போன மாசம் கீதாம்மா,சாம்பு சார் தம்பதி சமேதரமா வீட்டுக்கு வந்தாங்க. அது பத்தி கீதாம்மா பதிவே போட்டாச்சு.விஷயத்துக்கு வரேன். வந்தவங்க அபிஅம்மாவை பார்த்து "நீ பாடுவியாம்மா"ன்னு ஒரு கேள்வி கேட்டு வச்சாங்க. எனக்கு பக்குன்னு ஆகிபோச்சு.நல்லவேளை அபி சமாளிச்சு "அம்மாவுக்கு பாட்டுவுடத்தான் தெரியும் பாட்டு பாட வராது"ன்னு அவங்களை காப்பாத்திட்டா. உடனே எனக்கு நியாபகம் வந்தது என் கல்யாணத்தின் போது நடந்த பெண்பார்க்கும் கலாட்டா தான்.
அப்போ அவங்க எல்லாம் சிதம்பரத்தில் இருந்தாலும் அவங்க பூர்வீக வீடு என் வீட்டில் இருந்து பத்து வீடு தள்ளி பக்கத்து தெரு தான். அங்க வச்சு தான் பெண்பார்க்கும் படலம் என்பதால் போக்கு வரத்து செலவும் இல்லாமல் நடந்தே போய் விடலாம் என்பதாலும் என் வீட்டில் இருந்து பாட்டி முதல் செல்ல பிராணிகள் வரை எல்லாரும் ஒரு நாள் மாலை பஜ்ஜி சொஜ்ஜி சாப்பிட கிளம்பியாச்சு. பாட்டி தான் முதலில் பேச்சை ஆரம்பிச்சாங்க. "பொண்ணுக்கு பாட தெரியுமா? ஏன்னா நாங்க பெரிய சங்கீத குடும்பமாக்கும். என் கல்யாணத்துக்கு செம்பை வைத்தியநாத பாகவதர் கச்சேரி, என் புள்ள கல்யாணத்துக்கு கே.பி.சுந்தராம்பா கச்சேரி தெருவ அடச்சி பந்தல் போட்டு..."ன்னு இழுத்து கிட்டே போனாங்க. பாட்டி இந்த விஷயங்களை நாலு பேர் கூடி இருக்கும் எல்லா இடத்திலும் சொல்லி விடுவது வழக்கம். அது கணபதி ஸ்லோகம் மாதிரி அவங்களுக்கு. அதுகுள்ள சுதாரகுநாதன் மாதிரி அமர்க்களமா அபிஅம்மா ஆரம்பிச்சாச்சு. அன்னிகுன்னு பார்த்து அவங்களுக்கு ஜலதோஷமாம். ஏற்கனவே குரல் அபியும் நானும் படத்தில் அபிஅம்மாவா நடிக்கும் ஐஸ்வர்யா குரல் மாதிரி இருக்கும். இதிலே ஜலதோஷம் வேற. அதல்லாம் பிரச்சனை இல்லை. பாட்டிக்கு எதுவுமே பத்து பர்செண்ட் தான் காதில் நுழையும். என்ன நடக்க போவுதோ!
அழகான ராஜாஜியின் கீர்த்தனை "குறையொன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா" பாடி சுரம் பாடி முடிச்சப்ப எனக்கு ஜுரம் அடிச்சுது லைட்டா. உடனே பாட்டி பக்கத்தில் இருந்த என் பெரிய அக்காவிடம் "யாரது மூர்த்தி அவனுக்கு என்ன குறையாம்? பொண்ணு என்னவோ பேசி கிட்டு இருந்தாளே"ன்னு கேட்க அக்காவுக்கு வேர்த்து விட்டது. உயிரை விட்டு சுரம் பாடி முடிச்ச பெண்ணை பார்த்து ஏதோ பேசினாளாமேன்னு பாட்டி கேட்டது மட்டும் தெரிஞ்சா இந்த கல்யாணம் பணால் ஆகிடுமேன்னு கவலை. போதா குறைக்கு இன்னும் ஒரு விஷயம் என்னன்னா என் மச்சினன் பேர் மூர்த்தி. உடனே சின்ன அக்கா பாட்டியிடம் "மூர்த்திக்கு என்ன குறை! கிளியை வளர்த்து ஓணான் கையிலே குடுக்கிறோம்ன்னு தான் குறைன்னு முனு முனுக்க எனக்கு செம கோவம் வந்துடுச்சு. ஒல்லியா இருந்தா ஓணானா? இரு வீட்டிலே வந்து உனக்கு கச்சேரி வச்சுக்கறேன்னு நினச்சுகிட்டேன். பாட்டி அப்பவும் "சரி சரி பேசினது போதும் குரல் நல்லா இருக்கு. இந்த காலத்து பிள்ளைகளுக்கு எங்கே கர்நாடக சங்கீதம் தெரிய போகுது. ஒரு சினிமா பாட்டு பாடும்மா"ன்னு சொன்ன போது ஒட்டு மொத்த கூட்டமும் அதிர்ச்சியில் அப்படியே வாயடைச்சு போச்சு.
உடனே அபிஅம்மா அப்போ ரொம்ப பிரபலமா இருந்த கார்த்திக் ரேவதி நடிச்ச படத்துல இருந்து என்னவோ ஒரு பாட்டு ஆடியிலே சேதி சொல்லி ஆவணியிலே தேதி வச்ச மன்னவரு மன்னவரு தான்"ன்னு ஏதோ ஒரு பாட்டு. அவங்க இருந்த கோவத்திலே என்னை பார்த்து "மண்ணு அவரு மண்ணு அவரு" தான்னு பாட ஒரு வழியா பெண்பார்க்கும் படலம் முடிந்து கல்யாணம் முடிந்து எல்லாம் நல்லா தான் போய் கிட்டு இருந்துச்சு.
பாட்டி அடிக்கடி சொல்லிக்கும் வாசகம் 'நான் ஒரு ராஜயோக்காரி தெரியுமா"ன்னு தான். அதுக்காகவே நாங்கள் பாட்டியை ராஜயோகம் ராஜயோகம்ன்னு பேர் வச்சு கிண்டலடிப்போம். அப்படிப்பட்ட பாட்டி போய் சேர வேண்டிய காலமும் வந்தது. பாட்டிக்கு எல்லோரும் துளசி தண்ணி ஊத்தியும் இழுத்து கிட்டே இருந்தது. வேற ஒரு பாட்டி "என்னவோ அடி மனசுல ஆசை கிடந்து அடிச்சுகுது அதான் போக மாட்டங்குது"ன்னு அப்போ வந்த ஏதோ கரிசல் காட்டு பட டயலாக் விட எல்லாரும் ஆளுக்கு ஆள் ஒரு யோசனை சொல்ல கடைசியாக ராஜயோக பாட்டிக்கு சங்கீத ஆசை தான் காரணம்னு முடிவுக்கு வந்தாங்க. பாட்டி பரலோகம் அனுப்பனும் செத்த வந்து பாடிட்டு போங்கன்னா ஜேசுதாசை கூப்பிட முடியும். யார் வருவாங்க. சரி எதுனா தேங்கா மூடி பாடகரை கூப்பிட்டு பாடவைத்து சந்தோஷமா அனுப்பி வைக்கலாம் என எல்லோரும் நினைத்து கொண்டிருக்க அடுப்படியில் சமைத்து கொண்டிருந்த என் ஆத்துக்காரி "குயில் பாடலாம் தன் முகம் காட்டுமா"ன்னு அபஸ்வரமாக பாடிகிட்டு இருக்க கூடத்தில் "நி நி நி"ன்னு பாட்டி ஈனஸ்வரத்தில் முனகி கொண்டே போய் சேர்ந்தாங்க்க.ராஜயோக பாட்டிக்கு வந்த விபரீதத்தை பார்த்தீங்களா? இது தான் விபரீத ராஜயோகமா? அதுவரை அமாவாசைக்கு மட்டுமே காக்கா பாட்டு பாடி காக்கை வரவழைத்து விரதம் இருந்த என் அப்பா அதன் பின் பவுர்ணமிகும் காக்கா பாட்டு பாடி விரதம் இருப்பது போல் ஆகிவிட்டது.
நான் மெதுவாக அபிஅம்மாவிடம் வந்து "பாட்டி உன் பாட்டை நிப்பாட்டு நிப்பாட்டுன்னு சொல்ல தான் "நி நி நி"ன்னு சொல்லிட்டு செத்து போனாங்க"ன்னு சொல்ல அதுக்கு அவங்க "இல்ல இல்ல நான்பாட்டுக்கு பாடிகிட்டு இருந்தேன். அவங்க அதுக்கு "நீ தானா அந்த குயில்"ன்னு எச பாட்டு பாட நினைச்சு அதுவே அவங்களுக்கு எம பாட்டாயிடுச்சு"ன்னு கூலா சொன்னாங்க.
அதிலே இருந்து அபிஅம்மா பாட்டு பாடுவதில்லை. ஆனா ஸ்வாமி கும்பிடும் போது மட்டும் பாடுவாங்க. அப்படித்தான் ஒரு நாள் வேப்ப மரத்திலே பால் வடியுதுன்னு ஒரு கூட்டம் தெருவிலே ஓடி கொண்டிருந்தது. அதை கேட்ட அபி "அட ராமா எங்க அம்மா ஸ்வாமி கும்பிட்டு பாடும் போது எல்லா ஸ்வாமி படத்தின் கண்ணிலும் ரத்தமே வருமேடா. டிக்கெட் போட்டா ஒன்பது தலைமுறைக்கு உட்காந்தே சாப்பிடலாமேடா"ன்னு சொல்ல அன்றிலிருந்து அபிஅம்மா மனசுக்குள்ளேயே பாட ஆரம்பிச்சிட்டாங்க.
ஆடின காலும் பாடின வாயும் சும்மா இருக்குமா? தம்பி பிறந்த பின் ஒரு தடவை நான் ஊருக்கு வந்தப்ப தம்பி வித்யாசமா தூங்கினான். அபியாவது விரலை வாயில் வைத்து சூப்புவாள். இவனோ வித்யாசமா இரண்டு கட்டை விரலையும் காதில் வைத்து கொண்டு தூங்கினான். ஏன் இப்படின்னு கேட்டதுகு அபி "அப்பா அவன் விரல் சூப்புறான்ப்பா"ன்னு சொன்னா. வாயில் தானே வச்சு சூப்புவாங்கன்னு கேட்டதுக்கு "அம்மா தாலாட்டு பாடுதுன்னு அவன் இப்படி செய்ய ஆரம்பிச்சுட்டான்ன்னு சொன்னா.
இப்படியாக செல்வராகவன் சோழனை ஏழு கண்டம் தாண்டி அடைச்சு வச்ச மாதிரி அபிஅம்மாவின் பாட்டு ஆசையை ஒட்டு மொத்த குடும்பமே அடைச்சு வச்சுட்டோம். இந்த நேரத்தில் தான் கீதாம்மா அந்த பாடகி ஆசையை அபிஅம்மாவிடம் இருந்து "நீ பாட்டு பாடுவியா"ன்னு கேட்டு கிளறி விட்டுட்டாங்க. அவங்க வந்துட்டு போனதில் இருந்து அபிஅம்மா வரும் டிசம்பரில் நான் எதுனா சபாவில் அட்லீஸ்ட் கடவுள் வாழ்த்தாவது பாடியே தீருவேன் என சபதம் எடுத்துட்டாங்க. மங்கம்மா சபதம்???
"கீதாம்மாவை பார்த்தீங்களா? ஷாட்சாத் பார்வதி தேவி மாதிரி என்ன ஒரு தேஜஸ் முகத்திலே. என்னை பார்த்ததும் நான் பாடுவேன்னு டக்குன்னு கண்டு பிடிச்சுட்டாங்க" ன்னு ஒரே கீதாம்மா பேச்சு தான் வீட்டிலே. நான் அதுக்கு "கீதாம்மாவுக்கு இப்படி ஒரு ரசிகை இருப்பது மட்டும் பெங்களூரு அம்பிக்கு தெரிஞ்சா ரொம்ப ரென்சன் ஆகிடுவாருன்னு சொன்னேன். அதுக்கு அபிஅம்மா "அம்பின்னு சொன்ன உடனே தான் நியாபகம் வருது. நீங்க அன்னியன் படத்துல சதா சபாவிலே பாட அம்பி என்னமா ட்ரை பண்ணினார். அது சரியா வரலைன்னு அன்னியனா மாறி எப்படி சான்ஸ் வாங்கினார். அந்த அன்னியன் மாதிரி எனக்கு சபாவிலே நீங்க சான்ஸ் வாங்கி தந்தா என்னவாம்?"ன்னு கேட்க எனக்கு சிரிப்பு தான் வந்தது. அன்னியன் மாதிரி முடி வளர்கலாம். ஆனா நான் சிக்ஸ் பேக்குக்கு எங்க போறது. எனக்கும் பேக்குக்கும் பல ஜென்மமாகவே ஸ்னானப்ராப்தி என்பதே கிஞ்சித்தும் இல்லை. இதிலே சிக்ஸ் பேக்குக்கு எங்க போறது.
அப்படியே நான் போய் யங்ஞ்யராமன்(கண்டிப்பா ஸ்பெல்லிங் மிஸ்டேக்) கிட்ட போய் நின்னானும் பூச்சாண்டி பூச்சாண்டின்னு அவர் பேரனுக்கு விளையாட்டு காட்ட கட்டி தூக்கிகிட்டு போனாலும் போவார். நான் பூச்சாண்டி இல்லைன்னு வெத்தலை மேலே சத்தியம் செஞ்சு நான் தான் அன்னியன்ன்னு சொன்னா கூட எந்த சனியனா இருந்தா எனக்கு என்ன என்பது போல பார்ப்பார். எதுனா மிராக்கிள் நடந்து அவர் நல்ல மூட்ல இருந்தா "என்ன வேண்டும்னு கேட்பார். நான் என் மனைவி சபாவிலே பாடனும் இல்லாட்டி நான் குத்து விளக்கு ஏத்துவேன்ன்னு சொன்னா உடனே "கச்சேரி சான்ஸ் இல்லை. வேண்டுமானா குத்து விளக்கு ஏத்து"ன்னு சொல்லுவார். புரியாத மனுஷன். "அய்யோ மாமா நான் குத்து விளக்கு ஏத்துவேன்ன்னு சொன்னது அந்த அர்த்தத்தில் இல்லை. உங்களை தூக்கி குத்து விளக்கில் ஏத்துவேன்"ன்னு சொல்லி புரிய வைக்க எனக்கு தாவு தீர்ந்துடும்.
அப்பவும் அவர் 'என் சாய்ஸ் குத்து விளக்கு தான். பலபேர் பரலோகம் போவதை விட நான் போய் சேர்ந்துடறேன்"ன்னு சொல்லிடுவார். இதை எல்லாம் அபிஅம்மாவிடம் விளக்கி சொல்லி நான் சான்ஸ் கேட்க இயலாதுன்னு சொன்ன பிறகு "நோ பிராப்ளம். நான் என் அப்பாகிட்டே சொல்லி முத்தமிழ் பேரவையிலே சான்ஸ் வாங்கிக்கறேன். கூட்டம் வர்த்துக்கு மட்டும் நீங்க ஏற்பாடு பண்ணிடுங்க. உங்களுக்கு தான் சென்னைல பிளாக்கர்ஸ் எல்லாம் தெரியுமே. நைசா இன்விடேஷன் கொடுத்து அசம்பிள் பண்ணிடுங்க, நான் போய் கச்சேரிக்கு இப்ப முதலே தயாராகிறேன்"ன்னு சொல்லிட்டு போனாங்க.
அய்யோ பாவம் சென்னை பதிவர்கள். வேண்டுமானா இப்படி செய்யலாம். இந்த பதிவுக்கு பின்னூட்டம் போடாதவங்க லிஸ்ட் எடுத்து இன்விட்டேஷன் அனுப்பிடலாம்ன்னு முடிவு செஞ்சேன். சரி கச்சேரிக்கு தயாராக என்னன்ன கீர்த்தனை சாதகம் பண்ணலாம்ன்னு எழுதிகிட்டு இருக்காங்க. இருங்க என்னன்னு பார்ப்போம்.
1. நல்ல பாக்கு கலர்ல பச்சை ஷேட் அடிக்கிற உடலும் பாக்கு கலர் ஆறு இன்ச் வெள்ளி ஜரிகை பார்டர் (திருபுவனம் பட்டு)
2. புஷ்பராகம் இழைச்ச குண்டு குடை ஜிமிக்கியும், புஷ்பராகம் பன்னிரண்டு கல் இழைச்ச தோடு.
3. துளசி டீச்சருக்கு பிடிச்ச பெண்டண்ட் வித் நெக்லஸ்
அய்யோஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஒ சாமீ எனக்கு தலை சுத்துது.
பார்முக்கு வந்தாச்சா?
ReplyDeleteஆஹா டோட்டலா அடிவாங்குறதுன்னு முடிவு செஞ்சு களமிறங்கின மாதிரியே தெரியுதே எனி ஹவ் நலம் பெற வாழ்த்துக்கள் :))))))
ReplyDelete//உடனே அபிஅம்மா அப்போ ரொம்ப பிரபலமா இருந்த கார்த்திக் ரேவதி நடிச்ச படத்துல இருந்து என்னவோ ஒரு பாட்டு ஆடியிலே சேதி சொல்லி ஆவணியிலே தேதி வச்ச மன்னவரு மன்னவரு தான்"ன்னு ஏதோ ஒரு பாட்டு.//
ReplyDeleteஅண்ணாச்சி, அது கார்த்திக் ரேவதி படம் இல்ல...எங்க தலைவர் விஜயகாந்த் நடிச்ச "கருப்பு நிலா "படம்..
//ஆடின காலும் பாடின வாயும் சும்மா இருக்குமா? தம்பி பிறந்த பின் ஒரு தடவை நான் ஊருக்கு வந்தப்ப தம்பி வித்யாசமா தூங்கினான். அபியாவது விரலை வாயில் வைத்து சூப்புவாள். இவனோ வித்யாசமா இரண்டு கட்டை விரலையும் காதில் வைத்து கொண்டு தூங்கினான். ஏன் இப்படின்னு கேட்டதுகு அபி "அப்பா அவன் விரல் சூப்புறான்ப்பா"ன்னு சொன்னா. வாயில் தானே வச்சு சூப்புவாங்கன்னு கேட்டதுக்கு "அம்மா தாலாட்டு பாடுதுன்னு அவன் இப்படி செய்ய ஆரம்பிச்சுட்டான்ன்னு சொன்னா. //
இன்னைக்கு உங்களுக்கு சோறு வீட்டில கிடைக்கிறது கஷ்டம்ன்னு நினைக்கிறேன்.......
நல்லா இருக்கு உங்க இடுகை......
என்றும் நட்புடன்,
நல்லவன் கருப்பு
நல்ல நகைசுவையான பதிவு
ReplyDeleteஅபி அப்பா சிரிச்சு மாளாலை....ரொம்பவே சிரிக்க வச்சுடுச்சி இந்த பதிவு்.
ReplyDeleteஅபி அம்மா கச்சேரியில் பாடி வெற்றிபெற வாழ்த்துக்கள்!!
வந்துட்டீங்களா.. இனிமேல் சிரிச்சி சிரிச்சி வயித்து வலிதான்:-))
ReplyDeleteஅந்த நெக்லெஸ் டைம்ஸ் 2 ஆக இருக்கட்டும். என்னிடம் ஒரு சிகப்பும் வெள்ளையும் இருப்பதால் இது வேணா பச்சையா இருக்கட்டுமே!
ReplyDeleteஇதுக்கெல்லாம் மனம் தளராமல் தினமும் 'ப்ராக்டீஸ்' செய்யணுமுன்னு அபி அம்மாவுக்குச் சொல்லிக்கறேன்.
சலசலப்புக்கு அஞ்சாதீங்கோ அபிஅம்மா.
//உடனே அபிஅம்மா அப்போ ரொம்ப பிரபலமா இருந்த கார்த்திக் ரேவதி நடிச்ச படத்துல இருந்து என்னவோ ஒரு பாட்டு ஆடியிலே சேதி சொல்லி ஆவணியிலே தேதி வச்ச மன்னவரு மன்னவரு தா//
ReplyDeleteஅது கார்த்திக் ரேவதி இல்லை!
கேப்டனும் ரேவதியும் நடிச்ச படம்!
கச்சேரிக்கு தயாராகறதுன்னா இதுதானா!
ReplyDelete(கவனிக்க : பின்னூட்டம் போட்டுட்டேன்!)
வழக்கம்போல நல்ல பதிவு!
ReplyDeleteஅபியைக் கலாய்ச்சிட்டு அடுத்தபடியா அபி அம்மாவை கலாய்க்க ஆரம்பிச்சிருக்கீங்க!
அவங்க காதுல போட்டு வைக்கிறேன்!
Template superrr abi appa.
ReplyDeleteயப்பா அபி அம்மாவை என்னமா கலாய்ச்சிட்டீங்க. ஒத்துக்கறேன், நீங்க தைரியசாலி தான். :p
ReplyDeleteஎன்னது கீதாம்மா முகத்துல பார்வதி களையா..? கர்ர்ர்ர்ர்ர். காரைக்கால் அம்மையார் களைன்னு வேணா ஒத்துக்கலாம். :))))
தொடர
ReplyDeleteகாலம்பர இருந்து பின்னூட்டம் போடப் பார்க்கிறேன், முடியலை அபி அப்பா. சரியாவே பின்னூட்டப் பெட்டி திறக்கலை. அது சரி, எல்லாம் எழுதிட்டு, நட்டு என்ன, ஆண்டினு கூப்பிட்டதை விட்டுட்டீங்க??? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அது இல்லை முக்கியம்????
ReplyDeleteஅபி அம்மா. சென்னைக்கு வந்து நீங்க பாடுகிறதை நான் பார்க்கணும். இந்த அபி அப்பா
ReplyDeleteகலாட்டா ரொம்ப ஜாஸ்தியாயிடுச்சே:)
Idhukellam kavala padathinga abi amma, Canteen nalla irukura saba la mattum kacheri yerpadu pannunga,ungaluku naan aal kupitutu varan :-)
ReplyDelete//இதிலே சிக்ஸ் பேக்குக்கு எங்க போறது.//
ReplyDeleteநா வேண ஒரு ஆறு பை [bag] வாங்கி அனுப்பட்டுமா?:))))))))))))
//யங்ஞ்யராமன்//
ReplyDeleteயக்ஞராமன்
100 முறை எழுதிப் பாருங்க
களையான கச்சேரி:))!
ReplyDeleteரொம்ப ரொம்ப ரசிச்சு சிரிச்சேன். கலக்கிட்டீங்க! முக்கியமா பெண் பார்க்கும் படலம் & ராஜயோகப்பாட்டி!
ReplyDelete