரவணா இவர நம்ப முடியாதுய்யா ரூம் புக் பண்ணு

    ReplyDelete
  11. ஒரு மண்ணும் புரியல :((

    ReplyDelete
  12. நல்லவேளை கமல் தசாவதாரம் எடுத்தார். அதை தாண்டி எடுத்து இருந்தா அபி அப்பா இன்னும் என்னனென்ன அவதாரமெல்லாம் எடுப்பாரோ?

    ReplyDelete
  13. ////நான்:மனதுக்குள் (பூலாந்தேவிய போய் ரப்ரிதேவின்னு சொல்றாங்களே)////


    வீட்டுல பூரிக்கட்டை இருக்கான்னு செக் பண்ணிக்கோங்க.

    ReplyDelete
  14. ///தூள் கிளப்பிடலாம்.///

    இது என்ன தூள்? இந்த பழக்கம் வேற உண்டா?

    ReplyDelete
  15. ///நான்: என்னங்க நான் துபாய்ல இருக்கேன், கோவில் பொருப்பு எல்லாம் எனக்கு எதுக்கு!////


    பேர கொஞ்சம் லேசா மாத்திகிட்டு (அபி அப்பாசாமி) அருள்வாக்கு சொன்னா துபாய்ல சம்பாதிக்கிறத விட கூட தேத்திடலாம் தானே?

    ReplyDelete
  16. ///அபிபாப்பா: அப்பா என் பிரண்ட் மொஃபீனா வீட்டுக்கு போகனும் எப்போ போகலாம்! எங்க அப்பாதான் உலகத்திலேயே அழகு அப்பான்னு சொல்லிட்டேன்!////


    பாப்பாவுக்கும் பொய் சொல்ல கத்துகொடுத்துட்டீங்களா?

    ReplyDelete
  17. ////நான்: ங்கொய்யால அவன் குடிக்கிறானா, நான் கேக்குறேன் அவனை!////


    நீங்க என்ன கேட்பீங்கன்னு தெரியாதா? சரக்குல பாதிதானே?

    ReplyDelete
  18. ////நீங்க எப்போதும் போல உங்க நண்பர்கள் திருமணத்துக்கு செய்வது போல் இப்பவும் செய்யுங்க அபிஅப்பா! புண்ணியத்தை பரிசா கொடுப்பது நீங்க மட்டும் இல்லைன்னு இப்போ புரிஞ்சுகிகிட்டேன்////


    குசும்பரே உங்க திருமணத்திற்கு அபி அப்பா குடுக்கபோற பரிசு என்னன்னு தெரியுதா?

    ReplyDelete
  19. என்ன அபிஅப்பா..

    என்னை மாதிரியே ஊர்ல போயி இறங்கின உடனேயே.. ஸ்கூலுக்குப் போயாச்சா?

    நான் தான் ஈ-கலப்பை பத்தி சொல்லிட்டு வந்தேன். மறக்காமல் உங்களிடன் கேட்டிருக்காங்க போல இருக்கே..
    //ஸ்கூல் HM: தொல்ஸ், நம்ம சீமாச்சு 20 நாள் முன்ன வந்த போது ஏதோ ஏர்கலப்பை பத்தி சொன்னார். நம்ம ஸ்கூல் ஸ்டாப்ஸ் எல்லாருக்கும் சொல்லி குடுத்துட்டு போப்பா!
    //
    ஊருக்குப் போயிட்டு வந்து எழுத வேண்டியது நிறைய இருக்கு..

    எழுதறேன்.

    இராமபத்ரன் சார் புதுச்சேரியில் தான் இருக்கிறார். விஜயலஷ்மி டீச்சரிடம் கேட்டால் அட்ரஸ் கிடைக்கும், முடிந்தால் போய்ப்பாருங்கள்..

    நான் போய்ப் பார்த்தேன். போட்டோவுடன் பதிவு போடுகிறேன்..

    அன்புடன்
    சீமாச்சு..

    ReplyDelete
  20. அபிஅப்பா,
    நன்றி.. நம்ம புள்ளங்களை கவனித்துக் கொள்வதற்கு..

    அவர்கள் இறைவனின் குழந்தைகள்.. என் அன்பு அவர்களுக்கு எப்பொழுதும் உண்டு..

    //சந்திரசேகர்: இல்ல சார்! நீங்க மார்ச் 30 ரொம்ப பிசி! போகட்டும்! நீங்க எப்போதும் போல உங்க நண்பர்கள் திருமணத்துக்கு செய்வது போல் இப்பவும் செய்யுங்க அபிஅப்பா! புண்ணியத்தை பரிசா கொடுப்பது நீங்க மட்டும் இல்லைன்னு இப்போ புரிஞ்சுகிகிட்டேன் உங்க சீனியர் உங்க சீமாச்சு அண்ணன் பதிவுகளை பார்த்து!

    நான்: சார்! அய்யனார் கல்யாணத்துக்கு ஏப்ரல் 14 சாப்பாடு பின்ன என் பெரிய கூட்டத்தோட வந்து ஏப்ரல் 15 செம சாப்பாடு குசும்பன் என்கிற சரவணன் கல்யாணத்துக்கு!!!..//


    அன்புடன்
    சீமாச்சு...

    ReplyDelete
  21. //மங்களூர் சிவாவுக்கும், பொடியன் சஞ்சய்க்கும் எனக்கும் ஓர சீட் தான்//

    அண்ணா.. நீங்க ரொம்ப நல்லவருங்ணா. :)).. சரி இத எதுக்கு ஜெயந்தி கிட்ட சொல்றிங்க? அதுக்கு நீங்களே பெட்டர்னு கவிதாயினி காயத்ரி சொன்னாங்க.. :P

    ......

    இவ்வளவு அளப்பறை பண்ணத பாத்து இவரூ எங்கயுமே பொகலைனு யாரும் நெனைச்சிடாதிங்க. சென்னைல பதிவர்கள் சந்திப்புல மட்டும் கலந்துகிட்டார்.

    .... அண்ணே.. கடைசி வரைக்கும் அந்த 5 லிட்டர் கேன் யார் கண்லயும் காட்டலையாமே... கேகக்வே ரொம்ப சந்தோஷமா இருக்கு... பின்ன... ஏப்ரல் 15 இரவு தேவை படுதுல.. :P

    ReplyDelete
  22. ஏ மக்கா இவர நம்பி நாம அவர் வீட்டுக்கு போறோம் என்ன நடக்கபோகுதோ....

    ReplyDelete
  23. மனுசனாய்யா நீர் எல்லாம்?!

    கடுக்காய் கொடுக்கறதுன்னா என்னன்னு உம்மைத்தான் கேக்கனும்!

    எங்களை ஏமாத்துன பாவத்தை கழுவ உம்ம கல்லூரிகால (குறிப்பா புள்ளைங்களுக்கு கொடுத்த ) கடுக்காய்களை பத்தி ஒரு பதிவு போடும் ஓய்!

    ReplyDelete
  24. அபி அப்பா இந்த பத்து ரோலுக்கும் ஹீரோயின் செலக்ட் பண்ணிட்டீங்களா?
    கமல் சார் கிட்ட கேக்கட்டுமா?என்ன தீபா வெங்கட் போதுமா?பத்து ரோல்லேயும் அதுவேவா?
    அப்ப கிருஷ்ணா?நஹி யா......என்ன அம்மா ரோலா?...அதுசரி இப்பமே கதை அப்படித்தான் இருக்கு.அது இல்லாட்டி நீரு எங்க உருப்படறது?

    ReplyDelete
  25. அபி குட்டி பொய் சொல்ற வாய்க்கு போஜனம் கிடைக்காதுன்னு உனக்கு தெரியாதா?ஓஹோ அழுக்கு அப்பானு சொல்ல நெனச்சி டங் ஸிலிப்பா....அதானே பார்த்தேன்.பாப்பா சுட்டியாச்சே

    ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))