விடுடா வேற ஒரு சூப்பர் பிசினஸ் இருக்குன்னு ராதா சொன்ன போது நான் அதை அப்போது சீரியசாக எடுத்துக்கலை. ஆனா கொஞ்ச நாள் கழித்து அவன் அப்படி ஒரு சூப்பர் பிராஜாக்டோட வந்த போது கொஞ்சம் ஆடித்தான் போயிட்டேன். எப்படியாவது வியாபாரகாந்தமாகிடனும் என்கிற வெறி எங்களுக்கு அப்போது. எங்க ஊர்ல இப்ப மாதிரி அப்ப எல்லாம் தடுக்கி விழுந்தா பிசினஸ் மேக்னட் எல்லாம் கிடையாது. குறிப்பிட்ட சில பேர் தான். ஆனா இப்ப அங்கே தடுக்கி விழுந்தா "பைனான்ஸ்" தொழிலதிபர்கள். அய்யப்பன், வெங்கி, லெஷ்மி ஆகிய மூன்று சாமிகளும் இவர்களிடம் படும் பாடு இருக்கே, தாங்காதுடா சாமீ. இந்த மூன்று தெய்வங்களின் புனைப்பெயர், செல்ல பெயர் எல்லாம் கூட விட்டு வைக்காமல் பைனான்ஸ் கம்பனி ஆரம்பிச்சுடுறாங்க. பேரை சொல்லி எல்லாம் கூப்பிட்டுக்க மாட்டாங்க. வி.ஜி சார், எம்.ஆர் சார் இப்படி இனிஷியல் தான். அதிலே ஒருத்தர் M.D சார், இந்நேரம் V.P, C.E.O போஸ்ட் எல்லாம் வந்திருக்கலாம். இதை எல்லாம் பத்தி இன்னும் ஒரு நாள் விலாவாரியா மேய்வோம். இப்ப இந்த பதிவுக்கு போவோம்.
எனக்கும் ராதாவுக்கும் அந்த டவுசர் பாண்டி காலத்திலேயே அப்படி ஒரு தொழிலதிபர் ஆசை வந்திருக்க கூடாது. நாங்க ஏற்கனவே செஞ்ச பிசினஸ் தான் ஊத்திகிச்சா. சரி இதையாவது நல்ல பண்ணுவோம்ன்னு நான் ராதா சொல்ல சொல்ல ஜாக்கிரதையா கவனிச்சு கிட்டு வந்தேன். கிட்டதட்ட ரா மெட்டீரியல் பர்ச்சேஸ், புரடக்ஷன், டிரேடிங், அட்வர்டைசிங் எல்லாமே நாங்க ரெண்டே பேர் தான் என தீர்மானிக்கப்ப்ட்டது. இந்த தடவை வேற கூட்டு எல்லாம் கிடையாது. நாங்க மட்டுமே.
ரா மெட்டீரியல் பர்ச்சேஸ் எங்கே என முதலில் தீமானித்தோம். மெட்டீரியல் பர்ச்சேஸ் பண்ணும் போது தெரிந்தவர்கள் யாரும் இல்லாத இடமா இருந்தால் உத்தமம் என நாங்கள் தீர்மானித்ததன் விளைவாக சின்ன கண்ணார தெரு சைக்கிள் கம்பனிகளை முடிவு செய்தோம்.
அடுத்து புரடக்ஷன் பேக்டரிக்கான இடத்தை நாங்க ஒருமனதாக தேர்ந்தெடுத்தோம். காரணம் எங்க பிராடக்ட்க்கு அந்த ஒரு இடம் தான் சரியான இடம். அதாவது நல்லத்துகுடி போகும் வழியில் ரயில்வே கேட் இருக்குமே அதிலிருந்து கிழக்கால கொஞ்ச தூரம் போனா நம்ம எல்லேராம் சார் வீட்டின் கொல்லை பக்கமாக, அந்த இடம் தான் நம்ம பேக்டரி.
டிரேடிங் எல்லாம் நம்ம ஸ்கூல் தான். சக வகுப்பு, பக்கத்து வகுப்பு பசங்க தான் கஸ்ட்டமர்ஸ். விளம்பரம் வாய்வழி விளம்பரம் தான். வேற என்ன. கம்பெனிய திறந்து வியாபாரகாந்தமாகிட வேண்டியது மட்டும் தான் பாக்கி.
இப்பவாவது நான் என்ன பிராடக்ட்ன்னு சொல்லியாகனும்ங்க. அதான் காந்த வியாபாரம். ஆமாம் ராதாவுக்கு அந்த காந்த வியாபாரம் மனசிலே உதித்ததுக்கு காரணமே நம்ம மர்ஃபி பாலுதாங்க. அவன் ஒரு நாள் மர்ஃபி ரேடியோவிலே இருக்கும் ஏதோ ஒரு சின்ன காந்தத்தை வைத்து கொண்டு ஒரு பேப்பரில் கொஞ்சம் மண்ணை அள்ளி போட்டுகிட்டு அதன் கீழே வைத்து தேய்த்து பேய் ஆடுது பார் பேய் ஆடுது பார்ன்னு வெறுப்பேத்தியது தான். ஒரு தடவை எங்க கையிலே அந்த காந்தத்தை கொடுத்து இருந்தால் இந்த பிஸினஸ்க்கு நாங்க வந்தே இருக்க மாட்டோம்.
அப்போது கூத்தாநல்லூரில் இருந்து தாஜுதீன்ன்னு எங்க பிரண்ட் ஒருத்தன் வந்து படிச்சான். அவன் கிட்டதட்ட கூகிளாண்டவர் மாதிரி. எது கேட்டாலும் தெரியாதுன்னு சொல்ல மாட்டான். அவன் தான் ராதாவுக்கு காந்தம் தயாரிப்பது எப்படின்னு சொல்லி குடுத்திருக்கான். அதாவது சைக்கிள் நட், வாஷர் போன்றவற்றை ரயில் தண்டவாளத்தில் வைத்து விட்டு அதன் மேல் ரயில் ஓடினால் பின்னே அதை எடுத்தா அது காந்தமா மாறியிருக்கும். அடங்கொய்யாலே!!!
சுக்கிலபட்சம், கிழக்கே சூலம், மேற்கே கத்தி எல்லாம் காலண்டர்ல பார்த்து ஒரு ஞாயிறு மாலை 4.30 மணிக்கு நல்ல ராகுகாலத்திலே தங்கர்பச்சான் படத்திலே வரும் சின்ன பசங்க மாதிரி தொள தொள வார் வைத்த டவுசர் போட்ட நாங்க இரண்டு பேரும் ஒருத்தன் தோள் மேலே ஒருத்தன் போட்டுகிட்டு வெறும் காலை புழுதியில் தேச்சுகிட்டே "ரா" மெட்டீரியல் பர்ச்சேசுக்காக போனோம். (சைக்கிள் கம்பெனி வாச்லில் நட், போல்ட் பொறுக்க போவதை "ரா" மெட்டீரியல் பர்ச்சேஸ் என சொல்வது "கபீம் குபாம்"ல போட வேண்டிய குற்றமா என்ன?) கடவுள் முதல் ஐந்தாவது நிமிஷத்திலேயே கண்ணை திறந்தார். முதல் 'நட்' கிடைத்தது. பிறகு ஒரு ஐந்து ஆறு தடவை கண்னை திறந்தார். பின்னே மூடிகிட்டார். சரி முதல் நாள் ஆறு காந்தம் செஞ்சு வித்து காசு பார்ப்போம். பின்னே பத்து காந்தம் பின்னே நூறு காந்தம் இப்படியாக நிறைய காந்தம் செய்து அந்த மர்ஃபி ரேடியோ கம்பனிக்கே வித்து பின்னே பல நாட்டுக்கும் விற்று பெரிய தொழிலதிபர் ஆகிடலாம் என நினைத்து கொண்டே மேல வீதி வழியாக புது தெருவை அடைந்தோம்.
"டேய் ஒரு காந்தம் எத்தினி பைசாவுக்குடா விற்கலாம்? - இது ராதா
"இல்லடா முதல் ஆறு காந்தத்தையும் நாமலே வச்சிகிட்டு "எங்க கிட்ட ஒன்னு இருக்கே, நாங்க காமிக்க மாட்டோமே அப்படீன்னு 3 நாள் நம்ம பசங்களை கதற் விடுவோம். அதன் பிறகு நாம இத காமிச்சா பசங்க நாம சொல்ற பைசாவுக்கு வாங்குவானுங்கடா. 25 பைசாவுக்கு விக்கிலாம்டா" - இது நான். (பத்தீங்களா எங்க டீஸர் அட்வர்டைஸ்மெண்டை!!!)
"டேய் அப்ப முதல் நாளே ஒன்னேகால் ரூபா கிடைச்சிடும். நாம 100 காந்தம் எல்லாம் செஞ்சா 25 ரூவாடா, மாசத்துக்கு 750 ரூவாடா. வருஷத்துக்கு...." அப்படீன்னு சொல்லிகிட்டே ராதா ஒரு வேலி முள்ளை ஒடிச்சுகிட்டு கீழே தெருவிலே உக்காந்து மண்ணில் 750 x12 = ன்னு கணக்கு போட ஆரம்பிச்சுட்டான். நடுவே இந்த 12ம் வாய்ப்பாடு கண்டுபிடிச்ச கம்மணாட்டி யாருடான்னு வேற கேட்டுகிட்டான். பின்னே டேய் 9000 வருதுடான்னு சொல்லிகிட்டே அப்போதே தொழிலதிபர் ஆகிவிட்ட சந்தோஷத்துல மிதக்க ஆரம்பிச்சுட்டோம். இந்த லெட்சனத்திலே டைம் மேனேஜ்மெண்ட் வேற. ரயில் கடந்து போக மொத்தம் 20 செகண்டு தான் ஆகும் ஆக ஒரு தண்டவாளத்துக்கு 50 காந்தம் மொத்தம் 100 காந்தம் ஆக 20 செகண்டுக்கு 25 ரூவாய் சம்பாதிக்கும் நம்ம கம்பனிதாண்டா சூப்பர் கம்பனின்னு பெருமை பட்டுகிட்டோம்.
ரயில் வருவதற்கு இன்னும் அரை மணி நேரம் இருந்ததாலும் இன்னும் எங்க வியாபாரத்தை அதிகரிக்க என்ன என்ன வழிகள் உண்டோ அத்தனையும் பேசினோம். ஒரு கட்டத்தில் அத்தனை பணத்தை வைத்து கொண்டு என்ன செய்வது என திகைத்த போது ராதா தான் சொன்னான். "டேய் நாம சைடு பிஸினசும் பண்ணனும்டா"
நான் சொன்னேன் "டேய் ARC மாதிரி அவங்களுக்கு எதிரே பெரிய நகைகடை ஆரம்பிக்கலாம்டா"
அவன் அதுக்கு "சே போடா குருநாதன் செட்டியார் மாதிரி தியேட்டர் ஒன்னு ஆரம்பிக்கலாம்டா.அப்ப தான் நாம ஓசியிலே படம் பார்க்க முடியும்டா.(அட அலுப்பை பயலே) நீ உன் பெயரை கிருஷ்ணன் ன்னு மாத்திக்கோ. என் பேரில் பாதி உன் பேரில் பாதி அதாவது "ராதாகிருஷ்ணன்" ன்னு வச்சிடலாம்"ன்னு சொன்னான். எனக்கு செம கோவம் "டேய் உன் முழு பேரே அதானே. நான் எதுக்கு பேரை மாத்திக்கனும். நீ வேணா காப்பியன்ன்னு மாத்திக்கோ. என் பேரில் பாதி உன் பேரில் பாதி என சேர்த்து "தொல்காப்பியன் திரையரங்கம்"ன்னு வச்சிடலாம்ன்னு சொன்னேன். இப்படியாக பார்ட்னர்ஷிப் முறியும் அளவு போன பின்னே நாங்களே சமாதான படுத்தி கொண்டோம்.
சரின்னு மெதுவா ரயில்வே கேட் கிட்டே போய் தண்டவாளத்தின் மேலே போய் கிழக்காலே போகும் போது தான் அந்த கேட்கீப்பர் கத்தினார். "டேய் யாருடா நீங்க எதுக்கு லைன்ல போறீங்க?" அவரை பார்த்தாலே சவுதியில் தலை வெட்டும் ஆசாமி போல இருந்தார். நல்ல சாராய நெடி. முள்ளு முள்ளா தாடி. நான் பதட்டத்திலே "காந்ந்ந்......."ன்னு சொல்ல ராதா காலை மிதித்து "சார் எங்க பிரண்டு காந்திமதிநாதன் வீட்டுக்கு குறுக்கு பாதையிலே போறோம் சார்"ன்னு சொல்லி சமாளிச்சான். பின்னே மெதுவா நடந்து போய் கேட் கீப்பர் கண்ணு படாம தூரமா போய் சாமியெல்லாம் வேண்டிகிட்டு இந்த தண்டவாளத்திலே 3 நட் அதுக்கு நேரா அடுத்த தண்டவாளத்திலே 3 நட் என வச்சிட்டு நானும் ராதாவும் அந்த சரிவான கருங்கல் மேலே படுத்துகிட்டு தலையை தண்டவாளத்திலே வச்சுகிட்டு ரயில் தரங்கம்பாடியிலிருந்து வருதான்னு கேட்க ஆரம்பித்தோம். ஓடும் ரயிலில் எவன் எவன் என்ன அசிங்கம் பண்ணினானோ நாங்க அந்த இடத்தை என்னவோ எங்க சொர்கமே அதுதான் என்கிற மாதிரி படுத்து கிடந்தோம். இன்னும் கொஞ்ச நேரத்தில் அந்த 6 நட்டும் காந்தமா ஆக போகிற சந்தோஷத்தில் அதை எடுத்து ஒரு தடவை முத்தம் வேறு கொடுத்துவிட்டு வைத்தோம்.
கொஞ்ச நேரம் கழித்து நான் "ஏன்டா ராதா காலை பிடிச்சு இழுக்கறே"ன்னு கேட்டதுக்கு அவன் "நான் எங்கடா இழுத்தேன் நீ தானே என் காலை பிடிச்சு இழுக்கறே"ன்னு சொல்லிகிட்டே இருக்கும் போது இந்த பங்கி ஜம்ப்பிலே தொங்குவாங்களே அது போல தொங்கிகிட்டு இருந்தோம். அந்த தலை வெட்டி கேட்கீப்பர் எங்களை தலைகீழா காலை பிடித்து தூக்கிகிட்டு (அவர் தான் ஆஜானுபாகுவா இருந்தாரே, நாங்க பொடி பசங்க தானே) தண்டவாளம் வழியா கேட் பக்கமா திட்டிகிட்டே நடந்து போனார். எனக்கு உலகமே சுத்துது. தொள தொள டவுசர் வேறயா மானமே போச்சு.எது எது எங்க எங்க இருக்குதுன்னே தெரியலை. அந்த ஆளு நாலு அடி அங்கயே அடிச்சா கூட பரவாயில்லை. ஆனா கேட்கிட்டே கொண்டு போய் அதை எங்க தெரு ஆளுங்க யாராவது பார்த்துட்டு வீட்டிலே சொல்லிட்டா நம்மை ஊறுகாய் போட்டிடுவாங்களேன்னு பயம். அது தான் மெயின் பயமே. இந்த கூத்திலே ராதா தலைகீழா தொங்குவது பத்தி எல்லாம் கவலைப்படாம கீழே கிடந்த கல்லை எல்லாம் எடுத்து வீசிகிட்டே "டேய் ஜாலியா இருக்குல்லடா இப்பிடி தூக்கிகிட்டு போறது"ன்னு சொல்லிகிட்டு சந்தோஷ பட்டுகிட்டு வர்ரான். கிராதகா, என்னை இப்படி ஒரு நிலமைக்கு கொண்டு வந்து விட்டதோட இல்லாம இப்படி பேசினது எல்லாம் எனக்கு எப்படி இருந்திருக்கும்.
இதிலே தலைவெட்டி கேட்கீப்பரோ எங்களை ரயிலை நாங்க கவிழ்க நாங்க சதி செய்ததாகவும் அவர் வந்து ரயிலை காப்பாத்தியதாகவும் சொல்லிகிட்டு வர்ரார். ஆகா ஒரு காந்த தொழிற்சாலை அதிபர்களை, ஒரு வருங்கால தியேட்டர் அதிபர்களை, நகைக்கடை அதிபர்களை இப்படி கேவலம் ரயில் கவிழ்க்கும் சதிகாரர்களை போல நடத்தியது மகா கொடுமை.
நான் ராதாவிடம் தொங்கிகிட்டே கேட்டேன்"எப்படா நம்மை இவன் கீழே விடுவான்?" அதுக்கு அவன் சொன்னான் தொங்கிகிட்டே "டேய் நாம ஞாயித்து கிழமை ராகுகாலத்திலே மாலை4.30க்கு ஆரம்பிச்சோமா 'ரா'மெட்டீரியல் பர்ச்சேசை... இன்னும் கொஞ்ச நேரத்திலே ஆறு மணிக்கு ராகுகாலம் முடிஞ்சுடும். நம்மை விட்டுடுவான். நாம ஓடி போயிடலாம்"ன்னு ஏதோ காழியூர் நாராயணன் ரேஞ்சுக்கு சொல்லிகிட்டு வர்ரான்.
நான் அப்ப முடிவு பண்ணினது தான். இனி தொழிலதிபர் ஆசை எல்லாம் வச்சிக்க படாது. அப்படியே வச்சிகிட்டா கூட இந்த நாதாறி ராதா கூட கூட்டணி வச்சிக்க கூடாதுன்னு!

எதுக்கு லேபிள் "நகைச்சுவை மாதிரி"ன்னு கொடுத்திருக்கீங்க. "நகைச்சுவை"ன்னு தைரியமா குடுங்க.
ReplyDeleteசூப்பர் பதிவு அபி அப்பா.. நல்லா சிரிக்க வெச்சது. நன்றி.
150க்கு வாழ்த்துக்கள்.
மேற்கே கத்தியா.. :)
ReplyDeleteஊருல இருக்கற எல்லா தொழிலதிபரையும் தெரியுது .. ஆனா தொழில் மட்டும் நடத்தத்தெரியலங்கறீங்க... :)
டேய் அப்ப முதல் நாளே ஒன்னேகால் ரூபா கிடைச்சிடும். நாம //100 காந்தம் எல்லாம் செஞ்சா 25 ரூவாடா, மாசத்துக்கு 750 ரூவாடா. வருஷத்துக்கு...." அப்படீன்னு சொல்லிகிட்டே ராதா ஒரு வேலி முள்ளை ஒடிச்சுகிட்டு கீழே தெருவிலே உக்காந்து மண்ணில் 750 x12 = ன்னு கணக்கு போட ஆரம்பிச்சுட்டான். நடுவே இந்த 12ம் வாய்ப்பாடு கண்டுபிடிச்ச கம்மணாட்டி யாருடான்னு வேற கேட்டுகிட்டான். பின்னே டேய் 9000 வருதுடான்னு சொல்லிகிட்டே அப்போதே தொழிலதிபர் ஆகிவிட்ட சந்தோஷத்துல மிதக்க ஆரம்பிச்சுட்டோம். இந்த லெட்சனத்திலே டைம் மேனேஜ்மெண்ட் வேற. ரயில் கடந்து போக மொத்தம் 20 செகண்டு தான் ஆகும் ஆக ஒரு தண்டவாளத்துக்கு 50 காந்தம் மொத்தம் 100 காந்தம் ஆக 20 செகண்டுக்கு 25 ரூவாய் சம்பாதிக்கும் நம்ம கம்பனிதாண்டா சூப்பர் கம்பனின்னு பெருமை பட்டுகிட்டோம்.//
ReplyDeleteஎனக்கு கதாநாயகன் படத்துல வர்ற எஸ்.வி. சேகர் & பாண்டியராஜன் குரூப் ஆஃப் கம்பெனிதான் நினைவுக்கு வருது. :-)
// நீ உன் பெயரை கிருஷ்ணன் ன்னு மாத்திக்கோ. என் பேரில் பாதி உன் பேரில் பாதி அதாவது "ராதாகிருஷ்ணன்" ன்னு வச்சிடலாம்"ன்னு சொன்னான். எனக்கு செம கோவம் "டேய் உன் முழு பேரே அதானே//
ReplyDelete:)))))))))))))))))))) (நான் ராதா அண்ணனையும் நினைசுக்கிட்டேன் ! )
அபி அப்பா சூப்பரூ! சிரிச்சுக்கிட்டேன் இருக்கேன்!
ReplyDeleteநாங்களும் அதே மாதிரி டிரைப்பண்ணியிருக்கோம்ல பட் நாங்க நாஞ்சில் நாடு ஏரிய நீங்க அதுக்கு முன்னாடியே
ம்ம் அப்படியே தொழிலதிபர் ஆகியிருந்தோம்னா இன்னிக்கு ஊர்ல நாமதானே ராசா! :))))))))))))))))
// எதுக்கு லேபிள் "நகைச்சுவை மாதிரி"ன்னு கொடுத்திருக்கீங்க. "நகைச்சுவை"ன்னு தைரியமா குடுங்க.
ReplyDeleteசூப்பர் பதிவு அபி அப்பா.. நல்லா சிரிக்க வெச்சது. நன்றி.
150க்கு வாழ்த்துக்கள். //
ரிப்பீட்ட்ட்டேய்ய்ய்ய்!!!!
இப்படியே பலப் பேர் சதி செஞ்சு சதி செஞ்சே பல அம்பானிகளை நாட்ல முடக்கிப் போட்டிடறாங்க அபி அப்பா :):):)
ReplyDelete150வது பதிவுக்கு வாழ்த்துக்கள்
150 பதிவா.. வாழ்த்துகள்.
ReplyDelete//நடுவே இந்த 12ம் வாய்ப்பாடு கண்டுபிடிச்ச கம்மணாட்டி யாருடான்னு வேற கேட்டுகிட்டான்.//
ReplyDeleteகுபீர் என்று சிரிப்பை வரவழைக்கும் இடம்.
வியாபார காந்தங்களெல்லாம் இப்படித்தான் தொடங்கியிருப்பார்களோ?
Anna,
ReplyDeleteKalakkallllllllllllll.
Kalalkalo Kalakkall.....
Now Brother Ratha become a magenate?
Thandavalathula Kasu vachi parthathu unda?
ReplyDeleteCongrates for "150"....
ReplyDeleteas soon as 1000...
all the best,....
Anna,
ReplyDeleteWe are waitting for next Post..
Intha mathri post ellam padikum podhu, urula bus stand Pakkama oru
ReplyDeletekatout viakka thonuthu!!!
In Abu dhabi, all the cost are increased, my little salery not enough. I am also thing return back to mayavarram and will became a Maganet...
ReplyDeleteஉங்களுடைய 150 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்...
ReplyDeleteஉங்களின் பதிவுகளினால் மேலும் எங்களை மகிழ்விக்க வேண்டுகிறேன் :)
வாங்க வெண்பூ, ஒரு பயம் கலந்த மரியாதை தான்:-)) நன்றி!!
ReplyDeleteவாங்க முத்துலெஷ்மி! கிழக்கே சூலம் இருக்கும் போது மேற்கே கத்தி இருக்கபிடாதா:-)) நன்றி வருகைக்கு!!
ReplyDelete//எனக்கு கதாநாயகன் படத்துல வர்ற எஸ்.வி. சேகர் & பாண்டியராஜன் குரூப் ஆஃப் கம்பெனிதான் நினைவுக்கு வருது. :-)//
ReplyDeleteவாடா தம்பி! வரும் ஏன் வராது, சொந்த சரக்குப்பா!
//:)))))))))))))))))))) (நான் ராதா அண்ணனையும் நினைசுக்கிட்டேன் ! //
ReplyDeleteவாப்பா ஆயில்யா, அதே ராதாகிருஷ்ணன் தான்!
//நாங்களும் அதே மாதிரி டிரைப்பண்ணியிருக்கோம்ல பட் நாங்க நாஞ்சில் நாடு ஏரிய நீங்க அதுக்கு முன்னாடியே //
அது சரி! ஆக நாம யாருமே அந்த ரயிலை தொல்லை செய்யாம விட்டதில்லையா!!
//150க்கு வாழ்த்துக்கள். //
ReplyDeleteரிப்பீட்ட்ட்டேய்ய்ய்ய்!!!!//
நன்றி விஜய் ஆனந்! வருகைக்கும் பின்னூட்டத்துக்கும்!!
//rapp said...
ReplyDeleteஇப்படியே பலப் பேர் சதி செஞ்சு சதி செஞ்சே பல அம்பானிகளை நாட்ல முடக்கிப் போட்டிடறாங்க அபி அப்பா :):):)
150வது பதிவுக்கு வாழ்த்துக்கள்//
வாங்க அம்மனி, ஆமா இப்படித்தான் பல அம்பானிங்க அமுங்கி போயிட்டாக:-)) வருகைக்கு நன்னி!
//முத்துலெட்சுமி-கயல்விழி said...
ReplyDelete150 பதிவா.. வாழ்த்துகள்.//
நன்றி அக்கா!
வாங்க சுல்தான் பாய் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!!
ReplyDeleteவாங்க அபுதாபி சுடர்மணி வருகைக்கும் பொங்கினதுக்கும் மிக்க நன்றி! லீவ் கிடைச்சா வாங்க துபாய்க்கு!

ReplyDeleteவாங்க மிஸ்டர் நாதஸ்! வருகைக்கு மிக்க நன்றி!!!
ReplyDeleteஆஹா, எல்லாப் பின்னூட்டத்துக்கும் இவ்வளவு சீக்கிரமா பதில் போட்டுட்டீங்க, ரொம்ப ரொம்ப சந்தோஷம் அபி அப்பா :):):)
ReplyDeleteவியாபார காந்தமாகுறதுக்கு, காந்த வியாபாரம் செய்ய முயற்சி செஞ்சுருக்கீங்க. அந்த கேட் கீப்பர் மட்டும் தடுக்காம இருந்துருந்தா இந்நேரம் அம்பானிக்கு முன்னாடி இடத்துல அபி அப்பா இருந்துருப்பாரு.
ReplyDelete150'தாவது பதிவிற்கு வாழ்த்துக்கள்... start to end deviate ஆகாம கொண்டு போயிருக்கீங்க... அருமை... (நீங்க குரங்கு ராதா'வை வெச்சி ரொம்பத்தான் காமெடி பண்றீங்க...)
ReplyDelete150-வது பதிவுக்கு வாழ்த்துகள் அபி அப்பா, தலைப்பு மட்டும் தான் படிச்சேன், பதிவு படிக்கலை, ஆனால் வெண்பூ சிரிப்பா இருக்குனு எழுதி இருக்கிறதாலே, நல்ல பதிவுனு சொல்லிட்டுப் போயிடறேன். :P
ReplyDeleteஅருமை!
ReplyDelete150 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅபிஅப்பா.. 150-வது பதிவுக்கு வாழ்த்துக்கள்..
ReplyDeleteசொல்லப்போனா.. எனக்கும் இந்த மாதிரி.. தண்டவாளத்துல நட்டு போல்ட்.. இரும்பு வெச்சா காந்தமாகிடும்னு யாரோ சொன்னாங்க...
நானும் நம்பினேனாக்கும்...
:-))))) 150வது பதிவுக்கு வாழ்த்துகள் அபி அப்பா!
ReplyDeleteஅது சரி..
ReplyDeleteச்சின்ன்ன வயசுல தான் தண்டவாளத்துல நட்டு போல்ட்டு எல்லாம் வெச்சீங்க..
இப்ப எதுக்கு நம்ம நட்டுவை தண்டவாளத்தில் (படத்தில்) உக்கார வெச்சிருக்கீங்க??? அவரையும் வியாபாரகாந்தம் ஆக்கவா?
மேற்கே சூலத்துக்கு பதில் கத்தியா??
ReplyDeleteசெம சூப்பர் பதிவு!
வாழ்த்துக்கள்!
//ஓடும் ரயிலில் எவன் எவன் என்ன அசிங்கம் பண்ணினானோ நாங்க அந்த இடத்தை என்னவோ எங்க சொர்கமே அதுதான் என்கிற மாதிரி படுத்து கிடந்தோம். //
ReplyDeleteஇது!!!! இது!! இதுதான் அபி அப்பா, ஒரிஜினல்!!! நல்லவேளை, வாயைத் திறந்து வச்சுக்கலையே?? அப்போ ரயிலும் போகலை! பிழைச்சீங்க! :P :P :P
//எனக்கு கதாநாயகன் படத்துல வர்ற எஸ்.வி. சேகர் & பாண்டியராஜன் குரூப் ஆஃப் கம்பெனிதான் நினைவுக்கு வருது. :-)//
ReplyDeleteஉங்களையும், ராதாவையும் வச்சுத் தான் அந்தப் படமே வந்துச்சோ??
அட, பதில்தான் கொடுக்கறதில்லைனு பார்த்தா, இப்போப் பின்னூட்டங்களையும் போடறதில்லைனு வச்சுட்டீங்களா??? :P
ReplyDeleteஉங்களுடைய 150 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்...
ReplyDeleteஇவ என்ன தனியா விட்டுக்குள்ள சிரிச்சுட்டு இருக்கான்னு பக்ககத்து
ReplyDeleteஃப்ளாட் பொண்ணு வந்து பெல் அடிச்சு கூப்டு ஒரு மாதிரி பார்த்துட்டு போகுது....உங்க புண்ணியத்துல
ஆக தொழிலை தவிர மத்ததெல்லாம் செய்திருக்கீங்க...சூப்பர்
150????? வாழ்த்துக்கள்...
ReplyDeleteஹ்ம்ம்...நான் இப்பத்தான் 75 வந்து இருக்கேன்...
:))
ReplyDeleteசூப்பர் காமெடி பதிவு அபி அப்பா!
150 க்கு வாழ்த்துக்கள்!
ReplyDeleteஇத ஏற்கனவே படிச்சிருந்தாலும் இப்ப மறுமுறை படிச்சுப்பாத்தேன்
ReplyDeleteசெம காமெடி அங்கிள்...:)
இப்பதான் தெரியுது பின்னூட்டம் போடலைங்கிறது...
150 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்...
அபிஅப்பா அருமை அருமை . நான் உங்களுக்கு ஜூனியர் . உங்களுடன் பழகதது மனதுக்கு வருத்தம் அளிக்கிறது . அடுத்த முறை உங்களை சந்திக்க முயல்கிறேன் (நீங்கள் ஊரில் இருந்து உங்களுக்கு டைம் இருந்ததால் )
ReplyDeleteAfter 2011 election result... i always relaxed with your blog only..
ReplyDeleteஅருமை அருமை,, உங்களுடைய 150 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்..
S.Ravi
Kuwait