வியாழன் மாலை ஒரு வழியா வலைப்பதிவர் மாநாட்டிலே கலந்துகிட்டேன்ப்பா. மாலை 5 மணிக்கு என அண்ணாச்சி சொல்லியும் 5 மணி வரை புரண்டு புரண்டு படுத்து கொண்டு "மாநாட்டில் கலந்து கொள்ளாமைக்கான 37 காரணங்கள்" என்கிற தலைப்பை மனதில் கொண்டு காரணங்களை வலைவீசி தேடி கொண்டிருந்தேன். காரணம் அத்தனை ஹுமிடிட்டி வெளியே. மூச்சு கூட விட முடியவில்லை.
போக முடிவு செய்து ஷார்ஜா போய் சேரும் போது மணி 7 ஆகிவிட்டது. நான் போகும் முன்னமே அய்யனார் தன் கருத்துகளை பேசி முடித்து இருந்தார். ஆனாலும் அந்த அனல் மூச்சுகள் அப்பவும் அந்த ஹால் முழுக்க இருந்தது. இன்னும் கொஞ்சம் லேட்டா போயிருக்கலாமோ?
லியோ சுரேஷ், கவிஞர் ஆசாத், முத்துகுமரன், குசும்பன்(கூடவே அவரின் திருமதியும்)ஜுபைர், சுல்தான் பாய், நண்பன் ஷாஜி, பாலா என்னும் நண்பர், லியோ சுரேஷின் நண்பர், நான் மற்றும் அண்ணாச்சி ஆகியோர் கலந்து கொண்டோம். (யாராவது விட்டு போச்சா?) தம்பி உமாகதிர், சென்ஷி ஆகியோர் போனில் விசாரித்து கொண்டிருந்தனர். பெனாத்தலார் தாயகம் திரும்பி விட்டார். கோபிக்கு லீவ் கிடைக்கவில்லை என சொல்லப்பட்டது. லொடுக்கு,பாஸ்ட் பவுலர் ஆகியோருக்கு வேறு வேலை இருந்ததால் வரவில்லை.(ஒரு வேளை குசேலனுக்கு டிக்கெட் கிடைத்திருக்குமோ). ஜஸீலாக்கா புது பையன் பர்மிஷன் குடுக்காத காரணத்தால் வரவில்லை. குழந்தையீயம் தலை விரிச்சு ஆடுதுப்பா.
இந்த மாநாட்டின் சிறப்பம்சமே வலைப்பதிவுகளையும், மற்ற பதிவர்களையும், பதிவுகளையும், தன் தன் பதிவுகளையும் பற்றி பேசிக்'கொல்ல'வில்லை. அண்ணாச்சியுன் நூலகத்துக்கு வெகுதூரத்தில் நான் பாதுகாப்பாக உட்கார்ந்து கொண்டேன். ஒருமுறை என்னை அறியாமல் எதுனா படக்கதை புத்தகம் கிடைக்குமா என என் கண்கள் தேடிய போது குசும்பனால் கண்டிக்கப்பட்டேன்.
எல்லா விஷயங்களையும் பற்றி எந்த வித காரசாரமும் இல்லாமல் மெல்லிய நகைச்சுவை இழையோடவே பேசி கொண்டு இருந்தோம். சில சென்சிட்டிவ் விஷயங்களை கூட தொட்டு பேசும் போது தானாகவே வெளியே வந்து விட்டோம். ஜெயலலிதாவின் முதல் அரசியல் பிரவேசம் எப்போது ஆரம்பித்தது பின் அவர் எப்போது லைம்லைட்டுக்கு வந்தார் என்பது பற்றி எல்லாம் கவிஞர் ஆசாத் பேசிகொண்டு இருக்க "நானும் ரவுடிதான் நானும் ரவுடி தான்" என நானும் அந்த ஜீப்பில் ஏறிக்கொண்டேன். இரவு 9.30 வரை பேசி கொண்டிருந்தும் பசிக்கவே இல்லை. ஆனாலும் ஹோட்டலுக்கு போனோம். மிக அருமையான உணவு. அந்த 1.30 மணி நேரம் கூட அதிகமாக பேசி கொண்டே இருந்தோம்.
அப்போது தான் அய்யனார் "சென்ற டிசம்பரில் நாம் கூடிய போது அமீரக வலைப்பதிவர் பட்டரை பற்றி பேசினோமே, அது என்ன ஆச்சு?" என கேட்ட போது அண்ணாச்சி இந்த வருட டிசம்பரிலும் அது பற்றி கட்டாயமாக பேசுவோம் என வாக்களித்தார்.
பின்னே தசாவதாரம் பத்தி பேச்சு போனது. சைவத்துக்கும் வைஷ்னவத்துக்கும் இடையேயான பிரச்சனை பத்தி போன போது நானும் வழக்கம் போல ஜீப்பில் ஏறிக்கும் முயற்சியில் "சைவத்துக்கும் அசைவத்துக்கும் மட்டும் தானே பிரச்சனை, எங்க வீட்டில் மீன் குழம்பு வைக்கலைன்னா மட்டும் தானே சண்டை வரும்" என கேட்க எல்லோரும் என்னை ஒரு மாதிரியாக பார்க்க நான் அத்தோடு அந்த ஜீப்பில் ஏறும் முயற்சியை விட்டேன்.
ஒரு வழியாக இரவு 11 மணிக்கு மாநாடு முடிவுக்கு வர நான் நண்பன் ஷாஜி அவர்களின் காரில் வந்து பர்துபாயில் சேர்ந்து பின் டாக்சியில் வீடு வந்து சேர்ந்து குளித்து படுத்தபின் ஒரு விஷயம் மட்டும் மனதை விட்டு நீங்காமல் இருந்தது.
என்ன புரண்டு படுத்தாலும் அந்த நினைவுகள் போகவில்லை. காரணம் அண்ணாச்சி வீட்டில் பார்த்த அந்த 2002 பிப்ரவரி மாத ஜூ.வி. முதல் பக்கத்திலேயே அண்ணாச்சியின் "வாப்பா" ஜப்பார் சார் தமிழீழ தேசிய தலைவர் "தம்பி’ கூட இருக்கும் அட்டைப்பட ஜூவி. இரண்டே முக்கால் மணி நேரம் அவர் தம்பி கூட இருகும் பேட்டி! வாவ் வாவ் வாவ்!!! அத்தனை ஒரு உணர்சிகரமான சந்திப்பு. இரண்டே முக்கால் மணி நேரமும் அரசியலா பேசுவார் என நான் அந்த சந்திப்பின் தலைப்பையே பற்றி யோசித்து படித்து கொண்டிருக்ககையில் தமிழீழ தேசிய தலைவர் அவர்கள் "தமிழ்" பற்றியும் பேசியது பற்றியும் ஜப்பார் சார் சொன்னது எனக்கு உற்சாகமாக இருந்தது.
"எசகு பிசகுன்னா என்னா?" என இவர் கேட்க தம்பியோ பிசகுன்னா பிழைன்னு தெரியும் எசகுன்னா தெரியலையே என சொல்ல வாப்பா விளக்கியிருக்கிறார். எசகுன்னா என்னான்னு! அதாவது பிசகு செஞ்சா எசகு வரும். அதாவது AIDS தமிழ்ல சொன்னா "எதிர்ப்பு சக்தி குறைதல்" இது தான் "எசகு".இதை கேட்ட தேசிய தலைவர் மட்டுமா வியந்திருப்பார்???? சொல்லுங்க மக்கா. என் தூக்கம் கெட்டதுக்கு அண்ணாச்சியும் காரணம் தானே!
உடனே இந்த குருவி மூளை கனவுக்கு போய் விட்டது. "தம்பி"யை நேரில் பார்க்கும் வாய்ப்பு எனக்கு எப்போது கிட்டியது என்று?????
அப்போது நான் கல்லூரி 2ம் ஆண்டு! ராஜீவ் கொலையில் சிக்கிய சுபாசுந்தரம் முதலானவர்களை விடுதலை செய்த வழக்கறிஞர் குழுவில் இருந்த திரு வக்கீல் ராமதாஸ் (மயிலாடுதுறையை சேர்ந்தவர்) அவரின் சீடன் நான் அப்போது. அவரின் மகன் பாரி அவர்கள் "MTA’’ அதாவது மாயூரம் டுட்டோரியல் அக்காடமி என்று வைத்திருந்தார். அதில் எல்லா பாடத்துக்கும் டியூஷன் எடுப்பாங்க. ஆனா நான் சேர்ந்தது வக்கீல் ராமதாஸ் அவர்களின் வகுப்புக்காக. மொத்தம் நாங்க 10 பேர் தான் இருப்போம்.
இதோ இன்றைக்கு அண்ணாச்சி வீட்டில் பார்த்தேனே அது போல நூலகம் அங்கே . அது ஒரு சுரங்கம். நான் அங்கு எடுத்து அதாவது திருப்பி குடுக்காத புத்தகமே எல்லாமே கிட்டத்தட்ட தடை செய்யப்பட்ட புத்தகங்கள் போலத்தான். அதாவது காவிரி நமக்கே சொந்தம் என்கிற புத்தகம். அதாவது உலக நியதிப்படி சட்டப்படி ஒரு ஆறு எங்கே உற்பத்தியாகிறதோ அவர்களுக்கு சொந்தமில்லையாம். அது எங்கே முடிகிறதோ அவர்களுக்கே சொந்தமாம். அப்படித்தான் அதில் சொல்லப்படிருக்கும். அதற்க்கான எல்லா சட்ட விளக்கங்களுடனும் சொல்லியிருக்கும் அந்த புத்தகத்தில். எல்லாமே அது மாதிரியான புத்தகங்கள் தான்.
அதயெல்லாம் விடுங்கள்! ஒரு நாள் " தம்பிகளா ராத்திரி சாப்பிட வேண்டாம், நாம சென்னை கிளம்பனும் நாம ஒரு முக்கிய "உண்ணா விரத போராட்டத்துக்காக" செல்ல நேரிடும்" என்றார். அதாவது அப்போது ஆட்சியில் இருந்த எம்ஜியார் அவர்கள் அவரின் டிஜிபி மோகன் தாஸ் என்கிர மீசைக்கார( கேரள)டிஜிபி. மக்களுக்கு எப்படி புரிய வைக்கனும்ன்னா (கவிஞர் ஆசாத் கோவிக்க கூடாது, ஏனானில் பத்மனாபபுர அரண்மனையை குஷ்பு வருஷம் 16 படத்தில் குளித்த இடம் என்று சொல்லி கைட்ஸ் அறிமுகம் செய்ததால் ரொம்ப கோவமா இருக்கார்) இப்போது சீரியல்களில் வரும் நீண்ட முடியுடைய பெண் பிருந்தா தாஸ்ன் அப்பா தான் மோகன் தாஸ்! அந்த மோகன் தாஸ் உத்தரவுப்படி இரவோடு இரவாக "விடுதலைப்புலிகளின்" வயர்லெஸ், மற்றும் தொலை தொடர்பு சாதனங்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன.
காலையில் எந்த முன்னறிவிப்பும் இன்றி "தம்பி" பனகல் பார்க்கிலே உண்ணா விரதம் இருக்கின்றார். நாங்கள் 10 பேர் முதன் முதலாக அந்த இடத்துக்கு சென்று இருக்கின்றோம். வக்கீலை தனியே அழைத்து பேசுகிரார் தம்பி. முதன் முதலில் அப்போதுதான் பார்த்தேன். பிரம்மித்தேன். பிரம்மித்தேன் அப்படி ஒரு பிரம்மிப்பு. அப்போது என் மாணவர்கள் என வக்கீல் சொல்லும் போது ஒவ்வொறுவருடனும் கை கொடுக்கிறார்.துரதிஷ்டவசமாக நான் அப்போது அங்கே இல்லை. திரும்ப வந்து பந்தலில் உட்காரும் போது மீதி நண்பர்கள் சொன்னார்கள். நான் வாய்ப்பை இழந்த ஒரு முக்கிய நிகழ்வு அது!!! தமிழீழம் மலர்ந்த பின் எனக்கு அந்த வாய்ப்பு கிட்டாமலா போகும்? காத்திருப்பேன்!!!
இந்த நிகழ்வுகள் எல்லாம் வந்து இரவு தூக்கம் போயின எனக்கு!
எனக்கு இந்த துபாய் சந்திப்பு நல்ல ஒரு மலரும் நினைவுகளின் தூண்டுகோலாக இருந்தது!!
//ஒருமுறை என்னை அறியாமல் எதுனா படக்கதை புத்தகம் கிடைக்குமா என என் கண்கள் தேடிய போது குசும்பனால் கண்டிக்கப்பட்டேன்.//
ReplyDeleteநோ!
அபி அப்பா மிஸ்டேக் பண்ண டிரைப்பண்றீங்க அந்த கதைபுக் நான் ஏற்கனவே மார்க் பண்ணி வைச்சிருக்கேன் இப்படித்தானே குசும்பன் கண்டிச்சாரு!
:)))
//தமிழீழம் மலர்ந்த பின் எனக்கு அந்த வாய்ப்பு கிட்டாமலா போகும்? காத்திருப்பேன்!!!//
ReplyDeleteநிச்சயம்!
ஈழம் செல்வோம்!
நீங்க தம்பியை பார்த்துட்டு வர்ற டைமுக்குள்ள நான் எங்க கானா அண்ணன் வீட்டுக்கு போயிட்டு வருவேனாம் ஒ.கே!
வாழ்த்துக்கள்
ReplyDeleteவெடிகுண்டு
முருகேசன்
அய்யனார் தன் கருத்துகளை பேசி முடித்து இருந்தார். ஆனாலும் அந்த அனல் மூச்சுகள் அப்பவும் அந்த ஹால் முழுக்க இருந்தது. இன்னும் கொஞ்சம் லேட்டா போயிருக்கலாமோ
ReplyDelete//
அதனால் தான் பாதிபேர் மிஸ்ஸிங்கா
ஹா ஹா
வெடிகுண்டு முருகேசன்
அப்போது தான் அய்யனார் "சென்ற டிசம்பரில் நாம் கூடிய போது அமீரக வலைப்பதிவர் பட்டரை பற்றி பேசினோமே, அது என்ன ஆச்சு?"
ReplyDelete//
என்ன ஆச்சா அப்பவே முடிஞ்சி போச்சே
இன்னுமா பேசிகிட்டு இருக்காங்க
வெடிகுண்டு
முருகேசன் 3
//குழந்தையீயம் தலை விரிச்சு ஆடுதுப்பா.//
ReplyDelete:D :D :D
:) முப்பத்தேழு காரணமா... நல்ல கணக்கு....
ReplyDelete//குழந்தையீயம் தலை விரிச்சு ஆடுதுப்பா.//
ReplyDeleterippiitaaaayyyyyyyyeeeeee
அபி அப்பா கண்டிப்பாக ஈழம் மலரும், உங்களுக்கு அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால் மறக்காமல் எனக்கு தகவல் தரவும், என்னாகும் அன்னம் பிரபாகரனை பார்க்க ஆசை.
ReplyDelete//தமிழீழம் மலர்ந்த பின் எனக்கு அந்த வாய்ப்பு கிட்டாமலா போகும்? காத்திருப்பேன்!!!//
ReplyDeleteஉங்கள் வாக்கு விரைவில் நிறைவேற வேண்டும். கட்டாயம் நடக்க வேண்டும்.
நானும் மிக ஆவலாய் அந்த வாய்புக்காக காத்திருக்கின்றேன்.
//குழந்தையீயம் தலை விரிச்சு ஆடுதுப்பா.//
ReplyDelete:D :D :D
Abi appa, sirippillaamal oru serious pathivu.
ReplyDelete