பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

April 20, 2008

தமிழ்நாட்டில் ஞாயிறுன்னா "ரெண்டு".. வ.வா.ச போட்டிக்கு என் "ரெண்டாவது" பதிவு!!!!

நான் ஏற்கனவே "துபாய்ல வெள்ளின்னா ரெண்டு"ன்னு ஒரு பதிவு போட்டேன். ஆனா அது வ.வா.ச போட்டிக்கு எடுத்துக்க மாட்டாங்களாம். எனக்கோ ரொம்ப வறட்சி இப்போ. நகைச்சுவையே கண்ணிலே தென்பட மாட்டங்குது. ஆனா "ரெண்டு" போட்டிக்கு "ரெண்டு" பதிவாவது போடலைன்னா அது நமக்கு அசிங்கமா போயிடும். மதியம் ஒரு பதிவு போட்டாச்சு. ஆக இது "ரெண்டாவது" பதிவு இன்னிக்கு.

பதிவு புடிக்க போகலாம்ன்னு எல்லா இடத்திலும் இன்னிக்கு சுத்தின போது தான் இது கன்ணிலே பட்டுச்சு. நான் சத்தியமா இதை "நகைச்சுவை\நையாண்டி"ல தான் வகைப்படுத்த போறேன். சிரிப்பு வந்தா ஒரு பின்னூட்டம் போடுங்க.

நம்ம ஊர் பாசக்கார பயபுள்ளைங்க சிரிக்காம அடிப்பானுங்க சோக்கு. கிட்ட தட்ட இதுவும் அந்த வகையிலே சேர்த்து கோங்க! நான் பார்த்த ஒரு பஸ்ட்டாண்டு விளம்பரம் இது! மேலே படிங்க.

********************************************************************************

___________________ சித்த வைத்திய சாலை.
___________________தெரு

மயிலாடுதுறை.

குறிப்புகள்: 1. எங்களிடம் கீழ்கண்ட வியாதிகளை மட்டுமே குணப்படுத்த முடியும்.

2. மொத்தமாகவே "இரண்டு" வேளை மட்டுமே மருந்து கொடுக்கப்படும்.

3. கண்டிப்பாக "இரண்டு" நாட்களில் குணமாகிவிடும்

4. முற்றிய நிலையில் உள்ள கேன்சர், மற்றும் HIV என்கிற எய்ட்ஸ் ஆகிய "இரண்டு" நோய்க்கு மட்டும் "இரண்டு" வேளை பத்தியம் இருக்க வேண்டும். அதுவும் "இரண்டு" மணி நேரம் மட்டும் இருந்தால் போதுமானது.

5. வேலை நேரம் மதியம் "இரண்டு" முதல் இரவு "இரண்டு" வரை. (ஆனால் அவசரம் என நீங்கள் கருதினால் காலை "இரண்டு" முதல் மதியம் 'இரண்டு" வரை பார்க்கப்படும்.

6. வார்த்தின் "இரண்டாம்" கிழமையான செவ்வாய் விடுமுறை. ஆனால் அதுவும் அவசரம் எனில் கடைபிடிக்க மாட்டாது. ஏனனில் நாங்க "இரண்டாம்" தர மருத்துவர்கள் இல்லை.

7. எங்களுக்கு இதே ஊரில் "இரண்டு' கிளைகள் மட்டுமே உள்ளது. மற்றவை போலிகள்.

8. மீண்டும் சொல்கிறோம். கீழ் கண்ட வியாதிகள் தவிர எங்களுக்கு வேறு வியாதிகளுக்கான வைத்தியம் தெரியாது என்பதை பணிவன்புடன் கூறிகொள்கிறோம்!

அனைத்துவகை முற்றிய புற்று நோய்கள், உள்மூலம், வெளிமூலம், பௌத்திரம், வெண்குஷ்டம், வென்புள்ளி,முகத்தில் அரிப்பு,அதனால் ஏற்படும் கருப்பு, முகத்தில் உள்ள சுருக்கம், உதட்டில் வெள்ளை, உதட்டில் வெடிப்பு, உதட்டில் கருப்பு,வாய்ப்புண், கடைவாய் வேக்காளம், தலையில் பூச்சு வெட்டு, தலையில் அரிப்பு, பொடுகு, முடி உதிர்தல், பித்த நரை,இள நரை,பேன்கள், மண்டை கரப்பான்,முடிவளர்தல், முகப்பரு, தேமல்,தலைவலி,பல்வலி,சளி ஆகியவைகளும்,

படை,கக்கூஸ்படை, கவுட்டியில் உள்ள அரிப்பு,பெண்கள் இடுப்புகடி,ஆண்\பெண் சம்மந்தப்பட்ட வியாதிகள்,உடல் பூராவும் பொத்து வடிதல், உடல் முழுதும் தோல் உரிதல்,செதில் நோய், சொறியாஸ்,மற்றும் கை கால் அரிப்பு,வெடிப்பு,வியர்வை அதிகம் ஏற்பட்டு கை,காலில் நீர் வடிதல், காலில் ஆணிகள்,முள் ஆணிகள்,நீர் ஆணிகள், நெஞ்சு வலி,வயிற்று வலி,இருமல்,ஆஸ்துமா,டி.பி,சர்கரை வியாதி,இரத்த கொதிப்பு,காக்காய் வலிப்பு,நரம்பு தளர்ச்சி, கை, கால் குடைச்சல், கழுத்துவலி, புரடி வலி,முதுகுவலி, இடுப்பு வலி, வெட்டைசூடு, வெள்ளை படுதல்,கனைச்சூடு,பசியின்மை, பக்கவாதம், நரிதலை வாய்வு,மூட்டுவலி,உடலில் உஷ்ணம், உடலில் எரிச்சல், குடல் புண். தீப்புண், செப்டிக் ஆன புண், மர்மமான இடத்தில் உள்ள எரிச்சல்\அரிப்பு, காதில் அரிப்பு,காதில் சீழ் வடிதல், கருமேகம், செவ்வட்டைகடி,இரத்த சோகை,மேக நீர்,நகத்தில் உள்ள சொத்தை மற்றும் முக பொலிவு பெற, இவைகள் தவிர

பருமனான உடல் இளைப்பதற்க்கும், மெலிந்த உடல் பருமனாவதற்க்கும், இரவில் விந்து வெளியாவதற்கும்,ஒற்றை தலைவலி,அறிவு வளர்ச்சி,ஞாபக சக்தி,கால்வீக்கம், நீர் அடைப்பு, விரைவீக்கம்,சிறுநீரகம் சம்மந்தமான அனைத்து டைப்புகளும், மஞ்சள் காமாலை,குழந்தையின்மை,பூச்சிகடி,கொழுப்புகட்டி,நரம்புகட்டி,கால்வீக்கம் ஆகியவையும் இரண்டே நாளில் சரி செய்யப்படும்.

அது தவிர நாங்க முற்றிய நிலை கேன்சர்,HIV எனப்படும் எய்ட்ஸ் ஆகியவற்றை "இரண்டு' நாளில் சரி செய்திடுவோம்.

கீழ்குறிப்பு: மேற் கண்ட வியாதிகள் தவிர வேறு எதற்கும் இங்கு வைத்தியம் செய்ய இயலாது என்பதை மிகுந்த தன்னடக்கத்துடன் சொல்லி கொள்கிறோம்!!

****************************************************************

சங்கத்து சிங்கங்களா போதுமா "ரெண்டு" இல்ல இன்னும் கொஞ்சம் வேணுமா!



5.

29 comments:

  1. நாட்டுவைத்தியன்கிட்டயிருந்து சுட்டுக்கிட்டு வந்த பிட் பேப்பர வைச்சு கலாட்டா செஞ்சுக்கிட்டிருக்குற நம்ம அபி அப்பாவுக்கு எல்லாரும் ரெண்டு போடுவோம் வாங்க...

    அட.. பொன்னாடைய சொன்னேங்க:)))))

    ReplyDelete
  2. //ஆனா "ரெண்டு" போட்டிக்கு "ரெண்டு" பதிவாவது போடலைன்னா அது நமக்கு அசிங்கமா போயிடும். மதியம் ஒரு பதிவு போட்டாச்சு. ஆக இது "ரெண்டாவது" பதிவு இன்னிக்கு.//

    அபி அப்பா..கவலைப்படாதிங்க..:)))))

    அதிகமா ரெண்டை உபயோகப் படுத்தியிருக்கோம்ன்னு சொல்லி பரிசை தட்டிக்கிட்டு வந்திருவோம்.:))

    ReplyDelete
  3. //2. மொத்தமாகவே "இரண்டு" வேளை மட்டுமே மருந்து கொடுக்கப்படும்.

    3. கண்டிப்பாக "இரண்டு" நாட்களில் குணமாகிவிடும்//

    கட்டணம் 2 ரூபாயா இருக்குமோ?

    ReplyDelete
  4. //அது தவிர நாங்க முற்றிய நிலை கேன்சர்,HIV எனப்படும் எய்ட்ஸ் ஆகியவற்றை "இரண்டு' நாளில் சரி செய்திடுவோம்.//

    அதெல்லாம் ஓகே.. ஆளு இருந்தாத் தானே. :P

    ReplyDelete
  5. //சங்கத்து சிங்கங்களா போதுமா "ரெண்டு" இல்ல இன்னும் கொஞ்சம் வேணுமா!/./

    ஏனுங்க மாம்ஸ், இனி கனவுல கூட கேப்பாங்கங்கறிங்க?

    ReplyDelete
  6. /நாட்டுவைத்தியன்கிட்டயிருந்து சுட்டுக்கிட்டு வந்த பிட் பேப்பர வைச்சு கலாட்டா செஞ்சுக்கிட்டிருக்குற நம்ம அபி அப்பாவுக்கு எல்லாரும் ரெண்டு போடுவோம் வாங்க...

    அட.. பொன்னாடைய சொன்னேங்க/

    :)))))))))))))

    ReplyDelete
  7. இந்த பதிவில் தங்களுடைய சமூக அக்கறை நன்றாக தெரிகிறது. சித்த மருத்துவம் என்ற பெயரில் ஒரே மருந்தை அனைத்து வியாதிகளுக்கும் கொடுத்து ஏமாற்றுபவர்களை இனம் கண்டு கொண்டு கொள்ள வேண்டுமென்ற ஆதங்கம் புரிகின்றது. மக்களின் அறியாமையை பயன்படுத்தி காசு பிடுங்கும் இது போன்றவர்களை என்ன செய்யும் அரசாங்கம் என்ற எதிர்பார்ப்பும் தொடுத்து நிற்கின்றது....
    ///நான் சத்தியமா இதை "நகைச்சுவை\நையாண்டி"ல தான் வகைப்படுத்த போறேன். ///

    (இப்பதாம்ய்யா சந்தோசமா இருக்கு :)) :)) :)) )

    ReplyDelete
  8. அது தவிர நாங்க முற்றிய நிலை கேன்சர்,HIV எனப்படும் எய்ட்ஸ் ஆகியவற்றை "இரண்டு' நாளில் சரி செய்திடுவோம்.

    கீழ்குறிப்பு: மேற் கண்ட வியாதிகள் தவிர வேறு எதற்கும் இங்கு வைத்தியம் செய்ய இயலாது என்பதை மிகுந்த தன்னடக்கத்துடன் சொல்லி கொள்கிறோம்!!
    //
    இது என்ன!ஒன்றுக்கொன்று முரணா இருக்கே;)0

    ReplyDelete
  9. வாப்பா ரசிகா! பொன்னாடைக்கு பதிலா 2 பேண்ட் பிட் ரெமாந்த்ஸ் பிராண்டு வாங்கி போத்தினா சந்தோஷமா இருப்பேன்!

    ஆஹ பரிசு நமக்குத்தானா:-))

    ReplyDelete
  10. வாங்க திகழ்மளிர், வருகைக்கு நன்னி:-))

    ReplyDelete
  11. வாங்க தமிழ்பிரியன், நமக்கு எல்லாமே காமடித்தான்::-))

    ReplyDelete
  12. \\இது என்ன!ஒன்றுக்கொன்று முரணா இருக்கே;)0\\

    வாங்க வல்லிம்மா, இல்லிய்யே முரணா இல்லியே:-))

    ReplyDelete
  13. பெனாத்தலார் போட்ட ஒரு கமெண்ட் காக்கா தூக்கிட்டு போயிடுச்சு! அதனால அதை அப்படியே போடுகிறேன்.
    ************

    அரை x 4 = ரெண்டு ன்னு அபிஅம்மா ஒரு கணக்கு போட்டுகிட்டு இருக்காங்கலாமே:-))

    *********************

    பெனாத்தலாரே! வொய்ஃபாலஜியிலே நான் உங்க ஸ்டூடண்ட் நம்பர் 1 என உங்களுக்கே நல்லா தெரியுமே:-)))

    ReplyDelete
  14. பெங்களூர்ல இதே டயலாக்கை இங்க்லீபீஸ்ல அதுவும் தப்பு தப்பா எழுதி வெச்ருக்காங்க. :))

    என்ன கொடுமை சார் இது?

    ReplyDelete
  15. ////ரசிகன் said...
    நாட்டுவைத்தியன்கிட்டயிருந்து சுட்டுக்கிட்டு வந்த பிட் பேப்பர வைச்சு கலாட்டா செஞ்சுக்கிட்டிருக்குற நம்ம அபி அப்பாவுக்கு எல்லாரும் ரெண்டு போடுவோம் வாங்க...

    அட.. பொன்னாடைய சொன்னேங்க:)))))////


    ரிப்பீட்டேய்............

    ReplyDelete
  16. இவங்க கிட்ட மருந்து வாங்கி சாப்ப்டா இரண்டு நாளுல போய் சேர்ந்துடுவாங்கலாமே:)

    ReplyDelete
  17. ///சிரிப்பு வந்தா ஒரு பின்னூட்டம் போடுங்க.///



    நான் மூணு பின்னூட்டம் போட்டுருக்கேன்:(

    ReplyDelete
  18. அம்பி! அனேகமா அது இந்த "ரெண்டு" பிராஞ்சிலே ஒண்ணா இருக்கலாம் போல:-)))

    ReplyDelete
  19. //___________________ சித்த வைத்திய சாலை.
    ___________________தெரு

    //
    அபி அப்பா இதுலயே ஒண்ணு விட்டுப்போச்சு!

    அது இரட்டை தெருதான் :))))))

    ReplyDelete
  20. அதெல்லாம் சரி வாத்யார். நான் ப்ளாக் தொறந்து மொத்தமே ரெண்டு பதிவுதான் ஆகிக் கீது. நான் வாவாச போட்டில கல்ந்து கலாமான்னு பட்ச்சுட்டு சொல்லு தலீவா...

    இப்படிக்கு
    ஜாம்பஜார் ஜக்கு

    ReplyDelete
  21. நல்லா ரெண்டியிருக்கீங்க!

    :)

    ReplyDelete
  22. \\ரசிகன் said...
    நாட்டுவைத்தியன்கிட்டயிருந்து சுட்டுக்கிட்டு வந்த பிட் பேப்பர வைச்சு கலாட்டா செஞ்சுக்கிட்டிருக்குற நம்ம அபி அப்பாவுக்கு எல்லாரும் ரெண்டு போடுவோம் வாங்க...

    அட.. பொன்னாடைய சொன்னேங்க:)))))
    \\

    ரீப்பிட்டே ;)))

    ReplyDelete
  23. http://blogintamil.blogspot.com/2008/04/blog-post_25.html

    ReplyDelete
  24. அபிஅப்பா..

    கண்டிப்பா பரிசு உங்களுக்குத்தான் தரணும்.

    தரலைன்னா அந்த 'ரெண்டு' வியாதி தவிர மத்த அத்தனை வியாதியும் தேர்வுக்குழுக்காரங்க அல்லாருக்கும் தொத்திக்கும்னு சாபம் விடுறேன்..

    ReplyDelete
  25. நல்லா பிராண்டியிருக்கீங்க!!

    ReplyDelete
  26. யோவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்........

    சத்தியமா முடியலை.......

    விரைவில் உம்மை பத்திய பதிவு....

    தங்கள் அனுமதி வேண்டும்.....ப்ளீஸ்.....

    ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))