ஞாயிறோட ஞாயிறு இன்னிக்கோட எட்டு நாள் ஆச்சு, அந்த அமளி துமளி எல்லாம் நடந்து. நடுவே குசும்பன் கல்யாணம், நண்பர்கள் வருகை எல்லாம் இருந்ததால் என்னால் பகிர்ந்துக்க முடியலை அந்த வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வை. இன்னமும் காலம் தள்ளி போடுவது வரலாற்றுக்கு நான் இழைக்கும் அநீதி என கருதியே இப்போது பதிகிறேன்.
போன ஞாயிறு விடியகாலை ஏழரை மணிக்கே அராஜகமாக எழுப்பப்பட்டேன். "ஏழரை ஆச்சு எழுந்திருங்க"ன்னு சொன்ன போது எனக்கு தெரியாது ஏழரை என்பது மணி அல்ல சனி என்று. காலை குளித்து முடித்து வந்த பின்ன சாமி ரூமில் பார்த்தபோது ஒரு பித்தளை தட்டினிலே மூன்று தேங்காய்கள் மஞ்சள் குளிச்சு உக்காந்து இருந்துச்சு. சாதாரணமா மழையை தற்காலிகமாக நிறுத்த என் வீட்டில் செய்யும் கூத்து இது. இன்னிக்கு தான் நல்லா வெயில் அடிக்குதே பின் எதற்கு இந்த பில்டப்புன்னு நெனச்சுகிட்டே ஒரு வித மிரட்சியோட வந்தேன் சாப்பிட.
"பின்ன சாப்பிட்டுக்கலாம் முதல்ல போய் டிவி ரிப்பேர்காரனையும், கேபிள் காரனையும் கூட்டிகிட்டு வந்துடுங்க"ன்னு சொன்னப்பதான் பார்த்தேன், என்னிக்கும் இல்லாத அளவு பளிச்சுன்னு தெரிஞ்சுது டிவி. 'மகர ராசி நேயர்களே, விருச்சிக ராசி நேயருக்கு குறித்த நேரத்தில் சோறு போட்டா வாலை ஆட்டிகிட்டு சொன்ன வேலை செய்வார்"ன்னு தெளிவாத்தான் சொன்னார். பின்ன எதுக்கு டிவிகாரன், கேபிள்காரன் எல்லாம் என நினைத்து கொண்டே போய் கூப்பிட போயிட்டேன். ஏழரைக்கே எழுந்து நாலரையை எக்ஸ்ட்ராவாக இரண்டரை லிட்டர் வாங்கிகிட்டு 200 பீபரியையும் வாங்கிகிட்டு கேபிள்காரன், டிவி ரிப்பேர்காரனுடன் வீட்டுக்கு திரும்பும் போதே வீட்டில் அமளி ஆரம்பமாகிடுச்சு.
"ம் ...ம்..ஆமாம் ராத்திரி சரியா ராத்திரி ஏழரைக்கு தான் நிகழ்ச்சி, மறக்காம பார்த்துட்டு எனக்கு உங்க கருத்தை சொல்லனும். இல்லாட்டி நம்ம வீட்டுக்கு வந்துட்டா மிளகு அடையும், ஜவ்வரிசி கொழுக்கட்டயும் சாப்பிட்டுகிட்டே பார்க்கலாம், வச்சிடவா"ன்னு யார்கிட்டயோ தங்கமணி பேசிகிட்டு இருந்தாங்க. எனக்கு ஓரளவு புரிஞ்சாலும் சரி கேட்டுடுவோமேன்னு"என்ன ஏதாவது நிகழ்ச்சியா முக்கியமா"ன்னு கேட்டு வச்சேன்.
"தோ பாருங்க ஒரு தடவை தான் சொல்லுவேன். இன்னிக்கு ராத்திரி ஏழரைக்கு விஜய் டிவியிலே EQ2 ன்னு ஒரு நிகழ்ச்சி.அதை தான் ரொம்ப ஆர்வமா பார்க்க இந்த டிவிரிப்பேர்காரன், கேபிள் காரன் எல்லாம் கூட்டிகிட்டு வர சொன்னேன். இனிமே தொண தொணன்னு கேள்வி கேக்காம சொன்ன வேலை மட்டும் செய்யுங்க"ன்னு சொல்லிட்டு அடுத்த யாருக்கோ போன் போட்டு முன்ன பேசின அதே டயலாக்கை பேசினாங்க. டிவி தான் புதுசாச்சேன்னு கேட்டதுக்கு "இது சும்மா ஒரு ஜெனரல் செக்கப் தான், அந்த நேரத்துல சொதப்பிடகூடாதுல்ல அதான். அது போல கேபிள்காரனுக்கும் சொல்லிட்டேன். சாயந்திரம் நம்ம நகர்லயே தான் சுத்திகிட்டு இருக்கனும்ன்னு. தவிர மழை பெஞ்சா நம்ம டிவிக்குதான் வேர்த்து கொட்டுமே அதுக்காக பிள்ளையாருக்கு மஞ்சள் தேங்காய் வச்சாச்சு, தவிர மினி ஜென்செட் கூட அரேஞ்ச் பண்ணியாச்சு அக்காவீட்டிலிருந்து"ன்னு மின்னெச்சரிக்கை மினிம்மா பேசிகிட்டே போக எனக்கு ஆகா காலை ஏழரைக்கு ஆரம்பிச்ச ஏழரை இரவு ஏழரை வரை தொடர போகுதுன்னு மட்டும் தெளிவா புரிஞ்சுது.
இத்தனைக்கு பாப்பா கொஞ்சமும் அசராம மாடியிலே போய் போகோ டிவியில் கண்ணும் கருத்தமாவுமாக இருக்கவே நான் போய் "பாப்பா அப்படி என்ன நிகழ்ச்சி"ன்னு ஆர்வ மிகுதியிலே கேக்க அதுக்கு பாப்பா "அட சிம்பிள்ப்பா, நம்ம AVC Eng. College பசங்க EQ2 ன்னு ஒரு நிகழ்ச்சியிலே இன்னிக்கு கலந்துகறாங்க, நம்ம பிரியா அக்கா கூட அதிலே டேன்ஸ் ஆடுறாங்க, அதுக்கு தான் அம்மா இத்தனை அலப்பரை கொடுக்குறாங்க"ன்னு சொன்னா. நான் அதுக்கு "சரி அதிலே அம்மாவுக்கு என்ன ரோல், எல்லாம் காலேஜ் பசங்களாச்சே"ன்னு கேட்டதுக்கு பாப்பா "என்னப்பா அம்மா ரோல் தான் முக்கியமான ரோல், அம்மா இல்லாட்டி அவங்களுக்கு மானமே போயிருக்கும்"ன்னு சொல்ல நான் அப்படியே ஆகாசத்தில் பறந்தேன். நம்ம தங்கமணி மாத்திரம் டிவி நிகழ்ச்சி இயக்குனராயிட்டா அதை வச்சே பல பதிவு போடலாம். அவங்களை பேட்டி எடுத்து பத்து பாகமா போடலாம்ன்னு எல்லாம் நெனச்சுகிட்டு நானும் கூட மாட ஜவ்வரிசி அரைப்பதில் இருந்து மிளகு இடிச்சு தர்ர வரை எல்லாம் செஞ்சு ஏகப்பட்ட சபாஷ் வாங்கினேன்.
நேரம் ஆக ஆக தங்கமணி முகத்திலே ஒரு படபடப்பு. எனக்கோ பாவமா போயிடுச்சு. "தோ பார், உன் கடமைய செஞ்சுட்ட, பதட்டபடாம இரு. என்ன ரிசல்ட் வந்தாலும் நாம தைரியமா ஏத்துக்கனும். ஒரு பழைய படைப்பாளிங்கிற முறையிலே (அடங்கொய்யால...)ஒரு புது படைப்பாளிக்கு நான் சொல்லும் அட்வைஸ் என்னன்னா" என்கிற ரேஞ்சில் நான் பொங்க பொங்க அபிபாப்பா அலட்சியமா பார்த்துகிட்டு மைல்டா சிரிச்சுகிட்டு போகுது அடையை தட்டில் எடுத்துகிட்டு.
ஆச்சு மணி ஏழரை. அடைக்கு ஆசைப்பட்ட அக்கம் பக்கமும், கொழுக்கட்டைக்கு ஆசைப்பட்ட கொழுப்பெடுத்ததுகளும் வீட்டில் ஹாலில் நிறைந்து இருக்க நடுவே நம்ம படைப்பாளி தங்கமணியும். எனக்கு நட்டுவை பார்த்துக்கும் பெரும் பொருப்பு தரப்பட்டது. முதல் செஷன்ல தங்கமணியின் ரோல் ஏதும் வரலை. அடை தீர்ந்து போன கடுப்பில் இருந்த மாமிகள் வீட்டுக்கு கிளம்ப "தோ இப்ப இந்த தடவை வந்துடும், கொஞ்சம் இருங்க"ன்னு கெஞ்ச நான் போய் சமாதானமாக "தோ பார் இப்படித்தான் இருக்கும். நான் பதிவ போட்டுட்டு இப்படித்தான் பரபரப்பா இருப்பேன்"ன்னு ஏதேதோ சொல்ல "அய்யோ அய்யோ அதோ ஆடுது அதோ ஆடுது"ன்னு கூச்சல். நான் உத்து உத்து பார்க்க "எங்க பார்க்கறீங்க, அதோ வலமிருந்து இடமா இரண்டாவதா ஆடுது பாருங்க"ன்னு சொன்னப்ப நான் "அட நம்ம பிரியா"ன்னு சொல்ல "அட அத விடுங்க அந்த புடவை நம்ம வீட்டு புடவைங்க என்னமா ஆடுது. அதுக்குள்ள தான் பிரியா இருக்கா"ன்னு சொல்ல எனக்கு தலை சுத்திகிட்டு கிர்ர்ர்ர்ன்னு வந்துச்சு. பக்கத்து வீட்டு மாமி எல்லாம் "ஏண்டீ நன்னா இருக்கே, இது அந்த பார்த்த முதல் நாளேல கமலி கட்டிண்டு வர்ர அதே டிசைன் தானே, சூப்பரா இருக்குடீ, அதிலயும் அந்த கருப்பு கலர் சேரிக்கு சிகப்பு பார்டரும் அட்டாச்சுடு பிளவுசும் சும்மா அசத்திட்டே போ..."ன்னு சிலாகித்து பேச பேச "கொஞ்சம் இருங்க மாமி, அடை மொருகலா எடுத்துட்டு வர்ரேன்"ன்னு கிச்சன் உள்ளே போக அப்போ பார்த்து மாடியிலே சுட்டி டிவி பார்த்து முடிச்ச பிரேக் டைம்ல வந்த பாப்பா "மாமீஸ் அடுத்த வாரம் சேம் டைம்க்கு வந்துடுங்கோ, என் நிகழ்ச்சி இருக்கு"ன்னு குண்டை தூக்கி போட நான் மெதுவா பாப்பாகிட்டே கேட்டேன் என்ன நிகழ்ச்சின்னு. அதுக்கு அவ 'வர வர நமீதா கவுன் பெருசா இருக்குதாம். அதான் என் ஃபஸ்ட் பர்த் டே கவுனை கூரியர் பன்ணியிருக்கேன் வர்ர வாரம் மானாட மயிலாட நம்ம நிகழ்ச்சி தான்"ன்னு நக்கலா சொல்லிட்டு போனா!!
என்ன கொடுமை சாரே!!
/நம்ம தங்கமணி மாத்திரம் டிவி நிகழ்ச்சி இயக்குனராயிட்டா அதை வச்சே பல பதிவு போடலாம். ///////
ReplyDeleteஎங்க போனாலும் பதிவுக்கு மேட்டர் கிடைக்கிதான்னு பார்க்கிறீணறீங்களே? என்ன பொறுப்புணர்ச்சி!
கதை சூப்பரா இருக்கு! அபி அப்பா! வாழ்த்துக்கள்.
ReplyDeleteஹா..ஹா..ஹா. இந்த பொண்ணுங்களே இப்படித்தான்.. :-)
ReplyDeleteநமீதா நிகழ்ச்சியின் பதிவை ஆர்வத்துடன் எதிர்பார்க்கிறேன்! ;-)
உங்க ஷூ லேஸ் எப்ப நடிக்கப்போகுது?
ReplyDelete:-))
//சொன்னப்பதான் பார்த்தேன், என்னிக்கும் இல்லாத அளவு பளிச்சுன்னு தெரிஞ்சுது டிவி. 'மகர ராசி நேயர்களே, விருச்சிக ராசி நேயருக்கு குறித்த நேரத்தில் சோறு போட்டா வாலை ஆட்டிகிட்டு சொன்ன வேலை செய்வார்"ன்னு தெளிவாத்தான் சொன்னார்//
ReplyDeleteடிரேட் மார்க் 1
//நம்ம வீட்டுக்கு வந்துட்டா மிளகு அடையும், ஜவ்வரிசி கொழுக்கட்டயும் சாப்பிட்டுகிட்டே பார்க்கலாம், வச்சிடவா"ன்னு யார்கிட்டயோ தங்கமணி பேசிகிட்டு இருந்தாங்க.///
ReplyDeleteஅவ்ளோ நல்ல அக்கா எனக்கு சிங்கிள் டீ மட்டும் தான் கொடுத்தாங்க:(
என்ன இருந்தாலும் தீபாவளிக்கு திங்க வந்துடறேன் :)))
//பாப்பா "என்னப்பா அம்மா ரோல் தான் முக்கியமான ரோல், அம்மா இல்லாட்டி அவங்களுக்கு மானமே போயிருக்கும்"ன்னு சொல்ல //
ReplyDeleteஅங்க இருக்கற கேரக்டர்களிலேயே செம லொள்ளு புடிச்ச கேரக்டர் பாப்பாதான் :))))))))))))
//அதான். அது போல கேபிள்காரனுக்கும் சொல்லிட்டேன். சாயந்திரம் நம்ம நகர்லயே தான் சுத்திகிட்டு இருக்கனும்ன்னு. தவிர மழை பெஞ்சா நம்ம டிவிக்குதான் வேர்த்து கொட்டுமே அதுக்காக பிள்ளையாருக்கு மஞ்சள் தேங்காய் வச்சாச்சு/
ReplyDeleteடிரேட் மார்க் 2
என்ன தான் இருந்தாலும் நேர்ல நீங்க கைய கால ஆட்டிகிட்டு அதுவும் அபிஅம்மாவ பயத்தோட பாத்துகிட்டே இத சொல்லும் போது இதை விட ரொம்ப சுவாரஸ்யமா இருந்தது...
ReplyDeleteகலக்கல் பதிவு.. :))
... மக்கள்ஸ்க்கு....
நேர்ல சொல்லும் போது இந்த சம்பவத்தின் தலைப்பு..." எங்க வீட்டு புடவை விஜய் டிவில ஆடின கதை"... :)
"மொக்கப் பதிவு, மொக்கப் பதிவு என்பார்களே, அதை சொல்ல கேள்விப்பட்டிருக்கேன். பார்க்கலையே "
ReplyDeleteஎன்றான் என் நண்பனிடம்.
அபி அப்பா ஒரு காமெடி மொக்கப்பதிவு போட்டிருக்காரு. போய் படி என்றான்.
நீங்க ஆணி புடுங்கிட்டே இருந்திருக்கலாம். யாருங்க ஒங்க முதல்லாளி. அவர் நம்பர் கொடுங்க!
//பாப்பா "என்னப்பா அம்மா ரோல் தான் முக்கியமான ரோல், அம்மா இல்லாட்டி அவங்களுக்கு மானமே போயிருக்கும்"ன்னு சொல்ல //
ReplyDeleteஅங்க இருக்கற கேரக்டர்களிலேயே செம லொள்ளு புடிச்ச கேரக்டர் பாப்பாதான் :))))))))))))
ரிபீட்டே.
நல்லா அடித்தா உங்க புடவை:)
உங்க பதிவை பாராட்டினால் தான் பின்னூட்டத்தை பிரசுரிப்பீர்களோ!
ReplyDeleteஅது ஒண்ணும் பிரயோஜனமில்லை.
மொக்கை, ஜல்லி, கும்மி போடுவது ஒரு வகை போதை.
இந்த போதையிலிருந்து, பலரை மீட்டெடுக்க வேண்டும். இது தான் இப்போதைக்கு என் சமூகப் பணி.
அதை எந்தவித எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் செய்வேன்.
இது அபி அப்பா மேல சத்தியம்.
//ஞாயிறு விடியகாலை ஏழரை மணிக்கே அராஜகமாக எழுப்பப்பட்டேன். //
ReplyDeleteஇந்த அராஜகத்தை வன்மையாக கண்டிக்கிறேன்:P
//"ஏழரை ஆச்சு எழுந்திருங்க"ன்னு சொன்ன போது எனக்கு தெரியாது ஏழரை என்பது மணி அல்ல சனி என்று. //
ReplyDeleteஎவ்வளவு அப்பாவியா இருந்திருக்காரு,பாருங்க நம்ம அபி அப்பா:P
நமீதா நிகழ்ச்சியின் பதிவை ஆர்வத்துடன் எதிர்பார்க்கிறேன்! ;-)
ReplyDeleteநல்லா இருந்தது அபி அப்பா...
ReplyDeleteவாங்க தமிழ் பிரியன்! எங்க போனாலும் கடமையிலே கண்ணா இருப்போம்ல:-))
ReplyDeleteஎன்னது இது கதையா, எனக்கேவா???அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
வாங்க வீரா, நமீதா நிகழ்ச்சி பார்க்கனுமா, வீட்டு தங்கமணிக்கு இது தெரியுமா? இல்ல வத்தி வைக்கனுமா:-))
ReplyDeleteதிவா, பிக் பிரதர் நிகழ்ச்சியிலே நம்ம ஷூ லேஸ் நடிப்பது உங்களுக்கு தெரியாதா:-))
ReplyDeleteதம்பி ஆயில்யா, நீங்க வீட்டுக்கு போன நேரம் அப்படி ஒரு நேரம், டீ மட்டுமே கிடைச்சுதா, முன்னமே சொல்லிட்டு போயிருந்தா செம கட்டு கட்டிட்டு வந்திருக்கலாம் தானே! அதனால என்ன தீபாவளிக்கு போகும் போது சாப்பிட்டா போச்சு!
ReplyDeleteசஞ்சய், வாங்க, நேர்ல சொல்லிட்டதால இதிலே கொஞ்சம் சுவாரஸ்யம் குறைஞ்சு போச்சா, ஆஹ இனி வாய்ஸ் ரெக்கார்டிங் பதிவு போடலாம்ன்னு சொல்ல்றீங்க, போட்டுடுவோம்:-))
ReplyDeleteவாங்க நொந்த குமாரா, உங்க பேரை நந்த குமாரனா மாத்தும் வரைக்கும் இந்த மொக்கை போராட்டம் தொடரும் என உங்க மேல பதில் சத்தியம் செய்கிறேன்!
ReplyDeleteஇந்த பதிவை போட்டுட்டு அடுத்த பதிவுக்கு கடைத்தெரு பக்கம் போனேன் அதான் பப்ளிஷ் பண்ண லேட் ஆகிடுச்சு, சாரிப்பா:-))
வாங்க வல்லியம்மா, எப்படி இருக்கீங்க,எனக்கு ஏது புடவை, தங்கமணி புடவை தான் நல்லா ஆடித்து:-))
ReplyDeleteநல்ல குடும்பம் தான்.. ஒரு புடவை ஆடினதுக்கு அவங்க ஆர்பாட்டம்ன்னா.. நீங்க குடும்பமே வந்ததா சொல்லிட்டு பதிவு போடறீங்க பாருங்க.. :)
ReplyDeleteஒருவன் பிறருக்கு கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக் கொள்கிறான் - ரமணர்
ReplyDeleteஅன்புடன்
கே ஆர் பி
http://visitmiletus.blogspot.com/
///'வர வர நமீதா கவுன் பெருசா இருக்குதாம். அதான் என் ஃபஸ்ட் பர்த் டே கவுனை கூரியர் பன்ணியிருக்கேன் வர்ர வாரம் மானாட மயிலாட நம்ம நிகழ்ச்சி தான்"ன்னு நக்கலா சொல்லிட்டு போனா!!////
ReplyDeleteஹா ஹா ஹா....
வலைச்சரத்துல அபி அப்பாவின் சதி அப்படின்னு சொல்லுறாங்களே அதுக்கு மறுப்பு தெரிவிச்சி விஜய் டிவில பேட்டி கொடுக்க போறீங்களோன்னு பார்க்க வந்தா அடங்கொய்யால...தாங்கமுடியல சாமி:))
ReplyDelete///போன ஞாயிறு விடியகாலை ஏழரை மணிக்கே அராஜகமாக எழுப்பப்பட்டேன்.////
ReplyDeleteஏழரை மணி நள்ளிரவாச்சே. அதெப்படி விடிகாலை? புரியலை விளக்கவும்(வெளக்குமாறு இல்லாமல்)
////"அட அத விடுங்க அந்த புடவை நம்ம வீட்டு புடவைங்க என்னமா ஆடுது. அதுக்குள்ள தான் பிரியா இருக்கா"ன்னு சொல்ல எனக்கு தலை சுத்திகிட்டு கிர்ர்ர்ர்ன்னு வந்துச்சு.///
ReplyDeleteஅடப்பாவி மக்கா..... படிக்கிற எங்களுக்கும் கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் தான்:)
அப்புறம் ஒரு முக்கியமான விஷயம் அபி அப்பா . நாம பேசுனபடி நடந்துக்குங்க. இல்லைன்னா கும்மில கண்டனம் போட்டு ஒத்தை ஆளா நூறு அடிச்சிடுவேன். ஆமா சொல்லிபுட்டேன்.:)
ReplyDeleteநல்ல காமெடி அபி அப்பா..கலக்கல்.
ReplyDelete//'மகர ராசி நேயர்களே, விருச்சிக ராசி நேயருக்கு குறித்த நேரத்தில் சோறு போட்டா வாலை ஆட்டிகிட்டு சொன்ன வேலை செய்வார்"//
ReplyDelete//ஏழரைக்கே எழுந்து நாலரையை எக்ஸ்ட்ராவாக இரண்டரை லிட்டர் வாங்கிகிட்டு 200 பீபரியையும் வாங்கிகிட்டு//
அபி அப்பா! என்ன ஒரு கலக்கல் நகைச்சுவை உணர்வு!
பிறவிலேயே உள்ளதா? இடையில் வந்ததா? (இடுக்கண் வருங்கால் மாதிரி)
சூப்பரா இருக்கு!
yei yenna kekka aal illanu nenachiya, inimae yenga akkava ippadi kindal pannara mathiri pathivu potte mavane thookiduvom --- iimsai, siva & sanjai
ReplyDeleteஇது தான் உனக்கு கடைசி எச்சரிக்கை இனிமே இப்படி எங்க அக்காவ பத்தி தப்பு தப்பா எழுதினே மவனே தூக்கிடுவோம் --- கொலை வெறி குடும்பம் - இம்சை, சிவா, சஞ்சய்
ReplyDelete/
ReplyDeleteஇம்சை said...
yei yenna kekka aal illanu nenachiya, inimae yenga akkava ippadi kindal pannara mathiri pathivu potte mavane thookiduvom --- iimsai, siva & sanjai
/
ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்
/
ReplyDeleteஇம்சை said...
இது தான் உனக்கு கடைசி எச்சரிக்கை இனிமே இப்படி எங்க அக்காவ பத்தி தப்பு தப்பா எழுதினே மவனே தூக்கிடுவோம் --- கொலை வெறி குடும்பம் - இம்சை, சிவா, சஞ்சய்
/
ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்