காலையில் எழுந்ததும் ஆட்டுக்கால் சூப், இரவினில் ஆப்பில் ஜூஸ் என்றெல்லாம் பொய் சொல்ல மாட்டேன். ஆனாலும் பாப்பாவின் குமட்டில் குத்தி குத்தி ஊட்டிவிட்டதின் மீதி இட்லிகள் அருமையாக இருக்கின்றது.
மயிலாடுதுறை புது பேருந்து நிலையத்தை மாயூரநாதர் அருகே அமைக்கலாமா அல்லது ரங்கநாதர் அருகே அமைக்கலாமா என்னும் சிவ வைஷ்ணவ சண்டை ஒரு மாமாங்கமா இப்பவும் தொடர்கிறது. அனேகமாக மாயூரநாதர் ஜெயிக்கலாம் போல இருக்கு இந்த தடவை. ஆனா தோற்க போவது என்னவோ மயிலாடுதுறை மக்களே! குரளி வித்தைகார அரசியல்வியாதிகள் கடைசிவரை பாம்புக்கும் கீரிக்கும் சண்டை விடப்போவதில்லை.
எண்ணிப்பார்க்கையில் அப்படி என்ன குறை பழைய பேருந்து நிலையத்துக்கு! நீர் அடைப்பு வியாதி உள்ளவனைக்கூட நேர்ந்துகிட்டு அழைச்சிட்டு வாங்க எங்க பேருந்து நிலையத்துக்கு, சும்மா பன்னீர் மாதிரி போகும். அப்படி ஒரு ராசி. நான் கூட வீட்டில் நாலு தடவை போயிட்டு வெளியூர் போக பஸ்ஸ்டாண்டு வந்தா ஆசை தீர ஒரு தரத்துக்கு போயிட்டு தான் போவேன். துபாய் ரிட்டர்னா இருந்தா என்ன எல்லே ராம் சார் மாதிரி அமரிக்கா ரிட்டர்னா இருந்தா என்ன அவரும் சென்னையிலிருந்து அடக்கிகிட்டே வந்து பஸ்ஸ்டாண்டில் பப்ளிக்கா போனாத்தான் நல்லத்துகுடிக்கே போக மனசு வரும்.
"லாஸ்ட்டே ஈஸ் அ ஹேப்பி டே" ன்னு சொல்லிகிட்டு சட்டையில் இங் அடிச்சிக்கும் எங்க மூதாதையரின் பழக்கத்தை பள்ளிகூடங்களில் எங்கள் வாரிசுகள் இன்னும் கட்டி பேணி காப்பாற்றி வருகிறார்கள் என்பது மனதுக்கு சந்தோஷமாக இருக்கின்றது.
இப்பவும் AVC பசங்களும் ஞானாம்பிகை புள்ளைங்களும் இறுதியாண்டுக்கு பாடம் படிக்கிறாங்களோ இல்லியோ “பாடித்திரிந்த பறவைகளே” சாதகம் பண்றாங்க.
கல்லூரியின் கடைசி நாளுக்கு இப்பவும் எங்கள் தாவணி ஸாரி சுடிதார் தேவதைகள் தங்கள் அம்மாவின் பட்டு புடவையை கடனாக வாங்கி போர்த்தி கொண்டு போகிறார்கள்.
குவாலிஸ்\ஸ்கார்ப்பியோக்களிள் ப.சிதம்பரம் காஸ்ட்டியூமில் இரு புருவத்துக்கு நடுவில் கரும் சிவப்பு குங்குமம் வைத்து கொண்டு இடது முழங்கையை கார் கதவில் வைத்து கொண்டு சென்னை ரவுடி மாதிரி இல்லாம ஜெண்டிலா ஒத்தை லாங் செயின் போட்டுகிட்டு குட்டி குட்டி தாதாக்கள் மயிலாடுதுறையை வலம் வருவது கண் கொள்ளா காட்சி. எங்க ஊர் பக்கம் வர்ரவங்க தவற விடாமல் பார்க்க கூடிய காட்சிகளில் இது முக்கியமானது. காரில் முன்னும் பின்னும் அவர்களின் பெயர் கண்டிப்பாக தசன் ஸ்டிக்கர்சில் அடித்து ஒட்டப்பட்டிருக்கும்.(மதுரை மீனாட்சி, மருவத்தூர் அல்லது மயிலாடுதுறை அவயாம்பிகை குங்குமம் மட்டுமே அப்படி ஒரு கரும் சிவப்பாக இருக்கும் என்பது உபரி செய்தி)
அவர்கள் காரில் உள்ளே அமர்ந்து கும்பிடு போடும் அழகே தனி. ஆக்ஷன்கிங் அர்ஜூன் மாதிரி தோள்களை விரித்தே வைத்திருப்பர். மருவத்தூர் “அம்மா” மாதிரி தொப்பை விழுந்த வயிற்றின் மேலே இரு கைகளையும் கொண்டு வந்து இரண்டு நடு விரல்கள் மாத்திரம் தொட்டு கொள்ளும் படியாக ஒரு கும்பிடு போடுவது மயிலாடுதுறையின் சிறப்பம்சங்களில் ஒன்று.ஆனால் இவர்கள் எல்லாம் நான் திண்ணையை பிடித்து நடக்கும் போது என் சுண்டுவிரலை பிடித்து நடந்தவர்கள். என்னை பார்த்து ரோட்டில் ஒரு தாதா கேட்டுச்சு “அண்ணே துபாய்ல ஆட்சி எல்லாம் எப்படி நடக்குது, நீங்க அங்கே என்ன பண்றீங்க?” எனக்கு வந்த பீறிட்டு கிளம்பிய ஆனந்தத்தை அடக்கிகிட்டே “நான் அல்கூஸ் வார்டு மாவட்ட பிரதிநிதியா இருக்கேன், கவுன்சிலர் கூட நம்ம பயதான்”ன்னு சொல்லி வச்சேன். அட பாழாப்போன கம்மனாட்டிங்களா!
இலவச வண்ண தொலைக்காட்சிக்காக ஒரு நாள் மதியம் நான் தூங்கிகிட்டு இருக்கும் போது வந்து பெயர் எழுதிகிட்டு போனாங்க. பாப்பா தான் அந்த அரசு ஊழியர்களிடம் பேசினாள்.
ஊழியர்: பாப்பா உங்க வீட்டிலே டி.வி இருக்கா?
பாப்பா: இருங்க நீக்க என்ன கேக்கறிங்கன்னு காதிலே விழலை. டி.வியை ஆஃப் பண்ணிட்டு வர்றேன்.
(அதற்குள் அந்த ஊழியர்கள்”பாருங்க இந்த பாப்பா வந்து டி வி இல்லைன்னு சொல்லும்”ன்னு பேசிகிட்டாங்க)
பாப்பா: இப்ப கேளுங்க என்ன வேணும்?
ஊழியர்கள்: பாப்பா உங்க வீட்டிலே டி வி இருக்கா”
பாப்பா: ம் இருக்கே, ஹால்ல 29’’ இருக்கு, மாடில 14’’ இருக்கு ஆனா டி வி இல்லன்னு எழுதிட்டு போங்க ஏன்னா கீழ் ரூம்ல எதுவும் இல்ல!
திஸ்கி: இன்னும் தொடரும். இந்த பதிவிலே எனக்கே தெரியாமல் அரசியல் புகுந்துடுச்சு! ஆனா அடுத்த பதிவிலே இன்னும் சுவாரஸ்யமான நாட்குறிப்புகள் சென்னை வலைப்பதிவர் சந்திப்புகள் உள்ளடக்கிய செய்திகளோடு!!!!
///“நான் அல்கூஸ் வார்டு மாவட்ட பிரதிநிதியா இருக்கேன், கவுன்சிலர் கூட நம்ம பயதான்”ன்னு சொல்லி வச்சேன். /////
ReplyDeleteஅப்ப அடுத்த கவுன்சிலர் அபிஅப்பா தானா?
///பாப்பா: ம் இருக்கே, ஹால்ல 29’’ இருக்கு, மாடில 14’’ இருக்கு ஆனா டி வி இல்லன்னு எழுதிட்டு போங்க ஏன்னா கீழ் ரூம்ல எதுவும் இல்ல!///
ReplyDeleteஎன்ன இருந்தாலும் அபிபாப்பா அப்பாவை விட புத்திசாலினு நிரூபிச்சிடுது
///பாப்பாவின் குமட்டில் குத்தி குத்தி ஊட்டிவிட்டதின் ///
ReplyDeleteஇதை சங்கம் கடுமையாக கண்டிக்கிறது.
//ஆனால் இவர்கள் எல்லாம் நான் திண்ணையை பிடித்து நடக்கும் போது என் சுண்டுவிரலை பிடித்து நடந்தவர்கள். என்னை பார்த்து ரோட்டில் ஒரு தாதா கேட்டுச்சு “அண்ணே துபாய்ல ஆட்சி எல்லாம் எப்படி நடக்குது, நீங்க அங்கே என்ன பண்றீங்க?” //
ReplyDeleteஉண்மைய செல்லிடாதீங்க.
இருங்க மேல படிச்சுட்டு வர்ரேன்.
ஓசி டிவி வெடிக்குதாம் பாத்து அபி அப்பா....
ReplyDelete//காலையில் எழுந்ததும் ஆட்டுக்கால் சூப், இரவினில் ஆப்பில் ஜூஸ் என்றெல்லாம் பொய் சொல்ல மாட்டேன். //
ReplyDeleteசொன்னாலும் நம்ப மாட்டோம்.
பாப்பா சரியாத்தான் சொல்லி இருக்கா.
ReplyDelete//Your comment has been saved and will be visible after blog owner approval. //
ReplyDeleteஎன்ன இப்பிடி வருது.
மனசுக்கு சந்தோஷமா இருக்கு :)))
ReplyDeleteநம்ம ஊரப்பத்தி கேட்கறச்ச!!!
கன்டினியூ
கன்டினியூ
//மருவத்தூர் “அம்மா” மாதிரி தொப்பை விழுந்த வயிற்றின் மேலே இரு கைகளையும் கொண்டு வந்து இரண்டு நடு விரல்கள் மாத்திரம் தொட்டு கொள்ளும் படியாக ஒரு கும்பிடு போடுவது//
ReplyDeleteஇருல நாள கழிச்சு வூட்டுக்கு வர்ரேன்.
நான் ஆத்தாவ கும்புடுறதையா கேலிசெய்யுறவ.
//தாதா கேட்டுச்சு “அண்ணே துபாய்ல ஆட்சி எல்லாம் எப்படி நடக்குது, நீங்க அங்கே என்ன பண்றீங்க?” எனக்கு வந்த பீறிட்டு கிளம்பிய ஆனந்தத்தை அடக்கிகிட்டே “நான் அல்கூஸ் வார்டு மாவட்ட பிரதிநிதியா இருக்கேன், கவுன்சிலர் கூட நம்ம பயதான்”ன்னு சொல்லி வச்சேன். அட பாழாப்போன கம்மனாட்டிங்களா!//
ReplyDeleteஅண்ணே.. நம்ம ஊர்காரவுக இம்புட்டு வெவரமா.. புல்லரிக்கிதுணே.. :P
---
//குவாலிஸ்\ஸ்கார்ப்பியோக்களிள் ப.சிதம்பரம் காஸ்ட்டியூமில் இரு புருவத்துக்கு நடுவில் கரும் சிவப்பு குங்குமம் வைத்து கொண்டு இடது முழங்கையை கார் கதவில் வைத்து கொண்டு சென்னை ரவுடி மாதிரி இல்லாம ஜெண்டிலா ஒத்தை லாங் செயின் போட்டுகிட்டு குட்டி குட்டி தாதாக்கள் மயிலாடுதுறையை வலம் வருவது கண் கொள்ளா காட்சி. எங்க ஊர் பக்கம் வர்ரவங்க தவற விடாமல் பார்க்க கூடிய காட்சிகளில் இது முக்கியமானது//
அண்ணே.. ஏப்ரல் 15, 16 அவங்கள ஊரை விட்டு போய்ட சொல்லுங்க... அன்னைக்கும் இதே கெட்டப்புல இருந்தாங்கன்னா..அப்புறம் எதுனா கொல கேசு ஆய்ட போகுது.. :)
--------
//பாப்பா: ம் இருக்கே, ஹால்ல 29’’ இருக்கு, மாடில 14’’ இருக்கு ஆனா டி வி இல்லன்னு எழுதிட்டு போங்க ஏன்னா கீழ் ரூம்ல எதுவும் இல்ல!//
அய்யய்யோ.. 2 நாளைக்கு இந்த குடும்பத்து கூட இருக்கனுமே... :((
//அனேகமாக மாயூரநாதர் ஜெயிக்கலாம் போல இருக்கு இந்த தடவை.
ReplyDeleteஹய் அப்ப ஜாலிதான் :))
///நான் கூட வீட்டில் நாலு தடவை போயிட்டு வெளியூர் போக பஸ்ஸ்டாண்டு வந்தா ஆசை தீர ஒரு தரத்துக்கு போயிட்டு தான் போவேன்//
ReplyDeleteநானும்தான்!
நானும்தான் :))
//கல்லூரியின் கடைசி நாளுக்கு இப்பவும் எங்கள் தாவணி ஸாரி சுடிதார் தேவதைகள் தங்கள் அம்மாவின் பட்டு புடவையை கடனாக வாங்கி போர்த்தி கொண்டு போகிறார்கள்.
ReplyDelete//
:))))))))))))))))) (ரவுண்ட்ஸ் போய் வந்தாச்சு!)
//இரு புருவத்துக்கு நடுவில் கரும் சிவப்பு குங்குமம் வைத்து கொண்டு இடது முழங்கையை கார் கதவில் வைத்து கொண்டு //
ReplyDeleteநான் கூட அந்த சரவணன் கிட்ட கேட்டேன் என்னாடா இதெல்லாம் சின்னவயசுல பொட்டப்புள்ள மாதிரி தலைக்கு பூ வைச்சுக்கிட்டு சுத்தினத மறந்துட்டியா ராசான்னு? அதுக்கு அவன் எப்டியே ரவுடியா ஃப்ர்ர்ம் ஆயிட்டோம்ல விட்டுதள்ளுப்பாங்கறான்!
அது சிம்பலாமாம்
//காரில் முன்னும் பின்னும் அவர்களின் பெயர் கண்டிப்பாக தசன் ஸ்டிக்கர்சில் அடித்து ஒட்டப்பட்டிருக்கும்.(/
ReplyDeleteமுதல்ல அந்த தசன அடிக்கணும் அண்ணாத்தே கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாம ஸ்டிக்கர் அடிக்கறாரு!
//இவர்கள் எல்லாம் நான் திண்ணையை பிடித்து நடக்கும் போது என் சுண்டுவிரலை பிடித்து நடந்தவர்கள். //
ReplyDeleteஇப்படியா சொல்லுவீஙக நீங்க..???
அடுத்த பார்ட்டுக்கு ரெடி அண்ணே!
ReplyDeleteபின்னுங்க! அப்டியே பிங்குங்க :))
//அய்யய்யோ.. 2 நாளைக்கு இந்த குடும்பத்து கூட இருக்கனுமே... :((//
ReplyDeleteடூ சஞ்ஜெய்
அபி அப்பாவோட, அபிதான் செம நக்கலு பார்ட்டீ!
என்ஜாய்! (நட்டு பத்தி தெரியலப்பா நான் போனப்ப அவன் தூங்கிகிட்டிருந்தான்!)
/
ReplyDeleteகண்மணி said...
ஓசி டிவி வெடிக்குதாம் பாத்து அபி அப்பா....
/
ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்
/
ReplyDeleteஜே கே | J K said...
//காலையில் எழுந்ததும் ஆட்டுக்கால் சூப், இரவினில் ஆப்பில் ஜூஸ் என்றெல்லாம் பொய் சொல்ல மாட்டேன். //
சொன்னாலும் நம்ப மாட்டோம்.
/
ஹாஹா
இதுக்கும் ஒரு ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்
அபிஅப்பா இடையில் ஒரு பழமொழிய கொஞ்சம் மாத்தி சொல்லிட்ட மாதிரி தெரியுதே??? :P
ReplyDelete////எண்ணிப்பார்க்கையில் அப்படி என்ன குறை பழைய பேருந்து நிலையத்துக்கு! நீர் அடைப்பு வியாதி உள்ளவனைக்கூட நேர்ந்துகிட்டு அழைச்சிட்டு வாங்க எங்க பேருந்து நிலையத்துக்கு, சும்மா பன்னீர் மாதிரி போகும். அப்படி ஒரு ராசி. நான் கூட வீட்டில் நாலு தடவை போயிட்டு வெளியூர் போக பஸ்ஸ்டாண்டு வந்தா ஆசை தீர ஒரு தரத்துக்கு போயிட்டு தான் போவேன். ////
ReplyDeleteசரியா சொன்னீங்க அபி அப்பா. நாங்களும் பலதடவ அங்கன போய் இருக்கோம்ல.
\\SanJai said... அய்யய்யோ.. 2 நாளைக்கு இந்த குடும்பத்து கூட இருக்கனுமே... :((//
ReplyDeleteஆமா ரொம்ப கவனம் அதும் பாப்பாக்கிட்ட கவனமா பேசுங்க.. :))
ம்ம்..அடுத்து ! ;))
ReplyDeleteம்ம்..அடுத்து ! ;))
ReplyDelete/////பாப்பாவின் குமட்டில் குத்தி குத்தி ஊட்டிவிட்டதின் ///
ReplyDeleteஇதை வன்மையாக கண்டிக்கிறோம்:)))))
பரவாயில்லையே, அபி அம்மா பதிவெல்லாம் எழுத விட்டுட்டாங்களா? தொலைபேசும்போது சொல்லி இருக்கணும் நான், அப்படி லூசா விடாதீங்கனு மறந்துட்டேன்/ :P
ReplyDelete////கீதா சாம்பசிவம் said...
ReplyDeleteபரவாயில்லையே, அபி அம்மா பதிவெல்லாம் எழுத விட்டுட்டாங்களா? தொலைபேசும்போது சொல்லி இருக்கணும் நான், அப்படி லூசா விடாதீங்கனு மறந்துட்டேன்/ :ப்//
அல்ரெடி அப்டி இருக்கறவரை லூசா விடாதீங்கன்னு அவங்ககிட்ட எப்படி சொல்லறது.. :)))//
//தோற்க போவது என்னவோ மயிலாடுதுறை மக்களே! //
ReplyDeleteதெரிஞ்ச விஷயம்தான் ))
//எண்ணிப்பார்க்கையில் அப்படி என்ன குறை பழைய பேருந்து நிலையத்துக்கு! நீர் அடைப்பு வியாதி உள்ளவனைக்கூட நேர்ந்துகிட்டு அழைச்சிட்டு வாங்க எங்க பேருந்து நிலையத்துக்கு, சும்மா பன்னீர் மாதிரி போகும். அப்படி ஒரு ராசி. நான் கூட வீட்டில் நாலு தடவை போயிட்டு வெளியூர் போக பஸ்ஸ்டாண்டு வந்தா ஆசை தீர ஒரு தரத்துக்கு போயிட்டு தான் போவேன். துபாய் ரிட்டர்னா இருந்தா என்ன எல்லே ராம் சார் மாதிரி அமரிக்கா ரிட்டர்னா இருந்தா என்ன அவரும் சென்னையிலிருந்து அடக்கிகிட்டே வந்து பஸ்ஸ்டாண்டில் பப்ளிக்கா போனாத்தான் நல்லத்துகுடிக்கே போக மனசு வரும்.
ReplyDelete//
மூக்க பொத்திக்கற மேட்டர எழுதறப்ப கண்ணு கட்டிக்கிட்டீங்களா :(
//சென்ஷி said...
ReplyDelete////கீதா சாம்பசிவம் said...
பரவாயில்லையே, அபி அம்மா பதிவெல்லாம் எழுத விட்டுட்டாங்களா? தொலைபேசும்போது சொல்லி இருக்கணும் நான், அப்படி லூசா விடாதீங்கனு மறந்துட்டேன்/ :ப்//
அல்ரெடி அப்டி இருக்கறவரை லூசா விடாதீங்கன்னு அவங்ககிட்ட எப்படி சொல்லறது.. )//
///
:))))))))))))