பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

June 18, 2009

நட்ராஜ் பிறந்த நாள்!

கிருஷ்ணா எப்படி இருக்க?

நான் நல்லா இருக்கேன். கொஞ்ச நேரம் கழிச்சு போன்பண்ணுங்க நான் அவயாம்பா சந்நிதில அர்ச்சனைல இருக்கேன்"

ஓக்கே

கொஞ்ச நேரம் கழித்து ஒரு போன். நான் கட் பண்ணிட்டு போன் செஞ்சேன்.

"அல்லோ தம்பி கிட்ட கொடு. அவனுக்கு வாழ்த்து சொல்லனும்"

"அப்ங்லககிங்ககலிய"

"என்னடா தம்பி சொல்ற புரியலையே"

"அப்ங்லககிங்ககலிய"

\"அய்யோ கிருஷ்ணா அவன் என்ன சொல்றான்?"

"அவன் தான் தெளிவா நீங்க எப்படி இருக்கீங்க அபியும் நானும் நல்லா இருக்கோம்ன்னு சொல்றானே"

"அப்படியா சரி அவன் கிட்ட கொடு"

லிக மாலிநானு சாப் ல்ய்ச்""ங்மலிங்க


"அய்யோ கிருஷ்ணா இப்ப என்ன சொல்றான்"

"சந்தான குருக்கள் சர்க்கரை பொங்கல் கொடுத்தாராம்"

"அவன் தமிழே பேச மாட்டானா?"

"பேசுவானே தமிழ் படம் பார்க்கும் போது எல்லாம் தமிழ் பேசுவான்"

"'எங்க பேச சொல்லு"

"இருங்க ஸ்பீக்கர்ல போடுறேன்"

"தம்பி "பசங்க படம் பார்த்தியா அது மாரி பேசு"

"அம்மா அம்மா"(இது நட்டு)

"என்னாடி செல்லம்"(இது என் மனைவி)

"என் குஞ்சுமணி வெளியே வந்து விழுந்துடுச்சும்மா"

"ஊக்கூம் அது எப்ப உள்ள இருந்துச்சு. அப்படியே கிடக்கட்டும்" இது கிருஷ்ணா!

அய்யோ என் மகன் அழகா சினிமாவின் காரணமாக தமிழ் பேசுறான் என சந்தோஷ படுவதா? என் மனைவியின் பதிலுக்காக சிரிப்பதா?

15 comments:

 1. பிறந்தநாள் வாழ்த்துக்கள் நட்டு.

  நீ அப்பா மாதிரி இல்லாம அக்கா மாதிரி புத்திசாலித்தனமா வளரணும்.

  ReplyDelete
 2. நட்டுவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 3. நட்டு குட்டிக்கு பிறந்தநாள் வாழ்துக்கள்.

  பசங்க மாதிரி பேசினாகூட பராவாயில்லங்க.அதுல வர்ர மாதிரி இப்பையே கையோட கூட்டிகிட்டு வராமா இருந்தா சரி.
  (ஏன்னா நாங்க சீனியர்லாம் இருக்கோம் )

  ReplyDelete
 4. பிறந்த நாள் வாழ்த்துகளும் ஆசிகளும், நட்டுவுக்கு. மறுபடி தொலைபேசும்போது சொல்லுங்க நட்டுகிட்டே!

  ReplyDelete
 5. //நீ அப்பா மாதிரி இல்லாம அக்கா மாதிரி புத்திசாலித்தனமா வளரணும்.//
  ஹிஹிஹி, ஆமாம்,இல்லை???? நட்டு புத்திசாலியாத் தான் இருப்பான், அவங்க அம்மா மாதிரி! :P:P:P

  ReplyDelete
 6. HAPPY BIRTHDAY NATTU.

  APPAVUKKUM AMMAAVUKKUM VAAZTHTHUKAL.

  ReplyDelete
 7. நட்டுவுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்.

  ReplyDelete
 8. நட்டுவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்:)!

  ReplyDelete
 9. இப்போ சினிமாவின் காரணமா தமிழ் பேசுறாரு!
  அப்புரம் சினிமாவின் காரணமா லவ் பண்ணுவாரு

  அதுக்கப்புறம் சினிமாவின் காரணமா வில்லைனை உதைப்பாரு

  அப்பால சினிமாவின் காரணமா யாருகிட்டயாவது தொடஒய தட்டி சவால் விட்டு ஒரே பாட்டுல பெரிய்ய்ய்ய பணக்காரர் ஆவாரு!

  அப்புறம் அரசியல், சி.எம், பி.எம்
  அவ்வளவு தான்!

  பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  (இது சினிமாவின் காரணமாக அல்ல)

  ReplyDelete
 10. ஹாப்பி பர்த்டே நட்டு .......!!!!!
  வாழ்க வழமுடன்......!!!!!

  ReplyDelete
 11. உங்கள் பதிவு தமிழ்10 தளத்தில் முதல் பக்கத்தில் பிரசுரமாகலாம்


  உங்கள் வலைத்தளத்தை மெருகூட்டுவதற்காக இப்போது தமிழ்10 தளம் தமிழ்10 -டூல்ஸ் என்னும் பெயரில் பல வசதிகளை இணைத்துள்ளது

  இதில் குறிப்பாக
  1-இணையதளத்தில் முதன் முறையாக தமிழில் hits counter
  2-ஓட்டளிப்புப் பட்டை
  3-இவ்வார கிரீடம்
  4-சிறப்புப் பரிசு
  5-புத்தம்புதிய அழகிய templates
  6-கண்ணை கவரும் gadgets
  ஒரு முறை வந்து பாருங்கள்
  முகவரி http://tamil10.com/tools.html

  ReplyDelete
 12. //
  "என் குஞ்சுமணி வெளியே வந்து விழுந்துடுச்சும்மா"
  //

  பையன் அப்பா மாதிரியோ :))))

  ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))